வவுனியாவில் வரலாறு காணாத வெப்பநிலை!!

வரலாறு காணாத வெப்பநிலை

வவுனியா கலைமகள் சனசமூக நிலைய புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் அனைத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளன. வவுனியா கலைமகள் சனசமூக நிலையத்தினால் வருடா வருடம் புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்படும் விளையாட்டுக்கள் அனைத்தும் கடுமையான வெளில் காரணமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக வவுனியாவில் வரலாறு காணாத வெப்பநிலை மற்றும் கடும் வரட்சி காரணமாகவே குறித்த போட்டிகள் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை குறித்த விளையாட்டு நிகழ்வு பிறிதொரு தினத்தில் இடம்பெறுமென நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் நிலவி வருவதுடன். வெப்பநிலை 40 பாகை செல்சியஸை அண்மித்துள்ளது. இதனால் வயதானவர்கள் குழந்தைகள் உட்பட மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கிளிநொச்சியில் கடும் வறட்சி : 970 குடும்பங்கள் பாதிப்பு!!

கிளிநொச்சியில் கடும் வறட்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சி காரணமாக கண்டாவளை மற்றும் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுகளில் 970 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் வறட்சி நிலமைகள் தொடர்பாக ஆராயபட்ட போது தற்போது ஏற்பட்டிருக்கின்ற அதிகூடிய வெப்பநிலை மற்றும் வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் 970 குடும்பங்களைச்சேர்ந்த 3243 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, கண்டாவளைப்பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் 65 குடும்பங்களை சேர்ந்த 220 பேரும், பூநகரி பிரதேசத்தில் 905 குடும்பங்களை சேர்ந்த 3023 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 473 குடும்பங்களை சேர்ந்த 1487 பேருக்கான குடிநீர் விநியோகம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞருக்கு நேர்ந்துள்ள பரிதாபம்!!

இளைஞருக்கு நேர்ந்துள்ள பரிதாபம்

திருகோணமலையில், சேருநுவர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கலப்பு பகுதியில் நீராட சென்ற இளைஞர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் சூரநகர், வெருகல் முகத்துவாரம் பகுதியை சேர்ந்த ராஜா சதீஷ் (25 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார். சூரநகர் கலப்பு பகுதிக்கு தமது நண்பர்கள் ஏழு பேருடன் குறித்த இளைஞர் நீராட சென்ற போது, அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் அவருடைய சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளதுடன், இதனையடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் களைகட்டியுள்ள தமிழ் சிங்களப் புத்தாண்டு!!

தமிழ் சிங்களப் புத்தாண்டு

வவுனியாவில் தமிழ் சிங்களப் புத்தாண்டினை முன்னிட்டு வவுனியா நகரம் முழுவதும் களை கட்டியுள்ளது.

பிறக்க இருக்கும் தமிழ், சிங்கள புத்தாண்டினை கொண்டாடும் முகமாக வவுனியா நகர் முழுவதும் வெளி மாவட்டங்களிலிருந்தும் மக்கள் வருகைதந்து புத்தாண்டுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.

மேலும் வாகன நெரிசல் காரணமாக பாதுகாப்புப் பொலிசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் வவுனியா பழைய பேரூந்து நிலையம், மணிக்கூட்டு கோபுர சந்தியடி, அங்காடி வியாபாரி நிலையம், புகையிரத வீதியில் பொதுமக்களின் நடமாட்டம் வழமை போன்றே காணப்படுகின்றது.

வவுனியாவில் நண்பகல் வேளையில் கடும் வெயில் வாட்டி எடுக்கின்றபோதும் பெருமளவிலான மக்கள் வவுனியா நகரில் புத்தாண்டு கொள்வனவில் ஈடுபடுவதை காணக்கூடியதாக உள்ளது.

நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் : உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும்!!

டெங்கு நோய்

நாடளாவிய ரீதியில் ஜனவரி முதல் ஏப்ரல் 10ஆம் திகதி வரையான காலப்பகுதியில் டெங்கு நோய் காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதாக தொற்றுநோய் பிரிவு அறிவித்துள்ளது. மேலும், 13,505 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பான தொற்றுநோய் பிரிவின் செய்தியில் மேலும்,

மாவட்ட ரீதியாக டெங்கு நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர். இதற்கமைவாக கொழும்பு மாவட்டத்தில் 2,998 டெங்கு நோயாளர்களும், இதற்கு அடுத்தபடியாக கம்பஹா மாவட்டத்தில் 1,703 டெங்கு நோயாளர்களும்,

இதற்கும் அடுத்தபடியாக யாழ்ப்பாணத்தில் 1,676 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனினும் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

எவருக்காவது காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும் என நாட்டு மக்களுக்கு வைத்திய நிபுணர்களால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா மன்னார் தனியார் பேரூந்தில் பயணிக்கும் மக்களின் அவலநிலை!!

பேரூந்தில் பயணிக்கும் மக்களின் அவலநிலை

வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி பயணிக்கும் தனியார் பேரூந்தில் கோழிக்குச்சுகளை ஏற்றிச்செல்வதினால் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி இன்று (12.04.2019) காலை 6 மணிக்கு புறப்பட்ட தனியார் பேரூந்தின் பின்புறமாகவுள்ள ஆசனங்களில் கோழிக்குச்சுகளை ஏற்றிச் செல்வதினால் பயணிகள் துர்நாற்றத்தினை சுவாசிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

காற்றின் காரணமாக கோழிக்குஞ்சுகளின் எச்சங்கள் பேரூந்துகளில் வீசப்பட்டு கால்களில் மிதிபட்டுவதினால் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். அத்துடன் முதியவர்கள், பொதுமக்கள் ஆசனங்கள் இன்மையினால் நின்றபடியே தங்களது பிரயாணத்தினை தொடர்ந்தனர்.

இத் தனியார் பேரூந்து பிரயாணிகள் பேரூந்தா அல்லது கோழிக்குச்சுகளை ஏற்றிச்செல்லும் வாகனமா என பயணிகள் கேள்வியெழுப்பினார்கள்.

வவுனியாவில் என்ரபிறைஸ் ஸ்ரீலங்கா என்னும் சலுகைக் கடன் திட்டம் தொடர்பில் விழிப்புணர்வு!!

விழிப்புணர்வு

வவுனியாவில் என்ரபிறைஸ் ஸ்ரீலங்கா என்னும் சலுகைக் கடன் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை ஒன்று நேற்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்டது. 2025ம் ஆண்டு வளமான நாடு என்னும் தொனிப்பொருளில் நிதி அமைச்சினால் என்ரபிறைஸ் ஸ்ரீலங்கா என்னும் விசேட சலுகைக் கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் கீழ் வட்டி முழுவதையும் அரசாங்கம் செலுத்தும் வகையில் மாத்ய அருண, திரிசவிய, எரம்புவ கடன் திட்டங்களும், வட்டியில் முக்கால்வாசியை அரசாங்கம் செலுத்தும் வகையில் ரியசக்தி, கொவிநவோதய கடன் திட்டங்களும், வட்டியில் அரைவாசியை அரசாங்கம் செலுத்தும் வகையில் ரன் அஸ்வென்ன, ஜய இசுர உள்ளிட்ட பல்வேறு கடன் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள், பண்ணையாளர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள், பட்டதாரிகள், பெண்கள் என பலரும் இதனை பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சலுகைக் கடன் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையை நிதி அமைச்சு கடந்த 50 நாட்களாக மேற்கொண்டு வருகின்றது.

50 நாளின் இறுதி தினமான இன்று வவுனியா நகரில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இளைஞர், யுவதிகள் இந்த சலுகைகக் கடன் திட்டம் தொடர்பான சுலோக அட்டைகளை ஏந்தியவாறும் கோசங்களை எப்பியவாறும் வெற்றியின் பேரணி என்னும் பெயரில் நகர வீதியில் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டதுடன் கடன் திட்டம் தொடர்பான துண்டு பிரசுரங்களையும் விநியோகித்து இருந்தனர்.

வவுனியா வடக்கு பிரதேச சபையில் கடும் வாக்குவாதம் : த.தே.ம. முன்னணி வெளிநடப்பு!!

த.தே.ம. முன்னணி வெளிநடப்பு

வவுனியா வடக்கு பிரதேசசபையின் இன்றைய அமர்வில் இருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். வவுனியா வடக்கு பிரதேசசபையின் அமர்வு இன்று (11.04) நெடுங்கேணி பிரதேசசபை மாநாட்டு மண்டபத்தில் சபையின் தலைவர் ச.தணிகாசலம் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது சபையில் கடந்த கூட்ட அறிக்கை முன்வைக்கப்பட்ட போது, அறிக்கையில் தவறிருப்பதாக ஒரு சில உறுப்பினர்கள் தெரிவித்ததன் அடிப்படையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன்போது பதினான்கு உறுப்பினர்கள் கூட்ட அறிக்கை பிழையானது என வாக்களித்தமைக்கு அமைவாக அறிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதன் பின்னர் உறுப்பினர்களிற்கான நேர ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதன் போது பல்வேறுபட்ட கருத்து முரண்பாடுகள் சபையில் ஏற்பட்டது. தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் சஞ்சுதன் தனது கருத்திலே,

தங்களது பிரேரணைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்றும், தங்களது வட்டாரத்திற்கான அபிவிருத்தி செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும், தவிசாளர் பக்கசார்பாக செயற்படுகிறார் என்றும் கருத்து தெரிவித்ததற்கு அமைவாக தவிசாளருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது.

இதனால் இச்சபை நடவடிக்கையில் இருந்து தாம் வெளியேறுவதாக கூறி சபையை விட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களான வி.சஞ்சுதன், நிரஞ்சினி, விஜிகரன் ஆகியோர் வெளியேறிச்சென்றனர்.

இதேவேளை தமிழ் தேசிய மக்கள் முன்னனி உறுப்பினர்கள் அண்மையில் வவுனியா வடக்கு பிரதேச சபையில் தமது கட்சிக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகவும், முறைகேடுகள் இடம்பெறுவதாகவும் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காதலை நிரூபிக்க தற்கொலை செய்துகொண்ட காதலர்கள் : நெஞ்சை உருக்கும் ஓர் சம்பவம்!!

நெஞ்சை உருக்கும் ஓர் சம்பவம்

சென்னையில் உயிருக்கு உயிராக காதலித்து வந்த காதல் ஜோடியினர் தங்களது உண்மை காதலை நிரூபிக்க தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேம்நாத் – ஆயிஷா ஆகிய இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளனர்.

ஆனால், பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த பிரேம்நாத் தான் தற்கொலை செய்யப்போவதாக வீடியோ அழைப்பில் ஆயிஷாவிடம் தெரிவித்து விட்டு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அறிந்த ஆயிஷாவும் தனது வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கட்ட ஆயிஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தங்களது உண்மையான காதலை நிரூபித்து இரு இதயங்களும் ஒன்றாக சமாதியடைந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அக்காவிற்காக உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டேன் : ஒரு திருநங்கை அனுபவித்த கஷ்டங்கள்!!

திருநங்கை அனுபவித்த கஷ்டங்கள்

தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் தான் வாழ்வில் பெண்மையை உணர்ந்த தருணம், அதன் பின் திருநங்கையாக மாறியது எப்படி என்பது குறித்து கூறியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தையல் நாயகி, இவர் இப்போது தனியாக டிபன் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் தன்னுடைய வாழ்வில் நடந்த கசப்பான அனுபவங்களை பற்றி பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், என் கை மணத்துக்காகவே பலரும் விருப்பப்பட்டு நான் சமைக்கிற சாப்பாட்டை வாங்கிட்டு போகிறார்கள் என்று கூறிய அவர், எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறேன். பள்ளியில் படிக்கும் போது கூட பெண்கள் கூடவே தான் இருப்பேன், இதன் காரணமாகவே என்னை பலரும் கிண்டல் செய்வார்கள், வீட்டில் என்னை அடித்திருக்கிறார்கள்.

இருப்பினும் எனக்குள் இருக்கும் பெண்மை தன்மையை மறக்க முடியாததால், ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன். அதன் பின் டீ கடை ஒன்றில் வேலை பார்த்து கொண்டே இருந்தேன். அப்போது அந்த கடைக்கு வந்த பெண் பார்க்க ஆண் மாதிரி இருந்தாலும், பெண் போன்ற உடை அணிந்திருந்தார்.

இதனால் நான் அவரை பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்து என்னை அழைத்து அறிவுரை வழங்கினர். இது எல்லாம் மிகவும் கடினம் என்று கூறினார். இதில் பல கஷ்டங்கள் இருக்கு என்று கூறினார்.

இருப்பினும் என்னால் முடியவில்லை என்று கூறினேன். அவர் திருநங்கை என்றால் கெளரவமாக வாழவேண்டும் என்று கூறியதால், அப்போதிலிருந்தே கடை ஏறுதல், பாலியல் தொழில் போன்றவைகளை விட்டேன்.

அதைத் தொடர்ந்து கடை ஒன்றில் சமையல் வேலை பார்த்து கொண்டிருந்தேன். அப்போது எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவர் என்னை பார்த்துவிட்டதால், குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். அதன் பின் வந்த குடும்பத்தினர், உன்னால் உன் அக்கா வாழ்க்கை கெட வேண்டுமா என்று கூறினர். அதனால் என் அக்கா திருமணம் முடியும் வரை உணர்ச்சிகளை கட்டுப் படுத்தி வைத்திருந்தேன்.

திருமணம் முடிந்து அக்கா நல்ல படியாக இருக்கிறாள் என்றவுடன் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினேன். எங்கள் கிராமத்தினர் யாரும் பார்க்காத வகையில் சென்றேன். அப்படி நான் மன்னார் குடி வந்த போது திருநங்கையாக மாற மனதளவில் தயாராகினேன். என்னுடைய 21 வயசுல அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். சிகிச்சை முடிஞ்சு கண்ணைத் திறக்கும்போது புது மனிதனாக இந்த உலகத்துக்கு வந்ததாக நினைத்துக் கொண்டேன்.

அதுக்கிடையில் டிபன் கடை நடத்த ஆரம்பிச்சேன். என் கை மணம் நல்லா இருக்குன்னு நிறைய பேர் சொல்லுவாங்க. சமைக்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும். கடையில் வருகிற வருமானத்தைச் சேமித்து வைக்க ஆரம்பிச்சேன். வெறித்தனமா உழைக்க ஆரம்பிச்சேன். என்னை மாதிரி வீட்டிலிருந்து வெளியேறிய திருநங்கைகளை மகளாக ஏத்துக்கிட்டேன்.

நான் கெளரவமா செய்யுற தொழில் அவங்களுக்குப் பிடிச்சிருந்தது. என் அம்மா, அப்பா என் கூட பட்டுக்கோட்டையில்தான் இருக்காங்க. டிபன் கடையில் வருகிற பணத்தில் எங்க குடும்பத்தோட சந்தோஷமா வாழுறேன் என்று கூறியுள்ளார் அதன் பின் என் வீட்டில் திருநங்கையாக மாறியதை போன் மூலம் கூறினேன். முதலில் அவர்கள் என்னை ஏற்றுக் கொள்ள மறுத்தாலும், என் உணர்வுகளை புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டனர்.

பெண்களின் ஆடையை அணிந்தபடி தூக்கில் சடலமாக தொங்கிய இளைஞர் : திடுக்கிடும் பின்னணி!!

தூக்கில் தொங்கிய இளைஞர்

தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் பெண் வேடமிட்டபடி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மத்தம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த எபின் ராபர்ட் என்ற இளைஞர் மூன்றாமாண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தார்.

கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வந்த எபின் நேற்று இரவு விடுதி அறையில் யாரும் இல்லாத நேரத்தில் சேலை, ஜாக்கெட் அணிந்த நிலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் எபின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

எபின் ராவர்ட் நீண்ட நாட்களாகவே பெண்ணாக மாற வேண்டும் என ஆசைப்பட்டதாகவும் ஆனால் அந்த ஆசை நிறைவேறாததால் சேலை மற்றும் ஜாக்கெட் அணிந்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 5 மாதத்தில் இளம் மனைவியால் கணவனுக்கு நேர்ந்த கொடூரம்!!

கணவனுக்கு நேர்ந்த கொடூரம்

தமிழகத்தில் கணவனை அடித்துக் கொன்றுவிட்டு விபத்து என்று நாடகமாடிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரியை சேர்ந்தவர் வெங்கடேசன் (23). இவருக்கும், முனியம்மாள் (20) என்ற பெண்ணுக்கும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த மாதம் 26-ந் திகதி வெங்கடேசன் தனது மனைவி முனியம்மாளுடன் மாமியார் வீட்டுக்கு சென்றார்.

பின்னர் இரவு வெங்கடேசன் பைக்கில் முனியம்மாளை ஏற்றிக் கொண்டு ஊருக்கு திரும்பினார். இந்நிலையில் வெங்கடேசன் ஒன்னப்ப கவுண்டன அள்ளி மயானம் அருகில் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்த பொலிசார் இது குறித்து முனியம்மாளிடம் விசாரித்தனர். அப்போது முனியம்மாள் கூறும்போது வெங்கடேசன் விபத்து ஏற்பட்டதில் இறந்ததாக கூறினார். ஆனால் வெங்கடேசனின் தங்கை அருள்ஜோதி என்பவர் தனது அண்ணன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறிய நிலையில் பொலிசார் முனியம்மாளிடம் மீண்டும் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் முனியம்மாள் திருமணத்துக்கு முன்பே விஜய் (22) என்பவரை காதலித்து வந்ததும் திருமணத்துக்கு பிறகும் அவர்களுக்கிடையில் பழக்கம் நீடித்து வந்ததும் தெரிந்தது. சம்பவத்தன்று தனது கணவர் வெங்கடேசனுடன் தான் பைக்கில் வருவதாக விஜயிடம் முனியம்மாள் தகவல் தெரிவித்தார்.

பின்னர் பைக்கில் வந்த வெங்கடேசனை இருவரும் சேர்ந்து அடித்து கொன்றதும், அவர் விபத்தில் இறந்ததாக முனியம்மாள் நாடகம் ஆடியதும் தெரியவந்தது இதையடுத்து விஜய் மற்றும் முனியம்மாளை பொலிசார் கைது செய்துள்ளனர்.

லண்டனில் கொலை செய்யப்பட்ட இந்தியப் பெண் : அம்பலமான கணவரின் ரகசியங்கள்!!

கொலை செய்யப்பட்ட இந்தியப் பெண்

லண்டனில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பெண் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளன. Wolverhampton நகரில் வசித்து வந்த Sarbjit Kaur(42) என்ற பெண்மணி தனது வீட்டில் மர்மாக இறந்துகிடந்தார்.

வீட்டிற்கு கொள்ளையடிக்க வந்த நபர்கள், தனது மனைவியை தாக்கியுள்ளதாகவும் இதனால் தனது மனைவி இறந்துவிட்டதாகவும் Sarbjit Kaur – இன் கணவர் Gurpreet Singh பொலிசில் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் பொலிசார் விசாரணை நடத்தி வந்ததில், Sarbjit கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், தனியாக வசித்து வந்த அவரை கடைசியாக கணவர் Gurpreet Singh சந்தித்துள்ளார் என தெரியவந்தது.

மேலும், இது ஒரு திட்டமிட்ட படுகொலை என விசாரணையில் தெரியவந்ததையடுத்து இன்னும் 6 வாரங்களுக்குள் இந்த விசாரணை முடிந்து Gurpreet க்கு தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

concrete நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் Gurpreet Singh – இன் இரண்டாவது மனைவி Sarbjit என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த கொலை சம்பவம் நடந்து 3 மாதங்கள் கழித்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் Gurpreet கைது செய்யப்பட்டு அவர் மீது கொலைவழக்குப்பதிவாகி Birmingham நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், தனது மனைவியை கொலை செய்வதற்கு £20k பவுண்ட்டு கொடுத்து கொலையாளியை Gurpreet ஏற்பாடு செய்துள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்தியாவில் இருக்கும் கல்லூரி மாணவி ஒருவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொள்வதற்கு இடையூறாக இருந்த இரண்டாவது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டிருந்தார்.

அதன்படி கொலையாளிக்கு £20k பவுண்ட் கொடுத்து தனது மனைவியை கொலை செய்ய அனுப்பி வைத்துள்ளார். மேலும் கொள்ளையடிப்பதற்காக இந்த கொலையை நடந்தது எனவும் பொலிசார் கவனத்தை திசை திருப்பியுள்ளார் என முக்கிய சாட்சி ஒருவர் நீதிமன்றத்தி வாக்குமூலம் அளித்துள்ளார்.

யாழில் தொடரும் ஆவா குழுவினரின் அட்டகாசம் : அச்சத்தில் மக்கள்!!

ஆவா குழுவினரின் அட்டகாசம்

யாழ். மாணிப்பாய் பகுதியில் 3 வீடுகளுக்கு ஆவா குழுவினரால் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 9 பேர் அடங்கிய ஆவா குழு குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்து, மூன்று வீடுகளுக்குள் மாத்திரம் புகுந்து அங்கிருந்த நபர்களை அச்சுறுத்தி, அவர்களின் உடமைகளுக்கு சேதம் விளைவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரபினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனையடுத்து, முறைப்பாட்டிற்கமைவாக பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

139 வருடங்களின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட பாரிய மாற்றம் : மக்களுக்கு எச்சரிக்கை!!

மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் 1880ஆம் ஆண்டுக்கு பின்னர் கடுமையான வெப்பத்துடன் கூடிய காலநிலை தற்போது நிலவுவதாக பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

139 வருடங்களுக்கு பின்னர் அதிக வெப்பமான வருடமாக 2019ஆம் ஆண்டை கூற முடியும். பொதுவாக அனைத்து வருடங்களிலும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி இலங்கை ஊடாக சூரியன் உச்சம் கொடுத்து 15ஆம் திகதி இலங்கையை விட்டு சூரியன் நகரும். எனினும் தற்போது ஏற்பட்டுள்ள புவியியல் மாற்றம் இலங்கைக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடும் வெப்ப நிலைக்கு காரணமாகியுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் இருந்து மே மாதம் நடுப்பகுதி வரை அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலை நீடிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரையில் இலங்கையில் குறைவான காற்று நிலவி வருகின்றது. இதனால் வியர்வை காய்வதும் குறைவடைந்துள்ளது.

விசேடமாக குழந்தைகள் மற்றும் வயோதிபர்களை சூரிய ஒளி படும் இடங்களுக்கு செல்ல அனுமதிக்க கூடாது. இதனால் இதயத்திற்கு உட்பட பாதிப்பு ஏற்படும். இந்த நிலைமைக்கு மத்தியில் அதிக நீர், இளநீர் போன்றவற்றை அதிகம் பருகுவதன் மூலமே உடலை பாதுகாக்க முடியும்.

42 பாகை செல்சியஸ் அளவு வெப்பம் அதிகரித்தால் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். விசேடமாக மேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவுவதாக பேராசிரியர் சந்தன ஜயரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் உட்பட பல இடங்களில் 5 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

A9 வீதியில் நடந்த கொடூரம் : வீதியில் படுத்திருந்த நபரின் இரு கால்களும் சிதைந்த சோகம்!!

A9 வீதியில் நடந்த கொடூரம்

மாங்குளம், பனிக்கன்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவரின் கால்கள் இரண்டும் படுகாயமடைந்துள்ளன. வீதியில் படுத்திருந்த ஒருவரின் கால்களின் மேலால் டிப்பர் வாகனம் ஒன்று ஏறிச் சென்றதாலே குறித்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

யாழ். கண்டி பிரதான வீதியில் வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் ரக வாகனம் ஒன்றே குறித்த நபரின் மீது ஏறிச்சென்றுள்ளது. 35-40 வயது மதிக்கத்தக்க நபரே படுகாயமடைந்தார் எனினும், அவர் தொடர்பான விபரங்கள் ஏதும் தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மதுபோதையில் வீதியோரம் படுத்திருந்தார் என சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், வைத்திய பரிசோதனை அறிக்கையின் பின்னரே அதை உறுதி செய்யலாமென பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் விபத்திற்குள்ளாகி வெகு நேரமாக வீதியில் கவனிப்பாரற்று கிடந்த நிலையில் நேற்று மாலை அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இரண்டு கால்களும் சிதைவடைந்த நிலையில் வீதியோரத்தில் குறித்த நபர் வெகு நேரமாக கிடந்துள்ள போதும், பலர் அவரை கடந்து சென்ற போதும் ஒருவர் கூட குறித்த நபரை வைத்தியசாலையில் அனுமதிக்கவோ அல்லது முதலுதவி செய்யவோ முன்வந்திருக்கவில்லை. பலர் குறித்த நபரை வீடியோ எடுத்தும் புகைப்படங்களை எடுத்தும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

தற்போது வளர்ந்துவரும் செல்பி நாகரீகமும் சமூக வலைத்தளங்களின் உச்சக்கட்ட வளர்ச்சியும் மனிதரிடத்தில் உள்ள மனிதத்தை முற்றிலும் சிதைத்துவிட்டிருக்கின்றது.

மூன்று தசாப்த காலமாக கொத்து கொத்தாக தம்மைச் சார்ந்த உயிர்கள் கொல்லப்பட்டதன் வலி அறிந்த சமூகம் இன்று நாகரிக வளர்ச்சியால் ஒரு உயிர் துடிதுடித்து சாவதை காணொளி எடுத்து இரசிக்கும் அளவிற்கு கொடூரம் அடைந்துள்ளது.

மனிதாபிமானமற்ற குறித்த செயல்களால் ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் தலைகுணிவை எதிர்நோக்க வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மரணித்தது தமிழ் இனம் மட்டுமா அல்லது அவர்களின் மனிதமுமா என கேள்வி எழுவும் இழிநிலைக்கு எம் சமூகம் தள்ளப்பட்டுள்ளமை மிக வேதைனைக்குரியதே.