வவுனியாவில் கத்திக் குத்து காயத்துடன் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் : மரணத்தின் காரணம் வெளியானது!!

மரணத்தின் காரணம் வெளியானது

வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியில் நேற்று (20.03.2019) அதிகாலை வெட்டுக் காயங்களுடன் கிணற்றிலிருந்து இரண்டு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

கடந்த சனிக்கிழமை கணவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் குறித்த பெண்ணும் அவரது இரு பிள்ளைகளும் தனிமையில் இருந்துள்ளனர். இவர்களுக்கு பாதுகாப்பாக அயல்வீட்டுப் பெண்ணொருவரும் இவர்களுடன் இருந்துள்ளார்.

காலையில் அயலவர்கள் வீட்டுக்குச்சென்றபோது, இரு பிள்ளைகளும் அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்த பெண்ணும் உறங்கிக் கொண்டிருந்தனர். குறித்த பெண்ணை காணவில்லை. அவரை தேடி அறைக்குள் சென்றபோது, அங்கு இரத்தம் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து பெண்ணை வீடு முழுவதும் தேடியுள்ளனர். பின்னர் வீட்டின் ஒதுக்குப்புறத்தில் காணப்படும் பாவனையற்ற கிணற்றினை எட்டிப் பார்வையிட்ட சமயத்தில் கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார்.

இதனையடுத்து நெளுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா மற்றும் நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸாரினால் குற்றத்தடவியல் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த குற்றத்தடவியல் பொலிஸாரினால் கிணற்றிற்க்கு செல்லும் பாதையில் கத்தியொன்றை மீட்டெடுத்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் 11 மற்றும்5 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயார் கௌரி (வயது 32) என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை வவுனியா நீதிவான் திருமதி தஸ்னீம் பௌசான் மற்றும் வவுனியா சட்ட வைத்திய அதிகாரி தம்மி லொவிஸ்லோவா ஆகியோர் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நேரடியாக சென்று சடலத்தினை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைக்கும் உத்தரவிட்டனர். இதனையடுத்து சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கழுத்தில் கத்திக்குத்து காயம் இருந்தது. எனினும், இறப்பு காயத்தால் நிகழவில்லை. நீரில் மூழ்கி மூச்சுத் திணறியே பெண் இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிறந்த குழந்தையின் கருப்பைக்குள் இன்னொரு குழந்தை : ஒரு அபூர்வ நிகழ்வு!!

அபூர்வ நிகழ்வு

பெண் ஒருவர் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த நிலையில், அந்த குழந்தையின் கருப்பைக்குள் இன்னொரு குழந்தை இருந்த அபூர்வ நிகழ்வு ஒன்று கொலம்பியாவில் நடைபெற்றுள்ளது. அதாவது தனது இரட்டையரான இன்னொரு குழந்தையை அந்த குழந்தை தன் கர்ப்பத்தில் சுமந்துள்ளது.

Monica Vega (33) கருவுற்றிருந்த நிலையில், அவரது மருத்துவர், குழந்தையின் கருப்பைக்குள் இன்னொரு குழந்தை இருப்பதை அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறிந்தார். Monica கருவுற்று 37 வாரங்கள் ஆன நிலையில், மருத்துவர்கள் குழு ஒன்று, Itzamara என்று பெயரிடப்பட்ட அவரது மகளை சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்கச் செய்தது.

அதற்குமேல் விட்டால், அவளுக்குள் வளரும் குழந்தையால் Itzamaraவின் உள்ளுறுப்புகளுக்கு சேதம் ஏற்படலாம் என்ற அச்சத்தில், அவள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்க செய்யப்பட்டாள்.

Itzamara பிறந்து ஒரு நாளுக்குப்பின், அவளுக்கு சிறு அறுவை சிகிச்சை ஒன்றை செய்த மருத்துவர்கள், அவளுக்குள் இருந்த 45 மில்லிமீற்றர் நீளமும், 14 கிராம் எடையும் கொண்ட அவளது இரட்டையரான குழந்தையை அகற்றினர். அவளது தொப்புள் கொடி வெட்டப்பட்டதும் அந்த இரண்டாவது குட்டிக் குழந்தையின் உயிர் பிரிந்தது.

அவளுக்கு கைகளும் கால்களும் இருந்தன, ஆனால் இதயமோ மூளையோ இல்லாமலிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது Itzamara பிறந்து ஒரு மாதம் ஆன நிலையில், அவள் ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரியவந்துள்ளது.

நிர்வாணபுகைப்படங்களை வைத்து மிரட்டி அழகிய இளம்பெண் செய்த அதிர்ச்சி செயல்!!

இளம்பெண் செய்த அதிர்ச்சி செயல்

கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் நிர்வாணப் புகைப்படங்களை வைத்து விடுதி உரிமையாளரை மிரட்டி பணம் பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தின் கொடுங்கல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷமீனா. 27 வயதான இவரை பொலிசார் சமீபத்தில் அதிரடியாக கைது செய்தனர்.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த மாதம் சமீனா மற்றும் அவரது நண்பர்கள் கோழிக்கூட்டின் Kakkadampoyil பகுதியில் இருக்கும் தங்குமிட விடுதி ஒன்றை ஒன்றில் வாடைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.

அப்போது ஷமீனா அங்கிருந்த ஊரிமையாளர் ஒருவரிடம் நெருக்கமாக இருந்ததாகவும், அப்போது அவருடன் இருந்தது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷமீனாவின் நண்பர்கள் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

அதன் பின் அவர் மற்றும் அவரது நண்பர்கள் அந்த உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். முதலில் 40,000 ரூபாய் கேட்டுள்ளனர். அதை அவர் கொடுத்த பின்பு மீண்டும் அந்த 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த விடுதி உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பின்னரே பொலிசார் முதலில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

அதன் பின் இந்த சம்பவத்தில் சமீனாவும் ஈடுபட்டுள்ளார் என்பதை அறிந்து கைது செய்துள்ளனர். மேலும் இவர்கள் இது போன்று வேறு யாரையும் இது போன்று ஏமாற்றி பணம் பறித்துள்ளனரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் சிகரெட் பாவனைக்கு தடை : அதிரடி தீர்மானம் நிறைவேற்றம்!!

சிகரெட் பாவனைக்கு தடை

வவுனியாதெற்கு தமிழ் பிரதேசசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் து.நடராஜசிங்கம் தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதன்போதே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வவுனியா தெற்கு பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் சிகரெட் பாவனையை முற்றாக தடைசெய்ய வேண்டும் என பிரதேசசபை உறுப்பினர் கா.பார்தீபனால் கடந்த மாதம் நடைபெற்றருந்த சபை அமர்வில் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பாக பிரதேசசபைக்கு அதிகாரங்கள் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து அடுத்து வருகின்ற அமர்வில் அதனை தீர்மானமாக எடுக்கலாம் என்றும் சபை உறுப்பினர்களால் கடந்த அமர்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற சபை அமர்வில் இவ்விடயம் ஆரயபட்டதுடன் தெற்கு பிரதேசசபைக்குட்பட்ட அனைத்து வர்தக நிலையங்களிலும் சிகரெட் பாவனையை தடைசெய்வது என ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

40 மாத்திரைகளை உட்கொண்ட யுவதிக்கு நேர்ந்த கதி!!

யுவதி தற்கொலை முயற்சி

திருகோணமலையின், கந்தளாய் – பேராறு பகுதியில் 40 மாத்திரைகளை உட்கொண்ட யுவதியொருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேராறு பகுதியை சேர்ந்த ஏ.எம்.றிகானா என்ற 27 வயதுடைய பெண்ணே நேற்றிரவு மாத்திரைகளை உட்கொண்டுள்ளார் என தெரியவருகிறது.

குறித்த பெண், இன்று காலை எழும்பாத நிலையில் பெற்றோர் சென்று பார்த்த போது மயக்கமாக உடல் குளிர்ந்து காணப்பட்டதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். இதன் பின்னர் அவர் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீரிழிவு நோய்க்கு உட்கொள்ளும் மாத்திரைகள் உள்ளிட்டவற்றையே அந்த பெண் உட்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை திருமண பேச்சுவார்த்தை தொடர்பான விரக்தியின் காரணமாக அந்த பெண் மாத்திரைகளை உட்கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் புத்தரால் நாகபூசணி அம்மனுக்கு ஆபத்து!!

வவு­னியா, மூனா­மடு நாகபூசணி அம்­மன் ஆல­யக் காணியை அப­க­ரித்து பௌத்த மதத்­த­லம் அமைக்க முயற்­சிக்­கப்­ப­டு­கின்­றது என்று குற்றஞ்சாட்­டப்­ப­டு­கின்­றது.

முனா­மடு மற்­றும் பேயா­டிக்­கூ­ழாங்­கு­ளம் ஆகிய இடங்­க­ளில் தமிழ் மக்­கள் தொன்­று­தொட்டு விவசாயம் மேற்­கொண்டு வரு­கின்­ற­னர். அவர்­கள் தமது வயல் நிலங்­க­ளுக்கு அருகே ஆல­யங்­களை அமைத்து வழி­பட்டு வந்­த­து­டன், இளைப்­பா­று­மி­டம் என்­ப­வற்­றை­யும் அமைத்­தி­ருந்­த­னர்.

மூனா­ம­டு­வில் அமைந்­தி­ருந்த நாகபூசணி அம்­மன் ஆல­யம் நீண்டகாலமாக தமிழ் மக்­க­ளால் பேணப்­பட்டு வந்தது.

1995ஆம் ஆண்­டின் பிற்­ப­கு­தி­யில் அந்­தப் பகு­தியை இலங்கை இரா­ணு­வம் கைய­கப்­ப­டுத்­தி­யது. அவர்களால் அமைக்­கப்­பட்ட முகா­மில் வழிபாட்டுக்காக புத்­தர் சிலை ஒன்­றை­யும் அவர்கள் நிறு­வி­யி­ருந்­த­னர்.

பின்­னர் அந்­தக் காணி­கள் மக்­கள் பயன்பாட்டுக்காக விடு­விக்­கப்­பட்­ட­போ­தும், அங்கு நிறு­வப்­பட்ட புத்­தர் சிலை அகற்­றப்­ப­ட­வில்லை. தற்போது வவு­னி­யா­வில் உள்ள பிக்கு ஒரு­வர் அந்­தப் பகு­தி­யைத் தன்­னி­டம் ஒப்­ப­டைக்க வேண்­டும் என்று கோரு­கின்­றார் என்று குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கின்­றது.

இது தொடர்­பில் வவு­னியா மாவட்ட அந்­த­ணர் ஒன்றியம், அந்­தக் காணி இந்து ஆல­யம் அமைந்துள்ள பகுதி. அந்­தக் காணி நாகபூசணி அம்மன் ஆல­யக் காணி என்று பிர­தேச செய­ல­க­மும் கூறி­யுள்­ளது. அதற்­கான ஆதா­ரங்­க­ளும் உள்­ளன. அதை வேறு எவ­ரும் உரிமை கோரவோ, கைய­கப்­படுத்­தவோ அனு­ம­திக்க முடி­யாது என்று கூறியுள்ளது.

வடக்­கில் புத்­தர் சிலை­கள் நிறு­வப்­பட்­டுள்ள காணி­க­ளில் பெரும்­பா­லா­னவை தனி­யார் காணி­களே. புத்­தர் சிலையை அனைத்து இடங்­க­ளி­லும் நிறுவி அந்த இடங்­க­ளைச் சொந்­தம் கொண்­டாட நினைப்­பது நல்­லி­ணக்­கத்­தைச் சீர்­கு­லைக்­கும். புத்த பெரு­மா­னின் போத­னை­களை ஏற்று நடக்­கும் எவ­ரும் இவ்­வா­றான காரி­யங்­க­ளைச் செய்ய மாட்­டார்­கள்.

அந்த இடத்­தில் நிறு­வப்­பட்ட புத்­தர் சிலையை அகற்றி, தமிழ் மக்­கள் பூர்­வீ­க­மாக மேற்­கொண்­டு­வ­ரும் வழி­பாட்டு நட­வ­டிக்­கை­க­ளுக்கு இட­ம­ளிக்க வேண்­டும் என்­றும் வவு­னியா மாவட்ட அந்­த­ணர் ஒன்­றி­யம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

அதே­வேளை, இந்த விட­யம் தொடர்­பான கலந்­து­ரை­யா­டல் ஒன்று எதிர்­வ­ரும் 21ஆம் திகதி வவு­னியா மாவட்­டச் செய­ல­கத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

-உதயன்-

வெளிநாட்டிலிருந்து வந்த பலர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலர் கைது

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த 9 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் தங்கக்கட்டிகள் கொண்டு வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பெறுமதி 4 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் நுழைவு பகுதியில் வைத்து சுங்க பிரிவு அதிகாரிகளினால் குறித்த 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3 இலங்கையர்களும் 6 இந்தியர்களும் அடங்குகின்றனர்.

வவுனியா பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான இளைஞரும், கண்டி பிரதேச்தை சேர்ந்த 64 வயதான நபரும், கடுகன்னாவை சேர்ந்த 52 வயதான நபர்களும், சென்னையை சேர்ந்த 6 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 24 கரட் அடங்கிய 59 தங்கக்கட்டிகளை உடலில் வைத்து மறைத்து கொண்டு வந்த நிலையில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் சாராயம் விற்பனை செய்தவருக்கு நேர்ந்த கதி!!

சாராயம் விற்பனை

வவுனியா நெளுக்குளத்தில் பௌர்ணமி தினமான நேற்று (20.03.2019) சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழ் செயற்படும் விசேட போதை ஒழிப்பு பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த நபர் வீட்டில் வைத்து சாராய விற்பனையில் ஈடுபடுவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலிற்கு அமைய சாராயத்தை கொள்வனவு செய்பவர்கள் போல சென்ற பொலிசார் அவரை கையும் மெய்யுமாக பிடித்துள்ளனர்.

சம்பவத்தில் நெளுக்குளம் பகுதியை சேர்ந்த 45 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து இரண்டரை போத்தல் சாரயம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியாவில் நுண்கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம்!!

கையெழுத்துப் போராட்டம்

வடமாகாணத்தில் தனியார் நுண்கடன் நிதி நிறுவனங்களிடம் அடிமைப்பட்டு சித்திரைவதைப்படும் பெண்களின் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி நேற்று (20.03) கையெழுத்துப் போராட்டம் சிதம்பரபுரம் கற்குளம் படிவம் ஒன்று பழனி முருகன் ஆலயத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் ஒன்றியம், உழைக்கும் பெண்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் வடபகுதியில் தொடர்ந்து இடம்பெறும் கையெழுத்துப் போராட்டத்தில் பெற்றுக்கொள்ளப்படும் கையெழுத்துக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.

வடபகுதியில் இடம்பெறும் கையெழுத்துப் போராட்டம் தென்பகுதியிலும் அங்குள்ள அமைப்பினருடன் இணைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஆரம்பிக்கப்பட்ட கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்திய கையெழுத்துப் போராட்டத்தில் அப்பகுதியிலுள்ள பெருமளவான பெண்கள் கலந்து கொண்டனர்.

வவுனியா செட்டிகுளத்தில் காணிப் பிணக்குகள் தொடர்பான 88 முறைப்பாடுகள் காணி மத்தியஸ்தர் சபையிடம்!!

செட்டிகுளத்தில் காணிப்பிணக்குகள் தொடர்பான 88 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வவுனியா விசேட காணி மத்தியஸ்தர் சபை தவிசாளர் இ.நவரட்ணம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா, செட்டிகுளம் பிரதேசத்தில் உள்ள காணி உரிமம் மற்றும் உரிமை, காணி ஆவணம், காணி எல்லை என்பன தொடர்பான 88 பிணக்குகள் வவுனியா விசேட காணி மத்தியஸ்தர் சபையிடம் ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் முதல் கட்டமாக 40 பிணக்குகள் தொடர்பான கலந்துரையாடல் மற்றும் விசாரணைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணியில் இருந்து 1 மணிவரை செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் இடம்பெறும்.

சம்மந்தப்பட்டவர்களுக்கான அழைப்புக் கடிதங்கள் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் வருகை தந்து தமது காணிப் பிணக்குகள் தொடர்பில் தீர்வினைப் பெறுவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் காணிப் பிணக்கு உடையோர் வருகை தந்து புதிய முறைப்பாடுகளையும் அன்றைய தினம் செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் திரிபீடக வந்தனா வாரம் அனுஸ்டிப்பு!!

திரிபீடக வந்தனா வாரம்

தூய பௌத்த போதனைகள் உள்ளடங்கிய தேரவாத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்துவதற்கான திரிபீடக வந்தனா வாரம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் பௌத்த கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைவாக கடந்த 16 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை திரிபீடக வந்தனா (புனித திரிபீடக) வாரமாக நாடு முழுவதும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகம், புத்ததாசன அமைச்சு, வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு என்பன ஏனைய அமைச்சுகள்களுடன் இணைந்து இந்த திரிபீடக வந்தனா வாரத்தில் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகின்றது.

இவ்வாரம் முழுவதும் அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், இல்லங்கள், வாகனங்கள், வீதிகள் எங்கும் பௌத்த கொடியினை காட்சிப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரம் மற்றும் வவுனியாவின் பல பகுதிகளிலும் வீதிகளில் பௌத்த கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அரச திணைக்களங்கள், இராணுவ முகாம்கள், பொலிஸ் நிலையம் என்பவற்றிலும் பௌத்த கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தேரவாத திரிபீடகத்தினை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்துமாறு யுனெஸ்கோ தாபனத்திற்கு உலக அனைத்து பௌத்த நாடுகளினதும் ஒத்துழைப்புடன் இலங்கை முன்மொழிவினை சமர்ப்பிக்கும் தேசிய மகோற்சவம் மூன்று நிக்காயக்களின் மகாநாயக்கர்கள் உள்ளிட்ட மகாசங்கத்தினரின் முன்னிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பங்குபற்றுதலில் எதிர்வரும் 23 ஆம் திகதி கண்டி தலதா மாளிகையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

என்றும் மாறாத தமிழ் பாரம்பரியம் : புளியம்பொக்கணையில் மடைப்பண்டம் எடுப்பு!!

மடைப்பண்டம் எடுப்பு

கிளிநொச்சி – கரைச்சி, புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று நடைபெறவுள்ள நிலையில் அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன.

இதன்போது பாரம்பரிய முறைப்படி மீசாலை புத்தூர் சந்தி பண்ட மரவடியிலிருந்து மடைப்பண்டம் மாட்டு வண்டிகளில் எடுத்து வருவதற்காக சென்ற தொண்டர்கள் இன்று ஆலயத்தை வந்தடையவுள்ளனர். இதனையடுத்து நாகதம்பிரான் ஆலயத்தின் ஆண்டுக்கான உற்சவ பொங்கல் இன்று வெகு சிறப்பாக நடைபெறள்ளது.

அதிக பக்தர்கள் வருகை தரும் இவ்வாலயத்தின் புனித தன்மை கருதியும், பக்தர்களின் நன்மை கருதியும் பிரதேசத்திற்குள் மதுப்பாவனை மற்றும் பொலித்தீன் பாவனை என்பன முற்றாகத்தடை செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக்கருதி 600 இற்கும் மேற்பட்ட பொலிசாரை கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், பத்து பேர் கொண்ட பொலிஸ் அணியொன்றினையும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அன்று அழகி… இன்று இராணுவ அதிகாரி : இப்படியும் ஓர் பெண்ணா!!

இப்படியும் ஓர் பெண்ணா

நாம் காணும் கனவில் நம்பிக்கையோடு இருந்தால் அதனை நிச்சயம் திட்டமிட்டு செயல்படுத்த முடியும் என்பதற்கு உதாரணமாக வாழ்பவர் இராணுவ அதிகாரி கரிமா யாதவ். இவரது வாழ்க்கை பயணம் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு நிச்சயம் முன்னுதாரணமாக இருக்கும்.

டெல்லியில் உள்ள Stephen கல்லூரியில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்த கரிமாவுக்கு, தான் ஒரு இராணுவ அதிகாரி ஆக வேண்டும் என்பதே கனவு. ஆரம்பத்தில் ஐஏஎஸ் தேர்வு எழுதிய இவருக்கு அது வெற்றியை கொடுக்கவில்லை. அதிர்ஷ்டவசமாக, சி.டி.எஸ் ( CDS – ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள்) பரீட்சையில் வெற்றி பெற்றபோதும், சென்னையில் உள்ள OTA (இராணுவ பயிற்சி அகாடமி) பயிற்சி வகுப்பு கிடைத்தது.

இதற்கிடையில் 2017 ஆம் ஆண்டு India’s Miss Charming Face’ போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். இதில், வெற்றி பெற்றதையடுத்து இத்தாலியில் உள்ள அழகி போட்டியில் கலந்துகொள்வதற்கு அழைப்பு வந்துள்ளது. ஆனால், தனது கனவான இராணுவ அதிகாரி பயிற்சியை முடிக்க வேண்டும் என்பதற்காக அழகி போட்டி வாய்ப்பை நிராகரித்துள்ளார்.

இராணுவ அதிகாரி பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த இவர் தற்போது தனது கனவை நனவாக்கியுள்ளார். இராணுவ அதிகாரி பயிற்சியில் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்தது. ஆரம்பத்தில் கடுமையான பயிற்சிகள் இருந்த காரணத்தால் கடினமாக உணர்ந்தேன். மேலும் போதிய உடல்நலமும் எனக்கு இல்லை.

ஆனால் கடுமையாக முயற்சி செய்து முன்னேறினேன். நல்ல முறையில் என்னை நிர்வகித்துக்கொண்டேன். அனைத்து பாடத்திட்டங்களிலும் தீவிரமாக பங்குபெற்றேன். நீங்கள் அனைத்து விளையாட்டுக்களிலும் சிறந்தவராக இருக்க வேண்டும் மற்றும் தேர்ச்சி பெறுவதற்கு உடல் ரீதியாக வலுவாக இருக்க வேண்டும் என்று தவறான கருத்தை மக்கள் கொண்டுள்ளனர்.

அது உண்மை இல்லை. நீங்கள் உங்கள் பலவீனங்களை முதலில் ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். அந்த பலவீனத்தை பலமாக மாற்றிக்கொண்டு பணியாற்றவும் தயாராக இருக்க வேண்டும்.

மேலும் ஒவ்வொரு நாளும் சிறந்த ஒன்றை நமது வாழ்வில் பெற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என கூறுகிறார் கரிமா. தனது கனவில் உறுதியாக இருந்து வெற்றி பெற்ற கரிமாவின் வாழ்க்கை நிச்சயம் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு முன்னுதாரணம்.

கடலுக்கருகில் போட்டோவுக்கு போஸ் கொடுத்த இளம்பெண் : அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

அதிர்ச்சி சம்பவம்

பாலித்தீவில் கடலுக்கு அருகில் ஒரு பாறையின் விளிம்பில் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஒரு இளம்பெண், போட்டோ எடுத்து முடிக்கும்போது அங்கு இல்லை. கொந்தளிக்கும் அலைகளின் பின்னணியில் கைகளை அகல விரித்துக் கொண்டு அந்த அழகிய இளம்பெண் நிற்பதைப் பார்த்தால் எடுக்கும் புகைப்படம் அழகாக இருக்கும் என்றுதான் தோன்றுகிறது.

ஆனால் ராட்சஷ அலை ஒன்று வருவதை உணராமல் அவர் போஸ் கொடுக்க, வந்த அலை அவரை வாரிக் கொண்டு போய் விட்டது.வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் அந்த பெண் போஸ் கொடுப்பது தெரிகிறது, அடுத்த ஷாட்டில் அவரைக் காணவில்லை. அப்புறம் பார்த்தால், இன்னொரு வீடியோவில் கை கால்களில் இரத்தத்துடன் பரிதாபமாக அவர் உட்கார்ந்திருப்பதைத்தான் பார்க்க முடிகிறது.

பலமாக அடித்த அந்த அலை அவரை தூக்கியடித்ததில், கரடு முரடான பாறைகளில் போய் விழுந்திருக்கிறார் அந்த பெண். இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட அந்த வீடியோவின் கீழ், எச்சரிக்கை, இப்படி கடலின் அருகே நிற்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை புரிந்து கொள்வதற்காக இந்த வீடியோ வெளியிடப்படுகிறது. விளிம்பிலிருந்து 20 மீற்றர் தள்ளி நின்றாலும் உங்களுக்கு அருமையான ஒரு வியூ கிடைக்கும் என்று எழுதப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் கண்முன்னே மது குடித்த மகளுக்கு பெற்றோர் கொடுத்த தண்டனை : வைரலாகும் வீடியோ!!

வைரலாகும் வீடியோ

அமெரிக்காவில் கண்முன்னே மதுகுடித்த மகளை பார்த்து அவருடைய பெற்றோர் அதிர்ச்சியடையும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவை பொறுத்தவரை பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை சிறு வயதில் இருந்தே பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வளர்ப்பார்கள். ஆனால் அந்த கட்டுப்பாடுகளை அவர்களுடைய குழந்தைகள் மீறும் போது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் பெரும் அதிர்ச்சியடைவார்கள்.

அந்த வரிசையில் மிஷா மாலிக் என்கிற இளம்பெண் ஒருவர் அமெரிக்காவில் தன்னுடைய பெற்றோருடன் உணவகம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு அவருடைய பெற்றோரின் கண்முன்னே மது குடித்துள்ளார். இதனை பார்த்ததும் அவருடைய பெற்றோர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அந்த வீடியோ காட்சியில், குடிக்க ஆரம்பிக்கும்போதே மிஷா மாலிக்கின் தாய் வேண்டாம் என மீண்டும் மீண்டும் கூறுகிறார். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் மிஷா குடித்துவிடுவதை போல இடம்பெற்றுள்ளது. மகளின் இந்த செயலால் ஆத்திரமடைந்த மிஷாவின் பெற்றோர் அமெரிக்காவில் இருந்து தன்னுடைய மகளை மீண்டும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

சொந்த தந்தையால் கடத்தப்பட்ட 5 வயது கனடிய சிறுமி : பொதுமக்கள் உதவி கோரும் பொலிஸ்!!

கடத்தப்பட்ட 5 வயது சிறுமி

கனடாவின் கிரேட்டர் ரொறன்ரோ பகுதியில் சொந்த தந்தையால் 5 வயது சிறுமி கடத்தப்பட்ட விவகாரத்தில் பொலிசார் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிரேட்டர் ரொறன்ரோ பகுதியில் அமைந்துள்ள Armadale பாடசாலையில் இருந்து பொலிசாருக்கு அவசர தகவல் ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் 5 வயதான ஜன்னா ஜஃப்ரி என்ற சிறுமி சொந்த தந்தையால் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜன்னாவின் தந்தை சாலமன் ஜாஃப்ரி மீது வழக்குப் பதிந்துள்ள பொலிசார், கடத்தப்பட்ட சிறுமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

4 அடி உயரம் கொண்ட சிறுமி ஜன்னா ஜாஃப்ரி, பழுப்பு நிற கண்களுடன் கூடியவர் எனவும், இளம் பழுப்பு நிற தோள் அளவுக்கு தலைமுடியும் கொண்டவர் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஜன்னாவின் தந்தை சாலமன்(25) 6 அடி உயரம் கொண்டவர் எனவும், தமது மகளின் பெயரான ஜன்னா என பச்சை குத்தியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர். Coppard அவென்யூ அருகே பகல் 3 மணியளவில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த நபர் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் உடனடியாக பொலிசாரை தெரியப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் ரியா என்ற சிறுமியும் சொந்த தந்தையால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.