வவுனியா குட்செட் ரோட் ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற திருவிழா கடந்த 11.03.2019 திங்கட்கிழமை இடம்பெற்றது
.

வவுனியா குட்செட் வீதி கருமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!(வீடியோ)
யாழ் தொண்டமனாற்றில் கோவிலுக்கு செல்லும் வழியில் தூக்கில் தொங்கிய இளைஞன்!!
யாழில் தூக்கில் தொங்கிய இளைஞன்
யாழ் தொண்டமனாறு செல்வசந்நிதி கோவிலுக்கு செல்லும் வீதியில் துாக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த வழியில் சென்ற மக்கள் திடீரென தூக்கில் தொங்கிய இளைஞனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் அப் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
தூக்கில் சடலமாக தொங்கிய 17 வயது பாடசாலை மாணவி : விசாரணையில் வெளியான உண்மை!!
தூக்கில் தொங்கிய பாடசாலை மாணவி
தமிழகத்தில் ப்ளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணியில் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகள் ஜனனி (17). இவர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்நிலையில் பொதுத்தேர்வு நடந்து வருவதால், நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு படிக்க சென்றார் ஜனனி. காலை விடிந்து நீண்டநேரம் ஆகியும் அவர் கீழே இறங்கி வராததால் பெற்றோர் மாடியில் உள்ள அறைக்கு சென்று பார்த்த போது ஜனனி மின்விசிறியில் தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பொலிசார் ஜனனியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜனனியின் தோழி ஒருவர் இறந்து போனார். இதனால் அவர், மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் ஜனனி தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
யாழ் பல்கலைக்கழ மாணவர்களின் போராட்டத்திற்கு வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் ஆதரவு!!
காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலையை வெளிபடுத்தகோரியும், மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்க கூடாது என்பதை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 16ம் திகதி யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் ஒத்துழைப்பை கோரும் கலந்துரையாடல் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி வீதியில் அமைந்துள்ள வாடி வீடு மண்டபத்தில் நேற்று (12.03.2019) மதியம் 2.30 மணியளவில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் பல்கலைகழக மாணவர்கள் மற்றும் வவுனியா மாவட்ட பொது அமைப்புகள், அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அக வணக்கத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வில், காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவுகள் பல்வேறு குழுக்களாக பிரிந்துசெயற்படுகின்றமை, மற்றும் தன்னிச்சையாக செயற்படுகின்றமை தொடர்பாகவும், அவர்களை ஒருங்கிணைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதுடன் போராட்டத்திற்கு அனைத்து தரப்பும் ஆதரவினை வழங்கவேண்டும் என்று பல்கலைகழக மாணவர்களால் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த வவுனியா வர்த்தகர்சங்கம், வவுனியா வரியிறுப்பாளர்சங்கம் ஆகியன குறித்த போராட்டத்திற்கு தமது பூரண ஆதரவை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள இப் போராட்டத்திற்கு வவுனியாவிலிருந்து போக்குவரத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தனர்.
வவுனியா வீரர்கள் தேசிய ரீதியிலான குத்துச்சண்டையில் 15 பதக்கங்களை வென்று சாதனை!!
15 பதக்கங்களை வென்று சாதனை
அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற வூசூ குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த வீரர்கள் வடமாகாண ரீதியில் கலந்து கொண்டு 15 பதக்கங்களை தனதாக்கிக் கொண்டுள்ளனர்.
வவுனியா ஏழாம் அறிவு தற்காப்பு கலை சங்கத்தின் தலைவரும், பயிற்றுவிப்பாளருமான எஸ்.நந்தகுமார் தலைமையில் சென்ற 15 வீரர். வீராங்கனைகள் தேசிய ரீதியில் கண்டியில் மாநகரசபை மண்டபத்தில் மார்ச் மாதம் 08, 09, 10 ஆம் திகதிகளில் பாடசாலை ரீதியாக நடைபெற்ற வூசூ குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டு 09 தக்கப்பதக்கங்களையும் 06 வெள்ளிப்பதக்கங்களை வென்று வட மாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
வவுனியா பாடசாலை மாணவர்களான 09 வீரர்களும் 06 வீராங்கனைகளும் பாடசாலை ரீதியாக நடைபெற்ற வூசூ குத்துச்சண்டை தேசிய மட்டப் போட்டியில் கலந்துகொண்டிருந்தனர்.
வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியை சேர்ந்த ச.சஞ்சயன், தி.நாகராஜா, பா.ராகுல், ம.பிரகத்தியன் ஆகியோர் தங்கப்பதக்கங்களையும்,
முகமட் றிஸ்கான் வெள்ளி பதக்கங்களையும் அகில இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை சேர்ந்த ஆர்.கெ.கெவின் வெள்ளி பதக்கத்தையும், கோவில்குளம் இந்துக் கல்லூரியை சேர்ந்த க.டிலக்சினி, எம்.கிசாளினி தங்கப்பதக்கங்களையும்,
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த வி.வசீகரன் தங்கப்பதக்கத்தையும், கூமாங்குளம் சித்திவிநாயகர் வித்தியாலயத்தை சேர்ந்த எஸ்.சிறிதர்சன் வெள்ளி பதக்கத்தையும், காமினி மகாவித்தியாலயத்தை சேர்ந்த எம்.கிருபாலினி தங்கப்பதக்கத்தையும்,
எஸ்.நவப்பிரியா, எஸ்.துலக்சனபிரியா ஆகியோர் வெள்ளிப்பதக்கத்தையும், கந்தபுரம் வாணி வித்தியாலயம் எஸ்.றோகினி வெள்ளி பதக்கத்தையும் மற்றும் நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தை சேர்ந்த க.நிறோஜன் தங்கப்பதக்கத்தையும் சுவீகரித்துள்ளனர்.
வவுனியாவைச் சேர்ந்த எட்டு பாடசாலை வீரர் வீராங்கனைகள் ‘கண் போய்ஸ்’ விளையாட்டு கழகத்தினூடாக வூசூ குத்துச்சண்டையில் கலந்துகொண்டு பதக்கங்களை பெற்று வவுனியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
152 கிலோ இருந்த இளைஞன் : ஒரே வருடத்தில் 69 கிலோ எடை குறைத்தது எப்படி?
152 கிலோ இளைஞன்..
பிரித்தானியாவைச் சேர்ந்த இளைஞர் ஒரு வருடத்தில் 152 கிலோ எடையிலிருந்து 69 கிலோ எடையை குறைத்தது எப்படி என்ற ரகசியத்தை கூறியுள்ளார். பிரித்தானியாவின் Suffolk நகரத்தின் Haverhill பகுதியைச் சேர்ந்தவர் Luke. 32 வயதான இவர் 152 கிலோ எடையிலிருந்து 11 ஸ்டோன் அதாவது 69 கிலோ எடையை குறைத்துள்ளார்.
இது குறித்து அவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், எனக்கு உணவுகளின் மீது அதிக ஆசை இருக்கும். இதன் காரணமாகவே சீனா வகை உணவுகள், இந்திய வகை உணவுகள் போன்றவைகளை அதிகம் விரும்பி சாப்பிடுவேன். அதுமட்டுமின்றி ஒவ்வொரு வார இறுதியிலும் அதிக அளவில் டிரின்க்ஸ் குடிப்பேன். இதைத் தவிர மீன்கள், சிப்ஸ் வகைகள் மற்றும் மிகப் பெரிய பீட்சா வகைகளை அதிகம் சாப்பிடுவேன்.
இதன் காரணமாகவே என் உடல் எடை அதிகரித்துக் கொண்டே சென்றது. மூச்சு விடுவதில் சிறு பிரச்சனை ஏற்பட்டது. என்னுடைய நம்பிக்கைகள் எல்லாம் உடைந்துவிட்டன. பல முறை வீட்டில் தனியாக இருக்கும் போது இதைப் பற்றி யோசித்ததுண்டு.
வெளியில் செல்லும் போது ஒரு வித தயக்கம் இருக்கும், இதனால் இதற்கு முடிவு கட்ட Slimming World என்ற குரூப்பில் சேர்ந்தேன். ஏனெனில் என்னுடைய சகதோரன் இதில் சேர்ந்து தான் 38 கிலோ எடை குறைத்தான். என்னுடைய தந்தையும் எடை குறைப்பதற்கு உதவி செய்தார். உடல் எடை அதிகரிப்பால் நீரிழிவு நோய் பிரச்சனையும் இருந்தது.
அந்த குரூப்பில் சேர்ந்த பின்பு என்னுடைய உணவு பழக்க வழக்கத்தில் மாற்றம் வந்தது. பிரஷ்ஷான காய்களை சாப்பிட்டேன். சொந்தமாக தனக்கு தேவையான ஆரோக்கியமானதை சமைத்து சாப்பிட்டேன். ஜிம்மில் சேர்ந்தேன். இந்த குரூப்பில் சேர்ந்த போது முதலில் 5 கி.மீற்றர் ஓட வேண்டும் என்றால் 35 நிமிடம் எடுத்துக் கொண்டேன். ஆனால் அதுவே ஒரு ஆண்டிற்கு பின் இப்போது அதே 5 கி.மீற்றர் தூரத்தை 20 நிமிடத்தில் கடக்க முடியும் என்று கூறுகிறார்.
இதன் காரணமாகவே வரும் ஞாயிற்றுக் கிழமை Hampton Court பகுதியில் நடைபெறவிருக்கும் மராத்தான் போட்டியிலும் கலந்து கொள்ளப்போவதாக கூறியுள்ளார். Luke ஆரம்பத்தில் அவரின் எடை 22 ஸ்டோன் அதாவது 152 கிலோ எடை இருந்தார். அதுவே ஜிம், உணவு பழக்க வழக்கம் என ஒரு வருடத்தில் 11 ஸ்டோன் குறைத்து இப்போது 83 கிலோ எடை இருப்பதாக கூறப்படுகிறது.
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் தாய் படுகாயம் : 2வயதுச் சிறுவன் ஆபத்தான நிலையில்!!
வவுனியாவில் இடம்பெற்ற விபத்து..
வவுனியா யாழ் வீதி, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் முன்பாகவுள்ள வீதிக் கடவையூடாக கடக்க முற்பட்ட தாயும் மகனையும் வீதியில் சென்ற பட்டரக வாகனம் மோதித்தள்ளியதில் 2 வயது சிறுவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,
தாய் தலையிலும் கால்களிலும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
இன்று பிற்பகல் செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் தாயின் சகோதரனுடன் தங்கியிருந்து கல்வி கற்றுவந்த தனது மகனை தனது சொந்த இடமான நெடுங்கேணி ஊஞ்சல்கட்டிக்கு அழைத்துச் செல்வதற்காக தனது மூன்று பிள்ளைகளுடன் புதிய பேருந்து நிலையத்திற்குச் சென்ற தாய் தனது இருபிள்ளைகளையும் பேருந்து நிலையத்தில் காத்திருக்குமாறு கூறிவிட்டு தனது 2வயது சிறுவனை அழைத்துக்கொண்டு பிற்பகல் 3.15 மணியளவில் வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.
பின்னர் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக உள்ள வெள்ளைக்கோட்டினைக் கடந்து பாதி தூரம் சென்றபோது அனுராதபுரம் பகுதியிலிருந்து கிளிநொச்சி சென்ற பட்டாரக வாகனம் மோதியுள்ளது.
இதன்போது தாய் சிறுவன் இருவரும் தூக்கி வீசப்பட்டதுடன் பட்டா வாகனம் பிள்ளைக்கு மேலாக சென்று வீதியின் ஓரமாக நின்றுள்ளது.
அப்பகுதியில் நின்றவர்கள் ஓடிச்சென்று தாயையும் குழந்தையையும் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.
எனினும் றுக்ஸன் என்ற 2வயதுச் சிறுவன் ஆபத்தான நிலையில் காணப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுவனின் தாயான சின்னப்பு புன்சலாமேரி (29 வயது) தலையிலும் கால்களிலும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.
இவ்விபத்து தொடர்பாக வெள்ளைக்கோட்டிற்கு அருகிலுள்ள ரயர் கடையிலுள்ள சி.சி.ரி கமராவில் விபத்தை பார்வையிட்ட பொலிசார் பட்டா வாகனத்தின் சாரதியையும், வாகனத்தையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை செய்துகொள்ளப்போகிறோம் : பாதிக்கப்பட்ட மாணவியின் அண்ணன் வேதனை!!
மாணவியின் அண்ணன் வேதனை
பொய்யான தகவல்களை பரப்பி எங்கள் குடும்பத்திற்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள் என பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் பேசுவதுபோல இன்று காலையில் ஆடியோ வெளியானதையடுத்து அவர் இந்த புகாரை அளித்துள்ளார். அரசியல் ஆதாயத்திற்காக ஒருசிலர் தவறான தகவல்களைப் பரப்புவதால் எங்களுடைய குடும்பத்துக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள்.
இதனால் நாங்கள் வெளியில் தலைகாட்ட முடியவில்லை. தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் இருக்கிறோம். நாங்கள் புகார் கொடுத்த அனைவரும் கைது செய்யப்பட்டுவிட்டார்கள்.
அப்படியிருக்கையில், எதற்காக இப்படி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். தவறான தகவல் பரப்பி வழக்கை திசை திருப்ப முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
யானையுடன் நடித்தபோது ஆரவ்விற்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
நடிகர் ஆரவ்
நடிகர் ஆரவ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சோலோ ஹீரோவாக நடித்துவரும் படம் ராஜபீமா. இந்த படத்தின் ஷூட்டிங் பல மாநிலங்களில் காட்டு பகுதிகளில் நடந்துள்ளது.
ஷூட்டிங் நடத்தும்முன்பு ஆரவ் யானையுடன் பழகினாலும் ஷூட்டிங் நடக்கும்போது யாரும் எதிர்பார்க்காத விதத்தில் யானை ஆரவ்வை தூக்கி வீசிவிட்டதாம்.
அதுமட்டுமின்றி காட்டுப்பகுதிகளில் ஷூட்டிங் நடத்தும் போது வழுக்கும் பாறைகள் பெரிய தலைவலியாக இருந்ததாக இயக்குனர் கூறியுள்ளார்.
உலகிலேயே அதிக கவனம் ஈர்த்த பிரித்தானிய குடும்பம் : கின்னஸ் சாதனை படைக்கவிருக்கும் அதிசயம்!!
கின்னஸ் சாதனை படைக்கவிருக்கும் குடும்பம்
பிரித்தானியாவில் உள்ள தம்பதியினருக்கு இருவேறு நிறத்திலான இரட்டை குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்துள்ள அதிசய சம்பவம் நடந்துள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த டீன் டுரன்ட் மற்றும் அலிசன் ஸ்பூனர் (37) தம்பதியினருக்கு முதல் பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருக்கிறது. இதனை பார்த்ததும் அங்கிருந்த மருத்துவர்கள் அனைவருமே ஆச்சர்யமடைந்துள்ளனர்.
அதில் லாரன் என்கிற குழந்தை அவரது தாய் அலிசன் போல வெள்ளை நிறத்தில், ஊதா கலர் கொண்ட கண்களுடன் பிறந்துள்ளார். அதேபோல ஹேலே என்கிற மற்றொரு குழந்தை அவருடைய தந்தை டீன் போல பிறந்துள்ளது.
அடுத்த சில வருடங்களில் இந்த தம்பதியினருக்கு மீண்டும் மியா மற்றும் லியா என்கிற இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இவர்களும் அப்படியே தங்களுடைய அக்காக்களை போல இருவேறு நிறங்களில் பிறந்துள்ளனர்.
உலகிலேயே இதுபோன்ற அதிசயம் நடப்பது மிகவும் அரிதான ஒன்று என மருத்துவர்கள் கூறி வருகின்றனர். இத்தகைய அதிசயத்தின் காரணமாக குடும்பத்தினர் விரைவில் கின்னஸ் சாதனை படைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தம்பதியினரின் மூத்த இரட்டை குழந்தைகள் இருவரும் சமீபத்தில் தங்களுடைய 18 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள சகோதரிகள், எங்கள் இருவரை யார் பார்த்தாலும் இரட்டை சகோதரிகள் என்பதை நம்ப மாட்டார்கள். நண்பர்கள் என கூறுவார்கள்.
பொதுமக்கள் எங்களை ஆச்சர்யமாக பார்ப்பது எங்களுக்கு மிகவும் பிடிக்கும். நாங்கள் பள்ளி சேர்ந்த ஆரம்பத்தில் பெரும்பாலான மாணவர்கள் எங்களை கேலி செய்வார்கள். ஒருவரை வெள்ளை பிஸ்கட் என்றும், மற்றொருவரை சாக்லேட் பிஸ்கட் என்றும் கூறுவார்கள்.
ஆனால் நாங்கள் அதை ஒருபோதும் பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை. பள்ளி ஆய்வகத்தில் எங்கள் இவருடைய புகைப்படமும் இருக்கிறது. இதனை பார்க்கும் மாணவர்கள் ஆச்சர்யமடைவார்கள். வெளியில் பார்க்கும் பலரும் எங்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள் என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இருவரின் தாய் அலிசன் கூறுகையில், என்னுடைய அதிசய குழந்தைகளுக்கு 18 வயதாகிவிட்டது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவர்கள் சிறந்த நண்பர்களாக இருக்கிறார்கள். வித்தியாசமாகத் தோன்றுவதை தவிர்த்து, எல்லா வழிகளிலும் ஒன்றாக இருக்கிறார்கள்.
பொதுமக்கள் யாருமே அவர்கள் இரட்டையர்கள் என்பதை நம்ப மறுக்கிறார்கள். மருத்துவர் கூட ஒருமுறை குழம்பிவிட்டார் என தெரிவித்துள்ளார்.
திருமண ஆடையுடன் வருங்கால கணவரின் கல்லறையில் அழுதுபுலம்பிய இளம்பெண் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!
நெஞ்சை உருக்கும் சம்பவம்
அமெரிக்காவில் திருமணம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு காதலன் சுட்டுக்கொலை செய்யப்பட்டதால் அவருடைய கல்லறையின் முன், மணப்பெண் கோலத்தில் இளம்பெண் அழுதுபுலம்பும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
அமெரிக்காவை சேர்ந்த சாரா பெலூச் (22) என்கிற பெண்ணும் 24 வயதான முகமது ஷெரிஃபி என்கிற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த பெற்றோர் மார்ச் 10ம் திகதி இருவருக்கும் திருமணம் செய்துவைக்கலாம் என முடிவு செய்துள்ளனர். அதற்கான வேலைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
ஆனால் இதற்கிடையில் கடந்த மாதம் 19-ம் திகதியன்று, டி மார்கஸ் (20) என்கிற நபரால் முகமது சுட்டுக்கொலை செய்யப்பட்டான். இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், டி மார்கஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முதல் ஆளாக மருத்துவமனைக்கு விரைந்த சாரா, தன்னுடைய காதலன் அறையை கேட்டு அழுதிருக்கிறார். ஆனால் அங்கு வரவேற்பறையில் இருந்த பெண், முகமது என்கிற பெயரில் எந்த தரவும் கணினியில் பதிவு செய்யப்படவில்லை என கூறியுள்ளார்.
இதனால் பெரும் குழப்பத்துடன் சாரா, அங்கேயே இடிந்து போய் அமர்ந்திருந்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அதே பெண், சாராவின் கையை பிடித்துக்கொண்டு, மன்னித்துவிடுங்கள், முகமது ஏற்கனவே இறந்துவிட்டார் எனக்கூறி அறைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
உடனே கண்களில் தாரை தாரையாக வழிந்த கண்ணீருடன் அறைக்கு சென்ற சாரா, முகமதை கட்டியணைத்து கதறியுள்ளார். என்னை மன்னித்துவிடு, நான் உன்னை பாதுகாக்க தவறி விட்டேன். நீ என்னை ஒவ்வொருநாளும் பத்திரமாகவே பார்த்துக்கொண்டாய் என புலம்பியுள்ளார்.
அவர்களுக்கு திருமணம் நிச்சைக்கப்பட்டிருந்த நாள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்ததையொட்டி, சாரா தன்னுடைய குடும்பத்தாருடன் முகமது கல்லறைக்கு சென்றுசென்றுள்ளார். அங்கு இஸ்லாமிய முறைப்படியான சடங்குகள் நடைபெற்றது. அப்போது கல்லறையின் அருகே அமர்ந்திருந்த சாராவின் திருமண ஆடையை அவருடைய தாய் தலையிலிருந்து கருமை நிறத்திற்கு மாற்றியிருக்கிறார்.
இந்த நிலையில் இதுகுறித்து பேசியிருக்கும் சாரா, எனக்கும் முகமதுவிற்கும் இடையில் இருக்கும் காதல் பற்றி அனைவருமே வியந்து பேசுவார்கள். பிப்ரவரி 27ம் திகதி என்னுடைய பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டிருந்தோம். அதற்காக ஏராளமான பரிசுப்பொருட்களை முகமது ஏற்கனவே வாங்கியிருந்தார். எனக்கு கொடுப்பதற்கு ஆவலாக காத்திருந்தார்.
கொலை செய்யப்படுவதற்கு முன்தினம் இரவு கூட அவரை சந்தித்துவிட்டு தான் நான் வீட்டிற்கு வந்தேன். மருத்துவமனையில் கூறியதும் அது ஒரு கனவாக இருக்க கூடாது என்று தான் நினைத்தேன். அதன் பிறகு இரவு தினமும் முகமது என்னுடைய கனவில் வருவார். என்னிடம் பேச மாட்டார். ஆனால் என்னை அணைத்துக்கொள்வார் என தெரிவித்துள்ளார்.
விமான விபத்தில் அக்காவின் குழந்தையைப் பார்க்கச் சென்ற பெண் பலியான சோகம்!!
பெண் பலியான சோகம்
இந்திய பெண்மணி மனிஷா தனது அக்காவுக்கு பிறந்த குழந்தைய பார்க்க சென்றபோது எத்தியோப்பியா விமான விபத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மனிஷா அமெரிக்காவில் எம்எஸ் படித்து வருவதால் 2014 ஆம் ஆண்டில் இருந்து அங்குதான் வசித்து வருகிறார்.
மனிஷாவின் சகோதரி நைரோபியாவில் வசித்து வருகிறார். அவருக்கு சமீபத்தில்தான் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன. இதனால் அவரை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்து எத்தியோப்பியா வந்து, அங்கிருந்து எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் மூலம் நைரோபி சென்றுள்ளார்.
இந்த பயணத்தின்போது தான் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், உயிரிழந்துபோன மனிஷாவின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இறந்துபோனவர்களின் உடலை கண்டுபிடிப்பதில் கடினம் இருக்கிறது என எத்தியோப்பியா தெரிவித்துள்ளது.
யாழில் உடலில் தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்த நபர்!!
தற்கொலைக்கு முயற்சித்த நபர்
யாழில் நபரொருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் யாழ். பருத்தித்துறை, மந்திகை அம்மன் கோயில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் தொடர்பாக இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக அயலவர்கள் மூலம் நோயாளர் காவு வண்டியில் யாழ். வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
என் மகன் தப்பு செய்யவில்லை, என்னை கொன்றுவிடுங்கள் : கதறிய குற்றவாளியின் தாய்!!
கதறிய குற்றவாளியின் தாய்
தன்னுடைய மகன் எந்தவொரு தவறும் செய்யவில்லை என பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான திருநாவுக்கரசின் தாய் நீதிமன்ற வளாகத்தில் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, அது குறித்து வீடியோ வெளியிட்டு வந்த கும்பல் குறித்தான தகவல்கள் தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இது தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய நால்வரை பொலிசார் கைது செய்தனர்.
இந்நிலையில் நீதிமன்றத்தில் திருநாவுக்கரசு நேற்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் இருந்த அவரின் தாய் லதா ஆவேசமடைந்தார்.
அப்போது அங்கிருந்த மக்கள் சிலர், உன் பையன் பணத்திமிரால் இப்படி செய்துட்டானே என்று லதாவை பார்த்து நேரடியாகவே பேசினார்கள். ஒரு பக்கம் ஜாமீன் இல்லை, மற்றொரு பக்கம் பொதுமக்களின் வசை சொற்களால் லதா டென்ஷனாகி விட்டார்.
அதனால் ஆவேசமான அவர், யார் தப்பு செய்தது? என் மகன் எந்த தப்பும் பண்ணல. அவன் செல்போனில் எத்தனை பொண்ணுங்க போட்டோ இருக்கோ, அந்த பொண்ணுங்களை பிடித்து முதல்ல விசாரிங்க. என் பையன் மேல போட்டது ஒரு பொய் வழக்கு. அவனைக் கைதுசெய்து துன்புறுத்தி வருகின்றனர், எல்லோரும் சேர்ந்து என்னை கொன்னுடுங்க என ஆவேசமாக பேச அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
157 பேருடன் பலியான புதுமணப்பெண் : கடைசியாக கணவருக்கு அனுப்பிய மெசேஜ் : பதில் வருவதற்குள் வெடித்து சிதறிய விமானம்!!
வெடித்து சிதறிய விமானம்
எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 157 பேருடன் பலியான இந்திய பெண்ணுக்கு 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து சுமார் 157 பயணிகளுடன், கடந்த 10ம் திகதியன்று காலை 8.38 மணிக்கு புறப்பட்ட எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் அடுத்த 6 நிமிடங்களில் தரையில் விழுந்து நொறுங்கியது.
இதில் விமானத்தில் பயணித்த அனைவருமே உயிரிழந்தனர். மேலும் இந்தியாவை சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. அதில் ஒருவரான ஷிக்கா கார்க் நைரோபியில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் பங்கேற்க சென்றிருந்தார்.
இவர் 3 வருட டேட்டிங்கிற்கு பிறகு தன்னுடைய காதலன் சவுமியா பட்டாச்சார்யாவை 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்துள்ளார். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் ஷிக்கா தன்னுடைய கணவருக்கு, ‘நான் விமானத்தில் ஏறிவிட்டேன். தரையிறங்கியதும் உங்களுக்கு போன் செய்கிறேன்’ என மெசேஜ் செய்துள்ளார்.
ஆனால் அவருடைய கணவர் அதற்கு பதில் அனுப்புவதற்குள்ளாகவே ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கிவிட்டதாக கூறியுள்ளனர். மனைவியுடன் சேர்ந்து பட்டாச்சார்யாவும் செல்வதற்கு டிக்கெட் பதிவு செய்திருந்தார். ஆனால் ஒரு அவரச கூட்டத்திற்காக அதனை ரத்து செய்திருப்பதாக கூறியுள்ளார்.
புதுதில்லியில் வாழ்ந்த தம்பதிகள், நைரோபியில் இருந்து கார்க்கின் திரும்பி வந்த பிறகு, விடுமுறைக்கு வெளியில் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
200 பெண்களுக்கு நேர்ந்த கொடுமை : கதறிக் கதறி அழும் சின்னத்திரை நடிகை!!
கதறி அழும் சின்னத்திரை நடிகை
பொள்ளாச்சியில் இளம் பெண் கற்பழிக்கப்பட்ட விஷயம் எல்லோரையும் பதற வைத்துள்ளது.
இதற்கான நியாயம் கிடைக்க வேண்டும், தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்று பலரும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஒரு பெண் இல்லை இதுவரை 7 வருடத்தில் 20 ஆண்களால் 200 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள், இதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இப்போது இந்த பிரச்சனை குறித்து சின்னத்திரை நடிகை நிலானி ஒரு பரபரப்பு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.














































































