வவுனியாவில் கஞ்சா செடியுடன் ஒருவர் கைது!!

ஒருவர் கைது

வவுனியா மாமடு பகுதியில் கஞ்சா செடியினை வீட்டினில் பயிர் செய்து வந்த ஒருவரை நேற்று(15.03) கைது செய்துள்ளதாக வன்னி பிராந்திய பிரதிபொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் விசேட போதை ஒழிப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்கள்..

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மாமடு பகுதியில் உள்ள வீடொன்றில் தேடுதல் நடாத்திய பொலிசார் அங்கு மூன்று கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருப்பதை அவதானித்தனர்.

குறித்த கஞ்சா பயிரினை கைப்பறிய பொலிசார் அதனை பயிரிட்டார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யபட்டவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியாவில் பாவனையாளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு!!

பாவனையாளர் தினம்

சர்வதேச பாவனையாளர் தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட பாவனையாளர் அதிகாரசபையால் விழிப்புணர்வு நிகழ்வும் பரிசோதனையும் நேற்று(15.03) காலை நடைபெற்றது.

வவுனியா மாவட்ட பாவனையாளர் அதிகாரசபையின் பொறுப்பதிகாரி ச.நிலாந்தன் தலைமையில் வர்தக நிலையங்களிற்கு சென்ற அதிகாரசபையினர் பொதுமக்களோடு கலந்துரையாடியிருந்ததுடன் பாவனையாளரின் உரிமைகள் தொடர்பாக தெளிவுபடுத்தியிருந்தனர்.

வவுனியாவில் உலக நீர் தினத்தைப் முன்னிட்டு வாடிக்கையாளர் தினம்!!

வாடிக்கையாளர் தினம்

உலக நீர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் வாடிக்கையாளர் தினம் என்னும் இலகு சேவையினை நீர்பாசன திணைக்களம் வழங்கியுள்ளது. குறித்த வாடிக்கையாளர் தின நிகழ்வு நேற்றும் இன்றும் நீர்பாசனத் திணைக்களத்தின் மாவட்ட பொறியிலாளர் அலுவலகத்தில் இடம்பெறுகிறது.

2019 ஆம் ஆண்டு உலக நீர் தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களின் நீர்ப்பட்டியல் சார்ந்த பிரச்சனைகளுக்க உடனடியாக தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இவ் வாடிக்கையாளர் தினம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது வாடிக்கையாளர்களின் முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளல், முறைப்பாடுகளுக்குரிய தீர்வுகளை விரைவாக பெற்றுப் கொடுததல், வாடிக்கையாளர்களின் நீர்ப்பட்டியல் சார்ந்த பிரச்சனைகளை தீர்த்து வைத்தல் என்பன தொடர்பாக கவனம் செலுத்தப்படுகின்றது.

விபத்தில் ஒருவர் பரிதாபமாகப் பலி!!

பரிதாபமாகப் பலி

தம்பலகாமம் – கிண்ணியா பிரதான வீதி கோவிலடி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளதாகவும், லொறியொன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஆணைச்சேனை பகுதியைச் சேர்ந்த எஸ். தேவசாயம் சத்தியசீலன் எனப்படும் 55 வயதுடைய லொறியின் சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கந்தளாய் பகுதியிலிருந்து கிண்ணியா ஊடாக மூதூருக்கு பொருட்களை ஏற்றிச்சென்ற போதே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்துக்குள்ளான பாரவூர்தி : CCTV காணொளி!!

விபத்துக்குள்ளான பாரவூர்தி

கண்டி – மாத்தளை பிரதான வீதி அகுறனை நகரில் பயணித்து கொண்டிருந்த பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி விபத்துக்குள்ளானது.

இன்று காலை 07 மணியளவில் குறித்த விபத்து பதிவாகியுள்ளது. குறித்த விபத்து வர்த்தக நிலையம் பொருத்தப்பட்டிருந்த C.C.T.V காணொளி ஒன்றில் பதிவாகியுள்ளது.

அகுறனை நகரில் பயணித்து கொண்டிருந்த பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி விபத்துக்குள்ளானது.

கோர விபத்தில் மூன்று பிள்ளைகளையும் தவிக்கவிட்டு உயிரிழந்த தாய் தந்தை!!

கோர விபத்து

கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் பொல்கஹாவெல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிற்றூர்ந்து (வேன்) ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டமையினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் தந்தை மற்றும் வயோதிப பெண் ஒருவர் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

அவர்களின் பிள்ளைகள் மூவரும் காயமடைந்த பொல்கஹாவெல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக குருநாகல் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே வீட்டில் இரு ஆண்களுடன் தங்கியிருந்த 22 வயது யுவதி கைது!!

22 வயது யுவதி கைது

ஐஸ் மற்றும் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட 3 பேர் பாணந்துறை – வாழைத்தோட்டம் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 94 கிராம் ஐஸ் மற்றும் கொக்கேய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

களனி பிரதேசத்தை சேர்ந்த இவர்கள் வாடகைக்கு வீடொன்றை பெற்று அதை போதைப்பொருள் வியாபாரத்திற்காக பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த வீட்டில் இருந்து போதைப்பொருள் வர்த்தகத்திற்காக பயன்படுத்த 16 கைப்பேசிகள் மற்றும் 19 சிம் அட்டைகள் உள்ளிட்ட உபகரணங்கள் சில காவற்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 22 வயதுடைய பெண்ணொருவரும் 28 மற்றும் 30 வயதுடைய சகோதரர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மர்மமான முறையில் நபரொருவர் உயிரிழப்பு!!

நபரொருவர் உயிரிழப்பு

மர்மமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலமொன்று இன்று மதியம் முந்தளம் காவற்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தோட்டமொன்றில் காவலாளராக பணியாற்றி வந்த நபரொருவரின் சடலமொன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக முந்தளம் காவற்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்கள் 70 வயதுடைய முதியவர் என தெரிவிக்கப்படுகிறது. தான் தோட்டத்திற்கு வந்து பார்த்த போது காவலர் இல்லாததால் அவரை தேடிய போது காவலரண் கட்டிலில் உயிரிழந்த நிலையில் அவர் இருந்ததாக தோட்ட உரிமையாளர் காவற்துறையில் தெரிவித்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் இடம்பெறவுள்ள நிலையில் , முந்தளம் காவற்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர்.

யாழில் இருந்து திருகோணமலைக்கு சென்றவர் சடலமாக மீட்பு!!

ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

திருகோணமலை நகராட்சி மன்றத்துக்கு அருகிலுள்ள பேருந்து தரிப்பிட நிலையத்தில் தலை மற்றும் கால்களில் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் யாழ். நான்காம் வட்டாரத்தை சேர்ந்த 74 வயதுடைய அந்தனிபாஸ் என்பவர் என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் யாழிலிருந்து திருகோணமலைக்கு பேருந்தில் வந்துள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை துறைமுக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் வயல் அறுவடைத் விழா!!

அறுவடைத் விழா

வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையில் வயல் அறுவடைத் விழா உதவி விவசாய பணிப்பாளர் திருமதி ஜெகதீஸ்வரி தலைமையில் இன்று இடம்பெற்றது.

வவுனியா விவசாய திணைக்களத்தில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையுடன் மேற்கொள்ளப்பட்ட இயந்திரம் மூலமான விதை நடல், கையினால் விதை நடல் போன்ற முறைகளில் செய்கை பண்ணப்பட்ட மாதிரி நெற்செய்கையின் அறுவடைகள் இதன் போது மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இம்முறையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின் விளைதிறன், நன்மை, தீமைகள், இலாப, நட்டங்கள் தொடர்பிலும் கண்டறியப்பட்டு அதிகாரிகளினால் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் பண்னை முகாமையாளர் கதீசன், உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மிக வேகமாக குறைந்து வரும் நந்திக்கடல் ஏரியின் நீர்மட்டம்!!

நந்திக்கடல் ஏரி

முல்லைத்தீவில் அண்மை நாட்களாக தொடரும் அதிக வெப்பநிலை காரணமாக நந்திக்கடல் ஏரியின் நீர்மட்டம் மிக வேகமாக குறைவடைந்து செல்வதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் பெய்த கடும் மழை காரணமாக நந்நிதிக்கடலின் நீர்மட்டம் அதிகரித்து நந்திதிக்கடல் இயற்கையாகவே பெருங்கடலுடன் சங்கமித்திருந்தது.

இந்நிலையில், தற்பொழுது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக பெருங்கடலுடனான நந்நிதிக்கடல் நீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் பெருங்கடலில் இருந்து நந்திக்கடல் ஏரிக்குள் வரும் கடல்வாழ் உயிரினங்களின் வருகை தடைப்பட்டுள்ளதுடன் நத்திக்கடலில் வாழும் கடல்வாழ் உயிரினங்கள் அழிவடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

வவுனியாவில் மதுபான நிலையங்களுக்கு முன்னால் மது அருந்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!!

நீதிமன்ற நடவடிக்கை

வவுனியாவில் கடந்த இரு தினங்களாக மதுபான விற்பனை நிலையங்களுக்கு முன்பாக மதுபானம் அருந்துபவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போதை ஒழிப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று, நேற்று முந்தினம் ஆகிய இரு தினங்களிலும் கண்டி வீதியிலுள்ள மதுபான விற்பனை நிலையங்களுக்கு முன்பாக நின்று மதுபானம் அருந்துபவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போதை ஒழிப்புப் பொலிசாரின் இந்நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மதுபான விற்பனை நிலையங்களில் மதுபானங்களை வாங்கிச் செல்ல முடியும் எனினும் சிலர் அதனை வாங்கிக் கொண்டு அவ்விடத்திலிருந்து குழுவாக மது அருந்திவருவதுடன் சிலரிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்புக்களும் இடம்பெற்றுள்ளது. இதனால் அவ் வீதிவழியாகச் செல்பவர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுவதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் இருந்து வந்த இலங்கை பெண்களின் மோசமான செயல்!!

பெண்களின் மோசமான செயல்

தங்க கடத்தலில் ஈடுபட்ட இரண்டு இலங்கை பெண்கள் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் இருந்து தங்கத்தை கடத்திச் சென்ற இந்த பெண்கள் பூனே விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த பெண்களிடம் இருந்து 900 கிராமுக்கும் மேற்பட்ட தங்கக்கட்டிகள், சங்கிலிகள், வளையல்கள் என்பவற்றை இந்திய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இந்த தங்கத்தின் மதிப்பு 30 இலட்சம் இந்திய ரூபாய்களுக்கு மேல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இலங்கை பெண்கள் சம்பந்தமாக இந்திய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

வடக்கில் பாலியல் வன்கொடுமை காணொளிகள் உருவாக்கி விற்பனை : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

வெளியான அதிர்ச்சித் தகவல்

வடக்கில் பாலியல் வன்கொடுமை காணொளிகள் உருவாக்கப்பட்டு பெருந்தொகை பணத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஜே.வி.பி அதிர்ச்சி தகவல் ஒன்றை முன்வைத்துள்ளது. ஜே.வி.பியின் சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான பிமல் ரத்நாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்களின் நிதியீட்டத்தைக் கொண்டு பாலியல் வன்கொடுமைக் காணொளிகள் பதிவு செய்யப்படும் மோசமான தொழிற்துறையொன்று வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான குழு நிலை விவாதத்தில் நேற்று பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், புங்குடுதீவில் பாடசாலை மாணவி வித்தியா பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நாம் அனைவரும் மறந்திருக்க முடியாது.

இந்த சம்பவத்தை வெறும் பாலியல் வன்கொடுமையாக மட்டும் பார்த்துவிட முடியாது. இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் காணொளியாக பதிவு செய்யப்பட்டதுடன், அதற்காக பெருந்தொகை பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் வடக்கில் இடம்பெற்று வருகின்றமை பரகசியமானதொன்றேயாகும். இதில் மிகவும் துரதிஸ்டவசமானது என்னவென்றால் அதே சமூகத்தைச் சேர்ந்த புலம்பெயர் மக்களே இந்த கொடூர செயலுக்கு பணம் வழங்கி வருகின்றனர் என்பதுதான்.

சிறுமியர் மற்றும் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அந்தக் காட்சிகளை காணொளியாக பதிவு செய்து பெருந்தொகை பணத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. வடக்கில் பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருள் பயன்பாடு, மதுபான பயன்பாடு மற்றும் வறுமை நிலைமை போன்றன மிகவும் அதிகரித்துள்ளதாக பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் பொலிசாரிடம் சிக்கிய இருவருக்கு நேர்ந்த கதி!!

இருவருக்கு நேர்ந்த கதி

வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதி, சதொச விற்பனை நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய 22 மற்றும் 50 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது 80 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் அருகிலுள்ள சிறைச்சாலைக்குள் இந்த போதைப்பொருளினை வீசுவதற்கு திட்டமிட்டிருக்கலாம் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேலதிக விசாரணைகளின் பின் இன்று சந்தேகநபர்களை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

வாகனம் வாங்க காத்திருக்கும் இலங்கையர்களுக்கு பெரும் மகிழ்ச்சி : குறைந்த விலையில் நவீன கார்!!

குறைந்த விலையில் நவீன கார்

இலங்கையில் புதிய வகை கார் ஒன்று குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையர்களின் கார் கனவை நனவாக்கும் வகையில் இந்த வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் 11 இலட்சம் ரூபாவுக்கு இந்த வாகனத்தை கொள்வனவு செய்ய முடியும். குடும்பம் ஒன்று பயணிப்பதற்கு ஏற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

Bajaj Qute என்ற இந்த வாகனத்தில் DTSi தொழில்நுட்பத்திலான இயந்திரம் ஒன்றும் 216.6 CM3 திறன் கொண்ட இயந்திரமும் பொருத்தப்பட்டுள்ளது. போதுமான இட வசதிடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தில் சாரதி மற்றும் பயணிகள் அனைவரும் வசதியாக பயணிக்க முடியும்.

இந்த வாகனம் காபன் பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தாத வகையில் இந்த வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனத்தின் இலங்கை அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த வாகனத்திற்கு ஐரோப்பாவின் WVTA சான்றிதழும் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தற்போது ஐரோப்பிய நாடுகளான துருக்கி, போலந்து, போர்த்துக்கல், ரஷ்யா, வட அமெரிக்கா, மெக்சிகோ, கொலம்பியா, தென் ஆபிரிக்கா, பங்களாதேஷ், இந்தோனேஷியா உட்பட 32 நாடுகள் இந்த Bajaj Qute என்ற வாகனத்தை கொள்வனவு செய்துள்ளன. நாடு முழுவதும் டேவிட் பீரிஸ் மோட்டார் வாகன விற்பனை நிலையங்களில் இந்த வாகனத்தை பெற்றுக் கொள்ள முடியும்.