உலகை உலுக்கிய வழக்கில் அதிரடி திருப்பம் : 13 பிள்ளைகளை சங்கிலியால் பிணைத்து கொடூர சித்திரவதை செய்த பெற்றோர்!!

கொடூர சித்திரவதை செய்த பெற்றோர்

அமெரிக்காவில் 13 பிள்ளைகளை அடைத்து வைத்து கொடூரமாக சித்திரவதை செய்த வழக்கில் பெற்றோர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலேயே குறித்த சம்பவம் அரங்கேறியது. டேவிட் அலன் மற்றும் லூயிஸ் துர்பின் ஆகிய தம்பதிகளே தங்கள் சொந்த பிள்ளைகளை கொடூரமாக சித்திரவதைக்கு உட்படுத்தியவர்கள். இவர்கள் மீதான 14 குற்றச்சாட்டுகள் விசாரணை அதிகாரிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

3 வயது முதல் 30 வயது வரையான இவர்களின் பிள்ளைகளை ஆண்டுக்கணக்கில் இவர்களது குடியிருப்பில் அடைத்துவைத்து சித்திரவதை செய்ததாக கூறி கடந்த ஆண்டே பொலிசார் இவர்களை கைது செய்துள்ளனர்.

சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ள வழக்குகளை இவர்கள் இருவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. இவர்களின் 17 வயது மகள் வாய்ப்பமைந்தபோது வீட்டுச் சிறையில் இருந்து தப்பித்த நிலையிலேயே இந்த விவகாரம் தொடர்பில் வெளியுலகத்திற்கு தெரியவந்தது. தப்பிய இவர்களின் மகள் ஜோர்டான், தமது மொபைலில் இருந்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பெற்றோருக்கு சொந்த பிள்ளைகளிடம் இப்படி நடந்துகொள்ள முடியுமா என்ற கேள்வி, ஜோர்டான் தெரிவித்த கதைகளால் பலருக்கும் எழுந்துள்ளது. தாம் இதுவரையும் வெளியுலகம் கண்டதில்லை என கூறிய ஜோர்டான், தங்களது குடியிருப்பானது எப்போதும் அழுக்கடைந்து காணப்படும் எனவும்,

மூச்சு விடவே அருவெறுப்பாக இருக்கும் என கூறிய ஜோர்டான், மாதத்தில் ஒருமுறையே குளிக்க அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சங்கிலியால் படுக்கையுடன் பிணைக்கப்பட்டிருந்ததால் அதனால் ஏற்பட்ட காயங்கள் ஆறாமல் தொல்லை தரும் என கூறிய ஜோர்டான், வலியால் பலமுறை தமது சகோதரர்கள் அழுவதை காண நேர்ந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாள் ஒன்றுக்கு 20 மணி நேரமும் தூங்க வேண்டும் என பெற்றோர் தங்களை நிர்பந்தித்ததாக கூறும் அவர், நள்ளிரவு தாண்டிய பின்னரே எப்போதும் உணவு தரப்படுவதாகவும், அது ஒருமுறை மட்டுமே வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்களை சந்திக்க அனுமதி இல்லை எனவும், கழிவறைக்கு செல்ல மட்டுமே சங்கிலியை அவிழ்த்து விடுவதாகவும் அவர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். தற்போது மீட்கப்பட்ட 13 பேரும் சிறார்களுக்கான இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

3 வயது குழந்தையுடன் தாயை ஓட ஓட விரட்டிக்கொலை செய்த ரவுடி : வேடிக்கை பார்த்த பொதுமக்கள்!!

வேடிக்கை பார்த்த பொதுமக்கள்

வேளாங்கன்னி மாவட்டத்தில் திருட்டுகுமார் என்ற ரவுடி பெண் ஒருவரை ஓட ஒட வெட்டிக்கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். ஆனந்தவேலனின் மனைவி சரண்யா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண்குழந்தை உள்ளது. பூக்கடை நடத்தி வரும் சண்யாவிடம் ரவுடி திருட்டுகுமார் அத்துமீற முயன்றுள்ளார்.

சரண்யாவுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளான். இதை சரண்யா தனது கனவரிடம் கூற, சரண்யாவின் கணவர் ஆனந்தவேலனுக்கும், திருட்டு குமாருக்கும் மோதல் ஏற்பட்டது.

இதுகுறித்து பொலிசில் புகார் அளித்தும் பலனில்லை. மேலும், திருட்டுகுமார் பொய்யான புகாரை சரண்யாவின் கணவர் மீது கொடுத்து அவரை சிறைக்கு அனுப்பியுள்ளார். பொலிசாரும் ரவுடிக்கு ஆதரவாக இருந்துள்ளனர்.

கணவர் சிறையில் இருந்த நேரம் பார்த்து, சரண்யாவின் வீட்டுக்குள் நுழைந்த ரவுடிகுமார் கத்தியால் வெட்டிக்கொலை செய்ய முயன்றுள்ளார். உயிரை காப்பாற்றிக்கொள்ள தனது குழந்தையுடன் தெருவில் ஓடியுள்ளார். ஆனால், அச்சத்தில் அக்கம்பக்கத்தில் காப்பாற்ற முன்வரவில்லை. கொலை செய்துவிட்டு எங்கும் தப்பித்து செல்லாமல், துணிச்சலோடு தனது வீட்டிலேயே சர்வ சாதாரணமாக உட்காந்திருந்த ரவுடி திருட்டு குமாரை, பொலிசார் கைது செய்தனர்.

கர்ப்பிணி மனைவியை துடிதுடிக்க கொலை செய்தது ஏன்? கணவனின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

அதிர்ச்சி வாக்குமூலம்

ஆந்திராவில் 24 வயதான இளம் கர்ப்பிணி மனைவியை துடிதுடிக்க கொலை செய்த வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிப் நகரில் வசித்து வந்த சாலினி என்ற இளம் கர்ப்பிணி தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவருக்கும், விஜயகுமார் என்பவருக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

மதுபோதைக்கு அடிமையான விஜயகுமார், திருமணமான நாள் முதல் சாலினியை அடித்து சித்ரவதை செய்துள்ளார். மேலும் அசிங்கமான வார்த்தைகளால் திட்டுவதை வழக்கமா கொண்டுள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் பிரச்சனை இருந்து வந்தது. இதற்கிடையில் தான் சாலினி கர்ப்பமாகியுள்ளார். வழக்கம்போல வீட்டுக்கு வந்த விஜயகுமார், கர்ப்பிணியாக இருந்த சாலினியிடம் பிரச்சனை செய்துள்ளார்.

இந்த வாக்குவாதத்தில் கோபமடைந்த விஜயகுமார், கர்ப்பிணி மனைவி என்றும் பாராமல், தலையில் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். மனைவியை கொலை செய்துவிட்டு, நடந்தவை குறித்து பொலிசில் வாக்குமூலமாக அளித்து சரணடைந்துள்ளார்.

வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலை : அறிக்கை கோருகிறது ஆளுனர் அலுவலகம்!!

வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலை

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக, பொதுமக்கள் குடிமனைக்கருகில் மதுபானசாலை இயங்குவது தொடர்பாக தமக்கு அறிக்கை சமர்பிக்குமாறு வடமாகாண ஆளுநரின் உதவிச் செயலாளர் எக்ஸ்.செல்வநாயகத்தால் யாழ். மாவட்ட உதவி மதுவரி ஆணையாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில்தெரிவிக்கபட்டுள்ளதாவது,

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான நிலையமானது பொதுமக்களிற்கு இடையூறாக காணப்படுவதாக தெரிவித்தும் அதனை அகற்றுமாறு கோரியும் குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்கத்தினால் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தபட்டிருந்தது.

எனவே இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்து பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்து அறிக்கை சமர்பிக்குமாறு ஆளுநரால் எனக்கு பணிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக இவ்விடயம் தொடர்பாக பொருத்தமான நடவடிக்கையினை எடுப்பதற்காக மதுவரி திணைக்களம் ஒரு வாரகாலத்திற்குள் அறிக்கை ஒன்றினை தமக்கு அனுப்பி வைக்குமாறு குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் பிரதி ஒன்று வவுனியா குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் கபில்நாத்திற்கும் அனுப்பிவைக்கபட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

வித்தியாசமாக செல்போன் திருடிய இளைஞனுக்கு நேர்ந்த கதி!!

இளைஞனுக்கு நேர்ந்த கதி

இணையத்தளங்களில் வெளியிடப்படும் செல்போன் விளம்பரங்களுக்கு அமைய அவற்றை கொள்வனவு செய்ய சென்று போலி குறுஞ் செய்தியைகாட்டி மோசடியில் ஈடுபட்ட இளைஞனை கட்டுநாயக்க பொலிஸார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

21 வயதான இந்த இளைஞன், முதலில் காலி, ஹிக்கடுவை, பின்னர் கொழும்பு நுகேகொடையில் வசித்து வந்துள்ளதுடன், இந்த பிரதேசங்களில் இரண்டு திருமணங்களை செய்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்டவிசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நபர், இணையத்தளங்களில் விளம்பரம் செய்யும் செல்போன் உரிமையாளர்களை தொடர்புக்கொண்டு அவர்களை சந்தித்து செல்போனை பரிசோதித்த பின்னர், உரிமையாளர்களின் விலைக்கு அதனை வாங்க இணங்கியுள்ளார்.

இதன் பின்னர், செல்போன் உரிமையாளர்களின் வங்கிக் கணக்கை பெற்றுக்கொண்டு, தொலைபேசி மூலம் தனது வங்கிக் கணக்கில் பணத்தை மாற்றியதற்கான வங்கி அனுப்பும் குறுஞ்ச் செய்தியை காட்டி செல்போனை எடுத்துச் சென்றுள்ளார்.

வங்கிக் கணக்கில் பணம் வந்துள்ளதா என செல்போன் உரிமையாளர்கள் வங்கியிடம் விசாரிக்கும் போது அப்படியான பண பரிமாற்றம் நடக்கவில்லை என வங்கியில் உள்ளவர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து இளைஞனிடம் விசாரிக்கும் போது அது இணையத்தளத்தால் ஏற்பட்ட தாமதமாக இருக்கலாம் அது சற்று நேரத்தில் சரியாகும் என செல்போன் உரிமையாளர்களிடம் கூறி வந்துள்ளார்.

இவ்வாறு தந்திரமாக கொள்ளையிடும் செல்போன்னை சந்தேகம் விற்பனை செய்துள்ளார். இவ்வாறு தம்மிடம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெஹிவளை, பாணந்துறை, கல்கிஸ்சை, மிரிஹான, கட்டுநாயக்க பொலிஸ் நிலையங்களில் பலர் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த முறைப்பாட்டை அடுத்து கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார், செல்போன் விற்பனைக்கு இருப்பதாக இணைத்தளத்தில் விளம்பரம் செய்துள்ளனர்.

குறித்த இளைஞன் செல்போனை பெற்றுக்கொள்ள கட்டுநாயக்க பிரதேசத்திற்கு சென்றிருந்த போது பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பரிதாபமாக உயிரிழந்த நான்கு வயது சிறுமி!!

உயிரிழந்த நான்கு வயது சிறுமி

திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நான்கு வயது சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்த சிறுமி கிண்ணியா – காக்காமுனை – பாடசாலை வீதியை சேர்ந்த ரிச்சப் முகம்மட் நியாஸ் என்பவரின் மகள் சைனுல் சமா (04 வயது) எனவும் தெரியவருகின்றது.

கடந்த வியாழக்கிழமை இரவு காய்ச்சல் காரணமாக கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், இதனையடுத்து திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனைகளை திங்கட்கிழமை முன்னெடுக்கவுள்ளதாகவும், சட்ட வைத்திய நிபுணர் மரணம் தொடர்பில் பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மரண விசாரணை முடிவடைந்த பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

யாழில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள ஆவா குழுவினர் : வீட்டிற்குள் புகுந்து அட்டகாசம்!!

ஆவா குழுவினர்

யாழில் மீண்டும் ஆவாக் குழு எனப்படும் வன்முறைக் குழுவினால் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்துகிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தன்னிச்சையாக எழுச்சி பெற்றதாகவும், ஒட்டுக் குழுவினராலும் வழி நடத்தப்படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய இக்குழுவினர் அடிக்கடி வாள்வெட்டுத் தாக்குதல்களை யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் இவர்களை பிடிக்கும் நோக்கில் பொலிஸார் களமிறங்கியிருந்தனர். எனினும் அக்குழுவினர் தப்பித்துக் கொண்டிருப்பதும், அதன் உறுப்பினர்கள் என சிலரும் கைது செய்யப்பட்டிருந்தமையும் தெரிந்ததே.

ஆனால் நேற்று மாலை அக்குழுவின் ஆரம்பகால தலைவர்களில் ஒருவரும் தற்போது தலைமறைவாகியுள்ளவருமான சன்னா என்பவருடைய வீட்டுக்குள் புகுந்து ஆவா குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளது.

பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள இக்குழுவானது இரண்டாகப் பிரிவடைந்துள்ளதாகவும், இதன் மூலம் தலைமறைவாகியுள்ள சன்னா என்பவரின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

மானிப்பாய், கட்டப்பாழி ஒழுங்கையில் உள்ள வீட்டின் மீதே இன்று மாலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீட்டுக்குள் நுழைந்த குழுவொன்று வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்களை பெற்றோல் ஊற்றி எரியூட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் இது தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் இது குறித்து மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இன்று முற்றாக முடங்கவுள்ள வடமாகாணம்!!

முடங்கவுள்ள வடமாகாணம்

காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பூரண ஹர்த்தால் போராட்டம் காரணமாக வடக்கு மாகாணம் இன்று முழுமையாக முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வர்த்தக மற்றும் போக்குவரத்துச் சேவைகள் எவையும் இடம்பெறாது என்பதுடன், அலுவலகங்கள், பாடசாலைகளும் முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும், காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டும், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்று வலியுறுத்தியும் இன்று வடக்கு மாகாண முழுவதும் பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இன்று காலை 8.30 மணிக்கு கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஆதரவு வெளியிட்டுள்ளன. சிவில் அமைப்புக்களும் தாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம் என்று அறிவித்துள்ளன.

இதனால் வடக்கு மாகாணத்தில் இன்றய போக்குவரத்துச் சேவைகள், வர்த்தக, வணிக, வங்கிச் சேவைகள் இடம்பெறாது என்று தெரிவிக்கப்படுகின்றது. ஆசிரியர் தொழிற்சங்கங்களும் இன்றய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கையும் முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அலுவலகங்களின் செயற்பாடுகளும் இடம்பெறாது என்று கூறப்படுகின்றது.

வவுனியா நகரசபையின் அமர்வு ஹர்த்தால் காரணமாக பிற்போடப்பட்டது!!

வவுனியா நகரசபையின் அமர்வு

வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு நாளை நடைபெறவுள்ள ஹர்த்தால் காரணமாக செவ்வாய்கிழமைக்கு பிற்போடப்பட்டுள்ளதாக சபையின் தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்தார்
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

திங்கட்கிழமை சபையின் மாதாந்த அமர்வு நடைபெறவிருந்தநிலையில், காணாமல் ஆக்கபட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கபடுவதுடன், வடமாகாணம் தழுவிய ரீதியில் ஹர்த்தால் ஒன்றை அனுஸ்டிப்பதற்கும் தமிழ் மக்கள் தயாராகிவருகின்றனர்.

இந்நிலையில் நீண்டகாலமாக தமிழ்மக்களின் முக்கிய பிரச்சினையாக காணப்படும் காணாமல்ஆக்கபட்டவர்களின் நிலை தெரியபடுத்தபடவேண்டும் என்பதுடன் அவர்களின் போராட்டங்கள் நியாயமானதுமே.

அவர்களது நியாயமான கோரிக்கைக்கு அமைவாக வவுனியா நகரசபை அவர்களுக்கு ஆதரவாக இருப்பதுடன் நாளை நடைபெறவிருந்த மாதாந்த அமர்வை இடைநிறுத்தி நாளை மறுதினம்
செவ்வாய்கிழமை குறித்த அமர்வை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

அத்துடன் கிளிநொச்சியில் நடைபெறும் போராட்டத்தில் நாம் கலந்துகொள்ளவுள்ளதுடன் ஏனைய உறுப்பினர்களும் கலந்துகொண்டு போராட்டத்திற்கு வலுசேர்குமாறு அவர்’மேலும் தெரிவித்தார்.

நாளை முற்றாக முடங்கும் வடமாகாணம்!!

முற்றாக முடங்கும் வடமாகாணம்

காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பூரண ஹர்த்தால் போராட்டம் காரணமாக வடக்கு மாகாணம் நாளை திங்கட்கிழமை முழுமையாக முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வர்த்தக மற்றும் போக்குவரத்துச் சேவைகள் எவையும் இடம்பெறாது என்பதுடன், அலுவலகங்கள், பாடசாலைகளும் முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும், காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டும், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்று வலியுறுத்தியும் நாளை வடக்கு மாகாண முழுவதும் பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நாளை காலை 8.30 மணிக்கு கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஆதரவு வெளியிட்டுள்ளன. சிவில் அமைப்புக்களும் தாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம் என்று அறிவித்துள்ளன.

இதனால் வடக்கு மாகாணத்தில் நாளைய தினம் போக்குவரத்துச் சேவைகள், வர்த்தக, வணிக, வங்கிச் சேவைகள் இடம்பெறா என்று தெரிவிக்கப்படுகின்றது. ஆசிரியர் தொழிற்சங்கங்களும் நாளைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கையும் முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அலுவலகங்களின் செயற்பாடுகளும் இடம்பெறாது என்று கூறப்படுகின்றது.

3 அடி உயரம் கொண்ட குள்ளபெண்ணை திருமணம் செய்து கொண்ட அழகான இளைஞர்!!

3 அடி 2 அங்குலம் மட்டுமே உள்ள குள்ளப்பெண்

இந்தியாவில் 3 அடி 2 அங்குலம் மட்டுமே உள்ள குள்ளப்பெண்ணை இளைஞர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் வித்தியாசாகர் (25). பெற்றோரை இழந்த இவர் தனது சகோதரி அரவணைப்பில் வளர்ந்தார்.

பட்டப்படிப்பு முடிந்த பின்னர் மளிகை கடை ஒன்றை சொந்தமாக நடத்தி வந்தார் வித்தியாசாகர். இந்நிலையில் ரவாளி (22) என்ற 3 அடி 2 அங்குலம் மட்டுமே உள்ள குள்ளப்பெண்ணை வித்தியாசாகருக்கு மணமுடித்து வைக்க முடிவெடுக்கப்பட்டது.

இதற்கு 5அடி 4 அங்குலத்தில் உள்ள அழகான இளைஞரான வித்தியாசாகரும் சம்மதித்தார். அதன்படி இருவருக்கும் நேற்று முன் தினம் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

பீடி சுற்றி படிக்க வைத்த தந்தை : ஏழ்மையிலும் சாதித்த மாணவி!!

ஏழ்மையிலும் சாதித்த மாணவி

திருநெல்வேலி மாவட்டத்தில் ஏழ்மையான நிலையிலும் மாணவி ஒருவர் தேர்வெழுதி வெற்ற பெற்றதன் மூலம் டிஎஸ்பியாக தெரிவாகியுள்ளார்.

முருகானந்தம் என்பவர் பீடி சுற்றும் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சரோஜா. 12 ஆம் வகுப்பு வரை மாநகராட்சி பள்ளியில் படித்த இவர், அதன்பிறகு மழலையர் கல்வி கற்பித்தல் குறித்த பயிற்சி எடுத்தார்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுதிய நிலையில் தற்போது டிஎஸ்பியாக தேர்வாகி உள்ளார். ஏழ்மையான சூழலில் இருந்ததால் தன் பணியில் நேர்மையாக இருப்பேன் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரித்தானிய பெண்ணின் சூட்கேசை திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி!!

காத்திருந்த அதிர்ச்சி

இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரித்தானிய பெண் சொந்த நாட்டுக்கு திரும்பிய நிலையில் அவர் சூட்கேஸ் உள்ளே பெரிய பல்லி இருந்ததை கண்டுப்பிடித்துள்ளார். பிரித்தானியாவின் Chester நகரை சேர்ந்த பெண்ணொருவர் இலங்கைக்கு பயணமாக வந்த நிலையில் மூன்று நாட்களுக்கு முன்னர் தனது சொந்த ஊருக்கு திரும்பினார்.

அப்போது தனது சூட்கேஸை அவர் திறந்து பார்த்த போது உள்ளிருந்த குடையில் பெரிய பல்லி இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அப்போது தான் இலங்கையில் தங்கியிருந்த போது அங்கிருந்த பல்லி பெண்ணின் சூட்கேசுக்குள் புகுந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறிய பெட்டியில் பல்லியை வைத்து அப்பெண் மூடினார்.

பின்னர் RSPCA எனப்படும் விலங்கு நலவாரிய தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு இது குறித்து தகவல் அளித்தார். நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி லியேன் கிராக் என்பவர் அங்கு வந்து பல்லியை கைப்பற்றினார்.

அவர் கூறுகையில், இலங்கையில் இருந்த பல்லி 5500 மைல் தூரம் பயணம் செய்து இங்கு வந்து விட்டது. எங்களால் சில நேரங்களில் வெளிநாட்டிலிருந்து தவறுதலாக எடுத்து வரப்படும் மிருகங்களை மீண்டும் சொந்த நாட்டின் இயற்கை சூழலில் விடமுடிவதில்லை.

பிரித்தானியாவில் குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது, இதை இந்த பல்லியால் தாங்க முடியாது. இதை இங்கு அப்படியே விடுவது, பிரித்தானியாவில் விலங்கு நலச்சட்டத்தின் படி குற்றமாகும்.

அதன்படி இந்த பல்லியை சரியாக பராமரிக்கும் அதற்கான விலங்கு நல ஊழியரிடம் கொண்டு செல்லப்படும் என கூறியுள்ளார்.

பூனையின் பெயரில் ரூ 1400 கோடியை உயில் எழுதி வைத்த கோடீஸ்வரர் : காரணம் இதுதான்!!

செல்லப்பிராணிக்கு 1400 கோடி

ஜேர்மனியை சேர்ந்த கோடீஸ்வர ஆடை வடிவமைப்பாளர் உயிரிழந்த நிலையில் தனது செல்லப்பிராணிக்கு 1400 கோடியை கோடியை எழுதி வைத்துள்ளார். பிரபல ஆடை வடிவமைப்பாளர் கார்ல் லாகர்ஃபெட், தன் செல்லப்பிராணி ‘செளபீட்’ மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அரசு அனுமதித்தால் செளபீட்டை திருமணம் செய்து கொள்ளக்கூட தயார் என நகைச்சுவையாக கூறியிருந்தார்.

இந்நிலையில் கார்ல் கடந்த 19ம் திகதி உயிரிழந்தார். இதையடுத்து தனது செளபீட் மீது வைத்திருந்த பாசத்துக்கு அடையாளமாக தான் இறப்பதற்கு முன்னர் தன் சொத்தில் ஒரு பங்கான ரூ. 1400 கோடியை செளபீட்டின் பேரில் எழுதி வைத்துள்ளார்.

தான் உயிருடன் இருக்கும் வரை தன் செல்லப்பிராணி செளபீட் பூனையை மிகவும் கண்ணும் கருத்துமாக பேணி பாதுகாத்து வந்த கார்ல் லாகர்ஃபெட், தான் மறைந்த பின்னர் அதே போல் செளபீட் வாழ இப்படி அதன் மீது 1400 கோடி மதிப்புள்ள சொத்துக்களை எழுதி வைத்துள்ளார்.

மர்மமான முறையில் இறந்து கிடந்த இளம் பெண் இயக்குனர் : கொலையா? தற்கொலையா?

இளம் பெண் இயக்குனர்

இளம் மலையாள பெண் இயக்குனர் நயன சூர்யன், அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் அருகிலுள்ள கருநாகப்பள்ளியை சேர்ந்த நயன சூர்யன், சினிமாவுக்காக திருவனந்தபுரத்தில் தங்கி இருந்தார். இவர் சமீபத்தில் மறைந்த பிரபல இயக்குனர் லெனின் ராஜேந்திரனிடம் உதவி இயக்குனராக சேர்ந்து பணியாற்றினார்.

பின்னர் பல விளம்பர படங்களையும் இயக்கினார். கடந்த 2017ஆம் ஆண்டு ‘பக்‌ஷிகளுடே மனம்’ என்ற படத்தை இயக்கிய நயன சூர்யன், ஏராளமான நாடகங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து அவரது வீட்டிற்கு சென்ற பொலிசார், நயன சூர்யனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலதிக தகவல்கள் எதுவும் உடனடியாக கிடைக்கவில்லை.

கோர விபத்தில் 6 பேர் படுகாயம்!!

6 பேர் படுகாயம்

பேராதனை ரியகம பிரதேசத்தில் பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி 03 வாகனங்களுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

நேற்று காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் 06 பேர் காயமடைந்து கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரவூர்தியின் சாரதிக்கு வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து பேராதனை காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.