12 வயதில் மது, போதைக்கு அடிமை… 13 வயதில் கருக்கலைப்பு : அதிர்ச்சியளிக்கும் சிறுமியின் வாழ்க்கை!!

அதிர்ச்சியளிக்கும் சிறுமியின் வாழ்க்கை

பிரித்தானியாவை சேர்ந்த 19 வயது சிறுமி 12 வயதிலே மது, உள்ளிட்ட பல போதை பழக்கங்களுக்கு அடிமையாகி அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

லோரி ஹாக்கின்ஸ் (19) என்கிற சிறுமி, 12 வயதிலே மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியிருக்கிறார். மது குடிப்பது, ஊக்க மருந்து எடுத்துக்கொள்வது பின்னர் குளிப்பது என இவருடைய தினசரி வாழ்க்கை முற்றிலுமாக மாறியிருக்கிறது.

இதுகுறித்து பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள லோரி, எனக்கு தினமும் மது தேவைப்பட்டது. அப்பொழுது தான் நானும் என்னுடைய தோழியும், தற்போது 37 வயதாகும் ராபர்ட் டேவிஸ் என்பவரை சந்தித்தோம். அவரும் எங்களுக்கு உதவி செய்வதாகவும், அதற்கு பதிலாக எங்களுடைய செல்போன் எண் வேண்டும் என கேட்டார்.

நானும் கொடுத்து அவருடன் தினமும் பேசி பழக ஆரம்பித்தேன். அப்படி தான் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட ஆரம்பித்தது. அவருடன் பழக வேண்டாம் என என்னுடைய தோழி அடிக்கடி வற்புறுத்திக்கொண்டே இருந்தாள். ஆனால் அதனை நான் பொருட்படுத்தவில்லை.

எனக்கு 13 வயது நடக்கும் போது ஒருமுறை இருவரும் ஒரே படுக்கையில் இருக்க ஆரம்பித்தோம். அதில் எந்த தவறும் இருப்பதாக அப்போது எனக்கு தெரியவில்லை. 3 மாதம் கழித்து என்னுடைய உடல் எடை அதிகரித்தது. இதனை பார்த்த என்னுடைய பெற்றோர் பெரும் அதிர்ச்சியடைந்தனர். பரிசோதித்தபோது நான் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அந்த சமயத்தில் ராபர்ட் என்னிடம் இருந்து விலகி செல்ல ஆரம்பித்தான். யார் காரணம் என்று கேட்டால் பெயரை சொல்லக்கூடாது என்றும் என்னிடம் கேட்டுக்கொண்டான்.

எதற்கு இப்படி எல்லாம் நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு தவறு நடந்துவிட்டது என்பதை மட்டும் நான் புரிந்து கொண்டேன். என்னுடைய உறவினர்கள் அனைவரும் சூழ்ந்துகொண்டு யார் காரணம் என துருவித்துருவி விசாரித்தனர். ஆனால் நான் வாய் திறக்க மறுத்துவிட்டேன்.

பின்னர் எனக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது. அன்று முதல் ராபர்ட் என்னிடம் இருந்து விலக ஆரம்பித்தேன். ஒருநாள் தனியாக இருக்கும் போது என்னுடைய கர்ப்பம் குறித்து தந்தையிடம் கூறினேன். மேலும், நான் போதைக்கு அடிமையாகியிருந்த சமயம் எனக்கு அதிக அறிவுரைகளை வழங்கிய ஒரு பொலிஸாருக்கும் தகவல் தெரிவித்தேன்.

நடந்த அனைத்தையும் முழுமையாக விவரித்தேன். உடனே ராபர்ட் கைது செய்யப்பட்டான். ஜூன் 19, 2015ம் திகதியன்று நடந்த வழக்கில் ராபர்ட்டுக்கு 10 ஆண்டுகள் 8 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த சம்பவத்தில் இருந்து நான் சிறிது சிறிதாக விலகி வந்துகொண்டிருக்கிறேன். மதுவை முற்றிலும் நிறுத்திவிட்டேன். நான் முழுமையாக மீண்டதும், இதில் பாதிக்கப்பட்டுள்ள பல சிறுமிகளுக்கு உதவ முடிவெடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நாயுடன் மல்லுக்கட்டிய குள்ளமனிதன் :10 அடி தூரம் பாய்ந்து சென்றதால் பரபரப்பு!!

குள்ளமனிதன்

குருணாகலில் மீண்டும் குள்ள மனிதர்களின் அட்டகாசம் தலைதூக்கியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ள. கலகெதர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் குள்ளமனிதர்கள் வந்து சென்றதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

குள்ள மனிதர்களின் அட்டகாசம் காரணமாக பிரதேச மக்கள் தமது வீடுகளை கைவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகளவான மக்கள் வேறு இடங்களிலேயே தங்கியிருப்பதாகவும் இதனால் அவர்களின் தினசரி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட காயம்மா என் பெண்,

நேற்று மாலை ஒரு மணியளவில் நான் பகல் உணவு பெற்றுக் கொள்ள சென்றேன். திடீரென வாசலில் இருந்த நாய் குரைக்க ஆரம்பித்தது. நாய் குரைக்கும் திசையை நோக்கி பார்க்கும் போது இரண்டரை உயரத்தில் மிண்ணும் கண்களுடன் குரங்கு போன்ற மிருகம் ஒன்று நாயுடன் மல்லுக்கட்டியது.

நான் கூச்சலிட ஆரம்பித்தவுடன் அந்த மிருகம் அங்கிருந்து ஓடிவிட்டது. நான் பாரிய காயமடைந்த நிலையில் காணப்பட்டது. எனினும் குள்ள மனிதனை கணடுபிடிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

இதேவேளை மற்றுமொரு வீட்டிற்கு இரவு நேரத்தில் சென்ற குள்ள மனிதர் கதவை தட்டியுள்ளார். அதளை அடித்துவிட நினைத்த போது 10அடி தூரம் வரை பாய்ந்து சென்றுள்ளதாக லஹிரு என்ற இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.

8 மாத குழந்தைக்காக 9 தாய்மாரின் நெகிழ்ச்சியான சம்பவம் : வியந்து போன பொலிசார்!!

ஹட்டனில் பல மணித்தியாலங்கள் பசியால் வாடிய குழந்தையின் பசியை போக்க 9 தாய்மார் முன்வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நல்லதண்ணி பிரதேசத்தில் 10 மணித்தியாலங்களுக்கு அதிக நேரம் பசியோடு இருந்த 8 மாத குழந்தைக்கு 9 தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்க முன்வந்துள்ளனர்.

சிவனொளிபாதமலை யாத்திரைக்காக வந்த பெண் ஒருவர் தனது குழந்தைக்கு குளிரும் என்பதால், யாத்தரையை முடித்து விட்டு வரும் வரை குழந்தையை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு இன்னொரு பெண்ணிடம் கொடுத்து விட்டு சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் சென்ற தாய் நேற்று காலை வரை வரவில்லை. தாய் பால் மாத்திரம் அருந்தும் குழந்தை பசியில் அழ ஆரம்பித்துள்ளது. செய்வதறியாத பெண் சம்பவம் தொடர்பில் நல்லதண்ணி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

உடனடியாக செயற்பட்ட பொலிஸார் ஒலிபெருக்கி ஊடாக தாயை அவ்விடத்திற்கு வருமாறு அவசர அறிவிப்பு விடுத்துள்ளார்.

அந்த செய்தி வழங்கப்பட்ட பின்னரும் தாய் அவ்விடத்திற்கு வரவில்லை என்பதனால் தாய்ப்பால் வழங்க கூடிய 9 தாய்மார்கள் நல்லதண்ணி பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

குறித்த தாய்மார்களின் பாசத்தை கண்டுவியந்து போன பொலிஸ் அதிகாரிகள், ஒரு பெண்ணிடம் குழந்தையை வழங்கி தாய்ப்பால் வழங்குமாறு குறிப்பிட்டுள்ளார்.

காலை 8.30 மணியளவில் அவ்விடத்திற்கு வந்த தாய் கூட்ட நெரிசல் காரணமாக பிழையான வீதியில் பயணித்து விட்டதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து : கர்ப்பிணித்தாய் உட்பட இருவர் பலி, 61 பேர் படுகாயம்!!

கோர விபத்து

நுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பிணித் தாய் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

வலப்பனை, நுவரெலியா பிரதான வீதியில் மஹா ஊவாபத்தன, பகுதியில் தனியார் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. நுவரெலியாவிலிருந்து, நுவரெலியா – வலப்பனை வழியாக அம்பாறை நோக்கி பயணித்த தனியார் சுற்றுலா பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

காயமடைந்தவர்களை உடனடியாக வலப்பனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அங்கிருந்து அனைவரும் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். இதன்போது வலப்பனை வைத்தியசாலையில் வைத்து 28 வயது மதிக்கதக்க அம்பாறை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இதேவேளை, நுவரெலியா வைத்தியசாலையில் வைத்து கர்ப்பணி தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் கவலைக்கிடமாக இருந்த சிலர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

பேருந்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக பாரிய வளைவு பகுதியில் பேருந்தை செலுத்த முடியாததன் காரணமாகவே, இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் சிறுவர்களும் அடங்குவதோடு, சிலர் நுவரெலியா ஆதார வைத்தியசாலையிலும், சிலர் கண்டி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் நுவரெலியா மற்றும் வலப்பனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து தொடர்பில் வலப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை கிரிக்கெட் வீரர் அஞ்சலோ மத்தியூஸின் காதல் கதை!!

மத்தியூஸின் காதல் கதை

இலங்கை கிரிக்கெட் அணியில் முன்னால் அணித்தலைவரும் சகலதுறை ஆட்டக்காரருமான ஏஞ்சலோ மேத்யூஸ் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக ஈடுபாடு கொண்டவர். தொழில் வேறு தனது குடும்ப வாழ்க்கை வேறு, இரண்டிற்குமே சக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் மேத்யூஸ் கவனமாக இருப்பார்.

2004 ஆம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிராக விளையாடியபோது சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். சர்வதேச போட்டிகள், இந்திய ஐபிஎல் போட்டிகள் என பல போட்டிகளில் இவரது ஆட்டம் முக்கியத்துவம் பெற்றது.

தற்போதும் இலங்கை அணியின் முன்னணி வீரராக இருக்கும் ஏஞ்சலா மேத்யூஸ் 2013 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார். இவரது அழகிய காதல் கதை குறித்து பார்ப்போம்,

ஏஞ்சலோ மேத்யூஸின் தந்தை Tyronne Mathews ஒரு கிரிக்கெட் பயிற்சியாளர் ஆவார். இதனால் சிறுவயதில் இருந்து மேத்யூஸ்க்கு கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் இருந்த காரணத்தால் அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.

தனது 19 வயதில் வருங்கால மனைவி ஹெஷானியை முதல் முறையாக மேத்யூஸ் சந்தித்துள்ளார். ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாக பழகியுள்ளனர். அதன்பின்னர் இருவரும் ஒருவரையொருவர் காதலித்த தொடங்கியுள்ளனர். காதலை வெளிப்படுத்தியது முதலில் மேத்யூஸ்தான்.

நான் உன்னை காதலிக்கிறேன், நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என மேத்யூஸ், ஹெஷானியுடம் கேட்டபோது, பதில் எதுவும் தெரிவிக்காமல் வீட்டுக்கு வந்துவிட்டார் ஹெஷானி.

வீட்டிற்கு வந்த அவர், உடனே தனது அம்மாவிடம்…..மேத்யூஸ் என்னை பிடித்திருக்கிறது என கூறினார் என தெரிவித்துள்ளார். இதனை கேட்ட அம்மா, தனது மகள் மிகவும் ஒழுக்கத்துடன் வளர்ந்துள்ளார் என பெருமிதம் கொண்டுள்ளார்.

பின்னர் இருவரும் ஒருவரையொருவர் காதலிப்பதை உணர்ந்துகொண்ட அம்மா, திருமணம் செய்துவைக்க முடிவுசெய்ததையடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் பம்பளப்பட்டியில் உள்ள செயிண்ட் மேரிஸ் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் அரசியல்வாதிகள், பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த தம்பதியினருக்கு 2017 ஆம் ஆண்டு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

வைத்தியசாலையில் சிறுவனுக்கு மாற்றி ஏற்றப்பட்ட இரத்தம் : பரிதாபமாக பறிபோன உயிர்!!

பரிதாபமாக பறிபோன உயிர்

வேறு நோயாளிக்கு ஏற்ற வேண்டிய இரத்தத்தை தனது மகனுக்கு மாற்றி ஏற்றியதால் அவர் உயிரிழந்து விட்டதாக மட்டக்களப்பில் தந்தையொருவர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அண்மையில் உயிரிழந்த ஏறாவூர் – வந்தாறுமூலை, பலாச்சோலையை சேர்ந்த ஒன்பது வயது சிறுவனின் தந்தையே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த சிறுவன் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு இரத்தம் ஏற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குணமடைந்த சிறுவன் திடீரென நோய்வாய்ப்பட்டதால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் சிறுவனின் சிறுநீரக பகுதியில் கசிவு ஏற்பட்டுள்ளது என வைத்தியர்கள் தெரிவித்ததாக தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் பின்னர் கடந்த 17ஆம் சிறுவன் அசைவற்ற நிலையில் காணப்பட்டமையை அவதானித்த நிலையிலேயே அவருக்கு தவறான முறையில் இரத்தம் ஏற்றப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் உயிரழந்த சிறுவனின் தந்தை மேலும் கூறுகையில், விபத்தில் காயமடைந்த எனது மகனுக்கு இரத்தம் வழங்கப்பட வேண்டிய தேவை இருக்கவில்லை. எனினும் வேறு நோயாளிக்கு ஏற்ற வேண்டிய இரத்தம் எனது மகனுக்கு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் சிறுநீரகத்தில் ஏற்பட்ட பாதிப்பால் மகன் உயிரிழந்துள்ளார்.

இரத்தம் மாற்றி ஏற்றப்பட்டதால் மகன் மரணித்துள்ளார் என பொலிஸாரிடம் அறிக்கை வழங்கியுள்ளதாக பிரேத பரிசோதனையின் பின் சட்ட வைத்திய அதிகாரி என்னிடம் தெரிவித்தார்.

எனவே எனது மகனின் உயிரிழப்பு தொடர்பில் தகுந்த நியாயம் வழங்க வேண்டும் என அவர் கோரியுள்ளார். இதேவேளை சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடு ஒன்றில் பெண்களை துஷ்பிரயோகம் செய்த இலங்கையருக்கு நேர்ந்த கதி!!

துஷ்பிரயோகம் செய்த இலங்கையர்

நியூசிலாந்தில் பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 34 வயதான ஹர்ஷன ரஜீவ் குமார என்ற இலங்கையருக்கு 17 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறித்த இலங்கை இதற்கு முன்னர் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் நீதிமன்றத்தில் குற்றவாளியாகியுள்ளார். அவருக்காக ஆஜராகிய சட்டத்த்தரணியும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று நியூசிலாந்தின் Dunedin மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது தனது கட்சிக்காரர் வேண்டும் என்றே துஷ்பிரயோகம் செய்யவில்லை என சட்டதரணி குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு துஷ்பிரயோகம் செய்வதென்பது அவரின் பொதுவான குணம் அல்ல என சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தியமையினால் அவர் இவ்வாறான காரியத்தில் ஈடுபட்டிருக்க கூடும் என என சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

குறித்த இலங்கையர் நேற்று முன்தினம் பணி நிறைவடைந்து வீட்டிற்கு செல்வதற்காக பேருந்தில் ஏறியுள்ளார். அங்கு அவர் பதின்ம வயது பெண்ணுக்கு அருகில் அமர்ந்து அவரிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டுள்ளார்.

அந்த பெண் பல முறை தடுக்கும் இந்த நபர் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார். இதன் காரணமாக அடுத்த நாள் அந்த பெண் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இலங்கையருக்கு, 17 மாத சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முல்லைத்தீவில் மாயமான நபர் : கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு கோரிக்கை!!

மாயமான நபர்

முல்லைத்தீவு – பாண்டியன்குளம் பகுதியை சேர்ந்த மனநலம் குன்றிய ஒருவர் நேற்று முன்தினம் காணாமல் போயிருப்பதாக மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாண்டியன்குளம் பகுதியில் அவரது பெற்றோருடன் வசித்து வந்த பாலசிங்கம் ஜெயபாவான் (வயது 45) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு காணாமல்போயுள்ளார்.

இதேவேளை, இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 0771127277 அல்லது 0779286264 தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் உறவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலகை உலுக்கிய கொடூரம் : 130இற்கும் அதிகமானோர் படுகொலை!!

உலகை உலுக்கிய கொடூரம்

மாலி நாட்டில் Mopti மாநிலத்தின் Ogossagou பகுதிக்குள் நுழைந்த குழுவினரால் அப்பகுதியை சேர்ந்த 130இற்கும் அதிகமான ப்ளானி என்ற சிறுபான்மையினத்தினர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சிறுபான்மையினத்தினர் ஜீஹாட் போராளிகளுடன் தொடர்பு வைத்துள்ளதாக தெரிவித்து இந்த தாக்குதல் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த குழுவினர் பாரம்பரிய போர் ஆடையில் ஆயுதங்களுடன் குறித்த கிராத்தினுள் நுழைந்து கிராமம் முழுவதையும் சுற்றிவளைத்த பின்னர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

ஆயுதம் தாங்கிய Dogon என்ற பாரம்பரிய வேட்டைக்காரர்களினால் இந்த கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலியில் இடம்பெறும் வன்முறை பற்றி விவாதிக்க ஐ.நா தூதுவர்கள் மாலியில் இருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் துப்பாக்கிகள் மற்றும் அகலமான கத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அங்கிருந்த குடிசைகள் மற்றும் அந்த கிராமம் எரிக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் சற்று முன்னர் பயங்கர விபத்து : 50 பேர் படுகாயம் : பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்!!

பயங்கர விபத்து

வலப்பனை – நுவரெலியா வீதியில் சற்று முன்னர் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வலப்பனை – நுவரெலியா வீதியில் மஹாவுலவத்தை கோயிலுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இராகலையிலிருந்து வலப்பனை நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று மாஹா ஊவா பள்ளத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறைந்தபட்சம் 50 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அம்பாறையிலிருந்து சுற்றுலாவிற்காக பயணித்த பஸ் ஒன்றே, வீதியை விட்டு விலகி, பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வலபனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சுமார் பத்துக்கும் மேற்பட்ட அம்புலன்ஸ் வண்டிகள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து காரணமாக பல உயிர் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைக்கு சுழற்சி முறையில் புதிய உறுப்பினர் நியமனம்!!

புதிய உறுப்பினர் நியமனம்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைக்கு சுழற்சி முறை அடிப்படையில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய உறுப்பினர் ஒருவரை சுயேட்சைக் குழு-1ல் போட்டியிட்ட வடக்கு – கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியம் நியமித்துள்ளதாக அதன் தலைவரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான எம்.பி.நடராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு- கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியம் சுயேட்சைக் குழு-1 என மீன் சின்னத்தில் போட்டியிட்டு விகிதாசார அடிப்படையில் இரண்டு உறுப்பினர்களைப் பெற்றிருந்தது. அவர்களுக்கு ஒரு வருடத்திற்கு ஒருவர் என சுழற்சி முறையில் பதவியினை வழங்க வடக்கு- கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியம் தீர்மானித்திருந்தது.

அதன் அடிப்படையில் ஒரு வருட பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினராக பதவி வகித்த சிவக்கொழுந்து நடராஜா பதவிவிலக, அவரது வெற்றிடத்திற்கு சுயேட்சைக் குழு-1 இல் சாளம்பைக்குளம் தொகுதியில் போட்டியிட்ட சிவபுரம் பகுதியைச் சேர்ந்த மணியம் நாகேந்திரராஜா வடக்கு- கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றியத்தின் தலைவரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான எம்.பி.நடராஜா முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதேவேளை வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றியம் என்ற அமைப்பே தற்போது அகத்தேசிய முற்போக்கு கழகம் என்ற கட்சியாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வைத்தியசாலையில் சிறுவனுக்கு மாற்றி ஏற்றப்பட்ட இரத்தம் : பரிதாபமாக பறிபோன உயிர்!!

வேறு நோயாளிக்கு ஏற்ற வேண்டிய இரத்தத்தை தனது மகனுக்கு மாற்றி ஏற்றியதால் அவர் உயிரிழந்து விட்டதாக மட்டக்களப்பில் தந்தையொருவர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அண்மையில் உயிரிழந்த ஏறாவூர் – வந்தாறுமூலை, பலாச்சோலையை சேர்ந்த ஒன்பது வயது சிறுவனின் தந்தையே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த சிறுவன் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு இரத்தம் ஏற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குணமடைந்த சிறுவன் திடீரென நோய்வாய்ப்பட்டதால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் சிறுவனின் சிறுநீரக பகுதியில் கசிவு ஏற்பட்டுள்ளது என வைத்தியர்கள் தெரிவித்ததாக தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் பின்னர் கடந்த 17ஆம் சிறுவன் அசைவற்ற நிலையில் காணப்பட்டமையை அவதானித்த நிலையிலேயே அவருக்கு தவறான முறையில் இரத்தம் ஏற்றப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் உயிரழந்த சிறுவனின் தந்தை மேலும் கூறுகையில், விபத்தில் காயமடைந்த எனது மகனுக்கு இரத்தம் வழங்கப்பட வேண்டிய தேவை இருக்கவில்லை.

எனினும் வேறு நோயாளிக்கு ஏற்ற வேண்டிய இரத்தம் எனது மகனுக்கு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் சிறுநீரகத்தில் ஏற்பட்ட பாதிப்பால் மகன் உயிரிழந்துள்ளார்.

இரத்தம் மாற்றி ஏற்றப்பட்டதால் மகன் மரணித்துள்ளார் என பொலிஸாரிடம் அறிக்கை வழங்கியுள்ளதாக பிரேத பரிசோதனையின் பின் சட்ட வைத்திய அதிகாரி என்னிடம் தெரிவித்தார்.

எனவே எனது மகனின் உயிரிழப்பு தொடர்பில் தகுந்த நியாயம் வழங்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

இதேவேளை சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இலங்கையில் நடந்துள்ள பயங்கர சம்பவம்!!

பயங்கர சம்பவம்

கொட்டாவ – லியனகொட பிரதேசத்தில் கோடிஸ்வர வர்த்தகர் ஒருவர் அவரது மனையின் கத்தி குத்து தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் மாலை மனைவியுடன் குறித்த வர்த்தகருக்கு கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மனைவி கத்தியினால் கணவருக்கு தாக்குதல் மேற்கொண்டுள்ள நிலையிலே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் மனைவி காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணவர் தன்னை தாக்கியதினால் தான் கத்தியினால் தாக்கியதாக மனைவி காவற்துறையில் வாக்குமூலம் அளித்துள்ளார். குறித்த பிரதேசத்தினை சேர்ந்த ஆடை வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதுடன் அவருக்கு 03 பிள்ளைகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பெண் இன்று நீதி மன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

புகையிரதப் பாதையில் சடலம் ஒன்று மீட்பு!!

சடலம் ஒன்று மீட்பு

கொழும்பு – புத்தளம் தொடரூந்து வீதி லுனுவில மற்றும் தும்மோதர தொடரூந்து நிலையங்களுக்கு இடையில் நபர் ஒருவரின் சடலம் நேற்று காலை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

கிரிமெடியான பிரதேசத்தினை சேரந்த 31 வயதுடைய நபரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனைக்காக சடலம் சிலாபம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இலங்கையில் தாயையும் கொலை செய்த கணவர்!!

கொலை

திஸ்ஸமஹாராமை – சந்துன்கம பகுதியில் தனது மனைவியையும், மனைவியின் தாயையும் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று காலை 9 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குடும்ப முரண்பாடு ஒன்றின் காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்தில், கிராம சேவகராக பணியாற்றிய 25 வயதுடைய பெண்ணும், அவருடைய தாயாரான 54 வயதுடையவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள, கொலைசெய்யப்பட்ட பெண்ணின் கணவரான 28 வயதுடையவர், இராணுவத்தில் பணியாற்றி பின்னர், அதிலிருந்து வெளியேறியவர் என்றும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

வவுனியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை!!

அவசர எச்சரிக்கை

மன்னார் தவிர்ந்த வடக்கின் ஏனைய மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டில் கால் ஆண்டில் வவுனியாவில் 26 பேர் பாதிப்பு என்று சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எலிகள் அல்லது பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் மூலமாகவே லேப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல் நோய் பரவுகிறது. இலங்கையில் ஏனைய மாவட்டங்களில் இந்த நோயின் தாக்கம் பரவலாகக் காப்பட்டாலும் வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் சற்றுக் குறைவானதாகவே காணப்படுகிறது.

எலிக்காய்ச்சலுக்கு காரணமான கிருமிகள் எலிகள் மற்றும் பெருச்சாளிகள் மூலம் பரவுவதுதான் அதிகம். எனினும் ஆடு, மாடு, நாய், பூனை, பன்றி, குதிரை உள்ளிட்ட விலங்குகளிடமும் இந்த கிருமிகள் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவற்றின் சிறுநீரில் இந்தக் கிருமிகள் வெளியேறுவது வழக்கம். எனவே கனமழை பெய்யும் இடங்களில் வடிகால் அமைப்பு சரியில்லை என்றால், மழை நீர் வடிய வழியில்லாமல் தெருக்களில் தேங்கும். வீட்டில் வாழும் எலிகள் அந்த நீருக்கு வரும். அப்போது எலிகளின் சிறுநீர் அதில் கலந்துவிடும்.

எனவே பாதணி அணியாமல் தேங்கிய தண்ணீரிலும், அந்த நீர் பட்ட மண் சகதியிலும் மக்கள் நடக்கும்போது பாதங்கள் வழியாக இந்தக் கிருமிகள் உடலுக்குள் புகுந்துவிடும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் மக்கள் சுத்தமான நீரையும், சுத்தமான நீரால் தயாரிக்கப்பட்ட உணவுகளையும் உட்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.