யாழில் ஆசிரியர்களை கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்தியதாக கூறி சர்ச்சையில் சிக்கிய அதிகாரி!!

சர்ச்சையில் சிக்கிய அதிகாரி

வடமாகாணக் கல்வி அமைச்சுக்கு உட்பட்ட தீவகக் கல்வி வலயத்தின் பணிப்பாளருக்கு எதிராக இரு பெண் உத்தியோகத்தர்கள் தமது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

அண்மையில் தீவகக் கல்வி வலயத்தில் பணிப்பாளருக்கும், சக உத்தியோகத்தர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பாக தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இதில் உத்தியோகத்தர்கள் அனைவரும் தமக்கு ஏற்பட்ட அநீதிகள் தொடர்பாக விசாரணைக் குழுவிடம் விபரமாக எடுத்துரைத்து வருவதோடு, தொடர்ந்தும் கடமையாற்ற மறுத்து வருகின்றனர். அவர்கள் அதற்கான காரணங்களை ஆவணங்களுடன் சமர்ப்பித்துள்ளனர்.

தமது அலுவலகத்திற்கு இரு பெண் உத்தியோகத்தர்களை அழைத்த வலயக்கல்விப் பணிப்பாளர் தனக்கு முன்னால் இருவரையும் கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்தியுள்ளதாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. இதற்கு மறுப்புத் தெரிவித்த உத்தியோகத்தர்கள் தொடர் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி விசாரணையில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் ஆதாரங்களுடன் வெளிவரவுள்ளதோடு, நடைபெறும் விசாரணை அதற்கான தீர்வாக அமையாவிட்டால் பாரதுரமான விளைவுகளை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சே சந்திக்க நேரிடும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.

நடைபெறும் விசாரணைகள் மிகவும் நேர்த்தியாகவும், பொறுமையாகவும் நடைபெறும் என்பதில் சங்கம் அதீத நம்பிக்கை கொண்டுள்ளது.

-தமிழ்வின்-

என் மனைவியை நான் தாக்கினேன் : எவரும் கேள்வி கேட்க முடியாது : நடிகை பியூமி ஹங்சமாலியின் கணவன்!!

பியூமி ஹங்சமாலி

பியூமி ஹங்சமாலி தனது மனைவி எனவும் இதனால், அவரை தாக்கியது குறித்து எவரும் கேள்வி கேட்க முடியாது எனவும் அவரது கணவரான வேநுர ஹேஷான் என்பவர் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய வீடியோ பதிவு குறித்து தனது முகநூலில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார். சுற்றி இருப்பவர்கள் குழப்பமடைந்தால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நான் எனது மனைவியை தாக்கினேன் நீங்கள் ஏன் குழம்புகிறீர்கள்.

இலங்கையில் எவனும் மனைவியை தாக்கியதே இல்லையா…? இந்த சம்பவம் ஒரு வருடத்திற்கு முன்னர் நடந்தது. இன்று நேற்று நடந்தது போல் பேசுகின்றனர். இது எமது குடும்ப பிரச்சினை முழு இலங்கையும் தலையிட வேண்டாம்.

பியூமி எப்படிப்பட்ட பெண் என்பதை உலகம் எனக்கு கற்றுக்கொடுக்க தேவையில்லை. பல வருடங்களாக நான் அவளுடன் வாழ்கிறேன். உலகத்திற்கு தேவையான வகையில் நாம் எவரும் வாழ்வதில்லை. எமக்கென்று தேவையான வகையில் நாம் வாழ்கிறோம் என வேநுர ஹேஷான் தனது முகநூல் பதில் குறிப்பிட்டுள்ளார்.

பேரூந்து விபத்தில் 06 பேர் படுகாயம்!!

பேரூந்து விபத்தில்..

ருவான்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அவிசாவளை – கேகாலை பிரதான வீதியின் கரவனெல்ல பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 06 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக ருவான்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (11.04.2019) காலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ருவான்வெல்லையிலிருந்து அவிசாவளையில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றுக்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு பயணித்த போது வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததினால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

விபத்தில் பஸ் சாரதி உட்பட 06 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பியுள்ளனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவான்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

48 மணி நேரத்தில் சூரியனையே விழுங்கிவிடும் அதிசக்தி : முதல்முறையாக வெளியான அதிர்ச்சி ஆதாரங்கள்!!

சூரியனையே விழுங்கிவிடும் அதிசக்தி

வானில் நிகழும் அதிசயங்களில் ஒன்றான கருந்துளை குறித்த புகைப்படங்களை வெளியிட்டு, விஞ்ஞானிகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதுவும் இரண்டு கருந்துளைகளை கண்டறிந்துள்ளனர்.

நாம் வாழும் சூரியக் குடும்பம் உட்பட ஒட்டுமொத்த அண்டத்தையும் தனது ஈர்ப்பு சக்தியால் விழுங்கிவிடும் வல்லமை பெற்றவை கருந்துளை. இதுகுறித்து வானியல் அறிஞர்கள் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் முதல்முறையாக கருந்துளையை புகைப்படம் எடுத்து, அதனை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

இது விண்வெளி குறித்த ஆய்வில் மைல்கல் என்று கூறப்படுகிறது. இந்தப் புகைப்படத்தில் கருப்பு நிற மையப்பகுதி, ஆரஞ்சு நிற வளையம் போன்ற பகுதி, அதில் வெள்ளை நிற வெப்பமான வாயு ஆகியவை இடம்பெற்றுள்ளன.

18ஆம் நூற்றாண்டு முதல் கருந்துளைகள் குறித்து வானியல் அறிஞர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால் ஒருமுறை கூட தொலைநோக்கியில் கருந்துளை தென்படவில்லை. இந்நிலையில் தற்போது இரு கருந்துளைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதில் ஒன்று, M87 என்ற கேலக்ஸியில் இருந்து 50 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் காணப்படுகிறது. இதனை பல்வேறு ரேடியோ தொலைநோக்கிகள் உதவியுடன் படம்பிடித்துள்ளனர். இந்த கருந்துளை இருக்கும் தொலைவை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என்று பிரான்ஸ் நாட்டு வானியல் அறிஞர் பிரடெரிக் குத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு கருந்துளை சகிட்டரியஸ் ஏ ஆனது, நாம் வாழும் புவியில் இருந்து 26,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது. குறிப்பாக நாம் வாழும் பால்வளித்திரளின் மையப்பகுதியில் உள்ளது. இது ஈவண்ட் ஹாரிசன் டெலஸ்கோப் மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு அற்புதமான விஞ்ஞான சாதனை என்று ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி வானியல் அறிஞர் பால் மெக்நமரா தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 2017ல் இருந்து தொடர்ச்சியாக 8 ரேடியோ தொலைநோக்கிகள் ஹவாய், அரிசோனா, ஸ்பெயின், மெக்சிகோ, சிலி, தென் முனைப் பகுதியில் இருந்து ஆய்வு மேற்கொண்டு சகிட்டரியஸ் ஏ, M87 ஆகிய கருந்துளைகளை படம்பிடித்துள்ளன.

தொடைப்பகுதியுள்ள கொழுப்பை எளிதில் கரைக்கும் வேண்டுமா? இந்த பயிற்சியை மட்டும் செய்திடுங்கள்!!

தொடைப்பகுதியுள்ள கொழுப்பை எளிதில் கரைக்க

பொதுவாக சிலருக்கு தொடைகளில் அதிகப்படியான தசைகள் காணப்படும். இதனை கரைப்பதற்காக பலரும் பல வகையில் கடினமான உடற்பயிற்சிகளை செய்து கொண்டு தான் வருகின்றார்கள்.

இருப்பினும் தொடைகளை உறுதிப்படுத்தும் பயிற்சிகளைக் பல இருந்தாலும் சில பயிற்சிகள் விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியவை ஆகும் அவ்வகையில் தொடையில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்க கூடிய பயிற்சி ஒன்றினை இங்கு பார்ப்போம்.

லையிங் சைடு லெக் ரைஸ் (Lying side leg raise) : இந்த பயிற்சி செய்ய முதலில் தரையில் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். வலது கையைத் தலைக்கு மேல் நீட்டி, அதன் மீது தலையை வைத்துக்கொள்ள வேண்டும். இடது கையை முட்டிவரை மடித்து, வலது பக்கமாக தரையில் பதிக்க வேண்டும்.

வலது காலை சற்று மடித்து முன்புறமாக வைக்க வேண்டும். இடது காலை மட்டும் மேலே உயர்த்தி, ஐந்து விநாடிகள் இந்த நிலையில் இருக்க வேண்டும்.

பின்னர், படிப்படியாக பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல 15 முறை செய்துவிட்டு, இடது பக்கத்துக்கும் செய்ய வேண்டும். நன்கு பழகிய பின்னர் எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம். இந்த பயிற்சியினை செய்வதனால் தொடையின் பக்கவாட்டுப் பகுதி வலுவடையும். பக்கவாட்டில் இருக்கும் தசைகள் இறுகும். தொடைப் பகுதியில் உள்ள கொழுப்பு கரையும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள எச்சரிக்கை!!

மைத்திரிபால சிறிசேன

ஒரு நாடு என்ற வகையில் நாம் முன்னோக்கி பயணிப்பதற்கு ஊடக சுதந்திரத்தைப் போன்றே ஊடகங்கள் பொறுப்புடன் செயற்படுதலும் முக்கியமாகுமென ஜனாதிபதி தெரிவித்தார். அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கிடையே காணப்படும் பிரிவினை நாடு என்ற வகையில் முன்னோக்கி பயணிப்பதற்கு ஒருபோதும் பொருத்தமானதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதி ஊடக விருது விழாவின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “விமர்சனங்களைப் போன்றே சிறந்த சமூகமொன்றிற்கான கலந்துரையாடல்களும் கருத்தாய்வுகளும் முக்கியமானவையாகும்.

இன்று தனிப்பட்ட பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்கள் ஊடாக தமக்கெதிரான கருத்துக்களை சிலர் வெளியிட்டு வருகின்றனர். அதனூடாக ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பட்டியலில் அவர்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களை விட முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களையும் கோட்பாடுகளையும் சந்திக்க நேரிடலாம் என்பதை அவர்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

பல்வேறு அவதூறான கருத்துக்களை தமக்கு எதிராக தெரிவித்துவரும் நிலையிலும் ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பெரிதும் மதிக்கின்ற, அவற்றை நாட்டிற்கு பெற்றுக்கொடுக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தலைவர் என்ற வகையில் தான் அமைதியாக இருந்தபோதிலும் மாற்றத்தினூடாக எதிர்பார்க்கும் கதாபாத்திரம் அவ்வாறு அமைதியாக இருக்காது என்பதை கடந்த சில தசாப்தங்களாக நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களின் அனுபவங்களினூடாக புரிந்துகொள்வது சிரமமானதல்ல.

ஆகையினால் ஊடகங்களின் பொறுப்பாக அமைய வேண்டியது, விமர்சனங்கள், எதிர்ப்புக்கள், கலந்துரையாடல்கள் மற்றும் சிறந்த ஒழுக்கமான சமூகத்தை நோக்கிய பயணத்திற்கு பலமாக செயற்படுவதாகும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

மலையகத்தில் அடைமழை : நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு : மகிழ்ச்சியில் மக்கள்!!

மலையகத்தில் அடைமழை

இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் வரட்சி நிலவி வருவதால் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.இந்நிலையில் இலங்கையின் சில பகுதிகளில் நேற்று அடைமழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மத்திய மலைநாட்டின் பல பகுதிகளில் அடைமழை பெய்துள்ளது. நேற்று மதியம் 1.30 மணியளவில் 3.00 மணி வரை பொகவன்தலாவை, நோர்வுட், மஸ்கெலியா மற்றும் ஹட்டன் ஆகிய பகுதிகளில் அடைமழை பெய்துள்ளது.

அடைமழை காரணமாக மின் நிலையங்களுக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் ஓரளவு அதிகரித்துள்ளது. காசல்ரீ மற்றும் மவுசாலை பகுதிகளில் கடும் வரட்சியை தொடர்ந்து மழைய பெய்ய ஆரம்பித்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடும் வரட்சி காரணமாக மின்சார உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை பல பகுதிகளில் நீர் விநியோக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அடைமழை பெய்ய ஆரம்பித்துள்ளமை குறித்து பல தரப்பினரும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் கொடூரமாக தாக்கப்பட்ட நடிகை : உண்மை வெளியானது!!

கொடூரமாக தாக்கப்பட்ட நடிகை

இலங்கையில் பிரபல சிங்கள நடிகை, சிலரினால் கொடூரமாக தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்து. இந்நிலையில் அந்தக் காணொளியில் தாக்குதலுக்கு உள்ளானது நான் தான் என நடிகை பியுமி ஹன்சமாலி தெரிவித்துள்ளார்.

எனினும் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் என்னை சிலர் கொடூரமாக தாக்கினர் என அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். தற்போது யாரோ அதனை இணையத்தில் கசிய விட்டுள்ளதாக ஹன்சமாலி தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதா என்பதை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். என்ன நோக்கத்திற்காக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதனை செய்தவர்கள் யார் என்பதையும் அவர் வெளிப்படுத்த விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த தாக்குதல் காணொளியை பார்வையிட்ட ராஜாங்க அமைச்சரும் நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க அதனை கண்டித்திருந்தார். பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்திர இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தனது பேஸ்புக் பக்கத்தில் அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பிய பெண்ணுக்கு காத்திருந்த பேரிடியான தகவல்!!

அகதியாக இந்தியா சென்றிருந்த நிலையில், தாயகம் திருப்பியுள்ள பெண் ஒருவருக்கு சொந்தமான காணியில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளமையால் அந்த பெண் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா கனகராயன்குளம் பொலிஸ்நிலையத்திற்கு அருகாக பௌத்தவிகாரை ஒன்று அமைக்கபட்டுள்ளது. குறித்த விகாரைக்கு பின்புறமாக அமைந்துள்ள காணியில் விகாரையை பராமரித்து வரும் பிக்கு மற்றும் சிலர் தங்குவதற்கான இரண்டு தங்கு விடுதிகள் அமைக்கபட்டுள்ளது.

குறித்த கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ள 3 ஏக்கர் காணியானது தனக்கு சொந்தமானது என்றும் அதனை துப்புரவாக்க சென்ற போது அருகில் நிலைகொண்டுள்ள ராணுவத்தினர் அதற்கு தடைகளை ஏற்படுத்தி வருவதாக குறித்த காணியினை உரிமைகோரும் பெண் ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில், நான் போர்ச் சூழல் காரணமாக 2006 ஆம் அண்டு குடும்பத்துடன் இந்தியாவிற்கு அகதியாக சென்றிருந்தேன். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு மீண்டும் இலங்கைக்கு நாடு திரும்பியிருந்தேன். எனது காணியினை பார்க்கச்சென்ற போது அங்கு இரு கட்டிடங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

எனினும் நான் எனது காணியினை துப்புரவாக்க முயற்சித்தபோது அருகில் இருந்த ராணுவத்தினர் அதற்கு தடைகளை ஏற்படுத்தி அச்சுறுத்தியிருந்தனர்.

தற்போது வீட்டுதிட்டம் கிடைக்க பெற்றுள்ளநிலையில் காணிப்பிரச்சினை காரணமாக வீட்டை அமைக்கமுடியாமல்உள்ளது. குறித்த கட்டிடம் அமைக்கபட்டுள்ள இடத்திற்கு பின்புறமாக உள்ள பகுதியில் எனக்கு காணி தருவதாக வவுனியா வடக்கு பிரதேச் செயலர் தெரிவிக்கின்றார். அது காட்டுபகுதியாக உள்ளது அங்கு எம்மால் வசிக்கமுடியாது என்று குறித்த பெண் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அப்பெண்ணால் வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கபட்டிருந்த நிலையில் நேற்று விசாரணை நடைபெற்றிருந்தது. இதன்போது அருகில் இருந்த ராணுவ முகாமின் பொறுப்பதிகாரி மற்றும் 56 ஆவது படைபிரிவின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி, பிரதேசசெயலக உத்தியோகத்தர் ஆகியோர் ஆணைக்குழுவால் விசாரணைக்கு அழைக்கபட்டிருந்தனர்.

இதன்போது எந்த அடிப்படையில் குறித்த காணி விடயத்தில் நீங்கள் தலையிடுகிறீர்கள் என விசாரணை அதிகாரிகளினால் ராணுவத்தினரிடம் கோரப்பட்டிருந்தது. இதன்போது தாம் அவர்களை அச்சுறுத்தவில்லை என்றும் பௌத்த பிக்கு ஒருவர் குறித்த விகாரை அமைந்துள்ள காணியினை பராமரித்து தருமாறு எம்மை கோரியமைக்கு அமைவாகவே நாம் அதனை பராமரித்து வந்தோம்.

எனினும் காணி தொடர்பான அதிகாரங்கள் எமக்கு இல்லாதபடியால் குறித்த விடயத்தில் இருந்து நாம் முழுமையாக ஒதுங்கிகொள்வதாக தெரிவித்ததுடன், அதனை ராணுவத்தினர் எழுத்துமூலமும் வழங்கியிருந்ததாக மனிதஉரிமை ஆணைக்குழு தெரிவித்தது.

இதேவளை இவ்விடயம் தொடர்பாக வவுனியா வடக்கு பிரதேச்செயலர் க. பரந்தாமனிடம் கேட்டபோது குறித்த காணிபிரச்சினை தீர்கபட்டுள்ளதாகவும் குறித்த கட்டிடம் அமைக்கபட்டுள்ள இடத்திற்கு பின்புறமாக அமைந்துள்ள காணி குறித்த பெண்ணுக்கு வழங்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனினும் அது தமது விருப்பத்திற்கு மாறாகவே தரப்பட்டுள்ளதாக குறித்தகாணியினை உரிமைகோரும் பெண் மனிதஉரிமை ஆணைக்குழுவில் எழுத்து மூலம் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா மனிதஉரிமை ஆணையத்தில் கடமையில் இருந்த அதிகாரியான சட்டதரணி லீனஸ் வசந்தராஜாவிடம் கேட்டபோது. முறைப்பாட்டாளரான பெண் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர் என்ற ரீதியில் இவ்விடயத்தில் நாம் ஆளமான கரிசனைகொண்டுள்ளோம்.

இவ்விடயத்தில் பிரதேச செயலகமே சரியான முடிவை வழங்கவேண்டும். பௌத்தவிகாரை அமைக்கபட்டுள்ள 5 ஏக்கர்அளவான காணியானது 2010 ஆம் ஆண்டளவில் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தால் பௌத்தவிகாரை அமைப்பதற்கு வழங்கபட்டுள்ளது. எனினும் அதற்கான உரிமை பத்திரங்கள் வழங்கபடவில்லை.

2010 ம் ஆண்டளவில் மீள் குடியேற்றசெயற்பாடுகள் ஆரம்பிக்கபட்டிருந்த நிலையில் அந்தக் காணியின் உரித்து தொடர்பாக முறையாக ஆராயாமல் பிரதேச்செயலகத்தால் விகாரை அமைப்பதற்காக அது வழங்கபட்டுள்ளது.

எனவே இவ்விடயத்தில் காணியினை உரிமைகோரும் பெண்ணின் சம்மதத்துடன் அவர் விரும்புகின்ற தீர்வை வழங்குவதற்கு பிரதேச்செயலகம் ஒத்துழைக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக பிரதேச செயலகத்திற்கு மனித உரிமை ஆணைக்குழுவால் கடிதம் ஒன்றும் அனுப்ப படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

நண்பனின் தாயை மணக்க விரும்புவதாக 300 முறை கூறிய இளைஞன் : அதற்கு அப்பெண் என்ன கூறினார் தெரியுமா?

நண்பனின் தாயை மணக்க விரும்பும் இளைஞன்

அமெரிக்காவில் தனது நெருங்கிய நண்பனின் அம்மாவை தீவிரமாக காதலிக்கும் 18 வயது இளைஞர் அவரை மணக்கவுள்ளார். சேஸ் கேபர்ட் (18) என்ற இளைஞரும் ஜேயிஸ் என்பவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள். ஜேயிஸின் தாய் ஜெயிமி பிரவுன் (39)-ஐ சேஸ் அடிக்கடி பார்த்த நிலையில் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

தன்னை விட 21 வயது அதிகமானவர், தனது நெருங்கிய நண்பனின் அம்மா என்பதை எல்லாம் மீறி பிரவுனை சேஸ் தீவிரமாக காதலித்து வருகிறார்.

தன்னை பிரவுன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என இதுவரை அவரிடம் 300 முறை கேட்டுள்ளார் சேஸ். இதற்கு பிரவுன் ஒப்பு கொண்டார். இது குறித்து பிரவுன் கூறுகையில், எனக்கு ஜேயிஸ் உட்பட மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

நான் சேஸ்-ஐ காதலிப்பது அவர்களுக்கு தெரியும், அவர்களின் சம்மதம் தான் எனக்கு முக்கியம். என் முதல் கணவரை விவாகரத்து செய்ய நான் காத்திருக்க வேண்டும், பின்னர் சேஸை திருமணம் செய்து கொள்வதற்கான அழகான திட்டம் வைத்துள்ளேன்.

என்னையும் சேஸையும் ஒன்றாக பார்க்கும் போது பலரும் தாய் – மகன் என நினைத்து விடுகிறார்கள், அது குறித்து கவலையில்லை என கூறியுள்ளார். சேஸ் தனது நெருங்கிய நண்பர் ஜேயிஸின் தாய் பிரவுனை காதலிப்பதால் அவர்களின் நட்பில் எந்தவொரு விரிசலும் ஏற்படவில்லை, நாங்கள் எப்போதும் போல நல்ல நண்பர்களாக இருப்போம் என இருவரும் கூறியுள்ளனர்.

வைரல் வீடியோவுக்காக இளைஞர்கள் செய்த செயல் : விபரீதமானதால் உயிரிழந்த நபர்!!

இளைஞர்கள் செய்த செயல்

வேடிக்கை வைரல் வீடியோ ஒன்றை உருவாக்குவதற்காக இரண்டு இளைஞர்கள் ஒருவரை ஆற்றில் பிடித்துத் தள்ள, நீச்சல் தெரியாத அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உக்ரைனில் நடைபெற்றுள்ளது.

உக்ரைனின் Dnipro நதியின் மேல் அமைந்துள்ள ஒரு ஹோட்டலின் ஓரத்தில் நிற்கும் அந்த 48 வயது மனிதரை தாக்கும் அந்த இளைஞர்கள், வேடிக்கை வீடியோ ஒன்றிற்காக அதை படம் பிடித்துள்ளனர்.

பின்னர் திடீரென அவரை நதியில் பிடித்து அவர்கள் தள்ள, 12 அடி உயரத்திலிருந்து அவர் கீழே விழுந்திருக்கிறார். அவருக்கு நீச்சல் தெரியாது என்பதால் தண்ணீரில் தத்தளித்த அவர் சற்று நேரத்தில் பரிதாபமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கிறார்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றாலும், விரைந்து செயல்பட்ட பொலிசார் அந்த இளைஞர்கள் இருவரையும் கைது செய்தனர்.

பின்னர் பொலிஸ் அதிகாரி ஒருவர், முன்பின் தெரியாத நபர் ஒருவரை ஆற்றில் பிடித்துத் தள்ளி அதை தங்கள் மொபைல் போனில் படம் பிடித்த, 1993 மற்றும் 1996இல் பிறந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

குளிக்கும்போது கைத்தொலைபேசியில் பேசிய அழகிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

குளியல் தொட்டிக்குள் படுத்துக் கொண்டு செல்போன் பேசிய ஒரு அழகிய இளம்பெண் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

Anastasia (20) என்ற ரஷ்யாவைச் சேர்ந்த அந்த இளம்பெண் குளிக்கச் சென்றிருக்கிறார். பின்னர் வெகு நேரமாக பாத்ரூமிலிருந்து சத்தம் எதுவும் வராமல் போகவே, சந்தேகமடைந்த Anastasiaவின் தாய் Oksana (48) மகளை சென்று பார்த்திருக்கிறார்.

அங்கு ஒரு கையில் சாக்கெட்டில் இணைக்கப்பட்ட மொபைல் போனுடனும் மறு கையில் குளியல் தொட்டிக்கான பிளக்குடனும் தொட்டிக்குள் சுய நினைவின்றி கிடந்திருக்கிறார் Anastasia.

அவர் மயங்கிக் கிடப்பதாக நினைத்து ஆம்புலன்சை அழைத்திருக்கிறார் Anastasiaவின் தாய்.விரைந்து வந்த மருத்துவ உதவிக்குழுவினர், Anastasia ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்க, அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார் Oksana. ரஷ்யாவில் சமீபத்தில், குளிக்கும்போது போன் பேசி உயிரிழந்த ஐந்தாவது நபர் Anastasia என்பது குறிப்பிடத்தக்கது.

வீதியை விட்டு விலகிய ஜீப் வண்டி : இளைஞர் பலி, ஆறு பேர் படுகாயம்!!

இளைஞர் பலி

அநுராதபுரம் – ராம்பேவே – கினிகட்டுவெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜீப் வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதி நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்துள்ளவர் அநுராதபுரம் – கோனேவ பகுதியை சேர்ந்த 17 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள், ராம்பேவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் மிதிவெடிகள் மீட்பு!!

மிதிவெடிகள் மீட்பு

வவுனியா மாமடுவ பகுதியிலுள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து நேற்று(09.04) மாலை 13 மிதி வெடிகளை பொலிஸார் மீட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை தனது காணியை பைக்கோ இயந்திரத்தின் உதவியுடன் துப்பரவுப்பணி மேற்கொண்ட காணியின் உரிமையாளர் அப்பகுதியில் மிதி வெடிகள் காணப்பட்டுள்ளதை அவதானித்துள்ளார்.

இதையடுத்து வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் பாதுகாப்பு வலயத்தினை ஏற்படுத்தியதுடன் மாமடுவ விஷேட அதிரடிப்படைமயினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இன்றைய தினம் நீதிமன்ற அனுமதியைப் பெற்றுக்கொண்டு மீட்கப்பட்ட ஜொனி மிதிவெடிகள் எனச் சந்தேகிக்கப்படும் வெடிபொருளை அழித்தொழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

நோர்வூட் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் தாழிறக்கம் : மக்கள் அச்சம்!!

குடியிருப்பு பகுதிகளில் தாழிறக்கம்

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் நகரின் விகாரைக்கு அருகில் காணப்படும் குடியிருப்பு பகுதிகளில் தாழிறக்கம் ஏற்பட்டதில் அப்பிரதேசத்தில் உள்ள இரண்டு வீடு பாதிக்கப்பட்டுள்ளது.

நோர்வூட் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பிற்பகல் வேளையில் பெய்து வரும் மழை காரணமாகவே இத்தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பகுதியில் ஒரு வீட்டில் இரண்டு அறைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, மற்றுமொரு வீட்டில் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அத்தோடு சுவர்களும் இடிந்து வீழ்ந்துள்ளது.

இதில் உயிராபத்துகள் எதுவும் ஏற்படவில்லை எனவும், பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் இப்பிரதேச கிராம சேவகர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் சமுர்த்தி விற்பனைக் கண்காட்சி!!

விற்பனைக் கண்காட்சி

புதுவருடத்தை முன்னிட்டு சமுர்த்தி விற்பனை கண்காட்சி வவுனியா பிரதேச செயலகத்துக்கு முன்பாக பிரதேச செயலாளர் கா.உதயராஜா தலைமையில் இன்று நடைபெற்றது.

புதுவருடத்தை முன்னிட்டு மக்களுக்கு தேவையான அனைத்து பாரம்பரிய உள்ளூர் உற்பத்திப் பொருட்களை ஒரேஇடத்தில் மலிவுவிலையில் பெற்றுக்கொள்ளும்படியாக சமுர்த்தி பயனாளர்களினால் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மரக்கறி, பழவகை, தானியவகைகள், ஆடை அணிகலன்கள், கைவினைப்பொருட்கள், பனை உற்பத்திப் பொருட்கள் போன்றன காட்சிப்படுத்தப்படுவதுடன் விற்பனை செய்யப்பட்டும் வருகிறன்து.

நிகழ்வில் முதன்மை விருந்தினராக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக உதவி பிரதசே செயலாளர் ச.பிரியதர்சினி, சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் திருமதி ச.சந்திரகுமார், வடமாகாண தொழில்திணைக்களத்தினர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.