யாழ்ப்பாணத்தில் மரண சடங்கு நடந்த வீட்டில் ஆயுதங்களுடன் சென்ற நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்பாணம் அளவெட்டிப் பகுதியில் நேற்று முன்தினம் நடந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்த நபரின் மரண சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இதன் போது வாள்களுடன் நுழைந்த கும்பல் ஒன்று, அங்கிருந்தவர்களை வாளால் வெட்டி அச்சுறுத்தி நகை மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
அல்லைப்பிட்டியில் நேற்று முன்தினம் நடந்த விபத்தில் உயிரிழந்த இளைஞனின் இறுதிக் கிரியைகள் நேற்று நடைபெற்றது. இறந்தவரின் சடலம் வீட்டுக்கு வந்து சேர்வதற்கு முன்னர் இந்தச் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாள் தோறும் தினமும் இரண்டு தடவைமின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காலை 8.30 மணி முதல் முற்பகல் 11.30 மணி அல்லது முற்பகல் 11.30 மணி முதல் நண்பகல் 2.30 மணி வரையில் அல்லது நண்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை மூன்று மணித்தியாலங்களும், மாலை 6.30 முதல் இரவு 7.30 வரையில் அல்லது இரவு 7.30 முதல் – இரவு 8.30 மணி வரையிலும் மின் தடை அமுல்படுத்தப்பட உள்ளது.
தொடர்சியாக நாட்டில் நிலவி வரும் வறட்சியான காலநிலையினால் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது என இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
திருகோணமலை குச்சவெளி பகுதியில் பதினான்கு வயதுடைய சிறுமியை ஒரு வருடமாக காதலித்து பெற்றோர்களுக்கு தெரியாமல் அழைத்துச் சென்ற காதலனை இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று உத்தரவிட்டார்.
மூன்றாம் வட்டாரம், கும்புறுப்பிட்டி, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 25வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளர். சந்தேக நபர் பதினான்கு வயதுடைய சிறுமியை ஒரு வருடமாக காதலித்து பெற்றோர்களுக்கு தெரியாமல் சிறுமியை நண்பர் ஒருவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்த நிலையிலே சிறுமியின் பெற்றோர் சந்தேக நபர் தொடர்பாக குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நபரைக் கைது செய்த பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
2018ஆம் ஆண்டில் இடம்பெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பெறுபெறுகள் அடுத்த வாரத்தில் வெளியிடப்படவுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
இந்த பெறுபேறுகள் எதிர்வரும் 28ஆம் திகதியன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப்பரீட்சையில் 656,641 பரீட்சாத்திகள் 4661 நிலையங்கள் ஊடாக தோற்றியுள்ளனர்.
க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பெறுபெறுகள் அடுத்த வாரம் 28ம் திகதி வெளியிடப்படவுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது
சவுதி அரேபியாவில் வெளிநாட்டு பணி பெண்ணாக சேவை செய்த நிலையில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலம் ஒன்று மாறி சென்ற செய்தி வெளியாகியிருந்தது. இந்திய நாட்டவர் ஒருவரது சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் இலங்கை பெண்ணின் சடலம் குறித்த இந்தியர் வீட்டிற்கு சென்றுள்ளது.
இலங்கைக்கு வந்த இளைஞனின் சடலத்தை மருத்துவர்கள் சோதனையிடும் போதே அடையாளம் காணப்பட்டுள்ளது. மாவநெல்ல மாலியத்த பிரதேசத்தில் பண்டார மெனிக்கே என்ற பெண் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் திகதி சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார்.
அங்கிருந்து அவர் இலங்கைக்கு வராத போதிலும் குடும்பத்தினருடன் தொலைபேசி ஊடாக தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். கடந்த 12ஆம் திகதி பண்டார மெனிக்கேவின் குடும்ப உறுப்பினர்களுக்கு தொலைபேசியில் அழைப்பேற்படுத்தி தனது நோய்த்தன்மை தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார்.
அதன் பின்னர் 15ஆம் திகதி பண்டார மெனிக்கே உயிரிழந்துவிட்டதாக வேறு ஒருவர் தொலைபேசி ஊடாக அவரது குடும்பத்தினரிடம் தெரியப்படுத்தியுள்ளனர். அத்துடன் சடலத்தை அனுப்பி வைப்பதாகவும், அதனை ஏற்பதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தருமாறும் குறிப்பிட்டுள்ளனர்.
அதற்கமைய சென்ற குடும்பத்தினர் இந்திய இளைஞனின் சடலத்தை பெற்று வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பின்னர் இது தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. எப்படியிருப்பினும் பண்டார மெனிக்கேவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் உயிர்தப்பிய வங்கதேச வீரர் தனது காதலியை மணமுடித்துள்ளார். வங்கசேத அணியின் சகலதுறை ஆட்டக்காரரான மெஹிடி ஹாசன் கடந்த 15 ஆம் திகதி நியூசிலாந்தில் உள்ள மசூதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் நொடிப்பொழுதில் உயிர்தப்பினார்.
அந்த அதிர்ச்சியில் இருந்து இதுவரை மீளவில்ல, மறுபிறவி எடுத்து வந்தது போல உணர்கிறேன் என சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இவர் தனது நீண்டநாள் காதலியை மணமுடித்துள்ளார். குல்னா பகுதியில் நடைபெற்ற இவரது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.
இது ஒரு உணர்வுப்பூர்வமான நிகழ்வு என தனது பேஸ்புப் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார் மெஹிடி ஹாசன்.
வலிக்க வலிக்க பெற்ற குழந்தையைப் பார்த்து புன்னகைத்த அந்த தாய்க்கு, அப்புறம் அந்த குழந்தையை பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை, காரணம் ஒரு அனுபவமில்லாத மருத்துவர். ரஷ்யாவைச் சேர்ந்த Alisa Tepikina (22), ஒரு அழகிய பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததும், அவளது முகத்துக்கருகே அந்த குழந்தையைக் காட்டினார்கள் தாதிகள்.
பின்னர் அவரது தொப்புள் கொடி இயற்கையாக விழாததால் அவசரமாக ஒரு பெண் மகப்பேறு மருத்துவர் வரவழைக்கப்பட்டார். அந்த மருத்துவர் அப்போதுதான் தனது மகப்பேறு மருத்துவக் கல்வியை முடித்திருந்தார். அந்த மருத்துவர், தொப்புள் கொடியைப் பிடித்து பலமாக இழுக்க, தொப்புள் கொடி பிய்ந்து வந்ததோடு, கர்ப்பப்பையின் உள் பகுதி வெளிப்புறமாக திரும்பி விட்டிருக்கிறது.
ஏற்கனவே பிரசவித்த வலி அடங்காத Alisa, மேலும் வலியால் துடித்து கோமா நிலைக்கு சென்றிருக்கிறார். பின்னர் மாரடைப்பும் சேர்ந்து கொள்ள, Alisa பின்னர் கண் விழிக்கவே இல்லை. தனது மகளை ஒரு முறை பார்த்து சிரித்த Alisa, மீண்டும் அவளை பார்க்கவேயில்லை, அவரது மகளும் அப்புறம் அம்மாவைப் பார்க்கவேயில்லை.
இதற்கிடையில் இறந்துபோன Alisaவின் அருகில் அவரது கணவனை உட்கார வைத்து, அவரது நிலை மோசமாக இருப்பதாக வேறு பொய் சொல்லியிருக்கிறார்கள் மருத்துவமனை நிர்வாகத்தார். தற்போது அந்த மகப்பேறு மருத்துவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு அவர் மீது குற்றவியல் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இந்தியாவின் கேரள மாநிலத்தை நடுக்கிய ஆணவக்கொலையின் முதலாம் ஆண்டில் தமது காதலை மார்போடு அணைத்த இளைஞர். திருமணத்தன்று சொந்தம் தந்தையால் கொல்லப்பட்ட தமது காதலி தொடர்பில் ஓராண்டு நிறைவில் இளைஞர் எழுதிய பேஸ்புக் பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இரு குடும்பத்தாரின் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொள்ள ஆச்சைப்பட்ட இளம்பெண், சொந்த தந்தையால் படுகொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து உடைந்து நொறுங்கிய பிரிஜேஷ் என்ற இளைஞரின் புகைப்படம் பொதுமக்களின் நெஞ்சை உலுக்கியது.
திருமணத்திற்கு சில மணி நேரமே மீதம் இருந்த இருந்த நிலையில், ஆதிரா சொந்தம் தந்தையால் கத்தியால் குத்தப்பட்டு மரணமடைந்தார். தமது சாதியை விடுத்து வேறு சாதி இளைஞருடன் காதல் திருமணம் செய்துகொள்ள முயன்றதே இறுதியில் கொலையில் முடிந்துள்ளது.
அதிக மதுபோதையில் இருந்ததாலையே மகளை கொலை செய்ததாக, பொலிசாரிடம் ஆதிராவின் தந்தை ராஜன் தெரிவித்துள்ளார். ஆதிரா, வேறு சாதி இளைஞரை காதலிப்பதை தந்தையான ராஜன் கடுமையாக எதிர்த்து வந்துள்ளார்.
இந்த விவகாரம் பொலிசார் தலையிட்டு முடிவுக்கு கொண்டுவந்தனர். மட்டுமின்றி இரு குடும்பத்தாருக்கும் பொதுவாக கோவிலில் வைத்து திருமணம் நடத்தவும் முடிவானது.
ஆனால் திருமணத்தன்று மதுபோதையில் வீட்டிற்கு வந்த ராஜன், தமது மனைவி மற்றும் மகளிடம் திருமணம் தொடர்பில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் தந்தையிடம் இருந்து தப்பித்து அருகாமையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் மறைந்திருந்த ஆதிராவை தேடிச் சென்று ராஜன் கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
திருச்சியில் கர்ப்பிணி மனைவியை சேர்த்து வைக்குமாறு கோரிக்கை விடுத்த முன்னாள் கணவன், பட்டப்பகலில் ஓட ஓட வெட்டிபடுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சேர்ந்த சதீஷ்குமார் (24) கடந்த 2017ம் ஆண்டு அனிதா என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அப்போது கணவன் – மனைவிக்கு இடையில் தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததால், அனிதா தன்னுடைய பெற்றோரின் வீட்டிற்கு திரும்பி விட்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனிதாவிற்கு அவருடைய பெற்றோர் வேறு ஒரு நபருடன் திருமணம் செய்து வைத்தனர். அனிதா தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதற்கிடையில் அனிதாவிற்கும், சதீஷிற்கும் இடையில் மீண்டும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. செல்போனில் பேச ஆரம்பித்த இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டுள்ளனர்.
நேற்றைக்கு முன்தினம் கோவில்பட்டிக்கு சென்ற சதீஷ், அனிதாவை தன்னுடன் மதுரைக்கு அழைத்து வந்துவிட்டார். இந்த சம்பவம் அறிந்த அனிதாவின் பெற்றோர் மதுரைக்கு விரைந்து, மகளை தங்களுடன் அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளனர்.
ஆனால் சதீஷ் குடும்பத்தினர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரண்டு குடும்பத்திற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இந்த சம்பவம் குறித்து சதீஷ் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் இரண்டு குடும்பத்தையும் அழைத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதன்பிறகு சதீஷ் மட்டும் தனியாக பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் 4 பேர், திடீரென சுற்றிவளைத்து மறைத்து வைத்திருந்த அரிவாள் போன்ற ஆயுதங்களால் சதீஷை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிள்ளனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதற்குள் சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து வந்த பொலிஸார் சதீஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவத்தில் அனிதாவின் சகோதரன் செந்தில்குமாருக்கு இதில் தொடர்பு இருக்கிறதா என்கிற கோணத்திலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்தியாவில் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிர் பிழைப்பதற்கு 10 சதவீதம் தான் வாய்ப்புள்ளது என்று கூறப்பட்ட நிலையில், அரசு மருத்துவர்களின் சிகிச்சையால் சிறுவனுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், போபால் பகுதியைச் சேர்ந்தவர் ஜெத்தேந்தர் பர்மன். இவருக்கு ராகுல் என்ற ஐந்து வயது மகன் உள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் தமிழகத்தின் திருப்பூரில் தங்கி கூலி வேலை செய்வதற்காக போபாலில் இருந்து சிலருடன், தன்னுடைய குடும்பத்தையும் ஜெத்தேந்தர் ரயிலில் அழைத்துவந்தார்.
வேலூர் மாவட்டம், காட்பாடியை ரயில் கடந்தபோது, சிறுவன் ராகுலுக்கு திடீரென காய்ச்சலுடன் வலிப்பு ஏற்பட்டது. அடுத்த சில சிறுவனின் மூக்கில் இரத்தம் வழிந்தது. அதன் பின் சிறுவன் திடீரென்று மயங்கி விழுந்தார்ன்.
இதனால் இரயில்வே பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக சிறுவனை மீட்டு அருகிலிருக்கும் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனை மருத்துவர்கள் பரிசோதித்த போது, சிறுவனுக்கு மூளைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், அபாயக் கட்டத்தை எட்டியிருப்பதால் உயிர்பிழைப்பது கடினம். 10 சதவிகிதம் மட்டுமே காப்பாற்ற வாய்ப்பிருப்பதாகவும் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சியில் பெற்றோர் உறைந்து நிற்க, உடனடியாக மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் ராகுல் அனுமதிக்கப்பட்டான்.
மருத்துவமனை டீன் சாந்திமலர் மேற்பார்வையில், குழந்தைகள் நலத்துறைத் தலைவர் மருத்துவர் தேரணிராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், சிறுவனைத் தீவிர கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்துவந்தனர்.
இந்நிலையில், சிறுவன் ராகுல் குணமடைந்துள்ளான். இன்னும் சில நாள்கள், சிகிச்சை பெற்றபிறகு, சிறுவன் டிஸ்சார்ஜ் செய்யப்படுவான் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 10 சதவீதமே உயிர் பிழைக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறப்பட்ட சிறுவனை மருத்துவர்கள் காப்பாற்றியதால் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
பிரித்தானியாவில் பிஞ்சுக்குழந்தை ஒன்று பிறந்ததும் “சூப்பர் மேன்” போல போஸ் கொடுத்தபடியே இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பிரித்தானியாவை சேர்ந்த ப்ரீ ஜெசிக்கா என்கிற தாய்க்கு, அறுவை சிகிச்சை மூலம் ஹாரி மற்றும் ஜாக் என்கிற இரண்டு குழந்தைகள் பிறந்தன.
இதில் இரண்டாவது குழந்தையான ஹரி, 40 வாரம் 4 நாட்களில் அறுவை சிகிச்சையின் மூலம் பிறந்தான். அந்த அனுபவம் மிகவும் அமைதியாக இருந்தது என குறிப்பிட்டு, ஜெசிக்கா தன்னுடைய மகனின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.
ஆனால் அவருக்கு அப்பொழுது தெரியாது, அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவும் என்று. அந்த புகைப்படத்தில் குழந்தை ஹரி ”சூப்பர் மேன்” போல போஸ் கொடுத்துள்ளது.
ஹரிக்கு தற்போது 7 வயதாகிறது. ஆனால் குழந்தை பிறந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வேறு ஏதேனும் இருக்கிறதா என மக்கள் இன்னும் அவரிடம் கேட்பதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் இளம் தம்பதி ஒன்று தாயார் உள்ளிட்ட தங்கள் குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேரை கொன்று, சடலங்களுடன் ஒருமாத காலம் தங்கியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ரஷ்யாவின் Sverdlovsk பிராந்தியத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த விவகாரத்தில் 24 வயதான அனஸ்தேசியா ரைபுகீனா மற்றும் அவரது காதலன் 22 வயதான அலெக்சாண்டர் நெடுனேவ் ஆகிய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் தாயார் மற்றும் சகோதரியை அனஸ்தேசியா கத்தியால் கண்மூடித்தனமாக தாக்கி கொலை செய்துள்ளார். மேலும் இன்னொரு உறவினரை அலெக்சாண்டர் கொலை செய்துள்ளார். இவர்கள் மூவரின் உடலையும் நிலத்தடி அறையில் மறைவு செய்துள்ளனர்.
மட்டுமின்றி, தமது காதலியுடன் நெருக்கமாக பழகியதாக கூறி Oleg Dryabin என்ற 30 வயது நபரை கழுத்தை அறுத்து அலெக்சாண்டர் கொலை செய்துள்ளார். அந்த நபரின் உடலை மூன்று வாரங்களுக்கு பின்னர் இவர்களது அறையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அனஸ்தேசியாவுக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அவரது காதலனுக்கு ஆயுள் தண்டனையும் கிடைக்கலாம் என கூறப்படுகிறது.
வவுனியா மாவட்டத்தில் தொடர்ந்தும் பகல் வேளைகளில் சுமார் நான்கு மணிநேரம் வரை மின்வெட்டு காணப்படுகின்றது. கடந்த சில நாட்களாக குறித்த மின்வெட்டு காணப்படுவதனால் மக்களும், வர்த்தகர்களும் விசனம் தெரிவிக்கின்றனர். நீண்ட நேர மின்வெட்டு காரணமாக வர்த்தகர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
வவுனியா மாவட்டத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவரும் நிலையில், இவ்வாறான மின்வெட்டு இடம்பெறும் சந்தர்ப்பங்களில் பெரும் சிரமங்களை மக்கள் எதிர்கொள்கின்றனர்.
இதேவேளை குளிர்சாதன பெட்டிகளை நம்பி வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களும் குறித்த மின்வெட்டினால் தாம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். மேலும் 4 மணிநேரம் வரை தொடர்ச்சியாக மின்வெட்டு காணப்படுவதனால் சிலை அலங்கரிப்பு நிலையங்கள், தையல் நிலையங்கள் என பல்வேறு தொழில்சார் பாதிப்புக்களும் ஏற்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான மின்வெட்டு நடைமுறையில் உள்ள நிலையில் தமது உள்ளுர் உற்பத்திகள் சிலவற்றை பாதுகாக்கவும், உற்பத்தி மேற்கொள்வதிலும் பெரும் சவால் நிலவுவதாகவும் தெரிவிக்கின்றனர். குறித்த மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் எவ்வித முன்னறிவித்தல்களும் வழங்கப்படுவதில்லை எனவும் மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகளிற்கு பொருத்தமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், தடையற்ற மின்சார வினியோகத்தை இலங்கை மின்சார சபையினர் முன்னேடுக்க வேண்டும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கொழும்பின் புறநகர் பகுதியில் கோடீஸ்வர வர்த்தகரை கொலை செய்த குற்றசாட்டில் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். கொட்டாவை – லியனகொட பிரதேசத்தில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை மனைவி மற்றும் வர்த்தகருக்கு இடையில் வாய்த்தகராறு ஒறு ஏற்பட்டுள்ளது. வாய்த்தகராறு முற்றிய நிலையில் கணவனை மனைவி கத்தியால் குத்தியுள்ளார். கொலை சம்பவம் தொடர்பில் மனைவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது கணவன் தன்னை தாக்கியதாகவும், கணவனின் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக கத்தியால் குத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொட்டாவ பிரதேசத்தில் ஆடை வர்த்தகம் மேற்கொள்ளும் வர்த்தகரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். அவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். கைது செய்யப்பட்ட பெண் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினரின் அசமந்த போக்கினால் மணிபுரம் முனியப்பர் வீதியில் குடியுள்ள மக்கள் கடந்த 20 நாட்களுக்கு மேலாக சிரமக்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைக்குட்பட்ட மணிபுரம் முனியப்பர் வீதியினை செப்பனிடும் பணி ‘கம்பெரலிய’ என்ற கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் ஆரம்பித்து வைக்கப்பட்டு வீதியில் போக்குவரத்து செய்ய முடியாத வகையில் பெருமளவு கிரவல் மண் கொட்டப்பட்டுள்ளது.
குறித்த வீதியினை திருத்துவதாக தெரிவித்து வீதியின் நடுவே பெருமளவு கிரவல் மண் கொட்டப்பட்டுள்ளமையினால் 20 நாட்களாக அவ்வீதியூடாக துவிச்சகரவண்டியில் கூட போக்குவரத்தை மேற்கொள்வதில் பொதுமக்கள் பெரிதும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
வீதியால் சென்று வரும் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்கு உட்பட்டுள்ளதுடன் அவசர தேவையின் நிமித்தம் வாகனத்தில் சென்று வருவதற்கு பெரும் தடையாகவுள்ளது.
எனவே இந்த வீதி புனரமைப்புக்களை மேற்கொண்டு வருபவர்கள் பொதுமக்களின் அவசர தேவைகளைக் கருத்தில் கொண்டு வீதியில் போடப்பட்டுள்ள கிரவலை அகற்றி அப்பகுதி மக்களின் போக்குவரத்தினை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பாக பல தடவைகள் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம் அவர்களிடம் பொதுமக்கள் தெரிவித்திருந்த போதிலும் மணிபுரம் பின்தங்கிய கிராமமாக காணப்படுவதினால் அவர்களின் கோரிக்கையினை தவிசாளர் செவிமடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம் அவர்களிடம் ஊடகவியலாளர் தொடர்பு கொண்டு வினவிய போது , கடந்த 20 நாட்களாக அவ் வீதியில் போக்குவரத்து இடையூரான முறையில் மண் குவிக்கப்பட்டுமையினையிட்டு மனவருந்துகின்றேன். கிரவல் மண் தட்டுப்பாட்டினாலேயே பல நாட்களாக வீதியினை செப்பனிட முடியவில்லை என தெரிவித்தார்.
இவ் வீதி வீதி வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குரிய வீதி என்ற வகையில் மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் இந்த செயற்பாடு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது பிரதேச சபையின் கடமையாகும்.
வவுனியா வடக்கு மருதோடை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரமோட்டை கிராமத்தில் புதையல் தோண்டிய நால்வரை புளியங்குளம் பொலிசார் கைது செய்துள்ளனர்.
புளியங்குளம் பகுதியில் புதையல்களுடன் முச்சக்கரவண்டியில் சென்ற நால்வரை நேற்று (22.03.2019) இரவு 8 மணியளவில் கைது செய்த புளியங்குளம் பொலிசார் அவர்களிடமிருந்த புதையல் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த நான்கு நபர்களும் காஞ்சிரமோட்டை காட்டுப்பகுதியில் பேக்கோ மூலம் புதையல் தோண்டியுள்ளனர். இதன் போது பழைய காலத்து புத்தர் சிலை, கல்வெட்டு, கலசம், விளக்கு மற்றும் மலையாள மாந்திரிக புத்தகங்கள் போன்ற பல பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றிய பொருட்களை முச்சக்கரவண்டியில் கடத்திச் செல்ல முற்பட்ட சமயத்தில் புளியங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற புளியங்குளம் பொலிஸார் குறித்த நான்கு நபர்களையும் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்த வாகனம் மற்றும் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் இன்று (23.03) வன்னி பிரதிபொலிஸ் மாஅதிபர் எஸ்.அனுர அபயவிக்கிரம தலைமையில் அவரது அலுவலகத்தில் ஊடகவியலாளருக்கு காண்பிக்கப்பட்டது.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய 35,35,40,42 வயதுடைய தலவாக்கலை, திருகோணமலை, மட்டக்களப்பு, நெடுங்கேனி பகுதியினை சேர்ந்த நான்கு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன்,
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களிடமிருந்து கைப்பற்ற பொருட்கள் மற்றும் பெக்கோ, முச்சக்கரவண்டி போன்றவற்றை வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்த பொலிஸார் புதையல் பொருட்கள் என சந்தேகிக்கப்படும் பொருட்களை தொல்பொருள் திணைக்களகத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.