வவுனியா காத்தார்சின்னக்குளம் அ.த.க பாடசாலையின் வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நேற்று முன்தினம் காலை 9.30 மணியளவில் பாடசாலை மைதானத்தில் அதிபர் சு.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக காத்தார்சின்னக்குளம் கிராம அலுவலர் க.தர்சன் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினராக பிரதேசசபை உறுப்பினர் யோகராசா, கெளரவ விருந்தினர்களாக சமாதான நீதவான் ந.ரவீந்திரன், கங்கேஸ்வரி முன்பள்ளி ஆசிரியை திருமதி டட்லி, சமூக சேவையாளர் ரவீந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
மிகவும் பழமைவாய்ந்த இப் பாடசாலை இவ் வருடம் 60 வது ஆண்டு விழாவை கொண்டாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இளம் வவுனியா கலைஞர்களின் முயற்சியில் வெளிவந்துள்ளது “என் சொல்லிசை தமிழ்” எனும் பாடல். இப் பாடல் மனோ இந்துனேஷ் இயக்கத்தில் MC பிராணவனின் வரிகளில், ராப் இலும் , Sakeeran ஷகீரன் சுபசிங்கம் இன் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் இலும் மற்றும் SaiRo Roshan, Kaja, Tamizh Mannavan பங்களிப்பின் படைப்பாக You tube இல் வெளியிடப்பட்டுள்ளது.
இளம் வவுனியா கலைஞர்கள் ஒன்றிணைந்து மிகச்சிறப்பான முறையில் இப்பாடலை தயாரித்து வெளியிட்டுள்ளனர்.
இவர்களின் பாடல் மட்டுமன்றி கலைப்பயணமும் சிறப்பாக அமைய வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் அம்பாள் வீதியிலுள்ள புகையிரதப்பாதைக்கு அமைத்துக்கொடுக்கப்பட்ட பாதுகாப்பு கடவை உத்தியோகபூர்வமாக திறந்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கடந்த 16.09.2018 அன்று வீதியைக் கடக்க முற்பட்ட கார் ஒன்றில் பயணித்த 8 பேரில் 4 பேர் புகையிரதம் மோதியதில் உயிரிழந்தனர்.
விபத்தில் காரிலிருந்து வெளியே குதித்த இருவர் படுகாயங்களுக்குள்ளாகியிருந்தனர். இருவர் எவ்வித காயங்களும் இன்றி தப்பியிருந்தனர். இந்நிலையில் அப்பகுதிக்கு இன்று பாதுகாப்பு கடவை அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.
ஈஷி மிஷன் ஆலயத்தின் அனுசரணையில் பிரதான பிஷப் பி.எம்.இராஜசிங்கத்தினால் ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் அம்பாள் வீதியிலுள்ள புகையிரதப்பாதைக்கு அமைக்கப்பட்ட பாதுகாப்பு இரு பக்க கடவைகளும் இன்று காலை 9 மணியளவில்,
புளியங்குளம், ஓமந்தை, கனகராயன்குளம், நெளுக்குளம், பூவரசன்குளம், நெடுங்கேணி ஆகிய 6 பகுதி பொலிஸ் நிலையங்களின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிட்யூ.ஜ.ஆர்.பொன்சேகவினால் உத்தியோகபூர்வமாக திறந்து மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
புகையிரக்கடவையில் உயிரிழந்த 4பேருக்கு அஞ்சலி செலுத்தி மங்களவிளக்கேற்றலுடன் ஆரம்பித்துவைக்கப்பட்ட இந்நிகழ்வில் ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி , தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினர், ஆலய நிர்வாக உறுப்பினர்கள், கிராம அலுவலர், கிராம அமைப்புக்கள் மாதர் அமைப்பு, கிராம மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளுக்கு நீதியை பெற்றுத்தா எனக் கதறிய உறவுகளால் கிளிநொச்சி கண்ணீரால் நனைந்துள்ளது. சர்வதேசத்திடமும், அரசிடமும் நீதி கோரி அவர்கள் எழுப்பிய கோசங்களால் விண்ணதிர்ந்தது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் அதன் கவனத்தை ஈர்க்கும் நோக்கில், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அளித்திருந்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றத் தவறியுள்ளதை வெளிப்படுத்தியும், தமக்கு இன்னமும் நீதி வழங்கப்படாததைக் கண்டித்தும், இலங்கைக்கு இனிமேலும் கால அவகாசம் வழங்க வேண்டாமென தெரிவித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காலை ஒன்பது மணிக்கு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் அங்கிருந்து ஏ9 வீதி 155 ஆம் கட்டையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் வரை சென்றடைந்து அங்கு மகஜரும் கையளிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டு, அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டமையால் நகர் வெறிசோடியிருந்தது. பாடசாலைகளுக்கு உள்ளூர் ஆசிரியர்கள் வருகை தந்திருந்த போதும் மாணவர்கள் எவரும் சமூகமளித்திருக்கவில்லை.
அரச திணைக்களங்களில் வெளிமாவட்ட உத்தியோகத்தர்கள் பேருந்து போக்குவரத்து இன்மையால் பெருமளவு சமூகமளித்திருக்கவில்லை. திணைக்களங்கள் திறக்கப்பட்டிருந்த போதும் சேவைகள் இடம்பெறவில்லை. இவ்வாறு மாவட்டத்தின் அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திக்கு ஆதரவு வழங்கியிருந்தார்கள்.
கடந்த 2017-02-20ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் இரண்டு வருடங்களை கடந்தும் எவ்வித தீர்வும் எட்டப்படாது தொடர்ந்து வரும் நிலையில் இன்றைய மாபெரும் கண்டன போராட்டம் இடம்பெற்றுள்ளது.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வேண்டாம் வேண்டாம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகம் வேண்டாம், வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும், இதன்போது போதும் இந்தச் சோதனை, நமக்கு ஏனிந்த வேதனை கண்ணீருடன்தான் நாங்கள் வாழ வேண்டுமா?, எங்கள் கண்ணீருக்கு முடிவேது, எங்கள் துயருக்கு பதிலேது, எங்கள் துயரம் உங்களுக்கு வியாபார பொருளா?,
எங்கள் கண்ணீர் உங்களுக்கு அரசியல் விளையாட்டா?, எங்கே எங்கே எங்கள் உறவுகள் எத்தனை காலம்தான் நாம் தேடுவது, அவரை இன்னும் எத்தனை காலம்தான் காத்திருப்பது நாம், இன்னும் எத்தனை தடவை எமாற்றுவீர் எம்மை, போதும் போதும் ஏமாற்று நாடகங்கள் இனியும் நாங்கள் ஏமாளிகள் அல்ல போன்ற கோசங்களை எழுப்பியவாறும் பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
இப் போராட்டத்தில் வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அருட்தந்தையர்கள், ஏனைய மதங்களின் குருமார்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திரகுமார், சுரேஸ் பிரறேமச்சந்திரன், வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர்கள், பொது அமைப்புகள், யாழ். பல்கலைகழக சமூகம், தொழிற்சங்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் சட்டத்தரணிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
வட மாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதால் அனைத்து விதமான சேவைகளும் முடங்கியுள்ளன. மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களில் காலை முதல் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அரச சேவைகள், போக்குவரத்து, பாடசாலை என பல்வேறு பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளது. அனைத்து வரத்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ளதுடன், சேவை சந்தையில் கறுப்பு கொடி கட்டப்பட்டு கர்த்தால் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளிற்கு மாணவர்கள் வருகை தராமையால் பாடசாலை வெறிச்சோடி காணப்படுவதுடன், எவ்வித கற்றல் செயற்பாடுகளும் இடம்பெறவில்லை. அரச, தனியார் போக்குவரத்து சேவைகளும் முழுமையாக பாதிப்படைந்துள்ளன. வட மாகாணத்தின் பிரதான வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
காணாமல் ஆக்கப்பட்டடோர் விடயம், போர்க் குற்றங்களுக்கு பொறுப்பு கூறவேண்டும் போன்ற பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இலங்கை அரசுக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டது. எதிர்வரும் மாதத்துடன் இரண்டு வருடங்கள் முடிவடைய இருக்கின்றது. ஆனால் எவையும் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. பேரவையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டத்துக்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இலங்கையின் பல பகுதிகளில் அச்சுறுத்தலாக மாறியுள்ள குள்ள மனிதர்கள் தொடர்பில் விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளபொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை, அனுராதபுரம், குளியாப்பிட்டியை தொடர்ந்து மஹவிலச்சிய பொலிஸ் பிரிவின் பல இடங்களில் இரண்டு மர்ம மனிதர்களின் நடமாட்டம் காணப்பட்டதாக பெண்கள் சிலர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று தமது வீட்டிற்கு அருகில் இந்த இரண்டடி குள்ள மனிதனை அவதானித்ததாக சியம்பலாகஸ்வெவ பெண்களினால் தத்திரிமலை பொலிஸாரிடம் அழைப்பேற்படுத்தி தெரியப்படுத்தியுள்ளனர். உடனடியாக அந்த பகுதிக்கு பொலிஸார் சென்ற போதிலும் அவ்வாறான குள்ள மனிதர்களை அவதானிக்க முடியவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, அண்மையில் இந்த குள்ள மனிதர்களின் தாக்குதலினால் இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இதனை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளால் கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் இன்று (25.02.2019) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும், காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டும், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்று வலியுறுத்தியும் வடக்கு மாகாண முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் வவுனியாவிலும் வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், தனியார் நிறுவனங்கள் என்பன மூடப்பட்டுள்ளது. தனியார் மற்றும் இ.போ.சபை பேருந்துக்களும் சேவையில் ஈடுபடவில்லை. இருப்பினும் தூர இடங்களுக்கான போக்குவரத்தினை இ.போ.சபை பேரூந்துக்கள் மேற்கொள்கின்றன.
தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என்ற வேறுபாடின்றி ஒற்றுமையாக அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளமையால் வவுனியா நகரம் வெறிச்சோடி காணப்படுகின்றது. இயல்பு நிலை முற்றாக முடக்கமடைந்துள்ளதுடன் வீதிகளில் பொலிசார் நடமாட்டமும் ஆங்காங்கே காணப்படுகின்றது.
வவுனியா மாவட்ட சதுரங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 2019ம் ஆண்டிற்கான வவுனியா மாவட்டத்தின் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இடையிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்று வருகிறது.
சம்மேளனத்தின் செயலாளர் பிரபாகரன் யானுஜன் தலைமையில் இப் போட்டிகள் நேற்று வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆரம்பமானது.
தொடர்ந்து வரும் சனி, ஞாயிறு தினங்களில் பாடசாலைகளுக்கு இடையிலான சதுரங்கம் போட்டிகள் நடைபெறவுள்ளன.
குறித்த ஆரம்ப நிகழ்வில், சம்மேளனத்தின் தலைவர் ஹரிஸன் டிலிப் , செயலாளர் பி.யானுஜன், உபதலைவர் ஜெ.விதுர்ஷிகா , உப செயலாளர் சிறி.சரண்யா , நடுவர்களான உ.மேகலா, தி.சேதுர்க்கா, கா.நிதர்ஷா, பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
குண்டாக இருப்பதால் கணவனால் கைவிடப்பட்ட ரூபி அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் பாடிபில்டிங் போட்டியில் சாதித்து காட்டியுள்ளார் அவர். தனியார் உடற் பயிற்சி கூடத்தில், பயிற்சியாளராகவும், ஸும்பா நடன பயிற்சியாளராகவும் பணியாற்றி வரும் ரூபி பியூட்டி தனது வாழ்க்கை குறித்து பிபிசியிடம் அளித்துள்ள பேட்டியில்,
அப்பா இல்லமால் அம்மாவின் பராமரிப்பில் சென்னையில் வளர்ந்தேன். வாழ்க்கையில் அடுத்தது என்ன என்ற தேடலே எனது முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது. 2011 ஆம் ஆண்டு திருமணம் முடிந்தது. திருமணத்திற்கு பிறகு எனது மகன் படித்த பள்ளியில் ஆசிரியராக பணிக்கு சென்றேன்.
எனது மகனுக்கு இரண்டரை வயது இருக்கையில் மணவாழ்க்கை கசந்தது. ஆடை முதற்கொண்டு அலங்காரம் வரை எனது கணவர் எனக்கு அதிக கட்டுப்பாடுகளை விதித்தார். அவருக்கு எது பிடிக்குமோ அதன்படி வாழ்வதற்கு என்னை வற்புறுத்தினார். ஒரு கட்டத்தில் என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். காரணம் கேட்டதற்கு நீ குண்டாக இருக்கிறாய், எனக்கு உன்னை பிடிக்கவில்லை என்று கூறியதை கேட்டு எனது இதயம் சுக்குநூறாக உடைந்தது.
அதன்பிறகு, எனக்குள் நம்பிக்கையை வரவழைத்துக்கொண்டு, எனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். நான்கு மாதங்களில் 78 கிலோ எடையிலிருந்து 52 கிலோவுக்கு குறைத்தேன், துரித உணவுகளை முற்றிலுமாக தவிர்த்தேன். தினசரி உணவில் அரிசியை தவிர்த்து காய்கறியை அதிகம் சேர்த்ததால் தன்னால் 26 கிலோ எடையை குறைக்க முடிந்ததாக கூறுகிறார்.
அவர் என்னை கேலி செய்துவிட்டார் என்பதற்காக தான் நான் நடைபயிற்சி செய்து எடையை குறைத்தேன். ஆனால், எடை குறைந்தவுடன் என்னை அரவணைப்பதற்கு பதிலாக அவரது சந்தேக பார்வையை வீச ஆரம்பித்தார். நானும், அவரும் ஒரு ஜிம்மில் சேர்ந்தோம்.”
“அங்குதான் பிரச்சனை வெடித்தது. எனக்கு தம்பி வயது இருக்கும் ஒரு ஜிம் பயிற்சியாளருடன் என்னை ஒப்பிட்டு பேசினார். அதுதான் என்னுடைய மண வாழ்க்கையின் இறுதி அத்தியாயமாக அமைந்தது.நண்பர் ஒருவர் மூலம் கிடைத்த ஆலோசனை மூலம் பாடி பில்டங்கை முழு நேரமாக எடுத்ததாக கூறும் ரூபி, தொடக்கத்தில் உடற்பயிற்சி கூடத்தில் பெரும் அவமானங்களை சந்தித்ததாகவும் கூறுகிறார்.
ஆண்கள் தங்கள் உடம்பை பாடி பில்டிங்கிற்கு தயார் செய்ய அவர்கள் உட்கொள்ளும் உணவைவிட மூன்று மடங்கு அதிகமான உணவை பெண்கள் உட்கொள்ள வேண்டும். போட்டிக்கு தயாராவதற்கு முன்பு, நான் தினமும் மூன்று கிலோ இறைச்சி உண்பேன்.
பாடி பில்டிங் அல்லது உடற்பயிற்சிக்கு செய்ய வரும் பெண்கள் முதலில் தங்கள் உடலை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் இதில் வெற்றிப்பெற முடியும். கடந்தாண்டு, அசாமில் நடைபெற்ற தேசியளவிலான பாடி பில்டிங் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார் ரூபி.
இந்த உலகில் சில இனத்தினர் பராம்பரியம் என்ற பெயரில் சில மூடப்பழக்க வழக்கங்களை தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர் . உலக மக்களின் பார்வைக்கு அது மூடத்தனமாக இருந்தாலும், அவர்களை பொறுத்தவரை அது நம்பிக்கை, தங்கள் வாழ்க்கையோடு ஒன்றிணைந்த ஒரு மரபாக பார்ப்பதால் அது மூடத்தனமாக தெரிவதில்லை.
அமேசானிய யானோமமி பழங்குடியினர் தங்கள் இனத்தினர் இறந்துவிட்டால் பிணத்தை எரித்து அதனை வாழைப்பழத்தில் தொட்டு சாப்பிடும் பழக்கத்தை காலம் காலமாக பின்பற்ற வருகிறார்.
இதனை ‘எண்ட்கானிபலிசம்’ என்று அழைக்கிறார்கள். அதாவது, இந்த இனத்தை சேர்ந்தவர்கள் இறந்துவிட்டால் அவர்களின் சாம்பலை சாப்பிடுகிறார்கள்.
மேலும், இறந்துபோனவர்களின் பிணத்தை எரித்து சாம்பலை வாழைப்பழத்தில் கலந்து சாப்பிடுவது இவர்களது மரபு. இதன் மூலம் அவர்களின் ஆத்மா எங்கும் செல்லாமல் தங்களுக்குள்ளே இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். காலம் காலமாக இந்த மரபினை பின்பற்றி வருகிறார்கள்.
ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தால் கடத்தப்பட்ட 10 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பதாக அவரின் உறவினர் மூலம் தெரியவந்துள்ளது. ஈராக்கின் சினர் பகுதியை சேர்ந்த மர்வா கிதர் (10) என்ற சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2014-ல் சினர் பகுதிக்குள் ஐ.எஸ் தீவிரவாதிகள் நுழைந்தனர்.
பின்னர் அங்கிருந்த அனைத்து குடும்பங்களையும் துப்பாக்கி முனையில் மிரட்டிய பின்னர் ஆண்களை உயிரோடு எரித்தார்கள். இதையடுத்து பெண்களை வயது வாரியாக பிரித்து சிரியாவுக்கு தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.
அப்படி 10லிருந்து 20 வயது வரை உள்ள பெண்களை ஐ.எஸ் இயக்கத்தின் சீனியர்கள் தங்கள் வசப்படுத்தினார்கள். அப்படி தான் சிறுமி மர்வா ஒரு குழுவிடம் சிக்கினார்.
இந்நிலையில் தீவிரவாதிகள் பிடியிலிருந்து சமீபத்தில் தப்பிய மர்வாவின் அத்தை, ஐ.எஸ் தீவிரவாதிகளின் கோரமுகத்தை பற்றி தெரிவித்தார். அவர் கூறுகையில், என் தோழி ஒருவர் சிறுமி மர்வாவை பார்த்துள்ளார். அப்போது அவர் கர்ப்பமாக இருந்துள்ளார்.
மர்வா கர்ப்பமாக இருப்பது அவ்வளவு பயங்கரம் இல்லை, காரணம் அவள் போன்ற சிறுமிகளை 100-க்கும் மேற்பட்டோர் பலாத்காரம் செய்து பாலியல் அடிமையாக வைத்திருப்பார்கள். Yazidis எனப்படும் குர்தி மொழி பேசுபவர்கள் தான் நாங்கள், எங்களையும் சேர்த்து 6500 பேர் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர்.
அதில் பாதிபேருக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. அப்படி தான் சிறுமி மர்வாவின் தற்போதைய நிலை என்னவென்றே தெரியவில்லை. முக்கியமாக கடத்தப்படும் சிறுமிகள், பெண்கள் பலமுறை பலரிடம் விற்கப்படுவார்கள். நானும் என் குடும்பத்தாரும் மர்வாவை அதிகம் மிஸ் செய்கிறோம் என கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தனது நண்பன் உயிரிழந்ததை தாங்கி கொள்ள முடியாத நண்பன் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மங்கலமும், முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவரும் உயிர் நண்பர்கள் ஆவார்.
இதில், மங்கலம் என்பவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த காதல் தோல்வியில் முடிந்ததையடுத்து மன வேதனையடைந்த அவர் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது இறுதிச் சடங்கி பங்கேற்று விட்டு ஊர் திரும்பிய கனகராஜ், நண்பன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உயிர் நண்பனின் இறப்பு தாங்க முடியாமல் நண்பன் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொலம்பியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து வரும் உதவிப் பொருட்களை வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ தடுத்து நிறுத்தியதால் அந்நாட்டின் எல்லைப்புற நகரங்களில் கடும் மோதல்கள் வெடித்துள்ளன.
உதவிப் பொருட்களை பெற வந்த மற்றும் கொடுக்க வந்த மக்கள் மீது பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டையையும், ரப்பர் குண்டுகளையும் வீசியுள்ளனர். இந்த கலவரத்தில் பலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட்து என மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்க்கட்சியினர் இந்த உதவி பொருட்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான இடங்களுக்கு சென்றடைய வேண்டும் என தெரிவிக்கின்றனர் ஆனால் இது பாதுகாப்பு அச்சுறுத்தல் என்கிறார் மதுரோ. அமெரிக்கச் செயலர் மைக் பாம்பேயோ பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
வெனிசுவேலாவின் இடைக்கால ஜனாதிபதியாகத் தம்மைத் தாமே பிரகடனம் செய்துகொண்டுள்ள எதிர்க் கட்சித் தலைவரும், இந்த உதவிகளை பெற ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவருமான குவான் குவைடோ, பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
டஜன் கணக்கான நாடுகளால் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்ட குவைடோ அமெரிக்க துணை ஜனாதிபதியை சந்திக்க திங்களன்று கொலம்பியா செல்லவுள்ளார்.
மதுரோ அரசாங்கத்தால் இவர்மீது பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், வெனிசுவேலா நெருக்கடியை தீர்க்க அமைக்கப்பட்ட, 12 லத்தின் மற்றும் மத்திய அமெரிக்க நாடுகள் அடங்கிய லிமா அமைப்பின் தலைவர்களை சந்திக்கவுள்ளார் குவைடோ.
குவான் குவைடோ, டன் கணக்கான மருந்து மற்றும் உணவுப்பொருட்களை வெளிநாடுகளின் உதவியோடு ஒருங்கிணைத்து அதனை வெனிசுவேலாவுக்குள் சனிக்கிழமைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் ஜனாதிபதி மதுரோ இதனால் நாட்டின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று பிரேசில் மற்றும் வெனிசுவேலாவுடனான எல்லையை மூடிவிட்டார்.
இதனிடையே உணவு மற்றும் மருந்து பொருட்கள் கொண்ட உதவி பொருட்களை பெற எல்லையைத் தாண்டும் முயற்சியில் வெனிசுவேலா மக்கள் ஈடுபட்டனர்.
எல்லைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், தன்னார்வலர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசுவதும், போராட்டக்காரர்கள் சோதனைச் சாவடிகளை எரிப்பதும் எரிப்பொருட்களை பாதுகாப்பு படையினர் மீது வீசுவதும் அம்பலமாகியுள்ளது.
இச்சம்பவத்தில் 14 வயது சிறுவன் உட்பட இரண்டு பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி சிக்கல் தீவிரமான 2014 ஆம் ஆண்டு முதல், மக்கள்தொகையில் சுமார் 10% உள்ள 30 லட்சம் மக்கள் வெனிசுவேலாவை விட்டு வெளியேறியுள்ளனர்.
சுமார் மூன்று லட்சம் வெனிசுவேலா மக்கள் இறக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக குவைடோ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஒரு தலைக் காதலால் காதலியை வெட்டி கொலை செய்த காதலன், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் ரம்யா. இவர் கல்லூரி படித்துக் கொண்டிருந்த போது ராஜசேகர் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
அதன் பின் ரம்யாவை பெண் கேட்டு ராஜசேகரின் குடும்பத்தினர் சென்ற போது, ஜாதியைக் சுட்டிக் காடி பெண் கொடுக்க மறுத்ததால், ஆத்திரத்தில் இருந்த ராஜசேகரன் ரம்யாவை கொலை செய்யும் நோக்கோடு இருந்து வந்துள்ளார்.
அதன் படி நேற்று முன்தினம் பள்ளியில் மாணவர்களுடன் ரம்யா பேசிக் கொண்டிருந்த போது திடீரென்று உள்ளே நுழைந்த ராஜசேகர் அவரை துடி துடிக்க வெட்டி கொலை செய்தார்.
இந்த சம்பவத்தையடுத்து பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், காதலன் ராஜசேர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தொப்பையால் குளம் முந்திரிக்காட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் இறந்துபோன தனது கணவரின் ராணுவப்பணியில் ஈடுபட முடிவு செய்துள்ள நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரசாத் மஹாதிக் என்ற ராணுவ மேஜர் 2017-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி அருணாச்சலப்பிரதேசத்தில் இந்திய-சீன எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது தீ விபத்தில் உயிரிழந்தார்.
தனது கணவர் இறந்துவிட்ட நிலையில், வேதனையில் இருந்து மீண்டு வந்துள்ள மனைவி கவுரி தனது கணவர் போலவே, தாய்நாட்டுக்காக இராணுவ பணியை மேற்கொள்ளவுள்ளார்.
ராணுவத்தில் சேர்வதற்கான SSB தேர்வை முதன் முறையாக எழுதி தேர்ச்சி பெறத் தவறிய கவுரி, விடாப்பிடியாக படித்து தம்மைப் போன்றவர்களுக்கான பிரிவில் முதல் மதிப்பெண் பெற்றார்.
வரும் ஏப்ரல் மாதம் சென்னையில் உள்ள ஆபிசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் பயிற்சியில் சேரவுள்ள அவர், அடுத்த ஆண்டு லெஃப்டினன்ட் ஆக ராணுவத்தில் இணைகிறார்.
அமெரிக்காவை சேர்ந்த இரட்டை சகோதரிகள் இரட்டை சகோதரர்களை திருமணம் செய்து கொண்ட நிலையில், கணவர்களை இரண்டு பெண்களும் மாற்றி கொள்வார்களா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளனர்.
ஜோஸ் மற்றும் ஜெரிமீ சல்யர்ஸ் ஆகிய இரட்டை சகோதரர்கள் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் இரட்டை சகோதரிகளான பிரிட்டனி மற்றும் பிரியனா ஆகியோரை திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் பிரிட்டனி மற்றும் பிரியனா ஆகிய இருவரும் தங்கள் கணவரை மாற்றி கொள்வார்கள் என செய்தி பரவியது. இது குறித்து பிரிட்டனி அளித்துள்ள பேட்டியில், இரட்டை சகோதரிகளான நாங்கள் இரட்டை சகோதர்களை திருமணம் செய்துள்ளோம்.
இது விசித்திரமான நிகழ்வு என்பதை அனைவரும் அறிவீர்கள். நாங்கள் 4 பேரும் ஒரே வீட்டில் தான் இருக்கிறோம். நானும், பிரியனாவும் கணவரை அடிக்கடி மாற்றி கொள்கிறோமா என பலரும் கேட்கின்றனர். அப்படியெல்லாம் கிடையாது என கூறி கொள்கிறேன். நாங்கள் இருவரும் இந்தாண்டு ஒரே நேரத்தில் கர்ப்பமாவோம் என நம்புகிறோம் என கூறியுள்ளார்.