ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) – அடுத்தவர் பிரச்சினைகளை தலையில் போட்டுக் கொள்ளும் ரிஷப ராசி அன்பர்களே இந்த மாதம் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும்.
எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி செல்வார்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குடும்பத்தினருக்காக பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் அடையும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், கூடுதல் செலவை சந்திப்பார்கள். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பழி ஏற்க வேண்டி இருக்கும். எனவே கவனம் தேவை. பெண்களுக்கு அடுத்தவர் ஆச்சரியபடும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவார்கள். புதிய நட்பு மூலம் மகிழ்ச்சி கிடைக்கும்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். இதுவரை வராமல் தடைப்பட்ட பணத்தொகை கைக்கு வந்துசேரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் மேன்மைகளும் உண்டாகும். உடனிருக்கும் சக கலைஞர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் உயரக்கூடிய காலம் என்றாலும் கட்சிப்பணிகளுக்காக நிறைய செலவுசெய்ய நேரிடும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வீர்கள். உடனிருப்பவர்களால் சில பிரச்சினைகளைச் சந்திக்கக்கூடும் என்பதால் எதிலும் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பாடங்கள் படிப்பது பற்றிய கவலை நீங்கும். புதிய நட்பால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
கார்த்திகை 2, 3, 4 பாதம் : இந்த மாதம் சிலருக்கு இடமாற்றம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் நடக்கும். உடன்பணிபுரிவோரால் அனுகூலம் உண்டு. உங்கள் பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். அலைச்சல் இருக்கும். தொழில் நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். கூட்டு வியாபாரத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.
ரோகிணி: இந்த மாதம் எதிலும் முதலீடு செய்வதற்கு முன் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து கொள்ளவும். இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்திட முயற்சியுங்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்டதூர தகவல்கள் சாதகமானதாக இருக்கும். உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். கலைத்துறையினருக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
மிருக சிரீஷம் 1, 2, பாதம் : இந்த மாதம் உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. இடம் விட்டு இடம் பெயரும் சூழ்நிலை உருவாகும். உங்களின் தரத்தை விட தீயோரோடு சகவாசத்தை குறைக்க வேண்டும்.
பரிகாரம் : மகா லட்சுமியை வழிபட்டு வாருங்கள் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், வெள்ளி, சந்திராஷ்டம தினங்கள்: ஏப்ரல் : 24, 25, அதிர்ஷ்ட தினங்கள்: ஏப்ரல்: 17, 18, 19.
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) – நண்பர்கள் வட்டாரம் அதிகம் கொண்டுள்ள மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் தெளிவான சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.
சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும்.
குடும்பத்தில் வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். தடைபட்டு வந்த திருமண காரியங்கள் சாதகமாக நடக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் வீண் விவாதங்கள் தோன்றும். கவனம் தேவை.
தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வரும். சரக்குகள் வருவதும் புதிய ஆர்டர்கள் கிடைப்பதும் எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்களும் ஏற்படும். கவனமாக இருப்பது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை குறையும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடினமாக காரியங்களையும், திறமையாக செய்து முடிப்பீர்கள். பெண்கள் எடுத்த வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும்.
கலைத்துறையினருக்கு நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த பட வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று உங்களின் திறமைகளை வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்துவீர்கள். கலை சம்பந்தப்பட்ட துறைகளிலும் நல்ல உயர்வுகளைப் பெறமுடியும். நிலுவையில் இருந்த பணப்பாக்கிகளும் திருப்திகரமாக கைக்கு வந்து சேரும்.
அரசியல்வாதிகளின் பெயர், புகழ் அதிகரிக்கக்கூடிய காலமாகும். எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். பதவிக்கு இருந்த இடையூறுகள் விலகி எதிர்பார்க்கும் உயர்வுகளை அடைவீர்கள். உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். மாணவர்கள் கவனம் சிதற விடாமல் பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளின் போது கவனம் தேவை.
அஸ்வினி : இந்த மாதம் பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். வாழ்க்கைவளம் முன்னேறும். தைரியமாகவும் அதே வேளையில் தெய்வ அனுகூலத்துடனும் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். சகோதர சகோதரிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தினில் சிற்சில பிரச்சனைகள் வரலாம். உடன் வேலை செய்வோரின் ஆதரவால் அதனைச் சமாளிப்பீர்கள்.
பரணி : இந்த மாதம் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஆனாலும் வீட்டில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் தலைதூக்கலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவதால் நிலைமையைச் சமாளிக்கலாம். உறவினர் வகையிலும் கூட ஒருவருடன் மனஸ்தாபம் உருவாகலாம்.
கார்த்திகை 1ம் பாதம் : இந்த மாதம் அதீத எதிர்பார்ப்புகள் வேண்டாம். சிலருக்கு தூரத்திலிருந்து விரும்பத்தகாத செய்திகள் வரலாம். தீவிர முயற்சிகளின் பேரில் சிலருக்கு சுபமான நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற பிரதிபலன் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் நன்மை நடக்கும்.
பரிகாரம்: தினமும் அருகிலுள்ள முருகன் கோவிலுக்கு சென்று வர பிரச்சினைகள் நீங்கும். அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், செவ்வாய், சந்திராஷ்டம தினங்கள்: ஏப்ரல்: 22, 23, அதிர்ஷ்ட தினங்கள்: ஏப்ரல்: 15, 16; மே: 13, 14.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் விகாரி வருடம் பிறக்கிறது. இந்த தமிழ் புத்தாண்டில் எந்த ராசிக்கு என்ன பலன் எந்த ராசிக்காரர்கள் என்ன பரிகாரம் செய்யலாம் என அனைத்து தகவல்களையும் விரிவாக பார்ப்போம் வாருங்கள். விகாரி வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019.
மேஷம் – தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019
மேஷராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கும் விகாரி வருடத்தின் தொடக்கத்தில் சுமாரான பலன்களும், பிற்பகுதியில் நன்மையான பலன்கள் உண்டாகும் என்பது ஜோதிடர்களின் கணிப்பாகும். விகாரி வருடத்தில் உங்களுக்கு பல அதிர்ஷ்ட வாய்ப்புகள் உருவாகும். எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் பெறுவீர்கள். சிறந்த பணலாபம் இருக்கும்.
வாக்குறுதிகளை கடன்கள் அனைத்தையும் திருப்பி செலுத்தி விடுவீர்கள். இதுவரை நீங்கள் தயங்கிய விடயங்களில் நீங்கள் விரும்பிய மாற்றங்கள் இருக்கும். பிறரின் உதவி உங்களுக்கு தக்க சமயத்தில் கிடைக்கும். உதவி கேட்டு உதாசீனப்படுத்தியவர்கள் உங்களை தேடி வந்து உறவு கொண்டாடும் நிலை இருக்கும். வேலை, தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் இருந்து வந்த சாதகமற்ற நிலைமைகள் அனைத்தும் இந்த வருடத்தில் சீராகும்.
எதிலும் நீடித்து வந்த தடை, தாமதங்கள் நீங்கும். இதுவரை தாமதப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு, நிலுவையில் இருந்த தொகையோடு சேர்த்து உங்களுக்கு கிடைக்கும்.
சுயதொழில், வியாபாரம் செய்வர்கள் சிறப்பான தொழில் வளர்ச்சியை காண்பார்கள். உங்களின் தொழில் முன்னேற்றப் பாதையில் செல்லும். தொழில் செய்பவர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்து உங்களுக்கு தனலாபத்தையும், நற்பெயரையும் பெற்று தருவார்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு இது மிகவும் சிறப்பான காலமாக இருக்கும். அதிகாரப் பதவிகள் தேடி வரும். தேர்தல்களில் மகத்தான வெற்றியை பெறுவீர்கள்.
குடும்பத்தில் இது நாள் வரை தடைப்பட்டு கொண்டிருந்த சுப காரியங்கள் இனிமேல் சிறப்பாக நடைபெறும். திருமணமாகாதவர்களுக்கு இந்த வருடம் திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிநாடு வேலை, வெளிநாட்டு பயணங்களும் சிலருக்கு ஏற்படும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சனைகள் சுமூகமாக முடியும்.
ரிஷபம் – தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019
தன்னை எப்போதும் அழகாக காட்டிக்கொள்வதில் அக்கறை கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு பிறக்கின்ற விகாரி தமிழ் புத்தாண்டில் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடல் நலம் நன்றாக இருக்கும் என்றாலும் அவ்வப்போது சிறிய உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.
ஆண்டின் தொடக்கத்தில் தேவையற்ற பயணங்களால் உடல் மற்றும் மனம் களைப்படையும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் எழும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தடைபட்டு கொண்டிருந்த காரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும். புத்திர பேறில்லாமல் அவதிப்பட்டவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய வீடு, வீட்டு மனை மற்றும் அசைய சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும்.
உடல் நலத்தில் அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மறையும். தொழில், வியாபாரங்களில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும். குடும்பத்தின் பொருளாதார நிலை நன்றாகவே இருக்கும். பொன், பொருள், ஆபரண சேர்க்கை உண்டாகும். புதிய வீடு, வாகனங்கள் வாங்கும் யோகம் நிறைவேறும். நீதிமன்ற வழக்குகளில் தாமதங்கள் ஏற்பட்டாலும் வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும்.
தொழில், வியாபாரங்களில் உங்கள் கடின உழைப்பின் மூலம் வெற்றியை பெறுவீர்கள். உங்கள் தொழில், வெளியூர், வெளிநாட்டு வியாபாரங்களில் மிகுந்த லாபம் ஏற்படும். ஒரு சிலருக்கு புதிய இடங்களுக்கு இடமாறுதல்கள் ஏற்படும். அரசியல் துறையில் ஆண்டின் தொடக்கத்தில் எதிலும் ஏற்ற, இறக்கமான பலன்களே ஏற்படும். பொது மக்களின் ஆதரவை அவ்வளவு சுலபத்தில் பெற முடியாது.
ஆண்டின் பிற்பகுதியில் திருமணம் போன்ற சுப காரியங்கள் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் தாராளமாக நடைபெறும். புதிய வாய்ப்புகள் மூலம் நற்பலன்களையும் லாபங்களை பெற்ற முடியும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கு அமோக விளைச்சல் உண்டாகும். வேலை தேடி அலைபவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு அமையும். குடும்பத்திற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். பிறருடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் அவசியம். முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகளையும் லாபங்களை பெறுவீர்கள். உற்றார் உறவினர்களின் உதவிகள் கிடைக்கும்.
கலைத்தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர், வெளிநாடு கலை பயணங்கள் செல்லும் சூழல் உண்டாகும். பெண்களுக்கு உடல் நலம் நன்றாக இருக்கும். கல்வி பயிலும் மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள்.
மிதுனம் – தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019
சிறந்த ஞாபகசக்தி கொண்ட மிதுன ராசிகர்களுக்கு பிறக்கின்ற விகாரி தமிழ் புத்தாண்டு காலத்தில் சமமான பலன்கள் ஏற்படும். அடிக்கடி நோய்களால் பாதிக்கப்படும் சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் பிரச்சனைகள் ஏற்படலாம். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை சிறிது காலம் தள்ளி வைப்பது நல்லது. வெளிநாட்டு தொடர்புடைய தொழில் வியாபாரங்களில் அனுகூலங்கள் ஏற்படும்.
சிலர் கொடுத்த கடனை வசூல் செய்ய முடியாமல் தவிப்பார்கள். பண விவகாரங்களில் நம்பியவர்களே உங்களை மோசம் செய்யக்கூடும். உடன் பணிபுரிபவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மனைவி மற்றும் பிள்ளைகள் வழியே மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். அதிக பயணங்கள் செய்வதால் உடல் நலம் பாதிக்கும். அந்த பயணங்களால் உங்களுக்கு பெரிய அனுகூலங்கள் இருக்காது.
பிறர் செய்த தவறுகளுக்காக நீங்கள் அவப்பெயரை சம்பாதிக்க கூடிய நிலை உருவாகும். பணம் சம்பந்தமான விடயங்களில் பிறரை நம்புவதையும், பிறருக்கு கடன் கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரங்களில் போட்டி கடுமையாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் மிகுந்த லாபங்கள் எதையும் நீங்கள் பெற முடியாது என்றாலும், நஷ்டம் ஏற்படாது.
ஆண்டின் பிற்பகுதியில் நீங்கள் எதிர்பாராத உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். சிலர் தெய்வீக காரியங்களில் ஈடுபடுவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்த நிலையை பெறுவார்கள். தம்பதிகளிடையே அன்னோன்யம் கூடும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும். நீண்ட நாட்களாக நீடித்து வந்த வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்புகள் வரும். நெடுநாள் நோய்கள் தீரும். குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வீர்கள். நேரடி மற்றும் மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். பெரிய மனிதர்களின் நட்பும் அதனால் ஆதாயமும் உண்டாகும்.
கலைஞர்கள் வெளியூர், வெளிநாடு பயணங்கள் சென்று பொருளும், புகழும் ஈட்டும் அமைப்பு உண்டாகும். குழந்தை பாக்கியமில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். தொழில், பணியிடங்களில் சிலருக்கு பிரச்சனைகள் ஏற்படும் என்றாலும் அவை சுமூகமாக தீர்ந்து விடும். தொழில், வியாபாரங்கள் விரிவு படுத்தும் முயற்சிகள் வெற்றி பெறும். சிலருக்கு அராசாங்கத்தின் உதவியும், ஆதரவும் உண்டாகும்.விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு விளைச்சல் நன்கு உண்டாகி பண லாபம் உண்டாகி விவசாய கடன்களை அடைப்பீர்கள். மாணவர்கள் கல்வி, விளையாட்டுகள் போன்றவற்றில் சிறந்து சாதனைகள் செய்வார்கள்.
கடகம் – தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019
மற்றவர்களின் எண்ணங்களை அறியும் திறன் கொண்ட கடக ராசிகாரர்களுக்கு பிறக்கின்ற விகாரி தமிழ் புத்தாண்டு தொட்டதெல்லாம் துலங்கும் பொன்னான ஆண்டாக இருக்க போகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே நன்மையான பலன்கள் உங்களுக்கு அதிகம் ஏற்படும்.
உடல் நலம் சிறப்பாக இருக்கும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். உங்களுக்கு பண வரவு தாராளமாக இருக்கும். திருமணம் நடக்காமல் தாமதமானவர்களுக்கு இந்த ஆண்டு நிச்சயம் திருமணம் நடக்கும். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பிய நபர்களையே திருமணம் செய்து கொள்ளும் யோகம் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் பெருகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
நீண்ட நாட்களாக வேலை தேடி அலைந்தவர்களுக்கு நல்ல வருமானம் உள்ள வேலை கிடைக்கும். உங்கள் பணிகளில் ஊதிய உயர்வு, பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆகியவை நீங்கள் விரும்பிய படியே கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உங்கள் வீட்டில் நீண்ட நாட்களாக தாமதமான சுபநிகழ்ச்சிகள் சீக்கிரத்திலேயே நடக்கத்தொடங்கும். திருமண வயது வந்த உங்கள் வீட்டு ஆண்கள், பெண்களுக்கு சிறப்பான முறையில் திருமணம் நடைபெறும்.
ஆண்டின் பிற்பகுதியில் புதிய வீடு, மனை, வாகனங்கள் வாங்குவீர்கள். அரசு டெண்டர், கான்ட்ராக்ட் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மிகுந்த லாபம் கிட்டும். அரசாங்கத்தின் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கும் சகோதர உறவுகளுக்கும் இருந்து வந்த சொத்து பிரச்சனைகள் அனைத்தும் சுமூகமாக தீரும். உறவினர்கள் மத்தியில் உங்களுக்கு செல்வாக்கும், மதிப்பும் ஏற்படும்.
விலகி சென்ற உறவுகள், நண்பர்கள் உங்களை தேடி வந்து உறவு கொண்டாடுவர். தொலைதூர பயணங்கள் நல்ல லாபத்தை கொடுக்கும். தொழில், வியாபாரங்களில் அதிகளவு வாடிக்கையாளர்கள் உங்களுக்கு கிடைத்து அதன் மூலம் பெருத்த லாபத்தை அடைவீர்கள். விவசாய தொழிலிருப்பவர்களுக்கு அவர்களின் நிலத்தில் பயிர்வகைகள் நல்ல விளைச்சள் உண்டாகி மிகுந்த லாபத்தை அடைவார்கள். புதிய தொழில், வியாபாரங்களுக்கான முயற்சிகளில் சிறிது தடை ஏற்பட்டு நீங்கி, அக்காரியங்கள் வெற்றி பெறும்.
நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியமில்லாமல் தவித்த பெண்களுக்கு புத்திர பாக்கியங்கள் உண்டாகும். புதிய ஆடை மற்றும் ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். திடீர் வெளியூர் மற்றும் வெளிநாட்டு பயன்களை சிலர் மேற்கொள்வீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்கள் அதிகாரமிக்க பதவிகள் கிடைக்க பெறுவார்கள்.
சிம்மம் – தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019
கம்பீர தன்மையும், நியாய உணர்வும் அதிகம் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு பிறக்கின்ற விகாரி தமிழ் புத்தாண்டில் முற்பகுதியில் சுமாரான பலன்களும், பிற்பகுதியில்அதிக நன்மைகளை தரும் ஆண்டாக இருக்க போகிறது.
ஆண்டின் முற்பகுதியில் குடும்பத்தில் சிறிது நிம்மதியற்ற சூழல் காணப்படும். ஒரு சிலருக்கு பொருளாதார ரீதியிலான கஷ்டங்கள் இருக்கும். சுப காரிய முயற்சிகளில் தடை, தாமதங்கள் உண்டாகும். உங்கள் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். திருமணமான தம்பதிகளுக்குள் கருத்தொற்றுமை இருக்காது. ஒரு சிலருக்கு குழந்தைகள் வழியில் மனக்கவலைகள் உருவாகும்.
தொழில் வியாபாரங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பணியிடங்களில் தங்களின் பணிகளை செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துவது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஒரு சிலர் வயிறு சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்படக்கூடும். அரசு டெண்டர், காண்ட்ராக்ட் தொழில்களில் இருப்பவர்களுக்கு சற்று தாமதங்களுக்கு பிறகு ஒப்பந்தங்கள் கிடைக்கும். கடன்களை வசூலிப்பதில் சிலருக்கு சட்ட ரீதியான பிரச்சனைகள் எழும்.
ஆண்டின் பிற்பகுதியில் சிலருக்கு வெளிநாடு சென்று பணிபுரியும் யோகமும் சிலருக்கு உண்டாகும். தொழில் வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும் பணியிலிருப்பவர்களுக்கு விரும்பிய பதவி உயர்வுகள் கிடைக்கும். உங்கள் மீதிருக்கும் போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் நீங்கி அனைத்திலும் மிக சிறந்த வெற்றிகளை பெறுவீர்கள்.
குடும்பத்தின் பொருளாதார தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற முடியும். கலைஞர்கள் தொடர்ந்து பல வாய்ப்புகள் கிடைக்க பெற்று மிகுந்த பொருள்வரவை பெறுவார்கள். விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் காரணமாக லாபம் ஏற்படும். வாங்கிய பழைய கடன்கள் அனைத்தையும் கட்டி தீர்ப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் சாதனைகளை செய்வார்கள். விரும்பிய உயர்படிப்புகளை படிக்கும் யோகம் பெறுவார்கள். நீங்கள் விரும்பிய பதவி உயர்வுகளும், பணியிட மாறுதல்களும் கிடைக்கும். பெண்களுக்கு மிக சிறப்பான முறையில் திருமணம் நடைபெறும். சிலர் புதிய மனை, வீடு போன்றவற்றை வாங்கும் அளவிற்கு பொருளாதார நிலை உயரும்.
கன்னி – தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019
மிக சிறந்த அறிவாற்றல் உடைய கன்னி ராசியினருக்கு பிறக்கின்ற விகாரி தமிழ் புத்தாண்டு காலத்தில் நன்மை தீமை கலந்த பலன்கள் அதிகம் உண்டாகும். ஆண்டின் முறைப்பகுதியில் சிலருக்கு அடிக்கடி உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மருத்துவ செலவுகள் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் தடைகளும், தாமதங்களும் உண்டாகும். எல்லாவற்றிலும் மிக கடின முயற்சிகள் மேற்கொண்ட பிறகே வெற்றி பெறக்கூடிய நிலையிருக்கும். இந்த ராசியினருக்கு எல்லா விடயங்களிலும் கஷ்டங்கள் ஏற்படவே செய்யும். சிலருக்கு குடும்ப உறுப்பினர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.
மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க கூடிய திறன் உண்டாகும். ஒரு சிலருக்கு தொழில் நிமித்தமாக அடிக்கடி தொலைதூர பயணங்கள் செய்யும் நிலை உண்டாகும். எனினும் அப்பயணங்களால் பெரிய அனுகூலங்கள் இருக்காது. தொழில், வியாபாரங்களில் உங்கள் சக போட்டியாளர்கள் உங்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவார்கள். குடும்ப பொருளாதார நிலை ஏற்ற இறக்கமான பலன்களையே கொண்டிருக்கும்.
ஆண்டின் பிற்பகுதியில் அரசாங்க வழியில் ஏதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். உங்களுக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்கள் விடயத்தில் பிரச்சனைகள் எழும் என்றாலும் சுமூகமாக தீரும். ஒரு சிலர் ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் சக பணியாளர்களின் உதவி, ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும்.
திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகள் சிறிது தாமதத்திற்கு பிறகு வெற்றியடையும். ஒரு சிலர் தாங்கள் வாங்கிய பழைய கடன்களை வட்டியுடன் கட்டி முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக வேலை கிடைக்காமல் அவதிப்பட்டவர்கள் நல்ல வேலை கிடைக்க பெறுவார்கள்.வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய யோகம் சிலருக்கு ஏற்படும். அரசியல் வாழ்வில் இருப்பவர்கள் பல சோதனைகளை சந்திக்க வேண்டிய நிலை இருக்கும்.
விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் ஏற்படும் என்றாலும், அதற்கு இணையான செலவுகளும் ஏற்படும். கலைஞர்களுக்கு குறைந்த அளவிலேயே வாய்ப்புகள் கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்கள் தீவிர முயற்சி செய்து கல்வி, கலைகளில் சிறந்த தேர்ச்சி பெறுவார்கள்.
துலாம் – தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019
ராஜபோகங்களை அனுபவிக்க பிறந்த துலாம் ராசியினக்கு பிறக்கின்ற விகாரி தமிழ் புத்தாண்டு நற்பலன்கள் அதிகம் நிறைந்த ஆண்டாக இருக்கும். இந்த விகாரி ஆண்டில் உங்கள் உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் இருக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலை உண்டாகும். குடும்ப தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வீர்கள். பண வரவு தாராளமாக இருக்கும். ஒரு சிலருக்கு திடீர் தனவரவு உண்டாகும். தடைபட்ட சுப காரியங்கள் அனைத்தும் சிறப்பான முறையில் நடைபெறும். பெண்களுக்கு பொன், பொருள், ஆபரணங்கள், புதிய ஆடைகள் சேர்க்கை உண்டாகும். பிரிந்து சென்ற நண்பர்கள், உறவினர்கள் உங்களை தேடி வருவார்கள்.
நீங்கள் கொடுத்த கடன்களும் சரியான வட்டியுடன் மீண்டும் உங்களிடம் வந்து சேரும். ஒரு சிலருக்கு சமூகத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிடைத்து அதனால் ஆதாயமும் உண்டாகும். அரசாங்கத்தில் நீங்கள் எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில், வியாபாரம் மற்றும் விரிவாக்க முயற்சிகள் சிறப்பான வெற்றிகளை பெறும்.
ஆண்டின் பிற்பகுதியில் உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளில் சிறிது தடங்கல்களுக்கு பிறகு வெற்றி உண்டாகும். பண வரவுகள் தடையில்லாமல் வந்து கொண்டே இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய இடங்களுக்கு பணியிட மாற்றங்கள் கிடைக்கும். சிலர் பதவி உயர்வு, ஊதிய உயர்வும் கிடைக்க பெறுவார்கள்.
சிலருக்கு புதிய ஆடைகள், வீடு, வாகனம் என அனைத்து வகையான செல்வ சேர்க்கையும் உண்டாகும். ஒரு சிலருக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரித்து கோயில் கட்டுதல், குளம் வெட்டுதல் தூர் வாருதல் போன்ற தெய்வீக காரியங்களில் ஈடுபடுவார்கள். உங்கள் நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். சிலர் திடீர் வெளியூர் வெளிநாடு பயணங்கள் மேற்கொள்ளும் சூழல் உருவாகும்.
பொதுவாழ்வில் இருப்பவர்கள் மக்களால் கௌரவிக்கப்படுவார்கள். உங்களுக்கு கீழ் உள்ள பணியாளர்களின் முழுமையான ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு சுமாரான லாபங்களே இருக்கும். கலை தொழிலில் இருப்பவர்களுக்கு அராசங்கத்தின் உதவிகளும், விருதுகள் போன்றவை கிடைக்கும். மாணவர்கள் எப்பாடுபட்டாவது கல்வியில் சிறப்பான முறையில் தேர்ச்சி பெறுவார்கள்.
விருச்சிகம் – தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019
மனதில் பட்டதை மறைக்காமல் பேசும் குணம் கொண்ட விருச்சிக ராசியினருக்கு பிறக்கின்ற விகாரி தமிழ் புத்தாண்டு காலம் நன்மை தீமை கலந்த ஆண்டாகவே இருக்கும்.
ஆண்டின் முற்பகுதியில் இந்த ராசியினருக்கு அடிக்கடி உடல்நல பாதிப்புகள் ஏற்படும். மனசஞ்சலங்கள் அதிகம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் சண்டை, கருத்துவேறுபாடுகள் ஏற்படலாம். திருமணமான தம்பதிகள் பிரிந்து வாழக்கூடிய நிலை சிலருக்கு ஏற்படும்.
உறவினர்கள் மற்றும் நண்பர்களினால் பிரச்சனைகள் ஏற்பட்டு, பொருள் விரயமும் சிலருக்கு உண்டாகும். சிலருக்கு தொழில், வியாபாரங்களில் நல்ல வாய்ப்புகள் கைநழுவி போகும். சக போட்டியாளர்களின் வியாபார போட்டியை சமாளிக்க முடியாமல் திணறும் நிலை ஏற்படும்.எவ்வளவு கடிமனமாக உழைத்தாலும் அதற்கேற்ற பலன்கள் சிலருக்கு கிடைக்காது. பணியில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் நெருக்கடி ஏற்படும். தொழில், வேலை நிமித்தமாக அடிக்கடி பயணங்களும், அலைச்சல்களும் உண்டாகும்.
ஆண்டின் பிற்பகுதியில் இது வரை உங்களுக்கு இருந்து வந்த அனைத்து கஷ்டங்களும் நீங்கும். புதிய வீடு, நிலம் வாங்குவதில் சிலருக்கு இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும் பிறருக்கு நீங்கள் கொடுத்த கடன் தொகைகள் யாவும் உங்களுக்கு வந்து சேரும்.
தொழில், வியாபாரங்களில் சக போட்டியாளர்களின் சவால்களை எதிர்கொண்டு கடுமையாக உழைத்து வெற்றி காண்பீர்கள். உங்கள் வியாபார ரீதியன பயணங்களால் மிகுந்த லாபங்கள் ஏற்படும். உங்களின் நேரடி மற்றும் மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு பதவிகள், பொறுப்புகள் தேடி வரும்.
கலை தொழிலில் இருப்பவர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகள் கிடைக்கும். விவசாயத்தில் இருப்பவர்களுக்கு அரசின் பொருளாதார உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு உடல் நலம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் மந்த நிலை நீங்கி கல்வியில் மிளிர்வார்கள்.
தனுசு – தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019
பல விடயங்களை கற்று தேர்ந்து பண்டிதர்களாக இருக்கும் தனுசு ராசியினருக்கு பிறக்கின்ற விகாரி தமிழ் புத்தாண்டு சமமான பலன்கள் நிறைந்த ஆண்டாகவே இருக்கும்.
இந்த விகாரி ஆண்டின் முற்பகுதியில் உடல் ஆரோக்கியம் சற்று பாதிப்பிற்குள்ளாகும். குடும்பத்தின் பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். வருமானத்திற்கு குறைவு ஏற்படாது. தேவையற்ற அலைச்சல்களால் பொருள் விரயம், நேர விரயம் ஏற்படும்.
கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். பிறருக்கு கொடுத்த கடன்களை வசூலிக்க முடியாத சூழல் சிலருக்கு உண்டாகும். வாழ்க்கை துணை மற்றும் பிள்ளைகள் வழியில் மருத்துவ செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் அரசாங்கத்தின் கெடுபிடிகளுக்கு ஆளாக நேரிடும்.
அசையா சொத்துக்களால் சிறிது பொருள் விரயம் ஏற்படும். புதிய முயற்சிகளில் சிறிது தடை, தாமதங்களுக்கு பிறகே வெற்றி கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். சிலர் ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகிஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.
விகாரி ஆண்டின் பிற்பகுதியில் உங்களுக்கு இது நாள் வரை இருந்து வந்த நேரடி மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் நீங்கும். தொலை தூர பயணங்களால் அதிகம் அனுகூலங்கள் ஏற்படும். பதவி உயர்வுகள் சிறிது தடை தாமதங்களுக்கு பிறகு கிடைக்கும்.
தொழில்,வியாபாரங்களில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெற்று அதிக லாபம் கிடைக்க பெறுவீர்கள். அரசியல்வாதிகள் பொது மக்களின் கருத்துக்களை கேட்டு செயல்படுவதால் நற்பெயரை ஈட்ட முடியும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். வேலை கிடைக்காதவர்கள், புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். விவசாய தொழில் செய்பவர்களுக்கு லாபங்கள் ஏற்படும்.
விவசாயத்திற்கான அரசு மானியங்களும் கிடைக்கும் கலை தொழில் செய்பவர்களுக்கு வெளியூர், வெளிநாடுகள் சென்று பொருள் ஈட்டும் வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் கடின முயற்சியுடன் ஈடுபட்டு கல்வியில் வெற்றி பெறுவார்கள்.
மகரம் – தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019
எதிலும் வேகமாக செயல்படும் மகர ராசியினருக்கு பிறக்கின்ற விகாரி தமிழ் புத்தாண்டு நன்மைகள் அதிகம் ஏற்படுத்தும் ஒரு காலமாக இருக்கும். விகாரி ஆண்டின் முற்பகுதியில் இந்த ராசியினரின் உடல் நிலை சிறப்பாக இருக்கும்.
நீண்ட நாட்களாக இருந்து வந்த நோய்கள் நீங்கும். உங்கள் குடும்பத்தில் இருந்து வந்த பொருளாதார நெருக்கடி நிலை மாறி அதிக பொருள் வரவு இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ஒரு சிலர் ஆடம்பர செலவுகளையும் மேற்கொள்வீர்கள். வாங்கிய கடன்கள் அனைத்தையும் கட்டி தீர்ப்பீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப்போன சுபகாரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடைபெற தொடங்கும்.
உங்களின் பூர்வீக சொத்துகளிலிருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். வேலைவாய்ப்பு தேடி அலைந்தவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற வேலை சிறிது அலைச்சல்களுக்கு பிறகு கிடைக்கும். பிரிந்து சென்ற உறவினர்களும், நண்பர்களும் உங்களை தேடிவந்து சொந்தம் கொண்டாடும் சூழல் உருவாகும்.
ஆண்டின் பிற்பகுதியில் குடும்பத்தினர் வழியில் மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை ஏற்படும். உங்கள் நண்பர்களால் பொருள்வரவு ஏற்படும். வெளிநாடுகள் செல்வது சம்பந்தமான முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.
தொழில், வியாபாரங்களில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்க பெறுவீர்கள். உங்களுக்கு அரசாங்கத்தின் உதவிகளும் தக்க சமயத்தில் கிடைக்கும். ஊழியர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். பணியிடங்களில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு முழுவதுமாக கிடைக்கும். அரசியலில் உள்ளவர்கள் தங்களின் திறமையான செயல்பாடுகளால் எதிரணியை திணறடிப்பார்கள். தேர்தல்களில் வெற்றி கிடைக்கும். பதவிகளும் சிலருக்கு கிடைக்கும்.
விவசாயிகளுக்கு விளைச்சல் சுமாராக இருந்தாலும் வருமானத்திற்கு குறைவு ஏற்படாது. மாணவ மாணவியர் கல்வியில் ஆர்வமுடன் படித்து தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களை பெறுவார்கள்.
கும்பம் – தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019
எங்கும், எதிலும் நிதானத்தை கடைபிடிக்கும் கும்ப ராசியினருக்கு பிறக்கின்ற விகாரி தமிழ் புத்தாண்டு காலம் நன்மைகள் நிறைந்த ஆண்டாக இருக்க போகிறது. விகாரி ஆண்டின் முற்பகுதியில் உடல் மற்றும் மனம் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும்.
மனதில் இருந்து வந்த குழப்பங்களும், வீண் கவலைகளும் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி அன்பும், அன்னோன்யமும் பெருகும். சிலருக்கு குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வீர்கள். ஒரு சிலர் குடும்பத்தோடு திடீர் உல்லாச பயணங்கள் மேற்கொள்வீர்கள். பெண்களுக்கு உடல்நலம் சிறப்பாக இருக்கும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.
பணவரவுகளில் சிறிது தாமதம் ஏற்படும் என்றாலும் முழுமையான தொகை உங்களுக்கு வந்து சேரும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வீட்டில் சுப காரியங்களுகான செலவுகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரங்களுக்காக வாங்கிய கடன்கள் அனைத்தையும் கட்டி முடிப்பீர்கள். உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். உத்தியோகிஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளையும் நன்மதிப்புகளையும் பெறுவார்கள்
விகாரி ஆண்டின் பிற்பகுதியில் வயிறு சம்பந்தமான ஆரோக்கிய குறைவு ஏற்பட்டு நீங்கும். சிலர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிதாக தொடங்கும் எந்த ஒரு முயற்சிகளிலும் கடின முயற்சிகள் செய்து வெற்றியை பெறுவீர்கள்.
தொழில் வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபங்களை பெற முடியும். சமுதாயத்தின் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அதன் மூலம் பல ஆதாயங்கள் உங்களுக்கு ஏற்படும். உறவினர்களால் தன லாபம் உண்டாகும். பொருள் வரவு ஏற்ற இறக்கமாக இருக்கும். சக ஊழியர்களின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.
சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் பொருளாதார ரீதியில் லாபம் கிடைக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்களின் பாராட்டுகளை பெறுவார்கள். கலைத்தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கும். மாணவர்கள் மந்த நிலை நீங்கி கல்வியை ஆர்வத்துடன் கற்று தேர்ந்து சாதனைகள் செய்வார்கள்.
மீனம் – தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019
பிறர் நலனில் அதிக அக்கறை காட்டும் மீன ராசிக்காரர்களுக்கு பிறக்கின்ற விகாரி தமிழ் புத்தாண்டு பல விதமான நன்மைகளை தரும் ஒன்று ஆண்டாக இருக்க போகிறது. விகாரி ஆண்டின் முற்பகுதியில் உடல்நலத்தில் சிறிய அளவில் பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் கடுமையான பாதிப்புகள் எதுவும் ஏற்படாது.
கடந்த காலங்களில் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் தீரும். திருமணமாகி பிரிந்து வாழ்ந்து வந்த தம்பதிகள் ஒன்றிணைவர்கள். உறவினர்களுடன் நிலவி வந்த பகைமை தீரும். சிலர் ஆடம்பர செலவுகளை செய்வீர்கள். தனிப்பட்ட தேவைகள் மற்றும் தொழிலுக்காக வாங்கிய கடன்கள் அனைத்தையும் கட்டி முடிப்பீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தினர் விரும்பிய பொருட்கள் அனைத்தையும் வாங்கி தருவீர்கள்.
தொழில், வியாபாரங்களில் கடும் போட்டி நிலவினாலும் உங்களுக்குண்டான லாபத்தில் எந்த ஒரு பங்கமும் ஏற்படாது. கான்ட்ராக்ட் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு அரசாங்க டெண்டர், கான்ட்ராக்ட் போன்றவை கிடைக்கும். திருமண முயற்சிகள் வெற்றி பெற்று நல்ல முறையில் திருமணம் நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பதவி உயர்வும் ஊதிய உயர்வுகளையும் பெறுவீர்கள்.
விகாரி ஆண்டின் பிற்பகுதியில் நீண்ட நாட்களாக நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் நோய்கள் நீங்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். வேலை தேடி அலைந்தவர்களுக்கு அவர்கள் விரும்பிய பணியே கிடைக்கும் நிலை உண்டாகும். புதிய வாகனங்கள் வாகும் யோகம் சிலருக்கு ஏற்படும். தொலைதூர பயணங்களை சிலர் மேற்கொள்வார்கள்.
உங்கள் பூர்வீக சொத்துகளை அடைவதில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி அவை உங்களை வந்தடையும். வெளிநாட்டு பயணங்களால் நல்ல ஆதாயம் இருக்கும். தொழில் வியாபாரங்களில் புதிய வாய்ப்புகள் கிடைப்பதால் நல்ல லாபத்தை பெற முடியும். நீங்கள் எதிர்பாரா உதவிகள் உங்களுக்கு தக்க சமயத்தில் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்கள் சிறிது தடை, தாமதங்களுக்கு பிறகு பதவிகள் கிடைக்க பெறுவார்கள்.
விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு அரசாங்கத்தின் உதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கும். கல்வி, கலைகளில் மாணவர்கள் முதலில் சற்று பின் தங்கினாலும் பின்பு கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள்.
மேஷம் முதல் மீனம் வரை ஒவ்வொரு ராசிக்கும் 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் சிறப்பாக கணிக்கப்ட்டுக்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டு 2019 பலன்கள் முழுவதும் தெள்ள தெளிவான முறையில் மிகவும் எளிமையாக இங்கு விவரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ராசிக்கும் சிறந்த முறையில் 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ் புத்தாண்டு அனைத்து ராசி நண்பர்களுக்கும் சிறப்பாக இருக்க எங்களது வாழ்த்துக்கள்.
பிரபல நடிகரும், முன்னாள் எம்.பியுமான ஜே.கே ரித்தீஷ் மாரடைப்பால் தனது 46வது வயதில் காலமானார். கானல் நீர், நாயகன், பெண் சிங்கம், எல்கேஜி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளவர் ஜே.கே ரித்தீஷ். இவர் இலங்கையின் கண்டியில் பிறந்தவராவார்.
திமுக சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் கடந்த 2009 மக்களவை தொகுதியில் போட்டியிட்டு ரித்தீஷ் வெற்றி பெற்றார். பின்னர் அதிமுகவில் இணைந்த ரித்தீஷ் கட்சி பணியாற்றி வந்தார்.
மக்களவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அதற்கான பணியில் ஈடுபட்டு வந்த ரித்தீஷுக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவரின் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக நடிகர் சங்க தலைவர் நாசர் கூறுகையில், ஒரு நல்ல தம்பியை நான் இழந்துவிட்டேன், ஜே.கே.ரித்திஷின் திடீர் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார்.
நடிகர் விஷால் கூறுகையில், ஜே.கே ரித்திஷ் மரணச் செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது, ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டேன் என கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த வேன் ஒன்று விபத்துக்குள்ளாதில் பெண்ணொருவர் பலியாகி உள்ளார்.
இந்த அனர்த்தம் காரணமாக மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்து சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளவத்தை பிரதேசத்தினை சேர்ந்த 48 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வேனும் மற்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
சிலாபம் – புத்தளம் பிரதான வீதி ஆரச்சிகட்டுவ பிரதேசத்தில் இன்று அதிகாலை விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழிலிருந்து கொழும்பு சென்ற ஹயஸ் எரிபொருள் பவுஸருடன் சிலாபம் ஆரச்சிகட்டுவவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது. இச்சம்பவம் இன்று அதிகாலை 2.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதில் ஹயஸ் வாகனத்தில் பயணம் செய்த 4 பேர் படுகாயம் அடைந்ததுடன் நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த லண்டனில் இருந்து வருகை தந்த அருன்மாறன் கலா என்ற பெண் பலியாகியுள்ளார்.
காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு ஐயன்கன் குளம் புத்துவெட்டுவான் பிரதான வீதியில் சட்டவிரோதமான முறையில் காட்டு மரங்களை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் நேற்று இரவு உயரழுத்த மின்கம்பத்தை மோதி தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
குறித்த கப் ரக வாகனத்தினை பொலிஸார் துரத்திச் சென்ற நிலையிலேயே இவ்வாறு மின்கம்பத்தில் மோதுண்டு தப்பிச் சென்றுள்ளது.
முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஐயன்கன் குளம் புத்துவெட்டுவான் பிரதான வீதியில் சந்தேகத்திற்கிடமாக பயணித்த வாகனத்தினை பொலிஸார் இடைமறித்து சோதனையிட முயற்சித்துள்ளனர்.
எனினும், குறித்த கப் வாகனம் தப்பிச் சென்ற நிலையில் பொலிஸார் துரத்தியபோதும் பிரதான வீதிக்கருகில் கானப்பட்ட உயரழுத்த மின் கம்பத்தை மோதித் தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
இதனால் அந்த பகுதிக்கான மின்சாரம் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஐயன்கன் குளம் பொலிசார் குறித்த வாகனத்தையும் அதன் சாரதியையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் தனியார் விடுதி ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் அவருடைய மனைவி அனுராதா மற்றும் மகள்கள் ஆர்த்தி, ஆசிகா ஆகியோருடன் புதன்கிழமையன்று சேலம் மாவட்டத்திற்கு வந்துள்ளார். அங்கு பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து குடும்பத்துடன் தங்கியுள்ளார்.
நேற்று காலை அறையிலிருந்து பெண்கள் அலறும் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்டு பதறிப்போன ஊழியர்கள் வேகமாக சென்று கதவை திறந்துள்ளார். அப்போது விஜயகுமார், அவரது மனைவி அனுராதா, இரண்டாவது மகள் ஆசிகா ஆகியோர் சடலமாக கிடந்துள்ளனர். மூத்த மகள் ஆர்த்தி மட்டும் உயிருக்கு போராடி கொண்டிருந்துள்ளார்.
உடனே அவரை மீட்ட ஊழியர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் விரைந்து வந்த பொலிஸார் இறந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் கடன் தொல்லை தாங்க முடியாமலே குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
உலகின் குள்ளமான பெண்ணாக அறியப்படும் ஜோதி அம்கே தேர்தலில் வாக்களித்ததன் மூலம் தனது ஜனநாயக கடமையை தவறாது ஆற்றியுள்ளார்.
இந்தியாவின் 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 91 மக்களவைத் தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைப்பெற்றது. இந்நிலையில் நாக்பூர் தொகுதியில் உலகின் குள்ளமான பெண் ஜோதி அம்கே தனது வாக்கை பதிவு செய்தார்.
வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜோதி, அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். முதலில் வாக்களித்த பின் உங்களது இதர பணிகளை மேற்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
ஜோதி உலகின் குள்ளமான பெண் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இவரது உயரம் 62.8 செண்டி மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருத்தணியில் தனியாக இருந்த விஜி மற்றும் அவரின் மகன் கொலை வழக்கில் அவரது வீட்டின் அருகில் வசித்து வந்த வெங்கட் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விஜியின் நகத்திலிருந்த வெங்கட்டின் ரத்தத் துளிகள், தோல்தான் துப்புதுலங்க முக்கிய ஆதாரமாக இருந்தது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 8-ம் தேதி, வீட்டில் தனியாக இருந்த விஜியும் போத்திராஜும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் நகத்தில் ரத்தம், தோல் இருந்தன. அந்த ரத்தத்தை ஆய்வு செய்தபோது, அது பெண்ணின் ரத்தம் இல்லை என்பது தெரியவந்தது.
இதனால் விஜியை கொலை செய்த நபரின் ரத்தமாக இருக்கலாம் என விசாரணை தொடரப்பட்டதில், விஜியின் வீட்டுக்கு அருகில் வசித்து வந்த வெங்கட் என்பர் மீது சந்தேகம் ஏற்பட்டு நடத்தப்பட்ட விசாரணையிலும் மேலும் அவரது ரத்தமாதிரியை சோதனை செய்து பார்த்ததிலும் அது வெங்கட்டின் ரத்தம் என உறுதிசெய்யப்பட்டது.
வெங்கட்டிடம் இருந்து தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள போராடிய விஜி, அவரது கழுத்தில் கீறிவைத்தபோது ரத்தங்கள் அவரது நகத்தில் படிந்துள்ளது. வெங்கட்டுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில், திருமணச் செலவுக்காக விஜியின் வீட்டுக்கு திருட சென்ற இடத்தில் இரட்டை கொலையை செய்தது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், வெங்கட் கொள்ளையடித்த நகை, பணம் ஆகியவற்றை மீட்பதில் திருத்தணி சரக காவல் உயரதிகாரி ஒருவர் பேரம் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவியை மயக்கி சீரழித்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த 19ம் திகதியன்று பள்ளி செல்வதாக கூறிவிட்டு கிளம்பியுள்ளார்.
ஆனால் பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார், மாணவியின் செல்போனை ஆராய்ந்த போது, ஜோஸ்பிளின் ராஜகுமார் (22) என்பவரிடம் அதிகம் பேசியிருப்பது தெரியவந்தது.
அவருடைய செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, கேரளா மாநிலத்தில் இருப்பதாக காட்டியது. இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் ஜோஸ்பிளின் ராஜகுமார் மற்றும் மாணவியை கண்டுபிடித்தனர்.
பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஜோஸ்பிளின் ராஜகுமார் கடந்த ஓராண்டாவாகவே விதவிதமான ஆடைகளில் பள்ளி முன்பாக சென்று மாணவியை மயக்கி காதல் வலையில் விழ வைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இருவரும் தனியாக சென்று சந்தோசமாக வாழலாம் என ஆசைவார்த்தை கூறி, வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தை எடுத்து வருமாறு ராஜகுமார் கூறியுள்ளார்.
அதனை நம்பிய அந்த மாணவியும், நகைகளை எடுத்துக்கொண்டு ஓட்டம்பிடித்துள்ளார். அங்கு தனியாக ஒரு வாடகை வீட்டில் வைத்து மாணவியை நாசம் செய்துள்ளார். அப்போது தான் அவர் ஒரு கட்டிடத்தொழிலாளி என்பது மாணவிக்கு தெரியவந்துள்ளது.
மேலும் மாணவியிடம் இருந்தக நகைகளை பிடுங்கி, கடையில் விற்று ராஜகுமார் செலவு செய்துவந்துள்ளான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் குற்றவாளிக்கு வேறு ஏதேனும் மாணவிகளுடன் தொடர்பு இருக்கிறதா என்கிற கோணத்தில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இளம் பெண்ணை கொன்று விட்டு நாடகமாடிய உறவுக்கார இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூரை சேர்ந்தவர் அகிலா. இவர் சென்னையில் உள்ள தனியார் லேப்பில் டெக்னீஷினியனாக வேலை செய்து வந்தார்.
அகிலாவிற்கும் அவரது அக்கா கணவரின் தம்பி சந்தோஷிற்கும் நீண்ட நாட்களாக பழக்கம் இருந்து வந்தாக கூறப்படுகிறது. சந்தோஷ் தனது அண்ணனுடன் சிட்லபாக்கம் பகுதியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் அகிலா திடீரென சந்தோஷிடம் பேசாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் தனியாக பேச வேண்டும் என்று அகிலாவை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் மறுநாள் காலை, அகிலா எழுந்திருக்காததால், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அகிலாவை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் 4 மணி நேரத்திற்கு முன்னரே அகிலா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சந்தோஷ், அகிலாவின் உறவினர்களுக்கு தொடர்புகொண்டு, அகிலாவை வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், மாடியில் உள்ள கிரில்கேட்டில் இடித்துக் கொண்டதால், அகிலாவின் தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் மறுநாள் காலை அவர் மர்மமான முறையில் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அகிலாவின் உறவினர்கள் , சந்தோஷ் தான் அகிலாவை கொலை செய்து இருப்பார் என பொலிஸ் புகார் அளித்தனர். இதனிடையே, பிரேத பரிசோதனை அறிக்கையில், அகிலா கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து பொலிசார் சந்தோஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அகிலாவை காதலித்து வந்ததாகவும், அவர் வேறு ஒருவரை காதலிப்பதாக தெரிவித்ததால் ஆத்திரமடைந்து, அவரது கழுத்தை நெறித்து கொலை செய்ததாகவும் சந்தோஷ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து பொலிசார் சந்தோஷை கைது செய்துள்ளனர்.
இணையதளம் ஊடாக கொழும்பில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் பம்பலபிட்டி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
வெளிநாட்டு பெண்களை இலங்கைக்கு அழைத்து வந்து, இணையதளம் ஊடாக பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தகவல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக, மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில், கசகஸ்தான் மற்றும் சீன நாட்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த இணையதளம் டுபாயில் உள்ள நபர் ஒருவரினால் இயக்கப்பட்டு வந்ததாக சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
தமிழர்களின் 60 வருட சுற்றுவட்டத்தின் 33ஆவது வருடமாகிய புதிய விகாரி தமிழ் வருட பிறப்பு வாக்கிய பஞ்சாங்கப்படி நாளைய தினம் (ஏப்ரல் 14ஆம் திகதி) பிற்பகல் 1.12 மணிக்கு உதயமாகிறது.
ஞாயிறு மு.ப 9.12 மணி முதல் பிப 5.12 மணிவரை விஷூ புண்ணியகாலமாகும். இக்காலப்பகுதியில் சிரசில் ஆலிலையும், காலில் இலவமிலையும் வைத்து மருத்து நீர் தேய்த்து ஸ்ஞானம் செய்து வழிபாடியற்ற வேண்டும். வெள்ளைநிற பட்டாடை அல்லது வெள்ளை சிவப்புக்கரை அமைந்த பட்டாடை இவ்வருடத்துக்கான ஆடையாகும்.
திருக்கணிதபஞ்சாங்கம் : இதன்படி புதுவருடம் நாளைய தினம் பிற்பகல் 2.09 மணிக்கு பிறக்கிறது. ஞாயிறு மு.ப 9.12 மணிமுதல் பி.ப 5.12 மணிவரை விஷூ புண்ணியகாலமாகும். இக்காலப்பகுதியில் சிரசில் இலவமிலையும், காலில் விளாஇலையும் வைத்து மருத்து நீர் தேய்த்து ஸ்ஞானம் செய்து வழிபாடியற்ற வேண்டும். வெள்ளை சிவப்புக்கரை அமைந்த பட்டாடை இவ்வருடத்துக்கான ஆடையாகும்.
கைவிசேசம் விஷூபுண்ணிய காலத்திலும் செய்யலாம். ஞாயிறு இரவு 10.31 முதல் 11.15 வரையான காலப்பகுதியிலும் செய்யலாம் அல்லது 17ஆம் திகதி புதன் பகல் 10.16 முதல் 11.51 வரையும், 18ஆம் திகதி பகல் 9.47 முதல் 11.46 வரையான காலப்பகுதியிலும் செய்யலாம்.
மேஷ ராசி நேயர்களுக்கு இனிய காலம், ரிஷப ராசிக்காரர்களே : நினைக்க இயலாத ராஜ யோகம் வரலாம், மிதுன ராசிக்காரர்களே : ஆண்டின் தொடக்கமே அமர்க்களமாம், கடக ராசிக்காரர்களே : வருமான யோகத்தில் ஒருபடி மேலே செல்ல போகிறீர்கள், சிம்ம ராசிக்காரர்களே : நீங்கள் எறும்பைபோல் சுறுசுறுப்பாக செயல்பட போகிறீர்கள், கன்னி ராசிக்காரர்களே : இந்த ஆண்டு முழுவதும் கூடுதல் கவனம் தேவையாம், துலாம் ராசிக்காரர்களே: பாராட்டு, புகழ் இன்னும் பல யோகங்கள் இருக்கு,
விருச்சிக ராசிக்காரர்களே : சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து வெகு விரைவில் கிடைக்குமாம், தனுசு ராசிக்காரர்களே : ஐப்பசிக்கு மேல் அதிர்ஷ்டக்காற்று வீசுமாம், மகர ராசிக்காரர்களே : எதிலும் தேவை கவனம், கும்ப ராசிக்காரர்களே : யோக வாய்ப்புகள் உருவாகுமாம், மீன ராசிக்காரர்களே : புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டுமாம்.
சென்னையில் காதல் மனைவி இறந்து கிடந்த விவாகரத்தில் மர்மம் இருப்பதாக பெண்ணின் வீட்டார் புகார் தெரிவித்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த துரை – சாவித்திரி தம்பதியினரின் மூத்த மகள் சரண்யா என்கிற கார்த்திகா. இவர் கடந்த 2015-ம் ஆண்டு விமல்ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார்.
திருமணத்திற்கு முன்பே விமல்ராஜ் குடும்பத்தினர், 80 சவரன் நகை மற்றும் கார் வரதட்சணையாக கேட்டுள்ளனர். ஆனால் கார்திகாவின் பெற்றோர் 55 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளி மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வரதட்சணையாக கொடுத்ததாக தெரிகிறது.
திருமணம் முடிந்ததிலிருந்தே வரதட்சணை குறைவாக கொடுத்துவிட்டீர்கள் என குறை கூறியதோடு, கார் வாங்கி தருமாறு விமல்ராஜ் குடும்பத்தினர் தொந்தரவு செய்து வந்துள்ளனர். சேலத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் விமல்ராஜ் வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் கார்த்திகா தற்கொலை செய்துகொண்டதாக அவருடைய பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் விரைந்து வந்த பொழுது பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டிருந்துள்ளது.
இதற்கிடையில், நாற்காலியில் அமர்ந்தவாறே கார்த்திகா இறந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த கார்த்திகாவின் பெற்றோர், மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் கூறியுள்ளனர்.
வவுனியா, புளியங்குளம் பகுதியில் காடழிப்பில் ஈடுபட்ட மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், காடழிக்க பயன்படுத்தப்பட்ட பெக்கோ இயந்திரமும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக இன்று புளியங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, புளியங்குளம், பழையவாடிப் பகுதியில் உள்ள பெருங்காட்டினை சிலர் பெக்கோ இயந்திரம் மூலம் அழித்து வருவதாக புளியங்குளம் பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுபதிகாரி வி.எஸ்.டீ.விதானகே, எஸ்.ஐ.ரணசிங்க, பொலிஸ் கான்ஸ்ரபிள்களான ஜெயசூரிய மற்றும் யூட் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்ற போது அங்கு சுமார் அரை ஏக்கர் காடு அழிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்தும் காடு அழிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து காடழிப்பில் ஈடுபட்ட 50, 40 மற்றும் 34 வயதுடைய மூவரை பொலிசார் கைது செய்தனர். அவர்கள் காட்டினை அழிப்பதற்கு பயன்படுத்திய பெக்கோ இயந்திரமும் கைப்பற்றப்பட்டது.
குறித்த காடழிப்பானது உள்ளூர் அரசியல் பிரமுகர் ஒருவரின் ஆதரவுடன் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள புளியங்குளம் பொலிசார், கைது செய்யப்பட்ட குறித்த மூவரையும் வவுனியா நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.