வவுனியாவில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் மற்றும் பகுதிகள் : முழுமையான அட்டவணை இணைப்பு!!

வவுனியாவில் மின்வெட்டு நேரம் மற்றும் பகுதிகள்..

 

நாள் தோறும் தினமும் இரண்டு தடவை மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. நாட்டில் நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வார நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை ) காலை 8.30 மணி முதல் முற்பகல் 11.30 மணி அல்லது முற்பகல் 11.30 மணி முதல் நண்பகல் 2.30 மணி வரையில் அல்லது நண்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை மூன்று மணித்தியாலங்களும், மாலை 6.00 மணிமுதல் இரவு 7.00 மணி வரையில் அல்லது இரவு 7.00 மணி முதல் – இரவு 8.00 மணி வரையிலும் அல்லது இரவு 9.00 மணி முதல் – இரவு 10.00 மணி வரையிலும் மின் தடை அமுல்படுத்தப்பட உள்ளது.

சனிக்கிழமை தினங்களில் இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்சார விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி காலை 8.30 முதல் பிற்பகல் 10.45 வரையும், முற்பகல் 10.45 முதல் பிற்பகல் 1.00 மணி வரையும் , பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 3.15 வரையும் , பிற்பகல் 3.15 முதல் பிற்பகல் 5.30 வரையும் மின்சார விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

எவ்வாறாயினும் ஞாயிற்று கிழமைகளில் மின்சார விநியோகம் தடை அமுல்ப்படுத்தப்படாது என மின்சார சபை அறிக்கையொன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.

தொடர்சியாக நாட்டில் நிலவி வரும் வறட்சியான காலநிலையினால் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது என இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது . வவுனியாவில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் மற்றும் பகுதிகள் வருமாறு..

Group P : திங்கள் முதல் வெள்ளி வரை 8:30-11:30 மணிவரை மின்வெட்டு செய்யப்படும் இடங்கள்,

வவுனியா நகரம், கோவில்குளம், சமனங்குளம், ஆச்சிபுரம், முருகனூர், சிதம்பரபுரம், கல்நாட்டினகுளம், ஆசிகுளம், கற்குளம், இறம்பைக்குளம், மூன்றுமுறிப்பு, மதகுவைத்தகுளம், ஈரற்பெரியகுளம், கட்குநாமடு, அழுத்கம, பூஓயா, பகல அழுத்வத்த, கண்டி வீதி.

Group Q : திங்கள் முதல் வெள்ளி வரை 11:30 -2.30 மணிவரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் பகுதிகள் வருமாறு..

நெளுக்குளம் தொடக்கம் பறையனாளன்குளம் வரை, பூவரசன்குளம் தொடக்கம் செட்டிகுளம் வரை, புளிதரித்தபுளியன்குளம் தொடக்கம் செக்கட்டிப்பிலவு வரை, பிரமணாளங்குளம் தொடக்கம் பெரியதம்பனை வரை, பெரியபண்டிவிரிச்சான் தொடக்கம் மடு வரை, தட்சணாமருதமடு தொடக்கம் பெரியமடு வரை,

Group R : திங்கள் முதல் வெள்ளி வரை 2.30 – 5.30 மணிவரை மின்வெட்டு செய்யப்படும் இடங்கள்..

பூந்தோட்டம், வைரவபுளியங்குளம், பட்டாணிச்சூர், குருமன்காடு, வேப்பங்குளம், குழுமாட்டுச்சந்தி, கூமாங்குளம், மரக்காரம்பளை, நெளுக்குளம், சாம்பல்தோட்டம், பாரதிபுரம்,விநாயகபுரம், இராசேந்திரன்குளம், நாகர்இலுப்பைக்குளம், அருகம்புல்வெளி, Avusathappidiya, Navagama, பழையனூர்,

துட்டுவெவ தொடக்கம் தாண்டிக்குளம் வரை, பத்தினியார்மகிழங்குளம் தொடக்கம் மணிபுரம் வரை, சுந்தரபுரம், சாஸ்திரிகூழாங்குளம், ஈச்சங்குளம் தொடக்கம் ஈஸ்வரிபுரம் வரை, கல்மடு, காக்கையன்குளம், கோவில்புளியங்குளம், இரணையிலுப்பைக்குளம்,பரசன்குளம், Sinavalayankaddu, கொக்குவெளி,

Group B : திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.00 – 8.00 மணிவரை மற்றும் சனிக்கிழமைகளில் காலை 8.30-10.45 மணிவரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் பிரதேசங்கள்வருமாறு..

நெளுக்குளம் தொடக்கம் பறையனாளன்குளம் வரை, பூவரசன்குளம் தொடக்கம் செட்டிகுளம் வரை, புளிதரித்தபுளியன்குளம் தொடக்கம் செக்கட்டிப்பிலவு வரை, பிரமணாளங்குளம் தொடக்கம் பெரியதம்பனை வரை, பெரியபண்டிவிரிச்சான் தொடக்கம் மடு வரை, தட்சணாமருதமடு தொடக்கம் பெரியமடு வரை,

Group C : திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.00 – 9.00 மணிவரை மற்றும் சனிக்கிழமைகளில் மதியம் 1.00 – 2.15 மணிவரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் பிரதேசங்கள்வருமாறு..

பூந்தோட்டம், வைரவபுளியங்குளம், பட்டாணிச்சூர், குருமன்காடு, வேப்பங்குளம், குழுமாட்டுச்சந்தி, கூமாங்குளம், மரக்காரம்பளை, நெளுக்குளம், சாம்பல்தோட்டம், பாரதிபுரம்,விநாயகபுரம், இராசேந்திரன்குளம், நாகர்இலுப்பைக்குளம், அருகம்புல்வெளி, Avusathappidiya, Navagama, பழையனூர், உலுக்குளம், சின்னத்தம்பனை, நேரியகுளம், இலுப்பைக்குளம், அழகாபுரி, முதலியார்குளம், சின்னசிப்பிக்குளம், முகத்தான்குளம், செட்டிகுளம்,

துட்டுவெவ தொடக்கம் தாண்டிக்குளம் வரை, பத்தினியார்மகிழங்குளம் தொடக்கம் மணிபுரம் வரை, சுந்தரபுரம், சாஸ்திரிகூழாங்குளம், ஈச்சங்குளம் தொடக்கம் ஈஸ்வரிபுரம் வரை, கல்மடு, காக்கையன்குளம், கோவில்புளியங்குளம், இரணையிலுப்பைக்குளம்,பரசன்குளம், Sinavalayankaddu, கொக்குவெளி, ஓமந்தை, புளியங்குளம்,

Group D : திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.00 – 10.00 மணிவரை மற்றும் சனிக்கிழமைகளில் மதியம் 3.15 – 5.30 மணிவரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் பிரதேசங்கள்வருமாறு..

வவுனியா நகரம், கோவில்குளம், சமனங்குளம், ஆச்சிபுரம், முருகனூர், சிதம்பரபுரம், கல்நாட்டினகுளம், ஆசிகுளம், கற்குளம், இறம்பைக்குளம், மூன்றுமுறிப்பு, மதகுவைத்தகுளம், ஈரற்பெரியகுளம், கட்குநாமடு, அழுத்கம, பூஓயா, பகல அழுத்வத்த, கண்டி வீதி, தவசிக்குளம், குட்செட் வீதி, பண்டாரிகுளம், வவுனியா வைத்தியசாலை, பூங்கா வீதி, சூசைப்பிள்ளையார்குளம்,

முழுமையான விபரத்திற்கு இங்கு அழுத்துங்கள் 

நிறைமாத கர்ப்பிணி மனைவிக்கு வளைகாப்பு நடந்த கட்டிடத்தில் விமானத்தை மோதி உயிரிழந்த விமானி!!

உயிரிழந்த விமானி

தென்னாப்பிரிக்கா நாட்டில் விமானி ஒருவர் தனது நிறைமாத கர்ப்பிணிக்கு வளைகாப்பு நடந்த கட்டிடத்தில் சிறிய ரக விமானத்தை மோதி உயிரிழந்துள்ளார்.

Charl Viljoen என்பவர் Kalahari Air Services – இல் விமானியாக இருக்கிறார். இவரது மனைவி நடாஸா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி அவரது வீட்டில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூள நடந்தது.

அப்போது, அழையா விருந்தாளியாக நடாஸாவின் கணவர் அந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த பிரச்சனை காரணமாக ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்துள்ளனர். ஆனால், திடீரென நிகழ்ச்சிக்கு வந்த Charl, தனது மனைவியை அடித்துள்ளார், இதனை உறவினர்கள் பார்த்துள்ளனர்.

இந்நிலையில் சிறிய ரக விமானத்தை வேண்டுமென்று விமானத்தை தாழ்வாக இயக்கி Botswana கிளப்பில் மோதி வெடிக்க செய்துள்ளார்.

இதில் விமானி உயிரிழந்துள்ளார், மனைவி மற்றும் உறவினர்கள் காயமடைந்துள்ளனர். இது ஒரு திட்டமிட்ட சம்பவம் என இதனை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியா வந்தது நியூசிலாந்தில் இறந்துபோன மாணவியின் உடல்!!

இறந்துபோன மாணவியின் உடல்

நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் இறந்துபோன இந்திய மாணவியின் உடல் கொச்சி விமான நிலையம் வழியாக அவரது சொந்த ஊரான கொடுங்கல்லூர் கொண்டு வரப்பட்டுள்ளது.

25 வயதான Ansi Alibava தனது கணவருடன் சேர்ந்து மேற்படிப்புக்காக நியூசிலாந்து சென்றுள்ளார். அங்கு, பகுதிநேரமாக சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்துக்கொண்டே தனது படிப்பை தொடர்ந்துள்ளார்.

தனது குடும்பத்தின் மீது அதிக பொறுப்பு கொண்டிருந்த இவர், துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பெண்கள் தொழுகை செய்யும் பிரிவில் இருந்துள்ளார். தீவிரவாதி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தபோது அவரசகால கதவினை திறந்துகொண்டு இவரது கணவர் தப்பித்து வெளியே வந்துவிட்டார், ஆனால் Ansi Alibava துப்பாக்கி சூட்டில் காயமடைந்து உயிரிழந்தார்.

இந்நிலையில், சம்பவம் நடைபெற்று 15 நாட்கள் கடந்துவிட்ட நிலையில்இவரது உடல் இன்று விமானத்தின் மூலம் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கூடிய விரைவில் தனது படிப்பினை முடிக்கவிருக்கும் இவருக்கு இப்படி நடந்துவிட்டதே என பெற்றோர் மற்றும் உறவினர்கள் கவலை கொண்டுள்ளனர்.

கணவன் இறந்த இடத்தை பார்க்க லண்டனிலிருந்து சென்ற மனைவி-மகன் : நெஞ்சை உருக்கும் புகைப்படங்கள்!!

நெஞ்சை உருக்கும் புகைப்படங்கள்

எத்தியோப்பிய விமான விபத்தின் காரணமாக கணவனை பறிகொடுத்த மனைவி, விபத்து நடந்த இடத்திற்கு தன் மகனை அழைத்துச் சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று கடந்த 10-ஆம் திகதி தலைநகர் Addis Ababa-விலிருந்து புறப்பட்ட அடுத்த ஆறு நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது.

இதில் விமான ஊழியர்கள், பயணிகள் என விமானத்தின் உள்ளே இருந்த அனைவரும் பலியாகினர். இதில் பிரித்தானியவைச் சேர்ந்த 7 பேரும் பலியாகினர். அதில் Waithaka என்பவர், இந்த விமான விபத்தில் பரிதாபமாக இறந்தார்.

இவரின் மனைவி Jane Waithaka மற்றும் பிள்ளைகள் East Yorkshire-ல் இருக்கும் நிலையில், சமீபத்தில் இவரின் மனைவி மற்றும் மகன் Ben Kuria விபத்து நடந்த பகுதிக்கு சென்றுள்ளனர். இது குறித்து Ben Kuria, விபத்து நடந்த பகுதியை பார்க்க வந்த போது, அம்மா மிகவும் உடைந்துவிட்டார்.

இங்கே ஷுக்கள், உடைந்த போனின் பாகங்கள் போன்றவை கிடக்கின்றன. இந்த விமான விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதை நாங்கள் கவனித்து வருகிறோம்.

குறிப்பாக நாங்கள் இங்கு வந்தவுடன் ஏராளமானோர் அங்கு குவிந்துவிட்டனர். மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. விமான விபத்து ஒரு ஆள்நடமாட்டே இல்லாத இடத்தில் நடந்த போன்று உள்ளது. விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற கூட அருகில் யாரும் இல்லை போல் தெரிகிறது என்று கூறியுள்ளார்.

ஜப்பானில் ஏற்பட்ட விபத்தில் இலங்கையை சேர்ந்த இளைஞர் பரிதாபமாக பலி!!

இளைஞர் பரிதாபமாக பலி

ஜப்பானில் கல்வி கற்று வந்த இந்நாட்டைச் சேர்ந்த மாணவரொருவர் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவர் செலுத்திய மகிழூர்தி எதிரில் வந்த கொள்கலன் பாரவூர்தியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கம்பஹா – கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த இசுரு அபேதீர என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் ஜப்பான் Utsunomiya orion பாடசாலையில் கல்வி கற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

கொத்து கொத்தாக மனித உடல்கள் : மிதந்து வரும் பாம்புகள் : மொசாபிக்கில் பயங்கரம்!!

மொசாபிக்கில் பயங்கரம்

கிழக்கு ஆபிரிக்க நாடான மொசாம்பிக்கில் ‘இடை’ புயல் தாக்கியதில் சுமார் 1லட்சத்து 20 ஆயிரம் தங்கள் இருப்பிடங்களை இழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியப் பெருங்கடலில் உருவான ‘இடை’ என்ற புயலானது கடந்த மார்ச் 14ம் திகதியன்று மொசாபிக் நாட்டின் பெய்ரா நகரில் கரையை கடந்தது. பின்னர் மணிக்கு 177கிமீ வேகத்தில் அண்டை நாடுகளான ஜிம்பாப்வே மற்றும் மலாவி நோக்கி நகர்ந்தது.

இதனால் ஏற்பட்ட கனமழையால் மொசாம்பிக், ஜிம்பாப்வே, மலாவி ஆகிய நாடுகளில் தற்போது வரை 700க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மொசாபிக் நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 242 ல் இருந்து 417 ஆக உயர்ந்துள்ளது என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் Celso Correia தகவல் வெளியிட்டுள்ளார்.

அதேமசயம் 259 பேர் ஜிம்பாப்வேயிலும், மலாவிவில் 56 பேர் உயிரிழந்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியிருப்பதால் உயிர்பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அந்நாட்டு அரசின் கோரிக்கையை ஏற்று இந்தியா உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்த விமானப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை சுமார் 2000 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பேரிடர் பாதுகாப்புப் படை தகவல் வெளியிட்டுள்ளது.

ஏறக்குறைய 90,000 மொசாம்பிக்கர்கள் தற்காலிக இடங்களில் தங்கி இருக்கின்றனர். வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில், இறந்தவர்களின் சடலங்கள் கொத்துக் கொத்தாக மிதப்பதாலும், பாம்புகள் அதிகளவில் திரிவதாலும் சுகாதாரக்கேடு ஏற்படலாம் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆற்றில் சடலமாக மிதந்த காதல் ஜோடி : கைப்பற்றப்பட்ட கடிதம்!!

சடலமாக மிதந்த காதல் ஜோடி

குஜராத் மாநிலத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் காதல் ஜோடி ஆற்றில் சடலமாக மிதந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சபர்மதி ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதை, அவ்வழியாக சென்ற ஒருவர் பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆற்றில் சடலமாக கிடந்தது 27 வயதான கமலேஷ் மற்றும் 16 வயதான சுவேதா என்பதை அடையாளம் கண்ட பொலிஸார், கமலேஷ் சட்டைப்பையில் இருந்த ஆதார் அட்டையை கைப்பற்றி குடும்பத்தாருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் இதுகுறித்து குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொள்கையில், இருவரும் கடந்த வெள்ளிக்கிழமையன்று வீட்டில் இருந்து வெளியேறியிருப்பது தெரியவந்தது. இதற்கிடையில் வெள்ளிக்கிழமையன்று பெண்கள் பயன்படுத்தும் பை ஒன்று ஆற்றின் முகப்பு பகுதியில் கிடந்ததாக, அங்கு வேலை செய்துவரும் காவலாளி பொலிசாரிடம் ஒப்படைத்தார்.

அதனை ஆராய்ந்த போது உள்ளே ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில் இருவரும் ஒரு வருடமாக காதலித்து வருகிறோம். என்னுடைய சகோதரியை சந்திக்க சென்ற போது தான் சுவேதா எனக்கு பழக்கமானாள். ஆனால் எங்களுடைய காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுசம்மந்தமாக தற்போது வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உறவினர் வீட்டிற்கு சென்ற இளைஞருக்கு நேர்ந்துள்ள விபரீதம்!!

இளைஞருக்கு நேர்ந்துள்ள விபரீதம்

திருகோணமலையின் கந்தளாய் பிரதேசத்தில் மோட்டார்சைக்கிளொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வடிகாணிற்குள் விழுந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று கந்தளாய் வெலிங்டன் வீதியில் இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது மோட்டார்சைக்கிளை செலுத்தி சென்றவர் படுகாயமடைந்து கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் கந்தளாய் பகுதியை சேர்ந்த சுரேஸ் குமார் எனும் 20 வயது இளைஞரே பலத்த காயங்களுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவருகிறது.

சுரேஸ் குமார் முள்ளிப்பொத்தானையிலிருந்து கந்தளாய் பகுதியிலுள்ள உறவினரின் வீட்டிற்கு மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்றபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா மாணவன் தேசிய ரீதியிலான கணித போட்டியில் முதலிடம்!!

தேசிய ரீதியிலான கணித போட்டியில் முதலிடம்

வவுனியா, சூடுவெந்தபுலவு அல் இக்பால் மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் தேசிய ரீதியிலான கணித வினா விடை போட்டியில் முதலாமிடத்தை பெற்றுள்ளார். குறித்த பாடசாலையில் தரம் 11இல் கல்வி கற்கும் முகமது சாஜகான் முகமது சகீர் என்பவரே இவ்வாறு முதலாமிடம் பெற்று கொண்டுள்ளார்.

இம் மாணவனுக்குரிய தங்கப்பதக்கம், வெற்றிக் கிண்ணம் மற்றும் சான்றிதழ்களை அல் இக்பால் மகாவித்தியாலய அதிபர் ஏ.கே.உபைத் இன்று வழங்கி வைத்துள்ளார்.

மாணவர்களின் கணித அறிவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் தேசிய மட்டத்தில் இப்போட்டி அல் ஹிக்மா மற்றும் பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்ஜின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.
இதில் முதல் இருபது இடங்களுக்குள் வவுனியா தெற்கு வலயத்தைச் சேர்ந்த மூவர் தெரிவாகியுள்ளனர்.

இப் போட்டியில், இரண்டாம் இடத்தை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த வரதராஜா தயாரதன் என்ற மாணவனும், 17ஆவது இடத்தை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஜே.ஜனுராஜ் என்ற மாணவனும் பெற்றுள்ளனர். இப் போட்டியில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் இருந்து மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

பிரித்தானியாவில் இலங்கை தமிழ் இளைஞன் படுகொலை : இரவில் உணவகத்திற்குள் நடந்த பயங்கரம்!!

தமிழ் இளைஞன் படுகொலை

பிரித்தானியாவில் இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. Pinner பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் இலங்கையை சேர்ந்த ரவி என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது கடையில் கொள்ளையடிக்க சென்ற கொள்ளையர்களே இந்த கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை இளைஞன் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்ட போதிலும் 45 நிமிடங்களில் அவர் உயிரிழந்துள்ளார். இந்த இளைஞன் மிகவும் அன்பானவர் என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அவர் காலையிலேயே தனது உணவு கடையை திறந்து வைத்து விட்டு, அவரே வீடுகளுக்கு உணவு வழங்க செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தொடர்பில் கருத்து வெளியிட்டவர்கள், “அவரது பெயர் ரவி, அண்மையில் அவரது மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மிகவும் அன்பான மனிதன். இரக்க குணமுடைய சிறந்த நபர். அவர் கண்ணாடி அணிந்திருப்பார். எந்த நேரமும் புன்னகையுடன் இருப்பார். நாங்கள் அவருடன் சில விளையாட்டுக்களையும் விளையாடுவோம். அந்த கடையில் வாரத்திற்கு 5 நாட்கள் ரவி பணியாற்றுவார்.

அப்பாவியான இந்த இளைஞன் பணி செய்ய சென்ற போது கொலை செய்யப்பட்டதென்பது மிகவும் கொடுமையான விடயமாகும். அன்பான ஒருவரை திருட்டு சம்பவத்தினால் இழந்துவிட்டோம் என தெரிவித்துள்ளனர்.

இந்த கடையில் 6 மாதங்களுக்கு முன்னரும் இதேபோன்று கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானியால் இரவில் இவ்வாறு தொடர் கொலைகள் இடம்பெற்று வருதென்பது வேதனை அளிப்பதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இளைஞன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் குடும்பத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரசபை ஜேசிபி வாகன தீவிபத்தில் சந்தேகம் : 4 மாதங்களாக இயங்காத கண்காணிப்பு கமராக்கள்!!

தீவிபத்தில் சந்தேகம்

வவுனியா நகரசபையில் பொருத்தப்பட்ட 26ற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கமராக்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதத்திலிருந்து இயங்கவில்லை. இதனால் நகரசபையில் இடம்பெறும் குற்றச் செயல்கள் கண்காணிக்கவும் தடுத்து நிறுத்தவும் முடியவில்லை என்று நகரசபை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

நகரசபைக்கு கடந்த 2017 ஆம் வருடம் இறுதியில் பொருத்தப்பட்ட சி.சி.ரி.வி கண்காணிப்புக் கமரா கடந்த 2018ம் ஆண்டு முற்றாக மாற்றப்பட்டு பெருமளவு நிதியில் 26ற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கமராக்கள் நகரசபைக்கு பொருத்தப்பட்டது.

எனினும் தற்போது கடந்த வருடம் டிசம்பர் மாதத்திலிருந்து அவை அனைத்தும் செயற்படவில்லை என்று தெரியவந்துள்ளது. இதனால் நகரசபையில் இடம்பெறும் குற்றச் செயல்கள் உட்பட அனைத்து விடயங்களும் கண்டறியப்படவில்லையென ஊழியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் இரவு நகரசபையில் நிறுத்திவைக்கப்பட்ட ஜே.சி.பி வாகனம் திடீரென்று தீப்பற்றி எரிந்து போயுள்ளது. வேலைப்பகுதியிலுள்ள வாகனங்களுக்கு காப்பீடு செய்யப்படவில்லை. அலுவலகப்பாவனையிலுள்ள வாகனங்களுக்கு மட்டுமே காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு மெனிக்பாமில் முகாம் அமைக்கப்பட்ட போது தொண்டு நிறுவனம் ஒன்றினால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட விலை உயர்ந்த ஜே.சி.பி வாகனமே எரிந்துபோயுள்ளது. இச்சம்பவத்திற்கு தற்போது பல காரணங்கள் வெளிவருகின்றதுடன் இத் தீவிபத்தில் நாசகார சதிவேலைகள் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மின்தடை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட உள்ளது!!

மின்தடை தொடர்பான அறிவிப்பு

இலங்கை மக்களுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை இலங்கை மின்சாரசபை இன்றைய தினம் வெளியிட உள்ளதாக தெரியவருகிறது. இலங்கை மின்சார சபையினால் மின்சார விநியோகத்தடை தொடர்பில் வெளியிடப்பட்டதாக கூறப்படும் உத்தியோகபூர்வ அட்டவணை பொய்யானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு எந்தவொரு உத்தியோகபூர்வ அட்டவணையும் வெளியிடப்படவில்லை என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் ரக்கித ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். நாள் ஒன்றுக்கு நான்கு மணித்தியாலங்கள் மின் விநியோக தடையை அமுல்படுத்துவது தொடர்பிலான அறிவிப்பே வெளியிடப்படவுள்ளது.

காலை 8.30 முதல் முற்பகல் 11.30 வரையும், முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 2.30 வரையும், பிற்பகல் 2.30 முதல் மாலை 5.30 வரையும் மின் விநியோக தடையை மேற்கொள்ள யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அதேபோல் மாலை வேளையில் 6 மணியிலிருந்து 10 மணிவரையான நேரத்தில் ஏதாவதொரு மணித்தியாலம் மின் விநியோகம் தடைப்படலாம். அதேபோல், சனிக்கிழமை காலை 8.30 முதல் முற்பகல் 10.45 வரையும், முற்பகல் 10.45 முதல் பிற்பகல் ஒரு மணிவரையும், ஒரு மணி முதல் பிற்பகல் 3.15 வரையும், பிற்பகல் 3.15 முதல் மாலை 5.30 வரையும் மின்சார விநியோகத் தடை அமுல்படுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார விநியோக தடை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் மின்சாரத்திற்கான கேள்வி அதிகரித்துள்ளமையினால் நாளொன்றுக்கு நான்கு மணிநேர மின்சார விநியோக தடையை அமுல்படுத்த நேரிடும் என மின்சார பொறியிலாளர் சங்கம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் தீர்த்தோற்சவம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தின் தீர்த்த உற்சவம் கடந்த  21/03/2019 வியாழக்கிழமை  இடம்பெற்றது.

ஏழு மணியளவில் அபிசெகங்கள் ஆரம்பமாகி கும்ப பூஜையும் காலை ஏழரை மூலஸ்தான பூஜையும் அதனை தொடந்து காலை ஆறு எட்டு மணிக்கு தம்ப பூஜை இடம்பெற்றது.


எட்டரை மணிக்கு பொற்சுண்ணம் இடித்து மூலமூர்த்திகளுக்கு அபிசேகங்கள் இடம்பெற்று ஒன்பதரை மணியளவில் வசந்த மண்டபபூஜை இடம்பெற்று ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் விநாயகர் வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் ஒன்பதரை மணியளவில் அமிர்தவர்ஷினி தீர்த்த கரையில் எழுந்தருளி தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.

தொடர்ந்து வெளிவீதி உலாவந்து யாகம் கலைக்கப்பெற்று வழமையான பூசையுடன் பகல் உற்சவம் நிறைவு பெற்றது. மாலையில் கொடியிறக்கம் இடம்பெற்றது.

சமூகவலைதளத்தில் புகைப்படங்களை பார்த்து தற்கொலை செய்துகொண்ட சிறுமி!!

தற்கொலை செய்துகொண்ட சிறுமி

சமூகவலைதளத்தில் மன அழுத்தம், தற்கொலை தொடர்பான புகைப்படங்களை பார்த்து உயிரை மாய்த்து கொண்ட பிரித்தானிய சிறுமியின் உறவினர்களை தொடர்பு கொண்டு இளவரசர் வில்லியம் பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாலி ரூசல் (14) என்ற சிறுமி சமூகவலைதளத்தில் கவலை, மன அழுத்தம், மற்றும் தற்கொலை புகைப்படங்களை பார்த்த பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டார்.

இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில் பிரித்தானிய இளவரசர் வில்லியம் இது குறித்து கவலை தெரிவித்து கடந்த நவம்பரில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், இது போன்ற பிரச்சனைகளை சமாளிக்க சமூகவலைதள நிறுவனங்கள் போதுமான நடவடிக்கையை எடுப்பதில்லை.

ஒன்லைனில் மற்றவர்கள் மனதை நோகும்படி பேசுவது, வெறுப்புணர்வை பரப்புவது போன்ற விடயங்களை தடுக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மேலும் மெனக்கெட வேண்டும் என பேசியிருந்தார். இந்நிலையில் உயிரிழந்த சிறுமி மாலியின் உறவினர்களை தனிப்பட்ட முறையில் இளவரசர் வில்லியம் தொடர்பு கொண்டு பேசுவுள்ளதாக Telegraph பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

இதனிடையில் தனது மகளின் மரணத்துக்கு காரணம் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளம் தான் எனவும், சமூகவலைதளங்கள் பாதுகாப்பான இடமாக எல்லோருக்கும் இருக்கவேண்டும் எனவும் அதிலும் முக்கியமாக இளம் வயது நபர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாத இடமாக இருக்க வேண்டும் எனவும் மாலியின் தந்தை இயன் கூறியுள்ளார்.

விமானத்தின் கழிவறையை தன் நாக்கால் நக்கிய பெண் : அதிர்ச்சி வீடியோ!!

அதிர்ச்சி வீடியோ

பெண் பாலியல் தொழிலாளி ஒருவர் விமானத்தின் கழிவறையை தன் நாக்கை வைத்து நக்கும் வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த மார்ச் மாதம் 18-ஆம் திகதி பார்சிலோனாவில் இருந்து ஸ்பேயினுக்கு Grimy என்ற பெண் பாலியல் தொழிலாளி ஒருவர் விமானத்தில் சென்றுள்ளார்.

அப்போது அவர் விமானத்தின் கழிவறையை தன் நாக்கை வைத்து நக்குகிறார். இதை அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட, அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த வீடியோ குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த செயலை செய்வதற்கு முன் அந்த பெண் அதை முழுவதுமாக சுத்தம் செய்துவிட்டே இப்படி செய்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் இது மிகப் பெரிய ரிஸ்க் எனவும் இப்படி செய்யும் அது நாக்கின் வழியே உடல் உள்ளே சென்றா 1,200 வகையான நோய்களின் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக இணையவாசி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரை பணயம் வைத்து இளமைக்கு திரும்பிய 80 வயது பாட்டி : வினோத காரணம்!!

இளமைக்கு திரும்பிய 80 வயது பாட்டி

இறந்துவிடலாம் என மருத்துவர்கள் எச்சரித்தும் 80 வயது பாட்டி ஒருவர் £ 10,000 செலவில் முகமாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். பிரித்தானியாவை சேர்ந்த டோனி கோல்ட்பர்க் என்கிற 80 வயது பாட்டி, முதுமை தனக்கு பிடிக்காததால் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்துள்ளார்.

தன்னுடைய ஓய்வூதிய பணத்தை சிறிது சிறிதாக சேர்த்து £ 10,000 டொலர்களில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு இளமைக்கு திரும்பியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், முதுமையாக இருப்பது என்பது மிகவும் கொடூரமானது. நான் எப்பொழுது இளமையாக இருக்க விரும்பினேன். இதற்காக கடந்த 40 வருடங்கள் கடினமாக உழைத்தேன்.

ஆனால் என்னுடைய உடலமைப்பு மாறியதே தவிர, முகத்தின் பொலிவு மாறவில்லை. கண்ணாடியில் பார்ப்பத்தையே நான் தவிர்க்க ஆரம்பித்தேன். அது என்னை மோசமாக காட்டியது. அறுவை சிகிச்சைக்காக நான் மருத்துவரிடம் சென்ற போது, அவர் என்னை எச்சரித்தார். வயதான காலத்தில் இந்த அறுவை சிகிச்சை செய்தால் உயிர் பிழைப்பது கடினம் என கூறினார்.

இறந்தாலும் பரவாயில்லை. இந்த வயதான தோற்றத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என பதில் கூறினேன். இந்த அறுவை சிகிச்சை முடிந்த பிறகு தான் என்னுடைய எதிர்காலம் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னை 10 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றுள்ளது. ஒவ்வொரு நாளும் என்னுடைய நம்பிக்கை அதிகரிக்கிறது. நான் மிகச்சிறப்பாக இருப்பதை போல உணர்கிறேன் என தெரிவித்துள்ளார்.