தூக்கில் தொங்குவது போல் மாணவிக்கு செல்பி : பின்னர் நேர்ந்த அதிர்ச்சி!!

நேர்ந்த அதிர்ச்சி

தமிழகத்தில் ஒருதலை காதலில் மனமுடைந்த கல்லூரி மாணவர் ஒருவர் தூக்கில் தொங்குவது போல் செல்பி எடுத்து மாணவிக்கு அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த 20 வயதான ஹரிகரசுதன் என்பவரே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர். இவர் கோவை ஈச்சனாரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

ஹரிகரசுதன் தனது கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்ததுள்ளார். அந்த மாணவியிடம் தனது காதலை தெரிவித்துள்ளார். அதற்கு அந்த மாணவி சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மாணவர் கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

சம்பவத்தன்று மாணவரின் தந்தை சத்தியசீலன் கடலூர் சென்றிருந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விரக்தியில் இருந்த கல்லூரி மாணவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார். மட்டுமின்றி தமது முடிவை மாணவிக்கு தெரிவிக்கவும் எண்ணியுள்ளார். உடனே வீட்டில் உள்ள ஒரு அறையில் அவர் தூக்கிட்டுள்ளார்.

பின்னர் மாணவர் தூக்கில் தொங்குவது போல செல்பி எடுத்துள்ளார். அதனை மாணவியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பியுள்ளார். இதனையடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரவு வீடு திரும்பிய அவரது தாயார் சாவித்திரி, தனது மகன் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிங்காநல்லூர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரஜினிகாந்த், விஜயகாந்த் படங்களில் நடித்த பிரபல நடிகர் மர்ம மரணம் : அழுகிய நிலையில் சடலம் மீட்பு!!

நடிகர் மர்ம மரணம்

பிரபல வில்லன் நடிகர் மகேஷ் ஆனந்த் (57) தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 1980 மற்றும் 90 களில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப், தர்மேந்திரா, கோவிந்தா, சஞ்சய்தத் உள்ளிட்ட நடிகர்கள் படத்தில் வில்லனாக நடித்து புகழ்பெற்றவர் மகேஷ் ஆனந்த்.

இவர் தமிழில் விஜயகாந்த் நடித்த பெரிய மருது, ரஜினிகாந்த் நடித்த வீரா படங்களில் வில்லனாக நடித்துள்ளார். 2002ல் தனது மனைவியை விவாகரத்து செய்த மகேஷ் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் அவர் வீட்டில் வேலை பார்க்கும் பெண் வழக்கம் போல நேற்று வந்து கதவை தட்டினார். ஆனால் மகேஷ் கதவை திறக்காததால் சந்தேகமடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் வீட்டு கதவை உடைத்து பார்த்து போது மகேஷ் உயிரிழந்த நிலையில் இருந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது.

இதையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு பொலிசார் அனுப்பி வைத்துவிட்டு இது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள். மகேஷ் ஆனந்த் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

காதல் கணவரின் இரக்கமற்ற செயல் : தூக்கில் தொங்கிய அழகிய இளம் பெண்!!

கணவரின் இரக்கமற்ற செயல்

இந்தியாவில் கணவர் மற்றும் குடும்பத்தார் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் பிரியங்கா. இவரும் நவீன் என்ற இளைஞரும் தீவிரமாக காதலித்த நிலையில் இவர்கள் திருமணத்துக்கு பிரியங்கா குடும்பத்தார் முதலில் சம்மதிக்கவில்லை.

பின்னர் மகள் மேல் உள்ள பாசத்தில் அவர்கள் சம்மதம் தெரிவிக்க, கடந்தாண்டு நவீன் – பிரியங்கா திருமணம் நடைபெற்றது. திருமணமாகி ஒரு ஆண்டு கூட ஆகாத நிலையில் நேற்று முன்தினம் பிரியங்கா வீட்டில் தூக்கு கயிற்றில் தொங்கினார்.

அந்த நேரம் பார்த்து அவரின் தாய் அங்கு வந்த நிலையில் மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியங்காவின் உயிர் பிரிந்தது.

இது குறித்து பிரியங்காவின் தாய் கூறுகையில், திருமணத்துக்கு பின்னர் வரதட்சணை கேட்டு நவீனும், அவர் குடும்பத்தாரும் என மகளை துன்புறுத்தி வந்தனர். என் மகள் சாவுக்கு நவீன் மற்றும் அவர் குடும்பத்தார் தான் காரணம் என தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காதல் மனைவியின் நடவடிக்கையால் ஆத்திரமடைந்த கணவன் : போனை பிடிங்கி பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி!!

மனைவியின் நடவடிக்கையால் ஆத்திரமடைந்த கணவன்

இந்தியாவில் பேஸ்புக் மோகத்தால் இளம் பெண் ஒருவர் கணவனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவரும் சுஷ்மா என்ற பெண்ணிற்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் இந்த நட்பு நாளைடைவில் காதலாக மாற, இருவரும் மணிக்கணக்கில் போனில் பேசி வந்துள்ளனர்.

இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், சுஷ்மா வீட்டிலிருந்து வெளியேறி ராஜை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டிருக்க அதனை கெடுக்கும் விதமாக சுஷ்மா நடந்துகொண்டார்.

எப்போதும் கையில் போனும் கையுமாக இருந்துள்ளார். வீட்டு வேலையை கூட செய்யாமல் போனை உபயோகப்படுத்திக் கொண்டே இருந்துள்ளார். வீட்டில் சாப்பாடு கூட சரியாக செய்யாமல் இருந்து வந்ததால், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ராஜ், அவரின் செல்போனை வாங்கிப் பார்த்த போது அதிர்ச்சியடைந்தார்.

அதில் சுஷ்மா, பலருடன் இணையத்தில் சாட் செய்து வந்தது தெரியவந்தது. இதனால் அதை மறக்க முடியாமல் தவித்த ராஜ், மனைவியை தீம் பார்க் அழைத்து செல்வதாக கூறி சுஷ்மா மற்றும் 3 மாத கைக்குழந்தையை அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கிருக்கும் தைலமரக்காட்டில் வண்டியை விட்ட ராஜ், மனைவியின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். அதன் பின் பிஞ்சுக்குழந்தை என்றும் பாராமல் குழந்தையையும் கொலை செய்துள்ளார். பின்னர் அவர்களை எரித்துவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளான்.

2 நாட்கள் கழித்து அப்பகுதிக்கு ரோந்து சென்ற பொலிசார் அங்கிருந்த உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதற்கிடையே சுஷ்மாவும் தனது பேரக்குழந்தையும் காணவில்லை என சுஷ்மாவின் தந்தை போலீஸில் புகார் அளித்திருந்தார். மருமகன் ராஜ் மீது சந்தேக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இதையடுத்து பொலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் அனைத்து உண்மைகளும் அம்பலமானது. ராஜை கைது செய்த பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

25 கோடி பணம், 100 சவரன் நகைக்காக வயதான பெண்ணை மணந்த இளைஞர் : வைரலான புகைப்படம்!!

வைரலான புகைப்படம்

தன்னை விட அதிக வயது மூத்த பெண்ணை இளைஞர் பணத்துக்காக திருமணம் செய்து கொண்டார் என சமூகவலைதளங்களில் புகைப்படத்துடன் செய்தி வெளியான நிலையில் அது பொய் என தெரியவந்துள்ளது.

கேரளாவை சேர்ந்தவர் அனூப் செபஸ்டின் (29) இவருக்கும் ஜூபி ஜோசப் (27) என்ற பெண்ணுக்கும் கடந்த 4-ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. இருவரின் புகைப்படங்களும் மலையாள பத்திரிக்கையின் திருமண நிகழ்வு பக்கத்தில் வந்தது.

இதிலிருந்து தான் அனூப்புக்கும், ஜூபிக்கும் தலைவலி தொடங்கியது. அதாவது, ஜூபி தோற்றத்தை வைத்து அவர் 48 வயதான பெண் என்றும், அனூப் 25 வயதான ஆண் என்றும் சமூகவலைதலங்களில் இருவரின் புகைப்படத்தோடு செய்தி பரப்பப்பட்டது.

மேலும், ஜூபியின் ரூ.25 கோடி சொத்துக்கள் மற்றும் 101 சவரன் நகைக்காக தான் அனூப் வயதான பெண்ணான அவரை திருமணம் செய்கிறார் என்றும் கூறப்பட்டது. இந்த வதந்தியை பார்த்து அனூப்பும், ஜூபியும் அதிர்ச்சியடைந்ததோடு வேதனையும் அடைந்தனர். வேண்டுமென்றே சில விஷமிகள் இப்படியான செய்தியை பரப்பியதை அவர்கள் உணர்ந்தனர்.

இதன் காரணமாக இருவரையும் கிண்டல் செய்து போனும், மெசேஜும் வந்த வண்ணம் இருந்தன. இது குறித்து தம்பதி பொலிசில் புகார் அளித்துள்ளனர். பொலிசார் இந்த செயலை தொடங்கியவரை கண்டுப்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அனூப் இந்தியாவின் சண்டிகரில் பணிபுரியும் நிலையில், ஜூபி சார்ஜாவில் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் நள்ளிரவில் நடந்த பயங்கரம் : குளியலறைக்குள் மர்மநபர்கள்!!

நள்ளிரவில் நடந்த பயங்கரம்

யாழ்ப்பாணத்தில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் நகை மற்றும் பணம் என்பனவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அரசாங்க ஊழியர்களான கணவன் மற்றும் மனைவியை கடுமையாக தாக்கிய நிலையில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருடர்களின் தாக்குதல் காரணமாக காயமடைந்த மனைவிக்கு 6 தையல் போடப்பட்டுள்ளது. கணவனின் தலையில் தாக்கப்பட்டமையால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை கட்டுவன் புலம் வீதி, கட்டுவன் பகுதியில் இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது. வீட்டின் குளியலறை ஜன்னல் ஊடாக வீட்டுக்குள் 3 கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். நித்திரையில் இருந்த வீட்டாரை எழுப்பி, அவர்களைக் கத்தி முனையில் அச்சுறுத்தியுள்ளனர்.

வீட்டை சல்லடை போட்டு தேடிய திருடர்கள், தாலிக் கொடி, காப்பு, சங்கிலி உள்பட 17 பவுண் நகை, 20 ஆயிரம் ரூபா பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

இளவாலைப் பகுதியில் உள்ள பாடசாலையில் உப அதிபராகக் கடமையாற்றுபவருடைய வீட்டிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அவரது மனைவி தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றுகின்றார்.

சம்பவம் தொடர்பில் குற்றத் தடவயவியல் பொலிஸார் மோப்ப நாய்களுடன் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது!!

கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை இரண்டு பெண்கள் அடங்கலாக ஐந்து பேர் விமான நிலைய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோமான முறையில் புகையிலை தொகை ஒன்றை கொண்டு வந்த வேளையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட புகையிலையின் பெறுமதி 31 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

டுபாய் மற்றும் சார்ஜா ஆகிய நகரங்களிலிருந்து இலங்கை வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு 20 – 35 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு 150000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன் அவர்களிடம் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அரச உடமையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் சிக்கிய இளைஞனுக்கு விடுதலைப் புலிகள் பாணியில் தண்டனை கொடுத்த மக்கள்!!

தண்டனை கொடுத்த மக்கள்

யாழ்ப்பாணத்தில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் சிக்கிய இளைஞர் மக்களினால் கட்டி வைத்து நையப்புடைக்கப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக கொடிகாமம் வரணி பகுதியில் இடம்பெற்ற களவு மற்றும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இவர் தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் குறித்த இளைஞன் நேற்றையதினம் இளைஞர்களிடம் சிக்கியுள்ளார். இதன்போது அவர் கட்டி வைத்து தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனிற்கு விடுதலைப்புலிகளின் பாணியில் தண்டனை கொடுக்கப்பட்டதுடன், இளைஞரின் கழுத்தில் வாசகங்கள் எழுதப்பட்ட மட்டையொன்றையும் தொங்கவிட்டு, வீதியில் இழுத்து செல்லப்பட்டார். பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

களனி கங்கையில் நீராடச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி மாயம்!!

இளைஞர் நீரில் மூழ்கி மாயம்

கித்துல்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கித்துல்கல களுகொவ்தென்ன பிரதேசத்தில் களனி கங்கையில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இச்சம்பவம் நேற்று (09.02.2019) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தங்கல்ல பகுதியிலிருந்து 18 பேர் கொண்ட தனது நண்பர்களுடன் மற்றும் உறவினர்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற போது, வழியில் கித்துல்கல பகுதியில் நீராட சென்ற வேளையிலேயே இவர் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

இதன் போது நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் குறித்த இளைஞன் சுழியொன்றில் அகப்பட்டுள்ளார். இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போனாவர் சுவாரபுர பிலியந்தல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய கவிந்து நிலுபுல் குமார என தெரியவந்துள்ளது.

நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனை தேடி கித்துல்கல பொலிஸ் பாதுகாப்பு பிரிவினரும், கடற்படை மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் கித்துல்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் பல்துறையில் சாதிக்கும் இளைஞன் : இவரது ஓவியங்களை பாருங்கள் அசந்து போவீர்கள்!!

பாலகாந்தன் பிரசன்னா

நமது நாட்டில் பல்வேறு கலைஞர்கள் உள்ள போதும் அவர்களில் அதிகமானோரின் திறமைகள் இலைமறை காயாகவே இருந்து வருகின்றன. சந்தர்ப்பமும், அதிஷ்டமும் ஒன்று சேரும் போதுதான் இவ்வாறானவர்களின் திறமைகள் வெளி உலகுக்குத் தெரியவருகின்றன.

ஊடகங்களின் பார்வையில் பட்டுவிடும் திறமைசாலிகள் உலகின் வெளிசத்துக்கு வந்து, அடையாளங்களையும் பெற்றுவிடுகின்றனர்.

அந்தவகையில் நமது பார்வையில் சிக்கிய வவுனியா பூந்தோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்த பாலகாந்தன் பிரசன்னா எனும் கலைஞரின் திறமையினை வெளிச்சப்படுத்துவதில் வவுனியா நெற் இணையத்தளம் மகிழ்ச்சியடைகிறது.

ஒரு புகைப்படத்தினைப் பார்த்தால் அதனை அப்படியே போட்டோபிரதி எடுப்பது போல அச்சுஅசலாக வரைவதுதான் பிரசன்னாவின் அசாத்திய திறமை. ஓவியம் வரைவது தவிர பிரசன்னா ஒரு சிறந்த குரல்வளம் கொண்ட ஒரு பாடகரும் கூட.

இவரின் திறமை வெளிச்சத்துக்கு வந்து இவரது கலைப்பயணம் மெம்மேலும் சிறப்படைய வவுனியா நெற் வாழ்த்துகிறது. இவரின் கைவண்ணத்தால் உருவாகிய சில ஓவியங்கள் உங்கள் பார்வைக்காக..

வட மாகாணத்தின் கல்வித்துறையில் பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லை : ஆளுநர் அதிரடி நடவடிக்கை!!

ஆளுநர் அதிரடி

வட மாகாணத்தின் கல்வித்துறையில் பணிபுரியும் பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவது தொடர்பிலும் பால்நிலை சமத்துவம் இல்லாமை தொடர்பிலும் ஆளுநரின் கவனத்திற்கு அதிகளவான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அவற்றிற்கான தீர்வுகளை வழங்குவதற்கு குறைகேள் விசாரணைக் குழுவொன்றினை ஸ்தாபிக்க ஆளுநர் சுரேன் ராகவன் தீர்மானித்துள்ளார்.

மூன்று பேர் அடங்கிய இந்த விசாரணைக் குழுவில் இரு பெண்கள் உள்ளடக்கப்படவுள்ளதுடன் அதில் ஒருவர் முறைப்பாட்டாளர்களினால் முன்மொழியப்பட்டவராகவும் இருப்பார்.

இதேவேளை வட மாகாணத்தின் கல்வித்துறையை மேம்படுத்தும் நோக்கில் வட மாகாண கல்வியமைச்சுக்கு தமது ஆலோசனைகளையும் சரியான வழிகாட்டுதல்களையும் வழங்குவதற்கு 15 பேரடங்கிய மூத்த கல்விமான் சபையொன்றினை ஸ்தாபிப்பதற்கும் ஆளுநர் தீர்மானித்துள்ளார்.

இந்த சபைக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வைத்தியசாலையில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட வயோதிப தந்தை!!

பாணந்துறை ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வயோதிப தந்தை ஒருவரை வைத்தியசாலை பாதுகாப்பு பிரிவினர் துரத்தியடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எப்படியிருப்பினும் வைத்தியசாலை அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

இந்த வயோதிபர் பாணந்துறை வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள ATMஇற்கு அருகில் விழுந்து கிடந்துள்ளார்.

தலையில் ஏற்பட்ட நோய் மற்றும் முதுகில் ஏற்பட்ட வருத்தம் காரணமாக கடந்த 5ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வைத்தியசாலை பாதுகாப்பு பிரிவினர் குறித்த தந்தையை இவ்வாறு வெளியே துரத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம்!!

விபத்தில் ஒருவர் மரணம்

வவுனியா புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் மேசன் தொழிலாளி ஒருவர் மரணமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,

வவுனியாவில் இருந்து யாழ்நோக்கி சென்ற இலகுரக வாகனம் புளியங்குளம் முத்துமாரி நகருக்கு அண்மையில் சென்றுகொண்டிருந்த போது வீதியால் திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்ப்பட்டுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்திருந்தார். அவரை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் மரணமடைந்துள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் புளியங்குளம் முத்துமாரிநகரை சேர்ந்த கந்தசாமி சத்தியநாதன் (வயது 48) என்ற குடும்பஸ்தரே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப் பட்டுள்ளது. வான்சாரதி கைதுசெய்ய்யபட்டதுடன் புளியங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாடு ஒன்றில் பரோட்டாவினால் ஏற்பட்ட விபரீதம் : கொடூர தாக்குதல் நடத்திய தமிழர்கள்!!

கொடூர தாக்குதல்

சிங்கப்பூரில் இலவசமாக பரோட்டா வழங்காத உணவக ஊழியரை கடுமையாக தாக்கிய தமிழ் இளைஞர்களுக்கு 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 45 வயதான முருகன் ஜோசப் என்பவர் உணவகத்தில் இருந்த கத்தியால் அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. இதன்போது முருகனுக்கு 10 மாத சிறைத்தண்டனையுடன் 3000 சிங்கப்பூர் டொலர்களை அபராதமாக செல்லுமாறு சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முருகன் மற்றும் அவரது நண்பர்களாக பாலசந்திரன் கோதண்டபானி மற்றும் பரிசல் ரஹமட் என்பவர்கள் தினமும் சிங்கப்பூரில் உள்ள உணவகத்தில் இலவசமாக உணவு கோரி வந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற தினமான கடந்த வருடம் ஜுலை மாதம் 29ஆம் திகதி முருகன் பாலசந்திரன் தனது நண்பர்களுடன் குடிபோதையில் உணவகத்திற்கு சென்று இலவசமாக பரோட்டா வழங்குமாறு கோரியுள்ளனர்.

எனினும் உணவக உரிமையாளர் இலவசமாக அதனை வழங்க முடியாதென கூறியுள்ளார். இதன்போது குறித்த தமிழர்கள் மோதலில் ஈடுபட்டதுடன் அங்கிருந்து சென்றுள்ளனர்.

மீண்டும் 10 நிமிடங்களின் பின்னர் அங்கு வந்தவர்கள் மீண்டும் உணவு வழங்குமாறு கோரியுள்ளனர். எனினும் உணவு வழங்காமையினால் நீளமாக கத்தி ஒன்றை எடுத்து உணவக உரிமையாளரை தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் தமிழர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் கத்தியால் குத்திய முருகன் ஜோசப் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அதற்கமைய நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது முருகன் ஜோசப் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நடிகருக்கு 4வது மனைவியான நடிகை : திருமணமான சில நாட்களில் தற்கொலை முடிவு!!

நடிகை தற்கொலை முடிவு

கேரளாவை சேர்ந்த நடிகர் ஆதித்யனுக்கும், நடிகை அம்பிளி தேவிக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. ஆதித்யனுக்கு இது 4 வது திருமணம் என்று கூறப்படுகின்றது. அதேபோல், அம்பிளி தேவிக்கும் இது 2 வது திருமணமாகும். இவர்களது திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும், அம்பிளி தேவியின் முதல் கணவர், தனது மனைவிக்கு திருமணமானதை கேக் வெட்டி கொண்டாடியும் தொல்லை ஒழிந்தது எனவும் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், திருமணமான சில நாட்களிலேயே மனமுடைந்துபோன அம்பிளி தேவியும், ஆதித்யனும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த தகவலை அவர்களே, பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்கள்.

மரணச் சடங்கிற்கு வந்த 57 பேர் உயிரிழந்த பரிதாபம்!!

57 பேர் உயிரிழந்த பரிதாபம்

இந்தியாவில் மரணச் சடங்கில் கலந்துகொள்ளச் சென்ற இடத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 57 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் மரண நிகழ்வில் கலந்து கொள்ள உத்திரபிரதேச மாநிலத்திலிருந்தும் பலர் வந்திருந்தனர்.

இந்நிலையில் அங்கு வந்தவர்கள் இணைந்து கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளனர். சிலர் அதை எடுத்து கொண்டு ஊரில் இருந்தவர்களுக்கும் வழங்கி உள்ளனர். இதில் அனைவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்அடுத்ததுடுத்து 57 பேர் பலியாகினர்.

மேலும் 33 பேர் அபாய கட்டத்தை தாண்டி உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.