தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் படங்கள் அதிகம் வெளியாகின்றன. இந்த வாரமும் சில படங்கள் வெளியாகின, அதில் ஒன்று தான் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்.
காதலர்களை கவரும் வண்ணம் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்களும் நல்ல விமர்சனம் கொடுக்கின்றனர். நமது சினி உலகம் யூடியூபிலும் இப்படத்திற்கான மக்களின் கருத்து வீடியோ உள்ளது.
இந்த நிலையில் இப்பட நடிகர் ஹரிஷ் கல்யாண் படத்தை பார்ப்பதற்காக படத்தில் பயன்படுத்திய பைக்கில் திரையரங்கிற்கு முகமூடி அணிந்து வந்துள்ளார். படத்தையும் ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் தனிச் சிங்களத்தில் அறிவித்தல்கள்
வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள காணி மாவட்ட பதிவகத்தில் கட்டண விபரங்கள் தனிச் சிங்கள மொழியில் கட்சியளிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் றிசாட் பதியூதின் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள காணி மாவட்ட பதிவகத்தில் காணிகளை விரைவாக பதிவு செய்யும் ஒருநாள் சேவையினை நடைமுறைப்படுத்தும் ஆரம்ப நிகழ்வு இன்று (16.03.2019) இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கைத்தொழில் வர்த்தகம் நீண்டகால இடம்பெயர்ந்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் றிசாட் பதியூதின் மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.ஹனீபா உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
காணி மாவட்ட பதிவகத்தில் காணிகளை விரைவாக பதிவு செய்யும் ஒருநாள் சேவைக்குறிய கட்டண விபரங்கள் தனி சிங்கள மொழியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை தமிழ் மக்களிடையே பெரும் மனவருத்தினை ஏற்படுத்தியிருந்தது.
இவ்விடயம் அமைச்சர் றிசாட் பதியூதினின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து இரு மொழி பேசும் மக்களும் இணைந்து வாழும் பிரதேசமாக வவுனியா காணப்படுகின்றது. எனவே இவ் கட்டண விபரப் பட்டியலை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உடனடியாக மாற்றுமாறு திணைக்கள அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்தார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள காணி மாவட்ட பதிவகத்தில் காணிகளை விரைவாக பதிவு செய்யும் ஒருநாள் சேவையினை நடைமுறைப்படுத்தும் ஆரம்ப நிகழ்வு ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலின்படி பொதுநிர்வாக உள்ளக உள்நாட்டலுவல்கள் மாகாண மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் வஐீர அபேஜவர்த்தன திட்டமிடலில்,
கைத்தொழில் வர்த்தகம் நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் றிசாட் பதியூதின் மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.ஹனீபா அவர்களின் தலைமையில் இன்று (16.03.2019) காலை 9.30 மணியளவில் வெகு சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன் பின்னர் மங்களவேற்றல் நிகழ்வுடன் நிகழ்வு ஆரம்பமாகியதுடன் நாட்டிற்காக உயிர்நீத்த வீரர்கள் மற்றும் இத் திணைக்களத்தில் சேவையாற்றி காலமானவர்களின் ஆத்ம சாந்திக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், வவுனியா மற்றும் வவுனியா வடக்கு மற்றும் வவுனியா வெண்கல செட்டிக்குள பிரதேச செயலாளர்கள், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள், வவுனியா நகரசபை உறுப்பினர்கள், செட்டிக்குளம் பிரதேச சபை உறுப்பினர்கள், சட்டத்தரணிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக முகப்புத்தகத்தில் பதிவிட்டு விட்டு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து இளைஞன் ஒருவர் இன்று மாலை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுமன சிங்கள மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் இருந்து இன்று மாலை 03.30 மணியளவில் குறித்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நானு ஓயா சமர்செட் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய எம். கிளிண்டன் எலஸ்ட் என்ற இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திடீர் என நீர்த்தேக்கத்தில் பாய்வதனை கண்ட பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு அறிவித்ததனை தொடர்ந்து பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து சடலத்தினை சுமார் 4.30 மணியளவில் மீட்டுள்ளனர்.
நீர்த்தேக்கத்தில் பாய்வதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்பு குறித்த இளைஞன் நீர்த்தேக்கத்திற்கு முன்பு நின்று செல்பி புகைப்படம் எடுத்து தனது முகப்புத்தகத்தில் “END OF MY LIFE GOOD BYE GOD” என எழுதி புகைப்படத்தையும் பதிவிட்டு நீர்த்தேக்கத்தில் பாய்ந்துள்ளார்.
சடலம் புலன் விசாரணையின் பின் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காதல் விவகாரம் காரணமாக இவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா அல்லது வேறு எதுவும் காரணம் உண்டா என தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தனது மனைவியை கொன்று உடலை துண்டுகளாக்கி வீசிய, கனேடிய கறிக்கடைக்காரன் என்று அழைக்கப்படும் ஒரு நபர் பெண்ணாக மாறி சிறையிலிருந்து வெளியே வந்திருக்கிறாள். தற்போது 46 வயதாகும் காலித் ஃபர்ஹான், தன்னை சாரா ஃபர்ஹான் என்று அழைத்துக்கொள்கிறாள். மீண்டும் சமுதாயத்துடன் ஒன்றிணைந்து செல்வதற்காக சாராவுக்கு ஆறு மாதங்கள் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
திருநங்கையாக மாறி, கண் குறைபாட்டுடன் சிறையிலிருந்து வெளியே வந்துள்ள சாரா, தன்னை வழி நடத்த ஒரு நாய் வாங்குவதற்காக காத்திருக்கிறாள். ஆனால், பரிதாபத்திற்குரிய நிலையில் இன்று காணப்படும் சாராவின் பின்னணி சாதாரணமானதல்ல.
அப்போது காலித்தாக இருந்த காலகட்டத்தில் அவனது மனைவியாக இருந்தவர் கரீனா ஜானு. பால் வடியும் அழகு முகம் கொண்ட கரீனாவுக்கு ஒரு காலும் கையும் பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தன.
9 வயதாக இருக்கும்போது விவாகரத்தான பெற்றோர், கிறிஸ்துமஸ் பண்டிகை ஒன்றின்போது தற்கொலை செய்து கொண்ட தாய் என, கடைசியில் போதையின் பிடியில் சிக்கினாள் கரீனா. இருந்தும் எல்லோரிடமும் ஆழ்ந்த அன்பு காட்டும் கரீனாவிடம் அடிக்கடி சண்டையிட்டு அடித்து உதைக்கும் காலித், ஒருநாள் போதையின் உச்சத்திலிருந்தபோது கரீனாவை தாக்கி கொலை செய்தான்.
தனது வீட்டின் பேஸ்மெண்டில் கரீனாவின் உடலை பல நாட்கள் காலித் போட்டு வைத்திருக்க, அக்கம் பக்கத்தோர் நாற்றம் அடிப்பதாக புகார் செய்தார்கள். உடனே கரீனாவின் உடலை துண்டுகளாக வெட்டிய காலித், துண்டுகளை பல்வேறு இடங்களில் வீசி விட்டான்.
பின்னர் தனது மனைவியின் புகைப்படத்துடன் அப்பாவியாக மனைவியைக் காணவில்லை என ஊடகங்களுக்கு பேட்டியளித்தான். ஆனால் அவனது வீட்டினருகே உடல் பாகங்கள் கிடைக்க, பொலிசாரின் சந்தேகம் காலித் மீதே திரும்பியது.
விசாரணையின் முடிவில் சிறையில் அடைக்கப்பட்டான் காலித். சிறையில் திருநங்கையாக மாறியதாக அவன் அறிவித்தையடுத்து பெண்கள் சிறைக்கு மாற்றப்பட்டாள் சாரா என்கிற காலித். தற்போது ஜாமீனில் வந்திருக்கும் சாரா இனி கண் பார்வையற்றோருக்காகவும், திருநங்கைகளுக்காகவும் தனது வாழ்வை அர்ப்பணிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளாள்.
தாய்வான் நாட்டைச் சேர்ந்த மொடல் அழகி ஒருவர் சிறிய முகம் பெறுவதற்காக அவர் மேற்கொண்டுள்ள முயற்சி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்வான் நாட்டை சேர்ந்த BearGenie. பிரபல மொடலான இவர் கடந்த புதன் கிழமை தன் முகம் முழுவதும் ஊசியாள் குற்றி சிகிச்சை பெறும் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதைக் கண்ட அவரது ரசிகர்கள் நன்றாக இருந்த BearGenie-க்கு என்ன ஆச்சு, அவரது முகத்தில் ஏன் இப்படி உசியால் குற்றப்பட்டுள்ளது என்று அதிர்ச்சியடைந்தனர். இன்னும் சிலர் வேடிக்கையாக 32 வயது முள்ளப்பன்றியை பார்பது போல் உள்ளது எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
அதன் பின் இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்திருந்த தகவலில், தாய்வானில் முகத்திற்கு மசாஜ் செய்யும் bone-toning என்ற அக்கு பஞ்சர் முறை டிரண்ட் ஆகி வருகிறது. இது மிகவும் வலியை ஏற்படுத்துக் கூடிய முறை, அதில் தான் தற்போது BearGenie இறங்கியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கி, கடந்த பிப்ரவரி மாதம் வரை BearGenie இந்த சிகிச்சை பெற்று வருவதாகவும், சமீபத்தில் வெளியான FHM-ன் Top 100 Sexiest Woman in Taiwan என்னும் பட்டியலில் முதல் இடம் பிடித்த பெண் சிறிய முகம் கொண்டிருந்தார் எனவும், தானும் இந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக அவர் தனது முகத்தை சிறிதாக்க BearGenie, அக்குப்பஞ்சர் உதவியை நாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா ஓமந்தை பகுதியில் நேற்று (15.03) இரவு 11 மணியளவில் 9 கிலோ 400கிராம் கேரள கஞ்சாவுடன் ஜா- ஏல பகுதியினை சேர்ந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஓமந்தை நகர் பகுதியில் நேற்றையதினம் ஓமந்தை பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தினை வழி மறித்து சோதனையிட்ட சமயத்தில் 9கிலோ 400கிராம் கேரளா கஞ்சாவினை பயணப்பொதியில் வைத்திருந்த நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள நபர் ஜ- எல பகுதியினை சேர்ந்த 54 வயதுடையவர் எனவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கண்டியில் திருமணமான புதிய மாப்பிள்ளை ஒருவர் தலைதெறிக்க ஓடிய சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. தனது புதிய மனைவிக்கு பரிசு வழங்க சென்ற கணவன் ஆடைகள் இன்றி, உயிரை காப்பாற்ற தப்பி ஓடியுள்ளார்.
கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னர் திருமண பந்ததில் இணைந்த நபர் ஒருவர் தனது மனைவிக்கு பரிசு ஒன்றை வழங்க எண்ணியுள்ளார். அதற்கமைய வீட்டிற்கு தேவையான பொருட்களும் நாய் குட்டி ஒன்றையும் குறித்த நபர் கொள்வனவு செய்துள்ளார்.
நாய் குட்டியை அருகிலுள்ள தேயிலை செடியின் ஓரத்திலிருந்து எடுத்துச் சென்றுள்ளார். மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மிகவும் ஆர்வத்தோடு குறித்த நபர் இரண்டு அடிகள் சென்றுள்ளார். இதன்போது திடீரென சிறுத்தை ஒன்று குறித்த நபர் மீது பாய்ந்து தாக்கியுள்ளது.
இதனால் நிலைதடுமாறிய அவர், உயிரை காப்பாற்றுவதற்காக தப்பி ஓடியுள்ளார். இதன்போது அவரின் ஆடையும் கழன்று விழுந்துள்ளது. வீட்டுக்கு வாங்கிய பொருட்களையும் அங்கையே விட்டுச் சென்றுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருந்து நிறுவன ஊழியரிடம் இருந்து பணம் மற்றும் காரை திருடி சென்ற பாலியல் அழகியை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் (40) என்பவர் தன்னுடைய மனைவியை பிரிந்து சென்னையில் உள்ள மருந்து நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது புரோக்கராக பணிபுரிந்து வரும் சீனு என்பவரும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தின் மூலம், சீனுவின் சொந்தக்காரன் பையனுக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி, சக்திவேல் ரூ.2 லட்சம் லஞ்சமாக வாங்கியுள்ளார். ஆனால் 4 மாதம் ஆகியும் வேலை வாங்கித்தரவில்லை.
இதனால் சீனு பெரும் கோபத்தில் இருந்துள்ளார். இந்த சமயத்தில் போன் செய்த சக்திவேல், தனிமையில் இருக்க பெண் வேண்டும் என கூறியுள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த சீனு, சுவேதா என்கிற பெண்ணை ஏற்பாடு செய்து அனுப்பியிருக்கிறார்.
சுவேதாவை தன்னுடைய காரில் அழைத்துக்கொண்ட சக்திவேல் தனியார் விடுதிக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது பாத்ரூம் உள்ளே சென்ற சக்திவேலை, சுவேதா வெளிப்பக்கத்தில் தாழ்பாள் போட்டுவிட்டு, அங்கிருந்த ரூ.2 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு, காரில் தப்பி சென்றுள்ளார்.
நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த சக்திவேல் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். பிறகு சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சக்திவேலை மீட்டு வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இதுகுறித்து மேற்கொண்ட விசாரணையில், சுவேதா திருப்பதிக்கு தப்பி செல்வது தெரியவந்தது. இந்த நிலையில், சீனு மற்றும் சுவேதாவை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறவாய்வு இன்று(16.03) பிற்பகல் 2.30 மணியளவில் பாடசாலை அதிபர் அருட்சகோதரி எஸ்.ஜெபநாயகி தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
ஆரம்பப்பிரிவு மாணவர்களின் பாண்ட் அணிவகுப்புடன் விருந்தினர்கள் அழைத்துச் செல்லப்பட்டு ஆரம்ப நிகழ்வான தேசியக் கொடியேற்றல் இல்லக்கொடியேற்றல், சுடர் ஏற்றல், விளையாட்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தல் என்பன இடம்பெற்றதுடன் விளையாட்டில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சான்றிதழ்களும், கேடயங்களையும் நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி இமெல்டா சுகுமார், வடமாகாண கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும் கிறிஸ்தவ மத விவகாரங்களுக்கான செயலாளருமான எஸ்.சந்திரகுமார், இறம்பைக்குளம் தூய அந்தோனியார் ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி எம்.ஜெயபாலன்,
பிரதி அதிபர், அயல் பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி யாழ்.பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகிய எழுச்சிப்பேரணி முற்றவெளியில் கவனயீர்ப்பு போராட்டத்துடன் நிறைவுபெற்றது.
இதன்போது காணாமலாக்கப்பட்ட உறவுகளின் ஒளிப்படங்களை கைகளில் ஏந்தி, ‘மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்’ என கோசம் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இங்கு கண்டன அறிக்கையும் வாசிக்கப்பட்டது.
இந்த பேரணி இன்று காலை 10.00 மணிக்கு பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகியது.
அங்கிருந்து வைத்தியசாலை வீதியூடாக முற்றவெளியை வந்தடைந்த நிலையில், தமிழர்களுக்கு நீதி வேண்டும் என ஐ.நாவைக் கோரிய இந்த நீதி கோரும் போராட்டம் கண்ணீருடன் நிறைவுபெற்றது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஊடாக இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வவுனியா – நெடுங்கேணியில் நேற்று மாலை விறகு வெட்ட காட்டுக்கு சென்ற இருவர் வெடிக்காத நிலையிலிருந்த மோட்டார் குண்டுகள் இரண்டை அவதானித்துள்ளனர்.
இது தொடர்பில் நெடுங்கேணி பொலிஸாருக்கு அவர்கள் உடனடியாக தகவல் வழங்கிய நிலையில், குண்டுகளை செயலிழக்க செய்வதற்கு விஷேட அதிரடிப்படையினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நெடுங்கேணி ஐயனார் கோவிலுக்கு பின்புறமுள்ள காட்டுப்பகுதியிலேயே இந்த மோட்டார் குண்டுகள் காணப்பட்டுள்ளன. மேலும் நீதிமன்ற அனுமதியைப் பெற்று இரண்டு குண்டுகளையும் செயலிழப்பு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடிவயிற்றில் தொடர்ந்து வலி இருந்ததால் மருத்துவமனைக்கு சென்ற முதியவர் சிறுநீரகத்தில் 552 கற்கள் இருந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மும்பை சேர்ந்த 75 வயது முதியவருக்கு கடந்த சில மாதங்களாக அடிவயிற்றில் தொடர்ந்து வலி ஏற்பட்டது. இதனால் அவதிப்பட்ட அவர் தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.
மருத்துவர்கள் அவரை பரிசோதித்ததில் முதியவரின் வலதுபக்க சிறுநீரகத்தில் 552 கற்கள் இருப்பதை பார்த்து அதிர்ந்தனர். இதையடுத்து லேசர் மூலம் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு கற்கள் அகற்றப்பட்டது.
இது குறித்து மருத்துவர் லோகேஷ் கூறுகையில், முதியவரின் சிறுநீரகத்தின் அருகே சிறிய துளையிட்டு லேசர் மூலம் முதலில் பெரிய கற்கள் உடைக்கப்பட்டு, சிறிய கருவிமூலம் அகற்றப்பட்டன. தற்போது அவர் நலமாக இருக்கிறார் என கூறியுள்ளார்.
மதவாச்சி புனாவை பகுதியில் இன்று காலை 9.30 மணியளவில் கொழும்பிலிருந்து வவுனியாவிற்கு வந்துகொண்டிருந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் வாகனம் விபத்தில் சேதமடைந்துள்ளது.
இன்று காலை கொழும்பிலிருந்து வவுனியாவில் இடம்பெறும் நிகழ்வுகளுக்காக வந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளருமான காதர் மஸ்தானின் வாகனம் புனாவைப்பகுதியில் விபத்தில் சிக்கியுள்ளது.
எனினும் வாகனத்தில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான், பாதுகாப்பு உதவியாளர், ஊடகப்பிரிவு ஊழியர் ஆகியோர் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை மதவாச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மதவாச்சி புனாவை பகுதியில் இன்று காலை 9.30 மணியளவில் கொழும்பிலிருந்து வவுனியாவிற்கு வந்துகொண்டிருந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் வாகனம் விபத்தில் சேதமடைந்துள்ளது.
இன்று காலை கொழும்பிலிருந்து வவுனியாவில் இடம்பெறும் நிகழ்வுகளுக்காக வந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளருமான காதர் மஸ்தானின் வாகனம் புனாவைப்பகுதியில் விபத்தில் சிக்கியுள்ளது.
எனினும் வாகனத்தில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான், பாதுகாப்பு உதவியாளர், ஊடகப்பிரிவு ஊழியர் ஆகியோர் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை மதவாச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா புளியங்குளம் பகுதியில் நேற்றிரவு (15.03.2019) 11 மணியளவில் 9 கிலோ கேரள கஞ்சாவுடன் ஜா- ஏல பகுதியினை சேர்ந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். புளியங்குளம் நகர்ப் பகுதியில் நேற்றையதினம் புளியங்குளம் பொலிஸாருடன் இணைந்து ஒமந்தை பொலிஸாரும் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தினை மறித்து சோதனையிட்ட சமயத்தில் 9கிலோ கேரள கஞ்சாவினை பயணப்பொதியில் வைத்திருந்த நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள நபர் ஜ- ஏல பகுதியினை சேர்ந்த 54 வயதுடையவர் எனவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.