தலை வேறு உடல் வேறாக வந்த குழந்தை : இடுக்கி வைத்து பிரசவத்தில் குழந்தையின் தலையை இழுத்த செவிலியர்!!

இந்தியாவில் பிரசவத்தின்போது மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தைகள் உயிரிழந்துபோவது தொடர்கதையாக நடந்து வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் போதையில் செவிலியர் ஒருவர் பிரசவம் பார்த்த காரணத்தால் தலை வேறு, உடல் வேறாக குந்தை வெளியே வந்த சம்பவம் நடந்தது. தற்போது, அதே போன்று ஒரு சம்பவம் தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்துள்ளது.

கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொம்மி என்ற நிறைமாத கர்ப்பிணி அனுமதிக்கப்பட்டிருந்தார். பிரசவ வலி அதிகரித்த நிலையில், இரவுப் பணி மருத்துவர் இல்லாததால் செவிலியர் முத்துக்குமாரியே பிரசவம் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

போதிய பயிற்சி இல்லாத செவிலியர் என்பதால் குழந்தைப் பிறப்பின்போது குழந்தையின் தலையில் இடுக்கி வைத்து எடுத்துள்ளார். அதிக அழுத்தம் கொடுத்து தலையை எடுத்ததில் குழந்தையின் தலை மட்டும் தனியாக வெளியே வந்தது. பின்னர் ஆபத்தை உணர்ந்த செவிலியர் அவசர ஊர்தி மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கர்ப்பிணி பொம்மியை அனுப்பி வைத்துள்ளார்.

அங்கு, அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் உடல் வெளியே எடுக்கப்பட்டது. தற்போது ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பொம்மி சிகிச்சை பெற்று வருகிறார். செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் போராட்டம் நடத்த வாய்ப்பிருப்பதால் கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி கூறியதாவது, தாயின் வயிற்றில் இறந்த நிலையில் சிசு 2 நாட்கள் இருந்துள்ளது. அதுவே தலை துண்டானதற்கு காரணமாகும். குழந்தையின் எடை 1.5 கிலோவாக மட்டுமே இருந்தது. குழந்தையின் தலை துண்டான விவகாரம் குறித்து விசாரணை நடத்த செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவகல்லூரியின் மகப்பேறு தலைமை மருத்துவர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பபட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

வவுனியா நெளுக்குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் : சிக்கிய முக்கிய ஆதாரம்!!

சடலமாக மீட்கப்பட்ட பெண்

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியில் இன்று (20.03.2019) அதிகாலை வெட்டுக்காயங்களுடன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாயின் கையடக்க தொலைபேசியினை புலனாய்வு பிரிவினருக்கு வழங்கி பகுப்பாய்வு செய்யுமாறு வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌஷான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

வெட்டுக்காயங்களுடன் கிணற்றில் பெண் ஒருவர் சடலமாக கிடப்பதற்காக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டினையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா மற்றும் நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன் னெடுத்தனர்.

இதன் போது வீட்டின் அறையில் இரத்தம் காணப்பட்டதுடன், கதவு மற்றும் கதவு பூட்டு போன்றவற்றில் இரத்த அடையாளமும், பெண்ணின் கையடக்க தொலைபேசி, கத்தி, வீட்டின் அருகேயுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து சடலம் ஆகியவற்றை பொலிஸார் பார்வையிட்டதுடன் குற்றத்தடவியல் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த குற்றத்தடவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் கைரேகை அடையாளம் மற்றும் கிணற்றில் ஆழம், தடயங்கள் என்பவற்றை ஆய்வு செய்தனர்.

குறித்த பெண்ணின் மரணத்தில் பலத்த சந்தேகம் பொலிஸாருக்கு ஏற்பட்டமையினால் வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌஷான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் தம்மி லோபிஸ் லேவா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து தடயங்கள் மற்றும் சடலத்தினை பார்வையிட்டதுடன் பெண்ணின் உறவினர்கள் மற்றும் அவரது பிள்ளைகளிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

சடலத்தினை பார்வையிட்ட வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌஷான் குறித்த பெண்ணின் கையடக்க தொலைபேசியினை புலனாய்வு பிரிவினருக்கு வழங்கி தொலைபேசியில் உள்ள தகவல்களில் எதேனும் ஆதாரம் உள்ளதாக என ஆராயுமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துடன் சடலத்தினை பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு உத்தரவு பிறப்பித்தார்.

சடலமாக மீட்கப்பட்டவர் 11 மற்றும் 5 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயார் கௌரி (வயது 32) எனவும் இவரது கணவர் கடந்த சில நாட்களுக்கு முன்னரே வெளிநாட்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

10 வயது அதிகமானவரை காதல் திருமணம் செய்த பெண் : ஒன்றாக உயிரை விட்ட சோகம்!!

ஒன்றாக உயிரை விட்ட சோகம்

தமிழகத்தில் காதல் திருமணம் செய்த தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டத்தின் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (35). இவருடைய மனைவி அருணா (25). இருவரும் 3 ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் தம்பதிக்கு கனிஷ்கா (1½) என்ற மகள் உள்ளார்.

சமீபத்தில் கனிஷ்காவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளூரில் உள்ள பல்வேறு மருத்துவமனையில் காட்டியும் சரியாகாததால் கோவையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்தனர்.

பின்னர் நேற்று முன் தினம் ஊருக்கு திரும்பினர். நேற்று சரவணனின் உறவினர் ஒருவர் இறந்து விட்டார். இதற்காக சரவணனின் உறவினர்கள் அங்கு சென்று விட்டு நேற்று மாலை அவர்கள் ஊருக்கு திரும்பினார்கள்.

அப்போது உறவினர் ஒருவர் சரவணன் வீட்டுக்கு வந்த போது சரவணன், அருணா, கனிஷ்கா ஆகிய 3 பேரும் விஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தனர். உடனே அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு சரவணனும், அருணாவும் பரிதாபமாக இறந்தனர்.

குழந்தை கனிஷ்காவுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவரும் தற்கொலை செய்தார்களா அல்லது வேறு காரணமா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பூட்டிய வீட்டினுள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு!!

4 பேர் சடலமாக மீட்பு

ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் குர்நூல் மாவட்டத்தை சேர்ந்தவர் வீரன் ஜானியுலு (28). இவர் தனது மனைவி வசந்தா (25), மகள் ராம லட்சுமி (7), மகன் ராஜேஷ் (5) ஆகியோருடன் வசித்து வருகிறார்.

நேற்று முழுவதும் இவர்களுடைய வீடு திறக்கப்படாமல் உள்தாழ்ப்பால் போடப்பட்டிருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்துள்ளார். அப்போது 4 பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நபர், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், வீரன் ஜானியுலுவின் தினசரி வருமானத்தில் தான் குடும்பம் நடந்துள்ளது. மகிழ்ச்சியாக இருந்த குடும்பத்தில் கடந்த சில நாட்களாகவே கணவன், மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

ஆனால் எந்த காரணத்திற்கான தற்கொலை செய்துகொண்டனர் என்பது தெரியவில்லை. முதலில் குழந்தைகளை தூக்கில் மாட்டிய பின்னர் தான் தம்பதியினர் தற்கொலை செய்திருக்க வேண்டும். கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

யாழில் கார் சாரதியை வழிமறித்து தாக்குதல்!!

வாள் வெட்டு தாக்குதல்

யாழ்ப்பாணம் வேம்படி விதியில் கார், மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த கார் சாரதி மீது நேற்று மதியம் மேற்கொண்ட வாள் வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் கோவில் வீதி யாழ்ப்பாணத்தை சேர்ந்த குணசிங்கம் ரஜீவ்குமார் என்பவரே படுகாயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

யாழ்.நகரில் கார் ஓட்டுனராக இருக்கும் குறித்த சாரதி பயணிகளை ஏற்றிக் கொண்டு வேம்படி வீதியால் நேற்று மதியம் பயணித்துக் கொண்டிருந்த போது கறுப்பு நிற கார் ஒன்று இவர்களை இடை மறுத்துள்ளது. அதே நேரத்தில் 5 மோட்டார் சைக்கிள்களில் வாள்கலுடன் வந்த மர்ம குழு கார் சாரதியை வெட்டிக் காயப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளது.

படுகாயமடைந்த சாரதியை அப்பகுதியில் நின்றவர்கள் மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

காட்டுப் பகுதியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!!

ஆணொருவரின் சடலம் மீட்பு

ஹொரவ்பத்தான பிரதான வீதி, பன்மதவாச்சி காட்டு பகுதியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று (20.03) காலை 9.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பன்குளம், பன்மதவாச்சி பகுதியை சேர்ந்த 57 வயதுடைய முத்துலிங்கம் ஸ்ரீதர் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது. வீட்டிலிருந்து காட்டு பகுதிக்கு முச்சக்கரவண்டியில் பயணித்த நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான விசாணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பௌத்த சமய முறைப்படி நடந்த முஸ்லிம் மாணவனின் இறுதிச் சடங்கு!!

மாணவனின் இறுதிச் சடங்கு

குளியாப்பிட்டி வீரபொக்குன தேசிய முஸ்லிம் பாடசாலையில் கல்வி கற்று வந்த மாணவன் ஒருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார். கடந்த 15 ஆம் திகதி இரவு 7 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

எம்.எல்.டில்ஷான் கான் என்ற பாடசாலை மாணவனே இந்த விபத்தில் உயரிழந்துள்ளார். மாணவனின் இறுதிச் சடங்கு அவர் படித்த பாடசாலையில் நடைபெற்றுள்ளது. மாணவனின் இறுதிச் சடங்கை பௌத்த சமய முறைப்படி நடத்த பாடசாலையில் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இறுதிச் சடங்கில் பௌத்த பிக்குகள் மற்றும் இஸ்லாமிய மௌலவிகள் உட்பட அனைவரும் இன, மத பேதமின்றி கலந்துக்கொண்டுள்ளனர்.

இசை வாத்தியங்களை வாசிப்பதில் திறமை பெற்றிருந்த இந்த மாணவன், கிராமத்து மக்கள் மத்தியில் அன்புக்குரிய சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தார் என கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.

 

பணிப்பெண்ணை உள்ளாடையை வைத்து வீட்டை சுத்தம் செய்யவைத்த தம்பதி : வாந்தியை சாப்பிடவைத்த கொடூரம்!!

வாந்தியை சாப்பிடவைத்த கொடூரம்

மியான்மரை சேர்ந்த பெண் சிங்கப்பூரில் தம்பதியால் கொடுமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மியான்மரை சேர்ந்தவர் மோ மோ தன் (32). இவர் சிங்கப்பூரில் உள்ள தேய் வி கியாட் மற்றும் சியா யுன் லிங் ஆகிய தம்பதியின் வீட்டில் கடந்த 2012-ஆம் ஆண்டு வேலை செய்தார்.

அப்போது தம்பதிகள் மோ-வை மிக மோசமாக கொடுமைப்படுத்தியுள்ளனர். அதாவது சிறிதளவு மட்டுமே உணவு கொடுத்து பட்டினி போட்டனர். மேலும் அரிசி சாதம் மற்றும் சர்க்கரை கலந்த உணவை வலுக்கட்டாயமாக பணிப்பெண் மே-வுக்கு தேய் மற்றும் தியா கொடுத்துள்ளனர்.

இதன் காரணமாக அவர் வாந்தி எடுத்துள்ளார். பின்னர் வாந்தியை மே எடுத்து சாப்பிடும் படி அடித்து உதைத்துள்ளனர். இதோடு அந்த பெண்ணின் உள்ளாடையை வைத்தே வீட்டை சுத்தம் செய்ய அவர் மிரட்டப்பட்டுள்ளார்.

இப்படியான துன்புறுத்தல்களை மே அனுபவித்து வந்த நிலையில் பொலிசாருக்கு இது குறித்து தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து பணிப்பெண் மே-வை கொடுமைப்படுத்திய தேய் மற்றும் தியா கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீதான வழக்கு விசாரணை வருடக்கணக்கில் நடந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது. அதன்படி தேய்க்கு 24 மாதங்கள் சிறை தண்டனையும், அவர் மனைவி தியாவுகு 47 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதே போல இந்தோனேசியாவை சேர்ந்த பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக இதே தம்பதிக்கு கடந்த 2017-ல் சிறை தணடனை விதிக்கப்பட்டது. ஆனால் இதை இன்னும் அவர்கள் அனுபவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குளியல் தொட்டியில் படுத்தபடி 14 வயது சிறுமி செய்த செயலால் பறிபோன உயிர் : எச்சரிக்கை செய்தி!!

எச்சரிக்கை செய்தி

ரஷ்யாவில் குளியல் தொட்டியில் குளித்து கொண்டே சார்ஜில் இருந்த செல்போனை கையில் வைத்திருந்த சிறுமி, பரிதாபமாக உயிரிழந்துள்ளார். Cheboksary நகரை சேர்ந்த யுலியா விசோக்‌ஷயா (14). இவர் தனது வீட்டில் உள்ள குளியல் தொட்டியில் குளித்து கொண்டிருந்த நிலையில் சார்ஜில் இருந்த செல்போனை கையில் வைத்திருந்தார்.

அப்போது செல்போன் யுலியாவின் கையிலிருந்து குளியல் தொட்டிக்குள் விழுந்த போது அவரும் உள்ளே மூழ்கினார். இந்த நேரத்தில் யுலியா மீது மின்சாரமும் தாக்கியதில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

யுலியாவின் அலறல் சத்தம் கேட்டு அவர் பெற்றோர் அங்கு வந்து ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவர்கள் யுலியா உயிரிழந்ததை உறுதி செய்தனர். ரஷ்யாவில் கடந்த ஓராண்டில் மட்டும் யுலியாவையும் சேர்த்து மூன்று சிறுமிகள் குளியல் தொட்டியில் செல்போன் பயன்படுத்தும் போது உயிரிழந்தனர்.

கடந்த டிசம்பரில் இரினா ரிபினிகோவா என்ற 15 வயது சிறுமி, செல்போனில் சார்ஜ் வைத்து கொண்டே குளியல் தொட்டியில் குளித்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அதே போல கெசினியா என்ற 12 வயது சிறுமியும் தண்ணீர் தொட்டியில் செல்போன் பயன்படுத்திய போது நீரில் மூழ்கி இறந்தார்.

குளியல் தொட்டியில் சிறுமிகள் இறக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில் இது குறித்து பேசிய எலெக்ட்ரானிக்ஸ் பொறியாளர் ஆண்டிரி, குளியலறையில் செல்போனை வைத்து கொண்டு உட்கார்ந்திருப்பது என்பது மிகவும் ஆபத்தானதாகும், யாரும் இது போல இனி செய்யாதீர்கள் என கூறியுள்ளார்.

தூக்கத்திலிருந்து எழாமல் இருந்த இளம்பெண் : நேர்ந்த விபரீதம்!!

நேர்ந்த விபரீதம்

தமிழகத்தில் உயிருக்கு உயிராக நேசித்த காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுகுமார் (26). இவர் 2 ஆண்டுகளாக ரோந்து பொலிசில் தற்காலிக பணியில் இருந்தார். இந்நிலையில் வைஷ்ணவி (20) என்ற கல்லூரி மாணவியும், சுகுமாரும் காதலித்து வந்தனர்.

இந்த காதல் இரு குடும்பத்தாருக்கும் தெரியவந்த வந்த நிலையில் சுகுமாரின் பெற்றோர், வைஷ்ணவி பெற்றோரிடம் சென்று பெண் கேட்டனர். அதற்கு, வைஷ்ணவி கல்லூரியில் படித்து வருவதால் 2 ஆண்டுகள் கழித்து இது குறித்து பார்க்கலாம் என அவர் குடும்பத்தார் கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில் சுமாருக்கு மத்திய ரிசர்வ் பொலிசில் வேலை கிடைத்ததால் டெல்லிக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து சுகுமாருக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்து வேறு இடத்தில் பெண் பார்த்து கடந்த வாரம் நிச்சயதார்த்தம் செய்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த வைஷ்ணவி சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் காலை வெகு நேரமாகியும் அவர் எழுந்திருக்காததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், வைஷ்ணவியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு வைஷ்ணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பொலிசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வைஷ்ணவியின் உடல் நேற்று காலை வீட்டிற்கு வந்த நிலையில் அவரது உறவினர்கள் வைஷ்ணவியின் சாவுக்கு காரணமான சுகுமாரை கைது செய்ய வலியுறுத்தி முக்கிய சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதன் பின்னர் பொலிசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வெளிநாட்டில் இருந்து வந்த நபரின் விபரீத ஆசை : இறுதியில் அறை எண் 102 இல் நடந்த சோக சம்பவம்!!

அறை எண் 102 இல் நடந்த சோகம்

பணத்திற்கு ஆசைப்பட்டு சிங்கப்பூரில் இருந்து நகை கொண்டு வந்த நபர், ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் சிங்கப்பூரில் வெல்டராக வேலை பார்த்து வந்துள்ளார். எந்திரத்தில் இவரது கைவிரல் சிக்கிய காயமடைந்ததையடுத்து சிகிச்சைக்கு பின்னர் தாயகம் திரும்ப முடிவு செய்துள்ளார்.

சிங்கப்பூரியில் இருந்து மலேசியா வழியாக சென்னை வந்துள்ளார். இவர் மலேசியா விமான நிலையத்தில் நின்றுகொண்டிருக்கையில் சாதிக் என்பவர் சிவக்குமாரை அணுகி, 150 கிராம் தங்க நகையை கொடுத்து இதனை சென்னை விமான நிலையத்தில் பைசல் என்பவரிடம் கொடுத்தால் உனக்கு பணம் தருவேன் என கூறியுள்ளார்.

பணத்திற்காக சிவக்குமாரும் அந்த நகையை வாங்கிகொண்டார். ஆனால் கூறியபடி, பைசலிடம் நகையை சிவக்குமார் கொடுக்கவில்லை. கேட்டதற்கு மலேசியாவில் நடைபெற்ற சோதனையின்போது சுங்க அதிகாரிகள் அதனை வாங்கிகொண்டதாக தெரிவித்துள்ளார்.

சாதிக்கின் கூட்டாளிகள் அஜ்மல், தங்கராஜ் மற்றும் பைசல் ஆகிய மூவரும் சிவக்குமாரை திருவல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதிக்கு அழைத்து சென்று நகை எங்கு இருக்கிறது என மிரட்டியுள்ளனர்.

மினா எனும் விடுதியில் அறை எண் 102-ல் சிவக்குமாரை தங்க வைத்து, தொடர்ந்து விசாரித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த சிவக்குமார் அந்த அறையிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சிவக்குமாரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அஜ்மல் மற்றும் தங்கராஜ், அகமது பைசல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிபதி கண்முன்னே மனைவியை கத்தியால் குத்திய கணவன்!!

மனைவியை கத்தியால் குத்திய கணவன்

தமிழகத்தில் நீதிபதி கண்முன்னே மனைவியை கணவன் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அங்கு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சென்னை ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் சரவணன். மாநகர பேருந்து ஓட்டுனராக இருக்கும் இவருக்கு வரலட்சுமி என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை வந்ததால், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் குடும்ப நல நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு கடந்த ஐந்து வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து இரண்டு பேரும் இன்று வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர்.

இருவரும் பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால், ஒன்றாக அமர்ந்து பேசியுள்ளனர். அப்போது இருவருக்குள் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட, கோபத்தின் உச்சிக்கு சென்ற சரவணன் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்ணிமைக்கும் நேரத்தில் வரலட்சுமியின் நெஞ்சில் கத்தியால் குத்தினார்.

இது அங்கிருந்த நீதிபதி கண்முன்னே நடந்துள்ளது. அதன் பின் இதைக் கண்ட அங்கிருந்த பொலிசார் உடனடியாக அவரை மடபிடிக்க, வரலட்சுமி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கைது செய்யப்பட்ட சரவணனிடம் விசாரணை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் முழுநிலா கலைவிழா!!

முழுநிலா கலைவிழா

வட மாகாண கல்வி அமைச்சும் வவுனியா தெற்கு கல்வி வலயமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள முழு நிலா கலைவிழா இன்று (20.03) வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் மு.ராதாகிருஸ்ணன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வவனியா மாவட்ட அரசாங்க அதிபர் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது வவுனியா தெற்கு வலயக் கல்விப்பணிமனைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றிருந்ததுடன் வலயத்திற்குட்பட்ட சிங்கள பாடசாலை மாணவர்களின் நிகழ்வுகளும் மேடையை அலங்கரித்திருந்தது.

209 பயணிகளுடன் லண்டன் சென்ற விமானத்தில் ஏற்பட்ட கோளாறு : அவசரமாக தரையிறக்கம்!!

விமானத்தில் ஏற்பட்ட கோளாறு

அமெரிக்காவிலிருந்து லண்டன் நோக்கி பயணித்த விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவத்திற்கு சொந்தமான போயிங் 777 ரக விமானத்தில் தீப்பரவல் ஏற்பட்டதையடுத்து தரையறிக்கப்பட்டுள்ளது. கனடா, சென். ஜோன்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று அவசரமாக தரையிறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

209 பயணிகளுடன் லண்டன் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்துக்கு சென்ற விமானத்திலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. விமானம் பறந்து சில மணி நேரங்களில், விமானத்தின் பொதிகள் களஞ்சியப்படுத்தும் இடத்தில் ஏற்பட்ட தீப்பரவல் ஏற்பட்டது. இது குறித்து பயணிகளால் விமானிக்கு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட விமானிகள் உடனடியாக விமானம் கனடாவில் தரையிறக்கினர். இதனால், விமானத்தில் பயணித்த 209 பேரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர்.
அண்மைக்காலமாக போயிங் ரக விமானங்கள் தொடர்ச்சியாக விபத்துக்குள்ளாகி வருகிறது.

இந்நிலையில் குறித்த விமானத்தில் பயணித்த நாம் பாதுகாப்பாக உயிர் தப்பியுள்ளோம் என, பிரிட்டிஸ் எயார்வேஸ் விமானத்தில் பயணித்த பயணிகள் தெரிவித்துள்ளனர்.

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு

க.பொ.த உயர்தர மாணவர்கள் தமது தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்களை மார்ச் 31இற்குள் அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ளது.

அதிகமான மாணவர்கள் இன்னும் தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்களை அனுப்பவில்லை என்பதன் காரணமாகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அனுப்பப்பட்டுள்ள விண்ணப்பங்களிலும் பல்வேறு பிழைகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரவில் வீட்டு கதவை திறந்த பெண் : அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

அதிர்ச்சி சம்பவம்

தமிழகத்தில் வீடு வாடகைக்கு கேட்பதுபோல நடித்து மூதாட்டியை கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த செளரிபாளையம் பகுதியில் ஓய்வுபெற்ற செவிலியரான மேரி ஏஞ்சலின் என்பவர் வசித்து வந்தார். இரவு நேரத்தில் ஒரு தம்பதி அவரது வீட்டுக்கு வந்து கதவை தட்டிய நிலையில் மேரி திறந்தார், பின்னர் வீடு வாடகைக்கு உள்ளதா என அவர்கள் கேட்டனர்.

அத்துடன் வீட்டை திறந்து காட்டுமாறு கூறினர். இதையடுத்து மேரி வீட்டை திறந்து தம்பதிக்கு காட்டி கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த தம்பதி மேரியை தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்தனர். பின்னர் மேரியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.

இதன்பின்னர் அந்த பகுதியை சேர்ந்தவர்கள், மேரி வீட்டுக்கு சென்று பார்த்த போது அவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இது குறித்து தகவலறிந்த பொலிசார் மேரியின் சடலத்தை கைப்பற்றிவிட்டு கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.