பிரித்தானியாவில் மிக திறமையான சிறுமி விருதை வென்ற இலங்கைச் சிறுமி!!

இலங்கைச் சிறுமி

சிறுமிகளில் மிக திறமையான சிறுமி என்ற விருதை பிரித்தானியாவில் வசித்து வரும் இலங்கை சிறுமி ஒருவர் பெற்றுள்ளார். இந்த விருது கடந்த வார இறுதியில் 12 வயதான நிஷி உக்கல்ல என்ற சிறுமிக்கு வழங்கப்பட்டுள்ளது.

செனல் 4 தொலைக்காட்சி தயாரித்து வழங்கும் “Child Genius” என்ற நிகழ்ச்சி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் வசித்து வரும் பல இனங்களை சேர்ந்த சிறுமிகளை இலகுவாக தோற்கடித்து இந்த வெற்றியினை பெற்றுள்ளார்.

இந்த சிறுமியிடம் பிரித்தானியாவில் உள்ள பல ஊடகங்கள் நேர் காணலை நடத்தியுள்ளதுடன், பிரித்தானியாவில் பிரபலமாகியுள்ளார். அடிக்கடி ஊடகங்கள் நேர்காணலை நடத்துவதன் காரணமாக சிறுமியின் தந்தைக்கு தொழில் விடுமுறை பெற நேரிட்டுள்ளது.

இலங்கையில் பிறந்து பிரித்தானியாவில் குடியேறிய நிலங்க உக்கல்ல மற்றும் சிரோமி ஜயசிங்க ஆகியோர் இந்த சிறுமியின் பெற்றோர்களாவர். பிரித்தானியாவில் பிறந்த நிஷிக்கு பிரித்தானிய குடியுரிமையும், இலங்கை குடியுரிமையும் உள்ளது.

முன்பள்ளி ஆசிரியர்கள் ஏனைய பிள்ளைகளை விட நிஷியிடம் வித்தியாசம் தெரிவதாக கூறிய பின்னரே தனது மகளின் திறமையை தான் முதலில் அறிந்துக்கொண்டதாக சிரோமி ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

மகளின் இருக்கும் திறமை காரணமாக அவருக்கு கற்பிக்க முன்பள்ளிக்கு புதிய ஆசிரியரை நியமிக்க நேர்ந்ததாக சிறுமியின் தந்தை கூறியுள்ளார்.

அத்துடன் பாடசாலையில் 4 ஆம் வகுப்பு படிக்க வேண்டிய வயதில் 6 ஆம் வகுப்பில் படித்ததாகவும் ரிப்பல் பிரமோஷன் பெற்று 6 ஆம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் திறமையான சிறுமி என்ற விருதை பெற்று கொண்ட பின்னர், நிஷி உக்கல்லவுக்கு பல நாடுகளில் இருந்து பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.

10 வயதிலும் நிஷி உக்கல்ல முக்கிய வெற்றியை பெற்றதையும் சிலர் நினைவூட்டியுள்ளனர். 10 வயதில் அவர் அதி கூடிய புள்ளியான 162 புள்ளிகளை பெற்றுக்கொண்டதாக அஜிதா கதிர்காமர் என்ற பெண் கூறியுள்ளார்.

14 வயதான காதலியை பெற்றோருக்கு தெரியாமல் அழைத்து சென்ற காதலன் : நீதிமன்றம் விதித்த உத்தரவு!!

நீதிமன்றம் விதித்த உத்தரவு

திருகோணமலை, குச்சவெளி பகுதியில் 14 வயதுடைய சிறுமியை ஒரு வருடமாக காதலித்து பெற்றோர்களுக்கு தெரியாமல் வீட்டிற்கு அழைத்துச் சென்ற காதலனை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் சந்தேக நபரை இன்று ஆஜர்படுத்திய போதே இம்மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. திருகோணமலை, கும்புறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 14 வயதுடைய சிறுமியை ஒரு வருடமாக காதலித்து பெற்றோர்களுக்கு தெரியாமல் சிறுமியை நண்பர் ஒருவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையிலே சிறுமியின் பெற்றோர் சந்தேக நபர் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளனர். இதற்கமைய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இலங்கை வாழ் இளைஞர், யுவதிகளுக்கு மகிழ்ச்சி கொடுத்த ரணில்!!

மகிழ்ச்சி கொடுத்த ரணில்

நாடு பூராகவும் 1178 இலவச வை-பை இணைய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது. இலங்கை மக்கள் அனைவருக்கும் இலவச இணையம் என்ற வாக்குறுதிக்கு அமைய இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதாக, பிரதமர் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுவதுடன் கண்கானிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. நாடு முழுவதிலுமுள்ள பிரதான இடங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நூலகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இவசல வை-வை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இலவசமாக நாட்டு மக்கள் இணைய சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த வசதியை பெறும் எந்தவொரு நபரும் மாதாந்தம் 100 MBஅளவு இலவச வைபையை பெற்றுகொள்ள முடியும். எந்த நேரத்திலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலவச வைபை வசதியினை பெற்றுக் கொள்ள முடியும்.

2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரையில் 1176 பகுதிகளில் 455741 பேர் இலவச இணைய வசதியினை பெற்றுக்கொள்ள கூடிய வகையில் இந்த வை-பை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி முதல் 455741 GB இலவச வை-பை பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமகாலத்தில் அதிகளவான இளைஞர், யுவதிகள் ஸ்மார்ட் கைபேசியை பயன்படுத்தி வருகின்றனர். இலவச இணைய வசதி மூலம் பலர் நன்மை அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .

வவுனியா பாலமோட்டை குளம் சந்திரிகாவினால் திறந்து வைப்பு!!

வவுனியா பாலமோட்டை குளம்

வவுனியா பாலமோட்டை கிராமத்திற்கு இன்று (07.03) விஜயம் செய்த தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் பணிப்பாளர் சந்திரிக்கா பண்டாரநாயக்க புனநிர்மாணம் செய்யப்பட்ட குளத்தை பார்வையிட்டதுடன் அதற்கான விபரப்பலகையை திரைநீக்கம் செய்து வைத்தார்.

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் நிதி உதவியுடன் 3.7 மில்லியன் ரூபா செலவில் பாலமோட்டை குளமானது மழை நீரை சேமிக்கும் நோக்கத்துடன் புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.ஹனீபாவுடன் பாலமோட்டை கிராமத்திற்கு வருகை தந்திருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கு பாண்ட் வாத்தியங்கள் முழங்க மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டிருந்தார்.

மழை நீரை சேமிக்கும் நோக்கத்துடன் புனர்நிர்மானம் செய்யப்பட்ட குளத்தை பற்றிய மேலதிக விபரங்களை சந்திரிக்கா பண்டாரநாயக்க, கமநல சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.விஜியகுமாரிடம் கேட்டறிந்து கொண்டார்.

நிகழ்வில் பாலமோட்டை கிராமத்து விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்ததுடன் அவைகளை எமுத்து மூலம் கடிதமாக பெற்றுக் கொண்டதுடன் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.

பாலமோட்டை கிராமத்தின் சார்பாக உரையாற்றிய கமக்கார அமைப்பின் தலைவர் ரி.சுரேஸ், பல வருடங்களாக முயற்சி செய்தும் கிராமத்தின் விவசாயக் காணிகளுக்கு அரச உரிமங்கள் வழங்கப்படவில்லை. நஞ்சற்ற உணவுகளை தயாரிப்பதற்கும் சந்தை வாய்ப்புக்களையும் உருவாக்கி தருமாறும், விவசாயக் கிணறுகளை அமைத்து தருமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.

வவுனியா நெடுங்கேணியில் வன்னி அறுசுவை உணவகம் திறந்து வைப்பு!!

நெடுங்கேணியில் வன்னி அறுசுவை உணவகம்

தேசிய ஒருமைபாடு மற்றும் நல்லிணக்க செயலகத்தின் நிதியில் அமைக்கபட்ட வன்னி அறுசுவை உணவகம் வவுனியா வடக்கு நெடுங்கேணியில் இன்று (07.03.2019) திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் முன்னாள் ஐனாதிபதியும் செயலகத்தின் பணிப்பாளருமான சந்திரிக்கா குமாரதுங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு உணவகத்தை திறந்து வைத்திருந்தார்.

காலை 9 மணிக்கு நெடுங்கேணி பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க செயலகத்தினால் வடக்கில் ஏற்படுத்தபட்டுள்ள வேலைத்திட்டங்கள் பற்றியும் எதிர்காலத்தில் மேற்கொள்ளபடவுள்ள வேலைதிட்டங்கள் தொடர்பாகவும் பொதுமக்களுடன் கலந்துரையாடிய முன்னாள் ஐனாதிபதி அதன்பின்னர் உணவகத்தை திறந்து வைத்திருந்தார்.

நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ப.சத்தியலிங்கம், பிரதேசசபை தலைவர் இ.தணிகாசலம், அரசஅதிபர் எம். ஹனீபா, பிரதேச செயலர் க.பரந்தாமன், அரச அதிகாரிகள், பொலிசார் என பலர்கலந்து கொண்டனர்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!

விபத்தில் ஒருவர் படுகாயம்

கிளிநொச்சி – கண்டாவளை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும், வாகனத்தின் சாரதியே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வாகனம் தனது வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையே குறித்த விபத்திற்கான காரணமென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்காக நாளை முதல் இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையில் பெண்களுக்கு மாத்திரம் ரயிலில் பெட்டியை ஒதுக்கும் நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது. இந்த நடைமுறை மகளிர் தினத்தை முன்னிட்டு நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளை காலை 6.59 மணிக்கு வேயங்கொட ரயில் நிலையத்தில் இருந்து முதலாவது ரயில் பயணம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே அதிகாரி டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் தலைமையில் இந்த சேவை ஆரம்பித்து வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பல வருடங்களுக்கு முன்னர் பெண்களுக்காக தனியான ரயில் பெட்டி முறை அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் உரிய முறையில் அது முன்னெடுக்கப்படவில்லை.ரயில்களில் பெண்கள் முகம் கொடுக்கும் சிரமம் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய, அலுவலக ரயில்களான பங்கதெரிய, சாகரிக்கா, சமுத்ராதேவி, ரம்புக்கன்ன, மஹவ ஆகிய ரயில்களில் மூன்றாவது பிரிவின் ஒரு பெட்டி இவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டியில் ஆண்கள் ஏறுவதனை தவிர்ப்பதற்காகவும் இந்த சேவையை தொடர்ந்து உரிய முறையில் பாதுகாப்பதற்காகவும் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் கடமைக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தாய் மற்றும் மகள் கொடூர கொலை : 5 ஆண்டுகளுக்கு பின்னர் சிக்கிய இளைஞர்!!

தாய் மற்றும் மகள் கொடூர கொலை

தமிழகத்தில் தாய் மற்றும் மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சின்ன சோழியம்பாக்கம் கிராமத்தில் கடந்த 2015ம் ஆண்டு முன் விரோதம் காரணமாக லட்சுமி என்ற பெண்ணும் அவர் மகளான நிரோஷா என்பவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

இந்த இரட்டை கொலை வழக்கில் பொலிசார் 5 பேரை கைது செய்தனர். இதில் ஒருவரான பிரகாஷ் என்பவர் ஜாமீனில் வெளியில் வந்த நிலையில் பின்னர் தலைமறைவானார். இந்நிலையில் பிரகாஷை பொலிசார் வலைவீசி தேடி வந்தனர்.

இதையடுத்து பிரகாஷ் ஜனப்பன்சத்திரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற பொலிசார் பிரகாஷை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரகாஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.

7 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஸ்கேன் எடுத்த போது காத்திருந்த அதிர்ச்சி!!

காத்திருந்த அதிர்ச்சி

தமிழகத்தில் 7 மாத கர்ப்பிணி பெண்ணின் சிறுநீரகத்தின் மேல் புறம் உள்ள வலது மற்றும் இடது அட்ரீனல் சுரப்பியில் கட்டிகள் இருந்ததை மருத்துவர்கள் கண்டுப்பிடித்தனர். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் புனிதா ராணி (24). 7 மாத கர்ப்பிணியான இவருக்கு தீராத தலைவலி, மயக்கம் மற்றும் வாந்தி ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ ஸ்கேனில் சிறுநீரகத்தின் மேல் புறம் உள்ள வலது மற்றும் இடது அட்ரீனல் சுரப்பியில் கட்டிகள் இருப்பது கண்டு மருத்துவர்கள் அதிர்ந்தனர். அட்ரீனல் சுரப்பி, உடலின் தண்ணீர் மற்றும் உப்பு சத்தை சமநிலைப்படுத்தும். கர்ப்பிணி பெண்ணுக்கு அட்ரீனல் சுரப்பியில் இரு புறமும் கட்டி வருவது மிக அபூர்வமானதாக மருத்துவ உலகில் கூறப்படுகிறது.

இதையடுத்து மருத்துவர்கள் 5 மணி நேரம் போராடி புனிதா ராணி சிறுநீரகத்தில் இருந்த அட்ரீனல் சுரப்பிகளையும் அதில் இருந்த கட்டிகளை அகற்றினர். கட்டிகளை மட்டும் தனியாக அகற்ற முடியாது என்பதால் மருத்துவர்கள் அட்ரீனல் சுரப்பி கட்டிகளையும் சேர்த்து அகற்றினர். இடதுபுறம் அகற்றப்பட்ட கட்டி ½ கிலோ இருந்தது. வலதுபுறம் கட்டி 300 கிராம் இருந்தது.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், அட்ரீனல் கட்டியானது 50 லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே வரும் அரிய நோயாகும். அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது புனிதா ராணியின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் இதய துடிப்பு நன்றாக உள்ளது என கூறியுள்ளனர்.

மகனை நிர்வாணப்படுத்தி சித்ரவதை : வீடியோ எடுத்து முதல் கணவருக்கு அனுப்பிய மனைவி!!

மகனை நிர்வாணப்படுத்தி சித்ரவதை

மகாராஷ்டிரா மாநிலத்தில் விவாகரத்தான மனைவி தனது கணவரிடம் அதிக அதிகமான பராமரிப்பு தொகை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக தனது 3 வயது மகனை நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கி அதனை வீடியோ எடுத்து தனது கணவருக்கு அனுப்பியுள்ளார்.

பையாஸ் சேக் – ஹீனா தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்ட இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர். மகனை பராமரிப்பதற்காக பையாஸ் சேக் மாதந்தோறும் ஹீனாவிற்கு ரூ.6 ஆயிரம் அனுப்பி வந்தார்.

இந்நிலையில் இந்த தொகை போதவில்லை என்பதற்காக ஹீனா, தனது மகனை கொடூரமாக தாக்கி அதனை வீடியோ எடுத்து கணவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

3 வயது மகனை நிர்வாணப்படுத்தி கரண்டியை வைத்து கொடூரமாக தாக்கியுள்ளார். வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர், உடனடியாக சம்பவம் குறித்து ஹீனா மீது பொலிசில் புகார் அளித்தார். அதன்பேரில் பொலிசார் ஹீனாவை அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது சிறுவர் பாதுகாப்பு சட்டத்தின் 75-வது பிரிவின் (சிறுவர்களுக்கு எதிரான சித்ரவதை) கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் சுருண்டு விழுந்து பலியான வீரர்!!

சுருண்டு விழுந்து பலியான வீரர்

காபோன் நாட்டில் கால்பந்து போட்டியின் போது திடீரென மயங்கி விழுந்த வீரர் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காபோன் நாட்டின் தலைநகரான லிபரல்வில் Akanda FC மற்றும் Missile FC அணிகளுக்கு இடையிலான முதல் பிரிவு போட்டியின் போது தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ஸ்ட்ரைக்கராக விளையாடி கொண்டிருந்த 30 வயதான ஹெர்மன் ஸிங்கா திடீரென மயங்கி தரையில் விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் உடனடியாக ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

ஆனால் வாகனம் தாமதமாகவே மைதானத்திற்கு வருகை தந்திருக்கிறது. பின்னர் அங்கு வந்த மருத்துவர் முதலுதவி சிகிச்சை கொடுத்து, மயக்க நிலையில் இருந்த ஹெர்மனை மீட்க முயற்சித்துள்ளார்.

ஆனால் எந்த பலனும் அளிக்காததால் வேகமாக மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் ஹெர்மன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். மேலும், ஹெர்மன் இறந்ததற்கான காரணம் தெரியாத நிலையில், மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவிக்கின்றன.

கல்லூரி வகுப்பறையில் எல்லோர் முன்னிலையிலும் மாணவர் செய்த செயல் : அவமானத்தில் மாணவி எடுத்த விபரீத முடிவு!!

மாணவி எடுத்த விபரீத முடிவு

தமிழகத்தில் வகுப்பறையில் எல்லோர் முன்னிலையிலும் மாணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் மாலாஸ்ரீ (21) என்ற மாணவி சிவில் என்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் மண்டையூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்து தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார்.

மாலாஸ்ரீயோடு முகமது இம்ரான் (21) என்ற மாணவர் அதே வகுப்பில் படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரி வகுப்பறையில், ஓய்வு நேரத்தில் தலைவலிப்பதாக கூறிய மாலாஸ்ரீ, முகமது இம்ரான் பேக் இருந்த மேஜை மீது தலை வைத்து படுத்திருந்தார்.

இதனைப்பார்த்த முகமது இம்ரான் ஆத்திரத்தில் மாலாஸ்ரீயை திட்டி கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மற்ற மாணவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர்.

இந்த சம்பவத்தால் மனமுடைந்த மாலாஸ்ரீ விடுதிக்கு சென்று எலி மருந்தை குடித்தார்.
உயிருக்கு போராடிய அவரை மற்ற மாணவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாலாஸ்ரீ இறந்தார். இதுகுறித்து பொலிசார் மாணவன் முகமது இம்ரான் மீது மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இப்படியும் ஒரு தாயா : தங்கையின் எச்சரிக்கையால் உயிர்தப்பிய அக்கா!!

இப்படியும் ஒரு தாயா

தர்மபுரி மாவட்டத்தில் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த காரணத்தால் பெற்ற மகளையே கொலை செய்த முயன்ற பெற்றோரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். குமார் – தனலட்சுமி தம்பதியினருக்கு 4 பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில் மூத்த மகள் உஷா அங்கிருக்கும் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

நான்கு பேரும் பெண் பிள்ளைகள் என்பதால் மூத்த மகள் உஷாவுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர். ஆனால், தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் தொடர்ந்து படிக்க வேண்டும் என உஷா தனது பெற்றோரிடம் கூறியுள்ளார், உஷா கூறியதை ஏற்றுக்கொள்ளாத முடியாத தந்தை, வேன் டிரைவரை தனது மகள் காதலிப்பதாக தவறாக நினைத்து சண்டைபோட்டுள்ளார்.

ஆனால், தான் காதலிக்கவில்லை என மகள் கூறியும் அதனை நம்பாத பெற்றோர் வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். இந்த நிலையில், மார்ச் 5-ம் தேதி பள்ளிக்குச் செல்லுமாறு உஷாவிடம், தாய் தனலட்சுமி கூறி, மதிய உணவை டிபன் பாக்சில் வைத்துக் கொடுத்துள்ளார்.

ஆனால், அந்த உணவில் விஷம் கலந்துகொடுத்துள்ளார். இதை அறியாமல் உஷா இருந்துள்ளார். அதே பள்ளியில் படிக்கும் அவரது தங்கை, அக்கா மதிய உணவை நீ சாப்பிட வேண்டாம், அம்மா உன்னைக் கொல்ல மதிய உணவில் நெல் வயலுக்குப் போடும் (குருணை மருந்து) விஷத்தை கலந்து கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த உஷா, ஆசிரியர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் பொலிசில் புகார் அளித்துள்ளார். இருவரும் தவறை ஒப்புக்கொண்டதையடுத்து, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர்.

வவுனியாவில் மாவா போதைப் பொருட்களுடன் ஒருவர் கைது!!

ஒருவர் கைது

வவுனியாவில் நேற்று பிற்பகல் கற்குழி பகுதியில் சட்டவிரோத மாவா போதைப் பொருட்களுடன் நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகப் பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று பிற்பகல் கற்குழி புகையிரதக்கடவைக்கு அருகில் மாமடுவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரிடமிருந்து 820 கிராம் பொதி செய்யப்பட்ட மாவா போதைப் பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபேயவிக்கிரம தலைமையில் கீழ் செயற்படும் புலனாய்வுப் பிரிவினர் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட இந்நடவடிக்கையின்போது போதைப் பொருட்கள் வியாபாரி ஒருவரிடமிருந்து மாவா போதைப் பொருட்களைப் பெற்றுக்கொண்டு சென்ற குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகப் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

யாழில் இளைஞர்களின் அட்டகாசம் : மூவர் கைது!!

யாழில் இளைஞர்களின் அட்டகாசம்

யாழ்.மட்டுவில் பகுதியில் வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் மூவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.மட்டுவில் வின்சன் வீதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த கும்பல் ஒன்று வீட்டின் கதவினை கை கோடாலியினால் கொத்தி சேதப்படுத்தி அட்டகாசம் புரிந்துள்ளனர்.

இலக்க தகடுகள் அற்ற மோட்டார் சைக்கிளில் சென்ற 20க்கும் மேற்பட்ட கும்பலே தாக்குதலை மேற்கொண்டு உள்ளது. குறித்த கும்பல் வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்ட பின்னர் மட்டுவில் சந்தியில் கூடி நின்று அட்டகாசம் புரிந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

அத்துடன் அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், ஏனையவர்களையும் கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

500 க்கும் அதிகமான படங்களில் நடித்த பிரபல நடிகர் மரணம் : வறுமையால் வந்த சோகம்!!

பிரபல நடிகர் மரணம்

தமிழ் சினிமாவில் அதே கண்கள் படத்தின் மூலம் தன் சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் நடிகர் டைபிஸ்ட் கோபு. திருச்சியை சேர்ந்த இவர் 50 ஆண்டுகள் சினிமாவில் பணியாற்றியுள்ளார்.

500 க்கும் அதிகமான படங்களில் நடித்தவர் கல்லூரியில் படிக்கும் போதே நாடகங்களில் நடித்து வந்தார். அதில் டைப்பிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்ததால் கோபாலரத்தினம் என்ற இவரின் பெயரை டைபிஸ்ட் கோபு என மாறியது.

உயர்ந்த மனிதன், காசேதான் கடவுளடா, பரீட்சைக்கும் நேரமாச்சு, மைக்கேல் மதன் காமராஜன் என முக்கிய படங்களில் பல நடிகர்களுடன் நடித்துள்ளார். நாகேஷின் நண்பரான இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றவர். 82 வயதான இவர் ராயப்பேட்டையில் மனைவியுடன் வாடகை வீட்டில் கடைசி காலத்தில் வாழ்ந்துவந்துள்ளார்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் புதன் கிழமை இன்று உயிரிழந்துள்ளார். அவரது இறுதி சடங்கு நாளை வியாழக்கிழமையில் அவரது இல்லத்தில் காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. அவருக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.