மட்டக்களப்பு -காத்தான்குடி, ஆரையம்பதி பிரதான வீதியினூடாக சென்றுக்கொண்டிருந்த வயோதிப பெண் மீது லொறி மோதியுள்ளது. இவ் விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது சம்பவ இடத்திலேயே குறித்த பெண் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு – கல்முனை, பிரதான வீதியால் களுவாஞ்சிகுடியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த அரச வாகனமே இவ்விபத்திற்கு காரணமென தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர் குழந்தைவேல் நாகரெத்தினம், எனும் 50 வயதுடைய வயோதிபப் பெண் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்து தொடர்பான சிசி.ரி.வி காணொளி வெளியாகி உள்ளது.
முல்லைத்தீவு – செம்மலை பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு, கொக்கிளாய் வீதியில் நேற்று இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செம்மலை பகுதியினை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான செ.பாஸ்கரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவரொருவர் கடந்த வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.
உயர்தர வகுப்பில் கல்வி கற்று வந்த மாணவரே பாடசாலை சீருடையுடன் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்ட மாணவன் கருங்கண்டல் ம.வி பாடசாலையில் உயர் தர வகுப்பில் கல்வி கற்கும் ஜே.நிர்மலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அவர் வழமை போல் கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு சென்றுள்ளார். இதன்போது பாடசாலை அதிபர் அன்றைய தினம் காலை குறித்த மாணவரை அழைத்து உடனடியாக வீட்டிற்கு சென்று உரிய முறையில் முக சவரம் செய்து விட்டு பாடசாலைக்கு வருமாறு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்,வீட்டுக்கு சென்ற குறித்த மாணவன் மீண்டும் வீட்டில் இருந்து பாடசாலை சீருடையுடன் வெளியில் சென்ற நிலையில் மணல் காடு பகு தியில் தூங்கில் தொங்கிய நிலையில் அன்றைய தினம் இரவே சடலமாக மீட்கப்பட்டார்.
சக மாணவர்கள் முன்னிலையில் பாடசாலை அதிபர் மாணவனை அழைத்து கூறியமையினால் மனமுடைந்து குறித்த முடிவை எடுத்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனினும் அந்த மாணவர் பல் துறைகளிலும் ஆற்றல் மிக்கவர் என தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹவெவ, சிலாபம் பகுதியில் வைத்து பேருந்து மின்மாற்றி ஒன்றில் மோதியமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தனியார் பேருந்தின் சாரதியினால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
8 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் பேருந்தில் சிக்கியுளளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பெரும்பாலான இலங்கையர்கள் போலியான கடவுச்சீட்டுக்களுடனேயே பிரித்தானியாவுக்குள் வந்துள்ளதாக தெற்கு லண்டனில் உள்ள மனித உரிமைகள் இயக்கத்தின் தலைவரான அம்பிகை சீவரட்ணம் ஸ்கை நியூஸ்க்கு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளிநாட்டு ஊடகமான ஸ்கை நியூஸ் இல் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையின் தமிழர்கள் பிரித்தானியாவுக்கான வீசாவை பெறுவதில் அதிக சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இதனையடுத்தே அவர்கள் முகவர்களை நாடி போலி கடவுச்சீட்டுக்களையும், வீசாக்களையும் பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது அனுமானப்படி 80 முதல் 85 வீதமான இலங்கையர்கள் போலியான கடவுச்சீட்டுக்களுடனேயே பிரித்தானியாவுக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது மிகவும் பெரிய மற்றும் ஆபத்தான வர்த்தகமாகும். இந்தநிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா இணைந்திருப்பதால் இலங்கையர்கள் தொழில்களை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை போலியான வீசாவில் பிரித்தானியாவுக்கு வந்ததாக ஸ்கை செய்தியாளரிடம் அருள்சீலி ஸ்ரீதரன் என்பவர் கூறியுள்ளார்.
தாம் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச்செல்ல முடியாது. அப்படி சென்றால் கொல்லப்படுவேன் என்றும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார். மேலும், தேவராஜா மற்றும் கெலி என்ற தமிழர்கள் பிரித்தானியாவில் அடைக்கலம் கோரியபோதும் அது நிராகரிக்கப்பட்டுள்ளது.
தேவராஜா 20 வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிவுக்கு வந்தார். இவர்கள் ஒரு சிறிய அறையிலேயே வாழ்கின்றனர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இதேவேளை, தாம் ஏனைய பிள்ளைகளை காட்டிலும் வேறுப்பட்ட விதத்தில் வாழ்வதால் மிகவும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளதாக அந்தப்பிள்ளைகள் ஸ்கை செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர் என்று அச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹவெவ, சிலாபம் பகுதியில் வைத்து பேருந்து மின்மாற்றி ஒன்றில் மோதியமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தனியார் பேருந்தின் சாரதியினால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
8 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் பேருந்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த பெண்னை பார்த்த பொலிஸ் அதிகாரி அதிர்ச்சியில் மரணம்
மட்டக்களப்பு சந்திவெளிப்பகுதியில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், விசாரணைக்காக சென்ற பொலிஸ் அதிகாரி அதனை பார்த்து மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறியுள்ளார். இதேவேளை, இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இரு சிறுவர்கள் கடத்தப்பட்டமையினால் பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. பண்டத்தரிப்பு வீடொன்றில் விளையாடிக் கொண்டிருந்த சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
13 வயதான சதீஸ்வரன் வினோத், 8 வயதான சதீஸ்வரன் பூஜா ஆகியோரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளனர். ஆண் ஒருவருடன் வந்த பெண்ணே இவ்வாறு இருவரை வலுக்கட்டாயமாக காரில் அழைத்துச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
வீட்டிற்கு அருகிலுள்ள பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த வேளையில், வெள்ளை நிற காரில் அவர்களை அழைத்துச் சென்றுள்ளனர். கடத்தப்பட்டதாக குறிப்பிடப்படும் வினோத், இளவாலை புனித ஹென்ரியரசர் கல்லூரியிலும், பூஜா சாந்தை சிற்றம்பலம் வித்தியாலயத்திலும் கல்வி கற்கிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கடத்தப்பட்டதாக பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும் வீட்டிலிருந்து கடத்தப்பட்டதாக பொலிஸாரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிறுவர் கடத்தல் விவகாரத்தினால் பண்டத்தரிப்பு சாந்தை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஹரிஸ்ணவியின் படுகொலை சம்பவமானது மக்கள் மனங்களிலிருந்து மெல்ல மெல்ல மறைந்து செல்கிறது. நீதியை பெற்றுத்தர ஊடகங்களாலே முடியும் என ஹரிஸ்ணவியின் தந்தையின் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி எனது மகள் பாடசாலை மாணவியான ஹரிஸ்ணவி 14 வயதில் வீட்டில் தனியாக இருந்தபோது ஈனஇரக்கமற்ற பாவி ஒருவனால் பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்று நேற்று முன்தினத்துடன் (16.02) மூன்று வருடங்கள் கடந்துவிட்டன.
மூன்று வருடங்கள் கடந்தவிட்ட நிலையிலும் இன்றுவரையில் எனது மகளுக்கு நீதியைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்கு நீதியைப் பெற்றுத்தர ஊடகங்கள் முன்வரவேண்டும் என தனது கவலையை கண்ணீருடன் இவ்வாறு தெரியப்படுத்தியுள்ளார்.
இவ்விடயத்தில் இன்றுவரை நீதியைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்கு ஒரு நீதியைப் பெற்றுத்தர ஊடகங்களாலேயே முடியும் எனவே வித்தியாவின் பாலியல் படுகொலையுடன் தொடர்புபட்ட குற்றவாளிகளுக்கு ஊடகங்களின் உதவியுடன் தண்டனை வழங்கப்பட்டுவிட்ட நிலையில் எனது மகளின் பாலியல் படுகொலையுடன் தொடர்புபட்ட நபருக்கு இன்னும் தண்டனை பெற்றுக்கொடுப்படவில்லை நீதியையும் நிலைநாட்டப்படவில்லை என்று கவலையுடன் தெரிவித்த ஹரிஸ்ணவியின் தந்தை. இச்சம்பவமானது மக்களின் மனதிலிருந்து மெல்ல மெல்ல மறைந்து சென்று கொண்டிருக்கின்றது.
இவ்வாறான ஒரு சம்பவம் இனிமேல் எந்த தாய்க்கோ, தந்தைக்கோ இவ்வாறு எமது நாட்டில் ஏற்பட்டுவிடக்கூடாது வழங்கப்படும் தண்டனை ஒரு பாடமாக அமையவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இப் பாலியல் படுகொலையுடன் தொடர்புபட்டுள்ளதாக ஹரிஸ்ணவியின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவ்வழக்கானது வவுனியா நீதவான் நீதின்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. இவ்வழக்கு சார்பாக பெண்கள் அமைப்பினரின் சட்டத்தரணி ஒருவரினால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.
கடந்த வருடம் (26.11) வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதும் எந்தவித முன்னேற்றமுமின்றி அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் சித்திரை மாதம் 30ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளதாகவும் ஹரிஷணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு நாட்டில் இலங்கை பெண்ணின் குளியலறையில் இரகசிய கமரா வைத்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த 22 வயதான இளம் பெண் ஒருவர் Al Rashidiya பகுதியில் உள்ள வீட்டினை தனது நண்பருடன் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் அவரது குளியலறையில் திடீரென கையடக்க தொலைபேசி வெளிச்சம் வெளியானதை கண்ட யுவதி கூச்சவிட்டுள்ளார். இது தொடர்பில் ஆராய்ந்த போது கையடக்க தொலைபேசியில் யுவதியை படம் பிடிக்கும் வகையில் கமரா பொருத்தப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் அறிவிக்கப்பட்ட நிலையில் தனது வீட்டை பகிர்ந்த இலங்கையரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் நேற்றைய தினம் வழக்கு விசாரணை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரின் கையடக்க தொலைபேசியை ஆராய்ந்த போது, அதில் நிர்வாண புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எப்படியிருப்பினும் குறித்த நபர் நீதிமன்றத்தில் தனது குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இந்நிலையில் எதிர்வரும் 26ஆம் திகதி வரை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் வேலையில் இருந்து நீக்கிய கடை உரிமையாளரின் மகனைக் கொன்ற இளம் பெண்ணுக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
திருச்சியை சேர்ந்தவர் சிவக்குமார். செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி லெட்சுமிபிரபா. இவர்களின் மகள் சிதானி (9), மகன் சிரீஸ் (3). கடந்த 2016-ம் ஆண்டு தான் சிரீஸ் மழலையர் பள்ளியில் சேர்க்கப்பட்டான். சிவக்குமார் செல்போன் எண்களுக்கு ரீசார்ஜ் செய்யும் கடை தொடங்கினார். அதை லெட்சுமிபிரபா கவனித்து வந்தார்.
இந்நிலையில், கடையில் ரோஸ்லின் (26) என்ற பெண் வேலை பார்த்து வந்தார். வேலைக்குச் சேர்ந்த சில நாட்களில், ரோஸ்லின், லெட்சுமிபிரபாவின் கடை கல்லாவில் இருந்த பணத்தை திருடுவது தெரிய வந்தது. இதனால் ரோஸ்லினை அவர் வேலையை விட்டு நீக்கினார்.
கடந்த 2016 ஜூலை 16-ம் திகதி பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய சிறுவன் சிரீஸைக் காணவில்லை என அவரின் பெற்றோர் அக்கம்பக்கத்தில் வலைவீசி தேடினர். அப்போது காவல் நிலையத்துக்குச் சென்ற ரோஸ்லின் சிறுவன் சிரீஸை தான் கொலை செய்துவிட்டதாக கூறி சரணடைந்தார்.
விசாரணையில், லெட்சுமிபிரபா தன்னை வேலையில் இருந்து நீக்கியதால் அவர் மீது ரோஸ்லினுக்கு ஆத்திரம் ஏற்பட்டதும். இதனால் லெட்சுமிபிரபாவை பழிவாங்க அவருடைய மகன் சிரீஸை பாழடைந்த ஒரு வீட்டின் அருகே அழைத்துச் சென்று அவனை துப்பட்டாவால் கழுத்தை நெரித்தும், முகம், மூக்கு, மர்ம உறுப்பு உள்ளிட்டவற்றில் கத்தியால் கீறி கொன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட ரோஸ்லின் மீது திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதில் குழந்தையைக் கடத்திய குற்றத்துக்கு ஒரு ஆயுள் தண்டனையும், கொலை செய்த குற்றத்துக்காக ஒரு ஆயுள் தண்டனை என இரட்டை ஆயுள் தண்டனை, 4,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஆந்திர பிரதேசத்தில் 4 வயது மகளின் கண்முன்னே, 6 வயது மகளின் கழுத்தை அறுத்து ரத்தை குடித்த தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த வதம்லா ரஸ்மோ (30) என்பவர் தன்னுடைய கணவர் சிரஞ்சீவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோபித்து கொண்டு, சகோதரரின் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார்.
அங்கு வீட்டு வேலை செய்யாமல் வெட்டியாக இருந்த ரஸ்மோவை, கணவர் வீட்டிற்கு செல்லுமாறு அவருடைய மைத்துனி சின்னம்மி திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரஸ்மோ, உன்னுடைய குழந்தையை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். ஆனால் அவருடைய மைத்துனி இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் ரஸ்மோ, சின்னமியின் 6 மற்றும் 4 வயதுடைய இரண்டு மகள்களையும் மலைபகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு 6 வயது சிறுமியின் கழுத்தை அறுத்து ரத்தை குடிக்க ஆரம்பித்துள்ளார். இதனை நேரில் பார்த்து பயந்துபோன 4 வயது சிறுமி அங்கிருந்து தப்பி, உறவினர்களிடம் நடந்தவை பற்றி கூறியிருக்கிறார்.
இதனையடுத்து சம்பவம் இடத்திற்கு சென்ற ஊர்மக்கள், ரஸ்மோவை பிடித்து மரத்தில் கட்டி வைத்துவிட்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.nஅதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், இறந்து கிடந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.nமேலும், ரஸ்மோவை கைது செய்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் இரண்டாவது பொதுக் கூட்டமானது 2019.02.16 ஆம் திகதியன்று காலை 09:30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 12:30 மணியளவில் நிறைவு செய்யப்பட்டது. இதன் போது 2019 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகக் குழுத் தெரிவு இடம்பெற்றதுடன் வட மாகாணத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் சவால்கள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு முக்கிய தீர்மானங்கள் பொதுச்சபையினால் மேற்கொள்ளப்பட்டது. அவை பின்வருமாறு,
01. அபிவிருத்தி உத்தியோகத்தர்களது இடமாற்றம் தொடர்பான தீர்மானங்கள்:
மத்திய சேவையினைச் சேர்ந்த வெளிமாவட்டத்தில் பணிபுரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் பலர் 07 வருடங்களை கடந்த நிலையிலும் அவர்களுக்கான இடமாற்றம் தொடர்பில் இதுவரை எவ்வித தீர்வுகளும் எட்டப்படவில்லை. பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பணிபுரியும் மேற்படி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பல்வேறுபட்ட பாதிப்புக்களை எதிர்நோக்குவதுடன் சில பின் தங்கிய பிரதேசங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அவர்களது கடமைகளை மேற்கொள்வதற்கு அலுவலகங்களுக்கு செல்வதிலும் உரிய போக்குவரத்து வசதிகள் இன்மையால் பல்வேறுபட்ட இன்னல்களை எதிர்நோக்குகின்றனர்.
மேற்படி விடயங்களை கருத்தில் கொண்டு வெளி மாவட்டத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான இடமாற்றத்தினை வருகின்ற மார்ச் மாதம் 2019 இற்குள் பெற்றுக் கொடுப்பதற்கான உரிய அழுத்தங்களை கொடுப்பதோடு மேற்படி இடமாற்றங்கள் தொடர்பில் குறித்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளினை உரிய காலப்பகுதிக்குள் எடுக்காது விடின் வெளிமாவட்டத்தில் பணிபுரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான இடமாற்றத்தினைப் பெற்றுக் கொடுப்பதற்காக வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கமானது மிக இறுக்கமான தீர்மானங்களை எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.
மேலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை வெளி மாவட்டத்திற்கு இட மாற்றம் செய்வது தொடர்பில் புதிய இட மாற்றக் கொள்கை ஒன்றினை சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கு முன் வைப்பதாக தீர்மானிக்கப்பட்டது. அதாவது அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை தனது சொந்த மாவட்டம் தவிர்ந்து பிற மாவட்டத்திற்கு இடம் மாற்றம் செய்யும் போது மூன்று வருட சேவைக்காலத்தின் பின்னர் குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மீளவும் சொந்த மாவட்டத்திற்கு இடம் மாற்றம் செய்யப்படுதல் வேண்டும் என்பதே குறித்த முன்மொழிவு ஆகும்.
மேலும் இடம்மாற்றம் தொடர்பில் மருத்துவ காரணங்கள் உடைய வெளிமாவட்டத்தில் பணி புரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்துவதோடு குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களது இடமாற்றக் கோரிக்கைகளை முதன்மைப்படுத்துதல் வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
02. மாகாண சேவையினைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்துவதோடு திணைக்கள ரீதியாக உரிய கடமைப் பட்டியல்களை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டது.
03. அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக ஏனைய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சங்கங்களுடன் தொடர்பினை ஏற்படுத்துவதுடன் அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கங்களை ஒன்றிணைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கங்களுக்கான சமாமசம் ஒன்றினை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளினை மேற்கொள்ளுவதனூடாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான உரிய தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்காக பலமுடன் செயற்படல்.
மேற்படி விடயங்கள் தொடர்பில் பொதுச் சபையினால் ஏக மனதாக தீர்மானங்கள் மேற் கொள்ளப்பட்டதோடு குறித்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்பினை நிர்வாகக் குழு ஏற்றுக் கொண்டது.
மேற்படி தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முன்னேற்றங்கள் மற்றும் செயற்படுகள் தொடர்பில் எமது நிர்வாகக் குழுவினுடைய தீர்மானங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பிலான அறிக்கையினை பார்வையிடுவதனூடாக அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் அறிந்து கொள்ள முடியும்.
வேலூரில் நபர் ஒருவர் காதலர் தினத்தில் தனது மனைவியின் இதயத்தை தானமாக வழங்கியுள்ளது மிகவும் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கவுதம்ராஜ் என்பவர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், கோகிலா என்ற பெண்மணிக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் கோகிலா கர்ப்பமாக இருந்துள்ளார். ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த கோகிலா கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. இருப்பினும், கோகிலாவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றம் ஏற்படாமல் அவர் மூளைச்சாவு அடைந்தார்.
இதனால் சோகத்தில் ஆழ்ந்த கணவர் கவுதம்ராஜ், தனது மனைவியின் இதயம் , சிறுநீரகம் உள்ளிட்ட பாகங்களை இன்று காதலர் தினத்தை முன்னிட்டு தானமாக வழங்கியுள்ளார்.
அதுவும், முக்கியமாக எனது மனைவியின் இதயம் யாரேனும் நபருக்கு பொருத்த வேண்டும் என மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டு, இன்று காதலர் தினத்தை முன்னிட்டு தனது மனைவியின் இதயத்தை தானமாக வழங்கியுள்ளார்.
வவுனியா மடுக்கந்தை மயிலங்குளம் பகுதியில் நேற்று (16.02.2019) மதியம் 2 மணியளவில் வீட்டின் சமயலறையில் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்ததில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் குறித்த பாடசாலை மாணவி சமைப்பதற்காக சமயறைக்கு சென்று காஸ் அடுப்பினை பற்றவைத்த சமயத்தில் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. உடனடியாக அயலவர்களின் உதவியுடன் மாணவி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
குறித்த பாடசாலை மாணவி அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாணவியின் நிலமை கவலைக்கிடமாக காணப்படுவதினால் மேலதிக விபரங்கள் எவையும் தற்சமயம் தெரிவிக்க முடியாது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.