சூட்கேசுக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண் மருத்துவரின் சடலம் : நடந்தது என்ன?

பெண் மருத்துவரின் சடலம்

பிரபல மருத்துவர் ஒருவர் தன் மனைவியைக் கொலை செய்து சூட்கேசுக்குள் அடைத்து கனடாவின் நதி ஒன்றில் வீசியதற்காக தண்டனை வழங்கப்பட உள்ளது. Elana Fric-Shamji என்னும் பிரபல மருத்துவரின் உடல் வழிப்போக்கர்களால் ஹம்பர் நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்டது.

எதுவும் நடக்காததுபோல் சாதாரணமாக தனது அன்றாட பணிகளில் ஈடுபட்டிருந்த Elanaவின் கணவரான Mohammed Shamjiயை சாதாரண உடையிலிருந்த பொலிசார் கைது செய்தனர். வெவ்வேறு நபர்களைக் காதலித்து, பின்னர் பிரிந்த Elanaவும் பிரபல நரம்பியல் சிகிச்சை வல்லுநரான Shamjiயும் காதலித்தனர். விளைவு Elana கர்ப்பமானார். தீவிர இஸ்லாமிய பாரம்பரியம் கொண்ட Shamji வேறு வழியின்றி Elanaவை மணந்து கொண்டார்.

வெளி உலகுக்கு இரண்டு பிரபல மருத்துவர்கள் இணைந்து வாழ்வதுபோல் தெரிந்தாலும், திருமண வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சினைகள். முந்தைய காதல்களின் தாக்கம், திருமணத்தின் விளைவுகள், குழந்தைகள் என குழப்பமாக தொடர்ந்தது வாழ்க்கை.

12 ஆண்டுகள் தாக்குப்பிடித்த Elana, புதிய ஒரு உறவைத் தேடிக் கொண்டார். அது Shamjiக்கு அதிர்ச்சியளித்தது. விவாகரத்து கோரினார் Elana. அதை தாங்கும் பக்குவம் Shamjiக்கு இல்லை. ஒருநாள் பக்குவமாக பேசி தனது படுக்கையறைக்கு Elanaவை அழைத்த Shamji, அவரை அடித்து, கழுத்தை நெறித்துக் கொன்று சூட்கேஸ் ஒன்றினுள் அடைத்து ஹம்பர் நதியில் கொண்டு வீசி விட்டு வந்து விட்டார்.

ஏற்கனவே இருவருக்கும் இடையில் இருந்த பிரச்சினைகளை அறிந்திருந்த Elanaவின் பெற்றோரின் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் Shamji. தொடர்ந்து விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்று, தான் Elanaவை கொலை செய்ததை Shamji ஒப்புக் கொண்டார். அடுத்த மாதம் அவரது வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 61 வயது பெண்ணை மணந்த 29 வயது இளைஞர்!!

61 வயது பெண்ணை மணந்த 29 வயது இளைஞர்

நைஜீரியாவை சேர்ந்த 29 வயது இளைஞர் அமெரிக்காவுக்கு செல்ல ஆசைப்பட்டு அந்நாட்டை சேர்ந்த 61 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

நைஜீரியாவை சேர்ந்தவர் ஜூடி ஓபி (29). இவருக்கு பேஸ்புக் மூலம் 61 வயதான அமெரிக்க பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இதன்பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். ஜூடிக்கு அந்த பெண்ணுடன் அமெரிக்காவுக்கு சென்று செட்டில் ஆக வேண்டும் என ஆசை ஏற்பட்டது.

இதையடுத்தே தனது தாய் வயது பெண்ணை மணக்க அவர் முடிவெடுத்தார். இதன்பின்னர் இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

வயதான பெண்ணை ஜூடி திருமணம் செய்து கொண்டதற்கு அவரின் உறவினர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், சிலர் ஆதரவு தெரிவித்து திருமணத்தில் கலந்து கொண்டார்கள்.

காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை துண்டுகளாக நறுக்கி படுக்கையில் மறைத்து வைத்த கொடூரன்!!

இளம்பெண் கொடூரமாக கொலை

துருக்கியில் திருமணமான நபரின் காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல்லில் ஒரு விடுமுறை வாடகை குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பக்கத்து வீட்டை சேர்ந்தவர் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போது, அங்கிருந்த படுக்கையின் கீழ் பகுதியில் அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைக்கப்பட்டிருந்த ஒரு உடலை கைப்பற்றினர்.

அவருடைய காதுகளும், விரல்களும் துண்டாக நறுக்கப்பட்டிருந்தது. இதன் பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சூட்கேஸுடன் அடிக்கடி அறைக்கு சென்றுவந்த ஜீவர் கோல் ஆர் (29) என்பவரை பொலிஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ளனர். இவர் கொலையுண்ட 25 வயதான நஜியா அரேப்சாயிடம் காதலை கூறியதாக தெரிகிறது.

அதற்கு மறுப்பு தெரிவித்ததால் கொலை செய்திருக்கிறார் என சந்தேகிப்பதாக கூறியுள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மகளுக்காக பொலிஸார் முன் மனைவியை சுட்டுக்கொன்ற கணவன் : நேரில் பார்த்ததும் துடிதுடித்து கதறிய பெண்!!

மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்

அமெரிக்காவில் பொலிஸ் நிலையம் முன் வைத்து மனைவியை சுட்டுக்கொலை செய்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த ப்ரெண்டா ரெடெரியா (27) என்கிற தாய், கணவனிடம் இருக்கும் மகளை வாங்குவதற்காக பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு குழந்தையுடன் வந்த ஜேக்கப் மூன் (30), பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் தன்னுடைய மனைவியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென கையில் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து மனைவியை சுட்டுக்கொலை செய்துவிட்டு அங்கிருந்த ஒரு காரில் தப்பியுள்ளார் .

இந்த சத்தம் கேட்டு பொலிஸ் நிலையத்திலிருந்து வேகமாக வெளியில் வந்த பொலிஸார், தப்பி சென்ற ஜேக்கப்பை தீவிரமாக தேட ஆரம்பித்தனர். 3 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் குற்றவாளியை கைது செய்தனர்.

இதற்கிடையில் குற்றவாளியின் பேஸ்புக் பக்கத்தை சோதனை செய்யும்போது, “என்ன நடந்தாலும், நான் உன்னை விட்டுக்கொடுக்க மாட்டேன்” என குழந்தையின் புகைப்படத்துடன் பதிவிட்டிருப்பதை பார்த்தனர். அதேசமயம் குற்றவாளி 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு வழக்கில் கைது செய்யப்ட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியமான ப்ரெண்டாவின் உறவினர் பெண், குழந்தை மாற்றிக்கொள்ள முதலில் ஹாதோர்ன் பகுதியை தான் தேர்வு செய்தோம். இந்த இடம் இருவரின் வீட்டிலிருந்து சமதொலைவில் உள்ளது. ஆனால் கணவரின் மீது இருந்த பயத்தால் தான் இடத்தை மாற்றினார் என தெரிவித்துள்ளார்.

தாய்ப்பால் கொடுக்கும்போதெல்லாம் கண்ணீர் வடிக்கும் பிரித்தானிய தாய்!!

கண்ணீர் வடிக்கும்  தாய்

தன்னுடைய குழந்தைக்கு மகிழ்ச்சியாக தாய்ப்பால் கொடுக்க முடியாமல் அவஸ்தையடையும், பிரித்தனையா தாய் ஒருவர் விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்று வருகிறார். பிரித்தானியாவை சேர்ந்த டீனா டாட் என்கிற 31 வயது பிரித்தானிய தாய், இரண்டாவது குழந்தை பிறந்தது முதலே வினோதமான ஒரு அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானிய மக்களில் அதிகமானோர் இதுகுறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லாதால், மருத்துவ விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் தனக்கு நடந்ததை பற்றி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததும் மருத்துவமனையில் இருந்த போது தான் அந்த அனுபவம் எனக்கு முதன்முதலாக கிடைத்தது.

நான் என்னுடைய குழந்தை பருவத்தில் முதன்முறையாக பள்ளிக்கு செல்வதை போல உணர்ந்தேன். அடுத்த சில நாட்களில் தான் பயங்கரமான ஒரு உணர்ச்சியை உணர்ந்தேன். என்னுடைய குழந்தை இஷாவிற்கு பால் கொடுக்க முயலும் போதெல்லாம் ஒருவிதமான பயமும், கவலையும் என்னுடனே இருந்தது. உணர்ச்சிகள் அதிகரித்தது.

அதை மற்றவர்களிடம் விளக்கி கூற எனக்கு கடினமாக இருந்தது. மற்ற தாய்மார்களிம் நான் கூறும்போது, குடும்பத்தில் வளர்ந்த ஒரு நாயை கொலை செய்வதை போல இருப்பதாக விவரித்தேன். அதற்கு பிறகு எப்பொழுதெல்லாம் என்னுடைய மகளுக்கு தாய்ப்பால் கொடுக்கிறானோ, அந்த சமயங்களில் எல்லாம் மனசோர்வும், கவலையும் அதிகரித்தது.

தாய்ப்பால் கொடுப்பது தவறு என்பதை போல உணர்ந்தேன். அந்த உணர்வுகள் எனக்கு அதிகரிக்கும்பொழுது கண்ணீர் வர ஆரம்பித்துவிடும். நான் என் மகளை கவனித்துக்கொள்ள வேண்டும் என்று எனக்கு தெரியும். ஆனால் அந்த உணர்ச்சிகளால் நான் கவலையடைந்தேன்.

குழந்தை பெற்றெடுத்த பெண்களுக்கு வரும் மனஅழுத்தம் என்று தான் நாங்கள் முதலில் நினைத்திருந்தோம். ஆன்லைனில் தேடிப்பார்த்து பிறகு தான், பால் வெளியேற்றம் எதிர்வினை எனப்படும் D-MER-ஆல் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை தெரிந்துகொண்டேன்.

இது ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் காரணமாக பால் வெளியிடும் மார்பகங்களுக்கு முன்பு டிஸ்போரியாவின் தீவிர உணர்ச்சிகளை உணர வைக்கும். குழந்தை பிறந்த 8 மாதங்களுக்கு பிறகு தான் இந்த அறிகுறிகளை சந்தித்தேன் என்பதை உறுதி செய்தேன்.

நான் ஒரு தாய் என்பதை உணர முடியாதபடி D-MER என்னை தடுத்தது. ஒருமுறை அது ஒரு சாதாரணமானது தான் என்பதை உணர்ந்தேன். அதிலிருந்து தற்போது நான் மீண்டுவிட்டேன்.
இதுகுறித்து தாய்மார்களுக்கு எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன். D-MER என்னை ஒரு கெட்ட தாய் போல் தோன்றவைத்தது.

இந்த நிலையில் பிரச்சனை என்னவென்றால், யாரும் இதைப்பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை, நான் தான் முதன்முதலில் அறிந்திருப்பதாக நினைக்கிறேன். இதனை பற்றிக் கூறும் போது மருத்துவர்கள் கூட முக்கியமானதாக கருதாமல், கேட்க மறுத்துவிட்டனர் என தெரிவித்துள்ளார்.

யாரும் எதிர்ப்பாராத நேரத்தில் 175 ஏக்கர் நிலத்தை ராணுவ வீரர்களுக்கு வழங்கிய நடிகர்!!

நடிகர் சுமன்

பிரபல நடிகர் சுமன். 80களில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்தவர். தற்போது குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். தற்சமயம் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் படத்தில் நடித்து முடித்துள்ள இவர் அப்படத்தின் அறிமுக நிழ்ச்சியில் பேசியதாவது,

இந்த படத்தில் எனக்கு நல்ல ஒரு கதாப்பாத்திரத்தையும், அதை சிறப்பாக செய்ய சுதந்திரத்தையும் கொடுத்த விஜய்க்கு நன்றி. 9 மொழிகளில் 450 படங்களில் நடித்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் நடிப்பது எப்போதுமே எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். இந்த கதை மிகவும் புதுமையாக இருந்தது.

நமது நாட்டின் உண்மையான வாட்மேன்கள் ராணுவ வீரர்கள்தான். நாம் நிம்மதியாக வாழ அவர்கள் உறையும் பனியில் காவல் புரிகிறார்கள். அவர்களுக்குள் ஜாதி, மத பேதமில்லை. ஆனால் நாம்தான் ஜாதி, மதத்தின் பெயரால் கலவரம் செய்து கொண்டிருக்கிறோம்.

அவர்களுக்கு என்னால் முடிந்த உதவி செய்ய முடிவு செய்தேன். அதன்படி சினிமா ஸ்டூடியோ கட்ட ஐதராபாத் அருகே நான் வாங்கிய 175 ஏக்கர் நிலத்தை இந்தியாவின் வாட்ச்மேன்களாக இருக்கும் ராணுவ வீரர்களுக்கு தானமாக கொடுக்க இருக்கிறேன் என்றார் சுமன்.

இலங்கையை சூழ புதைந்திருக்கும் பெரும் பொக்கிஷம் : ஆய்வுகளின் ஊடாக கண்டுபிடிப்பு!!

இலங்கையை சூழ பொக்கிஷம்

இலங்கையை சூழ்ந்துள்ள கடல் பகுதிகளில் இயற்கை எரிவாயு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பெட்ரோலிய ஆய்வு அபிவிருத்தி செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் வஜிர தஸநாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“இலங்கையை சூழ்ந்துள்ள கடல் பிரதேசம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, கடந்த பல ஆண்டுகளாக ஆய்வுகள் நடத்தப்பட்டன. இலங்கை தீவின் மேற்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இயற்கை எரிவாயு வளம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன.

குறிப்பாக, தமிழ் நாட்டின் அருகிலுள்ள மன்னார் வளைக்குடா பகுதியிலேயே அதிக இயற்கை எரிவாயு காணப்படுகின்றது. மன்னார் முதல் தென் பகுதியின் காலி வரையான கடல் பிரதேசத்தில் இந்த எரிவாயு வளம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கையின் வட கிழக்கு பகுதியிலும் இயற்கை எரிவாயு வளங்கள் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளன. பிரான்ஸை தளமாகக் கொண்டு இயங்கும் டோடா நிறுவனத்தினால் கடந்த ஆண்டு இந்த பகுதியில் ஆய்வுகள் நடத்தப்பட்டிருந்தன.

இதன்படி, யாழ்ப்பாணம் முதல் திருகோணமலையை அண்மித்த கடல் பிராந்தியத்தில் இந்த இயற்கை எரிவாயு வளங்கள் இருக்கின்றமை கண்டறிப்பட்டுள்ளன. டோடா நிறுவனத்தினால் நடத்தப்பட்ட ஆய்வுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து, எதிர்வரும் நடவடிக்கைகள் தொடர்பில் அந்த நிறுவனம் தீர்மானிக்கும்” என வஜிர தஸநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை!!

அவசர எச்சரிக்கை

காலநிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் மே மாதம் இறுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடமேல், வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கம்பஹா, அம்பாறை மாவட்டங்களிலும் இத்தகைய நிலை நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெப்பநிலை 32 பாகை முதல் 41 பாகை செல்சியஸ் வரையிலான எல்லைக்குள் இருக்கும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது. இதன் காரணமாக தசைப்பிடிப்புடன் அலர்ச்சி ஏற்படலாம். வெளியிடங்களில் வேலை செய்வோர் அடிக்கடி தண்ணீர் அருந்தி நிழலில் ஓய்வெடுப்பது அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, முதியவர்களையும் நோயாளிகளையும் பரிசோதிப்பது அவசியம். பிள்ளைகளை தனியே விடக்கூடாது. பொதுவாக வெளிர்நிற ஆடைகளை அணிவது உசிதமானது என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள ஆலோசனைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வாழ் அனைத்து மக்களும் கடும் வெப்பம் நிலவும் நேரங்களில் அவதானமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் ஆபத்தினை தவிர்த்து கொள்ள முடியும்.

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் : நெகிழ்ச்சியில் ஜனாதிபதி மைத்திரி!!

இலங்கையில் ஒரே பிரசவத்தில் நான்கு பிள்ளைகளை பெற்றெடுத்த குடும்பத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதி உதவி செய்துள்ளார்.

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த விமானப்படையின் பெண் சிப்பாய் தனது குடும்பத்தினருடன் இன்று ஜனாதிபதியை சந்தித்தார்.

ஆண் குழந்தைகள் இரண்டையும் பெண் குழந்தைகள் இரண்டையும் பெற்றெடுத்த தாய் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளனர்.

எனினும் குழந்தைகளை வளர்ப்பதற்கு போதுமான வசதி இந்த குடும்பத்திடம் இருக்கவில்லை. இந்நிலையில் ஜனாதிபதியிடம் கூறுங்கள் என்ற நிகழ்ச்சி மூலம் இந்த தம்பதி ஜனாதிபதியிடம் உதவி கோரியுள்ளனர்.

அதற்கமைய இந்த தம்பதியை அழைத்த ஜனாதிபதி நெகிழ்ச்சியுடன் குழந்தைகளை தூக்கி விளையாடியுள்ளார். அத்துடன் ஒரு குழந்தைக்கு 5 இலட்சம் ரூபா என்ற கணக்கில் 2 மில்லியன் ரூபாய் நிதி உதவி செய்துள்ளார்.

அத்துடன் இன்று காலை இந்த குடும்பத்தை சந்தித்த ஜனாதிபதி அவர்களுடன் புகைப்படம் ஒன்றையும் எடுத்து கொண்டுள்ளார்.

இலங்கையில் ATM இயந்திரத்தில் பணம் எடுக்கச் செல்பவர்களின் பரிதாப நிலை!!

ATM இயந்திரத்தில் பணம்

இலங்கையில் அமுல்படுத்தப்படும் மின்சார விநியோகத் தடை காரணமாக மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். திடீரென மின்சார தடை ஏற்படுகின்றமையினால் ATM இயந்திரங்களில் பணம் எடுக்கச் செல்பவர்கள் கடும் சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

வங்கிகள் அற்ற பகுதியில் டெலர் இயந்திரம் ஊடாக பணம் எடுப்பவர்வளே அதிகமாக பாதிப்படைந்துள்ளனர். அரசாங்க வங்கிகளுக்கு சொந்தமான ATM இயந்திரம் ஊடாக பணம் பெறுவோர் மின்சார தடை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் அட்டைகள் மற்றும் பற்றுச்சீட்டை வெளியே எடுத்த பின்னரும் பணம் வராமல் உள்ளமையினால் வங்கிகளுக்கு சென்று அறிவிக்க நேரிட்டுள்ளது.

கண்டி பகுதியில் கடந்த இரண்டுவாரங்களாக பணம் கிடைக்காத பலர் உள்ளனர். அறிவிப்பின்றி மின்சாரம் தடை செய்யப்படுவதனால் இந்த நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

ஒன்றரை வயது குழந்தையை குறடால் தாக்கி கொலை செய்த தந்தை!!

குழந்தையை கொலை செய்த தந்தை

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் ஓன்றரை வயது குழந்தையொன்று , குறடால் தந்தையின் தாக்குதலிற்குட்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளமையானது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில், நபரொருவர், கையில் வைத்திருந்த குறடால் மனைவி மீது தாக்க முற்பட்டபோது, அது தவறி மனைவியின் கையில் இருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை மீது பட்டதில், குழந்தை படுகாயமடைந்த நிலையில், மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை குறித்த குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளது. இதனையடுத்து குறித்த குழந்தையின் தந்தையை, கைது செய்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில், கடுக்காய்முனை அருள்நேசபுரம் அம்பலாந்துறையைச் சேர்ந்த, திலீபன் யதுநிசா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையே, உயிரிழந்துள்ளது.

இதுபற்றி தெரிய வருவதாவது, குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பெரியதம்பி திலீபன், சம்பவ தினமான கடந்த 4ஆம் திகதி மாலை மனைவியுடன் ஏற்பட்ட சண்டையையடுத்து வீட்டில் இருந்த குறடு ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு மனைவியை தாக்க முற்பட்டபோது, மனைவியின் கையிலிருந்த குழந்தையின் தலையின் மீது, குறடு பட்டதையடுத்து குழந்தை படுகாயமடைந்ததையடுத்துள்ளது.

இந்நிலையில் குழந்தையின் தந்தை தப்பி ஓடியுள்ளதாக, தெரியவந்துள்ளது. இதனையடுத்து குழந்தையை மட்டு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தபோதும், சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் திங்கட்கிழமை (08.04.2019) பகல் குழந்தை உயிரிழந்துள்ளது.

இதேவேளை தலைமறைவாகிய தந்தையை பொலிசார் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (08.04.2019) கைது செய்துள்ளதுடன், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணையை கொக்கட்டிச் சோலை பொலிசார் மேற்கொண்டுவருகின்றமையும் குறிப்பிடதக்கது.

வவுனியாவில் உயிருக்கு போராடும் 15வயது பாடசாலை மாணவன் : உதவி செய்யுமாறு கோரிக்கை!!

உயிருக்கு போராடும்  பாடசாலை மாணவன்

வவுனியா அண்ணாநகர் பாடசாலை வீதியினை சேர்ந்த 15வயதுடைய பாடசாலை மாணவன் எஸ்.சதீஸ்குமார் தான் உயிர்வாழ்வதற்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறு வயதினிலேயே தந்தையினை பிரிந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழும் குறித்த மாணவன் கடந்த சில வருடங்களுக்கு முன் பாடசாலையில் நடந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியின் போது மயங்கி வீழ்ந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன் போது மாணவனுக்கு சிகிச்சையளித்த வைத்தியர்கள் அதிர்ச்சியான விடயமொன்றினை பெற்றோருக்கு தெரிவித்தனர். நுரையிரல் வால்வு காரணமாக நீண்டகாலமாக சிறுநீரக நோயினால் பாதிப்பக்கப்பட்டுள்ளார். உடனடியாக சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை செய்யவேண்டுமென தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தின் வறுமை காரணமாக பலரிடம் சென்று அவர்கள் உதவிகளை கோரியபோதிலும் சிறியளவு பணமே அவர்களுக்கு கிடைத்துள்ளது. இம்மாதம் 19ம் திகதிக்கு முன்னராக குறித்த மாணவனுக்கு சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டும்.

தனது மகன் உயிர்வாழ்வதற்கு உதவி செய்யுமாறு மாணவனின் தயார் கோரி நிற்கின்றார். நல்லுள்ளம் கொண்டவர்கள் உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். இச் செய்தியை அதிகம் பகிர்ந்து உயிரைக் காக்க உதவுங்கள்.

இலங்கை வங்கி
வவுனியா கிளை
பெயர் :- சீதாலட்சுமி
கணக்கு இலக்கம் :- 74559676

தொலைபேசி இலக்கம் :- 94772843362

திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட மாணவி : நீதிமன்றம் உத்தரவு!!

கொலை செய்யப்பட்ட மாணவி

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி பிரகதி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சதீஷ்க்கு 15 நாட்கள் காவல் சிறையில் அடைக்க பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை அரசு கலைக் கல்லூரியை சேர்ந்த மாணவி பிரகதி பொள்ளாச்சி-தாராபுரம் சாலையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் அரை நிர்வாணத்துடன் முட்புதருக்குள் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

இந்த கொலையை செய்த பிரகதியின் அத்தை மகன் சதீஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறுவயதில் இருந்து இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்ததாகவும், எனக்கு திருமணமாகிவிட்ட போதிலும் காதல் தொடர்ந்த நிலையில், பிரகதிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

மேலும், பிரகதிக்கு தேவையான பணம் மற்றும் நகை உதவிகள் அவ்வப்போது செய்துவந்தேன், இந்நிலையில் தான் எனக்கு அவள் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கத்தில் அவளை கொலை செய்துவிட்டேன் என கைது செய்யப்பட்டுள்ள சதீஷ் பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்நிலையில் கைது சதீஷ்குமாரை 15 நாள் காவலில் கோவை சிறையில் அடைக்க பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

வவுனியா உக்குளாங்குளத்தில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு விளையாட்டு விழா!!

விளையாட்டு விழா

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு வவுனியா பண்டாரிக்குளம், உக்குளாங்குளம் மகளிர் அமைப்பு நடாத்திய 14ம் ஆண்டு வருடாந்த விளையாட்டு விழா இன்று (09.04.2019) மதியம் 2.45 மணியளவில் உக்குளாங்குளம் சீர்திருத்தம் விளையாட்டுக்கழக மைதானத்தில் மகளிர் அமைப்பின் தலைவி சிவகுமார் திவியா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. அதன் பின்னர் ஆசியுரை, வரவேற்புரை இடம்பெற்றதுடன் விளையாட்டு விழா ஆரம்பமாகியது.

பணிஸ் சாப்பிடும் போட்டி, சாக்கோட்டம், தேங்காய் திருவுதல், கயிறு இழுத்தல், சங்கீதக் கதிரை, வினோத உடைப் போட்டிகள் என பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றிருந்ததுடன் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர்.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதாரலிங்கம், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான ஜீ.ரி லிங்கநாதன், செ.மயூரன் மற்றும் கௌரவ விருந்தினர்களாக வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, வவுனியா உதவி பிரதேச செயலாளர் ச.பிரியதர்சினி, நெடுங்கேனி உதவி பிரதேச செயலாளர் த.தர்மேந்திரா,

கிராம அலுவலகர் ந.ரேனுஷா, சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் ஜோ.ஜெயக்கெனடி, வவுனியா நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் பூ.சந்திரபத்மன், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூர்த்தி உத்தியோகத்தர், விருந்தினர்களாக அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், விளையாட்டுக்கழகங்களின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா தனியார் போக்குவரத்து சங்கம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவித்தல்!!

விசேட அறிவித்தல்

நாடு முழுவதும் தனியார் பேருந்து சேவைகள் இன்று நள்ளிரவு முதல் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. வவுனியாவில் சேவைப் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் வழமை போல் பேரூந்து சேவைகள் ஈடுபடுமென வவுனியா தனியார் போக்குவரத்து சங்கத் தலைவர் எஸ்.இராஜேஸ்வரன் தெரிவித்தார்.

மதுபோதையில் வாகனத்தை செலுத்துதல் உள்ளிட்ட சில போக்குவரத்து விதிமீறல்களுக்கான தண்டப்பணம் 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் வகையில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டவரைவுக்கு எதிராக நாடு முழுவதும் தனியார் பேருந்து சேவைகள் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் 24 மணிநேரம் இந்தச் சேவைப் புறக்கணிப்பு இடம்பெறும் என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக வவுனியா தனியார் போக்குவரத்து சங்க தலைவர் எஸ்.இராஜேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,

பணிப்புறக்கணிப்பு தொடர்பாக கொழும்பிலிருந்து எவ்வித அறிவித்தலும் வழங்கப்படவில்லை. வழமையாக பணிப்புறக்கணிப்பு என்றால் எமக்கு அறிவித்தல் வழங்கப்படும் ஆனால் நாளைய பணிப்புறக்கணிப்பு தொடர்பாக எவ்வித அறிவித்தலும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை . நாளையதினம் வவுனியா மாவட்டத்தில் அனைத்து தனியார் பேரூந்துகளும் வழமைபோன்று சேவையில் ஈடுபடுமெனவும் தெரிவித்தார்.

பெற்றோரை சோகத்தில் ஆழ்த்திய 16 வயது மாணவி!!

தூக்கிட்டு தற்கொலை

மஸ்கெலிய – குலெனுஜி தோட்டத்தில் வசிக்கும் பாடசாலை மாணவி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 16 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இம் முறை கல்வி பொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்து உயர் தரத்திற்கு தெரிவாகியுள்ள மாணவியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தாயாரின் சேலையினால் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் மாணவியை மருத்துவமனையில் அனுமதித்த நிலையிலே மாணவி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சடலம் குறித்த பிரேத பரிசோதனை இன்று டிக்கோயா மருத்துவமனையில் இடம்பெறவுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்துள்ளது. தற்கொலைக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை என காவற்துறை தெரிவித்துள்ளது.