வவுனியாவில் கழுத்து வெட்டப்பட்டுள்ள நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு : சம்பவ இடத்தில் நீதவான் : விசாரணைகள் தீவிரம்!!

பெண்ணின் சடலம் மீட்பு

வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியில் இன்று (20.03) அதிகாலை வெட்டுக்காயங்களுடன் கிணற்றிலிருந்து இரண்டு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை கணவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் குறித்த பெண்ணும் அவரது இரு பிள்ளைகளும் தனிமையில் இருந்துள்ளனர். இவர்களுக்கு பாதுகாப்பாக அயல்வீட்டுப் பெண்ணொருவரும் இவர்களுடன் இருந்துள்ளார்.

காலையில் வீட்டுக்குச்சென்ற அயலவர்கள் வீட்டிற்கு சென்ற போது பெண்ணைக் காணாமையினால் பெண்ணின் இரு பிள்ளைகளும் அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்த பெண்ணும் உறங்கிக்கொண்டிருந்தனர். குறித்த பெண்ணை காணவில்லை.

குறித்த பெண்ணை காணவில்லை என வீட்டின் அறையினை சென்று பார்வையிட்ட சமயத்தில் வீட்டின் ஒர் அறையில் இரத்தம் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து பெண்ணை வீடு முழுவதும் தேடியுள்ளனர். பின்னர் வீட்டின் ஒதுக்குப்புறத்தில் காணப்படும் பாவனையற்ற கிணற்றினை எட்டிப்பார்வையிட்ட சமயத்தில் கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார்.

இதனையடுத்து நெளுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா மற்றும் நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸாரினால் குற்றத்தடவியல் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த குற்றத்தடவியல் பொலிஸாரினால் கிணற்றிற்கு செல்லும் பாதையில் கத்தியொன்றை மீட்டெடுத்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் 11 மற்றும்5 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயாரான கௌரி (வயது 32) என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை வவுனியா நீதிவான் திருமதி தஸ்னீம் பௌசான் மற்றும் வவுனியா சட்ட வைத்திய அதிகாரி தம்மி லொவிஸ்லோவா ஆகியோர் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நேரடியாக சென்று சடலத்தினை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைக்கும் உத்திரவிட்டனர். இதனையடுத்து சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இலங்கை ஊடாக மேற்கொள்ளப்பட்டு வந்த பெண் கடத்தல் : வெளிச்சத்திற்கு வந்த உண்மை!!

பெண் கடத்தல்

இலங்கையின் ஊடாக குவைத்துக்கு ஆந்திர பிரதேச தெலுங்கானா மாநிலப் பெண்களை கடத்தும் நடவடிக்கை ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்திய நாளிதழ் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அந்த செய்தியில் மேலும், இந்த சம்பவம் தொடர்பில் 10 பேர் கொண்ட குழுவொன்றை தாம் கைது செய்துள்ளதாக தெலுக்கானா பொலிஸ் தெரிவித்துள்ளது.

ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி, கிருஸ்ணா, கடப்பா போன்ற மாவட்டங்களில் இருந்தே அதிகமான பெண்கள் குவைத்துக்கு கடத்தப்பட்டுள்ளனர். குவைத்தில் பணிகளுக்கு என்றுக்கூறி போலியான சுற்றுலா விசா தயாரித்து பின்னர் இலங்கையின் ஊடாக குவைத்தில் சென்று இறங்கியதும் அவர்களுக்கு தொழில் விசாக்கள் வழங்கப்படுகின்றன.

இதற்காக பெண்களிடம் பணமும் முன்கூட்டியே அறவிடப்படுகிறது. இந்த நிலையில் பொலிஸ் சான்றிதழ் பெறுவதற்காக பெண்கள் வந்து செல்வதை அவதானித்த தெலுக்கானா பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போதே இந்த தொடர் சம்பவம் அம்பலமாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய பெண்ணின் வயிற்றில் சிக்கிய மர்மம்!!

பெண்ணின் வயிற்றில் சிக்கிய மர்மம்

வெளிநாட்டிலிருந்து பெருந்தொகை கொக்கொய்ன் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வந்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளை விழுங்கிய நிலையில் வந்த வெளிநாட்டு பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகம் செய்யும் நோக்கில் வெனிசியூலாவில் இருந்து பெருந்தொகை கொக்கொய்னை விழுங்கி நிலையில், இலங்கைக்கு வந்த பெண் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டுள்ளார்.

68 வயதான குறித்த பெண்ணுக்கு கடுமையான வேலையுடன் கூடிய வாழ் நாள் முழுவதும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு நீதிமன்ற நீதிபதியினால் நேற்றைய தினம் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மூன்றாம் தினதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

வைத்தியசாலையில் அனுமதிகப்பட்ட அந்தப் பெண்ணின் வயிற்றிலிருந்த கொக்கொய்ன் போதைப்பொருள் வெளியே எடுக்கப்பட்டது. அதன் பெறுமதி ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் என்பது உண்மையா?

குள்ள மனிதர்களின் நடமாட்டம்

நாட்டிற்குள் எந்தவொரு குள்ள மனிதரின் நடமாட்டங்கள் தொடர்பிலும் தமக்கு உறுதிப்படுத்தும் வகையிலான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வு பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன பிபிச் செய்தி சேவைக்கு இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொலிஸ் நிலையங்களில் முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பிபிச் செய்தி சேவைக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார். “இலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் குறித்து வெளியான செய்திகள் தொடர்பில் தாம் விடயங்களை ஆராய்ந்திருந்தேன்.

எனினும், நாட்டிற்குள் எந்தவொரு குள்ள மனிதரின் நடமாட்டங்கள் தொடர்பிலும் தமக்கு உறுதிப்படுத்தும் வகையிலான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. வேற்று கிரகவாசிகள் இலங்கைக்குள் வருகைத் தந்துள்ளதாக கூறப்படுகின்ற கருத்தையும் பேராசிரியர் சந்தன ஜயரத்ன நிராகரித்தார்.

எவ்வாறாயினும், ஊடக பிரபல்யத்தை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் சில தரப்பினர் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலையில், குள்ள மனிதர்களின் நடமாட்டம் குறித்து தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்ற கருத்தில் எந்தவித உண்மை தன்மையும் கிடையாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை : அதிகரிக்கும் கடுமையான வெப்ப காலநிலை!!

மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் அதிக வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய வடமேல் மாகாணத்திலும் மன்னார் மற்றும் கம்பஹா உட்பட பல மாவட்டங்களிலும் நாளை வெப்பமான காலநிலை நிலவும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அவ்வாறு அதிக வெப்பமான காலநிலை நிலவும் போது அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் அதிகளவான நீர் பருகுவதுடன் நிழலான இடங்களில் தங்கியிருக்குமாறும் பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பல்வேறு இடங்களில் 40 பாகை செல்சியஸில் கடுமையான வெப்பநிலை காணப்படுகிறது. அது 54 பாகை செல்சியஸாக அதிகரிக்கும் பட்சத்தில் பாரிய ஆபத்துக்கள் ஏற்படும் என திணைக்களம் எச்சரித்துள்ளது.

வவுனியாவில் கிணற்றிலிருந்து காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு : பொலிசார் தீவிர விசாரணை!!

பெண்ணின் சடலம் மீட்பு

வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியில் இன்று (20.03.2019) அதிகாலை வெட்டுக்காயங்களுடன் கிணற்றிலிருந்து இரண்டு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை கணவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் குறித்த பெண்ணும் அவரது இரு பிள்ளைகளும் தனிமையில் இருந்துள்ளனர். இவர்களுக்கு பாதுகாப்பாக அயல் வீட்டு பெண் ஒருவரும் இவர்களுடன் இருந்துள்ளார்.

இந் நிலையில் நேற்றிரவு 11.30 மணிக்கு பின்னர் குறித்த பெண்ணிற்கு கணவர் தொலைபேசி அழைப்பு மேற்கொண்டுள்ளார். எனினும் பெண் அழைப்பினை எடுக்கவில்லை. சந்தேகத்தில் அயல் வீட்டார் ஒருவருக்கு பெண்ணின் கணவன் தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு மனைவி தொலைபேசி அழைப்பினை எடுக்கவில்லை சற்று சென்று அவதானித்து தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளார்.

அயல் வீட்டார் குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற நேரத்தில் பெண்ணின் இரு பிள்ளைகளும் அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்த பெண்ணும் உறங்கிக்கொண்டிருந்தனர். குறித்த பெண்ணை காணவில்லை.

குறித்த பெண்ணை காணவில்லை என வீட்டின் அறையினை சென்று பார்வையிட்ட சமயத்தில் வீட்டின் ஒர் அறையில் இரத்தம் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து பெண்ணை வீடு முழூவதும் தேடியுள்ளனர். பின்னர் வீட்டின் ஒதுக்குப்புறத்தில் காணப்படும் பாவனையற்ற கிணற்றினை எட்டிப்பார்வையிட்ட சமயத்தில் கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார்.

இதனையடுத்து நெளுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா மற்றும் நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸாரினால் குற்றத்தடவியல் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த குற்றத்தடவியல் பொலிஸாரினால் கிணற்றிக்கு செல்லும் பாதையில் கத்தியொன்றை மீட்டெடுத்துள்ளனர்.

வெட்டிக்கொலை செய்து விட்டு கிணற்றில் தூக்கி எறிந்திருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னேடுத்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் 11 மற்றும்5 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயார் கௌரி (வயது 32) என பொலிஸார் தெரிவித்தனர்.

பெறுபேறுக்காக காத்திருந்த மாணவன் கற்குகைக்குள் சடலமாக மீட்பு!!

மாணவன் சடலமாக மீட்பு

நாவலப்பிட்டியில் கடந்த 5 நாட்களாக காணாமல் போயிருந்த பாடசாலை மாணவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள் அருகிலுள்ள கற்குகையில் இருந்து இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாவலப்பிட்டி மாபகந்த பிரதேசத்தை சேர்ந்த காவிந்த மதுசங்க என்ற 17 வயதான மாணவனின் சடலமே இவ்வாறு கிடைத்துள்ளது. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளுக்கு காத்திருந்த பாடசாலை மாணவன் கடந்த 5 நாட்களாக காணாமல் போயுள்ளதாக பெற்றோர் நாவலப்பிட்டிய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து நடத்திய தேடுதலுக்கமைய இந்த சடலம் மீட்டுகப்பட்டுள்ளது. இந்த மாணவனின் பிரேத பரிசோதனை நாவலப்பிட்டி வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

12 வயது தங்கையின் தலையை வெட்டிகொலை செய்த 3 அண்ணன்கள் : அதிர்ச்சி சம்பவம்!!

அதிர்ச்சி சம்பவம்

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடந்த வாரம் 12 வயது சிறுமி தலைவெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, சிறுமியை பள்ளிக்கு அழைத்து செல்வதை தவிர்த்துவிட்டு மாமாவின் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார் மூத்த அண்ணன்.

அங்கு வைத்து சிறுமியை மூத்த அண்ணன் மட்டுமல்லாமல் 17 மற்றம் 19 வயதுடைய இளைய அண்ணனும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், 40 வயதுடைய மாமாவும் இதற்கு கூட்டு சேர்ந்துள்ளார்.

இந்த விவகாரம் அத்தைக்கு தெரிந்தும் அவர் எதையும் கண்டுகொள்ளாமல் மிகவும் அமைதியாக இருந்துள்ளார். இதனை தங்கை வெளியில் சொல்லிவிடுவாளோ என பயந்து மூன்று அண்ணன்களும் சேர்ந்து தலையை வெட்டி கொலை செய்துள்ளனர்.

இறந்துபோன பெண்ணின் மானம் காத்த தீயணைப்பு வீரர் : மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம்!!

மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம்

கடந்த 13 ஆம் திகதி பொள்ளாச்சியில் நடைபெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழந்த நிலையில், அதில் இறந்துபோன பெண்ணின் கண்ணியம் காத்த தீயணைப்பு வீரரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகில் உள்ள கெடிமேடு PAP பாசனக் கால்வாயில் ஒரு கார் கவிழ்ந்து அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர்.

அந்தக் கால்வாய் சுமார் பதினொரு அடி ஆழமும், இருபதடிக்கு மேல் அகலமும், வினாடிக்குச் சுமார் 1000 கன அடி நீருக்கு மேல் வேகமாகச் செல்லக்கூடியதும் ஆகும். இதில், தீயணைப்பு வீரர் ஒருவர் தன் இடுப்பில் பலத்த ஒரு கயிற்றைக் கட்டிக் கொண்டு, கிரேன் உதவியுடன் கால்வாயில் இறங்கியுள்ளார்.

கயிரை காரில் கட்டி இவர் இழுக்கையில் அந்த காரில் இறந்துபோன பெண்ணின் சடலம் வெளியே வந்தது. அதுவும் அவரது மேலாடை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதை அறிந்த வீரர், மேலே சூழ்ந்து நின்று கொண்டிருந்தவர்களிடம் ஒரு துணியைத் தன்னிடம் கொடுக்குமாறு வாங்கி,

அந்த நீரின் வேகத்திலும் அந்தப் பெண்ணின் உடலின் மேற்பகுதியில் இறுகச் சுற்றி, பின்னர் கிரேன் மூலம் அந்த உடலை மேலே அனுப்பி வைத்தார். இறந்துபோன பெண்ணின் சடலம் என கருதாமல் கண்ணியமாக செயல்பட்ட தீயணைப்பு வீரரின் செயல் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

வவுனியாவில் கிணற்றிலிருந்து வெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு!!

பெண்ணின் சடலம் மீட்பு

வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியில் இன்று (20.03.2019) அதிகாலை வெட்டுக்காயங்களுடன் கிணற்றிலிருந்து இரண்டு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை கணவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் குறித்த பெண்ணும் அவரது இரு பிள்ளைகளும் தனிமையில் இருந்துள்ளனர். இவர்களுக்கு பாதுகாப்பாக அயல் வீட்டு பெண் ஒருவரும் இவர்களுடன் இருந்துள்ளார்.

இந் நிலையில் நேற்றிரவு 11.30 மணிக்கு பின்னர் குறித்த பெண்ணிற்கு கணவர் தொலைபேசி அழைப்பு மேற்கொண்டுள்ளார். எனினும் பெண் அழைப்பினை எடுக்கவில்லை. சந்தேகத்தில் அயல் வீட்டார் ஒருவருக்கு பெண்ணின் கணவன் தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு மனைவி தொலைபேசி அழைப்பினை எடுக்கவில்லை சற்று சென்று அவதானித்து தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளார்.

அயல் வீட்டார் குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற நேரத்தில் பெண்ணின் இரு பிள்ளைகளும் அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்த பெண்ணும் உறங்கிக்கொண்டிருந்தனர். குறித்த பெண்ணை காணவில்லை

குறித்த பெண்ணை காணவில்லை என வீட்டின் அறையினை சென்று பார்வையிட்ட சமயத்தில் வீட்டின் ஒர் அறையில் இரத்தம் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து பெண்ணை வீடு முழூவதும் தேடியுள்ளனர். பின்னர் வீட்டின் ஒதுக்குப்புறத்தில் காணப்படும் பாவனையற்ற கிணற்றினை எட்டிப்பார்வையிட்ட சமயத்தில் கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார்.

இதனையடுத்து நெளுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா மற்றும் நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸாரினால் குற்றத்தடவியல் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த குற்றத்தடவியல் பொலிஸாரினால் கிணற்றிக்கு செல்லும் பாதையில் கத்தியொன்றை மீட்டெடுத்துள்ளனர்.

வெட்டிக்கொலை செய்து விட்டு கிணற்றில் தூக்கி எறிந்திருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னேடுத்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் 11 மற்றும்5 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயார் கௌரி (வயது 32) என பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் புதையல் தோண்டியவர்களுக்கு உதவிய பொலிசார் இருவர் கைது!!

பொலிசார் இருவர் கைது

வவுனியா – ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முன்னர் கடமையாற்றிய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஆகிய இருவரும் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுபாஸ்குமார ஆரியரத்ன மற்றும் விதான ஆகியோரே இன்று அதிகாலை 5.30 மணியளவில் வவுனியா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவில் நேற்று முனதினம் புதையல் தோண்டியவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை விசாரணைக்கு உட்படுத்திய பொலிஸாரின் தொலைபேசி ஆய்வு விசாரணைகளின் போது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புதையல் தோண்டியவர்களுடன் தொலைபேசியில் உரையாடல் மேற்கொண்டது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் முல்லைத்தீவு பொலிஸ் தலைமை அலுவலகத்திற்கு, ஈச்சங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மற்றைய பொலிஸ் உத்தியோகத்தருக்கு தலைமன்னார் பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இருவரும் தமது கடமைகளைப் பொறுப்பேற்க செல்லவில்லை.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்று அதிகாலை ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி சுபாஸ்குமார ஆரியத்தன, பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய முன்னாள் உத்தியோகத்தர் விதான ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகநபர்கள் ஐவரையும் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.

பெண்ணுக்கு பாலியல் சைகைகளை காட்டியவருக்கு நேர்ந்த கதி!!

பெண்ணுக்கு பாலியல் சைகை

கடந்த 15ஆம் திகதியன்று கார் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் ஒருவரிடம் பாலியல் ரீதியில் சைகைகளை காட்டியதாக கூறப்படும் முச்சக்கர வண்டி சாரதியை ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

பாலியல் ரீதியில் மற்றும் ஒருவருக்கு சொல்லாலோ அல்லது நடவடிக்கையாலோ தொந்தரவு செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்ற அடிப்படையிலேயே இந்த முச்சக்கர வண்டி சாரதி கைதுசெய்யப்பட்டார்.

குறித்த முச்சக்கர வண்டியின் சாரதி தம்மை தொந்தரவுக்கு உட்படுத்திய காணொளி காட்சியை குறித்த பெண் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து கலகா பகுதியை சேர்ந்த இந்த சந்தேகநபர் பம்பலப்பிட்டிய காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்தநிலையிலேயே புதுக்கடை நீதிமன்றம் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

கணவர்களுக்காக கிட்னியை பறிமாறிக் கொண்ட இந்து – முஸ்லிம் மனைவிகள் : நெகிழ்ச்சி சம்பவம்!!

நெகிழ்ச்சி சம்பவம்

மும்பையில் கணவர்களுக்காக இந்து மற்றும் முஸ்லீம் மனைவிகள் தங்களுடைய கிட்னியை பரிமாறிக்கொண்டுள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் நதீம் (51). இவரது மனைவி நஸ்ரின் பட்டேல்(45). இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த நதீம் கடந்த 4 வருடங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்ததால் மும்பையில் உள்ள சாய்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதே மருத்துவமனையில் பீகாரைச் சேர்ந்த ராம்ஸ்வரத் யாதவ் (53) என்பவரும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிறுநீரகத்தை தானம் செய்வ அவருடைய மனைவி சத்யதேவி (45) முன்வந்துள்ளார்.

ஆனால் அவருடைய ரத்த பிரிவு ராம்ஸ்வரத்துடன் ஒத்துவரவில்லை. அதேபோல நஸ்ரின் கிட்னியும் நதீமிற்கு ஒத்துப்போகவில்லை. அப்போது நதீமுக்கு சத்யதேவியின் ரத்த பிரிவும், ராம்ஸ்வரத்துக்கு நஸ்ரின் ரத்தபிரிவும் ஒத்துப்போயுள்ளது. இதனை கவனித்த மருத்துவர் ஹேமால் ஷா, கிட்னியை இருவரின் கணவர்களுக்கு மாற்றி பரிமாறிக்கொள்ளலாம் என ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கு இருவீட்டாரும் சம்மதிக்க உடனடியாக அறுவைசிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இருவரின் கிட்னிகளும் கணவர்களுக்காக மாற்றி பொருத்தப்பட்டது. இந்த சம்பவமானது மத நல்லினத்திற்கு ஒரு முன்மாதிரி போல இருப்பதாக பலரும் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

3 மணி நேரம் சித்ரவதை செய்யப்பட்ட இளைஞன் : உயிருடன் வெட்டி எடுக்கப்பட்ட சதை, நரம்புகள் : கொடூர சம்பவம்!!

கொடூர சம்பவம்

கேரளாவில் சண்டையை விலக்கிவிட சென்ற இளைஞர் ஒருவர் 3 மணி நேர சித்ரவதைக்கு பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த அனந்து கிரிஷ் என்கிற 21 வயது இளைஞர் மார்ச் 12-ம் திகதி, கடை ஒன்றில் ஜூஸ் குடித்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த மர்ம கும்பல், அனந்துவை அவரது பைக்கில் வைத்தே கடத்தி சென்றது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த நண்பர்கள் வேகமாக அனந்துவின் குடும்பத்தாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை கேட்டு பதறிப்போன அனந்துவின் பெற்றோர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அனந்துவை தேடும் வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தனர்.

மார்ச் 13-ம் திகதி கரமானா என்னும் இடம் அருகே அனந்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இந்த சம்பமானது கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொஞ்சிரவிலா பகுதியைச் சேர்ந்த விஷ்ணு ராஜ், வினீஷ் ராஜ் மற்றும் விஜய ராஜ் ஆகிய மூன்று சகோதரர்களை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில், சகோதர்கள் 3 பேரும் 14 பேர் கொண்ட ஒரு குழுவில் இருந்துள்ளார். இந்த குழு அப்பகுதியில் மிகவும் பிரபலமாக இருந்துள்ளது. 25 வயதிற்குள்ளான ஆட்களை மட்டுமே கொண்ட இந்த குழு மது, கஞ்சா என எப்போதும் போதை மயக்கத்திலே இருந்ததோடு, அப்பகுதியில் உள்ள போதைப்பொருள் கடத்தல் குடும்பலோடும் தொடர்பில் இருந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது விஜய ராஜுக்கும், அனந்துவின் நண்பனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க சென்ற அனந்துவை விஜயராஜ் தாக்க முற்பட்டுள்ளான். பதிலுக்கு அனந்துவும் விஜயராஜை தாக்கியுள்ளான்.

அன்றிலிருந்து பழிவாங்கும் சந்தர்ப்பத்திற்காக விஜயராஜ் காத்திருந்துள்ளான். இந்த நிலையில் நண்பனின் பிறந்தநாள் பார்ட்டியில் பங்கேற்பதற்காக விஜாயராஜ் கரமானா பகுதிக்கு சென்றுள்ளான். அங்கு போதையில் ஆட்டம் பாட்டம் என இருந்த நண்பர்களிடம் நடந்தவை குறித்து விஜயராஜ் கூறியுள்ளான். உடனே போதையில் கொலை செய்வதற்காக அனைவரும் கிளம்பியுள்ளனர்.

அப்போது கடையில் ஜூஸ் குடித்துக்கொண்டிருந்த அனந்துவை ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு தூக்கி சென்றுள்ளனர். கத்தும் சத்தம் வெளியில் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக வாயை கட்டிவிட்டு, 3 மணி நேரமாக கொடுமைப்படுத்தியுள்ளனர்.

முதலில் ஒரு தேங்காயை கொண்டு தலையில் அடித்து காயப்படுத்தியுள்ளனர். உயிருடன் இருக்கும்போதே சதை மற்றும் நரம்பை வெளியில் வெட்டியெடுத்துள்ளனர். இதில் அதிக ரத்தம் வெளியேறுவதை படம்பிடித்து ரசித்துள்ளனர். அந்த தாக்குதலின் போது, கே.ஜி.எப் படத்தில் வரும் வசனத்தையும் கூறிக்கொண்டே தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இறுதியில் அதிக ரத்தம் வெளியேறி துடிதுடிக்க அனந்து இறந்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். 14 பேர் ஈடுபட்ட இந்த சம்பவத்தில் தற்போது அவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருக்கும் மற்றவர்களை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மதுபோதையில் பச்சிளம் குழந்தையை பொல்லால் தாக்கிய தந்தை!!

குழந்தையை பொல்லால் தாக்கிய தந்தை

அநுராதபுரம் – நொச்சியாகமை பகுதியில் மதுபோதையில் ஏற்பட்ட குடும்ப தகராறில், கணவன் பொல்லால் மனைவியை தாக்க முயற்சித்த போது, அது மூன்று மாத குழந்தையின் மீது பட்டத்தில் குழந்தை படுகாயமடைந்துள்ளது.

இநத தகராறு முற்றிதால், ஆத்திரமடைந்த கிராமவாசிகள் அந்த நபரை தாக்கி மரத்தில் கட்டி வைத்து நொச்சியாகமை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் நொச்சியாகமை, கட்டலுபத்வெவ, கபரகொய்யா வெவ பிரதேசத்தில் நேற்று மாலை நடந்துள்ளது.

தகராறின் போது மதுபோதையில் இருந்த கணவன், பொல்லால் மனைவியை தாக்கிய போது, மனைவி கையில் வைத்திருந்த குழந்தை மீது அந்த அடிப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த குழந்தை அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மது விற்பனையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாக கிராமவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மரத்தில் தொங்கவிடப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!!

ஆணொருவரின் சடலம் மீட்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஆலங்குளம் கிராமத்திலுள்ள வீடொன்றின் பின்னாலுள்ள மரத்தில் தொங்கவிடப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆலங்குளம் கிராமத்தில் வசித்து வந்த 3 பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய சின்னையா சுப்பிரமணியம் என்பவரின் சடலமே இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் உயிரிழந்த நபரின் மனைவி தெரிவிக்கையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் சில நபர்களால் தாக்கப்பட்ட நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இந்த நிலையில் அவர் நேற்றைய தினம் நண்பகலளவில் வீடு திரும்பிய நிலையில் அவர் சில நபர்களால் தாக்கப்பட்டது குறித்து வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தேன்.

இதேவேளை சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எனது கணவர் வீட்டின் பின் வளவிலுள்ள ஆத்தி மரத்தில் தொங்கவிடப்பட்ட நிலையில் காயங்களுடன் சடலமாக காணப்பட்டார் என குறிப்பிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தகவல் கிடைக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்த பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.