இந்தியாவைச் சேர்ந்த நபர் துபாயில் வேலை செய்து வந்த நிலையில், திடீரென்று அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கோட்டையம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் Shibin Thomas. இவர் துபாயில் இருக்கும் GEMS Jumeirah கல்லூரியில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த திங்கட் கிழமை இவர் கல்லூரியின் ஸ்டேஷ்னரி பொருட்கள் சேமிப்பு கிடங்கில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் அவரின் உடலை மீட்டனர். மேலும், உடனடியாக கல்லூரி மாணவர்களும் வீட்டுக்கு அனுப்பபட்டனர்.
அதன் பின் அங்கிருக்கும் அவரின் உறவினர் சிஜோவிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பேயில்லை, அவன் என்னை கடைசியாக சந்தித்த போது கூட அவனிடம் எந்த பிரச்சனையும் இருப்பது போன்று தெரியவில்லை.
இதனால் கல்லூரியில் இருக்கும் சிசிடிவி கமெராக்களை பொலிசார் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அப்போது தான் உண்மை தெரிய வரும் என்று கூறியுள்ளார். மேலும் Shibin Thomas-ன் மனைவி சுற்றுலா விசாவில் தான் சமீபத்தில் துபாய்க்கு வந்துள்ளார். அவர் உறவினர் சிஜோவின் வீட்டில் தங்கியுள்ளார்.
ஆனால் சிஜோ அவரிடம் கணவர் இறந்ததைப் பற்றி கூறவே இல்லை எனவும், விபத்தின் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் கணவன் இறந்த செய்தியை கேட்டால் அவர் தாங்கமாட்டார் என்பதற்காக இப்படி கூறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இறந்த Shibin Thomas-க்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தமிழகத்தில் கஜா புயலில் இறந்த தந்தையின் இறுதி சடங்கிற்காக அடமானம் வைக்கப்பட்ட சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த 10-வயது சிறுவன் அந்த பகுதியில் இருக்கும் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தான்.
அதன் பின் குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை நிறுத்தியிருந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டெல்டா பகுதிகளை உலுக்கு எடுத்த கஜா புயலின் காரணமாக தென்னை மரம் இந்த சிறுவனின் தந்தை மீது விழுந்ததால், அவர் பரிதாபமாக இறந்தார். தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட பணம் இல்லாததால், சிறுவன் 6000 ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட்டான்.
ஒரத்தநாடு அருகே உள்ள பொட்டலங்குடிக்காட்டை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் அந்த சிறுவனை அடமானமாக வாங்கி ஆடுமேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார்.
இந்த தகவல் குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் சுரேசுக்கு தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவின் பேரில் அதிகாரிகள் மற்றும் பொலிசார் ஒரத்தநாடு சென்று, மேலவன்னியப்பட்டு பகுதியில் ஆடுமேய்த்துக்கொண்டு இருந்த சிறுவனை அதிகாரிகள் குழுவினர் மீட்டனர்.
அதன் பின் தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் சிறுவனுக்கு வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், விடுதலை சான்று வழங்கி உத்தரவிட்டார். மேலும் அடமானத்துக்கு வாங்கிய மகாலிங்கம் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேராசிரியை கொலை வழக்கில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திவ்யா சில்வெஸ்டர் என்ற பேராசிரியைக்கும் பெல்லார்மின் என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் புதன்கிழமை வாயில் ரத்தம் வழிந்த நிலையில் வீட்டில் மயங்கி கிடந்த திவ்யா மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சந்தேகம் மரணம் என காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில் இறப்பதற்கு முன்பாக தான சாப்பிட்ட உணவில் கொடியவிஷம் கலந்துவிட்டதாக திவ்யா மரண வாக்குமூலம் அளித்துள்ளார். கணவரிடம் விசாரித்தபோது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இவர்கள் இருவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் பெற்றோர் திருமணத்துடன் திருமணம் நடைபெற்றது.
ஆனால், தான் வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், இதனால் தன்னிடம் இருந்து பிரிந்து செல்ல வேண்டும். இல்லையேல் கொலை செய்துவிடுவேன் என கணவர் மிரட்டியுள்ளார். ஆனால், பலலட்சம் செலவு செய்து பெற்றோர் நடத்தி வைத்த திருமணம், இதனால் பிரிந்து செல்ல மனமின்றி திவ்யா இருந்துள்ளார். இதுதொடர்பாக கணவன் மனைவிக்கிடையே சமீபத்தில் பிரச்சனை ஏற்பட்டு திவ்யாவின் வாயில் பாதரசத்தை ஊற்றி கொல்ல முயன்றுள்ளார்.
பாதரசத்தை கைகளால் தட்டியபோது அவை நகைகளில் படிந்து அனைத்தும் சேதமடைந்தன. இதுகுறித்து தனது பெற்றோரிடம் திவ்யா தெரிவித்தபோது, அவரை சமாதானப்படுத்தி கணவருடன் சேர்ந்து வாழ அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் பெல்லார்மின் உப்புமாவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். தான் சாப்பிடுவதற்கு முன் தனது நாய்க்கு கொஞ்சம் உப்புமாவை வைத்துள்ளார், அதனை சாப்பிட்ட நாய் இறந்துவிட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்த திவ்யா உதவி கேட்டு அலறியுள்ளார். ஆனால், கணவன் மாமனார் மற்றும் மாமியார் கண்டுகொள்ளாத நிலையில் அவரச ஊர்திக்கு போன் செய்துவிட்டு மயங்கிவிழுந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் நினைவு திரும்பிய திவ்யா, தனக்கு விஷம் வைத்து கணவர் உணவுகொடுத்துவிட்டார் என மரணவாக்குமூலம் அளித்து சிறிது நேரத்தில் இறந்துவிட்டார். திவ்யாவின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் பெல்லார்மின் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இறந்துபோன நாயின் உடலும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் தலைவலியால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமியின் மூளையை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் நூற்றுக்கணக்கான நாடாப்புளு முட்டைகள் இருப்பதை பார்த்து அதிர்சியடைந்தனர். 6 மாதங்களாக தலைவலியால் பாதிக்கப்பட்ட லீமா என்ற சிறுமியை மருத்துவர்கள் சோதித்து பார்த்தபோது தலையில் வீக்கம் இருந்த காரணத்தினால் ஸ்கேன் செய்து பார்த்ததில் லீமாவின் மூளைக்குள் நூற்றுக்கணக்கான முட்டைகள் இருந்திருக்கின்றன.
ஏற்கனவே அவருக்கு மூளையில் இருந்த வீக்கம் இருந்த காரணத்தால் ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்பட்டதில் உடல் எடை 40 கிலோவாக அதிகரித்தது.
உடல் எடை அதிகரித்து நடப்பது மற்றும் மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. லீமாவுக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டதில் நியூரோ சிஸ்டிக் சிரோஸிஸ் (neuro cystic sarcosis) என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. லீமாவின் மூளைக்குள் நூற்றுக்கான வெள்ளை நிறப் புள்ளிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
அவை அனைத்தும் நாடாப்புளுக்களின் முட்டைகள். நாடாப் புழுக்கள் கொடுத்த அழுத்தமானது மூளையை பாதித்துள்ளது, இதனால் முதலில் மூளையில் அழுத்தம் குறைவதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டன. பின்னர் கட்டி போல இருந்த முட்டைகளைக் கொல்வதற்கு மருந்துகள் கொடுக்கப்பட்டன.
மூளையில் உள்ள நாடாப்புழுக்களின் முட்டைகளை அழிப்பதற்கு மருந்து கொடுப்பது இன்னும் கூடுதல் சிக்கல்களையே கொடுக்கும், அவை வலிப்பு மற்றும் மூளை பாதிப்பை தொடர்ந்து ஏற்படுத்தும் என்பதால் மெதுவாக சிகிச்சை அளித்து வருகின்றனர் மருத்துவர்கள்.
சரியாக வேக வைக்காத முட்டை, காய்கறி மற்றும் மாமிசங்களை சாப்பிடுவதன் மூலம் உடலில் புழுக்கள் உற்பத்தியாகின்றன. அதாவது சரியாக வேகவைக்கப்படாத உணவுகளில் லார்வாக்கள் இருப்பதால் இவை நாடாப்புழுக்களை அதிக அளவில் உற்பத்தி செய்துவிடுகின்றன.
வவுனியா, நெடுங்கேணி, பெரியமடுப் பகுதியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 8 வயது சிறுவன் கனகராயன்குளம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பில் சிறுவனின் தாயாரின் சகோதரர் மற்றும் சித்தப்பா ஆகியோர் கைது செய்ளயப்பட்டுள்ளனர். தயாரிடமும் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, நெடுங்கேணி, பெரியமடுப் பகுதியில் வசித்து வந்த திரிபரஞ்சன் தமிழவன் என்ற 8 வயது சிறுவன் புதன்கிழமை 5 மணியளவில் காணாமல் போயுள்ளார். தனது வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் உள்ள தனது அப்பப்பா வீட்டிற்கு தோட்டத்தினுடாக சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்ததாகவும், நேற்று கனகராயன்குளம் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிறுவனின் தந்தை வெளிநாடு செல்ல காரணமான முகவர் கடத்தி வைத்திருப்பதாகவும் 35 இலட்சம் தந்தால் சிறுவனை விடுவிப்பதாகவும் தாயின் தொலைபேசிக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் தொலைபேசி அழைப்பு வந்திருநததுடன் கடத்தப்பட்ட சிறுவனும் தொலைபேசியில் பேசியுள்ளார். குறித்த தொலைபேசி இலக்கஙகளையும் பெற்றுக் கொண்ட கனகராயன்குளம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதனடிப்படையில் வவுனியா, ஓமந்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து குறித்த சிறுவனை பொலிசார் மீட்டுள்ளதுடன் குறித்த சிறுவனை கடத்தி வைத்திருந்ததாக சிறுவனின் தாயாரின் சகோதரர் மற்றும் சித்தப்பா ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ளனர். அத்துடன் இக் கடத்தல் நாடகத்தின் பின்னனியில் தயாரும் இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந் நிலையில் இன்று (08.03.2019) அதிகாலை கடத்தப்பட்ட சிறுவனின் தாயாருக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது. உங்களது மகனை ஒமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகே விட்டுள்ளோம். அங்கு சென்று அழைத்துச் செல்லுங்கள் என தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சிறுவனின் தயார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதினையடுத்து சிறுவன் ஒமந்தை பொலிஸாரினால் மீட்கப்பட்டு ஒமந்தை பொலிஸ் நிலையத்தினுள் வைத்துள்ளனர். சிறுவனிடம் விசாரணைகளை முன்னெடுத்ததன் பின்னரே கடத்தியவர்கள் தொடர்பான விபரத்தினை வெளியிட முடியுமென ஒமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் பல சிக்கல்களையும், சவால்களையும் சந்திக்க வேண்டிவரும். எதையும் திட்டமிட்டு செயல்படுவது எல்லா வகையிலும் சிறப்பு. வீடு, வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். மனதில் உள்ள எண்ணங்கள் நிறைவேறும். பொருளாதாரத்தில் வளர்ச்சி உண்டாகும்.
அடிக்கடி பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பிரபலங்களின் அறிமுகவும், அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். உடல் உபாதைகள் நீங்கும். பெற்றோர்களுடன் மிகுந்த மரியாதையுடன் நடந்துகொள்வீர்கள். கணவன் மனைவிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
புது மன தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். சுய முயற்சியால் வாழ்வில் முன்னேற்றம் அடைய போகிறீர்கள். புதிய முயற்சிகளை சில நாள் தள்ளி போடுவது நல்லது. மனதில் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும். இது வரை தடைப்பட்டு வந்த காரியங்களை மீண்டும் செய்ய தொடங்குவீர்கள். உத்யோகத்தில் எதிர்பாராத விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும்.
சந்திராஷ்டமம் : 25,26,27 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, குடும்பத்தில் மதிப்பு, மரியாதை உயரும். பணம் எவ்வளவு சம்பாரித்தலும் அது போதாமல் வெளியில் கைமாற்ற பணம் வாங்க வேண்டியிருக்கும். இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவி கிடைக்க பெறுவீர்கள்.
திருமணம் தொடர்பான பேச்சுக்கள் சுமூகமாக நடைபெற்று முடியும். குடும்பத்தில் பொருள் சேர்க்கை ஏற்படும். புதிய வாகன வசதி பெற்று மகிழும் வாய்ப்புண்டு. புதிய வீடு பேறு அமையவும் வாய்ப்புண்டு. பூர்வீக சொத்து பிரச்சனைகளில் சாதகமான தீர்ப்பு கிடைத்து அதன் மூலம் பணம் கைக்கு வரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கும் ஏற்படும்.
குடும்பத்தில் செலவுகளும் ஒரு சில பிரச்சனைகளும் வரக்கூடும். பொருள் வரவு கூடும். அலைச்சல்கள் குறையும். நீண்ட நாட்களாக திட்டமிட்டு இருந்த வழிபாட்டை நிறைவேற்றுவீர்கள். உடல் நலத்தை பொறுத்தவரை எந்த பிரச்னையும் இருக்காது. உங்கள் முக்கிய காரியங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் இருந்த தடைகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.
சந்திராஷ்டமம் : 10,11,12 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
மிதுன ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, எதிர்பார்க்கும் பல நல்ல காரியங்கள் நடக்க போகிறது. உங்கள் மனம் மகிழ்ச்சியில் துள்ளும். போதிய வருமானம் தங்கு தடையின்றி இன்றி கிடைக்கும். உங்களது அன்றாட பணிகளை காலம் தாழ்த்தாமல் செய்யவும். ஆன்மீக பணிகளுக்காக பணம் செலவழிப்பீர்கள். குடும்பத்தினருடன் சென்று குல தெய்வ பிராத்தனையை நிறைவேற்றவும்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்க முடியும். குடும்ப செலவுகளை கட்டுப்படுத்த சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. கைமாற்றாக கொடுத்த பணம் திரும்ப வர தாமதமாகும். உடன்பிறப்பு வகையில் சில அனுகூலமான பலன் உண்டு.
நண்பர்கள் மூலம் புதிய வசதிகள் கிடைக்கும். பெறுவீர்கள்.எதிலும் பதற்றமடையும் போக்கை கைவிட்டு நிதானமாக நடந்துகொள்ள பழகுவீர்கள். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். தொழலில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும். .
சந்திராஷ்டமம் : 2,3,4,5 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கடக ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, நீங்கள் எதற்காகவும் பயமோ, கவலைப்பட தேவையில்லை, காரணம் நீங்கள் திர்பார்த்த காரியமும், எதிர்பார்க்காத காரியமும் நிறைவேறும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த பணம் கூட இப்போது கைக்கு வந்து சேரும். சொத்து விவகாரங்களில் சிக்கல்கள் வர வாய்ப்புள்ளதால், சற்று கவனமாக இருக்கவும்.
நண்பர்கள் மூலம் ஆதாயம் வந்து சேரும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். குடும்ப பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிவரும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நல்லது. தெய்வ வழிபாடு மூலம் நல்வழி கிடைக்கும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். குடும்ப நபர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும்.
நெருங்கிய உறவினர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பர். குடியிருக்கும் வீட்டை மாற்ற நேரிடும். பழைய கடனை அடைக்க வழி கிடைக்கும். வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். பெற்றோரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய சொந்தங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். உத்யோகத்தில் ஊதிய உயர்வு உண்டு. சிறிய அளவில் புதிய தொழில் ஒன்றை தொடங்க முடியும்.
சந்திராஷ்டமம் : 5,6,7 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, நீங்கள் எதிர்பார்க்கும் இடத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும். குடும்ப நபர்களிடம் அனுசரித்து போகவும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டாகும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். உறவினர், நண்பர்கள் மூலம் சிக்கலும், பண விரயமும் வர வாய்ப்புண்டு.
புதிய வண்டி, வாகனங்களை வாங்குவீர்கள். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடு விலகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் ஒவ்வொன்றாக கிடைக்க துவங்கும். பல வகையில் செலவுகள் ஏற்பட்டாலும் அதை சிரமம் இன்றி சமாளிக்க முடியும். பணம் பலவகையில் வந்து சேரும்.
குடும்பத்தில் சலசலப்புகள் நீங்கி கலகலப்பு ஏற்படும். புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். பழைய வீட்டில் இருப்பவர்களுக்கு புது வீடு கட்டி குடியேறும் யோகம் உண்டு. அடிக்கடி பயணங்கள் மூலம் நற்பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் பல புதுமையான விஷயங்கள் நடக்கும்.
சந்திராஷ்டமம் : 7,8,9,10 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கன்னி ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, புதிய முயற்சிகளில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கையில் எடுத்தால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். உங்கள் வாழ்க்கை தரம் உயரும். உங்கள் மனதிற்கு சரி என பட்டதை துணிச்சலாக செய்வீர்கள். உங்கள் அனுபவ அறிவை பயன்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் வரும்.
புது வீடு கட்டும் பணி தொடரும். அடுத்தவருக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியும். முன் கோபத்தை கட்டுப்படுத்தினால் பல வகையில் நன்மை உண்டாகும். பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் சேமிப்பை உயர்த்தும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளின் மூலம் தன வரவு உண்டாகும். ஆடம்பர வசதிகள், சொந்த வீடு போன்ற பல நன்மைகள் அமையக்கூடும். உடலுக்கு ஒவ்வாத உணவுகளை எடுத்து கொள்ள வேண்டாம்.
திருமண காரியம் விரைவில் கைகூடும். கணவன் மனைவிக்கிடையே எதையும் பேசி தெளிவுபடுத்திக் கொள்வது நன்மை தரும். கடன் பிரச்னையை சமாளிக்க முடியும்.வருமானத்திற்கு மீறிய செலவுகள் இருப்பதால் அனாவசிய செலவுகளை அறவே தவிர்க்கவும். தூரத்து பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். உத்தியோகத்தில் பாராட்டு மழை கிடைக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
சந்திராஷ்டமம் : 10,11,12 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
துலாம் ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, இது நாள் வரை இருந்து வந்த மனக்கவலைகள் அடியோடு மறையும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பாராத இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். பணம் கொடுக்கல் வாங்கல் திருப்தியாக இருக்கும். உங்கள் வங்கி கணக்கில் பணம் உயரும். தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும்.
சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மனதில் தேவையில்லாத விஷயங்களை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். நண்பர்கள் உங்களை தேடி வந்து உதவி செய்வர். கணவன் மனைவியிடையே ஈகோ பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்ளவும். உடன்பிறப்புகளிடம் விட்டு கொடுத்து போகவும். உறவினர்களிடம் பண விஷயத்தில் மனஸ்தாபம் வர வாய்ப்புள்ளது, ஆகையால் கவனமாக இருக்கவும்.
முக்கிய காரியங்களில் ஏதேனும் தடை ஏற்பட்டால் தெய்வ வழிபாட்டின் மூலம் அதை சரி செய்து கொள்ளவும். உடல் ஆரோக்கியம் பலம் பெரும். புது வீடு கட்டி குடியேறும் வாய்ப்பு உண்டாகும். உங்கள் விருப்பங்களை எதுவாகினும் அது நிறைவேற்ற வழி கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவர். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.
சந்திராஷ்டமம் : 12,13,14 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ, செய்யவோ வேண்டாம்.
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, எல்லா விஷயத்திலும் பொறுமையை கடை பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். மனதில் ஒரு விதமான குழப்பங்கள் நிலவினாலும் அது நாளடைவில் சரியாகிவிடும். குடும்பத்தில் சுப நிகழிச்சிகள் உங்கள் தலைமையில் நடக்கும். புது வீடு மாற்றம் ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.
யாரிடமும் வீண் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். தடைப்பட்ட திருமண பணிகள் மீண்டும் தொடரும். பூர்வ புண்ணிய பாக்கியங்கள் கிட்டும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பத்துடன் ஆன்மீக பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். கோர்ட் வழக்குகளில் எதிர்பார்த்தபடி நல்ல தீர்ப்பு வரும். உங்களால் மற்றவர்கள் பயனடைவர்.
பயணங்கள் தொடர்பாக அலைச்சல் செலவுகள் ஏற்பட்டாலும் மனத்திருப்தி கொள்ளும் வகையில் நற்பலன் உண்டாகும். புது நண்பர்களின் அறிமுகமும் ஆதரவும் கிட்டும். பெண்கள் வகையில் நிறைய நன்மைகள் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பர். தொழில், வியாபாரத்தில் பெரியளவில் சாதிக்கலாம்.
சந்திராஷ்டமம் : 14,15,16 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
தனுசு ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்ளவும். வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்த்து வந்தால் உடல் மேன்மை பெரும். வரும் வாய்ப்புகளை சரியான விதத்தில் பயன்படுத்தி கொண்டால் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம். பணப்புழக்கம் வெளியில் சொல்லும்படி இருக்கும்.
உங்கள் கஷ்டங்கள் எல்லாம் விலக போகிறது. புதிய பாதையில் பயணிக்க முடியும். ள் மற்றவர்கள் செய்ய தயங்கும் காரியத்தை கூட தெரியமா எடுத்து செய்வீர்கள். மற்றவர்களை கவரும் திறமை உங்களிடம் இருக்கும். யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். உங்களை சுற்றி இருப்பவர்களின் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளவும். ஆன்மீக ஆர்வம் கூடும்.
கொடுக்கல் வாங்கலில் அவசரம் காட்ட வேண்டாம். எந்த ஒரு விஷத்தை செய்ய நினைத்தாலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது யுத்தமும். குடும்ப தேவைகளை பூர்த்தியாகும். கையில் ஓரளவு பணம் கிடைத்தவுடன் பழைய கடனை அடைக்க முற்படுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கியே நிற்கும். தொழில், வியாபாரம் முன்பை விட இப்போது சிறப்பாகவே இருக்கும்.
சந்திராஷ்டமம் : 16,17,18 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
மகர ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, உங்கள் எதிர்காலம் திட்டங்கள் சிறப்பான முறையில் நிறைவேறும். பணம் கையில் புரள ஆரம்பிக்கும். புதிய நம்பிக்கை பிறக்கும். சுப நிகழ்ச்சிகள் எல்லாம் திட்டமிட்டபடி நடைபெறும். வீட்டில் சுப செலவுகள் அதிகம் இருக்கும். குடும்ப நபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
உங்கள் வித்யாசமான அணுகுமுறையாலும் சாதுரியமான பேச்சாலும் எதையும் சாதிக்க முடியும். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து கௌரவம் உயரும். வாழ்க்கைக்கு தேவையான வசதி வாய்ப்புகளை பெருக்கிகொள்வீர்கள். கணவன் மனைவி உறவில் நல்ல புரிதல் இருக்கும். கடன் பிரச்சனைகள் ஒரு பக்கம் இருந்தாலும் அதை அடைக்கவும் வழி கிடைக்கும்.
மன திருப்தியுடன் செய்யும் காரியும் வெற்றி பெரும். உறவினர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். வாகன யோகம் உண்டு. எப்போதும் இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படவும். வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தொழில், வியாபார முன்னேற்றம் ஏற்படும்.
சந்திராஷ்டமம் : 18,19,20 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கும்ப ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, பல சிறப்பான பலன்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் நிறைய வரும். நீண்ட காலமாக திட்டமிட்டு மேற்கொண்ட முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். திருமணம் காரியம் விரைவில் கைகூடும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் எப்போதும் கவனமாக இருக்கவும்.
முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக பழகவும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிடையே இணக்கமான போக்கும் காணப்படும். குடும்பத்தில் குதூகலமும் இருக்கும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. ஒரு சிலர் பூர்விக இடத்தை விட்டு வெளியூர் சென்று தங்க நேரிடும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மனக்குழப்பம் ஏதும் வராமல் இருக்க தினமும் தியானம் செய்யவும்.
நண்பர்களிடம் உங்கள் சுக துக்கங்களை பகிர்ந்துகொள்ளவும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வீட்டில் உறவினர் வருகை அதிகரிக்கும். குடும்ப நபர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் முழுக்கவனத்தையும் செலுத்தவும். தொழில் வகையில் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.
சந்திராஷ்டமம் : 20,21,22 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
மீன ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, நீண்ட நாட்களாக மனதில் நினைத்திருந்த விரைவில் நிறைவேறும். எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர யோசிக்கவும். பண சேமிப்பில் கவனம் செலுத்தினால் பல வகையில் நன்மை அடையலாம். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. ஆடம்பர பொருள் சேர்க்கை உண்டு.
புது வீடு, மனை வாங்கு வேண்டும் என்ற யோசனை வரும். கணவன் மனைவிக்குள் சண்டை நீங்கி சமரசம் ஏற்படும். பிரிந்த தம்பதியர் மீண்டும் ஒன்று சேருவர். காதல் விவகாரங்களில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடி திருமணத்தில் முடியும். குடும்ப செலவை சமாளிக்க தேவையான பண உதவி கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். வாழ்க்கைத்துணை வழியில் நற்செய்தி உண்டு.
பணம் கொடுக்கல் வாங்கலில் சிரமங்கள் ஏற்படும். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடு முற்றிலும் நீங்கும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து விலகும். நீண்ட தூர பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. உத்யோகத்தில் பணிகளை விரைவாக செய்து முடிக்கவும். தொழில், வியபாத்தில் போட்டிகள் குறையும்.
சந்திராஷ்டமம் : 22,23,24,25 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கனடாவில் வாழும் ஒரு பிரபல பத்திரிகையாளர், தான் இலங்கைக்கு சென்றிருந்தபோது, இலங்கை எப்படி தனக்குள்ளிருந்த கதாசிரியரை வெளிக்கொணர்ந்தது என்பதை விவரிக்கிறார்.
பிரித்தானியாவில் பிரபல பத்திரிகைகளில் நிருபராகவும், ஆசிரியராகவும் பணி புரிந்து பல விருதுகளுக்கு சொந்தக்காரராக விளங்கிய ஃபியோனா பார்ட்டனும் (62), அவரது கணவரும் நடுத்தர வயதை எட்டியபோது, அவர்களுக்கு தன்னார்வலர்களாக பணியாற்றும் விருப்பம் ஏற்பட்டது.
உலகின் பல பகுதிகளுக்கு சென்று அபாயகரமான சூழல்களில் இளம் பத்திரிகையாளர்களுடன் பணிபுரிந்தார்கள் அவர்கள். அப்படித்தான் அவர்கள் இலங்கைக்கும் சென்றார்கள்.
அங்கு ஃபியோனா இளம் பத்திரிகையாளர்களுக்கு பயிற்சியளிக்க, அவரது கணவர் கற்றல் குறைபாடு கொண்ட இலங்கையர்களுக்கு தச்சுத்தொழில் கற்றுக் கொடுத்தார். அப்படியிருக்கும்போது, ஃப்ரீயாக இருக்கும் நேரங்களில் கதை எழுத முயற்சித்தார் ஃபியோனா.
அதன் விளைவாக The Widow என்னும் கதை பிறந்தது. தன் திருமண வாழ்வில் பல ரகசியங்களைக் கொண்ட ஒரு பெண்ணைக் குறித்த, த்ரில்லர் ரக கதை அது. அது புத்தக வடிவில் வெளியானபோது, 37 நாடுகளில் பிரமாதமாக விற்பனையாயிற்று. அப்போதுதான் ஃபியோனா தனக்குள் ஒரு சிறந்த கதாசிரியர் இருப்பதை உணர்ந்தார். அது ஏன் இலங்கையில் ஆரம்பித்தது என்று வியக்கும் ஃபியோனாவிடம் தனது கேள்விக்கான பதில் இல்லை.
தான் ஒரு கதாசிரியராவேன் என்னும் நம்பிக்கை தனக்கு அப்போது இருந்ததேயில்லை என்று கூறும் ஃபியோனா, அது வெறும் ஒரு பொழுதுபோக்கு என்றுதான் எண்ணினேன், இப்போதோ, நான் ஒரு முழு நேர கதாசிரியராகிவிட்டேன் என்கிறார்.
கிளிநொச்சி உருத்திரபுரத்தை சேர்ந்த இரண்டு மாணவிகள் இந்தியாவில் இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டியில் விளையாடி இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
உருத்திரபுரத்தை சேர்ந்த தினகராசா சோபிகா மற்றும் நடராசா வினுசா என்பவர்களே தேசிய றோல் போல் அணியில் தெரிவாகி 21.02.2019 தொடக்கம் 24.02.2019 வரை இந்தியாவில் இடம்பெற்ற ஆசியக் கிண்ணப்போட்டியில் விளையாடி சாதனை புரிந்துள்ளனர்.
இதில், இலங்கை அணி மூன்றாம் இடத்தையும், நடராசா வினுசா என்பவர் சிறந்த பந்து காப்பாளர் என்ற விருதையும் பெற்றுக்கொண்டனர். இவர்களையும் இவர்களை பயிற்றுவித்த கிளிநொச்சியை சேர்ந்த விக்ரர் சுவாம்பிள்ளை என்பவருக்கும் கிளிநொச்சி மாவட்டம் சார்பாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கிய அமெரிக்க விமானத்தினால் குழப்ப நிலை ஏற்பட்டதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமான C-2 ரக சரக்கு விமானம் ஒன்று இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
எனினும் அந்த விமானத்தில் பயணித்தவர்களின் பெயர் பட்டியல், கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு வழங்கப்படவில்லை. பொதுவாக எந்தவொரு விமானமும், விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட பின்னர் அதன் பயணிகள் குறித்த பெயர் பட்டியல் வழங்கப்பட வேண்டும்.
அவ்வாறு வழங்காமல் விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலையத்தில் இருந்து வெளியேற்ற முடியாது என குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். எனினும் நீண்ட இழுபறிக்கு பின்னர் வெளிவிவகார அமைச்சின் ஊடாக C-2 ரக விமானத்தில் பயணித்தவர்கள் தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவல்கள் விமான நிலைய சுங்கம் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் 25 வருடங்கள் யாசகம் பெற்று அதன்மூலம் கோடிஷ்வரராக மாறிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 65 வயதான பார்வையற்ற நபர் ஒருவரையே ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குறித்த நபர் யாசகம் பெற்ற பணத்தில் 3 வீடுகளை சொந்தமாக வாங்கியுள்ளார். வங்கியில் ஐந்து இலட்சம் ரூபாவை சேமிப்பாக வைத்துள்ளார்.
தனது இரண்டு வீட்டினை இரண்டு மகளுக்கு சீதனமாக வழங்கியுள்ளார். இன்னுமொரு வீட்டினை வாடகைக்கு விடுவதற்காக நிர்மாணித்துள்ளார். குறித்த நபர் கம்பஹா – கொழும்பு கோட்டைக்கு இடையில் பயணிக்கும் ரயிலில் யாசகம் செய்து வருகின்றார்.
கைது செய்யப்படும் சந்தர்ப்பத்தில் அவரது கையில் 4000 ரூபாய் பணம் காணப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் குறித்த நபரின் மனைவி உயிரிந்துள்ளார். அன்று முதல் அவர் ரயில் மற்றும் பேருந்துகளில் யாசகம் பெற்று வந்துள்ளார்.
அவரது இரண்டு மகள்களும் திருமணம் செய்துள்ளனர். அவர்களது கணவன்மார் நல்ல தொழில் செய்து வருகின்றனர். மகள்கள் இருவருக்கும் கார்கள் உள்ளன. யாசகம் மூலம் மாதம் 150000 ரூபாய் பணம் சம்பாதிப்பதாகவும், கண்கள் தெரியாமல் போனமையனால் அது தனக்கு நன்மையாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் தூய்மையாக ஆடை அணியும் இந்த நபர் ரயிலில் யாசம் எடுக்கும் விடயம் இரண்டு மகள்களுக்கும் தெரியும். தான் யாசகம் பெற முச்சக்கர வண்டியிலேயே சென்று வருவதாகவும் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.
தனது தந்தை பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதனை அறிந்த மகள் கோட்டை பாதுகாப்பு தலைமையத்திற்கு தனது சொகுசு மோட்டார் காரில் சென்றுள்ளார். யாசகம் மூலம் கோடிஷ்வரரான நபர் தொடர்பான தகவலை கேட்டு நாட்டு மக்கள் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர்.
வவுனியா, நெடுங்கேணி பகுதியில் 35 இலட்சம் ரூபாய் பணம் கேட்டு 8 வயது சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிசில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, நெடுங்கேணி, பெரியமடுப் பகுதியில் வசித்து வந்த 8 வயது சிறுவன் ஒருவர் நேற்று மாலை 5 மணியளவில் காணாமல் போயுள்ளார்.
பாடசாலை சென்று வீடு திரும்பிய குறித்த சிறுவன் தனது தாயாருடன் தனியார் வகுப்பிற்குச் சென்று வீடு திரும்பியிருந்தார். அதன்பின் தனது வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் உள்ள தனது அப்பப்பா வீட்டிற்கு தோட்டத்தினுடாக சென்றிருந்தார். இருப்பினும் சிறுவன் அப்பப்பா வீடு செல்லவில்லை.
சிறுவன் செல்லும் போது அவுஸ்ரேலியாவில் உள்ள தனது கணவருடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த தாயார் உரையாடி முடிந்த பின் சிறுவன் சென்ற வீட்டிற்குச் சென்றபோது அங்கு சிறுவன் வரவில்லை என சிறுவனின் அப்பப்பா தெரிவித்துள்ளார்.
அதன்பின் இரவிரவாக உறவினர்கள் இணைந்து தோட்டம் மற்றும் தோட்டக் கிணறுகள் போன்ற இடங்களில் தேடிய நிலையில் சிறுவனை காணவில்லை.
இதன்பின் இன்று காலை கனகராயன்குளம் பொலிசில் நிலையத்தில் தாயார் முறைப்பாடு செய்திருந்தார். இந்நிலையில், சிறுவனை சிறுவனின் தந்தை வெளிநாடு செல்ல காரணமான முகவர் கடத்தி வைத்திருப்பதாகவும் 35 இலட்சம் தந்தால் சிறுவனை விடுவிப்பதாகவும் தாயின் தொலைபேசிக்கு காலை அழைப்பு ஒன்று வந்திருந்ததுடன், கடத்தப்பட்ட சிறுவனும் தொலைபேசியில் பேசியுள்ளார்.
இதன்போது சிறுவன் தன்னை கூட்டிச் செல்லுமாறு தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். மாலையும் பிறிதொரு தொலைபேசியில் இருந்து 35 இலட்சம் பணம் தருமாறு கோரி தாயாருக்கு அழைப்பை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த தொலைபேசி இலக்கஙகளையும் பெற்றுக் கொண்ட கனகராயன்குளம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். திரிபரஞ்சன் தமிழவன் என்ற 8 வயது சிறுவனே இவ்வாறு கடப்பட்டுள்ளவராவார்.
2020ம் ஆண்டில் அரசாங்க ஊழியர்களின் சம்பவம் 107 சதவீதமாக மாறும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். சிறந்த வரவு செலவுத் திட்டமொன்றை சமர்ப்பித்தது தொடர்பில் பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
நடப்பாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் 14 இலட்சம் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் 2500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளன. 2020 இல் அரச ஊழியர்களின் சம்பளம் 107 வீதத்தினால் உயரும் எனத் தெரிவித்தார்.
கிளிநொச்சி உதய நகர் பகுதியில் காப்புறுதி நிறுவனப்பணியாளர் ஒருவரை வெட்டிக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பொலிஸ் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதி வான் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியில் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை காலை ஏழு நாற்பத்தைந்து மணியளவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வவுனியாவைச் சேர்ந்த கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின் கிளிநொச்சிக் கிளை முகாமையாளரான காந்தலிங்கம் பிறேமரமணன் (32) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
உதயநகர் கிழக்கில் தங்கியிருக்கும் இடத்திலிருந்து புறப்படும்போதே உந்துருளியில் வந்த ஒருவர் சரமாறியாக வெட்டியுள்ளார். தலை கை கால் மற்றும் உடம்பில் வெட்டுக்காயங்களுக்குள்ளான அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரை அவரது உறவினர் ஒருவரே வெட்டியதாகவும் வெட்டிய நபர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். என்றும் தெரியவந்தது. இதனையடுத்து மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று(07-03-2019) பகல் குறித்த சந்தேக நபரை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதி மன்றில் நீதி மன்ற நீதிவான் மா. கனேச ராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து சந்தேக நபரை நாளை(08-03-2019) வரை பொலிஸ் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதி வான் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும், புத்தளம் மற்றுமம் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் நாளைய தினம் அதிக வெப்பத்துடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
வெப்பமான வானிலையால், அதிக களைப்பு உள்ளிட்ட உடலியலில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதனால், போதுமான அளவு நீரை அருந்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை கோரியுள்ளது. மேலும், பொதுவெளிகளில் கடின உழைப்பில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும், இயன்றவு நிழலான இடங்களை நாடுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
களுத்துறை – தொடங்கொடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல் 1.30 மணியளவில் சுற்றுலா சென்ற பேருந்து ஒன்றும், முச்சக்கரவண்டியொன்றும் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டி வேறு ஒரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த பேருந்துடன் மோதியுள்ளது. சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளனர்.
தொடங்கொடை பகுதியை சேர்ந்த 31 மற்றும் 35 வயதானவர்களே உயிரிழந்துள்ள நிலையில், விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதியும், முச்சக்கரவரண்டியின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.