இறந்துபோன நடிகர் ரித்தீஷ்ஷின் மனைவி லோகேஸ்வரி குறித்து தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசனின் மருமகள் ஜெயந்தி கண்ணப்பன் கண்கலங்கியுள்ளார்.
ஜெயந்தி கண்ணப்பன் கூறியதாவது, ரித்தீஷை காதலிச்சு திருமணம் செய்துகொண்டாள். எந்த பொண்ணுக்கும் வரக்கூடாத துன்பம் இது.
கணவரை இழந்து மூன்றுகுழந்தைகளுடன் இருக்கும் அவளே சின்னப் பொண்ணுதான். அதில் ஒரு குழந்தைக்கு அப்பாவுடைய முகமே தெரியாமப்போச்சு, இனி அவள் என்ன செய்யப்போகிறான் என தெரியலை என்று கண்கலங்கியுள்ளார்.
கலைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரை பார்ப்பதற்காக சென்றிருந்தேன். அப்போது குழந்தைக்கு தடுப்பூசி போட வந்த அவளையும் சந்தித்தேன். நான் குழந்தைக்கு பணம் கொடுத்த போது, பணம் வேண்டாம் ஆசிர்வாம் போதும் என்று சொன்னாள். அவளின் கணவர் ரித்தீஷ் இறந்த செய்தி கேட்டு மிகவும் வேதனையடைந்தேன் என கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் இரண்டு வயது சிறுமி அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவரின் வயிறு வீங்கிய நிலையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.
பிரித்தானியாவின் Blackpool பகுதியைச் சேர்ந்தவர் Shannon Latham 23 வயதான இவர் தன் மகளின் நிலை குறித்து கூறுகையில், எந்த ஒரு பெற்றோரும் தன் குழந்தைக்கு இப்படி ஒரு பிரச்சனை வரும் என்று நினைக்கமாட்டார்கள்.
கடந்த மாதம் என் மகள் Cleo Keenan(2)-வுக்கு ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அப்போது அவளுக்கு சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அப்போது எடுத்துப் பார்த்த போது அவளின் வயிற்றின் உள்ளே பெரிய கட்டி ஒன்று இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அதன் பின் இரண்டு வாரங்கள் கழித்து நடத்தப்பட்ட சோதனையில் Cleo Keenan-க்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அது மூன்றாம் கட்டம் எனவும், அட்ரீனல் சுரப்பி பகுதியில் இந்த நோயின் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவளின் வயிறு வீங்கிக் கொண்டு சென்றதால், பார்க்க கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் வயிறு போன்று இருக்கிறது. இந்த நோயின் பாதிப்பு இருந்தாலும், சிறுமி நன்றாக இருப்பதாக பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
Cleo Keenan-வுக்கு Emelia என்ற ஐந்து வயது சகோதரியும் Ellie-Mae என்ற நான்கு வயது சகோதரியும் உள்ளனர். கடந்த 2-ஆம் திகதி Cleo Keenan-வுக்கான சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும், இதனால் அவருக்கு பல சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவருடைய தாயார் கூறியுள்ளார். Cleo Keenan-ன் சிகிச்சைக்காக நிதி திரட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தகக்து.
பிரித்தானியாவை சேர்ந்த நபர் மனைவியை கொலை செய்த வழக்கில் சிறையில் இருந்த நிலையில் அவர் உயிரிழந்துவிட்டார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்தவர் கெவின் ஸ்மிதம் (51). இவர் தாய்லாந்தை சேர்ந்த கண்ட்ரா (29) என்ற இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.
தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தாய்லாந்தில் கண்ட்ரா குடும்பத்தாருடன் கடந்தாண்டு ஏப்ரலில் கெவின் வசித்து வந்தார். அப்போது கணவனும், மனைவியும் சேர்ந்து நள்ளிரவு வரை ஒன்றாக மது அருந்தியுள்ளனர். பின்னர் கண்ட்ராவை கெவின் உறவுக்கு அழைத்த போது அவர் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் கண்ட்ராவுக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்த கெவின் அவர் கழுத்தை நெரித்தும், எட்டி உதைத்தும் கொலை செய்துள்ளார். பின்னர் நிர்வாண நிலையில் இருந்த கண்ட்ரா சடலத்தை வீட்டு வாசலில் போட்டுவிட்டு அதை போர்வையால் மூடியுள்ளார்.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் பொலிசுக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றிய பொலிசார் கெவினை கைது செய்தனர். மனைவியை கொன்றதை கெவின் ஒப்பு கொண்ட நிலையில் தாய்லாந்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் படுகாயம் அடைந்த நிலையில் சிறையில் கெவின் கண்டெடுக்கப்பட்டார்.
பின்னர் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார், இந்நிலையில் கெவின் உயிரிழந்தை சில நாட்களுக்கு முன்னர் தான் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆனாலும் கெவினுக்கு எப்படி சிறையில் காயங்கள் ஏற்பட்டது என்ற விபரம் இன்னும் தெரியவில்லை.
வவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா சித்திரை புத்தாண்டான 14.04.2019 ஞாயிற்றுக்கிழமை காலை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ இரகுநாத கமலேஸ்வர குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
அதிகாலை ஐந்து மணிமுதல் கிரியைகள் ஆரம்பமாகி காலை ஏழரை கொடிதம்ப பூசையை தொடர்ந்து எட்டரை மணியளவில் வசந்தமண்டபபூஜை நிறைவு பெற்று பஞ்சமுக விநாயகப்பெருமான் தேருக்கு எழுந்தருளினார்.
தொடர்ந்து நூற்றுக்கணக்கான தேங்காய்கள் உடைக்கபட்டு காலை 9.15 மணியளவில் அடியவர்கள் வடம்பிடிக்க அரகரோகரா முழக்கத்துடன் எம்பெருமானது தேர் இழுக்கபட்டு பக்தர்கள் புடைசூழ திருவீதி வலம்வந்து 10.15 மணியளவில் இருப்பிடத்தை வந்தடைந்தார்.
வவுனியா இராசேந்திரகுளம் கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதிகளில் காணப்பட்ட வீதிச் சமிக்கைகளை இனந்தெரியாத நபர்கள் சேதமாக்கியுள்ளனர்.
பாரதிபுரம் தொடக்கம் இராசேந்திரகுளம் வரையிலான பகுதியில் வீதிகளில் காணப்பட்ட பாதாசாரிகள் கடவை முன்னால், பஸ் தரிப்பிடம், முன்னால் வளைவு போன்ற பாதாதைகளை புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு இனந்தெரியாத நபர்கள் சேதமாக்கியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த இடத்தில் நின்று நேற்று முன்தினம் மற்றும் நேற்றையதினம் இரவு இளைஞர்கள் மதுபாவனையில் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் தொடர்பாக நெளுக்குளம் பொலிஸார் மற்றும் கிராம சேவையாளருக்கு பொதுமக்கள் தெரியப்படுத்தியமையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த இரு அதிகாரிகளும் விசாரணைகளை முன்னேடுத்து வருவதுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் சேதமடைந்துள்ள வீதிச் சமிக்கைகளை மீள அவ்விடத்தில் அமைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
கம்பஹாவில் அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை என வீசப்பட்ட லொத்தர் டிக்கட் ஒன்றிற்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் கிடைத்துள்ளது. மீரிகம பிரதேசத்தில் விற்பனை செய்யப்பட்ட லொத்தர் டிக்கெட்டுக்கே இவ்வாறு அதிர்ஷ்டமாக பணம் கிடைத்துள்ளது.
வீசப்பட்ட சீட்டினை அவதானித்த லொத்தர் சீட்டு விற்பனையாளர், அதனை வாங்கியரை தேடிச் சென்று பணத்தை வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். புத்தாண்டு பரிசாக அவர் அதனை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மீரிகம பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் லொத்தர் சீட்டு விற்பனை செய்யும் புஷ்பகுமார பெரேரா என்பவரே இந்த செயலை மேற்கொண்டுள்ளார். பூகொட பிரதேசத்தை சேர்ந்த ருவன் அசங்க என்ற நபர் மீரிகம நகரத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில் லொத்தர் சீட்டு ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.
அண்மையில் அந்த இடத்திற்கு சென்ற நபர் தான் கொள்வனவு செய்த லொத்தர் சீட்டிற்கு அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை என அங்கிருந்த குப்பை தொட்டியில் அதனை வீசியுள்ளார். எனினும் அந்த லொத்தர் சீட்டில் இருந்த விசேட இலக்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும் என விற்பனையாளருக்கு தெரியவந்த பின்னர் அவர் உரிமையாளரை தேட ஆரம்பித்துள்ளார்.
அதற்கமைய அதனை உரிமையாளரிடம் வழங்கியுள்ளார். தான் வீசிச் சென்ற லொத்தர் சீட்டின் பணத்தை தன்னிடமே ஒப்படைத்த குறித்த இருவருக்கும் லொத்தர் சீட்டு உரிமையாளர் நன்றியை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தொடரும் கடும் வரட்சி காரணமாக மின்சார உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மின்வலு எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சீராக மின்சார விநியோகத்தை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்தாலும் மின் உற்பத்தி நிலையங்கள் அமைந்திருக்கும் நீரேந்து பிரதேசங்களில் மழை பெய்யவில்லை. நீரேந்து பிரதேசங்களின் நீர் மட்டம் தற்சமயம் 30 சதவீதமாக காணப்படுகிறது. பண்டிகைக் காலத்தில் மின்சார தேவை அதிகரித்திருந்தாலும் நீர் மின்நிலையங்களிலிருந்து போதியளவிலான மின்சாரம் வழங்கப்படுகிறது.
கடந்த புதன்கிழமை முதல் மின்சார துண்டிப்பு இடைநிறுத்தப்பட்டாலும் மின்சாரத்தை உற்பத்தி செய்வது தொடர்ந்தும் சவாலாகவே காணப்படுறது.
இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் மீண்டும் சுழற்சி முறையில் மின்சார விநியோகத்தை தடை செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அரச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அமைச்சின் ஊடகப் பேச்சாளர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த இரு வாரங்களுகாக 5 மணித்தியாலங்களுக்கு சுழற்சி முறையில் மின்விநியோகம் தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக நாடாளவிய ரீதியாக பல்வேறு தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு துணுக்காய் கல்விளான் சந்திப்பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் தடம் புரண்டதில் ஒருபிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். அத்துடன், நான்குபேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு பழைய முறிகண்டி பகுதியிலிருந்து மன்னார் இலுப்பைக்கடவைக்கு சென்ற உழவு இயந்திரமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.
துணுக்காய் சந்தியிலிருந்து கல்விளான் சந்தியூடாக இலுப்பைக்கடவை நோக்கிப்பயணித்த மேற்படி உழவு இயந்திரம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து கல்விளான் சந்திப்பகுதியில் உழவு இயந்திரப்பெட்டி தடம் புரண்டுள்ளது. இதில் பெட்டியில் இருந்த பயணித்த ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை இதில் படுகாயமடைந்த நால்வர் உடனடியாக மல்லாவி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு இரண்டு பேர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், இரண்டுபேர் மல்லாவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவத்தின் போது பழைய முறிகண்டியைச்சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான புவனேஸ்வரநாயகம் நிசாந்தன் (வய 27) என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் மல்லாவி வைத்தியசாலையிலிருந்து மரண விசாரணைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாமக்கல் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் – நிர்மலா தம்பதியரின் 13 வயதான மகன் குமரன் பிறந்ததில் இருந்தே இதயநோயால் அவதிப்பட்டு வருகின்றார்.
நீண்ட நாட்களாக இந்த நோயால் அவதியுரும் குறித்த சிறுவனுக்கு தற்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் கூறியுள்ள நிலையில், அதற்கு 3 லட்சம் ரூபாய் செலவாகும் எனவும் கூறியுள்ளனர்.
குமரனின் தந்தை சாரதி வேலை செய்து நாளாந்தம் 300 ரூபா வரையில் வருமானம் பெற்று வருகிறார். இந்த பணத்தின் மூலம் அவர்களது நாளாந்த வாழ்க்கைச் செலவுகளை கூட ஈடு செய்ய முடியாத நிலை உள்ளது.
எனினும், தனது மகனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காக 3 லட்சம் ரூபாய் நிதியை திரட்டும் நடவடிக்கையில் பெரும் சிரமத்தின் மத்தியில் ஈடுபடுகிறார் குமரனின் தந்தை.
இது குறித்து குமரனின் தாய் கூறுகையில், தனது மகனை இந்த போராட்டத்திலிருந்து மீட்டு தன்னிடம் மீண்டும் ஒப்படைக்க உதவுமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுக்கிறார்.
மகனுக்கு இவ்வளவு பெரிய பிரச்சினை இருந்த போதும் 13 வருடங்கள் போராடி குமரனை காப்பாற்றி தக்கவைத்துள்ள நிலையில் தற்போது ஆதரவு கரம் நீட்டுமாறு கோரியுள்ளார்கள் குணசேகரன் – நிர்மலா தம்பதியினர். மேலதிக தகவலுக்கு லிங்கை கிளிக் செய்யவும்… https://www.edudharma.com/fundraiser/donate-kumaran-heart-surgery
பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் எந்தவித தகவல்களும் அறிவிக்கப்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் லண்டன் லூட்டன் விமான நிலையத்தில் நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர். குறித்த நான்கு பேரும் இலங்கையர்கள் என்று கூறப்பட்ட போதிலும் அவர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் மெட்ரோபோலிடன் பொலிஸாரினால் அந்த நாட்டு தூதரகத்திடம் வழங்கப்படவில்லை என அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கையர்கள் தொடர்பில் தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் பேட்பெஷர் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பிரித்தானியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை நேரத்தில் பலத்த மின்னல் தாக்கத்திற்கும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியதற்குமான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.
இன்றைய காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மின்னல் தாக்கங்களினாலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் கடந்த சில மாதங்களாக வறட்சியுடன் கூடிய காலநிலை நிலவி வந்த நிலையில், தற்போது மழைபெய்யக் கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கையில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட செயற்கைகோள் நாளையதினம் விண்ணுக்கு ஏவப்படவுள்ளது. ராவணா- 01 எனப் பெயரிடப்பட்டுள்ள செயற்கைகோளை விண்ணில் ஏவுவதற்கான நடடிக்கைள் பூர்த்திய அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நாளையதினம் ராவணா செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. சிங்கனஸ் என்ற ரொக்கட் ஊடாக இந்த செயற்கைகோள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த செயற்கைகோள் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியான தரிது ஜயரத்ன என்ற மாணவன் மற்றும் தாய்லாந்து பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற துலானி சாமிகா என்ற மாணவியும் இணைந்து இந்த செயற்கைக்கோளை தயாரித்துள்ளனர்.
1000 சென்றி மீற்றர் வரை சிறியதாக காணப்படும் இந்த செயற்கைக்கோள் 1.1 கிலோகிராம் நிறையை கொண்டுள்ளது. ஜப்பான் தொழில்நுட்ப நிறுவனத்தில் வைத்து இந்த செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளுக்கு இணையாக இலங்கையும் முதன்முறையாக செயற்கை கோள் ஒன்றை விண்ணில் செலுத்தவுள்ளமை சிறப்பம்சமாகும்.
சர்வதேச ரீதியில் பிரபல்யமான பாரிஸ் நகரில் அமைந்துள்ள நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தேவாலயம் முழுவதும் பரவிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை.
தேவாலயத்தின் சிகரம் தற்போதுமறுசீரமைப்பு செய்யப்பட்டு வருவதால், இந்த விபத்துக்கு அதுவும் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். எனினும் தீயினைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு தீயணைப்படையினர் கடுமையாக போராடி வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஆதி விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக சிறப்பு மலரான ஆதிவிநாயகம் நூல் நேற்றைய தினம் ஆதிவிநாயகர் ஆலய மண்டபத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வு வவுனியா பிரதேச இந்து கோவில்கள் ஒன்றியத்தின் செயலாளர் சிவ.திருக்கேதீஸ்பரன் தலைமையில் நடைபெற்றது. செல்வி பி.நதிக்கா செல்வி பி.நிதிக்கா ஆகியோரின் இறைவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் ஆசியுரையினை ஆலய பிரதம குரு சிவஶ்ரீ இரகுநாத.கமலேஸ்வரக்குருக்ககளும் வாழ்த்துரையினை வவுனியா பிரதேச கலாசார உத்தியோகத்தர் வீ.பிரதீபன் ஆலய பரிபாலன சபைத்தலைவர் க.சுமந்திரன் அவர்களும் நிகழ்த்த,
செட்டிகுள பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.சண்முகநாதன் நூலை வெளியீட்டு வைத்தார். அதனைத்தொடர்ந்து நூல் அறிமுகவுரையினை தமிழருவி த.சிவகுமாரன் நிகழ்த்த ஏற்புரையினை மலராசிரியர் சிவ.கஜேந்திரகுமார் நிகழ்த்தினார்.
பிரித்தானியாவை சேர்ந்த அழகிய இளம்பெண்ணின் வயிறு பெரிதாக வீங்கி கொண்டே சென்ற போது அவர் கர்ப்பமாக இருப்பதாக குடும்பத்தார் நினைத்த நிலையில் அவருக்கு கருப்பை புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது.
அபி கிறிஸ்வெல் (21) என்ற இளம் பெண்ணின் வயிறு கடந்த 2017 டிசம்பரில் வீங்க தொடங்கியது. மேலும் அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது, இதையடுத்து அபி கர்ப்பமாக இருப்பதாக அவரின் குடும்பத்தினர், நண்பர்களும் நினைத்தனர்.
பின்னர் மருத்துவர்களிடம் சென்றபோது அவர்களுக்கும் அபி கர்ப்பமாக இருக்க தான் வாய்ப்பு அதிகம் என தொடர்ந்து அதற்கான பரிசோதனையை செய்து வந்தனர். ஆனால் அபி தொடர்ந்து தாங்க முடியாத வயிற்று வலியால் அவதிப்பட்டார்.
இப்படியே 6 மாதம் வரை சென்ற நிலையில் இனியும் வலியை பொறுக்க முடியாது என அபி வேறு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அபிக்கு பல்வேறு விதமான பரிசோதனைகளுடன், நிறைய ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர், காரணம் அபிக்கு கருப்பை புற்றுநோய் இருப்பதும், அவர் வயிற்றில் 2.2 கிலோ எடையுடைய புற்றுநோய் கட்டி இருப்பதும் தெரியவந்தது.
இந்த கட்டி தான் அவரின் வயிற்றை வீங்க வைத்து கர்ப்பிணி போல வெளியில் காட்டியுள்ளது. இதற்கான சிகிச்சையை தொடர்ந்து அபி எடுத்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் வயிற்றில் இருந்த கட்டி முழுவதுமாக அகற்றப்பட்டது.
இதன் பின்னர் தொடர் சிகிச்சையால் அபி புற்றுநோயிலிருந்து தற்போது மீண்டுள்ளார். அபி கூறுகையில், எல்லோரும் என் வயிறு வீங்கியதை பார்த்து நான் கர்ப்பமாக இருப்பதாக நினைத்தார்கள், ஆனால் எனக்கு மட்டும் வேறு எதோ பிரச்சனை உள்ளது என்றே தோன்றியது.
அதற்கேற்றார் போலவே பெரிய கட்டி வயிற்றில் இருப்பது தெரியவந்தது. கட்டியை வெளியில் எடுத்த போது அது பெரிய உருண்டை அளவில் இருந்தது என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நோய் காரணமாக என் தலைமுடியை இழந்து மிகவும் சிரமப்பட்டேன், எப்படியோ நோயிலிருந்து மீண்டது மகிழ்ச்சியளிக்கிறது என கூறியுள்ளார்.
புதுவருடத்தில் இடம்பெற்ற கைகலப்பு மற்றும் விபத்துக்கள் காரணமாக காயமடைந்த 110 பேர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 8 பேர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுவருட தினமான நேற்று காலை 6 மணியில் இருந்து இன்று நண்பகல் வரை இடம்பெற்ற கைகலப்பு மற்றும் விபத்துக்கள் காரணமாக காயமடைந்த 110 பேர் வவுனியா வைத்தியசாலையின் விபத்துக்கள் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் ஏற்பட்ட தகராறு, அடிதடி, குழுமோதல், வாள்வெட்டு, வாகன விபத்து என்பன காரணமாகவே காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் புதுவருட தினமான நேற்று காலை 6 மணியில் இருந்து நேற்று இரவு 12 மணிவரை 62 பேரும், இன்று அதிகாலை 12 மணியில் இருந்து நண்பகல் வரை 48 பேரும் இச் சம்பவங்களால் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் சிறு காயங்களுக்கு உள்ளானோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி வரும் நிலையில் ஏனையோர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் வவுனியா, கோவில்குளம், உமாமகேஸ்வரன் சந்திப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கார் ஒன்றும், முச்சக்கர வண்டி ஒன்றும் சேதடைந்த நிலையில் வவுனியா பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
இக்குழு மோதல் தொடர்பில் மூவர் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மூவரை பொலிசார் தேடி வருகின்றனர்.
மேலும் பிறிதொரு பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், புதுவருட தினத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவரும் வவுனியா போக்குவரத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.