நியூசிலாந்தில் பாரிய சூட்டுச் சம்பவம் : பலர் ஸ்தலத்தில் பலி : சிதறிக்கிடக்கும் உடல்கள்!!

சிதறிக்கிடக்கும் உடல்கள்

நியூசிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. Christchurch பகுதியில் உள்ள பள்ளிவாசல் மீது இன்று அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்திற்கான காரணத்தை இதுவரை வெளிப்படுத்தாத பொலிஸார் Christchurch பகுதியில் இருந்து பொது மக்களை வெளியேற்ற உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

கறுப்பு நிற ஆடை அணிந்த நபர் Christchurch பகுதியில் உள்ள Masjid Al Noor பள்ளிவாசலுக்குள் நுழைந்தார் என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார். அங்கு நுழைந்தவர் சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சத்தம் கேட்ட நிலையில் அங்கிருந்தவர்கள் அங்குமிங்குமாக ஓட ஆரம்பித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் அந்த நபர் பள்ளிவாசலை விட்டு தப்பி வெளியேறியுள்ளார். சம்பவத்தை நேரில் பார்த்தவர் பள்ளிவாசலுக்குள் சென்று பார்த்த போது அங்கு பலர் உயிரிழந்து கிடந்ததை காண முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார். Christchurch பகுதியில் நடந்த இரண்டாவது மிகவும் கொடூரமான தாக்குதல் சம்பவம் இதுவென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த பள்ளிவாசலில் பங்காதேஷ் கிரிக்கெட் வீரர்கள் காலைநேர தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதல் சம்பவத்தை அடுத்து அவர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக தப்பிச் சென்றுள்ளனர். எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் வாள்வெட்டு : இருவர் வைத்தியசாலையில்!!

வாள்வெட்டு

வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் நேற்றிரவு (14.03.2019) 11 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.

ஓமந்தை சேமமடு பகுதியில் வயலில் பாதுகாப்புக்காக இருந்த இருவர் மீது அவ்விடத்திற்கு வந்த இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பித்து சென்றுள்ளனர். இதனையடுத்து ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட இருவரையும் பொலிஸ் வாகனத்தில் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்தனர்.

கால் மற்றும் கைகளில் வாள் வெட்டு காயங்களுடன் வசந்தகுமார் (வயது 37), கன்னம் மற்றும் கழுத்துப் பகுதியில் வாள்வெட்டுக் காயங்களுடன் கருணாகரன் (வயது 33) என்பவரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் திடீர் விபத்துப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கனேடிய பொலிஸாரினால் தேடப்படும் இலங்கையர் : கொழும்பு ஹோட்டலில் சிக்கிய மர்மம்!!

தேடப்படும் இலங்கையர்

கொழும்பிலுள்ள பிரபல உணவகம் ஒன்றை நேற்று சுற்றி வளைத்த சுகாதார அதிகாரிகள், தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகள் அங்கு காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சோதனை நடவடிக்கை காணொளியாக பதிவு செய்யப்பட்டது. இதன்போது கனடா பொலிஸாரினால் தேடப்படும் குற்றவாளி ஒருவர் சிக்கியுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 2015ம் ஆண்டு முதல் கனடா பொலிஸாரினால் தேடப்பட்டு வரும் Anton Andrew என்பவரே காணொளி மூலம் சிக்கியுள்ளார்.

குறித்த நபர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் குழந்தைகளை வைத்து ஆபாச படம் உருவாக்கியமை போன்ற பல பாலியல் ரீதியிலான குற்றங்களுடன் தொடர்புபட்டுள்ளார். கடந்த நான்கு வருடங்களாக ஒட்டாவா பொலிஸார் இவரை தேடி வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் கொழும்பு ஹோட்டலில் சிக்கியுள்ளார். Anton Andrew என்பவர் சுற்றிவளைக்கப்பட்ட ஹோட்டலின் முகாமையாளராக பணி புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடன் நாடு திரும்புமாறு இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளருக்கு அழைப்பு!!

இலங்கை கிரிக்கட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க தென்னாபிரிக்காவில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக தென்னாபிரிக்க அணியுடனான டி20 போட்டிகளின்போது களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் ஸ்டீவ் ரிக்சன் செயற்படுவார் என்று ஸ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.

மார்ச் 16ஆம் திகதியன்று இலங்கை அணிக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கும் இடையிலான இறுதி ஒருநாள் போட்டி இடம்பெறவுள்ளது.

இதன் பின்னர் ஹத்துருசிங்க நாடு திரும்புமாறு ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் தலைவத் சமீ சில்வா இன்று தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் அணியை சிறப்பாக வழிநடத்தியமை காரணமாக ஹத்துருசிஙக், 2017ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

எனினும் அண்மைக்காலமாக அவருக்கு ஸ்ரீலங்கா கிரிக்கட்டுக்கும் இடையில் பிரச்சினைகள் தீவிரமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவை வந்தடைந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மார்ச் 16 போராட்டத்தின் எழுச்சி ஊர்தி!!

மார்ச் 16 போராட்டத்தின் எழுச்சி ஊர்தி

எதிர்வரும் மார்ச்16ல் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தமிழின நீதி கோரும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவினை திரட்டும் பொருட்டு தமிழின வரலாற்று உணர்வின் அடிப்படையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட எழுச்சி ஊர்தி நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பித்து கிளிநொச்சி நகரை வந்தடைந்து.

நேற்று வட்டக்கச்சி, முரசுமோட்டை. புளியம்பொக்கணை, தருமபுரம், விசுவடு ஊடாக புதுக்குடியிருப்பு பரந்தன் சாலையில் பயணித்து வவுனியாவை வந்தடைந்துள்ளது.

எழுச்சி ஊர்தி பயணிக்கும் வீதியெங்கும் மாணவர்கள் மக்கள் மார்ச் 16 தமிழின நீதி கோரும் போராட்டத்திற்கான தங்கள் தார்மீக ஆதரவை மிகப்பெரிய அளவில் வழங்கி வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஊர்தியோடு பல்கலைக்கழக மாணவர்கள் கால்நடையாக பயணித்து சகல இடங்களிலும் துண்டுப்பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.

24 வயது வித்தியாசம் : தந்தை வயது நபரை திருமணம் செய்துகொள்வது ஏன்? இளம்பெண் விளக்கம்!!

இளம்பெண் விளக்கம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னை விட 24 வயது பெரியவரின் உடை அணியும் அழகில் மயங்கி திருமணம் செய்ய ஆயத்தமாகியுள்ளார். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்த நஜலா முஹம்மத் (24) என்கிற இளம்பெண், 2016ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அங்கு தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி கொண்டிருந்த ஜான் மாலட் (48) என்பவரை சந்தித்துள்ளார். நண்பர்களாக பழக ஆரம்பித்த இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. 24 வயது வித்யாசம் இருந்ததால், இதற்கு இரு குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதோடு மட்டுமின்றி ஜானிற்கு ஜெசிக்கா, 18, கார்ஸ்ஸா, 25, லாரன், 26, என நான்கு மகள்கள் இருக்கின்றனர். இதில் கார்ஸ்ஸா சுத்தமாக நஜலாவிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இருவரின் காதலை பார்த்துவிட்டு பின்னர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசியிருக்கும் நஜலா, ஜானை அந்த இரவு நேர விடுதியில் பார்க்கும் போது அவரது உடை அணியும் விதம் மிகவும் அழகாக இருந்தது. அதேபோல இசைக்கேற்றவாறு அவர் கொடுக்கும் நடன அசைவுகளும் என்னை மயக்கிவிட்டன. அவர் பழகுவதற்கு மிகவும் நல்ல இதயம் கொண்டவர் போல தெரிந்தார்.

இருவீட்டார் எதிர்ப்பு தெரிவித்தாலும் எங்களுடைய காதலை பார்த்துவிட்டு பிறகு ஒப்புக்கொண்டனர். 2017ம் ஆண்டு ஒரு முறை டேட்டிங் சென்றிருந்த போது தான் அவர் என்னிடம் காதலை கூறினார். எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அவருக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என என்னிடம் கேட்டார். இதற்கு அவருடைய 9 வயது மகள் தான் ஏற்பாடு செய்திருந்தார். நான் இப்பொது எங்கு வெளியில் சென்றாலும், அவருடைய மகள்களும் என்னுடன் மகிழ்ச்சியாக கலந்துகொள்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

மனைவியின் இரு கால்களையும் துண்டாக வெட்டி எடுத்த கணவன் : அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த மகள்!!

அதிர்ச்சியடைந்த மகள்

ஆந்திராவில் மனைவியின் இரு கால்களையும் துண்டாக வெட்டி எடுத்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் பிச்சையா. இவருடைய மனைவி ராஜேஸ்வரி. திருமணம் நடந்ததிலிருந்தே இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் வீட்டிலிருந்த எருமை மாடுகளை விற்பனை செய்வது தொடர்பாக இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிச்சையா, குடிக்க தண்ணீரும், கோடரியும் எடுத்து வருமாறு மனைவியிடம் கூறியுள்ளார்.

மனைவி கொண்டு வந்த கோடரியை வாங்கிகொண்டு, அவரது இருகால்களையும் துண்டாக வெட்டி எடுத்துள்ளார். நள்ளிரவில் தாயின் அலறல் சத்தம் விழித்தெழுந்த மகள் வேகமாக ஓடிவந்து பார்த்தபொழுது, ரத்த வெள்ளத்தில் ராஜேஸ்வரி கிடந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவருடைய மகள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் ராஜேஸ்வரியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பிச்சையாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தாயின் சடலத்துடன் வாழ்ந்து வந்த மகன் : அதிர்ச்சிக் காரணம்!!

அதிர்ச்சிக் காரணம்

புதுச்சேரி மாவட்டத்தில் தாயை கொலை செய்து அவரின் சடலத்துடன் 7 நாட்கள் வாழ்ந்து வந்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். 51 வயதான ஜெயமேரிக்கு அமலோற்பவநாதன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் தாய் ஜெயமேரியை அவரது மகன் கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் நடந்து சுமார் 7 நாட்கள் கழித்து காவல் நிலையம் சென்ற மகன், பொலிசில் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது தாயை கடந்த 5-ந் தேதி கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டதாகவும், வீட்டின் அறைக்குள் அவரது பிணத்தை வைத்து பூட்டி வைத்திருக்கிறேன். 7 நாட்கள் அவரது சடலத்துடன் தான் வாழந்து வந்தேன்.

51 வயதாகியும் அவர் ஒழுக்கமின்றி நடந்துகொண்டார். அதிகமாக வாலிபர்களுடன் போனில் பேசி வந்தார். இதனால் கோபம் கொண்டு அவரை கொலை செய்துவிட்டேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை ஜெயமேரியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது சகோதரியிடம் ஒப்படைக்கப்பட்டது. அமலோற்பவநாதன் வாக்குமூலத்தை பதிவு செய்த பொலிசார் அவரை புதுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

மகனின் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு உயிரிழந்த 60 வயது தாய் : நெகிழ்ச்சி சம்பவம்!!

நெகிழ்ச்சி சம்பவம்!

தமிழகத்தில் மகனின் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு தாய் உயிரிழந்த சம்பவம் உறவின்ர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் போத்துராஜன். இவருக்கு கிருஷ்ணவேணி(60) என்ற மனைவியு, சங்கர்(34) என்ற மகனும் உள்ளார்.

பேத்துராஜ் இறந்துவிட்டதால், தாய் கிருஷ்ணவேணியை சங்கர் கவனித்து வந்துள்ளார். இருப்பினும் கிருஷ்ணவேனிக்கு மகனின் திருமணம் நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்து வந்ததால், மிகுந்த சோகத்தில் இருந்துள்ளார். இதற்கிடையில் அவருக்கு உடல் நிலையில் சரியில்லாமல் போயுள்ளது. இதனால் கிருஷ்ணவேணி மகனின் திருமணத்தை நடத்த உறவினர்களுடன் சேர்ந்து பெரிதும் முயற்சி செய்து வந்தார்.

அந்த முயற்சியின் பயனாக சங்கருக்கு பெண் பார்த்து நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று திருமணம் நல்லபடியாக நடைபெற்றது. அப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த கிருஷ்ணவேணி, மணமக்களை வாழ்த்தி மகிழ்ச்சி அடைந்தார். இதேபோல் ஏராளமான உறவினர்கள், நண்பர்கள் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.

திருமண மண்டபத்தில் இருந்து மணமக்கள் உள்ளிட்டோர் மணமகன் வீட்டுக்கு வந்தனர். அவர்களை வரவேற்ற கிருஷ்ணவேனி, அதன் பிறகு புதுமண தம்பதிகளை மணமகளின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய சிறிது நேரத்தில் வீட்டின் படுக்கையிலே கிருஷ்ணவேணியின் உயிர் பிரிந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்ததும் அவரது மகன் சங்கர் தனது மனைவியுடன் விரைந்து வந்து கதறி அழுதார். அப்போது அங்கிருந்த உறவினர்கள், தனது உயிர் பிரிவதற்குள் மகனின் திருமணத்தை நடத்தி பார்க்க வேண்டும் என்பதற்காக தினமும் கடவுளிடம் வேண்டினார். அதன்படியே திருமணம் முடிந்தவுடன் உயிரிழந்துவிட்டார் என்று வேதனையுடன் கூறியுள்ளனர்.

போனில் பேசும் போதே விஷம் குடித்த புதுமாப்பிள்ளை : மறுமுனையில் தூக்கில் தொங்கிய புதுப்பெண்!!

தூக்கில் தொங்கிய புதுப்பெண்

இந்தியாவில் போனில் பேசி கொண்டிருக்கும் போதே ஒரு முனையில் கணவர் விஷம் குடித்த நிலையில் மறு முனையில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் அஷோக். இவருக்கும் ரஞ்சிதா என்ற பெண்ணுக்கும் மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முன் தினம் திருமண நிகழ்ச்சிக்கு போவதாக கூறிவிட்டு அஷோக் வெளியில் சென்றார்.

ஆனால் வெளியில் கணவர் செல்வதை ரஞ்சிதா விரும்பவில்லை. இந்நிலையில் போன இடத்திலிருந்து அஷோக், ரஞ்சிதாவுக்கு போன் செய்தார். அப்போது இருவரும் போனிலேயே வாக்குவாதம் செய்த போது திடீரென அஷோக் விஷம் குடித்துவிட்டு போனை கட் செய்தார்.

இதையடுத்து மன வருத்தத்தில் இருந்த ரஞ்சிதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்த அஷோக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அஷோக் வரதட்சணை கேட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்தியதால் தான் ரஞ்சிதா தற்கொலை செய்தார் என அவர் தந்தை பொலிசில் புகார் அளித்துள்ளார். பொலிசார் கூறுகையில், தம்பதியின் இந்த செயலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம், சிகிச்சையில் உள்ள அஷோக் கண்விழித்து வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்பதற்காக காத்துள்ளோம் என கூறியுள்ளனர்.

மட்டக்களப்பில் 18 மாணவர்களை தாக்கிய ஆசிரியருக்கு நேர்ந்த கதி!!

ஆசிரியருக்கு நேர்ந்த கதி

மட்டக்களப்பு – பூநொச்சிமுனை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஐந்தாம் தர மாணவர்கள் 18 பேரை தாக்கி காயப்படுத்தியமைக்காக கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வீட்டுப் பாடங்களை முறையாக செய்துவரவில்லை என்று தெரிவித்து நேற்றையதினம் குறித்த மாணவர்களை ஆசிரியர் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த மாணவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன், சிலர் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினர்.

சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்ட குறித்த ஆசிரியர் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 19ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் எம்.எம்.ரிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.

மலேசிய செல்வந்தர்கள் பட்டியலில் இலங்கை வம்சாவளி தமிழர்கள் இருவர்!!

மலேசிய செல்வந்தர்கள்

இலங்கை வம்சாவளி தமிழரான மலேசிய தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன், அந்நாட்டு செல்வந்தர்களில் நான்காம் இடத்தில் இருப்பதாக போர்ப்ஸ் மலேசியா தெரிவித்துள்ளது. மற்றுமொரு இலங்கை வம்சாவளி தொழிலதிபரான ஜீ. ஞானலிங்கம், செல்வந்தர்கள் வரிசையில் 17வது இடத்தில் உள்ளார்.

தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் தொலைத் தொடர்பு, ஊடகம், எரிபொருள் துறைசார்ந்த தொழிலதிபராக இருந்து வருகிறார். ஞானலிங்கம் துறைமுகம் சார்ந்த தொழில் துறை அதிபராக இருந்து வருகிறார். ஆனந்த கிருஷ்ணனின் சொத்து மதிப்பு 620 கோடி அமெரிக்க டொலர்கள் என்பதுடன் ஞானலிங்கத்தின் சொத்து மதிப்பு 950 மில்லியன் டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வசம்சாவளி தமிழரான ஆனந்த கிருஷ்ணன், மலேசியாவின் கோலாலம்பூர், பிரிக்ஸ்பீல்ட் பகுதியில் இலங்கை பெற்றோருக்கு பிறந்தவர் என்பதுடன் ஞானலங்கம் சிங்கப்பூரில் பிறந்தவர்.

போர்ப்ஸ் மலேசியாவின் விபரங்களின் அடிப்படையில், மலேசியாவில் உள்ள முதல் நான்கு செல்வந்தர்களில் மூன்று பேர் சீனர்கள். ரொபர்ட் குவோக் ஆயிரத்து 280 கோடி டொலர்கள் சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஹோங் லியோங் 940 கோடி டொலர் சொத்துக்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளதுடன் ஹோங் பியோவ் 670 கோடி டொலர் சொத்துக்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளனர்.

இரு இளைஞர்களின் உயிரைப் பறித்த கோர விபத்து!!

கோர விபத்து

சிலாபம் – கொழும்பு வீதியின் சம்பல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று காலை 8 மணியளவில் நடந்த விபத்தில் ஆனமடுவ மஹா உஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற இந்த இளைஞர்கள் முன்னால் சென்றுக்கொண்டிருந்த வான் ஒன்றை முந்திச் செல்ல முயற்சித்த போது வானின் பின்பகுதியில் மோதுண்டு புரண்டு விழுந்துள்ளனர்.

அப்போது எதிர்புறமாக வந்த பேருந்து இளைஞர்கள் மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த இளைஞர்கள், வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர்.

பாடசாலை மாணவியின் வாழ்வை சீரழித்த உப அதிபர்!!

பாலியல் வன்புணர்வு

பாடசாலை மாணவியொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்வம் தொடர்பில் அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் உப அதிபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். சூரியவெவ – அந்தரவெவ பகுதியை சேர்ந்த 8 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 13 வயதான மாணவியே பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அநாமதேய தொலைபேசி அழைப்பிற்கு அமைய செயல்பட்ட அங்குனுபெலஸ்ஸ காவல்துறையினர் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதன்போது குறித்த மாணவியை உப அதிபர், பலமுறை இவ்வாறு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மாணவிக்கும் அதிபருக்கும் இடையே காணப்பட்ட நட்பினால் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் குறித்த பாடசாலையில் மாணவி சேர்க்கப்பட்டுள்ளார்.

பின்னர் உப அதிபர் அங்குனுபெலஸ்ஸ நகரில் அமைந்துள்ள அவருக்கு சொந்தமான கட்டிடத்தின் மேல் மாடியில் மாணவியை தங்க வைத்து இவ்வாறு பலமுறை அவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். மாணவி வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய உப அதிபர் கைது செய்யபட்டுள்ள நிலையில், அவர் இன்றைய தினம் அங்குனுபெலஸ்ஸ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

யாழில் வெயிலின் கோரத்தாண்டவம் : குடும்பஸ்தர் பரிதாபமாக மரணம்!!

யாழில் வெயிலின் கோரத்தாண்டவம்

வட மாகாணத்தை அச்சுறுத்தி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம், கோப்பாய் தெற்கு கட்டப்பிராய் பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடும் வெப்பமான காலநிலையில் வெளியில் சென்றவர் மயங்கி வீழ்ந்துள்ளார். எனினும் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பளையில் உள்ள தனது காணியைப் பார்வையிடச் சென்றபோது அவர் காணிக்குள் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கடுமையான வெப்பநிலை நிலவுவதாக வளிமண்டவியல் திணைக்களம் எச்சரித்திருந்தது. இவ்வாறான நெருக்கடி நிலையை சமாளிக்க அதிகளவான நீர் அருந்துமாறும், மூன்று வேளையும் நீராடுமாறும் சுகாதார திணைக்களம் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

7 கோடி பரிசு : குவியும் பாராட்டுகள் : உலகையே திரும்பிப் பார்க்கவைத்த தமிழ்ச் சிறுவன்!!

குவியும் பாராட்டுகள்

அமெரிக்காவில் நடந்த தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் போட்டியில் சென்னையை சேர்ந்த சிறுவன் லிடியன் நாதஸ்வரம் வெற்றி பெற்று உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். அமெரிக்காவில் நடந்த தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் தொலைக்காட்சி நிகழ்ச்சி போட்டியில் சென்னையை சேர்ந்த 13 வயது சிறுவன் லிடியன் நாதஸ்வரம் கலந்து கொண்டார்.

அவர் அந்த போட்டியில் அதிவேகமாக பியானோ வாசித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த வீடியோவை பார்த்து வியக்காதவர்களே இல்லை. தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று ரூ.7 கோடி பரிசுத் தொகையை வென்றுள்ளார் லிடியன்.

ஏற்கனவே, 1900 ம் ஆண்டில் ரஷ்யன் இசைக்கலைஞரால் உருவாக்கப்பட்ட பிளைட் ஆப் பம்பிள்பி (Flight of the Bumblebee) என்ற இசையை சராசரியாக வாசிக்கும் நேரத்தை விட இரண்டு மடங்கு வேகத்தில் வாசித்து அனைவரையும் வாய்பிளக்கச் செய்தார் லிடியன்.

அதைப்பார்த்து அசந்த ஹாலிவுட் பாடகர் ஜேம்ஸ் கார்டன், தான் பார்த்த இசை நிகழ்ச்சிகளில் இதுதான் சிறந்தது ட்வீட் செய்ய அந்த வீடியோ உலகம் முழுவதும் பரவியது. ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பலரும் சிறுவன் லிடியனுக்கு பாராட்டு தெரிவித்து ட்வீட் செய்தனர்.

14 இசைக்கருவிகளை வாசிக்கத் தெரிந்த லிடியன் ஏற்கனவே பல்வேறு விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிச் சுற்றில் லிடியன் இரண்டு கைகளால் இரண்டு பியானோக்களை வாசித்து அசத்திவிட்டார். தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற மினி மேஸ்ட்ரோ என்று செல்லமாக அழைக்கப்படும் லிடியனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.