இலங்கையில் அறிமுகமாகும் புதிய வீசா நடைமுறை!!

புதிய வீசா நடைமுறை

இலங்கையில் முதலீட்டாளர்களுக்காக புதிய வீசா நடைமுறை ஒன்று அறிமுகப்படுப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் 500,000 அமெரிக்க டொலரை முதலீடு செய்யும் முதலீட்டாளருக்கு 10 வருடங்களும், 300,000 அமெரிக்க டொலரை முதலீடு செய்யும் முதலீட்டாளருக்கு 5 வருடங்கள் இலங்கையில் தங்குவதற்கு வீசா வழங்கப்படவுள்ளது.

இலங்கை குடியுரிமையை கொண்டிராத வெளிநாட்டவர்களுக்கு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் வழங்கப்படும் கால எல்லை வரை நிரந்தரமாக நாட்டில் தங்க அனுமதி வழங்கப்படவுள்ளது.

அதற்காக 1948 இன் 20ஆம் இலக்க குடிவரவு குடியகல்வு சட்டத்தின் 14(1) மற்றும் 14(2) ஆம் சரத்தினை திருத்தம் செய்வதற்கும், 14(3அ) என்ற சரத்து ஒன்றை புதிதாக உள்ளடக்குவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. புதிய நடைமுறை தொடர்பில் அமைச்சர் வஜிர அபேவர்தன சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையில் சிகரெட் பிரியர்களுக்கு சோகமான செய்தி!!

சிகரெட் ஒன்றின் விலை

எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் சிகரெட் ஒன்றின் விலை ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்றைய தினம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்திலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிகரெட்களுக்கு தேசிய கட்டுமான வரி விதிக்கப்படும் எனவும் பீடி இலைகள் இறக்குமதிக்கான செஸ் வரி 3,500 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது எனவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

திருக்கேதீஸ்வரத்தில் கத்தோலிக்க மக்களை அச்சுறுத்தும் வகையில் துண்டுப்பிரசுரம்!!

அச்சுறுத்தும் வகையில் துண்டுப்பிரசுரம்

மன்னாரில் உள்ள கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் கத்தோலிக்க மக்களை அச்சுறுத்தும் வகையில், திருக்கேதீஸ்வர ஆலயம் சார்ந்த பகுதிகளில் கறுப்பு வெள்ளை மற்றும் கலர் வடிவிலான துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று இரவு மன்னார் திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரியின் போது குறித்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கான நுழைவு பகுதிக்கு புதிதாக வரவேற்பு வளைவு அமைப்பது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இந்து மக்களுக்கும், கிறிஸ்தவ மக்களுக்கும் இடையில் முரண்பாடு இடம் பெற்றது.

இதன் போது எதிர்பாராத வகையில் சில சம்பவங்கள் இடம் பெற்றது. இந்த நிலையிலே குறித்த துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த துண்டுப்பிரசுரத்தில் ‘மன்னார் வாழ் மத வெறி குரோதம் பிடித்த கிறிஸ்தவ மத குருக்களும், ஒரு சில கிறிஸ்தவ மக்களும் இலங்கை வாழ் தமிழ் மக்கள் பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு சான்றாக 03-03-2019 அன்று மதியம் 02-30 மணியளவில் திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயிலில் நடந்த அச்சுறுத்தல் யாவரும் அறிந்ததே.mகுறிப்பு என குறிப்பிடப்பட்டு ‘தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பதற்கு பதிலாக’ ‘இரண்டு தமிழ் அமைச்சர்கள்’ மன்னாரில் உள்ளனர் (செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன்) இவர்களும் மதம் சார்பாக உள்ளனர்.

இது தொடர்ந்து நடைபெறுமானால் உலக வாழ் இந்து தமிழ் மக்களின் நகர்வு வேறு பாதையை நோக்கி செல்லும். ‘இவ்வண்ணம் கிறிஸ்தவ மதவெறியர்களால் பாதிக்கப்படும் இந்து தமிழ்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த துண்டுப்பிரசுரம் மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா செட்டிகுளத்தில் புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞன்!!

தவறி விழுந்த இளைஞன்

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி சென்ற புகையிரதத்தில் இருந்து இன்று அதிகாலை இளைஞர் ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் வவுனியா – செட்டிக்குளம் பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்தவர் வவுனியா பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் 24 வயது மதிக்கத்தக்க மடு பிரதேசத்தை சேர்ந்த இளைஞரே காயமடைந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது. குறித்த இளைஞர் புகையிரதத்தின் மிதிபலகையில் அமர்ந்தவாறு பயணம் செய்துள்ளார். இந்த நிலையில் அவர் தூக்க கலக்கம் காரணமாகவே தவறி புகையிரதத்தில் இருந்து கீழே விழுந்துள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் மக்கள் கருத்து தெரிவிக்கையில், அதிகாலையில் இளைஞர் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு சென்ற போது அவர் நடக்க முடியாத நிலையில் தண்டவாளத்தின் அருகிலிருந்து கூக்குரல் இட்டார்.

இதனை அவதானித்தவர்கள் உடனடியாக பறயனாலங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து அங்கு விரைந்த பொலிஸார் குறித்த இளைஞரை செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும் படுகாயங்களுக்கு உள்ளான குறித்த இளைஞர் அங்கிருந்து வவுனியா பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியாவைச் சேர்ந்த குடும்பஸ்தர் கிளிநொச்சியில் வெட்டிக்கொலை!!

வெட்டிக்கொலை

கிளிநொச்சி – உதயநகர் கிழக்கு பகுதியில் குடும்பஸ்தரொருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின் கிளிநொச்சி கிளை முகாமையாளரான காந்தலிங்கம் பிறேமரமணன் (32) என்பரே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வவுனியா – வேப்பங்குளத்தை சேர்ந்த குறித்த நபர் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

அவர் தனது அலுவலக பணிப்பாளருடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு உதயநகர் கிழக்கில் இருந்து புறப்படும்போது உந்துருளியில் வந்த ஒருவர் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதன்போது தலை, கை, கால் உள்ளிட்ட உடம்பின் பல பகுதிகளில் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட 5பேர் பணத்துடன் கைது!!

சூதாட்டத்தில் ஈடுபட்ட 5பேர் கைது

வவுனியா தட்சணாங்குளம் பகுதியிலுள்ள கள்ளுத்தவறணை ஒன்றில் சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் ஒரு தொகைப் பணத்துடன் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

பண்டாரிக்குளம் குளக்கட்டு வீதியூடாக தட்சணாங்குளம் செல்லும் குளக்கட்டிலுள்ள கள்ளுத்தவறணையில் நீண்டகாலமாக சட்டவிரோதமாக முறையில் பணம் வைத்து சூது விளையாட்டு இடம்பெற்று வருவதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிம தலைமையில் கீழ் செயற்படும் புலனாய்வுப்பிரிவினருக்குக்கிடைத்த தகவல் அடிப்படையில்,

நேற்று பிற்பகல் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயப்படும் போதை ஒழிப்புப் பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது கள்ளுத்தவறணையில் சட்டவிரோதமான சூது விளையாட்டில் ஈடுபட்ட 5பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து சூது விளையாட்டிற்குப் பயன்படுத்திய ஒரு தொகைப் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

கரன்ட் இல்லாதபோது காதலை சொன்ன என் புருஷன் : அறந்தாங்கி நிஷாவின் காதல்!!

அறந்தாங்கி நிஷாவின் காதல்

நகைச்சுவையான பேச்சின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான அறந்தாங்கி நிஷா தனது காதல் கதை குறித்து மனம் திறந்துள்ளார். பள்ளிக்காலத்தில் தனது அத்தை மகனை காதலிக்க ஆரம்பித்த நிஷா, 5 வருடங்கள் கழித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

எங்கள் உறவினர் திருமணத்தில் அனைவரும் ஒன்றுசேர்ந்தபோது, கரன்ட் போயிருந்த நேரத்தில் எனது கையை பிடித்து நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கணும் என கூறினார் ரியாஸ். அதன்பிறகு, அவர் வெளிநாடு சென்றுவிட்ட பிறகு லேண்ட் லைன் மூலம் இருவரும் பேசி எங்களது காதலை வளர்த்தோம். ஒரு முறை இவருக்கு காதல் கடிதம் எழுதி அனுப்பினேன், அதில் ஐ லவ் யூ என்ற வார்த்தையை மட்டும் ரத்தத்தில் எழுதியிருந்தேன்.

இதைப்பார்த்து விட்டு ரியாஸ்…என்ன புள்ள கலர் ஸ்கெட்ச்ல எழுதினாய் என கேட்டார். அட போய்யா…உனக்காக ரத்தத்தை வீணாக்கிவிட்டேன் என கூறி கிண்டல் செய்தேன்,இப்படி ரத்த சிந்தி வளர்ந்த காதல் எங்களுடையது.

ரியாஸ் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் எனது அப்பா, என்னை அவருக்கு திருமணம் செய்துவைக்க தயங்கினார். பிறகு உறவினர்கள் உதவியுடன் எங்களது திருமணம் நடந்தது. எனது கணவர் எனக்கு அனைத்து உரிமைகளும் கொடுக்கிறார். எனது திறமையை வெளிக்காட்ட பக்கபலமாக இருக்கிறார் என்றார்.

ரியாஸ் பேசுகையில், திருமணமான நேரத்தில் எனக்கு வெளிநாட்டு வேலை இல்லாமப்போக, நிஷாதான் பட்டிமன்றத்துக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பிச்சாங்க. ரெண்டு வருஷம் கழிச்சு எனக்கு அரசு வேலை கிடைச்சது. இடைப்பட்ட காலத்துல எவ்வளவோ கஷ்டங்கள். நிஷா மாதிரி ஒரு மனைவி கிடைச்சது என் பாக்கியம் என்று நெகிழ்கிறார் ரியாஸ்.

மூன்று முறை தூக்கு மேடை வரை சென்று உயிர் பிழைத்து நபர் : இது ஒரு சிறை கைதியின் அனுபவம்!!

ஒரு சிறைக் கைதியின் அனுபவம்

மலாவி நாட்டில் ஒருவர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூன்றுமுறை ஏறத்தாழ தூக்கில் போடப்படும் நிலை வரை சென்று தப்பி கொண்ட, தனது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்துள்ளார். 1992ஆம் ஆண்டு. தெற்கு மலாவியில், ஒரு சிறிய கிராமத்தில் வளர்ந்த பைசன், தென்னாப்பிரிக்காவில் ஜோஹன்னஸ்பர்க் நகரில் காஸ் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

சிறுது காலத்திற்கு பின் சொந்த ஊர் திரும்பி அவர், சொந்தமாக நிலம் ஒன்று வாங்கி உள்ளார். ஐந்து பேரை வேலைக்கு அமர்த்தி, பழங்கள், கோதுமை, மக்காச்சோளம், மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றை சாகுபடி செய்தார். இந்நிலையில் அந்த சம்பவம் நிகழ்ந்தது. அவருடைய வேலையாட்களில் ஒருவரை, அருகில் வசித்தவர்கள் தாக்கியுள்ளனர். அதில் தொழிலாளி மிக மோசமாகக் காயம் அடைந்திருக்கிறார்.

உதவி இல்லாமல் அவரால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவரை கழிவறைக்கு அழைத்துச் செல்ல உதவி செய்த பைசன், கன மழையால் வழுக்கலாக இருந்த படிகளில் சென்றபோது, கீழே விழுந்து வேலையாளை கீழேவிட்டுவிட்டார். பிறகு மருத்துவமனையில் அந்தத் தொழிலாளி இறந்துவிட்டார். இதனால் பைசன் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இந்நிலையில், அருகில் வசித்தவர்கள் பைசனுக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சிஅளித்துள்ளனர்.
இது குறித்து பேசிய பைசன் ”தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பகுதிக்கு நீங்கள் போகலாம், உங்களை தூக்கில் போடுவதற்கான நேரம் வரும்வரையில் காத்திருக்க வேண்டும்,” என்று எனக்கு சொல்லும்போது, ஏற்கெனவே மரணித்துவிட்டதைப் போல உணர்ந்தேன்.

”அந்த சமயத்தில், தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு ஒருவர் மட்டுமே இருந்தார். தென்னாப்பிரிக்கரான அவர் அந்தப் பகுதியில் பல நாடுகளுக்குச் சென்று தூக்கு தண்டனையை நிறைவேற்றி வந்தார். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அவர் மலாவிக்கு வருவார். அந்த நேரத்தை அறிந்து கொள்ளும் கைதிகளில் சிலர் தப்பி ஓடிவிடுவார்கள்.”

பிற்பகல் ஒரு மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் தொடங்கும் என்றும், நீங்கள் ”பிரார்த்தனை செய்யத் தொடங்கலாம்” என்றும் பாதுகாவலர் ஒருவர் கூறினார்.

மாலை நான்கு மணிக்கு, தூக்கு தண்டனை நிறைவேற்றுபவர் தன் வேலையை நிறுத்தும் வரையில் அவர்கள் தொடர்ந்தனர். ஆனால் பட்டியலின் கடைசி வரை அவரால் தண்டனையை நிறைவேற்ற முடியவில்லை. பைசன் உள்ளிட்ட மூன்று பேர், அவர் திரும்பி வரும் வரையில் காத்திருக்க வேண்டியிருந்தது.

”அந்த இயந்திரத்தை இயக்கக் கூடியவர் அவர் ஒருவர் மட்டும்தான். அன்றைய நாள் சோர்ந்து போனதால் அடுத்த மாதம் வருகிறேன் என்று அவர் கூறிவிட்டதாகத் தெரிகிறது,” என்கிறார் பைசன்.

அடுத்த இரண்டு முறைகளும் அதைப் போலவே நடந்ததுள்ளது. பிறகு 2007ல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வழக்கு, எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.

பைசனை நீதிமன்றத்துக்கு திரும்பவும் அழைத்து வர வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கூறியபோது, முதல் அனுபவத்தால் பயந்து போயிருந்த அவர், ஆரம்பத்தில் அதற்கு எதிர்ப்பு காட்டியிருக்கிறார். ஆனால், பிறகு அவர் பிடிவாதத்தை விட்டு நீதிமன்றத்துக்குச் சென்றார். அவரை விடுதலை செய்வதாகவும், உடனடியாக அவர் வெளியே போகலாம் என்றும் நீதிபதி கூறியபோது அவர் அதிர்ச்சிக்கு உள்ளானார்.

2015ல் பைசனுக்கு மறு தீர்ப்பு கூறியபோது, அவர் நீதிமன்றம் செல்லவில்லை. ஆனால் அவர் உறவினர் ஒருவர் அங்கு இருந்தார். இந்தச் செய்தியை தொலைபேசி மூலம் பைசனின் தாயார் லூசியிடம் அவர் தெரிவித்துள்ளார். அவர் என்ன சொல்கிறார் என்பதை சிறிது நேரம் லூசியால் நம்ப முடியவில்லை. பிறகு “ஆட்டுக் குட்டியைப் போல துள்ளிக் குதித்தேன். என் மனம் மகிழ்ச்சியால் நிரம்பிவிட்டது” என்று லூசி கூறினார்.

குறைந்த பாதுகாப்பு உள்ள ஓர் இல்லத்துக்கு பைசன் அழைத்துச் செல்லப்பட்டார். 23 ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பிறகு, இயல்பான வாழ்வுக்கு ஏற்றவாறு அவரை தயார்படுத்திக் கொள்வதற்கு, புதிய தொழில் திறன்கள் கற்பிக்கப்பட்டன. ஏற்கெனவே 60 வயதை அவர் கடந்துவிட்டார். அந்த இல்லத்தில் இருந்தவர்களில் அதிக வயதானவர் இவராகத்தான் இருந்தார்.

இதே அனுபவத்தில் உள்ள மற்ற முன்னாள் கைதிகளுக்கு ஆலோசனைகள் கூறுவதற்காக, வார இறுதி நாட்களில் தன்னார்வலராக இப்போது அவர் சென்று வருகிறார் என்பதுஅவருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

திருமணம் முடிந்த 6 மாதங்களில் ரத்தவெள்ளத்தில் மிதந்த இளம்பெண்!!

ரத்தவெள்ளத்தில் மிதந்த இளம்பெண்

ஐதராபாத்தில் திருமணம் முடிந்த 6 மாதங்களில் இளம்பெண் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் மாநிலத்தில் சேர்ந்த நிவேதா என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக மென்பொருள் நிறுவன ஊழியர் ரகு பிரசாத் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் முடிந்ததிலிருந்தே தம்பதியினர் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவி வந்ததாக தெரிகிறது. சனிக்கிழமை இரவு மீண்டும் தம்பதியினருக்குள் குடும்ப விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த நிவேதா இரவு முழுவதும் சோகத்துடனே காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்பின் உச்சியிலிருந்து நிவேதா குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார் நிவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் ரகுபிரசாத்தின் பெற்றோர் கொடுமைபடுத்தியதால் தான் எங்களுடைய மகள் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என நிவேதாவின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டு வீட்டுக்குள் வந்த கணவனுக்கு இளம் மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி!!

இளம் மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி

இந்தியாவில் கணவர் கடைக்கு அழைத்து சென்று பானிப்பூரி வாங்கி கொடுக்கவில்லை என்பதால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் கோபால். இவர் மனைவி அஞ்சனா. இரு தினங்களுக்கு முன்னர் அஞ்சனா தனது கணவரிடம், தனக்கு சாப்பிட பானிப்பூரி வேண்டும் எனவும் தன்னை கடைக்கு அழைத்து செல்லுமாறும் கூறியுள்ளார்.

ஆனால் அந்த சமயத்தில் தனக்கு வேலை இருப்பதாக கூறிய கோபால் அடுத்த நாள் கடைக்கு அழைத்து செல்வதாக அஞ்சனாவிடம் கூறினார். இது தொடர்பாக கணவன், மனைவி இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. பின்னர் வீட்டின் கீழ் தளத்துக்கு சென்று தண்ணீர் பிடித்து வருமாறு கோபாலிடம் அஞ்சனா கூறினார்.

இதையடுத்து தண்ணீர் பிடித்து கொண்டு வீடு இருக்கும் முதல் மாடிக்கு கோபால் வந்த போது அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. காரணம், தனது புடவையால் அஞ்சனா மின் விசிறியில் தூக்கில் சடலமாக தொங்கியபடி கிடந்தார்.

இதை பார்த்து கதறிய கோபால் உடனடியாக பொலிசுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அஞ்சனாவின் சடலத்தை கைப்பற்றிவிட்டு இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

16 வயதே ஆன பள்ளி மாணவன் மாரடைப்பால் மரணம் : அதிர்ச்சியில் சக மாணவர்கள்!!

மாணவன் மாரடைப்பால் மரணம்

இந்தியாவில் தேர்வு எழுதி கொண்டிருந்த 16 வயது மாணவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் கோபி ராஜூ (16). பனிரெண்டாம் வகுப்பு மாணவரான இவர் நேற்று தனது ஆண்டு தேர்வை வகுப்பறையில் உட்கார்ந்து எழுதி கொண்டிருந்தார்.

அப்போது திடீரென கீழே சுருண்டு விழுந்தார் கோபி. இதை பார்த்து பதறிய சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோபியை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.

ஆனால் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. வெறும் 16 வயதே ஆன மாணவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சக மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிறந்து ஒரு மாதத்திற்கு பிறகு முதல் முறை சந்தித்த இரட்டைக் குழந்தைகள் செய்த ஆச்சரிய செயல் : அபூர்வ புகைப்படம்!!

அபூர்வ புகைப்படம்

அவுஸ்திரேலியாவில் குறை பிரசவத்தில் பிறந்து, பிறந்ததும் பிரிக்கப்பட்ட இரட்டைக் குழந்தைகள் ஒரு மாதத்திற்குப்பின் சந்தித்த நிலையில், அவை செய்த செயல் ஒன்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Ann LePoon என்னும் இளம்பெண் கர்ப்பமுற்றபோது, 10ஆவது வாரத்தில் அவரது கர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகள் இருப்பது தெரிய வந்ததோடு, அவை இரண்டும் ஒரே பனிக்குடத்திற்குள் இருப்பதும் தெரியவந்தது.

சாதாரணமாக 37 முதல் 42 வாரங்களில் பிரசவம் ஏற்படும் நிலையில், 29 வாரங்கள் இருக்கும்போதே Ann இரட்டைக் குழந்தைகளை பிரசவித்தார். குழந்தைகள் இருவரும் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று சொல்லப்பட்ட நிலையிலும், இரண்டு குழந்தைகளும் தீவிர சிகிச்சைப்பிரிவில் வைத்து மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டனர்.

மருத்துவர்களின் கணிப்பையும் மீறி மிக நேர்த்தியாக வளர்ந்த ஒலிவியா, ஜோ, என பெயரிடப்படிருந்த அந்த இரண்டு குழந்தைகளும் ஒரு மாதத்திற்குப்பின் தன் தாயிடம் கொண்டு வரப்பட்டார்கள். முதலில் ஒலிவியாவை Ann மார்பில் கிடத்திய தாதியர், பின்னர் ஜோவை அவர் மார்பில் கிடத்தியபோதுதான் அந்த ஆச்சரிய சம்பவம் நடந்தது.

ஜோ தன் கையை நீட்டி தன் அருகில் இருந்த ஒலிவியாவை அணைத்துக் கொண்டாள். ஒரு மாதத்திற்கு முன் சந்தித்த குழந்தைகள் இருவரும், மீண்டும் சந்தித்ததும் ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டதைக் கண்டதும் தன்னால் கண்ணீரை அடக்க முடியாமல் ஓவென அழுதுவிட்டதாகத் தெரிவிக்கிறார் Ann. Ann குடும்பம் வெளியிட்டுள்ள புகைப்படத்தைப் பார்க்கும்போதே கட்டியணைத்துக் கொண்டிருக்கும் சகோதரிகள் இருவருக்கும் உள்ள பாசப்பிணைப்பை நிச்சயம் நன்கு உணர முடிகிறது.

பிறந்த நொடியில் பச்சிளம் குழந்தை செய்த நெகிழ்ச்சி செயல் : அனைவரையும் கவர்ந்த புகைப்படம்!!

அனைவரையும் கவர்ந்த புகைப்படம்

வியட்நாம் நாட்டில் பிறந்த பச்சிளம் குழந்தை மருத்துவரின் ஆடையை இறுக்கமாக பிடித்துக்கொண்ட புகைப்படம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இந்த புகைப்படத்தை Phương Châu International மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அதாவது, குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்தவுடன் தன்னை பிரசவம் பார்த்த மருத்துவரின் ஆடையை இறுக பற்றிக்கொண்டது. இதனை புகைப்படம் எடுத்த மருத்துவமனை நிர்வாகம் தங்களது பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சுமார், 1,000 பேரை இந்த புகைப்படம் கவர்ந்துள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், தான் பிறந்தது இந்த மருத்துவருக்கு பிடிக்கவில்லை என்று குழந்தை கூறுகிறது என கிண்டல் செய்துள்ளனர்.

மேலும், தனக்கு பசிக்கிறது என்றும் உணவு வேண்டும் என கேட்கிறது என கிண்டல் செய்ததோடு மட்டுமல்லால் ‘Baby Strong’, ‘Boss Baby என செல்லப் பெயர்களை வைத்துள்ளனர்.

3 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்ட கோடீஸ்வரர் : பெற்றோர் செய்த கொடுமை!!

பெற்றோர் செய்த கொடுமை

ஏமன் நாட்டு மக்கள் உணவு மற்றும் இருப்பிடத்திற்காக அவதிப்பட்டு வருகின்ற நிலையில் 3 வயது சிறுமியை அவரது பெற்றோர் உணவு மற்றும் இருப்பிடத்திற்காக பெரிய கோடீஸ்வரருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

oxfam என்ற தொண்டு நிறுவனம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் இருந்து ஏமனில் உள்நாட்டு யுத்தம் நடந்து வருவதன் காரணமாக உணவுப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

உணவுப்பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக மோசமான செயல்களை செய்யும் அளவுக்கு மக்கள் ஆளாகிறார்கள். சமீபத்தில் 3 வயது சிறுமியை கோடீஸ்வரர் ஒருவருக்கு திருமணம் செய்துகொடுத்து அதற்கு பதிலாக இருப்பிடம் மற்றும் உணவுப்பொருட்களை அச்சிறுமியின் பெற்றோர் வாங்கியுள்ளனர். தங்களின் குழந்தைகளின் வாழ்க்கையை பணயம் வைத்து வாழும் நிலைக்கு அங்குள்ள மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் என தெரியவந்துள்ளது.

செல்பி எடுக்க வந்த நடிகை கஸ்தூரி : மேடையிலேயே கோபமாக திட்டிய கார்த்தி!!

கோபமாக திட்டிய கார்த்தி

நடிகர் சிவகுமார் அவர்கள் செல்பியால் பல சர்ச்சைகளில் சிக்கினார். இரண்டு முறை வெவ்வேறு இடத்தில் அவரிடம் அனுமதியின்றி செல்பி எடுக்க வந்த ரசிகர்கள் மொபைலை தட்டிவிட்டுள்ளார்.

அந்த வீடியோக்கள் வைரலாகி பின் பிரச்சனையும் ஏற்பட்டது. அண்மையில் ஜுலை காற்றில் பட நிகழ்ச்சியில் கஸ்தூரி உங்க அப்பா இல்லை அதனால் அவசரமாக உங்களுடன் ஒரு செல்பி எடுத்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

உடனே கார்த்தி, இது தேவையில்லாத ஒரு விஷயம், கேட்டு புகைப்படம் எடுப்பது என்பது யாருக்கும் தெரியவில்லை. மரியாதையாக கேட்டு எடுப்பது என்பது யாருக்கும் தெரியவில்லை என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

மலசலகூடத்தில் ஆடையை மாற்றிய நடிகை : அதிர்ச்சியான படக்குழு!!

அதிர்ச்சியான படக்குழு

நடிகர் கதிர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சத்ரு. ஷ்ருஷ்டி டாங்கே ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் பொன்வண்ணன், நீலிமா, சுஜா வாருணி போன்றோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

விரைவில் வெளியாக இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அவ்விழாவில் இயக்குனர் நவீன் நஞ்சுதன் பேசுகையில், இப்படத்தில் கதிர் போலீசாக நடித்துள்ளார். இப்படம் சஸ்பென்ஸ் திரில்லர் படம்.

படம் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை விறுவிறுப்பாகச் செல்லும். சிருஷ்டி டாங்கே ஷூட்டிங்கின் போது அளித்த ஒத்துழைப்பை மறக்கமுடியாது. பாடல் காட்சிக்காக நாயகி 20 காஸ்ட்யூம் மாத்தவேண்டியிருந்தது. புதுச்சேரி கடற்கரை பப்ளிக் டாய்லெட்டில் காஸ்ட்யூம் மாற்றி, நடித்தார் என்றார்.