மர்மமாக கொலை செய்யப்பட்ட தாய் மற்றும் இளம் மகள்!!

கர்நாடகாவில் Kodagu மாவட்டம் Doddamalte கிராமத்தில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில், அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

கவிதா மற்றும் அவரது 17 வயது மகள் ஜெகஸ்ரீ ஆகிய இருவரும் தங்களுக்கு சொந்தமான காபி எஸ்டேட்டில் இறந்துகிடந்துள்ளனர்.

கவிதாவின் மகன் தனது தாய்க்கும், சகோதரிக்கும் போன் செய்து பார்த்து அவர்களை தொடர்புகொள்ள முடியாத நிலையில், அருகில் வசிப்பவர்களுக்கு தகவல் தெரிவித்து காபி எஸ்டேட்டுக்கு சென்று பார்த்து வருமாறு அவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளான்.

இதனை தொடர்ந்து காபி எஸ்டேட்டுக்கு சென்ற பார்த்தவர்கள், அங்கு கவிதா தனது மகளுடன் இறந்துகிடந்ததை பார்த்து பொலிசிற்கு தகவல் தெரிவித்தனர்.

விசாரணையில், இருவரையும் மர்ம நபர்கள் யாரோ கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் ரத்தம் அதிகம் வெளியேறி இறந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

கவிதாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்ட நிலையில் எஸ்டேட்டை தனது பிள்ளைகளோடு சேர்ந்து கவனித்து வருகிறார். மகள் ஜெகஸ்ரீ இந்த ஆண்டுதான் பன்னிரெண்டாம் வகுப்பு நிறைவு செய்துவிட்டு தனது தாய்க்கு உதவியாக காபி எஸ்டேட்டில் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் தான் இவர்கள் இருவரும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சொத்து தகராறு காரணமாக இந்தகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் காபி எஸ்டேட்டுடன் சில தனிநபர்களுக்கு பிரச்சனை இருந்துவந்துள்ளதாக கூறப்படுகிறது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பசியின் கொடுமை தாங்க முடியாமல் மண்ணை சாப்பிட்டு உயிரிழந்த குழந்தை!!

கர்நாடகாவில் பசியின் கொடுமை தாங்க முடியாமல் மண்ணை சாப்பிட்டு குழந்தை உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கும்மவான் பள்ளியில் கூடாராம் ஒன்றை அமைத்து மகேஷ் – நீலவேணி தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

கூலி வேலை செய்து அன்றாடம் சாப்பிடும் இவர்களுக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். இதற்கிடையில் நீலவேணி தனது சகோதரி மகளான வனிதா என்ற குழந்தையையும் வளர்த்து வந்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற அன்று பசியால் வாடிய குழந்தை மண்ணை சாப்பிட்டதில் வயிற்றுக்கோளாறு ஏற்பட்டு துடிதுடித்து உயிரிழந்தது. அக்குழந்தையின் உடலை பெற்றோர் அங்கேயே புதைத்துள்ளனர்.

இக்குழந்தை மட்டுமல்லாமல் கடந்த ஆண்டும் நீலவேணியின் மகனும் மண்ணை சாப்பிட்டு உயிரிழந்தான். அவர்களின் நிலை உணர்ந்த காவல் ஆய்வாளர் வெங்கடசாமி, எஞ்சியுள்ள குழந்தைகள் நான்கு பேரையும் காப்பகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

சகோதரிகளை மோசமாக பேசிய நபர்களை தட்டி கேட்ட மாணவருக்கு நேர்ந்த கதி : பதறவைக்கும் சம்பவம்!!

தமிழகத்தில் சகோதரிகளை தரக்குறைவாக பேசிய நபர்களை தட்டி கேட்ட மாணவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணத்தைச் சேர்ந்தவர் சிவசுப்ரமணியன். இவர் அரசியல் பிரமுகர் ஒருவரிடம் 7 லட்ச ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதற்கு வட்டியுடன் சேர்த்து 45 லட்ச ரூபாய் கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் கடன் அளித்தவரின் ஆட்கள் மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனால்‌ சிவசுப்ரமணியன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று‌ வீடு திரும்பினார்.

இதனையடுத்து மீண்டும் கடன் அளித்தவர்களின் ஆட்கள் சிவசுப்ரமணியனின் வீட்டிற்கு வந்து அவரது மகள்கள் குறித்து தரகுறைவாக பேசியதாகவும் அதனை அவரது மகனான, கல்லூரி மாணவர் அருண் தட்டிக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கும்பல், மளிகைக் கடையில் இருந்த அருணை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொன்றது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளின் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தாய்ப்பாலுக்காக அழுத குழந்தை : வட்ஸ் அப்பில் பிசியாக இருந்த தாய் செய்த கொடூர செயல்!!

கேரளாவில் தாய்ப்பாலுக்காக அழுத குழந்தையை வாயை பொத்தி கொலை செய்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட்டினங்காடு கொல்லம் வெளி காலனியை சேர்ந்த ஷரோன் – ஆதிரா தம்பதிக்கு ஆதிஷா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 30ஆம் திகதி இரவு குழந்தை ஆதிஷா கட்டிலில் இருந்து கீழே விழுந்து இறந்து போனதாக கூறி தாய் ஆதிரா, வாயில் வயிற்றில் அடித்தப்படி கதறியது ஊரையும் கண்ணீர் வடிக்க வைத்தது.

ஆனால் குழந்தை உடலில் எந்தவொரு காயமும் இல்லாததாலும், குழந்தை மூச்சு திணறி இறந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்ததாலும் இது தொடர்பாக பொலிஸ் புகார் அளிக்கப்பட்டது.

பொலிசார் ஆதிராவை விசாரித்த போது இரவு 12.30 மணிக்கு நான் செல்போனில் வாட்ஸ் அப் மூலம் தோழியிடம் தகவல் பரிமாறி கொண்டு இருந்தேன்.

அப்போது குழந்தை பாலுக்கு அழுதது. கொஞ்ச நேரம் கழித்து பால் கொடுக்கலாம் என்று குழந்தையை தட்டி கொடுத்த போதும் அழுகையை நிறுத்தாமல் இன்னும் சத்தமாக அழுதது.

உடனே சத்தம் வெளியே கேட்காமல் இருக்க குழந்தையின் வாயை பொத்தியடியே வாட்ஸ் அப்பில் மூழ்கியிருந்ததால் குழந்தை இறந்தது என கூறியுள்ளார்.

குண்டுவெடிப்பில் கணவன் மற்றும் பிள்ளையை இழந்து தவிக்கும் தமிழ்பெண் : திருமணமான 2 மாதத்தில் கலங்கும் புதுமாப்பிள்ளை!!

இலங்கை குண்டுவெடிப்பில் கணவர் மற்றும் மகனை இழந்துள்ள பெண் 7 வயது மகளை வைத்து கொண்டு அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறார்.

கல்லடியை சேர்ந்தவர் சசிகுமார். இவர் மனைவி சந்திரிகா (35). தம்பதிக்கு மிரூஜன் என்ற மகனும், ரெக்‌ஷிகா (7) என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 21ஆம் திகதி Zion தேவாலயத்துக்கு நால்வரும் சென்றனர். அப்போது சந்திரிகா மற்றும் ரெக்‌ஷிகா ஆகிய இருவரும் தேவாலயத்தின் உள்ளே சென்றனர்.

சசிகுமார் மற்றும் மிரூஜன் ஆகிய இருவரும் அங்குள்ள புல்வெளியில் உணவு பரிமாறும் இடத்தில் இருந்தனர். அப்போது தான் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்தாரி அங்கு வந்தான்.

அப்போது ரமேஷ் என்பவருக்கு அவன் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில் விசாரித்துள்ளார். அப்போது தான் ஞானஸ்நானம் எடுத்து கிறிஸ்துவனாக மாற வந்துள்ளேன் என அவன் கூறினேன்.

அவனை ரமேஷ் தடுத்து நிறுத்திய நிலையில் சசிகுமாரும் அவனிடம் விசாரித்தார். அந்த நொடி பொழுதில் அந்த நபர் வெடிகுண்டை வெடிக்க செய்தான். இதில் சசிகுமார் மற்றும் மிரூஜன் ஆகிய இருவரும் உடல்கள் துண்டாகி உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் சசிகுமாரின் மனைவி சந்திரிகா மற்றும் மகள் ரெக்‌ஷிகா ஆகிய இருவரும் உயிர் பிழைத்த நிலையில் தற்போது சந்திரிகா செய்வதறியாமல் தவித்து வருகிறார்.

சந்திரிகா கூறுகையில், என்னிடம் வெறும் சவப்பெட்டியை மட்டும் தான் கொடுத்தார்கள். இருவரின் உடல் பாகங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்து என்ன என எனக்கு தெரிவில்லை, என் மகளை வளர்க்க வேண்டும்.

அந்த சமயத்தில் பொம்மையுடன் விளையாடி கொண்டிருந்த சிறுமி ரெக்‌ஷனா தனது தாயிடம், அப்பா மற்றும் அண்ணன் உபயோகப்படுத்திய உடைகளை என்ன செய்ய போகிறீர்கள்? தேவையானவர்களிடம் அதை கொடுத்து விடுங்கள் என கூறினார்.

அதே போல ரிபிகா (26) என்ற இளம்பெண் குண்டுவெடிப்பில் சிக்கி அவரின் முகம் முழுவதிலும் தீக்காயம் ஏற்பட்டுள்ளதோடு, கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ரிபிகாவின் கணவர் நிரோஷன் கூறுகையில், எங்களுக்கு திருமணமாகி இரண்டு மாதங்கள் தான் ஆகிறது, ரிபிகாவுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ள கொழும்புக்கு அழைத்து செல்ல கோரியுள்ளோம்.

இனியும் நாங்கள் தேவாலயத்துக்கு செல்ல வேண்டுமா? என் மனைவி ரிபிகா பழைய நிலைக்கு மாறியவுடன் மீண்டும் செல்வோம் என கூறியுள்ளார்.

சாய்ந்தமருது சம்பவத்தில் பலியான அஸ்ரிபா : வாழ ஆரம்பிக்கும் போதே வாழ்க்கை முடிந்து போன சோகம்!!

பதினாறு வயதாகும் போது திருமண உறவில் இணைந்து கொண்ட அஸ்ரிபாவுக்கு இப்போது வயது 19. ஆனால், தற்போது அஸ்ரிபா உயிருடன் இல்லை.

சாய்ந்தமருதில் பயங்கரவாதிகளுக்கும், படையினருக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற ‘சண்டை’யின் நடுவில் சிக்கி, “அஸ்ரிபா இறந்து விட்டார்” என்கிறார் அவரின் தாயார் ஹிதாயா.

சாய்ந்தமருது – பொலிவேரியன் சுனாமி வீட்டுத் திட்டத்தில் தனது கணவருடன் அஸ்ரிபா வாழ்ந்து வந்தார். அங்குள்ள வேறொரு வீட்டில் அஸ்ரிபாவின் பெற்றோர் குடும்பத்துடன் இருக்கின்றார்கள்.

“சம்பவ தினத்தன்று அஸ்ரிபாவும் அவரது கணவரும் அவர்களின் ஆட்டோவில் கல்முனைக்குடியிலுள்ள அஸ்ரிபாவின் மாமியார் வீட்டுக்கு சென்றிருந்தார்கள்.

நாங்கள் பொலிவேரியன் வீட்டில் இருந்தோம். இரவு குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. இங்குள்ள மக்கள் எல்லோரும் பயந்து கலவரப்பட்டு அவரவர் வீடுகளுக்குள் புகுந்து கொண்டனர்”.

“அப்போது அஸ்ரிபாவை கைப்பேசியில் தொடர்பு கொண்டு கதைத்தேன். விவரத்தைக் கூறி, இங்கு இப்போது வரவேண்டாம், நாளை வாருங்கள் என்றும் கூறினேன்.

ஆனால், அவர்கள் அதையும் கேளாமல் வந்து, இதற்குள் மாட்டிக் கொண்டார்கள்” என்று அஸ்ரிபாவின் தாய் ஹிதாயா கூறுகிறார்.

அஸ்ரிபாவுக்கு நான்கு சகோதரிகள். அஸ்ரிபாதான் மூத்தவர். 2016ஆம் ஆண்டு கல்முனைக்குடியைச் சேர்ந்த ஜாசிர் என்பவர் அஸ்ரிபாவை திருமணம் முடித்தார்.

“எங்கள் வீட்டில் ஆண் பிள்ளைகள் இல்லை என்பதற்காகத்தான், அஸ்ரிபாவுக்கு 16 வயதிலேயே திருமணம் முடித்து வைத்தோம். மகன் ஸ்தானத்தில் ஒரு மருமகன் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம்.

அதுபோலவே அஸ்ரிபாவின் கணவரும் இருந்தார். எங்களை பெற்றோர் போலவே பார்த்துக் கொண்டார்” என்று அஸ்ரிபாவின் தந்தை அக்பீல் அழுகையை அடக்கிக் கொண்டு கூறினார்.

அஸ்ரிபாவின் பெற்றோரை, சாய்ந்தமருதில் கடற்கரையோரமாக அமைந்துள்ள, அவர்களின் உறவினர் வீடொன்றிலேயே பிபிசி சந்தித்துப் பேசியது.

சம்பவ தினத்தன்று நடந்த மேலதிக விடயங்களை அஸ்ரிபாவின் தாய் மீண்டும் பிபிசி உடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்.

“அன்று இரவு முழுவதும் அஸ்ரிபாவின் கைப்பேசிக்கு அழைத்து இடைக்கிடையே பேசிக் கொண்டேயிருந்தேன். ஒரு கட்டத்தில் எனது அழைப்புக்கு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.

சம்பவ தினம் அதிகாலை இரண்டரை மணியிருக்கும் எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எனது மருமகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அழைப்பெடுத்தவர் கூறினார். ஆனால், அஸ்ரிபாவின் நிலை என்ன என்பதை அவர் எமக்குச் சொல்லவில்லை”

அந்த சம்பவம் நடந்து மறுநாள் காலை, பொலிவேரியன் பகுதிக்குள் நுழையும் பிரதான பாதையில் நிறுத்தப்பட்டிருந்த நீல நிற ஆட்டோ ஒன்றிலிருந்து அஸ்ரிபாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அதில் பயணித்த அஸ்ரிபாவின் கணவரும் மாமியாரும் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் முன்னதாகவே அனுமதிக்கப்பட்டனர். அவர்களுடன் பயணித்த அஸ்ரிபாவின் கணவருடைய சகோதரி, காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினார்.

அஸ்ரிபாவுக்கு என்ன நடந்தது என்பதில் அவரின் தாயாரும், தந்தையும் மாறுபட்ட தகவல்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டனர். படையினரின் துப்பாக்சிக் சூட்டிலேயே தனது மகள் உயிரிழந்ததாக அஸ்ரிபாவின் தாயார் கூறுகிறார்.

ஆனால், சம்பவத்தை தாங்கள் நேரடியாகக் காணவில்லை என்பதால், யாரின் தாக்குதலில் தனது மகள் பலியானார் என்பதைக் கூற முடியாது என்கிறார் அஸ்ரிபாவின் தந்தை.

“திருணமாகி 41ஆவது நாளிலேயே அஸ்ரிபாவின் கணவர், தொழில் நிமித்தமாக வெளிநாடு சென்றிருந்தார். இரண்டு வருடங்களின் பின்னர், கடந்த வருடம் நோன்பு மாதம் தான், மீண்டும் அவர் ஊர் வந்தார். அவர்கள் இன்னும் வாழவே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் இப்படியாகி விட்டது” என்று அழுகின்றார்கள் அஸ்ரிபாவின் உறவினர்கள்.

அஸ்ரிபா அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்துக்கும், வாழ்ந்த வீட்டுக்கும் அவரின் பெற்றோர் நம்மை அழைத்துச் சென்றனர். அஸ்ரிபாவின் வீடு பூட்டியிருந்தது. சாவி கிடைக்காததால், வீட்டுக் கதவில் தொங்கிய பூட்டை, அவரின் தந்தை உடைத்துக் கொண்டுதான் நம்மை உள்ளே அழைத்துச் சென்றார்.

அஸ்ரிபாவுக்கு அவரின் கணவர் அன்புடன் வாங்கிக் கொடுத்த பொருட்களையெல்லாம், நம்மிடம் ஒவ்வொன்றாகக் காண்பித்தவாறே அஸ்ரிபாவின் தாய் அழுகின்றார்.

“அஸ்ரிபா கிளியொன்றை வளர்த்தார். அவர் இறந்த மறுநாளே அந்தக் கிளியும் செத்துப் போய் விட்டது” என அங்கிருந்த கிளிக் கூடு ஒன்றைக் காட்டி, அஸ்ரிபாவின் தாயார் கண்ணீர் சிந்தினார்.

“அஸ்ரிபாவுக்கு சிறிய வயதில் திருமணம் செய்து வைத்தோம். அதனால், அஸ்ரிபாவை அவரின் கணவர் ஒரு குழந்தை போலவே பார்த்துக் கொண்டார். இந்த வீட்டிலுள்ள பொருள்களைப் பார்த்தாலே, அதனைப் புரிந்து கொள்ள முடியும்” என்று கூறி, அஸ்ரிபாவின் பாட்டி (தாயின் தாய்) சத்தமிட்டு அழுகின்றார்.

– BBC – Tamil

வவுனியாவில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனைக் காப்பாற்ற உதவுங்கள்!!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் ஆரம்பப்பிரிவில் தரம் ஐந்தில் கல்வி கற்று கடந்த வருடம் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் 176 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த வவுனியா கோவில்குளம் பகுதியில் வசித்துவரும் சிவநேசன் விதுர்சன் கடந்த 2017ஆம் ஆண்டு முதல்,

புற்றுநோயினால் பீடிக்கப்பட்டு மஹாரகம தேசிய புற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கடுமையான புற்று நோய்த்தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாகவும் உடனடியாக இந்தியாவிலுள்ள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்க வேண்டிய ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

புற்றுநோயினால் பீடிக்கப்பட்ட சிறுவனின் நோயைக்குணப்படுத்த இந்தியாவிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்கு 50 ஆயிரம் அமெரிக்க டொலர் பணம் தேவையாக ஏற்பட்டுள்ளது 40 ஆயிரம் டொலர் வைத்திய செலவுகளுக்கும் 10 ஆயிரம் டொலர் ஏனைய தேவைகளுக்கும் செலவாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தமது குடும்பம் விவசாயத் தொழிலினை மேற்கொண்டுவரும் நிலையிலுள்ளதால் தமக்கான உதவியை வழங்க தனவந்தர்கள் நன்கொடையாளர்கள் முன்வருமாறு கோரியுள்ளனர்.

பாடசாலை கல்வியில் திறமையாகவும் சித்திரம் வரைதலில் முன்மாதிரியாகவும் திறமைகளை வெளிப்படுத்தும் 11வயதுடைய சிறுவனைக்காப்பாற்றி உதவி புரியுமாறும் உருக்கமாக குடும்பத்தினர் பண உதவியைக் கோரியுள்ளனர்.

தமது குடும்ப வருமான நிலைமையை உணர்ந்து தமது பிள்ளையை காப்பாற்ற இயலுமானவர்கள் உதவிக்கரம் நீட்டுமாறும் கீழ் காணப்படும் இலக்கங்களுடன் தொடர்பினை ஏற்படுத்துமாறு மேலும் தெரிவித்துள்ளனர்.

பணவைப்புக்கான சிறுவனின் அக்காவின் கணக்கு இலக்கம் கிவாசினி சிவநேசன் மக்கள் வங்கி வவுனியா 040 2 001 20090263

தொலைபேசி இலக்கம் 076 0620745

நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலால் அலரி மாளிகையில் நடந்த திருமணம்!!

ஷங்கிரிலா ஹோட்டலில் அண்மையில் குண்டு வெடித்ததன் காரணமாக அலரி மாளிகையை மீண்டும் திருமண மண்டபமாக்கிய முன்னாள் அமைச்சர் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸாவின் மகனின் திருமணத்திற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவரது மகனின் திருமணத்திற்காக ஷங்கிரிலா ஹோட்டலில் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.

எனினும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் காரணமாக குறித்த ஹோட்டலில் திருமண நிகழ்வுகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் இந்த திருமண வைபவம் நடத்தப்பட்டுள்ளது.

விஜித் விஜயமுனி சொய்ஸாவின் மகன் வைத்திய மாணவரான கஜிது சொய்ஸா என்பவரே இவ்வாறு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

-தமிழ்வின்-

தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தற்கொலை தாக்குதலுக்கு முயன்ற தற்கொலைதாரி : ஏமாற்றத்தால் தடுமாறிய தருணம்!!

இலங்கையில் கடந்த மாத இறுதிப்பகுதியில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல் குறித்த சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன.

தாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டை வெடிக்க வைக்க முடியாமல் தடுமாறிய தீவிரவாதியின் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

அப்துல் லதீப் ஜமீல் மொஹமட் என்ற 36 வயதான குண்டுதாரி, தற்கொலை குண்டுடன் ஹோட்டலில் சுற்றித் திரிந்துள்ளார். எனினும் அவரது வெடி குண்டு தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்குள் செயலிழந்துள்ளது.

அதிகளவான வெளிநாட்டவர்கள் தமது காலை உணவினை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் வெடிகுண்டை வெடிக்க வைக்க முயற்சித்துள்ளார்.

இதன்போது பல முறை லதீப் அதனை வெடிக்க வைக்க முயற்சித்துள்ளார். எனினும் அவரால் முடியவில்லை.

இதனால் கோபமாக சென்று அங்குள்ள நாற்காலியில் அமர்கின்றார். அங்கும் முயற்சி செய்து பார்க்கின்றார். எனினும் அவரால் அதனை இயக்க முடியவில்லை.

பின்னர் தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு அருகிலுள்ள சிறிய விடுதிக்கு சென்று தனது குண்டை வெடிக்க செய்து உயிரிழந்துள்ளார்.

இலக்கு வைத்த திட்டங்களுக்கமைய லதீப் மாத்திரமே தோல்வியடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

லதீப் அவுஸ்திரேலியாவில் கல்வி கற்றவராகும். பின்னர் லண்டனில் தனது பட்டப்படிப்பை முடித்தவர் என சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வவுனியாவில் 31 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 20 வாகனங்களை தேடும் இராணுவத்தினர்!!

வெடிபொருட்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான ஆயுதங்கள் ஏற்றப்பட்ட 20 வாகனங்கள் தெற்கில் இருந்து வடக்கிற்கு சென்றதாக பாதுகாப்பு பிரிவுகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதற்கமைய வவுனியாவில் வீதிகள் மறிக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் 31 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அதனூடாக செல்லும் வாகனங்கள், பொதுமக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அத்துடன் 20 வாகனங்களில் இலக்கங்களும் குறித்த சோதனை சாவடியில் காட்சிப்படுத்தப்பட்டு அவ் வாகனங்களை இராணுவத்தினரும், பொலிசாரும் இணைந்து தேடி வருகின்றனர்.

காலை, மாலை என இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், வவுனியாவுக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியாவுக்குள் நுழையும் 4 திசைகளிலும் இந்த பாதுகாப்பு கடவைகள் நிறுத்தப்பட்டு வாகனங்களை சோதனையிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் இராணுவத்தினர் வீடுகளுக்கு சென்று சோதனையிடும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தர்!!

வவுனியா சாளம்பைக்குளத்தில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

மரணமடைந்தவர் சாளம்பைக்குளத்தை சேர்ந்த இம்திகாக் அஹலம் (வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

6 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்ட இவருக்கு பட்டானிச்சூர் பகுதியில் வைத்து சில மாதங்களுக்கு முன் அசிட் வீசப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இன்று பள்ளிக்கு தொழுகைக்காக செல்ல ஆயத்தம் செய்துகொண்டிருந்த போதே வீட்டிற்கு சென்ற இருவர் இவரை அழைத்துள்ளனர். அவர்களை நேக்கி இவர் சென்றபோதே கூரிய ஆயுதத்தால் கழுத்துப்பகுதியில் வெட்டியுள்ளனர்.

உடனடியாக வைத்தியசாலைக்கு காயமடைந்தவரை கொண்டு சென்றபோதிலும் அவர் இறந்துள்ளார். உடலின் பல இடங்களில் வெட்டுக்காயங்களுடன் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஐ.எஸ் பயங்கரவாதிகளால் கொழும்பு நகருக்கு மீண்டும் ஆபத்து : பொலிஸார் எச்சரிக்கை!!

தலைநகர் கொழும்பிலுள்ள பாலங்களை தகர்க்க ஐ.எஸ் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளன.

கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் பாலங்களை குண்டு வைத்து தகர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலின் தொடர்ச்சியாக மேலும் பல தாக்குதல்கள் திட்டமிப்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கொழும்பு நகரத்திற்கு அருகிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

கங்கைகள் மற்றும் பாலங்களை பாதுகாப்பதற்காக அதிகமாக படகுகளை பயன்படுத்துமாறு கடற்படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் திணைக்களத்திற்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய கொழும்பு நகரத்திற்குள் நுழையும் பாலங்கள் சிலவற்றை வெடிக்க வைத்து தகர்ப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த மாத இறுதிப்பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல் காரணமாக 257 பேர் உயிரிழந்த நிலையில் 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

-தமிழ்வின்-

பளையிலிருந்து முறிகண்டி நோக்கி பயணித்த வாகனம் விபத்து : ஐவர் வைத்தியசாலையில்!!

பளையிலிருந்து முறிகண்டி நோக்கி பயணித்த வாகனமொன்று கிளிநொச்சி நகரில் வைத்து நேற்று நள்ளிரவு விபத்திற்கு உள்ளானதில் நால்வர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளர்.

நால்வரில் ஒருவர் பலத்த காயங்களுக்கு இலக்கியுள்ளதுடன், ஏனையவர்கள் சிறு காயங்களுக்கு இலக்காகி கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிளிநொச்சி நகரின் நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள ஏ9 வீதியில் மரத்தில் வாகனம் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

அதிக வேகம் விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் உயிரிழந்த நகரசபை ஊழியர்களுக்கு அஞ்சலி நிகழ்வு!!

வவுனியா நகரசபையின் கொல்களத்தில் கடமையின் போது உயிரிழந்த நான்கு சுகாதார தொழிலாளிகளுக்கும் நேற்று(02.05) அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

புதிய அரச பொது ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா சகாயமாதாபுரம் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற இவ் அஞ்சலி நிகழ்வில் நகரசபையின் கொல்களத்தின் கழிவுக் கிடங்கை சுத்தம் செய்தபோது விசவாயு தாக்கத்தினால்
சே.செல்வராசா, பி.சசிகுமார், சந்தனசாமி, வசந்தகுமார் ஆகிய சுகாதார தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர்.

இந் நிலையில் குறித்த ஊழியர்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி இவ் அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆலயத்தின் பிரதான குருவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், நகரசபையின் உப தலைவர் சு.குமாரசாமி, ஜனநாயக மாக்சிச லெனிச கட்சியின் வன்னி மாவட்ட செயலாளர் நி.பிரதீபன், ஸ்ரீடெலோ கட்சியின் இளைஞரணி தலைவர் கார்த்தி, அருட் சகோதரிகள், வவுனியா வர்த்தகர் சங்க தலைவர் சுஜன் உட்பட பிரதிநிதிகள், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார், சமூக ஆர்வலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தியதுடன் தீபமேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

வவுனியாவில் முஸ்லிம் இளைஞன் வெட்டிக்கொலை!!

வவுனியா சாளம்பைக்குளத்தில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

மரணமடைந்தவர் சாளம்பைக்குளத்தை சேர்ந்த இம்திகா அஹலம் (வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உடலின் பல இடங்களில் வெட்டுக்காயங்களுடன் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா நகரசபையின் பயன்படுத்தப்படாத வாகனம் ஒன்றில் இருந்து வெடிமருந்து மீட்பு!!

வவுனியா, நகரசபைக்கு சொந்தமான நீண்டகாலமாக பயன்படுத்தபடாத வாகனம் ஒன்றில் இருந்து சிறிய ரக வெடி மருந்தும், வயரும் இன்று (02.05.2019) வவுனியா பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கழிவகற்றும் வாகனம் ஒன்று பழுதடைந்த நிலையில் உள்ளமையால் நீண்டகாலமாக பயன்படுத்தப்படவில்லை.

குறித்த வாகனத்தை திருத்த வேலைக்காக இன்று (02.05.2019) தயார் செய்தபோது வாகனத்தின் பின் பகுதியில் பொலித்தீன் பொதி ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் சிறிய ரக வெடிமருந்து 50 கிராம் கண்டுபிடிக்கப்பட்டது.

அத்துடன் வெடிக்க வைப்பதற்கு பயன்படும் 33 மீற்றர் நீளமான வயரும், வேறு வேறு மாவட்டங்களையைச் சேர்ந்த 3 அடையாள அட்டைகளும் கண்டு பிடிக்கப்பட்டன.

இதனையடுத்து வவுனியா பொலிசாருக்கு நகரசபையினர் தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பொலிசாரும், விசேட அதிரடிப் படையினரும் குறித்த வெடி மருந்தை பரிசோதித்து அதனை மீட்டு எடுத்துச் சென்றனர்.

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.