வவுனியா வைரவப்புளியங்குளம் அருள்மிகு ஆதி விநாயகர் ஆலய புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம்
நேற்று 10.02.2019.ஞாயிற்றுக்கிழமை காலை 8.57 முதல் 10.09 வரையுள்ள சுப முகூர்த்தவேளையில் இடம்பெற்றது.

வவுனியா வைரவப்புளியங்குளம் அருள்மிகு ஆதி விநாயகர் ஆலய புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம்
நேற்று 10.02.2019.ஞாயிற்றுக்கிழமை காலை 8.57 முதல் 10.09 வரையுள்ள சுப முகூர்த்தவேளையில் இடம்பெற்றது.

பரிதாபகரமாக உயிரிழந்த குடும்பஸ்தர்
முல்லைத்தீவு – மாஞ்சோலை வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற சென்ற நபரொருவர் உயிரிழந்துள்ளார். திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக நேற்றைய தினம் சிகிச்சை பெற சென்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரியவருகின்றது.
முள்ளியவளை நிராவிப்பிட்டியை சேர்ந்த செ.நவரெட்ணம் என்ற 64 வயதுடையவே மாரடைப்பு காரணமாக பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த நபரை வைத்தியர் பரிசோதித்து மருந்து குறிப்புகள் சிலவற்றை எழுதிக்கொடுத்துள்ளார்.
இந்நிலையில் மருந்துகளை பெறுவதற்காக வைத்தியசாலையில் காத்திருந்த நிலையிலே குறித்த நபர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.
15 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
நாட்டின் சில பகுதிகளில் 48 மணிநேரங்களுக்குள் இடம்பெற்ற விபத்துக்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மதவாச்சி, புத்தளம், சிலாபம், முவத்தகம, வெலிகந்தை, அம்பாந்தோட்டை, பம்பலப்பிட்டி மற்றும் வத்தளைப் பகுதிகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வாகன விபத்துகளில் மூன்று சிறுவர்கள் மற்றும் நான்கு பெண்கள் உட்பட 11 பேரும், ரயில் விபத்துகளில் ஒரு இளம் பெண் உட்பட 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, விபத்து தொடர்பான விசாரணைகளை அந்தந்தப் பகுதிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபையின் வரவேற்பு நிகழ்வு நேற்று இடம்பெற்றது. வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபையின் தவிசாளர் இ.நவரட்ணம் தலைமையில் இலாங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
நீதி அமைச்சின் கீழ் மத்தியஸ்தர் சபை ஆணைக்குழுவினால் வவுனியா மாவட்டத்தில் உள்ள காணி உரிமை, உடமை மாற்றம் மற்றும் காணிப் பிணக்குகள் தொடர்பான பிரச்சனைக்களுக்கு விரைவாக தீர்வு காணும் பொருட்டு 45 பேர் மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த உறுப்பினர்களை மாவட்ட அரச அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோருக்கு அறிமுகப்படுத்தி காணி மத்தியஸ்தர்களை வரவேற்று காணி பிணக்கு விசாரணைகளை ஆரம்பிக்கும் முகமாக குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது முதற்கட்டமாக 15 காணிப் பிணக்குகளுக்கு தீர்வு காணப்பதற்கான கலந்துரையாடல்களும் இடம்பெற்றிருந்தன.
இந்நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா, விசேட காணி மத்தியஸ் சபை ஆணைக்குழுவின் ஆலோசகர் சிரேஸ்ட சட்டத்தரணி எம்.திருநாவுக்கரசு, ஆசியான் நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் எம்.ஜயந்த, நீதி அமைச்சின் மாவட்ட உத்தியோகத்தர் எஸ்.விமலராஜா, வவுனியா பிரதேச செயலாளார் கா.உதயராஜா, வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலாளார் க.சிவகரன், வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலளர் த.தர்மேந்திரா, பொலிஸ் அதிகாரிகள் பொது மக்கள் எனவும் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இதேவேளை, வவுனியா மாவட்ட காணி மத்தியஸ்தர் சபையிடம் 400 இற்கும் மேற்பட்ட முறைப்பகாடுகள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா தேக்கவத்தை கிராமத்தில் பொங்கல் விழா மற்றும் கலை நிகழ்வு நேற்று முன்தினம் (09.02.2019) மாலை 6.30 மணிக்கு வவுனியா நகரசபை உறுப்பினர் சமந்தா செபராணி தலைமையில் நடைபெற்றது.
தேக்கவத்தை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் வவுனியா நகரசபை உறுப்பினர்கள் மற்றும் மதகுருமார்கள் அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.
பொங்கல் பானை வைக்கப்பட்டு சர்வமதக்கொடிகள் கட்டப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன், தேசியகீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன.
தைத்திருநானை முன்னிட்டு நடத்தப்பட்ட இந் நிகழ்வில் தேக்கவத்தை இளைஞர் கழகம் மற்றும் சிறுவர் கழகங்கள் இணைந்து கலை நிகழ்வுகளை நடாத்தியிருந்தன.
நிகழ்வில் நகரசபை உறுப்பினர்களான எஸ்.சேனாதிராசா, ரி.ராஜலிங்கம், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அன்று பணக்கார வாழ்க்கை..
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் தனது சொத்துக்கள், வீடுகள் அனைத்தையும் இழந்துவிட்ட நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக திருச்சூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பர்னிச்சர் கடைக்கு வெளியே உள்ள ரோட்டில் படுத்து தூங்குகிறார்.
எர்ணாகுளத்தில் பெரிய வீடு, 300 பாரா நெல் விளையும் நிலங்களுடன் வசதியாக வாழ்ந்தவர் கிருஷ்ணனன். தனது பெற்றோருடன் உதவியாக இருந்து வேலை பார்த்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் மழையின் காரணமாக தீவிர நஷ்டத்தை சந்தித்துள்ளார்கள்.
அதன்பிறகு தனது குடும்ப கஷ்டத்தை போக்க Willingdon தீவுக்கு சென்று பணியாற்றியுள்ளார். அங்கு கப்பலில் வேலை பார்த்துள்ளார். மேலும் இவரது தாயும் நண்டுகளை விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார்.
சம்பாதித்த பணத்தை வைத்து ஓரளவுக்கு குடும்ப கஷ்டத்தை போக்கியுள்ளார். 27 வயதில் கிருஷ்ணாவுக்கு திருமணம் ஆகியுள்ளது. ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார்.
இவர், Willingdon தீவில் இருந்தபோது மனைவிக்கு காலரா காய்ச்சல் வந்து இறந்துபோனார். அதன்பிறகு திரும்பிவந்த நான் உடல்நிலை சரியில்லாமல் படுக்கையில் விழுந்து கையில் பணம் இல்லாமல், வசிப்பதற்கு வீடும் இல்லாமல் கடந்த 10 ஆண்டுகளாக கடைக்கு வெளியே தங்கியிருக்கிறேன்.
ரோட்டில் படுத்திருந்தாலும் கடவுள் உருவில் சில மனிதர்கள் எனக்கு சாப்பிட உதவி செய்கிறார்கள் என கூறியுள்ளார்.
மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற ஊடகவியலாளர் திரு.பி.மாணிக்கவாசகம் அவர்களின் “கால அதிர்வுகள்” நூல் அறிமுக விழா மன்னார் நகர மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
வரவேற்புரையினை அருட்பணி தமிழ்நேசன் அடிகளாரும் வரவேற்பு நடனத்தினை பரதகலாலய நாட்டியப்பள்ளி மாணவிகளும் ஆசியுரையினை மும்மதத் தலைவர்களும் வழங்க தலைமையுரையினை திரு நிக்சன் குரூஸ் அவர்களும் நூல் அறிமுகவுரையினை எழுத்தாளர் வெற்றிச்செல்வி சந்திரகலா அவர்களும் வழங்கியிருந்தனர்.
அருட்பணி தமிழ்நேசன் அடிகளார் ஊடகவியலாளர் திரு.பி.மாணிக்கவாசகம் அவர்களின் “கால அதிர்வுகள்” நூலை வெளியிட அவர்களிடம் இருந்து முதல் பிரதியினை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் பெற்றுக்கொண்டார்
அதனைத்தொடர்ந்து அரச அதிகாரிகள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நகரசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் அனைவரும் பெற்றுக்கொண்டனர்.
நூல் மதிப்பீட்டுரையினை எழுத்தாளர் துறையூரான் சிவானந்தன் சிறப்பாக வழங்கினர்.
40 ஆண்கள் கடந்தும் ஊடகத்துறையில் நிலைத்து நின்று மக்களின் பிரச்சினைகளை நடுநிலையாக வழங்கி வரும் ஊடகவியலாளர் திரு.பி.மாணிக்கவாசகம் அவர்களின் “கால அதிர்வுகள்” நூல் போர்கால வரலாற்றினையும் தமிழர்களின் வாழ்வியலையும் மையமாக கொண்டு தனது கட்டுரையாக்கத்தினை வெளியிட்டு இருப்பது கடந்து வந்த மறக்கமுடியாத வாழ்வின் சம்பவங்களின் ஒரு ஆவணத்தொகுப்பாகும்.
நன்றியுரையினை மாக்ஸ் மில்லன் குரூஸ் வழங்க நிகழ்ச்சி தொகுப்பினை கவிஞர் மயூரன் வழங்கினார் ஊடகவியலாளர் திரு.பி.மாணிக்கவாசகம் அவர்களின் ” கால அதிர்வுகள்” நூல் அறிமுக விழா இனிதே நிறைவுபெற்றது.
சிறுவனை வீடு புகுந்து சீரழித்த கும்பல்
அவுஸ்திரேலியாவில் மர்ம கும்பலால் பாலியல் பலாத்காரத்திற்கு இரையான 15 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமக்கு நேர்ந்த துயரம் குறிது தனது பெற்றோரிடம் கூறியதாகவும், ஆனால் அவர்களால் அதை புரிந்துகொள்ளும் நிலையில் இல்லை என்பதாலையே இந்த முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள குனுன்நூரா பகுதியின் அருகாமையில் அந்த சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பழங்குடியின சமூகத்தை சேர்ந்த அச்சிறுவனின் குடியிருப்புகளை சுற்றி சண்டை சச்சரவுகளும், மதுவுக்கு அடிமையானவர்களுமே அதிகம் வசிப்பதாக தெரியவந்துள்ளது.
இதனாலையே பல குடியிருப்புகளை குறித்த சிறுவன் அடிக்கடி மாற்றி வந்துள்ளான். மேலும், பல காலம் நிரந்த குடியிருப்பு ஏதுமின்றியும் தவித்துள்ளான். தற்கொலை செய்து கொள்வதன் ஒரு நாளுக்கு முன்னர், தமது தாயாரிடம், தாம் புதிய பாடசாலைக்கு செல்ல இருப்பது தொடர்பில் பகிர்ந்துகொண்டுள்ளான்.
கடந்த ஆண்டு தமக்கு நேர்ந்த கொடுமை தொடர்பில் பொலிசாரிடம் புகார் அளிக்க அச்சம் தெரிவித்த சிறுவன், அந்த புகாரால் தமது எதிர்காலம் சீரழியும் என கூறியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2012 முதல் 16 வரையான காலகட்டத்தில் சுமார் 13 பழங்குடியின சிறுவர்கள் மர்ம கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு இரையாகியுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும் அவுஸ்திரேலியாவில் உள்ள பழங்குடியின மக்கள் தற்கொலை செய்து கொள்வதும் பலமடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆதரவின்றி தவிக்கும் பழங்குடியின சிறுவர்களின் எண்ணிக்கை கடந்த 15 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காத்திருந்த அதிர்ச்சி
பெண் ஒருவர் தனது உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்க அறுவை சிகிச்சை செய்த நிலையில் அவரின் மூக்கு மாற்றியமைக்கப்பட்ட சம்பவம் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மரிலா என்ற பெண்ணுக்கு தற்போது 41 வயதாகிறது. 19 வயதில் தனக்கு நேர்ந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து அவர் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில், நான் அப்போது என் குடும்பத்துடன் பெரு நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தேன். அப்போது நான் கொழு கொழுவென குண்டாக இருந்ததால் என்னை பலரும் கிண்டல் செய்வார்கள். இதையடுத்து அங்குள்ள புகழ்பெற்ற மருத்துவரிடம் liposuction எனப்படும் உடலில் அதிக அளவில் உள்ள கொழுப்புகளை அகற்றுவதற்கு செய்யப்படுகிற அறுவை சிகிச்சையை செய்ய முடிவு செய்தேன்.
சிகிச்சை முடிந்து கண்விழித்து கண்ணாடியை பார்த்த போது எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் கொழுப்புகளை அகற்றும் சிகிச்சையுடன் சேர்ந்து என் மூக்கை மாற்றும் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருந்தது.
மூக்கில் பேண்டேஜ் போடப்பட்டிருந்தது. என் மூக்கு எப்போதும் அழகாக இருக்கும், ஆனால் இந்த சிகிச்சைக்கு பின்னர் மிகவும் கோரமாக மாறியிருந்தது. இது என் வாழ்நாளில் என்றும் மறக்கமுடியாத வலி என கூறியுள்ளார்.
மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்
தூத்துக்குடியில் மகன் தற்கொலை செய்துகொண்ட சில நாட்களிலே மனைவியை வெட்டிக்கொலை செய்த அரசுஊழியர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியை சேர்ந்த செந்தூர்பாண்டி (57) அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு நவமணி என்கிற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று வேலை விட்டு வீடு திரும்பிய செந்தூர்பாண்டி, மனைவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அவர் திடீரென அரிவாளை எடுத்து நவமணியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளார்.
பின்னர் நேரடியாக காவல்நிலையம் சென்று மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு சரணடைந்துள்ளார். அங்கு அவர் மீது வழக்கு பதிவு செய்த பொலிஸார் கொலைக்கான கரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
வாக்குமூலத்தில், நாங்கள் வசிக்கும் வீடு, நவமணியின் சித்தி சீவிலி பெயரில் உள்ளது. அந்த வீட்டை கட்டுவதற்கு நானும் சிறிது பணம் போட்டுள்ளேன். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான சீவிலிக்கு திருமணம் நடைபெறவில்லை.
அவர் வீட்டிற்கு பின்புறம் இருக்கும் மற்றொரு வீட்டில் வசித்து வருகிறார். அதனால் இந்த வீட்டை உன்னுடைய பெயருக்கு மாற்றிவிடு என மனைவியிடம் கூறிவந்தேன். ஆனால் அதற்கு மனைவி மறுப்பு தெரிவித்ததால் வெட்டிக்கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு செந்தூர்பாண்டியன் மகன் இதே வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
தலை துண்டிக்கப்பட்ட சிறுவன்
சவுதி அரேபியாவில் சன்னி பிரிவினருக்கான தொழுகை கூடத்தில் சென்றதாக கூறி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட 6 வயது சிறுவனின் புகைப்படம் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஷியா பிரிவை சேர்ந்த ஜகரியா அல் ஜாபர் என்ற 6 வயது சிறுவன் தமது தாயாருடன் மெதினாவில் உள்ள நபிகள் நாயகம் தொழுகை கூடத்தில் சென்றுள்ளார். இது சன்னி பிரிவினருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழுகை முடித்து மகனுடன் காரில் சென்ற தாயாரிடம் அந்த ஓட்டுனர் ஷியா பிரிவினரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆம் என பதிலளித்த அடுத்த நொடியில் காரை நிறுத்தி அந்த தாயாரிடம் இருந்து சிறுவன் ஜகரியாவை பறித்து வெளியேற்றிய அந்த ஓட்டுனர், அப்பகுதியில் கிடந்த போத்தல் ஒன்றை உடைத்து, அதில் இருந்து கூரான கண்ணாடியால் அங்கேயே சிறுவனின் கழுத்தை அறுத்து கொன்றுள்ளார்.
இச்சம்பவத்தை நேரிடையாக பார்க்க நேர்ந்த ஜாகரியாவின் தாயார் சுயநினைவை இழந்து சரிந்துள்ளார். படுகொலை செய்யப்பட்ட ஜகரியாவின் புகைப்படங்கள் வெளியாகி தற்போது சவுதி அரேபியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளத்தில் ஜகரியாவுக்கு நீதி வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை எந்த நிர்வாகமும் தலையிடவில்லை என்பது மட்டுமல்ல எவரும் பொறுப்பேற்கவும் இல்லை. சவுதி அரேபியாவில் உள்ள ஷியா சமூகத்தினர் சிறுவனின் இழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், தங்களின் ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.
சவுதியில் உள்ள ஷியா சமூகத்தினருக்கு அரசாங்கத்தால் கடும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. பலர் சிறையிலும் மரண தண்டனை எதிர்நோக்கியும் காத்திருக்கின்றனர். சவுதி மக்கள் தொகையில் நான்கில் மூன்று பகுதியினர் சன்னி சமூகத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அகதேசிய முற்போக்கு கழகம்
வவுனியாவில் அகதேசிய முற்போக்கு கழகம் எனும் புதிய கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றுள்ளது. வவுனியா, பண்டாரிக்குளத்தில் இன்று இந் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இக் கழகம் வடக்கு மற்றும் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியமாக இயங்கிவந்த நிலையில் இன்று அகதேசிய முற்போக்கு கழகம் எனும் கட்சியாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
இதன் போது கட்சியின் கொள்கைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும், வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியத்தின் தலைவரும், கட்சியின் தற்போதைய தலைவருமான எம்.பி.நடராஜாவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலின் போது வடக்கு மற்றும் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியமானது மீன் சின்னத்தில் போட்டியிட்டு இரு உறுப்பினர்களை பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இளைஞனின் சடலம் மீட்பு
கித்துல்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கித்துல்கல களுகொவ்தென்ன பிரதேசத்தில் களனி கங்கையில் நீராட சென்று நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இளைஞன் இன்று மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று தங்கல்ல பகுதியிலிருந்து 18 பேர் கொண்ட தனது நண்பர்களுடன் மற்றும் உறவினர்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற போது, வழியில் கித்துல்கல பகுதியில் நீராட சென்ற வேளையிலேயே இவர் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
இதன் போது நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் குறித்த இளைஞன் சுழியொன்றில் அகப்பட்டுள்ளார். இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்தவர் சுவாரபுர பிலியந்தல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய கவிந்து நிலுபுல் குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார். நீரில் மூழ்கிய குறித்த இளைஞனை பொலிஸார் மற்றும் கடற்படையினர், பிரதேசவாசிகளின் உதவியுடன் இன்று மதியம் சடலமாக மீட்டனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக அவிசாவளை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறுவனின் மரணத்திற்கான மருத்துவ அறிக்கை
வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை அப்பம்மாவுடன் சென்ற சிறுவன் நேற்று காலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளமை கிராமத்தையே சோகமாக மாற்றியிருந்ததுடன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் உறவினர்கள் தெரிவித்ததையடுத்து இன்று மருத்துவ அறிக்கை வெளிவந்ததானது உறவினர்களை மேலும் சோகத்திற்குள்ளாக்கியுள்ளது. மேலும் இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
நேற்று முன்தினம் மாலை சுந்தரபுரத்திலிருந்து சிதம்பரபுரம் கற்குளம் படிவம் 3 பகுதிக்கு தொண்ணூறாம் நாள் நினைவஞ்சலிக்கு முன் ஆயத்த வேலைக்காக சிவானந்தம் தருண் என்ற ஆறு வயது சிறுவன் அப்பம்மாவுடன் சென்றிருந்தார்.
அங்கு ஏனைய சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்ததாகவும் இரவாகியதால் சிறுவனை காணவில்லை என நீண்ட நேரமாக தேடியும் எங்குமே கிடைக்கவில்லை. இதனையடுத்து நேற்று காலை கிணற்றில் இருந்து குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் குறிப்பிட்ட கிணறானது முழுமையாக நிர்மானிக்கப்பட்டுள்ளதுடன் கிணற்றின் கட்டு 3அடிக்கு உயற்றப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள கிணறு என்றும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் உறவினர்கள், அயலவர்கள் தெரிவித்திருந்த நிலையில் இன்று மருத்துவ பரிசோதனை இடம்பெற்றிருந்தது.
எனினும் வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். சட்ட வைத்திய அதிகாரி பிரசன்ன அப்புகாமி பிரேத பரிசோதனையின் பின்னர் நீரில் மூழ்கி மூச்சுதிணறியே சிறுவன் உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஒரு மாதக் குழந்தை மரணம்
வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியில் தாய்பால் புரையேறியதில் ஒரு மாதக் குழந்தை ஒன்று மரணித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று மதியம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பம் ஒன்றின் ஒரு மாதக் குழந்தை பாலுக்கு அழுத நிலையில் தாய் பாலினை ஊட்டியுள்ளார். இதன்போல் தாய்பால் புரையேறியுள்ளது.
உடனடியாக குழந்தையை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் குழந்தை மரணமடைந்துள்ளது. ரங்கநாதன் ரவீன் என்கின்ற ஒரு மாத ஆண் குழந்தையே இவ்வாறு மரணித்துள்ளது.
குத்திக்கொலை செய்த சிறுவர்கள்
இந்தியாவில் தங்களுடைய பெண் தோழியுடன் பேசிய 14 வயது சிறுவனை சக சிறுவர்கள் குத்திக்கொலை செய்த விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியில் 14 வயது சிறுவன் ஒருவன் பெண் தோழியுடன் பேசியுள்ளான். இந்த விடயம் குறித்த பெண் தோழியின் 4 நண்பர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிறுவனின் வீட்டிற்கு சென்ற 4 சிறுவர்கள், அவனை வெளியில் அழைத்து பேசியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், நான்கு சிறுவர்களும் அந்த சிறுவனை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.
அதன் பின்னர், உயிருக்கு போராடும் நிலையில் இருந்த குறித்த சிறுவன் உதவிக்கு கத்தியுள்ளான். சத்தம் கேட்டு வந்த அவனது தாய் மற்றும் அப்பகுதி மக்கள் உடனடியாக சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார், மூன்று சிறுவர்களை கைது செய்ததுடன் மற்றொரு சிறுவனை தேடி வருகின்றனர்.