ராணுவ வீரர்களுக்காக தாலி கட்டுவதற்கு முன் தமிழக தம்பதியினர் செய்த நெகிழ்ச்சி செயல்!!

தம்பதியினர் செய்த நெகிழ்ச்சி செயல்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு திண்டுக்கல்லை சேர்ந்த புதுமணத்தம்பதியினர் அஞ்சலி செலுத்தியதோடு, ரத்ததானம் செய்துள்ள சம்பவம் அனைவரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தற்கொலைபடை தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அவர்களுக்கு அஞ்சலித்து செலுத்தும் விதமாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பொதுமக்கள் பலரும் ஆங்காங்கே பதாகைகளை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த ஹரிஹரன்(25) என்பவருக்கும், அனுமோனிஷா (23) என்பவருக்கும் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திருமண மணடபத்தில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு முன்பாக மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்திய தம்பதியினர், அதன் பிறகு மேடைக்கு அருகில் அமர்ந்தவாறே ரத்ததானம் செய்தனர்.

இதனை பார்த்து நெகிழ்ந்து போன உறவினர்கள் பலரும் ரத்ததானம் செய்ய முன்வந்தனர். இந்த விழாவின் போது 35 பேர் வரை ரத்ததானம் செய்ததாக திருமண தம்பதியினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வு!!

 

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டம் ஒன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பிராந்திய சுகாதார திணைக்களத்தின் பொது சுகாதார பரிசோதகர் எம்.தியாகலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் திருமதி பசுபதிராஜா, பிராந்திய சுகதார சேவைகள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் மகேந்திரன், தொற்று நோயியல் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி வைத்தியர் லவன், தாபரி கலாமன்ற உறுப்பினர்கள், மாணவர்கள், மற்றும் பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது தொழுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதனைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளக் கூடிய வழிவகைகளை குறித்து ஆராயப்பட்டதுடன், தொழுநோய் கட்டுப்படுத்தும் செயற்திட்டத்தை கடந்த காலங்களில் முன்னெடுத்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

மகன்களை கொலைசெய்துவிட்டு தாய் எடுத்த சோக முடிவு!!

தாய் எடுத்த சோக முடிவு

கடலூர் மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக 2 மகன்களை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதிவாணன் – சிவசங்கரி ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த ஒரு வருடமாக கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை இருந்துவ்ந்துள்ளது. இதனால் சிவசங்கரி மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தனது இருமகன்களுக்கு விஷ மருந்து கொடுத்து கொலை செய்துள்ளார்.

பின்னர் இறந்துபோன மகன்களுக்கு மலர்தூவி அழுதுள்ளார். இதனைத்தொடர்ந்து தானும் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.வீடு திரும்பிய மதிவாணன் தனது மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து அழுதுள்ளார்.

 சிவசங்கரி தற்கொலை கொள்வதற்கு முன்னதாகக் காவல்துறை மற்றும் உறவினர்கள் அம்மா, தங்கை, மாமா எனத் தனித்தனியாக 4 கடிதங்கள் எழுதி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் என் கணவர் மிகவும் பொறுமையானவர், அவருக்கு நான் அதிகளவு தொந்தரவு கொடுத்துவிட்டேன். எனவே நான் சாகப்போகிறேன்.

என் சாவுக்கும் என் மகன்கள் சாவுக்கும் யாரும் காரணம் இல்லை. எங்கள் உடலை உடல் கூறாய்வு செய்ய வேண்டாம் என எழுதிவைத்துள்ளார்.

கோடிக்கணக்கில் மோசடி : இலங்கை, பிரித்தானியாவில் தாய், மகளின் சொகுசு வாழ்க்கை : அதிர வைக்கும் பின்னணி!!

தாய், மகளின் சொகுசு வாழ்க்கை

ஒரே வீட்டை 5 பேரிடம் விற்று மோசடியாக கோடிக்கணக்கில் சம்பாதித்து இலங்கை, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த தாய் மற்றும் மகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் புதுடெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியைச் சேர்ந்தவர் மோலி கபூர் (65), இவர் தனது மகளான அனுராதா கபூருடன் (43) தங்களுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தனர்.

இவர்கள் தங்களது வீட்டினை 2.8 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வதாகக் கூறி 2014-15 காலகட்டத்தில் 5 பேரிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டு ஆளுக்கு 60 லட்ச ரூபாய், ஒரு கோடி ரூபாய் என மொத்தமாக 2.5 கோடி ரூபாயை முன்பணமாக பெற்றுக்கொண்டு, செல்ஃபோன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு தப்பிச்சென்றனர்.

இவர்கள் மீதான புகார்கள் இருவேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், ஹொட்டல் ஒன்றில் இவர்கள் தங்கியிருந்ததை அறிந்து அங்கு சென்ற பொலிசார் இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஏமாற்றிய பணத்தை கொண்டு பிரித்தானியா, இலங்கை, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்று சொகுசான வாழ்க்கை வாழ்ந்ததாக கூறி அதிர வைத்தனர்.

மேலும் அனுராதா லண்டன் பல்கலைக்கழகத்தில் MBA பட்டம் பெற்றவர் என்பதும், படித்துவிட்டு நாடு திரும்பியவர் எனவும் தெரிந்தது.

இங்கு, பங்கு ஆலோசகராக பணியாற்றி வந்த நிலையில் உடனடியாக அதிக பணம் சம்பாதிக்கும் பொருட்டு தனது தாயிடம் இந்த மோசடி யோசனை குறித்து எடுத்துக்கூறி அவரை தனக்கு சாதகமாக மாற்றி மோசடிக்கு துணை புரியவைத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

யாழில் இரு வீடுகள் மீது குண்டுத் தாக்குதல் : வாகனங்கள் தீக்கிரை!!

 

யாழ்ப்பாணம் கொக்குவில் கருவப்புலம் பிரதேசத்தில் இன்று இரு வீடுகள் மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளதால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் அடங்கிய குழுவொன்று வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் மற்றும் 2 மோட்டார் சைக்கிள் மீது தீ மூட்டிவிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவனை பயன்படுத்தி பெண்கள் செய்த கேவலமான வேலை!!

பெண்கள் செய்த கேவலமான வேலை

8 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்தை சிறுவனை பயன்படுத்தி இந்தியாவுக்கு கடத்திச் சென்ற இலங்கையை சேர்ந்த இரண்டு பெண்கள், மும்பாய் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் இருந்து சென்ற இவர்களை இந்திய சுங்க திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் தங்கத்தை கடத்தி வர பயன்படுத்தப்பட்ட சிறுவனின் தாய் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிறுவன் ஆடைகள் மற்றும் பாதணியில் மறைத்து கடத்தி வரப்பட்ட 11 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

தங்க வர்த்தகத்தில் பிரபலமான சுவிஸர்லாந்தில் தயாரிக்கப்பட்ட இந்த தங்கம் இந்திய ரூபாய் மதிப்பில் 3 கோடியே 31 லட்சம் ரூபாய் எனவும் இலங்கை ரூபாய் மதிப்பு 8 கோடியே 32 லட்சத்திற்கும் மேல் என தெரியவருகிறது.

சிறிய பிள்ளைகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோத தங்க கடத்தலை முறியடிக்க இந்திய சுங்க அதிகாரிகள் நடத்திய வரும் விசேட தேடுதலின் போதே இவர்கள் சிக்கியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவர் மிக நீண்டகாலமாக தங்க கடத்தில் ஈடுபட்டு வரும் பெண் எனவும் இந்த பெண் மற்றைய பெண்ணையும் அவரது மகனையும் தங்க கடத்தலுக்கு பயன்படுத்தியுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் சிறுவன் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

எல்லையில் இந்திய இராணுவம் ருத்ர தாண்டவம் : தொடர் தாக்குதல்!!

இந்திய இராணுவம் ருத்ர தாண்டவம்

இந்தியாவில் கடந்த 14ஆம் திகதி ஜம்மு காஷ்மீரில் இருந்து ஸ்ரீநகருக்கு சென்ற துணை இராணுவப்படையினர் மீது, பாகிஷ்தான் ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பினைச் சேர்ந்த ஒரு இளைஞர் தற்கொலைப்படைத் தாக்குதலை நடத்தியிருந்தார்.

குறித்த தாக்குதலின் போது 40இற்கும் மேற்பட்ட வீரர்கள் மரணமடைந்தமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. இந்நிலையில், அதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினர் 12 மணித்தியாலமாக நடத்திய வேட்டையில், புல்வாமா தாக்குதலின் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி கம்ரான் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பொறுப்பேற்ற, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் ஆசாருக்கு நெருக்கமானவர், கம்ரான் என்பதால், பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையில் இது முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

காஷ்மீரிலுள்ள இளைஞர்களுக்கு மூளைச் சலவை செய்து தங்கள் தீவிரவாத இயக்கத்தில் சேர்ப்பது மற்றும் அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தவர் கம்ரான். பாதுகாப்பு படையினர் கடந்த 12 மணி நேரமாக எல்லையில் நடத்திய தேடுதல் வேட்டை மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில் கம்ரான் கொல்லப்பட்டதோடு அவரது நண்பனான மற்றொரு தீவிரவாதி காஜி ரஷீத் என்பவரும் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய இராணுவத்தின் 4 வீரர்களும் வீர மரணம் அடைந்தனர். பொது மக்களில் ஒருவரும் பலியாகியுள்ளார். துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற பகுதி என்பது, கடந்த 14ஆம் திகதி சி.ஆர்.பி.எப் படை வீரர்கள் மீது தீவிரவாதி தற்கொலைத்தாக்குதல் நடத்திய இடத்தில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவிலுள்ள பகுதியாகும்.

கம்ரானை கடந்த பல ஆண்டுகளாகவே இராணுவம் தேடி வந்தது. ஆனால், கிராமம் கிராமமாக இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு இளைஞர்களை தீவிரவாதிகள் பக்கம் இழுக்கும் வேலையில் கம்ரான் ஈடுபட்டு வந்ததால், பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில்தான், இப்போது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இந்திய இராணுவம் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து 12 மணி நேரங்களாக காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து அதிரடி வேட்டை நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் மகனின் உயிரிழப்பை தாங்க முடியாத தாய் தற்கொலை!!

தாய் தற்கொலை

முல்லைத்தீவில் மகன் உயிரிழந்த சோகம் தாங்க முடியாத தாய் தற்கொலை செய்து கொண்ட பெரும் சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யோகராசா சரஸ்வதி என்ற தாயாரே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கடந்த முறை க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய மாணவனான யோகராசா துசியந்தன் தொடர்ச்சியாக நோய்வாய்ப்பட்டிருந்தார். யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவனின் சடலம் நேற்று அதிகாலை 2 மணிக்கு சிராட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மகனது பிரிவை தாங்க முடியாத தாயார் நேற்று அதிகாலை 5 மணியளவில் வீட்டிலிருந்து சுமார் 800 மீற்றர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஏற்கனவே ஒரு மகனை பறிகொடுத்த தாய் தனது இரண்டாவது பிள்ளையையும் பறிகொடுத்த தாக்கத்தை தாங்க முடியாத யோகராசா சரஸ்வதி என்ற தாயாரே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஒரே வீட்டில் இரு மரணங்கள் காரணமாக அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

காட்டுப்பகுதிக்குள் இருந்து உருக்குலைந்த நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!!

இளைஞனின் சடலம் மீட்பு

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உருக்குழைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலத்தை லிந்துலை பொலிஸார் மீட்டுள்ளனர். மெராயா ஊவாக்கலை தோட்டம் 3ம் பிரிவில் அரச வனப்பகுதியிலிருந்து இச்சடலத்தை இன்று (19.02.2019) மாலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அப்பகுதி பிரதேச மக்கள் சடலத்தை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த லிந்துலை பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்தனர்.

சடலம் அடையாளம் காணமுடியாத நிலையில் உருக்குழைந்து காணப்படுவதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சுமார் 25 மற்றும் 30 வயதுக்கிடையில் உள்ள இளைஞனின் சடலம் என தெரியவந்துள்ளது.

சடலம் நுவரெலியா மாவட்ட நீதவானின் மரண விசாரணைகளின் பின் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், குறித்த இளைஞனை எவராவது கொலை செய்து காட்டுப்பகுதிக்குள் வீசியுள்ளார்களா என்ற கோணத்தில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டாவது திருமணத்திற்கு தடையாக இருந்ததால் குழந்தையை துடிதுடிக்க கொலை செய்த தாய்!!

குழந்தையை துடிதுடிக்க கொலை செய்த தாய்

வேலூர் மாவட்டத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொள்வதற்கு தடையாக இருந்த காரணத்தால் தனது ஒன்றரை வயது குழந்தையை கொலை செய்ததாக தாய் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

பாஸ்கரன் – நளினி தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், ஒன்றரை வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர். பாஸ்கரன் வெளியூரில் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நளினிக்கு, முரளி என்பவருடன் காதல் மலர்ந்துள்ளது. இந்த விவகாரம் தெரிந்து பாஸ்கரன் தனது மனைவியை கண்டித்துள்ளார்.

இதனால் தனது இரண்டு மகன்களையும் கணவருடன் விட்டு, ஒன்றரை வயது பெண் குழந்தையை மட்டும் அழைத்துக்கொண்டு காதலன் முரளியுடன் சென்றுவிட்டார். இந்நிலையில் தனது மகள் ரித்விகா மயங்கிவிட்டதாக திடீரென மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார், அங்கு குழந்தையை சோதித்து பார்த்ததில் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்,

மேலும் குழந்தையின் உடலில் இருக்கும் காயங்களை பார்த்து சந்தேகம் அடைந்த ஊழியர்கள் இதுகுறித்து பொலிசில் புகார் அளித்ததையடுத்து, நளினியிடம் பொலிசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அதில் நளினி அளித்துள்ள வாக்குமூலத்தில், முரளியை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தேன், எனது கணவரிடம் இருந்து விவாகரத்து கிடைக்கவில்லை, இதற்கு எனது குழந்தை தடையாக இருந்தது.

குழந்தையை கொன்றுவிட்டால் நாம் இருவரும் திருமணம் செய்துகொண்டு வாழலாம் என முரளி கூறினார். இதனைத்தொடர்ந்து நாங்கள் இருவரும் சேர்ந்து குழந்தையை அடித்துக்கொலை செய்தோம் என வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கணவனின் குடலை பாதுகாத்து வைத்திருக்கும் பெண் : இதற்காகத்தானாம்!!

குடலை பாதுகாத்து வைத்திருக்கும் பெண்

பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு பெண் இறந்துபோன தன் கணவனின் குடலை பத்திரமாக பாதுகாத்து வைத்துள்ளார். பலர் தங்களுக்கு பிரியமானவர்களின் நினைவாக அவர்கள் பயன்படுத்திய பொருட்களை பாதுகாத்து வைப்பதுண்டு.

பிரித்தானியாவின் Chelmsfordஐச் சேர்ந்த Tina Loudfoot தனது கணவரான Derek Loudfootஇன் குடலை பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறார். Derek Loudfoot ஒரு நகைச்சுவை உணர்வு மிக்க மனிதர். ஒருமுறை உடல் நலமில்லாதபோது அவரது குடலின் ஒரு பாகத்தை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்ற, அதை ஒரு பாட்டிலில் ஃபார்மால்டிஹைடில் போட்டு பத்திரமாக வைத்துக் கொண்டார் Derek.

வேடிக்கைக்காக எங்கு சென்றாலும் அந்த பாட்டிலை கூடவே எடுத்துச் செல்வது Derekஇன் வழக்கம். சிலர் அதைப் பார்த்துவிட்டு அவரிடம் வந்து அது என்ன என்று கேட்பார்கள், சிலர் முகம் சுழித்து சென்று விடுவார்கள்.

அவர் இறந்தபின், தாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்ததன் நினைவாக தனது கணவரின் குடலை பத்திரமாக வைத்திருக்கிறார் Tina. தான் இறக்கும்போது தன் குடலையும் தன்னுடன் புதைத்து விட வேண்டும் என்று கூறினாராம் Derek.

ஆனால் அதை தன்னுடன் வைத்துக் கொள்ள விரும்பி, தான் வைத்துக் கொண்டதை தன் கணவர் தவறாக எண்ணமாட்டார் என்று கூறி, அவரது குடலை பத்திரமாக வைத்திருக்கும் Tina, தான் இறக்கும்போது தன் கணவரின் குடலை தன்னுடன் புதைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

மனைவிக்கு குடிக்க அமிலம் கொடுத்த கணவன் : மறுவாழ்வு அளித்த கனடா!!

மனைவிக்கு குடிக்க அமிலம் கொடுத்த கணவன்

கைப்பிடித்தவளைக் கட்டிக் காக்க வேண்டிய கணவன் ஒருவன் அவளைக் கொல்வதற்காக அவளுக்கு அமிலத்தைக் குடிக்கக் கொடுத்த நிலையில், கனடா மருத்துவர்கள் அவளுக்கு மறு வாழ்வு கொடுத்துள்ளார்கள்.

பங்களாதேஷைச் சேர்ந்த Popi Rani Das (30) என்ற பெண்ணின் கணவன் அவரைக் கொன்று விட்டால், அதிக வரதட்சணையுடன் இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாம் என்ற ஆசையில் மனைவியை ஏமாற்றி கொலை செய்வதற்காக அமிலத்தைக் குடிக்க கொடுத்துள்ளான்.

அவன் கைது செய்யப்பட்டாலும் பின்னர் ஜாமீனில் வெளிவந்துவிட்டான். இந்நிலையில் தொண்டையும் குடலும் கருகிய நிலையில் சிறு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார் Popi. சாப்பிடவோ தண்ணீர் குடிக்கவோ இயலாத அவருக்கு ஒரு குழாய் வழியாக திரவ ஆகாரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு வந்தது. அப்போது பங்களாதேஷுக்கு வந்திருந்த Dr. Toni Zhong என்னும் பிளாஸ்டிக் சர்ஜனை சந்திக்கும் வாய்ப்பு Popiக்கு கிடைத்தது.

Popiயைக் கண்டு இரக்கப்பட்ட Dr. Toni, அவர் கனடா வந்தால் அங்குள்ள மருத்துவர்கள் அவரை குணமாக்க வாய்ப்பிருப்பதாகக் கூற, கனடா வந்தனர் Popiயும் அவரது தாயும். Popiயின் தோலை எடுத்து அவரது குடல் மற்றும் தொண்டைப்பகுதிகளில் வைத்து தைத்து வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்து, Popi தானே உணவருந்தும் நிலைக்கு கொண்டு வந்து விட்டனர் கனடா மருத்துவர்கள்.

பங்களாதேஷில் தன்னைக் கொல்ல தனது கணவன் காத்திருக்கும் நிலையில், தனக்கு மறுவாழ்வு தந்த மருத்துவர்களுக்கும் கனடாவுக்கும் நன்றி கூறும் Popi, தான் கனடாவிலேயே வாழ விரும்புவதாகத் தெரிவிக்கிறார். அவரும் அவரது தாயாரும் கனடாவில் முறைப்படி புலம்பெயர்ந்தோர் என்னும் நிலைமையை பெறுவதற்காக முயற்சி செய்து வருகின்றனர்.

இறந்துபோன கணவரின் நண்பரை இரண்டாம் திருமணம் செய்யும் நடிகை!!

நடிகை பவானி ரெட்டி

சின்னத்திரை நடிகை பவானி ரெட்டி விரைவில் இரண்டாம் திருமணம் செய்துகொள்வது குறித்து பகிர்ந்துள்ளார். தெலுங்கு நடிகையான பவானி ரெட்டி தற்போது தமிழ் சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.

இவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டவர். அவரும் சின்னத்திரை நடிகர் ஆவார். திருமணம் ஆகி எட்டு மாதத்துக்குப் பிறகு தற்கொலை செய்துகொண்டார் பிரதீப்.

இந்நிலையில் பவானி இரண்டாம் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். என்னைப் புரிஞ்சிக்கிட்ட ஒருவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போகிறேன். என் கணவர் பிரதீப்புக்கும் எனக்கும் நெருக்கமான நண்பர். அவர் பெயர் ஆனந்த்.

அவரும் இதே மீடியா துறையில்தான் இருக்கிறார். இந்த உலகம் என்ன செய்தாலும் பேசிக்கிட்டே தான் இருக்கும். இது பெற்றோர்கள் விருப்பத்தின் பேரில் இந்த திருமணத்தை செய்துகொள்ளப்போகிறேன் என கூறியுள்ளார்.

பேஷ்புக்கில் பதிவிட்ட இளைஞன் கைது!!

இளைஞன் கைது

பேஷ்புக் சமூக வலைத்தளம் ஊடாக பிட்டிகல பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் முழு பொலிஸாருக்கும் அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை இட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிட்டிகல பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

போலி பேஷ்புக் கணக்கை பயன்படுத்தி இந்த இளைஞன் பொலிஸாருக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் பதிவுகளை பதிவேற்றம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான இந்த இளைஞன் பொரவகம, நாரான்ஹோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 22 வயதானவர் எனவும் அவர் இன்று பிட்டிகல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென அதிகரித்த இலங்கையின் நிலப்பரப்பு!!

இலங்கையின் நிலப்பரப்பு

இலங்கையின் நிலப்பரப்பினை அளவிடும் நடவடிக்கையினை மீண்டும் நில அளவைத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. அண்மையில் துறைமுக நகரம் மற்றும் மொரகஹகந்த மற்றும் களு கங்கை ஆகிய திட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இலங்கையின் நிலப்பரப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக அளவீடு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக நில அளவைத் திணைக்களத்தின் ஜெனரல் பீ.எம்.பீ.உதயகண்ணா தெரிவித்துள்ளார்.

சமகாலத்தில் இலங்கையின் நிலப்பரப்பு 65610 சதுர கிலோ மீற்றர்களாக காணப்படுகின்றது. எனினும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள இலங்கையின் புதிய அளவீட்டில் நூற்றுக்கணக்கான கிலோமீற்றர்கள் அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அளவீட்டு நடவடிக்கையை மார்ச் மாதம் இறுதியில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் முதன்முறையாக இலங்கை மாணவர்களின் கண்டுபிடிப்பு : விண்ணில் பாயவுள்ள செயற்கைகோள்!!

விண்ணில் பாயவுள்ள செயற்கைகோள்

வரலாற்றில் முதல் முறையாக இலங்கை மாணவர்கள் தயாரித்த ராவணா என்ற செயற்கை கோளை ஜப்பான் உத்தியோகபூர்வமாக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியான தரிது ஜயரத்ன என்ற மாணவன் மற்றும் தாய்லாந்து பல்கலைக்கழத்தில் பொறியியல் பட்டம் பெற்ற துலானி சாமிகா என்ற மாணவியும் இணைந்து இந்த செயற்கைகோளை தயாரித்துள்ளனர்.

ஜப்பான் தொழில்நுட்ப நிறுவனத்தில் வைத்து இந்த செயற்கைகோள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோளிற்கு ராவணா வன் என பெயரிடப்பட்டுள்ளது. 1000 சென்றி மீற்றர் வரை சிறியதாக காணப்படும் இந்த செயற்கைகோள் 1.1 கிலோகிராம் நிறையை கொண்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரவணா செயற்கைகோள் தொடர்பான தகவல்கள் உத்தியோகபூர்வமாக ஜப்பான் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த செயற்கைகோள் ஊடாக இலங்கைக்கு அருகில் உள்ள எல்லைகளை புகைப்படம் எடுக்க முடியும்.

செயற்கை கோள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி அமெரிக்காவில் இருந்து சர்வதேச விண்வெளி நிறுவனத்திற்கு அனுப்பப்படவுள்ளது. பின்னர் பூமியில் இருந்து 400 கிலோ மீற்றர் தூரத்தில் வைத்து இந்த செயற்கைகோள் விண்ணுக்கு ஏவப்படவுள்ளது.

இன்னும் 5 வருடங்களுக்கு இதனை செயற்படுத்த முடியும் எனவும் இது மணிக்கு 7.6 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை இலங்கையைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் முதற்தடவையாக செய்மதியை, விண்வெளிக்கு அனுப்பவுள்ளனர் என அமைச்சர் சுஜீவ சேனசிங்ஹ தெரிவித்துள்ளார்.

நெனொ தொழில்நுட்பத்தில் செயற்படும் செய்மதியை இலங்கையை சேர்ந்த மாணவனும் மாணவியும் இணைந்து தயாரித்துள்ளனர். ஜப்பானுடன் இணைந்து – ஆதர் சி கிளார்க் மத்திய நிலையத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் செய்மதியை விண்வெளிக்கு அனுப்ப தயராகி வருவதாக அவர் குறிப்பிட்டார்.