இலங்கையின் நட்சத்திர வீரர் சனத் ஜெயசூரியவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

சனத் ஜெயசூரியவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான சனத் ஜயசூரியவிற்கு இரண்டு வருடங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கட் சபையின் ஊழல் ஒழிப்பு சட்டத்தின் இரண்டு சரத்துக்களை மீறியமைக்காக, சர்வதேச கிரிக்கெட் சபையால் தடை உத்தரவு இன்று விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கட் சபையின் ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 2.4.6 மற்றும் 2.4.7 ஆகிய சரத்துக்களை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டுக்களை சர்வதேச கிரிக்கட் சபையின் ஊழல் எதிர்ப்பு குழுவின் முன்னிலையில் சனத் ஜயசூரிய ஒப்புக்கொண்டுள்ளார்.

ஊழல் விசாரணைகளுக்கு ஆதரவு வழங்காமை, சாட்சிகளை வழங்காமை, அந்த விசாரணைகளுக்காக முன்னிலையாகாமை, தடை ஏற்படுத்தியமை மற்றும் குறித்த ஆவணங்களை அழித்தமை ஆகியவை சனத் ஜயசூரிய மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆகும். எனவே சனத் ஜயசூரியவிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு கிரிக்கட் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நடிகை ஸ்ரீதேவியின் புடவை இத்தனை லட்சத்திற்கு விலை போனதா?

ஸ்ரீதேவி

தமிழ் படங்களில் அறிமுகமாகி இந்தி சினிமா வரை சென்று கலக்கியவர் ஸ்ரீதேவி. இந்திய அளவில் முன்னணி நடிகையாக விளங்கிய ஸ்ரீதேவி இந்தி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 24 ஆம் திகதி ஸ்ரீதேவி துபாயில் உயிர் இழந்தார். இதையொட்டி கடந்த பிப்ரவரி 14 ஆம் திகதியன்று சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள போனி கபூர் இல்லத்தில் ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜித் குமார், அவரது மனைவி ஷாலினி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நேற்று ஸ்ரீதேவியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி ஸ்ரீதேவியின் விருப்பமான புடவைகளில் ஒன்றான கோட்டா வகை புடவையை ஏலத்துக்கு விட்டு, அதில் கிடைக்கும் பணத்தைத் தொண்டு நிறுவனத்துக்கு வழங்க ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரும், அவரது குடும்பத்தினரும் முடிவு செய்திருந்தனர்.

இந்த ஏலத்தை நடத்து வதற்கு பரிசேரா இணைய தளத்தை ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் தேர்வு செய்தனர். ஏலத்தில் புடவைக்கு ஆரம்ப விலையாக ரூ.40,000 நிர்ணயிக்கப்பட்டது. இந்த புடவைக்கு அதிகபட்சமாக ரூ.1.30 லட்சத்துக்கு விலை கேட்கப்பட்டது. இந்த விலையே இறுதி செய்யப்பட்டு விட்டதாக இணையதளம் தெரிவித்துள்ளது.

இந்த ஏலத்தில் கிடைக்கும் பணத்தை ‘கன்சர்ன் இந்தியா பவுண்டே‌ஷன்’ என்ற தொண்டு நிறுவனத்துக்கு வழங்க ஸ்ரீதேவி குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். பெண்கள், குழந்தைகள், முதியோர், ஏழைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக இந்தப் பணம் பயன் படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் 248 பாடசாலைகள் மூடப்படக்கூடிய அபாயம்!!

248 பாடசாலைகள் மூடப்படக்கூடிய அபாயம்

வட மாகாணத்தில் சுமார் 248 பாடசாலைகள் மூடப்படக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக ஐம்பது மாணவர்களுக்கும் குறைந்த அளவில் கல்வி கற்று வரும் அரசாங்க பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இந்த ஆண்டின் இறுதியில் குறித்த பாடசாலைகள் மூடப்படும் என வட மாகாண கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு மூடப்படும் பாடசாலைகளின் மாணவர்கள் அருகாமையில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு மாற்றப்படுவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

50 மாணவர்களை விடவும் குறைந்த பாடசாலைகளை பராமரிப்பதற்கு பாரியளவு செலவிடப்பட்ட போதிலும் அதற்கான கற்பித்தல் பிரதிபலன்கள் கிடைக்கப் பெறுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மையில் கல்வி அமைச்சில் நடைபெற்ற கூட்டமொன்றில் இவ்வாறு 50 இற்கும் குறைந்த மாணவர்களை கொண்ட பாடசாலைகள் பற்றி கலந்துரையாடப்பட்டதாகவும், ஏனைய மாகாணங்களிலும் இவ்வாறான பாடசாலைகள் காணப்படுவதாகவும் அவற்றையும் மூடுவது குறித்து இணங்கப்பட்டுள்ளதாகவும் வட மாகாண கல்வித் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவிரவாதிகள் மீது இந்தியா கடும் தாக்குதல் : 300 தீவிரவாதிகள் பலி!!

300 தீவிரவாதிகள் பலி

இந்திய பாகிஸ்தான் எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள முகாம்கள் மீது இந்திய விமானப்படை இன்று அதிகாலை தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி வழங்கும் வகையில் இந்திய இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலின் போது சுமார் 300 தீவிரவாதிகள் சாம்பலாக்கப்பட்டிருக்கலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் இராணுவ வீரர்கள் சென்ற வாகனம்மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில், 40 இற்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டியது.

இந்நிலையில், இன்று அதிகாலை புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமானப்படை பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்திய விமானப்படைக்குச் சொந்தமான 12மிராஜ் ரக போர் விமானங்களில் அதிகாலை 3.30மணிக்கு எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கும் முகாம்கள்மீது குண்டு மழை பொழிந்துள்ளது.

இந்தத் தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் முழுமையாக அழிக்கப்பட்டதாக விமானப்படையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிப்பதாக, ஏ.என்.ஐ ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்தப் பதிலடி தாக்குதலில், சுமார் 1000 கிலோ குண்டுகள் பல்வேறு முகாம்கள்மீது வீசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய விமானங்கள் எல்லை தாண்டிப் பறந்ததைப் பாகிஸ்தானும் உறுதிசெய்துள்ளது.

இது தொடர்பாகப் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்திய விமானப்படை எல்லை கட்டுப்பாட்டை மீறியதாகக் குறிப்பிட்டிருக்கிறார். எனினும், இந்தியப் பாதுகாப்புத்துறையோ இந்திய விமானப்படையோ இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.

பெண் மீது கொண்ட முறையற்ற காதலால் நடந்த கொடூரம் : திடுக்கிடும் உண்மைச்சம்பவம்!!

திடுக்கிடும் உண்மைச்சம்பவம்

அம்பாறை உஹன திஸ்ஸபுர பகுதியில் 1968 ஆம் ஆண்டு பிறந்த 51 வயதுடைய நபரே வசந்தன். இவர் தனது கல்வியை முழுமையாக நிறைவேற்றாத நபர். தன்னுடைய சீவனோபாயத்திற்கு விவசாயமே செய்து வந்துள்ளார்.

சிறிது காலம் சென்ற பின்னர் இராணுவத்தில் இணைந்துக்கொள்கின்றார். இராணுவத்தில் கடமையாற்றிக்கொண்டிருக்கையில் திருமணமும் செய்துக்கொள்கின்றார். சிறிது காலம் சென்றதும் வசந்தன் 3 பிள்ளைகளுக்கு தந்தையாகின்றார்.

தனது பிள்ளைகளின் நலனுக்காக இராணுவத்திலிருந்து விலகி சாதாரண வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வீடு திரும்புகிறார். வசந்தன் இராணுவத்தில் கடமையாற்றிய காலத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீடு ஒன்று காணப்படுகின்றது.

குறித்த வீட்டில் வசந்தன் அவரது மூன்று பிள்ளைகள் மற்றும் மனைவி ஆகியோர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். சிறிது காலம் சென்றதும் அந்த வீட்டினை விற்கின்றார் வசந்தன். பின்னர் வெயாங்கொடை பகுதிக்கு சென்று அங்கு வீடொன்றினை விலைக்கு வாங்கி வசிக்கின்றனர்.

குடும்ப செலவீனங்களுக்காக வெயாங்கொடையிலும் விவசாயமே செய்கின்றார் வசந்தன். அவரின் விவசாய உற்பத்திகளுக்கு உதவியாக வசந்தனுக்கு உதவியாக வில்சன் என்ற நபர் ஒருவர் உதவி புரிந்து வருகின்றார்.

வசந்தன் மற்றும் வில்சன் இருவரும் ஒருவருக்கொருவர் சிறந்த நட்பினை பேணி வந்தனர். இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுப்பதில்லை… வில்சன் குடும்பத்தினருக்கு வசந்தன் விருந்தளிப்பதும் வசந்தன் குடும்பத்தினருக்கு வில்சன் விருந்தளிப்பதுமாக தங்களது நட்பினை தொடர்ந்தனர்.

இந்நிலையில் வில்சனின் மனைவி மீது வசந்தன் காதல் கொள்கிறார். வசந்தனின் பிள்ளைகளும் சமூகத்திற்கு அடையாளம் காண்பிக்கும் வகையில் நன்கு வளர்ந்தவர்கள். இந்நிலையில், வசந்தன் மற்றும் வில்சனின் மனைவி ஆகிய இருவருக்கும் இடையில் காதல் அதிகமாகியது.

வழமையை போன்று ஒரு பௌணர்மி தினம் வசந்தன் வெள்ளை நிற ஆடை அணிந்து வெளியில் செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு தொலைபேசி அழைப்பொன்று வருகின்றது…. கையடக்க தொலைபேசி ஒலிக்கின்றது.

அந்த சந்தர்ப்பத்தில் வசந்தனின் மனைவியும் அருகில் நிற்கின்றார்… திடீரென ‘ உங்களுடைய போனை ஆன்சர் பண்ணுங்க… அவள்தான் கோல் எடுக்கிறாள்… கோயிலுக்கு போகத்தானே போய் வாருகங்கள்… நான் இருந்தால் என்ன…? எடுத்து பேசுங்கள்’ என்று வசந்தனின் மனைவி உயிர்நீத்த குரலில் உலறியபடி அவ்விடம் விட்டு நகர்கின்றாள்.

சுத்தமான ஆடை அணிந்து கோயிலுக்கு செல்ல புறப்பட்ட வசந்தன் தன்னுடைய உந்துருளியை எடுத்துகொண்டு வில்சனின் வீட்டுக்கு சென்று அவரின் மனைவியை அழைத்தவாறு உந்துருளியிலிருந்து இறங்க முயற்சிக்கின்றார்.

அப்பொழுது எதிர்பாராத வகையில் முகத்தை மூடிக்கொண்டு நபர் ஒருவர் வசந்தனை நோக்கி ஓடி வருகின்றார். வசந்தன் உந்துருளியிலிருந்து இறங்குவதற்கு முன்னர் உடலில் பல பாகங்களிலும் சரமாரியாக குத்துகின்றார்.

பலத்த கத்தி குத்திற்கு இலக்கான வசந்தன் கீழே சரிகின்றார்… வில்சனின் மனைவி வெளியே வருகை தந்து பார்த்த பின்னர் வீதியில் செல்லும் பல வாகனங்களை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கின்றார்.

பயனளிக்கவில்லை… சிறிது நேரம் சென்றதும் முச்சக்கர வண்டி ஒன்று நிறுத்தப்படுகின்றது. அதில் வசந்தனை ஏற்றிக்கொண்டு வைத்தியசாலை செல்கிறாள் வில்சனின் மனைவி.
எனினும் செல்லும் வழியிலேயே உயிர்துறக்கின்றார் வசந்தன்…

வில்சனின் மனைவியுடன் வசந்தன் தகாத உறவினை பேணி வருகின்றார் என வில்சன் கேள்வியுற்றதை தொடர்ந்து வில்சன் இதற்கு முன்னர் வசந்தனின் முச்சக்கர வண்டியையும் தீக்கிரையாக்கியுள்ளார். இந்நிலையில் வசந்தனை குத்திய நபரும் வில்சனாகவே இருக்க வேண்டும் என காவல் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஓவியா!!

இன்ப அதிர்ச்சி கொடுத்த ஓவியா

பிக்பாஸ் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் தெரிந்த முகமாக மாறியவர் ஓவியா. அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த போதே ஆர்மி எல்லாம் ஆரம்பித்து ரசிகர்கள் அமர்களப்படுத்தினர்.

அவர்களின் அன்பு இன்னும் கூட துளியும் குறையாமல் இருக்கும் நிலையில் ஓவியா 90 ML என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த வாரம் வெளியாகவுள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் பேசிய ஓவியா, எனது செல்போன் நம்பரை அதிகமானோர் கூகுளில் தேடுவதாக கேள்விப்பட்டேன். எனக்கும் உங்களிடம் பேச ஆசையாக தான் உள்ளது.

அதனால் கண்டிப்பாக விரைவில் எனது ரசிகர்களுக்காக (ரசிகர்களுக்காக என சொல்ல கூடாது எனது நண்பர்களுக்காக) மீட்டிங் மாதிரி ஒன்றை தயார் செய்து அழைக்கிறேன் வாருங்கள். பேசுவோம் என அசால்ட்டாக கூறினார்.

காட்டுக்குலிருந்து மீட்கப்பட்ட இராட்சத திமிங்கிலம் : அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய சம்பவம்!!

அமேசன் காட்டுப்பகுதியில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தக்கூடிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

சுமார் ஒரு வயதுடைய 36 அடி நீளமான இளம் திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில் அமேசன் காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இத்திமிங்கிலம் பெரும்பாலும் இறந்த நிலையில் கடல் அலையினால் காட்டுக்குள் அடித்து வரப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது.

பாடசாலை மாணவியை துஸ்பிரயோகம் செய்த அதிபர்!!

துஸ்பிரயோகம் செய்த அதிபர்

17 வயதான பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குளியாபிட்டி பிரதேச பிரபல பாடசாரலை ஒன்றின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவி காவற்துறையில் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை அதிபரினால் பாடசாலையினுள் வைத்து இந்த துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

கொழும்பில் தெற்காசியாவின் அதிசயம் : வெளியானது பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள்!!

தெற்காசியாவின் அதிசயம்

தெற்காசியாவின் உயர்ந்த கட்டடம் என அழைக்கப்படும் கொழும்பு தாமரைக் கோபுரத்தின் பிரமிக்க வைக்கும் உள்ளக புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. 1153 அடிகள் உயரம் கொண்ட தாமரை கோபுரத்தின் உட்புற பகுதிகள் நட்சத்திர ஹோட்டல் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கான புகைப்படங்களை அரச சார்பு சமூக வலைத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 25ஆம் திகதி தாமரை கோபுரம் திறப்படவிருந்த போதிலும் ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயம் காரணமாக அந்த நடவடிக்கை தடைப்பட்டது. இந்நிலையில் தாமரைக் கோபுரத்தின் செயல்பாடுகள் அனைத்தும் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய அடுத்த மாதம் இறுதியில் தாமரை கோபுரத்தின் திறப்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தெற்காசியாவில் அதிசயமிக்க கட்டடமாக தாமரை கோபுரம் அமைந்துள்ளது. இதனை நிர்மாணிக்க சீன வங்கியொன்று 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியாக வழங்கியுள்ளது.

பிரமாண்டமிக்க தாமரை கோபுரத்தில் தொலைத்தொடர்பாடல் நிலையங்கள், அருங்காட்சியகம், உணவகங்கள், அங்காடிகள், மாநாட்டு மண்டபங்கள், 400 பேர் அமரும் கேட்போர் கூடம், 1,000 இருக்கைகள் கொண்ட அரங்கம், ஆடம்பர விடுதிகள், வாகன தரிப்பிடம் உட்பட பல்வேறு சிறப்பம்சங்கள் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் விரைவில் அமுலுக்கு வரும் புதிய விதிமுறை!!

புதிய விதிமுறை

இலங்கையில் பொது போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் பேருந்துகள் தொடர்பான புதிய விதிமுறை விரைவில் அமுலாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் குறித்த பேருந்துகளில் ஒலிக்கும் பாடல்கள் மற்றும் ஒலியின் அளவு தொடர்பிலேயே புதிய நடைமுறை கொண்டு வரப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொது போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் பேருந்துகளில் ஒலிக்கவிடப்படக்கூடிய பாடல்களை தெரிவு செய்வதற்கான கலைஞர்கள் குழுவொன்றையும் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்த புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்த தவறும் பேருந்து நடத்துனர்கள் மற்றும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

கொழும்பிலிருந்து யாழ். சென்ற பேருந்து கோர விபத்து : ஒருவர் பலி : பலர் படுகாயம்!!

கோர விபத்து

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பேருந்தொன்று ஏ9 வீதியின் மாங்குளம் பகுதியில் வைத்து இன்று அதிகாலை விபத்திற்கு இலக்காகியுள்ளது. இந்த சம்பவத்தில் சாரதியின் உதவியாளர் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் காயமடைந்த மூன்று பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சிலர் சிறு காயங்களுக்கு இலக்காகியுள்ளனர்.

தரித்து நின்ற டிப்பர் வாகனமொன்றுடன் மோதியே பேருந்து விபத்திற்கு இலக்காகியுள்ளது. இதேவேளை அதிக வேகமே விபத்திற்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், விபத்தில் சிக்கியோரை மீட்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

விபத்தில் சிக்கிய பயணிகள் சம்பவம் தொடர்பில் கூறுகையில், சாரதி வவுனியா பகுதியில் வைத்து பேருந்தை மோசமாக திருப்பியதை அவதானித்தோம். அதன் பின்னர் அவர்கள் சத்தமாக சிரித்து கதைத்தனர். அதிக வேகமாக வாகனத்தை செலுத்தினர்.

பேருந்து வீதியில் தரித்து நின்ற டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. டிப்பர் வாகனமானது வீதியின் மறு பக்கத்திலுள்ள சிறு பற்றைக்குள் சென்றுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

 

அடுத்த இரண்டு நாட்களுக்கு வானிலையில் மாற்றம்!!

வானிலையில் மாற்றம்

அடுத்த இரண்டு நாட்களுக்கு நாட்டின் தென்மேற்கு பகுதியில் (குறிப்பாக தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில்) மழையுடன் கூடிய வானிலை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இன்றைய வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“மேல், சப்ரகமுவ, மத்திய, தென், மற்றும் ஊவா மாகாணங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 150 மி.மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் கேகாலை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பல தடவைகள் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, களுத்துறை, மொனராகலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பலத்த மின்னல் தாக்கத்திற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.”

இலங்கையில் நடந்த அபூர்வ சத்திர சிகிச்சை : பெண்ணில் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம்!!

அபூர்வ சத்திர சிகிச்சை

பதுளை வைத்தியசாலையில் அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்று முதல் முறையாக நோயாளி ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நோயாளிக்கு இரண்டு சீறுநீரகத்திலும் காணப்பட்ட 6 கற்கள் வயிற்றை வெட்டாமல் நீக்கப்பட்டுள்ளது. 4 மில்லிமீற்றர் நவீன இயந்திரம் ஒன்றின் மூலம் சிறுநீரகத்திற்கு சேதம் ஏற்படாத வகையில் இந்த கற்கள் நீக்கப்பட்டுள்ளன.

குறித்த கற்கள் தூளாக்கப்பட்டு (PCNL முறை) 3 சத்திர சிகிச்சைகள் ஒரே முறையில் மேற்கொள்ளப்பட்ட அரிய சந்தர்ப்பம் பதுளை வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்றுள்ளது. 48 வயதான பெண் ஒருவரே இந்த விசேட சத்திர சிகிச்சைக்கு முகம் கொடுத்துள்ளார். சத்திர சிகிச்சையின் பின்னர் நோயாளி ஆராக்கியமாக இருப்பதாக விசேட வைத்தியர் தெரிவித்துள்ளார்.

மாற்று ஆடை கூட இல்லை : கல்நெஞ்சையும் கரைய வைக்கும் ஒரு தாயின் பாசப்போராட்டம்!!

ஒரு தாயின் பாசப்போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 11 பிள்ளைகளை பெற்றெடுத்து கணவர் இல்லாமல் தனி ஆளாக பிள்ளைகளை வளர்த்து, அவர்களுக்கு திருமணம் செய்து வைத்த ஒரு தாய் இன்று கவனிக்க யாருமின்றி மாற்றுவதற்கு ஒரு ஆடை கூட இல்லாமல் இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

80 வயதான கோலம்மாளுக்கு மொத்தம் 11 பிள்ளைகள். இதில் 4 பிள்ளைகள் இறந்துவிட்டதையடுத்து 7 பிள்ளைகளையும் வளர்த்துள்ளார். 40 ஆண்டுகளுக்கு முன்னர் கோலம்மாளின் கணவர் இறந்துவிட்ட, தனது 7 பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு வளர்த்து அவர்களுக்கு வெவ்வேறு இடங்களில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

ஆனால், பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்ற பழமொழியை இந்த 7 பிள்ளைகளும் நிரூபித்துவிட்டனர். பிள்ளைகள் அனைவரும் கைவிட்ட நிலையில் தனது வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார். நோய்வாய்ப்பட்டு கிடந்த அவரை மீட்டு அருகில் வசிப்பவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், மகன் ஒருவருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து தனது தாயை வீட்டுக்கு அழைத்து சென்ற மகன், சில நாட்கள் வைத்திருந்துவிட்டு தனது தாயிடம் இருந்த பணம் மற்றும் பொருட்களை வாங்கிகொண்டு மீண்டும் தனியாக விட்டுள்ளார்.

படுத்த படுக்கையில், மாற்றுவதற்கு வேறு ஆடை கூட இல்லாமல் அனாதையாக இவர் தனது வீட்டில் படுத்திருக்கிறார். கோலம்மாளின் இந்த நிலை, அருகில் இருப்பவர்களுக்கு வேதனையை ஏற்படுத்தினாலும், பெற்ற பிள்ளைகள் கண்டுகொள்ளவில்லை.

அவுஸ்திரேலியாவிலிருந்து வீடு திரும்பிய பிரித்தானிய பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

அவுஸ்திரேலியாவில் சுற்றுலா முடித்துவிட்டு வீடு திரும்பிய பிரித்தானிய பெண், தன்னுடைய பையில் ஒரு பாம்பு இருப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மோய்ரா பெல்லால் என்கிற ஸ்காட்லாந்து பெண்மணி தன்னுடைய கோடை விடுமுறையை கழிப்பதற்காக, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தன்னுடைய மருமகனுடைய வீட்டிற்கு சென்றுள்ளார்.

அவருடைய மருமகன் ஏர்லி மற்றும் அவரது மனைவி சாராவுடன் நாட்களை கழித்த அவர், கடந்த வெள்ளிக்கிழமையன்று வீடு திரும்பியுள்ளார். தன்னுடைய பைகளில் இருந்த பொருட்கள் அனைத்தையும் வெளியில் எடுத்து வைக்கும் வேளைகளில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்பொழுது அவருடைய காலனியில் ஒரு பாம்பு போன்ற உருவத்தினை பார்த்துவிட்டு, பயமுறுத்துவதற்காக ஏர்லி தம்பதியினர் தான் விளையாட்டு பாம்பை வைத்திருக்க வேண்டும் நினைத்துள்ளார்.

அதன் மீது கை வைக்கும் போது அசைவதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து வரவழைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் பாம்பினை பிடித்து கிளாஸ்கோவில் உள்ள உயிரியல் பூங்காவில் விட்டனர். அதிர்ஷ்டவசமாக அந்த பாம்பு விஷத்தன்மை இல்லாமல் இருந்தது எனவும் வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுபவை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலிய அழகி போட்டியில் தேசிய அளவில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்!!

MRS கேலக்சி

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற MRS கேலக்சி என்ற அழகி போட்டியில் தமிழக பெண் பெனிட்டா சக்தி தெரிவாகியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் MRS கேலக்சி ஆஸ்திரேலியா அழகி போட்டிகள் நடக்கும். அவுஸ்திரேலியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் பெண்கள் தெரிவு செய்யப்பட்டு இறுதி போட்டியில் பங்கேற்பார்கள்.

அவுஸ்திரேலியாவின் அடிலெயிட் மாநிலத்தில் இருந்து தேசிய அளவில் இறுதி போட்டிக்கு தெரிவாகியிருக்கிறார் பெனிட்டா சக்தி. தமிழகத்தின் மதுரையை பிறப்பிடமாக கொண்ட பெனிட்டா, கடந்த 7 வருடங்களாக அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். அங்கிருக்கும் தனியார் வங்கியில் கடந்த 3 வருடங்களாக பணியாற்றி வருகிறார்.

அழகிப்போட்டியில் தேசிய அளவில் தெரிவாகியிருப்பதால் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு போட்டிக்காக முழு ஈடுபாட்டுடன் தன்னை தயார்படுத்தி வருகிறார் பெனிட்டா.

என் கணவர் எனக்கு உதவியாக இருப்பதால் என்னால் இந்த அளவுக்கு சாதிக்க முடிகிறது, பல தடைகளை கடந்து பெண்கள் சாதிக்க வேண்டும், அப்படி சாதித்தால் நிச்சயம் உலகம் உங்களை திரும்பி பார்க்கும் என கூறுகிறார் பெனிட்டா. வரும் ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் MRS கேலக்சி அவுஸ்திரேலியா 2019 நடைபெற உள்ளது.