இலங்கையில் நாளை முதல் 4 மணிநேர மின்வெட்டு , சனி 2.15 மணிநேர வெட்டு : விபரம் உள்ளே!!

மின்வெட்டு

நாள் தோறும் தினமும் இரண்டு தடவைமின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வார நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை ) காலை 8.30 மணி முதல் முற்பகல் 11.30 மணி அல்லது முற்பகல் 11.30 மணி முதல் நண்பகல் 2.30 மணி வரையில் அல்லது நண்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை மூன்று மணித்தியாலங்களும், மாலை 6.30 முதல் இரவு 7.30 வரையில் அல்லது இரவு 7.30 முதல் – இரவு 8.30 மணி வரையிலும் அல்லது இரவு 9.30 முதல் – இரவு 9.30 மணி வரையிலும் மின் தடை அமுல்படுத்தப்பட உள்ளது.

சனிக்கிழமை தினங்களில் இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்சார விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி காலை 8.30 முதல் பிற்பகல் 10.45 வரையும், முற்பகல் 10.45 முதல் பிற்பகல் 1.00 மணி வரையும் , பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 3.15 வரையும் , பிற்பகல் 3.15 முதல் பிற்பகல் 5.30 வரையும் மின்சார விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

எவ்வாறாயினும் ஞாயிற்று கிழமைகளில் மின்சார விநியோகம் தடை அமுல்ப்படுத்தப்படாது என மின்சார சபை அறிக்கையொன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.

தொடர்சியாக நாட்டில் நிலவி வரும் வறட்சியான காலநிலையினால் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது என இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

நடிகையிடன் தவறாக நடந்து கொண்ட மர்ம கும்பல்!!

சினிமா நடிகை

சினிமா நடிகைகள் பல நேரங்களில் கவர்ச்சியாக இருப்பதாக சகஜம் தான். அடிக்கடி சமூகவலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ஹாட் ட்ரெண்டிங்கில் வைத்திருப்பார்கள். அது போக சில சர்ச்சைகளும் அவர்கள் மீது எழுவதுண்டு. ஆனால் அவர்கள் வேறு சில பிரச்சனைகளையும் சந்திப்பதுண்டு.

மும்பையை சேர்ந்தவர் நடிகை Chahath Khanna. ஹிந்தி டிவி சீரியல் நடிகையான இவர் அண்மையில் அருகே Maland என்ற பகுதியில் காரில் சென்றுள்ளார். அப்போது திடீரென 10 ,15 ஆண்கள் அவரின் காரை சுற்றி வளைத்துள்ளனர். இதனால் அவர் போலிசுக்கு போன் செய்துள்ளார். அதற்குள் அவர்கள் டிரைவர் அடித்து தாக்கியுள்ளனர்.

இதனால் கோபமான அவர் காரிலிருந்து இறங்கிவந்து தனியாக அந்த கும்பலை செருப்பால் அடித்துள்ளார். போதையில் இருந்த அந்த கும்பலிடம் இருந்து காப்பாற்ற உதவிக்கு ஆள் இல்லாமல் தனியே போராடியுள்ளார். பின் அங்கிருந்து எப்படியோ தப்பித்துள்ளார்.

சொந்த சித்தியை திருமணம் செய்து கொண்ட இளைஞர்!!

ஜிம்பாப்வேயில் தன்னை விட கிட்டத்தட்ட 20 வயது அதிகமான சொந்த சித்தியை இளைஞர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மைக் மாவி என்பவர் தனது மனைவி ஷிபோ முகடி என்பவருடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மைக் கடந்த டிசம்பர் மாதம் 3-ஆம் திகதி உயிரிழந்தார்.

இந்நிலையில் மைக்கின் சகோதரர் முன்யார்டியின் மகன் ஆண்டனி (25) தனது சித்தியான ஷிபோவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தன்னை விட கிட்டத்தட்ட 20 வயது அதிகமான ஷிபோவை, ஆண்டனி திருமணம் செய்து கொண்டது அவர்களின் குடும்பத்தாரையும், உறவினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து ஷிபோ கூறுகையில், என் கணவர் நோய் வாய்ப்பட்டிருந்த போது ஆண்டனி தான் அவருக்கு உதவிகள் செய்தார். அவர் இறந்த பின்னர் எங்களுக்குள் காதல் ஏற்பட்டது.

இதையடுத்து நாங்கள் திருமணம் செய்து கொண்டோம், என்னை வேறு சில சிலர் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள்.

ஆனால் எனக்கு ஆண்டனியை மணக்கவே விருப்பம் இருந்தது, எங்கள் வயது வித்தியாசம் மற்றும் உறவுமுறை குறித்து யார் என்ன சொன்னாலும் கவலையில்லை, நாங்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம் என கூறியுள்ளார்.

சொந்த தந்தையால் கனேடிய சிறுமி கொலை : கொல்லப்பட்ட அன்று என்ன நடந்தது?

கனேடிய சிறுமி கொலை

கனேடிய சிறுமி ரியா ராஜ்குமார் மாயமான அன்று அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து பொதுமக்களின் எதிர்வினை எப்படி இருந்தது என அதிகாரிகள் தற்போது வெளியிட்டுள்ளனர்.

கனடாவில் சொந்த தந்தையால் கொடூரமாக கொல்லப்பட்ட 11 வயது சிறுமி தொடர்பில், பொதுமக்களிடம் இருந்து உதவி கோரும் வகையில் அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் குறித்த அம்பர் எச்சரிக்கையானது தங்களின் தனிப்பட்ட உரிமை மீதான அத்துமீறல் என ஒருசிலர் குறை கூறியதாக பீல் பிராந்திய பொலிசார் தற்போது அம்பலப்படுத்தியுள்ளனர்.

மேலும், குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் தங்களால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காண முடியாமல் போனது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். சொந்த தந்தையால் கடத்தப்பட்ட 11 வயது ரியா ராஜ்குமார் கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.

சிறுமி ரியா தமது தந்தையுடன் வெளியே சென்ற நிலையில், குறிப்பிட்ட நேரம் கடந்தும் குடியிருப்புக்கு திரும்பாதது கண்டு, கணவர் மீது சந்தேகமடைந்த ரியாவின் தாயார்,

உடனடியாக பீல் பிராந்திய பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் தன்மையை உணர்ந்த பொலிசார் உடனடியாக அம்பர் எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து பொதுமக்களில் பலர் 911 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு தகவல் பரிமாறியுள்ளனர்.

பலர், குறை கூறுவதற்காகவே அழைத்துள்ளனர். இரண்டரை மணி நேரத்தில் சுமார் 208 அழைப்புகள் வந்துள்ளதாக கூறும் அதிகாரிகள், அதில் 89 அழைப்புகள் அம்பர் எச்சரிக்கையை குறை கூறுவதற்காகவே பொதுமக்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானத்தை சேர்ந்து இயக்கும் அழகான தாய் – மகள் : வைரலாகும் புகைப்படம்!!

தாய் – மகள்

விமான பயணத்தின் போது நபர் ஒருவர் விமானத்தின் விமானிகளாக தாய் – மகள் இருப்பதை அறிந்ததையடுத்து அவர்களை புகைப்படம் எடுத்து வெளியிட அது வைரலாகியுள்ளது.

Embry-Riddle Aeronautical பல்கலைக்கழகத்தின் சான்சிலர் ஜான் வாட்ரெட் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து அட்லாண்டாவுக்கு செல்லும் விமானத்தில் பயணம் செய்தார்.

அப்போது விமானத்தை இயக்கும் இரு விமானிகள் தாய் – மகள் என தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரின் அனுமதியுடன் அவர்களை ஜான் புகைப்படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், விமான பயணம் சிறப்பாக இருந்தது, முக்கியமாக இருபெண்களின் தன்னம்பிக்கையும் உத்வேகம் அளிக்கிறது என பதிவிட்டுள்ளார். இந்த டுவிட்டானது 17000-க்கும் அதிகமான முறை ரிடூவிட் செய்யப்பட்டுள்ளதோடு, 45000 முறை லைக் செய்யப்பட்டு மிகவும் வைரலாகி வருகிறது.

தீக்குளித்து இறந்த பெண்ணுக்கு திடீரென உயிர் வந்ததால் பரபரப்பு!!

திடீரென உயிர் வந்ததால் பரபரப்பு

திருச்சியில் தனியார் மருத்துவமனையால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பெண், அரசு மருத்துவமனையில் உயிருடன் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுமதி என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை காப்பற்ற சென்ற போது அவருடைய கணவர் முருகேசனும் தீக்காயமடைந்தார்.

உடனடியாக மீட்கப்பட்ட சுமதி மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். திடீரென அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியதை அடுத்து, வேகமாக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் சுமதி உயிருடன் இருப்பதை உறுதி செய்து, தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுசம்மந்தமாக சுமதியின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

எனது சாவுக்கு மனைவியும், மகளும் தான் காரணம் : கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட நபர்!!

உயிரை மாய்த்துக்கொண்ட நபர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொலிசார் அடித்ததால் மனமுடைந்த காவலர் டைரியில் காரணத்தை எழுதிவைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.

ஆட்டோ ஓட்டுநர் ராமலிங்கம் – விஜயரூபா ஆகிய இருவருக்கும் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். விஜயரூபா அஞ்சுகிராமம் பஞ்சாயத்து அலுவலகத்தில் பில் கலெக்டராகப் பணிபுரிந்து வருகிறார்.

தனது மனைவி வேலைக்கு செல்வது பிடிக்காத காரணத்தால் ராமலிங்கம் அடிக்கடி பிரச்சனை செய்துள்ளார். தொடர்ந்து பிரச்சனை நிலவி வந்த காரணத்தால் தனது மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார் ராமலிங்கம்.

இந்நிலையில் தனது மகளின் பிறந்தநாளை முன்னிட்டு வீட்டுக்கு சென்ற ராமலிங்கம், அங்கு பிரச்சனை செய்ததையடுத்து மனைவி விஜயரூபா பொலிசில் புகார் அளித்ததையடுத்து, காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட ராமலிங்கத்தை பொலிசார் அடித்து, எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த ராமலிங்கம், பொலிசார் தாக்கியதால் தனக்கு வாழப்பிடிக்கவில்லை எனவும் தனது சாவிற்கு மனைவியும் மகளும் காரணம் என டைரியில் எழுதிவைத்து விட்டு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த நிலையில் ராமலிங்கத்தின் நடத்தை சரியில்லாததால் அவரது மனைவி பிரிந்து வாழ்வதாகவும் பெற்ற மகளிடமே தவறாக நடக்க முயன்றதாக அவரது மனைவி புகார் அளித்ததால் விசாரணை நடத்தியதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

அத்தை வீட்டிற்கு செல்வதாக சென்ற 20 வயது இளம் பெண் மாயம் : கண்டுபிடிக்க முடியாமல் திணறும் பொலிசார்!!

இளம் பெண் மாயம்

இந்தியாவில் மாணவி ஒருவர் மாயமாகி ஒருவருடம் ஆகியும் துப்பு கிடைக்காததால், பொலீசார் தவித்து வருகின்றனர். கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள முக்கூட்டுத் தாராவைச் சேர்ந்தவர், ஜெஸ்னா மரியா ஜேம்ஸ் (20). இவர் கஞ்சிரப்பள்ளியில் உள்ள எஸ்.டி.கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார்.

இந்நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்த இவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 22-ஆம் திகதி தனது அத்தை வீட்டுக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

முதலில், ஆட்டோ ஒன்றில் வெச்சூசிரா பேருந்து நிலையத்துக்குச் சென்ற அவர், எருமேலி செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார். அங்கிருந்து முன்டக்கயம் என்ற ஊருக்குப் பேருந்தைப் பிடித்துள்ளார். முன்டக்கயம் வந்த ஜெஸ்னா, திடீரென மாயமானார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் அவரைப் பற்றிய தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் ஜெஸ்னா பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஜெஸ்னா, ஒருவேளை கொல்லப்பட்டிருக்கலாம் என கருதி காவல்துறையினர் அவர் உடலை எருமேலி, முன்டக்கயம், பீர்மேடு மற்றும் குட்டிக் கனம் ஆகிய வனப்பகுதிகளில் தீவிரமாக தேடினர். அப்போது எருமேலியில் உள்ள சிசிடிவி கேமராவை சோதித்த காவல்துறையினர், ஜெஸ்னா பேருந்தில் இருந்து இறங்கி முன்டக்கயம் செல்லும் பேருந்தில் ஏறுவதையும் செல்லும் வழியில் அவர் பேருந்தில் அமர்ந்திருப்பதையும் கண்டுபிடித்தனர்.

பின்னர் பல நாள் விசாரணைக்குப் பிறகு முன்டக்கயம் பகுதியில் கிடைத்த ஒரு சிசிடிவி கேமரா காட்சியில் ஜெஸ்னா பதிவாகியுள்ளார். அதில் கை மற்றும் தோளில் ஒவ்வொரு பையுடன் ஜெஸ்னா ஒரு கடைக்குள் செல்கிறார். அந்தக் காட்சிகளைக் கொண்டு காவல் துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

பின்னர் 6 நிமிடங்களுக்கு பின் ஜெஸ்னாவின் ஆண் நண்பர் ஒருவர் அந்தக் கடைக்குள் செல்கிறார். ஏற்கனவே காவல்துறையினரின் விசாரணையில், ஜெஸ்னா காணாமல் போன கடைசி நேரங்களில் இந்த ஆண் நண்பருக்கு அதிக போன் கால் செய்ததும், மெசேஜ் அனுப்பியதும் தெரியவந்தது.

ஆனால் அந்தக் கடைக்குள் இருந்து அவர்கள் இருவரும் வெளியே வரும் காட்சிகள் இல்லை. இதனால் அந்த நபர் மீது சந்தேகம் கொண்டு, காவல்துறையினர் விசாரித்து வந்தனர். ஜெஸ்னா காணாமல் போன அன்று முன்டக்கயம் பகுதியில் பல்வேறு பகுதிகளில் கிடைத்த சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தினர்.

அப்போது பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள துணி கடையில் கிடைத்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் கண்காணித்தனர். அதில் சிவப்பு நிற கார் ஒன்று தெரிகிறது. அதில் ஜெஸ்னாவுடன் இன்னும் இரண்டு பேர் நிற்கின்றனர். அதில் ஒரு பெண், ஜெஸ்னா போலவே இருந்ததால் பொலீசார் இந்தக் காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை தொடங்கினர்.

இருந்தும் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. மாணவி மாயமாகி ஒரு வருடம் ஆகியும் எந்த துப்பும் கிடைக்காததால் பொலிசார் தவித்து வருகின்றனர். இதனால் ஜெஸ்னாவின் சகோதரர் சிபிஐ விசாரணை கோரி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

லண்டனில் அரிய நோயினால் உயிருக்கு போராடிய தமிழ் சிறுமி : கடவுளாக மாறிய வைத்தியர்கள்!!

ஹரினி ராசலிங்கம்

பிரித்தானியாவில் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமியை வைத்தியர்கள் வெற்றிகரமாக காப்பாற்றியுள்ளனர். ஹரினி ராசலிங்கம் என்ற சிறுமியே இவ்வாறு உயிருக்கு போராடியுள்ளார். திடீர் உடல் எடை குறைவினால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி 6 நாட்களில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மகளின் உடலில் என்ன நோய் என வைத்தியர்களினால் கண்டுபிடிக்க முடியாமையினால் Evelina லண்டன் சிறுவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என ஹரினியின் தாய் திட்டமிட்டார். எனினும் இந்த நோயானது மிகவும் அரிய ஒன்றாகும்.

இது maple syrup என்ற சிறுநீர் நோயாக இது இருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகித்தனர்.
இது அரிய வகை நோயாக இருந்தாலும் உயிரை பறிக்கும் ஆபத்தை கொண்டதாகவும். இந்த நோயினால் எந்தவொரு வாசனையும் நுகர முடியாது. உடல் வியர்க்கும். புரத உணவுகள் உடலில் சேரவிடாமல் தடுக்கும்.

இந்த நோயினை இரத்த பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியும். எனினும் இரத்த பரிசோதனை அறிக்கை வருவதற்கு முன்னரே ஹரினி மோசமான நிலைக்கு தள்ளப்பட்டார். ஹரினியின் 30 வயதான தாய் பிரிமினி கமலநாதனிடம் மகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து வைத்தியர்கள் தீவர ஆலோசனைகளை வழங்கி வந்தனர்.

ஒரு நாள் திடீரென அவரது உடலில் இருந்த நீர்த்தன்மை முழுமையாக உறிஞ்சப்பட்டது. இதன் போது என்ன நடக்கின்றதென தெரியாமல் வைத்தியர்கள் குழப்பமடைந்துள்ளனர். ஹரினி முழுமையாக இயந்திரங்கள் பொருத்தப்பட்ட ஒரு கோழி போன்று காணப்பட்டார். நான் அவரை பார்க்கும் போது கண்ணீர் விட்டு அழுதேன் என தாயார் தெரிவித்துள்ளார்.

Evelina, வைத்தியசாலைக்கு ஹரினி மாற்றப்பட்டார். அங்கு அவரது வித்தியசமான செயற்பாடுகளை வைத்தியர்கள் அவதானித்தார். இந்த சிறுநீர் நோய் மிகவும் ஆபத்தானது. ஒருவருக்கு ஏற்பட்டால் அவர் உயிரிழக்க நேரிடும். எனினும் ஒருவாறு அவரது நோய் கண்டுபிடிக்கப்பட்டது.

3 வாரங்கள் அவசர சிகிச்சை பிரிவில் ஹரினி அனுமதிக்கப்பட்டார். வைத்தியர்களின் தீவிர கண்கானிப்பில் அவர் குணமடைந்தார். அவரது உடலில் இருந்த அமினோ அமிலம் நீக்கப்பட்டது. தற்போது இரண்டு வருடங்கள் கடந்து விட்டன. ஹரினி மகிழ்ச்சியாக இருக்கின்றார். ஆரோக்கியமாக உள்ளார். புரதம் கொண்ட உணவுகளை உட்கொள்கின்றார். உயிரிழக்கும் நிலையில் மகள் காப்பற்றப்பட்டார். நாங்கள் அதிஷ்டசாலி என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

Maple syrup urine disease என்ற நோய், ஒரு புரதக்கோளாறு ஆகும். இது உடலிலுள்ள புரத கட்டிகள் (அமினோ அமிலங்கள்) ஒழுங்காக செயல்பட முடியாத ஒரு மரபணு நோய். வாந்தி, உடலில் ஆற்றல் இல்லாதிருத்தல், அசாதாரண இயக்கங்கள் மற்றும் தாமதமான உடல் வளர்ச்சி போன்ற பாதிப்புகள் இந்த நோயால் ஏற்படுகின்றன.

இறுதி யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட ஆட்லறியை ஆராய்ந்த 6 வயதுச் சிறுவன்!!

ஆட்லறி

இறுதி யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட ஆட்லறி எறிகனையின் வெற்றுக்கோது ஒன்று இன்று முள்ளிவாயக்கால் பகுதியில் கண்பிடிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒருவர் அவருடைய சொந்த காணியை இன்று சீராக்கிய போதே குறித்த ஆட்லறி எரிகணையின் வெற்றுக்கோது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது இரண்டு தரப்புக்களினாலும் பயன்படுத்தப்பட்ட அபாயகரமான சில வெடிபொருட்களை அண்மை நாட்களில் பொதுமக்களினால் அடையாளம் காட்டப்பட்டதற்கு அமைவாக நீதிமன்றத்தின் அனுமதியுடன் அதிரடிப்படையினாரால் மீட்க்கப்பட்டு பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டுள்ளது.

எனினும் யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையிலும் முள்ளிவாய்கால் உள்ளிட்ட பிரதேசங்களில் அபாயகரமான வெடிபொருட்கள் இன்னமும் முற்றும் முழுதாக மீட்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இன்று தனியார் ஒருவருடைய காணியில் இருந்து மீட்கப்பட்ட ஆட்லறி வெற்றுக்கோது அபாயகரமானதாக இல்லாத போதும் யுத்த பாதிப்பை சந்திக்காத (புதிய தலைமுறை) ஆறு வயது சிறுவன் ஒருவர் அது தொடர்பில் ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் தமிழ் பண்பாட்டு விழா – 2019!!

தமிழ் பண்பாட்டு விழா – 2019

யாழ்.இந்திய தூதரகத்தின் நிதிப்பங்களிப்பில் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி வழங்கும் முதுதமிழ்ப்புலவர் ஔவையார் நினைவாக நடாத்தப்படும் தமிழ்ப் பண்பாட்டு விழா – 2019 கல்லூரியின் பீடாதிபதி கதிரேசு சுவர்ணராஜா தலமையில் இன்று (24.03.2019) காலை 9.30 மணியளவில் கல்லூரியின் பலநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

விருந்தினர்கள் கல்லூரி முன்னறலிருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க வரவேற்கப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. அதன் பின்னர் இசை நிகழ்ச்சி , வீணை இசை, கூத்து , இசைச்சங்கமம், நாட்டிய நாடகம், இசை நாடகம், கௌரவிப்பு என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ் இந்தியத் துணைத்தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் கலந்து கொண்டிருந்ததுடன் சிறப்பு விருந்தினர்களாக உப பீடாதிபதிகள், விரிவுரை இணைப்பாளர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள்,

பதிவாளர், கல்விசாரா பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந் நிகழ்வின் போது ஞாபகார்த்தமாக மூன்று மரங்களும் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரசபைக்கு சொந்தமான வாகனம் தீப்பிடிப்பு!!

வாகனம் தீப்பிடிப்பு

வவுனியா நகரசபை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெக்கோ வாகனம் நேற்று (23.03) இரவு தீப் பிடித்து எரிந்துள்ளது.

நேற்று மாலை பணிகளை முடித்துக்கொண்டு குறித்த வாகனம் நகரசபை வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு 10 மணியளவில் குறித்த வாகனம் தீப்பற்றி எரிந்துள்ளது.

எனினும் தீயணைப்புப் பிரிவினர் தீயை அணைத்துள்ளனர். மின்சார ஒழுக்கே தீ விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு அளித்துள்ளதுடன் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் பேஸ்புக் பாஸ்வேர்டை உடனே மாற்றுங்கள் : எச்சரிக்கும் வல்லுநர்கள்!!

பேஸ்புக்

சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் பேஸ்புக் பாஸ்வேர்டை மாற்றுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். பேஸ்புக் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தங்கள் தளத்தில் இருந்த கோளாறு ஒன்று சரி செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்தது.

அது 2 கோடிக்கும் மேலான கணக்குகளின் பாஸ்வேர்டுகள், எந்த ஒரு Encription-வும் இல்லாமல் Plain Text மட்டுமே சேமிக்கப்பட்டிருந்தது என்பது தான். இவற்றை சுமார் 20,000 பேஸ்புக் ஊழியர்கள் பார்த்திருக்க முடியும். இதனால் சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் உடனடியாக அனைவரும் தங்களது பேஸ்புக் பாஸ்வேர்டை மாற்றுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

அத்துடன் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கலாம் என கருதப்படும் கணக்குகளுக்கு இது குறித்து தெரிவிக்கப்படும் என்று பேஸ்புக் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், இதனால் எந்த பாதிப்பும் நடந்திருக்க வாய்ப்பில்லை எனக் கூறும் பேஸ்புக், யாராவது உங்களின் பாஸ்வேர்டை பெற்றிருந்தால் அதனை தவறாக பயன்படுத்தலாம் என்றும் எச்சரித்துள்ளது.

எனவே, உடனடியாக புதிய பாஸ்வேர்டை செட் செய்யுமாறும், Two-Factor Authentication முறையை On செய்யுமாறும் சைபர் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் இந்த பாஸ்வேர்டை மற்ற கணக்குகளுக்கும் பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வவுனியாவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவதற்கான மாநாடு!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

வன்னி மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியை மறுசீரமைத்து அங்கத்துவத்தை பலப்படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கட்சியின் மாநாடு வன்னி மாவட்ட சுதந்திரக்கட்சியின் பிரதம அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.கே.மஸ்தான் தலைமையில் நேற்று (23.03) வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளரரும், குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி கலந்துகொண்டிருந்தார்.

ஆரம்ப நிகழ்வாக வன்னி பாராளுமன்ற உறுப்பினரால் அழைத்துவரப்பட்ட அதிதிகள் மங்கள விளக்கேற்ற சர்வமத குருக்களின் ஆசிர்வாத செய்தியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது.

வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்ட இக்கட்சி மாநாட்டில் வன்னி மாவட்டத்திலுள்ள 582 கிராம சேவகர் பிரிவிலும் கட்சியின் உறுப்பினர்களை நியமிப்பது, அங்கத்தவர்களை கட்சிக்குள் உள்வாங்குவது, கட்சியின் தேசியக் கொள்கை, பொருளாதாரக் கொள்கை மற்றும் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான விளக்கங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளரால் அளிக்கப்பட்டது.

இதன்போது வன்னியில் எதிர்காலத்தில் கட்சியை கட்டமைத்து முன்னேற்றுவது குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட்டது.

பொதுப்பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு!!

பொதுப்பரீட்சை  திகதிகள்

கல்வி அமைச்சின் பரீட்சைகள் திணைக்களத்தினால் இவ்வாண்டு நடாத்தப்படவிருக்கும் பொதுப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 04ஆம் திகதியன்று நடைபெறும்.

அதேபோன்று க.பொ.த உயர்தரப்பரீட்சை எதிர்வரும் 05.08.2019 ஆம் திகதி தொடக்கம் 31.08.2019 வரை நடைபெறும். க.பொ.த. சாதாரணதரப்பரீட்சை எதிர்வரும் 02.12.2019 ஆம் திகதி தொடக்கம் 12.12.2019 வரை நடைபெறும்.

அதேவேளை கடந்த 2018ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறு இந்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பெரும்பாலும் 28ஆம் திகதி வியாழக்கிழமை வெளிவரலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த டிசெம்பர் 3ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை நடைபெற்ற க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் 656641 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். இவர்களில் 422850 பாடசாலை மாணவர்களும் 233791 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றியிருந்தனர். இப்பரீட்சார்த்திகளுக்காக 4661 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலிருந்து மனைவியை பார்க்க லண்டன் செல்ல முற்பட்டவருக்கு நேர்ந்த கதி!!

வெளிநாட்டு பிரஜை

சட்டவிரோதமான முறையில் பிரித்தானிய செல்ல முற்பட்ட வெளிநாட்டு பிரஜை இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார். போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி பிரித்தானியா செல்ல முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அவரை டுபாய்க்கு நாடு கடத்துவதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 32 வயதான ஈராக் நாட்டவர் ஒருவரையே குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர்.

டுபாயிலிருந்து இலங்கை வந்த நபர் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவரிடம் நீண்ட நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் நாடு கடத்தப்பட்டுள்ளார். அவர் பிரித்தானியர் போன்று மிகவும் சரலமாக ஆங்கிலம் பேசியுள்ளார். தான் பிரித்தானியர் எனவும் தனது மனைவியை பார்க்க செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். பின்னர் அதிகாரிகள் இந்த நபரின் கடவுசீட்டை விசேட தொழில்நுட்பம் பயன்படுத்தி சோதனையிட்டது.

இதன்போது பிரித்தானியா கடவுச்சீட்டிற்கு பயன்படுத்தப்படும் விசேட பாதுகாப்பு பொருள் ஒன்று அதனுள் இல்லமையினால் அது போலி கடவுச்சீட்டு என தெரியவந்துள்ளது. அதன் பின்னர் அவரது பயண பையை சோதனையிட்ட போது மறைத்து வைக்கப்பட்ட அவரது ஈராக் கடவுச்சீட்டு குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர் பல விமான நிலையங்கள் ஊடாக இலங்கை வந்த போதிலும் வேறு நாட்டு அதிகாரிகளினால் இவர் போலி கடவுச்சீட்டு பயன்படுத்துவதனை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.