மஹிந்தவுக்கு எதிராக இந்தியாவில் ஆர்ப்பாட்டம்!!

மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இந்தியா சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் இந்திய ஊடக செய்திகள் தெரிவித்துள்ளதாவது, கர்நாடக மாநில – பெங்களூருக்கு சென்று ராஜபக்ஷவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

சென்னையை தலைமையிடமாக கொண்ட பிரபல ஆங்கில நாளிதழ் பெங்களூரில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று காலை ராஜபக்ஷ பெங்களூர் சென்றுள்ளார். இந்நிலையில், தமிழ் ஆர்வலர்களும், மே 17 இயக்கம் போன்ற அமைப்பினரும், ´கோ பேக் ராஜபக்ஷ´ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

குறித்த பத்திரிகை தலைவர், தொடர்ந்து இலங்கை தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கு எதிராக செயற்படுகிறார் என குறித்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசு செய்த கொடுமைகளை அவரது நாளிதழ்களில் வெளியிடுவதில்லை.
இப்போது, ராஜபக்ஷவை இந்திய மண்ணுக்கு அழைத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு போராட்டக்காரர்கள் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் முதன்முறையாக நடந்த அதிசயம் : கல்லீரல் மூலம் உயிர் தப்பிய நபர்!!

உயிர் தப்பிய நபர்

இலங்கையில் திடீர் விபத்தில் உயிரிழந்த 38 வயதான நபரின் கல்லீரல் மூலம் மற்றுமொரு நபர் ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். நேற்று மாலை இரத்தினபுரி வைத்தியசாலையில் இருந்து விமானம் மூலம் கண்டி வைத்தியசாலைக்கு கல்லீரல் கொண்டு செல்லப்பட்டது.

இதன்மூலம் நுவரெலியா பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான நபர் ஒருவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. இவ்வாறான உடற்பாகங்களை விமான மூலம் கொண்டு செல்வதற்காக விமான படையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கமைய முதல் முறையாக குறித்த கல்லீரல் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது போன்ற அவசர சேவைகளை வழங்க எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆலோசனை வழங்கப்பட்டது.

இந்த கல்லீரலை இரத்தினபுரியில் இருந்து விமானம் மூலம் கண்டிக்கு கொண்டு செல்வதற்கு குறைந்த பட்சம் 5 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கல்லீரல் பொருத்தும் நடவடிக்கை வெளிநாடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்டிருந்தால் 100 லட்சம் ரூபா செலவாகும். எனினும் அரச வைத்தியசாலையில் இந்த சத்திரசிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரத்தினபுரி வைத்தியசாலையில் மூளைச் சாவடைந்த 38 வயதான இளைஞனின் உடற்பாகங்களை தானமாக வழங்க குடும்பத்தினர் விருப்பம் வெளியிட்டதற்கமைய கண்டி வைத்தியசாலையில் இதனை பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கண்டிக்கு கொண்டு செல்லப்பட்ட கல்லீரல் நுவரெலியாவை சேர்ந்தவருக்கும், சீறுநீரகங்கள் இரண்டு பேராதனை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டமையினால் 3 நோயாளர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இலங்கையில் நான்கு மணி நேரத்தில் 3876 பேர் அதிரடியாக கைது!!

3876 பேர் அதிரடியாக கைது


நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3876 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்றிரவு 11.00 மணிமுதல் இன்று அதிகாலை 3.00 மணி வரையில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. மேலும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமையவே நாடளாவிய ரீதியில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்களில் 904 பேர் போதையுடன் வாகனம் செலுத்தியவர்கள் எனவும், 950 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் எனவும், 1033 பேர் போதைப் பொருட்களை வைத்திருந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொழிற்சாலையில் இயந்திரத்தினுள் சிக்குண்டு ஊழியா் பரிதாபமாக பலி!!

ஊழியா் பரிதாபமாக பலி

அம்பாறை, நிந்தவூர் அட்டப்பள்ளம் எனும் இடத்தில் அமைந்துள்ள அனல்மின் உற்பத்தி தொழிற்சாலையில் தொழில்புரிந்து வந்த தொழிலாளி ஒருவர் இன்று சனிக்கிழமை(09) காலை அத்தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த போது இயந்திரத்தினுள் அகப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த தொழிலாளி அட்டாளைச்சேனை தைக்காநகர் 15ஆம் கிராமத்தைச் சேர்ந்த 23 வயதுடைய மீனவ குடும்பத்தைச் சேர்ந்தவராவார். இவர் கடந்த 40 நாட்களாகவே இத்தொழிற்சாலையில் தொழில் புரிந்து வருவதாகவும், அதன் நிமித்தம் சனிக்கிழமை காலை தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை இயந்திரத்தினுள் அகப்பட்டு தூக்கி வீசப்பட்டு அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தொழிற்சாலை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவரது தலை மற்றும் உடல் பாகங்களில் பலத்த காயங்கள் காணப்படுவதுடன் இவரது சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான விரிவான விசாரணையினை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ரயில்வே மின் கம்பத்தின் இடையில் தலை சிக்கிய சிறுமிக்கு நேர்ந்த கதி!!

சிறுமிக்கு நேர்ந்த கதி

ரயில் நிலைய நடைமேடையில் உள்ள மின் கம்பத்தின் இடையில் தலை சிக்கித் தவித்த 5 வயது சிறுமி, ஒன்றரை மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார். சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,

திருவள்ளூர் மாவட்டம் சிறுமுகி கிராமத்தைச் சேர்ந்தவர் 5 வயது மகள் தனது தாயுடன் திருப்பதி செல்வதற்காக திருத்தணி ரயில் நிலையத்தில் காத்திருந்தார்.

அப்போது, நடைமேடையில் பயணிகள் அமருவதற்காக அமைக்கப்பட்டுள்ள இருக்கையில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக, அருகில் உள்ள மின் கம்பங்களின் இடையில் கீர்த்தனாவின் தலை சிக்கிக் கொண்டது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், சிறுமியின் தலையை வெளியே எடுக்க போராடினார்.

ஆனால், எவ்வளவு முயன்றும் அவரால் தலையை எடுக்க முடியாததால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தார். இதுகுறித்து பயணிகள் அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள், ஒன்றரை மணி நேரம் போராடி, வெல்டிங் இயந்திரம் மூலம் கம்பத்தை அகற்றி சிறுமியை காயமின்றி பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தால், திருத்தணி ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தாயில்லாத குழந்தைக்கு சூடு வைத்த தந்தை!!

குழந்தைக்கு சூடு வைத்த தந்தை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தாயில்லாத 7 வயது குழந்தையின் தந்தையே நெருப்பால் சூடு வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சூரியக்கோடு பகுதியை சேர்ந்த 33 வயதான மணிகண்டன் என்பவரே இவ்வாறு செய்துள்ளார். குறித்த நபரின் மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் ஏற்ப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மணிகண்டனுக்கு 7 வயதில் ஒரு மகளும் 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். குறித்த நபரின் மனைவி உயிரிழந்த பின்னர் சமீப காலமாக வேறு பெண்களுடன் மணிகண்டன் தொடர்பு வைத்திருப்பது தெரியவந்துள்ளது. மணிகண்டனின் 7 வயது மகள் வாவறை பாடசாலையில் 2ஆம் வகுப்பில் கற்றுவருகிறார் இந்நிலையில் இவருக்கு கடந்த சில மாதங்களாக மகளுக்கு உடலில் சூடு வைத்து சித்திரவதை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் பாடசாலைக்கு சென்ற மாணவியின் கன்னத்தில் தீக்காயம் இருந்ததை பார்த்த பாடசாலை ஆசிரியர்கள் இது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிக்கு தகவலளித்தனர். தகவலறிந்து வந்த நாகர்கோவிலில் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் மணிகண்டனிடையே விசாரணை நடத்தி வருகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பாக சிறுமியிடம் விசாரித்த போது, தனது தந்தை தொடர்ந்து அடித்து துன்புறுத்தி நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்வதாக சிறுமி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிறுமியை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டு மணிகண்டனை நாகர்கோவில் அலுவலகம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொலிஸார் மணிகண்டன் மீது தக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் பரிந்துரை செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வட மாகாணத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் புதிய நடைமுறை!!

புதிய நடைமுறை

வடக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் காலை வழிபாட்டுடன் உடற்பயற்சி, யோகா செய்வதை கட்டாயமாக்கியுள்ளது வட மாகாணகல்வி அமைச்சு. முறையான உடற்பயிற்சி எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதை விளக்கும் வகையிலான இறுவட்டையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

வட மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களை இணைத்து யோகா உடற்பயிற்சி காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது. சுமார் 8 நிமிடங்களை கொண்டமைந்துள்ள இந்த காணொளியில் வரும் மூன்று உடற்பயிற்சிகளை மாணவர்கள் காலை வழிபாட்டின்போது மேற்கொள்ள வேண்டும்.

இது தொடர்பில் வலயங்களிலுள்ள விளையாட்டுத்துறை பொறுப்பாளர்களுக்கு 12ஆம் திகதி அறிவித்தல் வழங்கப்படுவதுடன், அவர்களுக்குப் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதி முதல் மாகாணத்திலுள்ள தரம் 6 – 13 வரையுள்ள பாடசாலை மாணவர்கள் இரு நாட்கள் இந்த உடற்பயிற்சிகளை செய்யவேண்டும் என்று மாகாண கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை : எதிர்வரும் 16 மணித்தியாலங்களுக்கு!!

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

எதிர்வரும் 16 மணித்தியாலங்களுக்கு சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமாக கடும் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது குறித்த பிரதேசங்களில் மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் தற்காலிக கடும் காற்று வீசக்கூடும் எனவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. அதேபோல் , மேல் , வடமேல் , தென் மற்றும் ஊவா மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பாரிய மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் கோரியுள்ளது.

சுவாமி விபுலானந்த அடிகளாரின் மருமகள் காலமானார்!!

விபுலானந்த அடிகளாரின் மருமகள்

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் மருமகளான கோமேதகவல்லி செல்லத்துரை தனது 92ஆவது வயதில் நேற்று காரைதீவில் காலமானார்.

ஓய்வுநிலை அதிபரான கோமேதகவல்லி செல்லத்துரை 1926.06.06 ஆம் திகதி பிறந்தவர். அவரை பொதுவாக கண்ணம்மாக்கா என அழைப்பதுண்டு.

காலஞ்சென்ற கோமேதகவல்லியின் இறுதிக்கிரியைகள் இன்று மாலை 4 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நடைபெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் முன் அறிவித்தலின்றி மின்சாரம் துண்டிப்பு : பொதுமக்கள் விசனம்!!

மின்சாரம் துண்டிப்பு

வவுனியாவில் இன்று காலை 8.30 மணிமுதல் நகர்ப் பகுதிகளில் முன்னறிவித்தலின்றி மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியிலுள்ள வர்த்தகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அசௌகரியங்களுக்குள்ளாகிள்ளனர். மின்சார சபையின் இச் செயற்பாடு காரணமாக பல வியாபார நிலையங்களில் வியாபாரம் மந்தகதியில் இடம்பெறுவதாக வியாபார நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திடீரென முன் அறிவித்தல் ஏதுமின்றி மின்சாரம் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாகவும், வவுனியாவில் பல இடங்களில் இவ்வாறாக திடீரென முன்னறிவித்தலின்றி மின்சாரம் நிறுத்தப்பட்டு வழங்கப்படவில்லையெனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் நகரத்தினை அண்டிய பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்கள் வெறிச்சோடிக்காணப்பட்டதுடன் இச் செயற்பாட்டினால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் உரிய அதிகாரிகள் மின்தடைகுறித்து முன்னறிவித்தல் விடுத்து மின்துண்டிப்பை மேற்கொள்ளுமாறும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஊர் மக்கள் முன் தற்கொலை செய்து கொண்ட நபர் : கலங்க வைத்த நிகழ்வு!!

ஊர் மக்கள் முன் தற்கொலை செய்து கொண்ட நபர்

தமிழகத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக உயர்மின் கோபுரத்தின் மீது ஏறிய ஒருவர் மனைவி பிள்ளைகள் கீழிருந்து கெஞ்சி கூத்தாடியும் மதிக்காமல் குதித்து தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் சோகத்தில்ஆழ்த்தி உள்ளது.

தமிழகத்தில் திருவண்ணாமலைமாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனது உறவினருடன் இணைந்து சென்னையில் சென்டரிங் வேலைசெய்து வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவியும் கிரிஜா மற்றும் ஆரியா என்ற இரண்டுகுழந்தைகளும் உள்ளன.

இரு தினங்களுக்குமுன்பு விடுமுறை எடுத்து வந்தவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில்அவர் குடுபத்தில் பிரச்சனை தொடர்ந்து நிலைவி வந்துள்ளது. ஆத்திரம் அடைந்தரமேஷ் கிரமத்தில் உள்ள உயர்மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ளபோவதாக செல்போனில்தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுஅவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அவர் மனைவி மற்றும்குழந்தைகள் செல்போனில் கெஞ்சியும் கதறியும் அழுது கீழே இறங்க கேட்டு கொண்டனர்.

இந்நிலையில் அங்குவந்த தீயணைப்பு துறையினர் உயர் மின்கோபுரத்தில் பாதிவரை ஏறினர். அருகில் வந்தால் குதித்துவிடுவேன்என்று ரமேஷ் தொடர்ந்து மிரட்டியதால் ஒன்றரை மணிநேரம் மின்கோபுரத்தின் மேலே நின்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

எனினும் அதை கண்டுகொள்ளாத ரமேஷ் கீழே குதித்து உடல் சிதறி சம்பவ இடத்தில் பலியானார். இதைநேரடியாக பார்த்த அவர் மனைவியும் பிள்ளைகளும் கதறி அழுத காட்சிகள் அனைவரையும் கலங்க செய்தது.

சிறுவனை கல்லைக் கொண்டு எறியும் கொடுமை : தினமும் வேதனையை அனுபவிக்கும் சிறுவன்!!

வேதனையை அனுபவிக்கும் சிறுவன்

Hypertrichosis என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்திய சிறுவன் தினம் தோறும், தான் அனுபவிக்கும் சித்ரவதை குறித்து பெரும் வேதனை தெரிவித்துள்ளான்.

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த லலித் பாட்டீடர் (13) என்கிற சிறுவன் மிகவும் அரிதாக வரக்கூடிய ஓநாய் நோய்க்குறி என்று அழைக்கப்படும் ஹைபிரைடிசோசிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் முழுவதும் அதிகமான முடிகள் வளர்ந்து காணப்படும்.

இந்த பாதிப்பு குறித்து சிறுவன் கூறுகையில், பள்ளியில் பிரபலமாகவும், படிப்பில் கெட்டியாகவும் இருந்து வருகிறேன். வழக்கமாக என்னை பார்ப்பவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் புதிதாக பார்ப்பவர்கள் என்னை குரங்கு என நினைத்து கல்லை கொண்டு எறிவார்கள். எனக்கு பொலிஸ் அதிகாரியாக வேண்டும் என்ற ஆசை உள்ளது. தவறு செய்பவர்கள் அனைவரையும் பிடித்து சிறையில் அடைக்க வேண்டும்.

பிறக்கும்பொழுதே என்னுடைய முகத்தில் அதிக முடிகள் இருந்தது. சில நேரங்களில் நான் மற்ற குழந்தைகளை போல இருக்க ஆசைப்படுகிறேன். ஆனால் அது என்னால் முடியாது என்பதால், என்னுடைய வழியில் நிம்மதியாக இருக்கிறேன்.

இது குறித்து அவருடைய தாய் பார்வதிபாய் (42) கூறுகையில், லலித் பிறப்பதற்கு முன்பு எனக்கு 5 பெண் குழந்தைகள் பிறந்தனர். அனைவரும் பெண் குழந்தைகள் என்பதால், ஆண் குழந்தை வேண்டி ஏராளமான கோவில்களுக்கு சென்று வேண்டுதல் வைத்தேன். ஒரு வழியாக லலித் பிறந்ததும் அதிக மகிழ்ச்சியடைந்தேன்.

ஒரு மணி நேரம் கழித்து குழந்தையை பார்க்கும் போது தான் பெரும் அதிர்ச்சியடைந்தேன். உடன் முழுவதும் முடி இருப்பதை பார்த்து, மருத்துவருக்கு தகவல் கொடுத்தேன். பரிசோதனை மேற்கொண்ட அவர், இதனை குணப்படுத்த முடியாது எனக்கூறியதாக வேதனை தெரிவித்துள்ளார்.

சக மாணவிகள் கிண்டல் செய்ததால் தூக்கில் தொங்கிய அழகிய இளம் பெண்!!

தூக்கில் தொங்கிய இளம்பெண்

தமிழகத்தில் சக மாணவிகள் கிண்டல் செய்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகள் திவ்யா (21). தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு இளங்கலை படித்து வந்தார். திவ்யா கடந்தாண்டு மாநில அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தங்கம் வென்றார்.

இந்நிலையில் கடந்த 2ஆம் திகதி சக வகுப்பு மாணவிகள், இந்தாண்டு சிலம்பு போட்டியில் எப்படி தங்கம் வெல்லப்போகிறாய் என திவ்யாவை கிண்டல் செய்த நிலையில் இது குறித்து அவர் தந்தையிடம் கூறியுள்ளார். இதையடுத்து கல்லூரி பேராசிரியையிடம் திவ்யாவின் தந்தை பழனிவேல் புகார் அளித்தார்.

ஆனாலும் மாணவிகள் மீண்டும் திவ்யாவை கிண்டலடித்ததால் மனமுடைந்த அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இது குறித்து பழனிவேல் கூறுகையில், நாங்கள் படிக்க தெரியாதவர்கள், எங்கள் குடும்பத்தில் முதலில் எழுத படிக்க கற்றுக்கொண்டது எங்களது மகள் தான்.

என் மகள் சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதோடு, நடனம், பேச்சு போட்டி போன்றவற்றிலும் பரிசுகளை பெற்றுள்ளார். திறமையுள்ள எனது மகள் முன்னேறிவிடக்கூடாது என சக மாணவிகள் அவரை ராகிங் செய்துள்ளனர். இது குறித்து பேராசிரியரிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நான் என் மகளை இழந்துவிட்டேன் என வருத்தத்துடன் கூறியுள்ளார்.

வவுனியாவில் நினைவஞ்சலிக்கு சென்ற சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!!

சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்

வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் பகுதியில் நேற்று மாலை அப்பம்மாவுடன் சென்ற சிறுவன் இன்று காலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளமை கிராமத்தையே சோகமாக மாற்றியுள்ளது. மேலும் இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

நேற்று மாலை சுந்தரபுரத்திலிருந்து சிதம்பரபுரம் கற்குளம் படிவம் 3 பகுதிக்கு தொண்ணூறாம் நாள் நினைவஞ்சலிக்கு முன் ஆயத்த வேலைக்காக சிவானந்தம் தருண் என்ற ஆறு வயதுச் சிறுவன் அப்பம்மாவுடன் சென்றிருந்ததார்.

அங்கு ஏனைய சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்ததாகவும் இரவாகியதால் சிறுவனை காணவில்லை என நீண்ட நேரமாக தேடியும் எங்குமே கிடைக்கவில்லை. இதனையடுத்து இன்று கிணற்றில் இருந்து குறித்த சிறுவன் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

மேலும் குறிப்பிட்ட கிணறானது முழுமையாக நிர்மானிக்கப்பட்டுள்ளதுடன் கிணற்றின் கட்டு 3அடிக்கு உயற்றப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள கிணறு என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான கிணற்றில் பிள்ளை எவ்வாறு வீழ்ந்திருக்க கூடும். இது கொலையா? அல்லது பழிவாங்கும் நோக்கில் செய்யப்பட்டதா? போன்ற பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் சிக்கிய இலங்கையரின் வீட்டில் இராணுவ சீருடைகள், ஆயுதங்கள் மீட்பு!!

டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள மாகதுரே மதுஷின் ஆதரவாளரான ஜங்கா என்ற போதைப்பொருள் வர்த்தகரின் வீட்டில் இராணுவ சீருடைகள் மற்றும் வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

கந்தர பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் 18 இராணுவ சீருடைகள், டீ 56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும் 26 தோட்டாக்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் டுபாயில் கைது செய்யப்பட்ட மாகதுரே மதுஷுடன் ஜங்கா கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்தறை பிரதேச பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர.

இந்த இராணுவ சீருடைகளுடன் போதை பொருள் வர்த்தகர் ஜங்கா என்று அழைக்கப்படும் நபரின் சித்தப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

தானியங்கி பணப் பறிமாற்று இயந்திரங்களில் திருட்டு : சந்தேக நபரின் புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸார்!!

பணப் பறிமாற்று இயந்திரங்களில் திருட்டு

தானியங்கி பணப்பறிமாற்று இயந்திரங்களின்(ATM) திருட்டுத்தனமாக இலத்திரனியல் கருவியை பொருத்தி, வங்கி வாடிக்கையாளர்களின் வங்கி அட்டைகளின் இரகசிய தகவல்களை திருடும் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

இரத்மலானை பிரதேசத்தில் ATM இயந்திரம் ஒன்றில் இலத்திரனியல் கருவியை பொருத்தி பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகளை பயன்படுத்தி போலி வங்கி அட்டையை தயாரித்து வெளிநாடுகளில் சட்டவிரோத கொடுக்கல் வாங்கல் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிசிரிவி கெமராவில் பதிவான சந்தேக நபரின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இந்த நபர் பற்றிய தகவல் தெரிந்தால், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 011-2422716, 011-2326670 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புக்கொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.