மட்டக்களப்பில் இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு!!

இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு

மட்டக்களப்பு – ஆயித்தியமலை, மகிழவெட்டுவான் கற்குடா பிரதேசத்தில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கிணற்றுக்குள் வீழ்ந்த நிலையில் இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. 49 வயதுடைய கந்தக்குட்டி நவரெட்ணம் என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – வந்தாறுமூலை, பிரதான வீதியை அண்டியுள்ள கடையொன்றிலிருந்து மற்றுமொரு சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் 25 வயதுடைய அரசமணி தனூஷியன் என்பவருடையது என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் பல பெண்களை ஏமாற்றிய திருமணம் செய்த இளைஞனுக்கு நேர்ந்த கதி!!

இளைஞனுக்கு நேர்ந்த கதி

இலங்கை பேஸ்புக் மூலம் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். தெவிநுவர பிரதேசததில் போலி பேஸ்புக் கணக்குகளை தயாரித்து பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞனிடம் விசாரணைகளை மேற்கொள்வதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேஸ்புக் மூலம் நட்புறவை ஏற்படுத்தி அவர்களுடன் சட்டரீதியான திருமணம் செய்த 4 பேர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அவர்களில் ஒரு பெண் இது தொடர்பில் அறிந்து விவாகரத்து செய்து வேறு ஒருவரை திருமணம் செய்ய தயாராகி உள்ளார். இதன்போது புதிதாக திருமணம் செய்யும் நபரிடம் முன்னைய திருமண புகைப்படங்களை வெளிப்படுத்துவதாகவும் அதனை மறைக்க வேண்டும் என்றால் 5 லட்சம் ரூபாய் கப்பமாக வழங்குமாறு குறித்த இளைஞன் கோரியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற்கொள்ள செல்ல சென்ற போது, ஏனைய திருமணங்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த 4 திருமணத்திற்கு மேலதிகமாக நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் பல திருமணங்களை செய்திருக்க வாய்ப்புகள் உள்ளதாக பொலிஸார் சந்தேக்கின்றனர்.

அந்த இளைஞன் தனது அழகான தோற்றத்திலான புகைப்படங்களை பயன்பபடுத்தி பேஸ்புக் கணக்கில் பல பெண்களை ஏமாற்றியுள்ளார் என தெரியவந்துள்ளது. பல திருமணத்தின் கீழ் அவருக்கு எதிராக தனியான விசாரணை ஒன்றை நடத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருந்துடன் நேருக்கு நேர் மோதிய முச்சக்கரவண்டி : கோர விபத்து!!

கோர விபத்து

திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

கொட்டகலையில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றும் ஹட்டனில் இருந்து கொட்டகலை நோக்கி பயணித்த சிறிய ரக பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதன்போது, படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார். முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த விபத்தினால் சில மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இரு இந்திய விமானிகளை சிறைபிடித்துள்ள பாகிஸ்தான் : வீடியோ இணைப்பு!!

விமானிகளை சிறைபிடித்துள்ள பாகிஸ்தான்

பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டைத் தாண்டி இந்திய வான் எல்லைக்குள் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் வான் எல்லையில் நுழைந்த இரு இந்தியப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தகவல்களை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த இயலவில்லை.

1:30 PM: இந்திய விமானிகள் இருவரை சிறைபிடித்துள்ளோம் என்றும், அவரிடம் இருந்து ஆவணங்கள் மற்றும் ஆயுதங்களை சிறை பிடித்துள்ளதாக செய்தியாளர்களிடம் பாகிஸ்தான் படைகளின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் தெரிவித்தார். எனினும் இது குறித்து இந்தியத் தரப்பு எதையும் உறுதிசெய்யவில்லை.

பாகிஸ்தானால் பகிரப்பட்ட வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட படம். பிபிசியால் இதன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய முடியவில்லை பிடிபட்ட விமானிகளின் ஒருவர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இன்னொருவர் தங்கள் காவலில் இருப்பதாகவும் ஆசிஃப் கஃபூர் கூறினார்.

இதன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய முடியவில்லை

காவலில் இருக்கும் விமானியின் காணொளி என்று கூறப்படும் காணொளி என்று ஒன்றையும் அவர் வெளியிட்டார். அவரது கூற்றுகளை பிபிசியால் சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை.

1:23 PM – பாகிஸ்தான் படைகள் திறன் வாய்ந்தவையாக உள்ளன. எனினும் நமது நோக்கம் அமைதிதான் என கூறியுள்ள ஆசிஃப் கஃபூர் ஊடகங்களும் பொறுப்புடன் செய்தி வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் மீது போர் திணிக்கப்பட்டால் எதிர்கொள்ளத் தயார் என்றும், இரு இந்திய விமானப்படை விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்திய ஊடகங்கள் பாகிஸ்தானின் F16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இந்திய ஊடகங்களை காட்டுகின்றன. இந்த தாக்குதலில் அந்த ரக விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தவே இல்லை என ஆசிஃப் கஃபூர் மறுத்துள்ளார்.

1:15 PM – நிலைமையை மோசமடையச் செய்யத் தாங்கள் விரும்பவில்லை. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இந்தப் பிராந்தியத்தின் மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்று பாகிஸ்தான் படைகளின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் கூறியுள்ளார்.

இந்திய எல்லைக்குள் ஆறு ராணுவ மற்றும் நிர்வாக நிலைகளை குறிவைத்தோம். அவற்றின் மேல் தாக்குதல் நடத்துவது நோக்கமல்ல என்பதால், திறந்த வெளியிலேயே தாக்குதல் நடத்தினோம் என்று அவர் தெரிவித்தார்.

இது உண்மையான தாக்குதல் நடவடிக்கை அல்ல, பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்கும் திறனை வெளிக்காட்டும் செயல்பாடு மட்டுமே என ஆசிஃப் கஃபூர் கூறினார்.

1:10 PM – அமைதியைக் கடைபிடிக்குமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை மீண்டும் வலியுறுத்துவதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லு காங் தெரிவித்துளார்.

1:00 PM – கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டின் 12 முதல் 15 இடங்களில், செவ்வாய் இரவு பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய பாதுகாப்பு படைகளின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

12:41 PM – இந்தியா தங்கள் நிலையை பிரசாரம் செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், அங்கு விரைவில் தேர்தல் வருவதை மனதில் கொள்ள வேண்டும் என்றும் குரேஷி கூறியுள்ளார்.

12:35 PM – பாகிஸ்தான் படைகளின் தயார் நிலையை கேள்விக்கு உட்படுத்துவதற்கான நேரம் இதுவல்ல என்று கூறியுள்ள அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, நிலைமையைத் தாங்கள் சீர் செய்யவே விரும்புவதாக கூறினார். பாகிஸ்தான் படைகள் எப்போதுமே தயார் நிலையில் இருப்பதாக கூறினார்.

இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியபின், தாமதமாக இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானங்கள் தாக்குதல் நடத்தியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் உள்ளது,” என்றார்.

12:30 PM – பாகிஸ்தான் மண்ணில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நடத்திய மதரஸாக்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்ததாக இந்தியா கூறுவது உண்மையல்ல என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டாக் கூறியுள்ளார்.

பர்வேஸ் கட்டாக் மற்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோர் கூட்டாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

12:25 PM – இந்திய ஆளுகையின்கீழ் உள்ள காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் இரு விமானங்கள் விழுந்து நொறுங்கியதைத் தொடர்ந்து ஸ்ரீநகர், ஜம்மு மற்றும் லேஹ் உள்ளிட்ட விமான நிலையங்கள் பயணிகள் விமானப் போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விமான நிலையங்கள் வழியாக செல்லும் விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

12:20PM – கைபர் பகுன்குவா மாநிலத்திலுள்ள பாலகோட் பகுதியில் இந்திய விமானங்கள், செவ்வாய் காலை நடத்திய தாக்குதலில் குறைந்தது நான்கு பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தானில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

12:12 PM – “சில விமானங்கள் கீழே விழுந்துள்ளன. இப்போது எதையும் கூற முடியாது. தொழில்நுட்ப குழுவினர் நடந்ததை அனுமானிப்பார்கள். இரு இறந்த உடல்களை கண்டுபிடித்து அவற்றை அப்புறப்படுத்தியுள்ளோம்,” என பட்காம் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த காவல் அதிகாரி கூறியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.

11:50 AM – பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனெரல் ஆசிஃப் கஃபூர், பாகிஸ்தான் வான் பரப்பில் இரு இந்திய விமானப்படை விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஒரு விமானம் பாகிஸ்தான் ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீருக்குள்ளும் இன்னொரு விமானம் இந்திய ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீரிலும் விழுந்ததாக கூறியுள்ள அவர், ஒரு இந்திய விமானியை தாங்கள் கைது செய்துள்ளதாக கூறியுள்ளார்.

11:44 AM – கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அப்பால் இருக்கும் பாகிஸ்தான் வான் வெளியில் இருந்து இந்திய நிலைகளை நோக்கி தங்கள் விமானப் படை தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைசல் கூறியுள்ளார்.

இது இந்தியா தங்கள் எல்லைக்குள் நுழைந்ததற்கான பதிலடி அல்ல என்று கூறியுள்ள அவர், மனித உயிரிழப்புகள் மற்றும் பிற சேதங்கள் ஏற்படாத வகையில் ராணுவ அமைப்புகள் அல்லது இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.

எவ்விதமான ஆதாரங்களும் இல்லாமல் தீவிரவாதிகளின் கூடாரங்கள் என்று அவர்கள் கூறும் இடங்களைத் தாக்கினால், இந்திய ஆதரவுடன் பாகிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் குழுக்கள் மீது பதிலுக்குத் தாக்குதல் நடத்த எங்களுக்கும் உரிமை உண்டு என ஃபைசல் தெரிவித்துள்ளார்.

11:40 AM – இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா செக்டர் பகுதியில் இருக்கும் இந்திய வான் எல்லைக்குள் பாகிஸ்தான் ஜெட் போர் விமானங்கள் நுழைந்ததாக மூத்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை இந்திய வான் எல்லைக்குள் நுழைந்த அந்த விமானங்கள், இந்திய வான் பரப்பில் கண்காணிப்புப் பணியில் இருந்த ஜெட் விமானங்களால் திருப்பி அனுப்பப்பட்டன என்று அவர் கூறியுள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள விமான நிலையம் மூன்று மணிநேரம் மூடப்படுவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

– BBC – Tamil

இந்திய எல்லையில் பற்றி எரியும் போர் விமானங்கள்!!

பற்றி எரியும் போர் விமானங்கள்

இந்தியாவின் மத்திய காஷ்மீரின் பட்கம் மாவட்டத்தில் உள்ள கரேண்ட் கலன் பகுதியில் இந்திய விமானப் படை விமானம் விழுந்து நொருங்கியதில் குறைந்தது இரண்டு விமானிகள் பலியாகியுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

காலை சுமார் 10.40 மணியளவில், பட்கம் நகரிலிருந்து 7 கிமீ தூரத்தில், கரேண்ட் கலன் பகுதியில், இந்திய விமானப் படை விமானம் விழுந்து நொருங்கி, தீப்பற்றி எரிந்துள்ளது என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் விமானி மற்றும் துணை விமானி இருவரும் உயிரிழந்துள்ளனர் என தெரியவருகின்றது. சம்பவ இடத்தில் இருந்து இரண்டு விமானிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் கார்கில் பகுதியில் மேலும் ஒரு ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதாகவும் ஆனால், அதிகாரிகள் அதனை உறுதிப்படுத்தவில்லலை எனவும் தெரியவருகின்றது.

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தரையிறங்க தயாராக இருந்த விமானங்கள் அமிர்தசரஸுக்கு திருப்பி விடப்பட்டன. இந்திய விமானப் படையின் நடவடிக்கைகளால் இந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் : இந்திய வான்பரப்பில் நடந்தது என்ன?

அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டுபாய் நோக்கி பயணித்த UL 225 என்ற விமானம் நேற்று மாலை அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விமானம் நேற்று மாலை 06.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து டுபாய் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது. பின்னர் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீரென அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்திய வான் எல்லையில் வைத்து விமானத்தில் பறவைகள் மோதியுள்ளதால் விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய பேச்சாளர் தெரிவித்துள்ளார். எனினும் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 225 என்ற மற்றுமொரு விமானத்தில் பயணிகள் ஏற்றப்பட்டு டுபாய் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியா- பாகிஸ்தான் வான் பகுதியில் பதற்றம் : முடங்கிய விமான சேவைகள்!!

முடங்கிய விமான சேவைகள்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் தாக்குதல்களால் இந்திய விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமான படையினர் நேற்று அதிகாலை பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுத்தனர். இதனால் பாகிஸ்தான் அச்சம் கொண்டு இந்தியாவை தாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. எனினும் இந்த நடவடிக்கைகளை இந்திய முறியடித்து வருவதுடன் இன்று பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய அந்நாட்டு போர் விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது.

இதனால் தொடர்ந்து எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து அமிருதசரஸ் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. எல்லையில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

இதே போல் பாகிஸ்தானிலும் உள்நாட்டு, சர்வதேச விமான சேவைகளை லாகூர், முல்தான், ஃபைசலாபாத், சியால்கோட், இஸ்லாமாபாத் ஆகிய இடங்களிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் வான் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில விமானங்கள் வருகின்றன. பல விமானங்கள் மாற்று பாதையை நோக்கி செல்கின்றன என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

300 தீவிரவாதிகள் செத்துமடிந்தது போதாது ஒட்டுமொத்தமாக சாக வேண்டும் : தமிழச்சியின் சபதம்!!

தமிழச்சியின் சபதம்

பிப்ரவரி 14 ஆம் திகதி புல்வாமா மாவட்டத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் தூத்துக்குடி, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 தமிழர்கள் உட்பட 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

தற்போது இந்திய இராணுவம் பாகிஸ்தான் எல்லையில் பதில் தாக்குதல் நடத்தியதில், 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைகேள்விபட்ட அரியலூர் வீரர் சிவசந்திரனின் மனைவி காந்திமதி, தீவிரவாதிகளை வோரொடு அழிக்க வேண்டும்.

இன்றைக்கு 300க்கும் மேற்பட்டோர் செத்துமடிந்தது எங்களுக்கு சந்தோஷம் கிடையாது, பாகிஸ்தானில் தீவிரவாதிகளே இல்லாத வகையில் அவர்களை அழிக்க வேண்டும், அப்போதான் இறந்துபோன இராணுவ வீரர்கள் சந்தோஷப்படுவார்கள், அவர்கள் ஆத்மா சாந்தியடையும் என கூறியுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

பெண்ணுக்கு நேர்ந்த கதி

இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு பெண்ணொருவருக்கு நீர்கொழும்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. கொக்கெய்ன் போதைப்பொருளை அருகில் வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனம் காணப்பட்ட பெண்ணுக்கே பொலிவியா நாட்டை சேர்ந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலைய சுங்க பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளியான பெண்ணிடம் இருந்து 2 கிலோ கிராம் 615 கிராம் கொக்கெய்ன் கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றத்தி குற்றத்தை ஏற்றுக் கொண்ட அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதேவேளை, 105 கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டிற்கு குற்றவாளியாகிய 41 வயதான நபருக்கு கொழும்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தின் இன்றைய நிலை என்ன?

வவுனியா பொருளாதார மத்திய நிலையம்

 

வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் மீண்டும் சர்ச்சையான நிலை ஏற்பட்டுள்ளது. வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் வவுனியா மதவுவைத்தகுளம் பகுதியில் 291 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், குறித்த பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான இடத்தெரிவு தொடர்பில் பல்வேறு குழப்ப நிலைகள் மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் இறுதியாக வவுனியா, மதவுவைத்தகுளம் பகுதியில் இரண்டரை ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டு அதன் பூர்வாங்க வேலைகள் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போதைய கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஹரிசனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தற்போது அதன் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதில் உள்ள வர்த்தக நிலையங்களை வழங்குவது தொடர்பாக கவனம் செலுத்தப்படுகிறது.

குறித்த பொருளாதார மத்திய நிலையத்தில் 50 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 35 கடைகளை ஏற்கனவே வவுனியா நகர்ப்பகுதியில் மொத்த மரக்கறி நிலையத்தில் வியாபாரம் செய்பவர்களுக்கு வழங்க முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும் என மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் அவற்றையும் திறந்த கேள்வி மூலம் வழங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் மீண்டும் சர்ச்சையான நிலை தோன்றியுள்ளது. இதனையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உள்ளூர் விவசாய செய்கையாளர்கள் தமக்கும் குறித்த பொருளாதார மத்திய நிலையப் பகுதியில் உள்ள கடைத்தொகுதியில் குறிப்பிட்ட வீதத்தில் கேள்வி கோரல் இல்லாது தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் தற்போது கட்டி முடிக்கப்பட்ட நிலையில் கடைகளை எவ்வாறு வழங்குவது என்ற குழப்பத்துடன் பொருளாதார மத்திய நிலையம் தற்போது காணப்படுகின்றது.

வவுனியா நகரசபையின் பதினொராவது அமர்வு : பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆராய்வு!!

நகரசபையின் பதினொராவது அமர்வு

வவுனியா நகரசபையின் பதினொராவது அமர்வு நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் நேற்று (26.02) நகரசபையில் நடைபெற்றது. காலை 9.30 மணிமுதல் மதியம் 12.30. மணிவரை நகரசபை உறுப்பினர்களால் பல்வேறு பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டு விவாதங்கள் நடைபெற்றது.

முக்கியமாக நகரப்பகுதிகளில் தனியார் கல்வி நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க முடியாது. அத்துடன் இரவு ஏழு மணிக்கு முன்பாக அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் தங்கள் சேவையை முடித்துக்கொள்ள வேண்டும்.

அத்துடன் மாணவர்களின் சுகாதார நலன்கள் குறித்தம் நகரசபை கவனத்தில் எடுத்து அதனை நிவர்த்தி செய்யுமாறு வவுனியாவில் இயங்கிவரும் தனியார் கல்வி நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இதனை மீறும் தனியார் கல்வி நிலையங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்திருந்தார்.

வவுனியா நகரசபை அமர்வில் வவுனியாவில் மாட்டிறைச்சி விலை 650 ரூபாவாக நிர்ணயம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில் மாட்டிறச்சி 850 ரூபா வரை அதிக விலைக்கு விற்கப்படுவதாக நகரசபை உறுப்பினர் எஸ்.செந்தில்ரூபன் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்ததனைத் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பாக நகரசபை தவிசாளர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.

நுண்நிதி நிறுவனங்களால் பெண்கள் பெரும் துன்பங்களை எதிர்கொள்வதாகவும் அரசாங்கம் குடும்ப பெண்களுக்கு சலுகையாக வழங்கிய ஒரு இலட்சம் ரூபா பணத்தை வங்கிகள் வழங்க முன்வருவதில்லை என குற்றஞ்சாட்டிய நகரசபை உறுப்பினர் சமந்தா ஜெபராணி மாவட்ட செயலகம் இப்பிரச்சனையில் தலையிட்டு தீர்வு பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தினார்.

வவுனியா பிரதான வீதிகளில் போக்குவரத்து பொலிசார் போக்குவரத்தை சீர்படுத்தாமல் வாகன பரிசோதனைகளில் ஈடுபடுகின்றனர் இதன் காரணமாக நகர போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கின்றது. பாடசாலை நேரங்களில் கனகரவாகனங்கள் பயணிப்பதை பொலிசார் நிறுத்த வேண்டும். அத்துடன் சிறு பிள்ளைகளுக்கு தலைக்கவசம் அணிந்து பெற்றோர் கூட்டிச்செல்ல வெண்டும் என நகரசபை உறுப்பினர் எஸ்.காண்டீபன் தெரிவித்தார்.

வவுனியாவில் ஹர்த்தால் தினத்தில் பொலிசாருடன் மாலையுடன் நின்ற தெற்கு பிரதேசசபை உறுப்பினர்!!

தெற்கு பிரதேசசபை உறுப்பினர்

காணாமல் ஆக்கப்பட்டோரின் கோரிக்கையை செவிசாய்காது ஹர்த்தால் தினத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கு மாலை அணிந்து திறப்பு விழா நிகழ்வு ஒன்றை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் கோகுலகுமார் அஞ்சலாதேவி கொண்டாடியுள்ளமை தொடர்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும், காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டும், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்று வலியுறுத்தியும், வடக்கு மாகாணம் முழுவதும் நேற்று முன்தினம் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது. அத்துடன் கிளிநொச்சியில் மாபெரும் கனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் இடம்பெற்றது.

இந்நிலையில் காணாமல் ஆக்கபட்ட உறவுகளின் கோரிக்கைகளை ஏற்று தமிழ், முஸ்லிம், சிங்களவர் என்ற வேறுபாடு இன்றி அனைத்து இனத்தவர்களும், வர்த்தகர்களும், தனியார் மற்றும் இ.போ.சபை பேரூந்து சேவைகளும், முச்சக்கர வண்டிச் சேவைகளும் நேற்று முன்தினம் முற்றாக வவுனியாவில் செயலிழந்தன. வவுனியா நகரசபையின் சபை அமர்வு கூட நிறுத்தப்பட்டது. தனியார் கம்பனிகள் மூடப்பட்டதுடன் அரச அலுவலங்கள் கூட செயலிழந்திருந்தன.

இந்நிலையில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேரச சபை உறுப்பினர் கோகுலகுமார் அஞ்சலாதேவி குறித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் குறித்தோ அல்லது ஹர்த்தால் குறித்தோ கவனம் செலுத்தாது ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பொலிசாருடன் இணைந்து மாலைகளுடன் ஆடம்பரமாக கொண்டாடியுள்ளமை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று இருப்பதற்கு காரணம் விடுதலைப் புலிகளே. அவர்களுடன் தொடர்புகளைக் கொண்டமைக்காக பலர் காணாமல் ஆக்கப்பட்டார்கள். ஆனால் இன்று அந்த பிள்ளைகளுக்காக நாம் போராடும் போது சில அரசியல்வாதிகள் ஆடம்பர நிகழ்வுகளை செய்வதும் எம்மை மேலும் மனவருத்தத்திற்குள்ளாகிறது என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த பிரதேச சபை உறுப்பினர் குறிப்பிட்ட தினத்தில் ஓமந்தை பகுதியில் புகையிரத கடவை ஒன்றை திறந்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரசபை உறுப்பினரின் கல்வியால் எழுவோம் செயற்றிட்டம்!!

கல்வியால் எழுவோம் செயற்றிட்டம்

வவுனியா நகர சபையின் உறுப்பினரும் ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபனால் தொடர்ச்சியான கல்வி ஊக்குவிப்பு செயற்றிட்டமாக நடைமுறைப்படுத்தும் “கல்வியால் எழுவோம்” செயற்றிட்டத்தின் தொடர்ச்சியாக குருமன்காடு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் முன்பள்ளி சிறார்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (26.02.2019) காலை 8.30 மணிக்கு நடைபெற்றது.

இவ் நிகழ்வில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகரன் கேசவன், சமூக ஆர்வலர் சந்திரேஸ்வரன் ரவி ஆகியோர் கலந்து கொண்டதுடன்.

இவ் கற்றல் உபகரணங்களை புளொட் அமைப்பின் இளைஞரணி உறுப்பினரான வி.சஜீவ்நாத்தினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

படுக்கையறையில் பிணமாக கிடந்த நடிகை!!

பிணமாக கிடந்த நடிகை

அர்ஜெண்டினா நடிகையும் பிரபல பிளேபாய் மொடலுமான ஒரு பெண் தனது படுக்கையறையில் நிர்வாணமாக இறந்து கிடந்தார். 2018ஆம் ஆண்டு Natacha Jaitt (41) என்னும் அந்த மொடல், பல பிரபல விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் மற்றும் பெரிய அரசியல்வாதிகள் மீது சிறார் பாலியல் குற்றம் சாட்டியிருந்தார்.

அவர்களில் பலர் சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு பயன்படுத்துவது தொடர்பாக தன்னிடம் ஆதாரம் இருப்பதாக அவர் கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல், தான் கொல்லப்படலாம் என்றும், சந்தேகத்திற்குரிய விதத்தில் தான் இறந்தால் அது தற்கொலையாக இருக்காது என்றும், இந்த பிரபலங்களின் மோசடிகளை வெளிப்படுத்தியதால் அவர்களால் செய்யப்பட்ட கொலையாகத்தான் இருக்கும் என்றும் அவர் ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர் தனது படுக்கையறையில் நிர்வாணமாக, மூக்கில் போதைப்பொருளுடன் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடற்கூறு பரிசோதனையில், Natacha, உடல் உள் உறுப்புகள் பல செயலிழந்த நிலையில், வெளிக்காயங்கள் எதுவுமின்றி இறந்திருந்தது தெரியவந்தது.

போதைப்பொருட்கள் உட்கொண்டதால் பக்க வாதம் ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சமீப காலமாகவே தனக்கு மிரட்டல்கள் வருவதாகவும், தான் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டதாகவும் Natacha தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. Natachaவின் சகோதரரும் வழக்கறிஞரும் அவரது உயிரிழப்பிற்கு காரணம் கொலையாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

தவறான வீடியோவால் நடுத்தெருவில் நின்ற மாணவி!!

நடுத்தெருவில் நின்ற மாணவி

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தனது காதலனை நம்பி சென்ற பள்ளி மாணவி தவறாக வீடியோ எடுக்கப்பட்டதையடுத்து காதலன் உட்பட 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். சபரிராஜன் என்பவர் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கு பேஸ்புக் வாயிலாக 19 வயதான மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

மாணவியும், சபரிராஜனின் காதல் வார்த்தைகளை நம்பி காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், மாணவியை தனியாக ஒரு இடத்திற்கு வருமாறு சபரிராஜன் அழைத்துள்ளார். அங்கு காரில் வைத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து மாணவியை தவறாக வீடியோ எடுத்துள்ளார். பின்னர், அந்த வீடியோவை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

மாணவி தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதையடுத்து கழுத்தில் உள்ள செயினை பறித்துவிட்டு நடுரோட்டில் இறக்கிவிட்டு சென்றுள்ளார். எங்கு இருக்கிறோம் என தெரியாத மாணவி, அருகில் இருப்பவர்களின் உதவியோடு வீட்டுக்கு சென்றுள்ளார். தொடர்ந்து பணம் கேட்டி மிரட்டியுள்ளார் சபரிராஜன்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் 3 பேரும் மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 3 பேர் மீது பாலியல் தொந்தரவு செய்தல், படம் எடுத்து மிரட்டுதல், நகை பறிப்பு, பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்பட 5 பிரிவுகளில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

திருமணமான நபரை காதலித்த பெண்ணிற்கு நேர்ந்த கதி!!

பெண்ணிற்கு நேர்ந்த கதி

தமிழகத்தில் நட்சத்திர ஹோட்டலுக்கு சென்ற கெளசல்யா என்ற பெண்னை ஐஸ்கிரீம் பார்லர் உரிமையாளர் தாக்கியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கோயமுத்தூரைச் சேர்ந்தவர் கெள்சல்யா. டிப்ளோமோ இன்ஜினியரான இவர் சென்னை தேனாம் பேட்டை காவல்நிலையத்தில் ஐஸ்கிரீம் உரிமையாள் மீது புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

இதையடுத்து இது குறித்து அவரிடம் கேட்ட போது, நான் டிள்ளோமா இன்ஜினியரிங் முடித்துவிட்டு சென்னைக்கு வேலை தேடி வந்தேன். அதன் பின் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. அப்போது நண்பர்கள் மூலம் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் ஐஸ் கிரீம் பார்லர் நடத்திவரும் அசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

அதன் பின் இருவரும் காதலித்தோம். அந்த சமயத்தில் தான், அவர் எனக்கு போதை பொருள்களை கட்டாயப்படுத்திக் கொடுத்தார். இதனால் என் வாழ்கையே கேள்வி குறியானதால், அவரை விட்டு பிரிந்து சென்றேன். இந்நிலையில் கடந்த 24-ஆம் திகதி, தேனாம்பேட்டை பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு தோழியின் பிறந்தநாள் விழாவுக்காகச் சென்றிருந்தேன்.

அங்கு அசனும் வந்திருந்தார். அப்போது அவருக்கும் எனக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அவர் என்னை ரெஸ்ட் ரூம் பகுதிக்கு அழைத்துச் கண்மூடித்தனமாக தாக்கினார். தன்னிடம் இருந்த செல்போனை அவர் உடைத்து, என்னை தொடர்ந்து அடித்ததால், மூக்கில் இரத்தம் வந்தது. இதனால் அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.

எனக்கு நடந்த கொடுமைகளைக் குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன். ஆனால் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை மனு ஏற்புச் சான்றிதழ்கூட கொடுக்கவில்லை. எனக்கு நீதி வேண்டும். எனக்கு போதை பொருள் கொடுத்து என் வாழ்க்கையைக் கேள்விக் குறியாக்கிவிட்டார்.

நான் மட்டுமல்ல என்னைப் போல சில பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அசனுடன் பழகியபோதுதான் அவர் போதை பொருள்களை கொடுத்து சில பெண்களை ஏமாற்றுவது எனக்குத் தெரியவந்தது.

அவருக்கு திருமணமாகி குழந்தையும் இருக்கிறது. அதன்பிறகுதான் அவரைக் காதலித்தேன். ஆனால், என்னையும் அவர் திருமணம் செய்துகொள்வதாக முதலில் ஆசைவார்த்தை கூறினார். ஆனால், அதன்பிறகு அவர் என்னை ஏமாற்றிவிட்டார் என்று கூறியுள்ளார். இது குறித்து அசனிடம் கேட்ட போது, அவர் தான் போதைக்கு அடிமையானவர், என் மீது பழி சுமத்துகிறார். அவரை அவரின் நண்பரிடம் கேளுங்கள் சுயரூபம் தெரியும் என்று கூறி முடித்துள்ளார்.