வவுனியாவில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றி சென்ற நபர் கைது!!

அனுமதிப்பத்திரமின்றி டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிசென்ற குற்றத்திற்காக ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் சம்பவமானது நேற்று முன்தினம் வவுனியா மகாறம்பைகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸார் டிப்பர் வாகனத்தை வழிமறித்து சோதனை மேற்கொண்ட போதே அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றி சென்றமை தெரியவந்துள்ளது.

டிப்பர் வாகனத்தின் சாரதி கைதுசெய்யபட்டதுடன், டிப்பர் வாகனத்தினையும் பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் முற்படுத்தபடவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பாலத்திற்குள் பாய்ந்த முச்சக்கரவண்டி : மயிரிழையில் உயிர் தப்பிய மூவர்!!

மயிரிழையில் உயிர் தப்பிய மூவர்

மட்டக்களப்பு நகரில் உள்ள புதுப்பாலம் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று வீதியினை விட்டு பாலத்திற்குள் பாய்ந்துள்ள நிலையில் அப்பகுதியில் நின்றவர்கள் விரைவாக செயற்பட்டதன் காரணமாக மூன்று பேர் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர்.

இன்று மாலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்ற முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள உறவினரை பார்க்கச்சென்ற இரண்டு பெண்களும் முச்சக்கர வண்டி சாரதியுமே மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர்.

இதன்போது முச்சக்கர வண்டியில் இருந்த இரண்டு பெண்களும் மீட்கப்பட்டு உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசென்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுப்பாலத்தின் இரு பகுதியும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதன் காரணமாக பல விபத்து சம்பவங்கள் அடிக்கடி இப்பகுதியில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பாடசாலை மாணவர்களால் போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்!!

 

வவுனியா ஈரட்டை பரக்கும் மகாவித்தியாலய மாணவர்கள் போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றை இன்றைய தினம் மேற்கொண்டனர்.

பாடசாலையின் அதிபர் தலைமையில் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றிருந்தது. இன்று காலை 10மணியளவில் ஈரட்டை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவிருந்து ஆரம்பித்த ஊர்வலம் ஏ9 வீதி வழியாக பாடசாலையை சென்றடைந்தது.

இவ் ஊர்வலத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் , பொலிஸார், சுகாதார பரிசோதகர் ,சிவில் பாதுகாப்பு படையினர் போன்ற பலரும் கலந்து கொண்டனர். இதன் போது போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இலங்கையில் மாற்றுத் திறனாளி பெண்களுக்கு நேர்ந்து வரும் அவலம்!!

மாற்றுத் திறனாளி பெண்

இலங்கையில் மாற்றுத் திறனுடைய பெண்களும், சிறுமிகளும் பல்வேறு மட்டங்களில் ஒதுக்கப்படல், பாரபட்சம், துஷ்பிரயோகம் முதலானவற்றை எதிர்கொள்கின்றனர் என ஐக்கிய நாடுகளின் மகளிர் தொடர்பான அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மகளிர் அமைப்பின் பால்நிலை, மாற்றுத்திறன் மற்றும் தொழில்வாய்ப்பினை இலக்குவைத்து நேற்று வெளியிடப்பட்ட இலங்கையின் முதலாவது அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின்படி, அனைத்து வயதுப் பிரிவுகளிலும் மாற்றுத்திறனுடைய ஆண்களைவிட, மாற்றுத்திறனுடைய பெண்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

எனினும், இலங்கையில் மாற்றுத்திறனுடைய தொழிலில் உள்ளவர்களின் 15 வீதமானவர்கள் மாத்திரமே பெண்களாகும். இந்த நிலையானது, சந்தர்ப்பங்களை அணுகுவதில் உள்ள பாரிய இடைவெளியை குறிப்பதாக ஐக்கிய நாடுகள் மகளிர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேநேரம், மாற்றுத்திறனுடைய ஆண்கள் அல்லது ஏனைய பெண்களுடன் ஒப்பிடும்போது மாற்றுத்திறனுடைய பெண்கள் மேலதிக பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனறர் என்று ஐக்கிய நாடுகளின் மகளிருக்கான அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி ரமயா சல்காதோ தெரிவித்துள்ளார்.

புத்தளத்தினை உலுக்கிய சம்பவம் : தாய்க்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை!!

புத்தளத்தினை உலுக்கிய சம்பவம்

04 வயது மகளை கொலை செய்து கலா ஓயாவில் வீசியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேக நபரான தாயார் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புத்தளம் நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சந்தேக நபரான தாயார் நீதவானை சந்தித்து இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் குறித்த சிறுமியின் சடலம் இதுவரையில் கிடைக்கபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் நாய் கவ்விச் சென்ற மனித தலை யாருடையது?

நாய் கவ்விச் சென்ற மனித தலை

பேலியகொடை பகுதியில் நாய் ஒன்று கவ்விச் சென்ற போது மீட்கப்பட்டிருந்த மனித தலை தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. நாய் ஒன்று மனித தலையை கவ்விச் செல்வதாக பிரதேசவாசிகள் சிலர் காவல்துறைக்கு அறிவித்திருந்தனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் காவல்துறை குழுவின் அவதானம், அண்மையில் வெளிநாட்டு ஜோடி ஒன்றின் சாரதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நோக்கி திரும்பியுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி கொழும்பில் சொகுசு குடியிருப்பு ஒன்றின் நான்காவது மாடியில் தங்கியிருந்த வெளிநாட்டு ஜோடியின் சாரதி, அந்த வீட்டின் அறையினுள் மர்மமான முறையில் உயரிழந்திருந்தார்.

கதிரையொன்றில் கட்டப்பட்டு எரிக்கப்பட்டிருந்த அவரது சடலம் தொடர்பில் அந்த வெளிநாட்டு ஜோடி காவல்துறைக்கு அறிவித்திருந்தது.

இந்நிலையில், மொரட்டுவை பகுதியில் நபரொருவர் கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்ததாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததோடு, அவரே இந்த வெளிநாட்டு ஜோடிக்கு சாரதியாக கடமையாற்றியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இதற்கமைய மீட்கப்பட்டுள்ள மனித தலை, குறித்த நபருடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறை, அதனை உறுதி செய்வதற்காக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக விசாரணைகளை மேற்கொள்ளும் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு தாயிக்கும் இந்நிலை வேண்டாம் – கண்ணீர் ததும்பும் காணொளி!!

கண்ணீர் ததும்பும் காணொளி

பெற்ற தாயையே கொடூரமாக தாக்கும் மகள் குறித்த சம்பவத்தை ஹிரு சி.ஐ.ஏ கண்டறிந்துள்ளது.
குருநாகல் – யக்கல்ல – கல்கெட்டிகம பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.  வயதான தனது தாயை கொடூரமாக தாக்கும் அவரது மகள் மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்திய தூற்றியும் உள்ளார்.

பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய ஹிரு சி.ஐ.ஏ இது தொடர்பில் ஆராய்ந்து அதனை காணொளியாகவும் பதிவு செய்துள்ளது. வாய்திறந்து தனது வேதனையை கூட கூறமுடியாமல் தவித்து வரும் இந்த தாயிற்கு விமோசனம் கிடைக்காதா?

இந்த வெளிப்படுத்தலின் பின்னர் உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்துவார்களா?

-ஹிரு தமிழ்-

பேத்தி வயது அழகிய இளம் பெண்ணை திருமணம் செய்த முதியவர் : அடுத்து நேர்ந்த விபரீதம்!!

இளம் பெண்ணை திருமணம் செய்த முதியவர்

இந்தியாவில் 24 வயது இளம் பெண்ணை 67 வயது முதியவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் தம்பதிக்கு பொலிஸ் பாதுகாப்பு கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப்பை சேர்ந்தவர் ஷம்சீர் சிங் (67). இவருக்கும் நவ்பிரீத் கவுர் (24) என்ற அழகிய இளம் பெண்ணுக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.

வயது வித்தியாசம் மிக அதிகமாக உள்ள இத்தம்பதியின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் குடும்பத்தினரால் தங்களது உயிருக்கு ஆபத்து என நீதிமன்றத்தை ஷம்சீரும், நவ்பிரீத்தும் நாடியுள்ளனர்.

அதாவது தங்களது உறவுமுறையை குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் ஏற்காததால், அவர்களால் தங்களுக்கு எதாவது நேர்ந்துவிடும் என பயப்படுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இருவரும் சட்டப்பூர்வமாக திருமணம் செய்துள்ள நிலையில் அவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ஷன்சீரும், நவ்பீரீத்தும் கருத்து கூற மறுத்துவிட்டனர்

2 நாட்களில் தங்கைக்கு திருமணம் : தூக்கில் தொங்கிய அண்ணன் :  கதறும் குடும்பம்!!

தூக்கில் தொங்கிய அண்ணன்

தமிழகத்தில் தங்கைக்கு இரண்டு நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் அண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தின் ஆத்தூரை சேர்ந்தவர் செல்வராஜ் (29). இவர் மனைவி தீபா (24).

ஆழ்துளை கிணறு அமைக்கும் வேலை செய்து வந்த செல்வராஜ், கிணறு அமைக்க ரிக் வண்டியுடன் சென்றால் திரும்பி வருவதற்கு மாதக் கணக்கில் ஆகும் என தெரிகிறது. இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தீபாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்துக்காக தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்த தீபா அங்கேயே தனது குழந்தையுடன் வசித்து வந்தார்.

வருகிற 10-ந் திகதி செல்வராஜின் தங்கை ராஜேஷ்வரிக்கு திருமணம் நடைபெற உள்ளது. இதையடுத்து, ஆழ்துளை கிணறு அமைக்க சென்ற செல்வராஜ் வீடு திரும்பினார். தங்கையின் திருமணத்தை முன்னிட்டு அவர், தீபாவின் பெற்றோர் வீட்டுக்கு சென்று மனைவி மற்றும் குழந்தையை அழைத்துக்கொண்டு, தனது வீட்டுக்கு வந்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு செல்வராஜ், தனது மனைவியை ஆசைக்கு இணங்க அழைத்துள்ளார். அதற்கு தீபா மறுத்துள்ளதுடன், வேறு அறைக்கு சென்று தூங்கி விட்டார். இதன் காரணமாக மனைவியின் நடத்தையில், அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் தங்கையின் திருமண செலவுக்கு பணம் இல்லாமலும் சிரமப்பட்டுள்ளார்.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மணப்பெண் ராஜேஷ்வரிக்கு நேற்று நடக்கவிருந்த நலங்கு நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

திருமணம் வருகிற 10-ந் திகதி நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்ததாக பொலிசார் கூறினார்கள். இதோடு செல்வராஜின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கருதும் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழ்க் கலாச்சாரத்தை எனக்கு பிடிக்காது : அவுஸ்திரேலிய தமிழ்ப் பெண்ணின் சர்ச்சை வீடியோ!!

தமிழ்ப் பெண்ணின் சர்ச்சை வீடியோ

டிக் டாக் என்னும் செயலியில் எனக்கு தமிழ் கலாச்சாரத்தை பிடிக்காது என அவுஸ்திரேலியாவை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் பேசும் வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சமீப காலமாகவே டிக் டாக் என்னும் செயலியானது உலகம் முழுவதிலுமுள்ள மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ஆரம்பத்தில் பொழுது போக்கிற்காக பயன்படுத்தப்பட்ட இந்த செயலி, தற்போது வேறு வேலையே இல்லாமல் வெட்டியாய் பொழுதை கழிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சிறுவர்கள் துவங்கி இல்லத்தரசிகள் வரை பலரும் இதில் மூழ்கியுள்ளனர். அதிக லைக்குகள் பெற்று பிரபலமடைய வேண்டும் என்னுடன் ஆசையில், பெண்கள் பலரும் தங்களுடைய அந்தரங்க பாகங்களை காட்டி வீடியோ செய்து வருகின்றன.

இதனை பார்க்கும் ஒரு சில ஆண்கள், சம்மந்தப்பட்ட பெண்களின் வீடியோக்களுக்கு கீழ் கீழ்த்தரமான கருத்துக்களை பதிவிடுகின்றனர். அதிலும் ஒரு சிலர், அறிவுரை கூறும் விதமாகவும் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

அந்த வரிசையில் ஆபாசமான வீடியோக்களை வெளியிட்டு வந்ததால், அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ் பெண் ஒருவரை இளைஞர்கள் வெளுத்து வாங்கியிருக்கின்றனர்.

அதனை பொறுக்க முடியாத அந்த பெண், தமிழ் கலாச்சாரம் என்னும் பெயரில் தன்னுடைய அழகான உடலை வெளியில் காட்ட விடாமல் தடுக்கின்றனர் எனக்கூறியதோடு, தமிழ கலாச்சாரத்தை பிடிக்கவில்லை எனவும், அதற்கு ஆதரவாக பெண்கள் அனைவரும் ஒன்று கூட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

சர்ச்சையான அந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த இணையதளவாசிகள் பலரும் மீண்டும் அந்த பெண்ணிற்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தூக்கில் சடலமாக தொங்கிய பிரபல இளம் நடிகை : இறுதியாக சூர்யாவுடன் பேசியது அம்பலம்!!

இளம் நடிகை நாக ஜான்சி தற்கொலை

இளம் நடிகை நாக ஜான்சி தற்கொலை செய்து கொண்ட நிலையில் இறப்பதற்கு முன்னர் சூர்யா என்ற நபருடன் போனில் பேசியது தெரியவந்துள்ளது. தொலைக்காட்சி தொடர்கள் பலவற்றில் நடித்து புகழ்பெற்ற நடிகை நாக ஜான்சி கடந்த செவ்வாய்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இறப்பதற்கு முன்னர் ஜான்சி எழுதி வைத்திருந்த கடிதத்தில் தனது சாவுக்கு யாரும் காரணமில்லை என் எழுதியிருந்தார். இதோடு அவர் இறுதியாக பேசிய வீடியோவை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். அதில் அவர் என்ன பேசினார் என்பதை அவர்கள் இன்னும் தெரிவிக்கவில்லை.

இதனிடையில் ஜான்சியின் செல்போனை சோதனை செய்தபோது, இறப்பதற்கு முன்னர் சூர்யா என்ற நபருடன் போனில் பேசியதும், வாட்ஸ் அப்பில் 14 மெசேஜ் அனுப்பியதும் தெரியவந்துள்ளது. சூர்யாவை கடந்த ஆறு மாதங்களாக ஜான்சி காதலித்த வந்த நிலையில் காதலுக்கு அவர் குடும்பத்தார் ஒத்துகொள்ளவில்லை.

இதனால் ஜான்சி மன அழுத்தத்தில் இருந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிசார் தங்கள் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

14 வயதில் குழந்தைக்கு தாயான சிறுமி : பெற்றோரே திருமணம் செய்து வைத்தது அம்பலம்!!

14 வயதில் குழந்தைக்கு தாயான சிறுமி

திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 14 வயது சிறுமிக்கு, குழந்தை பிறந்துள்ள சம்பவம் மருத்துவமனை ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை பூர்விகமாக கொண்ட சிறுமியின் பெற்றோர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னதாக திருப்பூருக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

அங்கு கூலி வேலை செய்து சிறுமியை படிக்க வைத்து வந்த பெற்றோர் 8-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஊத்துக்குளியில் கணவனுடன் ஒன்றாக வசித்து வரும் சிறுமிக்கு, நேற்று பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது சிறுமியின் வயதை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள், உடனடியாக சிறுவர் பாதுகாப்பு நலவாரியத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், 14 வயது சிறுமி எப்படி ஒரு குழந்தையை பார்த்துக்கொள்ள முடியும் என கேள்வி எழுப்பியதோடு, விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் வடமாகாணத்தில் முதன்முதலாக இறப்பர் உற்பத்தி அறிமுகம்!!

இறப்பர் உற்பத்தி

வடமாகாணத்தில் முதற் தடவையாக வவுனியாவில் 8 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட இறப்பர் உற்பத்தித்திட்டம் இன்று(08.02) காலை அதன் கொள்வனவு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா தெற்கு சிங்கள பிரதேசசபையின் ஏற்பாட்டில் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் நெடுங்குளம் பகுதியில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் சமத் நந்திக்க என்ற தனியார் உரிமையாளரினால் ஆரம்பிக்கப்பட்ட இறப்பர் உற்பத்தித்திட்டம் இன்று பெருந்தோட்ட பயிர்ச் செய்கை அமைச்சின் செயலாளர் கருணாந்த கலந்துகொண்டு கொள்வனவு நிகழ்வினை ஆரம்பித்து வைத்துள்ளார்.

இந்நிகழ்வில் இறப்பர் செய்கையின் பணிப்பாளர் நாயகம் ஆர்.வி.பிரேமதாச, தோட்டத் தொழில் அமைச்சின் செயலாளர் ஜே.ஏ.ரஞ்சன், வவுனியா தெற்கு சிங்களப்பிரதேச செயலாளர் ஆர்.ஜானக, வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் இறப்பர் உற்பத்தி பயிர்ச் செய்கை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி!!

மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி

வவுனியாவிலுள்ள பாடசாலை ஒன்றில் இவ்வருடம் பாடசாலை ஆரம்பமானதிலிருந்து ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு பாடசாலைகளில் வழங்கப்படும் சத்துணவுத் திட்டத்தினூடான பகல் உணவு வழங்கப்படவில்லை என்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயத்தில் இவ்வருடம் பாடசாலை ஆரம்பமான திகதியிலிருந்து பகல் உணவு வழங்கப்படவில்லை. குறித்த பாடசாலையிலிருந்து அதிபர் விலகியுள்ளதுடன் தற்போது பதில் அதிபர் கடமையாற்றி வருகின்றார்.

பதில் அதிபரிடம் இவ்விடயம் குறித்து கேட்டபோது, மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதற்கு வவுனியா தெற்கு கல்வி வலயத்திலிருந்து அனுமதி கிடைக்கவில்லை. இது குறித்து பல கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது .

அங்குள்ள உணவு அதிகாரி சுகயீனம் காரணமாக விடுமுறையிலுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாணவர்களுக்கு பகல் உணவு வழங்குமாறு கோரி நேற்றும் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அவர்கள் எமக்கு அனுமதி வழங்கினாலே நாங்கள் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்று பதில் அதிபர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து வவுனியா தெற்கு கல்வி வலயப்பணிப்பாளர் முத்து இராதாகிருஷ்ணனிடம் தொடர்புகொண்டபோது,  அப்பாடசாலையின் அதிபர் அங்கிருந்து விலகியதால் ஏற்பட்டுள்ள நெருக்கடியே பகல் உணவு வழங்காமைக்கான காரணம். தற்போது அதை சீர் செய்வதற்குரிய நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

இன்னும் சில தினங்களில் உணவு வழங்கும் நடவடிக்கை சீர் செய்யப்படும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு இளைஞர்களின் மனிதாபிமானம் : கிணற்றில் வீழ்ந்த பசு மீட்பு!!

உயிருக்குப் போராடிய பசு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சந்திக்கு அண்மித்த பகுதி ஒன்றில் பாதுகாப்பற்ற பாழடைந்த கிணறு ஒன்றிற்குள் தவறி வீழ்ந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பசுமாடு அப்பகுதி இளைஞர்களின் துரித செயற்பாட்டினால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று காலை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதான சந்திக்கு அண்மையிலுள்ள பகுதியில் பாதுகாப்பற்ற பாழடைந்த கிணறு ஒன்றிற்குள் மேச்சலுக்குச் சென்ற பசுமாடு ஒன்று தவறி வீழ்ந்துள்ளது. வெளியே வருவதற்கு பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டபோதும் பசுவால் வெளியே வரமுடியவில்லை.

இதையடுத்து அப்பகுதி மக்கள் பிரதேச சபையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். எனினும் பிரதேச சபையினர் குறித்த நேரத்திற்கு சமூகமளிக்காததுடன் வேறு பல காரணங்களையும் தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதியில் நின்ற இளைஞர்கள் சிலர் உரிய முறையில் செயற்பட்டு பாதுகாப்பற்ற கிணற்றிற்குள் வீழ்ந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பசு மாட்டினை மீட்டுள்ளதுடன் அதனை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.

இளைஞர்கள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பசுவை மீட்பதில் ஒன்றிணைந்து ஈடுபட்ட செயற்பாட்டினை பார்த்த அப்பகுதி மக்களின் இளைஞர்களை வாழ்த்தியுள்ளனர்.

டிப்பர் வாகனமும் லொறியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!!

கோர விபத்து

திருகோணமலை – தம்பலகாமம், 95ஆம் கட்டை பகுதியில் டிப்பர் வாகனமொன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளன.

இந்த விபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவத்தில் லொறியின் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையிலிருந்து சீமெந்து ஏற்றி வந்த லொறியும், கந்தளாயில் இருந்து கப்பல்துறை பகுதிக்கு சென்ற டிப்பர் வாகனமுமே விபத்திற்கு இலக்காகியுள்ளன. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.