வவுனியாவில் சமுர்த்தி விற்பனைக் கண்காட்சி!!

விற்பனைக் கண்காட்சி

புதுவருடத்தை முன்னிட்டு சமுர்த்தி விற்பனை கண்காட்சி வவுனியா பிரதேச செயலகத்துக்கு முன்பாக பிரதேச செயலாளர் கா.உதயராஜா தலைமையில் இன்று நடைபெற்றது.

புதுவருடத்தை முன்னிட்டு மக்களுக்கு தேவையான அனைத்து பாரம்பரிய உள்ளூர் உற்பத்திப் பொருட்களை ஒரேஇடத்தில் மலிவுவிலையில் பெற்றுக்கொள்ளும்படியாக சமுர்த்தி பயனாளர்களினால் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மரக்கறி, பழவகை, தானியவகைகள், ஆடை அணிகலன்கள், கைவினைப்பொருட்கள், பனை உற்பத்திப் பொருட்கள் போன்றன காட்சிப்படுத்தப்படுவதுடன் விற்பனை செய்யப்பட்டும் வருகிறன்து.

நிகழ்வில் முதன்மை விருந்தினராக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக உதவி பிரதசே செயலாளர் ச.பிரியதர்சினி, சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் திருமதி ச.சந்திரகுமார், வடமாகாண தொழில்திணைக்களத்தினர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்த சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!!

சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்

யாழ்ப்பாணம் – கைதடியில் வெயில் தாகத்தில் குளிர்பானம் என மண்ணெண்ணெய்யை அருந்திய சிறுவன் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

வெளிநாட்டிலிருந்து கைதடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்த சிறுவனே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் இருந்தபோது தாகமாக இருக்கின்றதென குளிர்பான போத்தலில் ஊற்றி வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய்யை குளிர்பானம் என கருதி குடித்துள்ளார்.

இதனையடுத்து சிறுவனை சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிறுவன் மாற்றப்பட்டுள்ளாரென உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கைப் பெண்கள்!!

நாடு கடத்தப்பட்ட இலங்கைப் பெண்கள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இலங்கைப் பெண்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அரபு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. போலியான கடவுச்சீட்டு பயண்படுத்தி குவைத் நாட்டுக்குள் நுழைய முயற்சித்த பெண்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இரண்டு இலங்கை பெண்கள் உட்பட 3 பெண்கள் குவைத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். குவைத் சர்வதேச விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கைரேகை அடையாளம் காணும் இயந்திரம் மூலம் இந்தப் பெண்கள் சிக்கியுள்ளனர்.

குறித்த மூவரும் வாழ்நாளில் குவைத் செல்ல முடியாத வகையில் கறுப்பு பட்டியலில் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை பெண்களுடன் கைது செய்யப்பட்ட மற்றைய பெண் இந்திய நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பிரபல நடிகை மீது கொடூர தாக்குதல் :  இணையத்தில் வெளியாகிய காணொளி!!

நடிகை மீது கொடூர தாக்குதல்

இலங்கையின் பிரபல நடிகை பியுமி ஹன்சமாலியை சிலர் நபர்கள் கொடூரமாக தாக்கியுள்ளதாக வெளியான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தை ராஜாங்க அமைச்சரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க கண்டித்துள்ளார்.

இது குறித்து தனது பேஸ்பக் பக்கத்தில் ரஞ்சன் ராமநாயக்க பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பொலிஸ் மா அதிபர் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த நடிகையை கீழே தள்ளி சிலரினால் மிக கொடூரமாக தாக்கும் காணொளி பேஸ்புக்கில் வெளியாகியுள்ளது. இந்த நடிகை சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபல்யமான ஒருவராகும். கடந்த சில நாட்களாக பல நாடகங்களிலும் அவர் நடித்து வந்தார்.

இதற்கு முன்னர் கேளிக்கை விடுதிகளில் மோதல்களில் ஈடுபட்ட இந்த நடிகையின் காணொளிகள் வெளியாகியிருந்தது. இந்த நடிகையை தாக்கும் நபரே இது பியிமி ஹன்சமாலி என்பதனை உறுதி செய்துள்ளார் என தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நடிகர் எம்.ஜி.ஆரை சென்னை அணியுடன் இணைத்து கொச்சைப்படுத்திய நடிகை கஸ்தூரி!!

நடிகை கஸ்தூரி

80,90களில் பிசியாக நடித்து வந்தவர் நடிகை கஸ்தூரி. சத்யராஜ் உள்பட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தற்போதும் பல படங்களில் கவர்ச்சி வேடம், குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

அவ்வப்போது சமூகத்தில் நடக்கும் அநியாயங்களுக்கு தனது குரலை வலுவாக கொடுத்து வருகிறார். ஆனால் இவரது ஒரு சில கருத்துகள் முகம் சுளிக்கும் விதமாக அமைகின்றன.

அப்படி தான் தற்போது KKR அணிக்கு எதிராக மிகவும் நிதானமாக விளையாடி வந்த CSK அணியை பல்லாண்டு வாழ்க படத்தில் எம்.ஜி.ஆர் நடிகை லதாவை தடவுவதை விட அதிகமாக தடவி கொண்டு ஆடி கொண்டிருக்கிறார்களே என பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அப்பா, அம்மா வாழ்ந்த வீட்டில் : பெற்றோரை 2 நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து இழந்த பிள்ளைகளின் ஆசை!!

தமிழகத்தில் தாயும் தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் அவர்களின் இரண்டு பிள்ளைகள் சரியான ஆதரவு இல்லாமல் தவித்து வருகின்றனர்.

மதுரையை சேர்ந்தவர் சந்தானம் (45). ஜோதிடர். இவர் மனைவி செல்லம்மாள் (40). தம்பதிக்கு ஜெயச்சந்திரன் (15), ஜெயந்தி (13) என இரு பிள்ளைகள் உள்ளனர். மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்ட செல்லம்மாள் சிகிச்சை பலனின்றி கடந்த 4ம் திகதி உயிரிழந்தார்.

சர்க்கரை நோயாளியான சந்தானம் செல்லம்மாள் பிரிவை தாங்கமுடியாமல் மனவேதனையில் இருந்த நிலையில் அந்த சோகத்திலேயே 6ம் திகதி மரணமடைந்தார்.

இதனால் தம்பதியின் பிள்ளைகள் ஆதரவற்று தவித்தார்கள். ஜெயச்சந்திரன், ஜெயந்தியின் தாத்தா, பாட்டி அவர்களை பராமரித்து வருகிறார்கள். வயதான இவர்களால் சிறார்களின் பராமரிப்பு செலவுகளை ஏற்க முடியவில்லை.

இதனால் நல்ல உள்ளம் கொண்டோர் அவர்களுக்கு உதவ கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பெற்றோரை இழந்து வாடும் ஜெயச்சந்திரன் மற்றும் ஜெயந்தி கூறுகையில், பெற்றோரை இழந்த எங்களால் விடுதியில் சேர்ந்து தனித்தனியாக வாழ இயலாது.

அப்பா, அம்மா வாழ்ந்த வீட்டில் இருந்தே கல்வியை தொடர விரும்புகிறோம், மேல்படிப்பு படிக்க ஆசை என கூறியுள்ளனர்.

இலங்கை தமிழ் சிறுமியின் கதறல் : நடந்த கொடுமை!!(வீடியோ)

சிறுமியின் கதறல்

இலங்கை மட்டக்களப்பில் கிரான்குளம் பகுதியில் தாய் ஒருவர் மகளை தனது அம்மாவிடம் விட்டுச் சென்றுள்ளார். ஆனால் சிறுமியின் அம்மம்மாவோ சிறுமிக்கு சாப்பாடு கொடுக்காமலும், பாடசாலைக்கு அனுப்பாமாலும் கொடுமை செய்துள்ளார்.

அது மட்டுமின்றி தகாத வார்த்தையால் பேசி அடித்து துன்புறுத்தி வீட்டில் அடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த சிறுமியினை தற்போது மீட்டு காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஒரு பாட்டியே தனது பேத்தியினை இவ்வாறு கொடுமை செய்துள்ளது காண்பவர் நெஞ்சை கலங்க வைத்துள்ளது.

நள்ளிரவு முதல் பொது மக்களுக்கான மற்றும் ஓர் மகிழ்ச்சியான செய்தி!!

மகிழ்ச்சியான செய்தி

தற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் சீரான மின்சார விநியோகம் இடம்பெறும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டினுள் நிலவும் கடும் வறட்சியான வானிலையால் ஏற்பட்ட மின்சார தடைக்கு தீர்வாக மூன்று கட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது அமுல்படுத்தப்படும் மின்சார தடையை நிறுத்துவதற்காக 500 முதல் 600 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்சார கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளது.

அத்துடன் எதிர்காலத்தில் மின்சாரத்தை கொள்வனவு செய்வது தொடர்பான யோசனை ஒன்றை மின்சக்தி அமைச்சர் ரவீ கருணாநாயக்க நேற்று அமைச்சரவையில் முன்வைத்துள்ளார்.

அது தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடப்பட வேண்டும் என அமைச்சர்கள் கூறியதன் காரணமாக அந்த யோசனை குறித்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குழந்தையை வேறொரு பெண்ணை பார்த்துக்கொள்ளுமாறு பொய் சொல்லிவிட்டு தலைமறைவான தாய்!!

தலைமறைவான தாய்

தமிழகத்தில் தனது குழந்தையை பெண்ணிடம் பொய் சொல்லி ஒப்படைத்துவிட்டு தலைமறைவான தாயை பொலிசார் தேடி வருகின்றனர். ஈரோட்டை சேர்ந்தவர் மகேஸ்வரி (65). இவர் கடந்த மாதம் 19ம் திகதி கண் அறுவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.

சிகிச்சை முடிந்து சில நாட்கள் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். அப்போது பக்கத்து படுக்கையில் இருந்த வேணி என்பவர், மகேஸ்வரி மற்றும் அவருடைய மகளுடன் பழகி வந்தார். சம்பவத்தன்று வேணி, தனது அப்பாவின் கண் அறுவை சிகிச்சைக்காக தஞ்சாவூர் செல்வதாகவும், அதுவரை தனது மகன் பிரகதீசை (5) பார்த்து கொள்ளுமாறும் மகேஸ்வரியின் மகளிடம் கூறி உள்ளார்.

அதைத்தொடர்ந்து அவர் தனக்கு தெரிந்த சிவா என்பவரின் மனைவி சாலேத் (22) என்பவரை அறிமுகம் செய்து வைத்து, குழந்தையை இவர் பார்த்துக்கொள்வார் என்று வேணியிடம் கூறியுள்ளார்.

பின்னர் வேணி தனது மகனை சாலேத்திடம் ஒப்படைத்துவிட்டு, நாளை வந்து குழந்தையை வாங்கிச் செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். ஆனால் ஒருவாரம் ஆகியும் வேணி குழந்தையை வாங்க வராததால் சந்தேகமடைந்த சாலேத் இதுபற்றி பொலிஸ் புகார் அளித்தார்.

விசாரணையில், குழந்தையை விட்டு சென்ற வேணிக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததும், அவரால் குழந்தையை வளர்க்க முடியாததால் சாலேத்திடம் விட்டுச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து வேணியை பொலிசார் தேடி வருகிறார்கள்.

மகனுக்கு புதிய ஆடை வாங்கிக் கொடுக்காததால் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு!!

மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு

சென்னை ஆவடி பகுதியில் மம்தா என்ற பெண்மணி தனது மகனின் பிறந்தநாளுக்கு கணவர் ஆடை வாங்கிகொடுக்காத காரணத்தால் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வட மாநிலத்தை சேர்ந்த பானு பிரசாத் என்பவர் கடந்த 6 ஆண்டுகளாக ஆவடி பகுதியில் தனது மனைவி மம்தா மற்றும் 4 வயது மகனுடன் வசித்துவந்துள்ளார். பானிபூரி விற்கும் தொழில் செய்து வந்த இவரது மகன் ராஜூவுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் புது ஆடை வாங்கி தருமாறு மம்தா கூறியுள்ளார்.

ஆனால், தன்னிடம் பணம் இல்லை என்பதால், தாமதமாக வாங்கி தருகிறேன் என கூறியுள்ள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பானுபிரசாத் பானிபூரி விற்பதற்காக வெளியில் சென்றுவிட்டார். பின்னர் இரவு 9 மணிக்கு வீட்டுக்கு வந்த அவர் தனது மனைவி எடுத்துள்ள முடிவை பார்த்து கதறி அழுதுள்ளார்.
மனைவி மம்தாவும், அவரது மகன் ராஜ் இருவரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 2 பேரையும் மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

விசாரணையில், பானு பிரசாத் வெளியே சென்ற பிறகு கணவர் மேல் உள்ள ஆத்திரத்தில் விரக்தி அடைந்து காய் நறுக்கும் கத்தியை எடுத்து மம்தா தனது மகன் ராஜூவின் கழுத்து, வாய், கை ஆகிய பகுதிகளில் அறுத்து விட்டு தானும் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

பாடசாலை வகுப்பறையில் தூக்கில் சடலமாக கிடந்த இளம் ஆசிரியர் : சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!!

சடலமாக கிடந்த இளம் ஆசிரியர்

சென்னையில் தனியார் பள்ளியின் வகுப்பறையில் இளம் வயது ஆசிரியர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலாங்கரையில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ள நிலையில் இன்று வழக்கம் போல மாணவர்கள் வந்த போது எட்டாம் வகுப்பறையில் ஆசிரியர் அந்தோணி ஜெனிபர் என்பவர் தூக்கில் சடலமாக தொங்கியபடி இருந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்த நிலையில் பின்னர் பொலிசாருக்கு தகவல் சொல்லப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றிவிட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

அந்தோணி தூக்கில் தொங்கிய வகுப்பறையின் தரையில் ரத்தத்துளிகள் சிதறிக்கிடந்த நிலையில் அவர் உடலில் எந்த காயங்களும் இல்லை என தெரியவந்தது.

பொலிசார் கூறுகையில், திருமணமாகாத அந்தோணி 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்புக்கு பாடம் நடத்திவந்தார், அவர் 8ஆம் வகுப்பறையில் தான் தங்கியிருந்தார். உடலில் காயங்கள் இல்லாத சமயத்தில் எப்படி ரத்தத் துளிகள் அங்கு சிதறிக்கிடக்கின்றன என்று விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் அந்தோணிக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை என தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து பொலிசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமானத்தில் பறந்து வந்து மனைவியை கொலை செய்தது எதற்காக? கணவர் வாக்குமூலம்!!

கணவர் வாக்குமூலம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கவுதமி என்ற பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கொலைக்கான காரணம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார் ராஜேஷ். இவருக்கும் கவுதமி என்ற பெண்ணுக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

இந்நிலையில் தலையணையால் முகத்தை அமுக்கி கவுதமி கொலை செய்யப்பட்டு கிடந்த நிலையில், விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த கணவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் கொலை செய்தது தெரியவந்துள்ளது.

கொலை குறித்து அவர் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனக்கும் கலைவாணி என்ற பெண்ணுக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கூடா நட்பு இருந்தது. இதுகுறித்து கவுதமி அறிந்து என்னை கண்டித்தார்.

உனது மனைவி உயிரோடு இருக்கும்வரை நமக்கும் சந்தோஷம் இருக்காது, எனவே அவளை கொலை செய்துவிடு என கலைவாணி என்னிடம் தெரிவித்தாள். இதற்காக நான் விடுமுறை எடுத்து ஜோத்பூரில் இருந்து விமானத்தில் பெங்களூருவிற்கு வந்தேன்.

எனது குழந்தைகள் 2 பேரும் அவருடைய தாத்தா, பாட்டி வீட்டில் இருந்தனர். எனது மனைவியுடன் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அவள் தூங்கியபின்னர் தலையணையை வைத்து முகத்தில் அமுக்கி கொலை செய்தேன். அதன்பின்னர், அவள் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை எடுத்துக்கொண்டு சென்னை வந்து அங்கிருக்கும் சேட் கடையில் விற்றேன். நகைக்காக இந்த கொலை நடந்ததாக பொலிசாரை திசை திருப்ப திட்டமிட்டேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

சூட்கேசுக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண் மருத்துவரின் சடலம் : நடந்தது என்ன?

பெண் மருத்துவரின் சடலம்

பிரபல மருத்துவர் ஒருவர் தன் மனைவியைக் கொலை செய்து சூட்கேசுக்குள் அடைத்து கனடாவின் நதி ஒன்றில் வீசியதற்காக தண்டனை வழங்கப்பட உள்ளது. Elana Fric-Shamji என்னும் பிரபல மருத்துவரின் உடல் வழிப்போக்கர்களால் ஹம்பர் நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்டது.

எதுவும் நடக்காததுபோல் சாதாரணமாக தனது அன்றாட பணிகளில் ஈடுபட்டிருந்த Elanaவின் கணவரான Mohammed Shamjiயை சாதாரண உடையிலிருந்த பொலிசார் கைது செய்தனர். வெவ்வேறு நபர்களைக் காதலித்து, பின்னர் பிரிந்த Elanaவும் பிரபல நரம்பியல் சிகிச்சை வல்லுநரான Shamjiயும் காதலித்தனர். விளைவு Elana கர்ப்பமானார். தீவிர இஸ்லாமிய பாரம்பரியம் கொண்ட Shamji வேறு வழியின்றி Elanaவை மணந்து கொண்டார்.

வெளி உலகுக்கு இரண்டு பிரபல மருத்துவர்கள் இணைந்து வாழ்வதுபோல் தெரிந்தாலும், திருமண வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சினைகள். முந்தைய காதல்களின் தாக்கம், திருமணத்தின் விளைவுகள், குழந்தைகள் என குழப்பமாக தொடர்ந்தது வாழ்க்கை.

12 ஆண்டுகள் தாக்குப்பிடித்த Elana, புதிய ஒரு உறவைத் தேடிக் கொண்டார். அது Shamjiக்கு அதிர்ச்சியளித்தது. விவாகரத்து கோரினார் Elana. அதை தாங்கும் பக்குவம் Shamjiக்கு இல்லை. ஒருநாள் பக்குவமாக பேசி தனது படுக்கையறைக்கு Elanaவை அழைத்த Shamji, அவரை அடித்து, கழுத்தை நெறித்துக் கொன்று சூட்கேஸ் ஒன்றினுள் அடைத்து ஹம்பர் நதியில் கொண்டு வீசி விட்டு வந்து விட்டார்.

ஏற்கனவே இருவருக்கும் இடையில் இருந்த பிரச்சினைகளை அறிந்திருந்த Elanaவின் பெற்றோரின் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் Shamji. தொடர்ந்து விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்று, தான் Elanaவை கொலை செய்ததை Shamji ஒப்புக் கொண்டார். அடுத்த மாதம் அவரது வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 61 வயது பெண்ணை மணந்த 29 வயது இளைஞர்!!

61 வயது பெண்ணை மணந்த 29 வயது இளைஞர்

நைஜீரியாவை சேர்ந்த 29 வயது இளைஞர் அமெரிக்காவுக்கு செல்ல ஆசைப்பட்டு அந்நாட்டை சேர்ந்த 61 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

நைஜீரியாவை சேர்ந்தவர் ஜூடி ஓபி (29). இவருக்கு பேஸ்புக் மூலம் 61 வயதான அமெரிக்க பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இதன்பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். ஜூடிக்கு அந்த பெண்ணுடன் அமெரிக்காவுக்கு சென்று செட்டில் ஆக வேண்டும் என ஆசை ஏற்பட்டது.

இதையடுத்தே தனது தாய் வயது பெண்ணை மணக்க அவர் முடிவெடுத்தார். இதன்பின்னர் இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

வயதான பெண்ணை ஜூடி திருமணம் செய்து கொண்டதற்கு அவரின் உறவினர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், சிலர் ஆதரவு தெரிவித்து திருமணத்தில் கலந்து கொண்டார்கள்.

காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை துண்டுகளாக நறுக்கி படுக்கையில் மறைத்து வைத்த கொடூரன்!!

இளம்பெண் கொடூரமாக கொலை

துருக்கியில் திருமணமான நபரின் காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல்லில் ஒரு விடுமுறை வாடகை குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பக்கத்து வீட்டை சேர்ந்தவர் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போது, அங்கிருந்த படுக்கையின் கீழ் பகுதியில் அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைக்கப்பட்டிருந்த ஒரு உடலை கைப்பற்றினர்.

அவருடைய காதுகளும், விரல்களும் துண்டாக நறுக்கப்பட்டிருந்தது. இதன் பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சூட்கேஸுடன் அடிக்கடி அறைக்கு சென்றுவந்த ஜீவர் கோல் ஆர் (29) என்பவரை பொலிஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ளனர். இவர் கொலையுண்ட 25 வயதான நஜியா அரேப்சாயிடம் காதலை கூறியதாக தெரிகிறது.

அதற்கு மறுப்பு தெரிவித்ததால் கொலை செய்திருக்கிறார் என சந்தேகிப்பதாக கூறியுள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மகளுக்காக பொலிஸார் முன் மனைவியை சுட்டுக்கொன்ற கணவன் : நேரில் பார்த்ததும் துடிதுடித்து கதறிய பெண்!!

மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்

அமெரிக்காவில் பொலிஸ் நிலையம் முன் வைத்து மனைவியை சுட்டுக்கொலை செய்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த ப்ரெண்டா ரெடெரியா (27) என்கிற தாய், கணவனிடம் இருக்கும் மகளை வாங்குவதற்காக பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு குழந்தையுடன் வந்த ஜேக்கப் மூன் (30), பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் தன்னுடைய மனைவியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென கையில் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து மனைவியை சுட்டுக்கொலை செய்துவிட்டு அங்கிருந்த ஒரு காரில் தப்பியுள்ளார் .

இந்த சத்தம் கேட்டு பொலிஸ் நிலையத்திலிருந்து வேகமாக வெளியில் வந்த பொலிஸார், தப்பி சென்ற ஜேக்கப்பை தீவிரமாக தேட ஆரம்பித்தனர். 3 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் குற்றவாளியை கைது செய்தனர்.

இதற்கிடையில் குற்றவாளியின் பேஸ்புக் பக்கத்தை சோதனை செய்யும்போது, “என்ன நடந்தாலும், நான் உன்னை விட்டுக்கொடுக்க மாட்டேன்” என குழந்தையின் புகைப்படத்துடன் பதிவிட்டிருப்பதை பார்த்தனர். அதேசமயம் குற்றவாளி 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு வழக்கில் கைது செய்யப்ட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியமான ப்ரெண்டாவின் உறவினர் பெண், குழந்தை மாற்றிக்கொள்ள முதலில் ஹாதோர்ன் பகுதியை தான் தேர்வு செய்தோம். இந்த இடம் இருவரின் வீட்டிலிருந்து சமதொலைவில் உள்ளது. ஆனால் கணவரின் மீது இருந்த பயத்தால் தான் இடத்தை மாற்றினார் என தெரிவித்துள்ளார்.