துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட நடிகை : கணவரின் வெறிச்செயல் : அலட்சியம் காட்டும் பொலிஸ்!!

துணை நடிகை சந்தியா

சென்னையில் ஜனவரி மாதம் 21 ஆம் திகதி துணை நடிகை சந்தியாவின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த கொலையை செய்த கணவர் பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கொலை வழக்கில் பொலிசார் அலட்சியம் காட்டுவதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு மனைவி சந்தியா தவறான பாதையில் சென்றதாகவும், இதனால் கோபத்தால் அவளை கொலை செய்தேன் என பாலகிருஷ்ணன் பொலிசிடம் தெரிவித்ததாக கூறப்பட்டது,

மேலும், உடலின் ஏனைய பாகங்களை பொலிசார் தேடி வந்த நிலையில், அவரின் தலை எங்கே என்பதுதான் முக்கிய கேள்வியாக இருந்தது. தொடர்ந்து பொலிசார் தேடி வந்த நிலையில் தற்போது அதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சந்தியாவின் பெற்றோர் அளித்துள்ள புகாரில், சந்தியாவின் உடல் பாகங்கள் முழுமையாக கிடைக்காத நிலையில் உடலின் முக்கிய உறுப்புகளை எடுத்து விற்கும் கும்பலுடன் பாலகிருஷ்ணனுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும்,

இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர், மேலும், பாலகிருஷ்ணனிடம் இருந்து குழந்தைகளை மீட்டு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இளைஞருடன் தனியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற மாணவிக்கு நேர்ந்த கதி!!

மாணவிக்கு நேர்ந்த கதி

இந்தியாவில் நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் மர்மான முறையில் இறந்து கிடந்ததால், அவர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகியிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

ஆந்திரப்பிரதேசத்தின் Godavari மாவட்டத்தில் இருக்கும் Guntupalli பகுதியில் இருக்கும் குகைக்கு அருகே இளம் பெண் ஒருவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை மர்மான முறையில் இறந்துகிடப்பதாகவும், இளைஞன் காயங்களுடன் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற பொலிசார், அந்த இளைஞனை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, பெண்ணின் உடலை பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின் இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இறந்த பெண்ணின் பெயர் Sri Dharani எனவும் 18 வயதான இவர் Unguturu Mandal பகுதியில் இருக்கும் MM Puram-ஐ சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இவர் Polasanipalli பகுதியில் இருக்கும் கல்லூரி ஒன்றில் BSc முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இளைஞனின், பெயர் Douluri Naveen எனவும், இவர் Bheemili Mandal பகுதியில் இருக்கும் Arjavari Gudem கிராமத்தைச் சேர்ந்தவர் என பொலிசார் கூறியுள்ளனர். மேலும் இந்த ஜோடி நேற்று காலை இரு சக்கர வாகனத்தில் காலை உள்ளூர் நேரப்படி 11.30 மணிக்கு அங்கிருக்கும் புத்த நினைவுச் சின்னங்களை சுற்றி பார்க்க வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அதற்கு இடையில் மாணவி மற்றும் இளைஞன் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளதால், மாணவி மர்மகும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புற்றுநோயால் இரண்டு மார்பகத்தையும் இழந்து தவித்த பெண்ணின் இன்றைய நிலை!!

இரண்டு மார்பகத்தையும் இழந்த  பெண்

44 வயது பெண் ஒருவர் புற்றுநோய் காரணமாக தன்னுடைய இரண்டு மார்பகங்களையும் நீக்கிய நிலையில் தற்போது அவர் தான் சந்தித்த துன்பம் அதிலிருந்து மீண்டது எப்படி என்பது குறித்து கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் Carla Mills.தற்போது 44 வயதாகும் இவர் தன்னுடைய 38 வயதில் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், நான் கடந்த 2012-ஆம் ஆண்டு மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டேன்.

இதனால் மார்பக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர். ஆனால் அறுவை சிகிச்சை செய்தால் சரியாக வேலை செய்ய முடியாது, ஒரு பெண் என்ற உணர்வே வாரது என்று முதலில் தயங்கினேன், பயந்தேன். அதன் பின் இரண்டு வாரங்கள் கழித்து அதே 2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ஆம் திகதி மார்பக அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தேன்.

அறுவை சிகிச்சையும், நடந்தது. அப்போது மருத்துவர்கள் ஒரு புறம் மட்டும் செய்தால் போதும் என்றார்கள், நான் ஒன்றை மட்டும் செய்தால் எப்படி என்று இரண்டு பக்கமும் மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்.

அதிலிருந்து மீண்டு வந்த நான் மீண்டும் மார்பகம் வைத்து கொள்ள அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தேன். அப்போது அதற்கான முறைகளை கேட்ட போது கொஞ்சம் பயம் இருந்தது.

அதற்கான முயற்சியில் இறங்கினேன், ஆனால் அதில் பலன் அளிக்கவில்லை, இதற்காக நான் பல முறை அழுததுண்டு என்று கூறியுள்ளார். மேலும் நம்பிக்கை மூலம் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வரும் இவர், தற்போது நான்காவது கட்டத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

மட்டக்களப்பில் யுவதி ஒருவரால் ஏற்பட்ட பெரும் பதற்றம்!!

ஏற்பட்ட பெரும் பதற்றம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் குதித்து யுவதி ஒருவர் தற்கொலை முயற்சி செய்துள்ள நிலையில், அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது. இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது. எனினும், குறித்த யுவதியை அந்த பகுதியில் இருந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து காப்பாற்றியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அண்மைக் காலமாக மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் குதித்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்த விடயம் குறித்து மட்டக்களப்பு மாநகரசபையில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

கல்லடி பாலத்தில் குதித்து தற்கொலை செய்துகொள்வதை தடுப்பது குறித்து பேசப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, இன்றும் தற்கொலை முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பில் கடந்த ஆண்டு மாத்திரம் 90க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

என் கணவரின் வாழ்க்கையில் விளையாடிய ஒரு நபர் : நடிகர் கஞ்சா கருப்புவின் மனைவி வேதனை!!

நடிகர் கஞ்சா கருப்பு

தமிழ் திரையுலகின் காமெடி நடிகரான கஞ்சா கருப்புவின் மனைவி, தனது வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய சோகம் குறித்து பகிர்ந்துள்ளார். 5 ஆம் வகுப்பு வரை படித்திருக்கும் கஞ்சா கருப்பு, தனது ஊரில் மற்ற பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக ஒரு பள்ளியை கட்டிக்கொடுத்தார்.

அவருக்கு டாக்டர் பெண் தான் வேணும் என்பது ஆசை, ஏனெனில் அவருடைய அப்பா உடல்நிலை சரியில்லாமல், மருத்துவர் கவனிப்பு இல்லாமல் இருந்ததால் அப்படி ஒரு முடிவு எடுத்திருந்தார்.

இப்படித்தான் எங்கள் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து நல்லபடியாக சென்றுகொண்டிருந்த எங்கள் வாழ்க்கையில் ஒரு நபர் மூலம் புயல் வீச ஆரம்பித்தது. படம் தயாரித்தார். படம் பண்ண தெரியாத ஒருத்தரை வைத்து படம் தயாரித்து நஷ்டத்தில் விழுந்தார். அதிலிருந்து மீண்டு வருவதற்கே சில காலம் தேவைப்பட்டது.

இடையில சில வருடம் அவருக்கு நல்ல ரோல் கிடைக்கல. அதனால, வந்து விசாரிக்கக்கூட ஆட்கள். இப்போ நடிக்கக்கேட்டு வர ஆரம்பிச்சுட்டாங்க. நிம்மதியாக இருக்கிறது என கூறியுள்ளார்.

தன் உயிரை கொடுத்து மகன் உயிரை காப்பாற்றிய தாய் : கண்கலங்கிய பயணிகள்!!

கண்கலங்கிய பயணிகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் தண்டவாளத்தில் சிக்கிய மகனை பத்திரமாக கரையேற்றிய தாய், அடுத்த நிமிடமே ரயிலில் சிக்கி இறந்துள்ள சம்பவம் அங்கிருந்த பயணிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன் தன்னுடைய மனைவி ரேவதி மற்றும் 12 வயது மகன் தனுஷ் உடன் சென்னை செல்வதற்காக ரயில் நிலையம் வந்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வருவதற்காக லட்சுமணன் சென்றுவிட்டார். இதற்கிடையில் அவருடைய மனைவி ரேவதி தண்டவாளத்தை கடந்து நடைபாதைக்கு சென்றுவிடலாம் என மகனை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார்.

அப்போது அதே தண்டவாளத்தில் திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில் வேகமாக வருவதை பார்த்த பயணிகள் கூச்சலிட ஆரம்பித்தனர். உடனே சுதாரித்து கொண்ட ரேவதி, வேகமாக தன்னுடைய மகனை நடைபாதையின் மேல் ஏற்றிவிட்டு, தானும் தப்ப முயற்சித்துள்ளார்.

ஆனால் அதற்கும் வேகமாக வந்த ரயில், பயணிகளின் கண்முன்னே அவர் மீது ஏற்றி சென்றுவிட்டது. இதில் ரேவதி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகியுள்ளார்.

இந்த கொடூரமான சம்பவத்தை அங்கு நேரில் பார்த்த பயணிகள் பலரும் கண்களில் நேர் ததும்ப நின்றுள்ளனர். பின்னர் சம்பவம் அறிந்து வந்த ரயில்வே பொலிஸார், ரேவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வவுனியாவில் அதிரடியாக களமிறங்கிய விஷேட அதிரடிப் படையினர்!!

 

வவுனியா கல்கமுவ மக்கள் குடிமனைகளை அண்டிய பகுதிகளில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டு மண் கடத்த முற்பட்டவர்களை விஷேட அதிரடிப்படையின் அதிரடி நடவடிக்கையினால் கைது செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

ஈரட்டைபெரியகுளம், கல்கமுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்களை வெட்டி நீண்ட நாட்களாக மண் அகழ்வு மேற்கொண்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று (25.02) மாலை 4.30 மணியளவில் களமிறங்கிய மடுகந்தை விஷேட அதிரடிபடையின் நிலைய பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் மனோஹர அவர்களின் தலைமையில் சென்ற விஷேட அதிரடிப்படையினர் இச் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தனர்.

இச் சுற்றிவளைப்பின் மூலம் சட்ட விரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டமை தெரியவந்ததையடுத்து டிப்பர் வாகனம் மற்றும் மண் அள்ளும் வாகனத்தையும், ஈரட்டையை சேர்ந்த 23,32 வயதுடைய இருவரை கைது செய்துள்ளதாகவும் இவர்களையும் கைப்பற்றப்பட்ட வாகனத்தையும் மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதாக மடுகந்தை விஷேட அதிரடிபடையின் நிலைய பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் மனோஹர தெரிவித்தார்.

துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இரட்டையர்கள் 13 நாட்களுக்கு பின் ஆற்றங்கரையில் சடலமாக மீட்பு!!

கடத்தப்பட்ட இரட்டையர்கள்

மத்தியரே பிரதேச மாநிலத்தில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இரட்டை சிறுவர்கள், 13 நாட்களுக்கு பின்னர் ஆற்றங்கரையோரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரியன்ச் மற்றும் ஷிரியன் ராவத் என்கிற இரட்டை சகோதரர்கள், அப்பகுதியில் செயல்பட்டு வரும் சத்குரு பொது பள்ளியில் பயின்று வருகின்றனர். கடந்த 12-ம் திகதி இருவரும் தங்களுடைய பள்ளி வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும் போது, மதியம் 12 மணியளவில் முகமூடி அணிந்த இரண்டு மர்ம நபர்களால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிசிடிவி காட்சிகளை வைத்து பொலிஸார் தீவிரமான விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். அப்பொழுது குற்றவாளிகள் சார்பில் ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டப்பட்டது.

ஆனால் பொலிஸார், குற்றவாளிகள் சம்மந்தமாக தகவல் தெரிவித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என அறிவித்தனர். இந்த நிலையில், காணமல் போன இரண்டு சிறுவர்களும் உத்திப்பிரதேசத்தில் உள்ள ஆற்றங்கரையோரம் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் சிறுவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது 6 பொறியியல் பட்டதாரிகளை கைது செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் ஈடுபட்டவர்களில் ஒருவர் மட்டும் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் அந்த இரண்டு சிறுவர்களுக்கும் பயிற்சி வகுப்பு எடுத்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நடிகர் சத்தியராஜின் மகளின் ஆசை நிறைவேறியது!!

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். அனைவருக்கும் காலை உணவு என்பது மிகவும் முக்கியமானது,

குறிப்பாக குழந்தைகளுக்கு காலை உணவு ஆரோக்கியமானதாக இருந்தால்தான் அன்றைய நாள் முழுவதும் அவர்கள் சுறுசுறுப்பாக இயங்க முடியும் என்பதே திவ்யாவின் கனவாக இருந்தது.

இவர் சமீபத்தில் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களை சந்தித்து தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான காலை உணவு வழங்க அரசாங்கம் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் அக்சய பாத்ரா தொண்டு நிறுவனமும், சென்னை மாநகராட்சியும் இணைந்து இன்று முதல் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்குகின்றன. இதன் தொடக்கவிழாவை இன்று சென்னை திருவான்மீயூர் அரசு பள்ளியில் ஆளுனர் தொடங்கி வைத்தார்.

வவுனியா பொலிசார் விடுத்துள்ள அவசர வேண்டுகோள் !!

அவசர வேண்டுகோள்

அனுமதி இன்றி மரங்களை வெட்டுவதனால் ஏற்படுகின்ற அழிவினை தடுக்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து இயந்திர வாள்களையும் (செயின்சோவர்) பதிவு செய்யும் நடவடிக்கைகள் பொலிஸ் நிலையங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதற்கமைய எதிர்வரும் 28 ம்திகதிக்கு முன்னர் குறித்த உபகரணங்களை வவுனியா பொலிஸ் நிலையத்தில் சமர்பித்து பதிவு செய்து உத்தரவு பத்திரமொன்றை பெற்று கொள்ளுமாறு வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

அத்துடன் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களது பிரதேசத்திற்குரிய பொலிஸ் நிலையங்களில் குறித்த பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்று பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இராணுவ வாகனம் மோதுண்டு ஒரே குடும்பத்தினை சேர்ந்த இருவர் பலி!!

இருவர் பலி

தோம்பே – ஹங்வெல்ல – நித்தபத்தர பிரதேசத்தில் இராணுவ வாகனம் ஒன்று உந்துருளி ஒன்றுடன் மோதுண்டதில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு இடம்பெற்ற குறித்த விபத்தில் மாமியார் மற்றும் மருமகளும் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் இராணுவ வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்தது.

இராணுவ வாகனம், மற்றும் ஓர் வாகனத்தினை முன்னோக்கி செல்ல முற்பட்ட போது, எதிர்திசையில் பயணித்த உந்துருளியுடன் மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

சங்குபிட்டியில் 22 வயதுடைய இளைஞன் பரிதாபமாக பலி : 24 வயது இளைஞன் வைத்தியசாலையில்!!

வீதி விபத்தில் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் சங்குபிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் அதிக வேகத்துடன் சென்ற உந்துருளி ஒன்று வேகத்தை கட்டுபடுத்த முடியாமல் கல் ஒன்றுடன் மோதுண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் மானிப்பாய் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 24 வயதுடைய இளைஞர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

பொன்னாலை வீதி மானிப்பாயைச் சேர்ந்த 22 வயதான சிவப்பிரகாசம் தனுசன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்களிில் பயணித்த மானிப்பாயைச் சேர்ந்த 24 வயதான வசந்தகுமார் நிரோசன் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பலரையும் ஏமாற்றிய இளைஞரை திட்டம் தீட்டி வலையில் விழ வைத்த பொலிசார்!!

பலரையும் ஏமாற்றிய இளைஞர்

 

கையடக்க தொலைபேசியை கொள்வனவு செய்வது போன்று பண மோசடியில் ஈடுபட்டு தொலைபேசியுடன் தப்பிச் சென்ற சந்தேக நபரொருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். காலி பகுதியை சேர்ந்த 21 வயதான ஜனித் கஷான் என்ற 21 வயதான இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இணையத்தளம் ஊடாக குறித்த கையடக்க தொலைபேசி உரிமையாளரின் வங்கி கணக்குக்கு பணம் வைப்பு செய்வதாக கூறி போலி ஆவணங்களை காட்டி பின்னர் தொலைபேசியுடன் தப்பிச் சென்றுள்ளார். குறித்த இளைஞன் இவ்வாறு பல மோசடிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

கையடக்க தொலைபேசிகளை விற்பனை செய்யும் நபர்கள், தமது வங்கி கணக்குகளை பரிசோதிக்கும் போது அவ்வாறு பணம் ஏதும் வைப்பிலடாமை தெரியவந்துள்ளது. குறித்த சந்தேக நபர் பாணந்துறை, கல்கிஸ்ஸை, மிரிஹான மற்றும் கட்டுநாயக்க ஆகிய பகுதிகளில் இவ்வாறு மோசடிகளை செய்து தப்பிச் சென்றுள்ளார் என காவல் நிலையங்களில் பல முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.சந்தேக நபர் முதலில் ஹிக்கடுவை பகுதியிலும், பின்னர் நுகேகொடை பகுதியிலும் வசித்து வந்ததுடன், அவர் இரண்டு திருமணங்களை முடித்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு பல மோசடிகளை மேற்கொண்ட அவரை கைது செய்வதற்காக கட்டுநாயக்க காவல்துறையால் கையடக்க தொலைபேசியொன்று விற்பனை செய்யப்படவுள்ளதாக இணையளத்தளத்தில் விளப்பரப்படுத்தி திட்டம் தீட்டப்பட்டது.

இந்நிலையில் அதனை கொள்வனவு செய் வந்த சந்தேக நபரை கட்டுநாயக்க பகுதியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் சந்தேக நபர், நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு அடுத்த மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!!

இளைஞனின் சடலம் மீட்பு

திருகோணமலையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். திருகோணமலை, பள்ளத்தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தந்தை திட்டியமையினால் குறித்த இளைஞன் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உயிரிழந்த இளைஞன் 20 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞனின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் முச்சக்கரவண்டியில் உணவு விற்பனை செய்தவருக்கு நேர்ந்த கதி!!

முச்சக்கரவண்டியில் உணவு விற்பனை

வவுனியாவில் முச்சக்கரவண்டியில் பாதுகாப்பற்ற முறையில் பாண் விற்பனையில் ஈடுபட்ட இருவருக்கும், வெதுப்பக உற்பத்தி நிலைய உரிமையாளர்களுக்கும் எதிராக 41,000 ரூபாய் நீதிமன்றம் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொது சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

சுகாதாரமற்றதும் பாதுகாப்பற்றதுமான முறையில் பாண் விற்பனையில் ஈடுபட்ட இருவருக்கும், வெதுப்பக உற்பத்தி நிலைய உரிமையாளருக்கு எதிராகவும் நேற்று பொதுசுகாதாரப் பரிசோதகர்களினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட நீதிமன்ற நடவடிக்கையின் போது குறித்த நபர்களுக்கு எதிராக 41,000 ரூபாய் நீதிமன்றத்தண்டம் அறவிடப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியில் கடதாசிப் பெட்டியிலும், ஆசனத்திலும் உணவுப் பொருட்கள் தூசு படுகின்ற சந்தர்ப்பத்தில் விற்பனை செய்தமை, காலாவதியாகும் நிலையிலான பணிஸ் விற்பனை செய்தமை, மருத்துவப் பரிசோதனையற்ற வெதுப்பகம் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் விற்பனையில் ஈடுபட்ட ஒருவருக்கு நான்கு குற்றச்சாட்டுக்களும், மற்றைய விற்பனையாளருக்கு மூன்று குற்றச்சாட்டுகளுக்கும், வெதுப்பக உரிமையாளருக்கு இரண்டு குற்றச்சாட்டுகள் மன்றில் முன்வைக்கப்பட்டுள்ளன.

குற்றத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கு 41,000 ரூபாய் தண்டப்பணமாக நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட பொருட்களை அழித்துவிடுமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

முச்சக்கரவண்டி ஒன்றில் கண்ணாடி பிற்றிங் பயன்படுத்திய பிளாஸ்டிக் வெயிலுக்கு உருகிய நிலையில் பாணுடன் ஒட்டிய நிலையில் விற்பனை செய்தவருக்கு எதிராகவும் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழில் நடந்த பெரும் சோகம் : தாயின் மரணத்தை தாங்க முடியாத மகள் தற்கொலை!!

யாழில் நடந்த பெரும் சோகம்

யாழ்ப்பாணத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதடி மத்தி கைதடியைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவரின் தாயார் இறந்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக யுவதி உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் அப் பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.