அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!!

அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

அரசாங்க ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யவுள்ளதாக அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. அரச சேவை பதவியுயர்வு நடைமுறைக்குப் பதிலாக அரச பணியாளரின் ஆற்றல் மற்றும் திறன்களின் அடிப்படையிலான பதவி உயர்வு கட்டமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அரச சேவையை செயற்றிறன் மிக்கதாக மாற்றி மக்கள் நேய சேவையாக மாற்றவுள்ளதாக அரச நிர்வாக இடர்காப்பு முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். அரச சேவை பதவியுயர்வு நடைமுறைக்குப் பதிலாக அரச பணியாளரின் ஆற்றல் மற்றும் திறன்களின் அடிப்படையிலான பதவி உயர்வு கட்டமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் கீழ் பொறுப்பின் பெறுமதி என்ற தொனிப்பொருளில் அரச பணியாளர்களின் ஆற்றல்களை மதிப்பிடப் போவதாக அமைச்சர் கூறினார். அரச சேவையில் பிரஜைகளை மதிப்பிட்டு, சுய விமர்சனம் செய்யும் புதிய வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் திரு.மத்தும பண்டார தகவல் அறிவித்தார்.

கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய விமானம் : 443 பயணிகளின் நிலை என்ன?

உலகின் மிகப்பெரிய விமானம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை உலகின் மிகப்பெரிய விமானம் தரையிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரம் நோக்கி பயணித்த விமானம் ஒன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த நோயாளி கட்டுநாயக்க விமான நிலைய வைத்திய பிரிவிடம் ஒப்படைத்த பின்னர், அவர் நோயாளர் காவு வண்டி ஊடாக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

29 வயதான ருமேனியா நாட்டவர் ஒருவரே இவ்வாறு நோய் வாய்ப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தரையிறக்கப்பட்ட விமானம் 97,74,000 ரூபாய் பெறுமதியான விமான எரிபொருள் மீள்நிரப்பிச் சென்றுள்ளது.

எனினும் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்படும் போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஒன்று ஏற்பட்டுள்ளது. அதற்கமைய விமானம் தனது பயணித்தை இரத்து செய்துள்ள நிலையில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள சுற்றுலா விடுதிகளில் தங்கியிருந்துள்ளனர். இந்த விமானத்தில் 443 விமான பயணிகள் மற்றும் 21 ஊழியர்கள் பயணித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வவுனியா வைரவப்புளியங்குளம் அருள்மிகு ஆதி விநாயகர் ஆலய புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம்!

வவுனியா வைரவப்புளியங்குளம் அருள்மிகு ஆதி விநாயகர் ஆலய புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் நடைபெற  இறையருள் கூடியுள்ளது.

எண்ணெய்க்காப்பு.08.02.2019 வெள்ளிக்கிழமை காலை 9.30 முதல் 09.02.2019 சனிக்கிழமை பகல் 3 மணி வரை. இடம்பெறும்.

மஹா கும்பாபிஷேகம் 10.02.2019. ஞாயிற்றுக்கிழமை காலை 8.57 முதல் 10.09 வரையுள்ள சுப முகூர்த்தவேளையில் இடம்பெறும்.

நடிகை சந்தியாவின் இடது கை, தலை மற்றும் மார்புப் பகுதி என்ன ஆனது : திணறும் பொலிசார்!!

திணறும் பொலிசார்

கணவரால் படுகொலை செய்யப்பட்ட சந்தியாவின் எஞ்சிய உடல் பாகங்கள் கிடைத்த நிலையில் தலை உள்ளிட்ட சில பாகங்களைத் தேடி காவல் துறை களத்தில் இறங்கியுள்ளது. நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் சந்தியாவை கொலை செய்த பாலகிருஷ்ணன் காவல் துறையிடம் சிக்கியுள்ளார். அவர் காவல் துறையிடம் நடந்த அனைத்தையும் வாக்குமூலமாகக் கொடுத்துள்ளார்.

பெருங்குடி குப்பை கிடங்கில் கடந்த மாதம் 21ஆம் திகதி சந்தியாவின் கை, கால்கள் கண்டெடுக்கப்பட்டாலும் 19 ஆம் திகதியே பாலகிருஷ்ணன் அவரை கொலை செய்துள்ளார். கொலை செய்யப்பட்ட சந்தியாவிற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. விவாகரத்து பதிவு செய்த பிறகு சென்னையில் தனித் தனியாகவே பாலகிருஷ்ணனும் சந்தியாவும் வசித்து வந்துள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊரான தூத்துக்குடி சென்று வந்த சந்தியாவை, ‘உனக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வாங்கித் தருகிறேன், என் வீட்டிற்கு வா’ என்று கூறி அழைத்துள்ளார் பாலகிருஷ்ணன்.

சினிமா ஆசையால் ஜனவரி 19 ஆம் திகதி ஜாபர்கான்பேட்டையில் பாலகிருஷ்ணன் வசித்த வீட்டிற்கு சென்றுள்ளார் சந்தியா. அப்போது, சினிமா வாய்ப்பு வாங்கித் தருகிறேன் ஆனால் என்னோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று கோரியுள்ளார் பாலகிருஷ்ணன்.

இதனை ஏற்க மறுத்த சந்தியா வீட்டை விட்டு வெளியே செல்ல முயன்றுள்ளார். ஆனால் அவரை வெளியே செல்ல விடாமல் இழுத்துப் பிடித்த பாலகிருஷ்ணன் வாக்குவாதம் செய்ய அதுவே சண்டையாக மாறியுள்ளது.

அந்த சண்டையின்போது, ஆத்திரத்தில் சுத்தியை எடுத்து சந்தியாவின் மண்டையில் ஓங்கி அடிக்க அங்கேயே சுருண்டு விழுந்ததாக கூறப்படுகிறது. பதற்றத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், விடிய விடிய 19 ஆம் திகதி முழுவதும் மனைவியின் சடலத்துடனே இருந்திருக்கிறார் பாலகிருஷ்ணன். பின்னர் பொலிசாரிடம் மாட்டிக் கொள்ளாமல் எப்படி தப்பிப்பது என்று யோசித்திருக்கிறார்.

இதையடுத்து சந்தியாவின் உடலை, குளியலறைக்கு எடுத்துச் சென்று மரம் வெட்டும் ரம்பத்தால் துண்டு துண்டாக வெட்டியிருக்கிறார். பின்னர் வெட்டிய உடலின் பாகங்களை ஒரே இடத்தில் வீசினால், அடையாளம் தெரிந்துவிடும் என்பதால், வெவ்வேறு மூட்டைகளாக கட்டி, பல்வேறு இடங்களில் வீசியிருக்கிறார். அதன்படி பெருங்குடி குப்பை கிடங்கில் வீசப்பட்ட சந்தியாவின் கை, கால்கள் கண்டெடுக்கப்பட பொலிசாரின் அடுத்தடுத்த விசாரணையில் பாலகிருஷ்ணன் சிக்கியுள்ளார்.

சந்தியாவின் கை, கால்கள் பெருங்குடி குப்பை கிடங்கில் கிடைத்த நிலையில் பாலகிருஷ்ணன் கூடவே வந்து அடையாளம் காட்டியதை அடுத்து ஈக்காடுதாங்கல் – அடையாறு பாலம் அருகே சந்தியாவின் இடுப்பில் இருந்து முழங்கால் பகுதி வரை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சந்தியாவின் இடது கை, தலை மற்றும் கழுத்தில் இருந்து மார்பு வரையிலான பகுதி ஆகியவற்றை ஜாபர்கேன்பேட்டையில் உள்ள குப்பை தொட்டியில் வீசியதாக போலீசிடம் சொல்லியிருக்கிறார் பாலகிருஷ்ணன்.

அந்த பாகங்கள் பெருங்குடி குப்பை கிடங்கிற்குத்தான் சென்றிருக்க வேண்டும் என்பதால் அங்கே காவல் துறை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. கிரேன் மூலம் குப்பைகளை அகற்றி சந்தியாவின் தலை உள்ளிட்ட பாகங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது காவல் துறை.

இந்த நிலையில் பாலகிருஷ்ணனை பள்ளிக்கரணை பொலிசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்டர்லி முன்பு ஆஜர்படுத்தியுள்ளனர். அப்போது நீதிபதியிடம் சந்தியாவை நான் கொலை செய்யவில்லை என்று கூறியிருக்கிறார் பாலகிருஷ்ணன். இதையடுத்து வருகிற 19 ஆம் திகதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பாலகிருஷ்ணன். அவர் மீது கொலைக்குற்றம், தடயங்களை மறைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே பாலகிருஷ்ணனை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கவும் காவல் துறை முடிவு செய்துள்ளது. என்றாலும் சந்தியாவின் தலை உள்ளிட்ட பாகங்கள் கிடைத்தபிறகே வழக்கு முடிவடையும் என்பதால் காவல் துறையும் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது.

டுபாய் இளவரசருடன் விருந்து : 5 லட்சம் செலுத்தி ஏமாந்த தமிழ்ப் பெண்!!

தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் துபாய் இளவரசருடன் மதிய உணவு சாப்பிடுவதற்காக 5 லட்சம் செலுத்தி ஏமாந்திருக்கும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உளவியலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், துபாய் இளவரசர் ஷேக் ஹம்தன் பின் மொஹம்மத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தை ஃபாலோ செய்து வருகிறார்.

திடீரென்று ஒருநாள், இளவரசரின் டுவிட்டர் கணக்கில் இருந்து இவருக்கு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது.

அதில், துபாய்க்கு வந்து அரச குடும்பத்துடன் மதிய உணவு விருந்தில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இளவரசரிடம் இருந்து நேரடியாக இப்படியொரு அழைப்பு வந்திருப்பதால் திக்குமுக்காடிப் போனார் அந்தப் பெண்.

ஆனால், அரண்மனைக்குள் நுழைய வேண்டுமெனில், ராயல் கார்டு என்ற விசேட அட்டை வேண்டும் என்றும், அதற்கு ஐந்து லட்ச ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என்றும் இளவரசர் கணக்கில் இருந்து வந்த அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மட்டுமின்றி வெஸ்டர்ன் யூனியன் வங்கி மூலம் 5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் அந்த குறுந்தகவலில் குறிப்பிட்டிருக்க, ‘எனது வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக செலுத்துகிறேன்’ என்று கூறி, 5 லட்சம் ரூபாயை அனுப்பி இருக்கிறார் அப்பெண்.

அதன்பின், அந்த டுவிட்டர் கணக்கில் இருந்து குறித்த பெண்ணுக்கு எந்த தகவலும் வரவில்லை.

பல முறை குறித்த இளம்பெண் தகவல் அனுப்பியும், இளவரசரிடம் இருந்து பதில் வரவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து ஐக்கிய அமீரகத்தின் துபாய்க்கே நேரடியாக சென்ற அவர், அரச குடும்பத்தை சந்திக்க வேண்டும் என்று உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து இருக்கிறார்.

ஆனால், அதிகாரிகள் அதற்கு அனுமதிக்கவில்லை. அதுமட்டுமின்றி, ‘போலி டுவிட்டர் கணக்கு மூலம் நீங்கள் ஏமாற்றப்பட்டு உள்ளீர்கள்’ என்று அவரிடம் தெரிவிக்க, அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டார் அவர்.

அதன்பின்னர், துபாயில் உள்ள இந்திய தூதரகத்தில் அவர் புகார் செய்ய, அதன் பிறகு, இதே போன்று பலரும் ஏமாந்து இருப்பது அவருக்கு தெரிய வந்திருக்கிறது.

பின்னர் தூதரகத்தின் ஆலோசனைப்படி, மத்திய குற்றப்பிரிவு பொலிசாரிடம் அவர் புகார் அளித்திருக்கிறார்.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் கூறுகையில், இளவரசரின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, அவர்களால் தான் பலரும் பணம் இழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

தனது சம்மதம் இல்லாமல் ஏன் என்னை பெற்றெடுத்தீர்கள் : பெற்றோரை நீதிமன்றத்திற்கு அழைக்கும் இளைஞர்!!

பெற்றோரை நீதிமன்றத்திற்கு அழைக்கும் இளைஞர்

இந்தியாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் என் அனுமதியில்லாமல் என்னை ஏன் பெற்றீர்கள் என்று பெற்றோர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மும்பையைச் சேர்ந்த ரபேல் சாமுவேல் என்ற இளைஞன் தான் இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், அண்டினாடலிசம் என்பது ஒரு சிந்தனை. அது மக்கள், குழந்தைகள் பெற்றுக்கொள்ளக்கூடாது எனத் தூண்டும். அப்படி குழந்தைகள் பெற்றுக்கொள்வதினால் அந்தக் குழந்தைகள் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்படுவார்கள் என கூறும் அவர், இந்த கொள்கையை தீவிரமாக பின்பற்றி வருகிறார்.

மேலும் அவர் தான் ஏன் பெற்றோர் மீது புகார் அளித்தேன் என்பது குறித்தும் பேஸ்புக் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில், நான் என் பெற்றோரை நேசிக்கிறேன். ஆனால், தங்களின் மகிழ்ச்சிக்காக அவர்கள் என்னைப் பெற்றெடுத்திருக்கிறார்கள்.

இருவரின் சுகத்துக்காக நான் பாதிக்கப்படவேண்டுமா என்ன? உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் தங்களின் விருப்பம் இல்லாமலே பிறக்கிறார்கள். அதனால் நம் அனுமதியில்லாமல் நம்மைப் பெற்றெடுத்த பெற்றோர்களுக்கு நாம் கடன்பட்டிருக்கவில்லை என கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், இந்த உலகத்தில் இருக்கும் பெற்றோரிடம் நீங்கள் போய் ஏன் குழந்தை பெற்று கொள்கிறீர்கள் என்று கேட்டு பாருங்கள், அவர்கள் சொல்லும் ஒரே பதில் எங்கள் தேவைக்கு நாங்கள் பெற்று கொள்கிறோம் என்பதாகவே இருக்கும்.

ஒரு குழந்தையைப் பெற்று, அதை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்துவது என்பது மிகவும் தவறான ஒன்று, சமீபத்தில் வந்த ஆய்வில் கூட, பெரும்பாலான மக்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்வதையே நிறுத்திவிட்டனர்.

ஏனெனில் அவர்களே இங்கு வாழ்வதற்கு கடும் பிரச்சனைகளை சந்திக்கும் போது, குழந்தையை பெற்று அந்த பிரச்சனையையும் சந்திக்க வேண்டுமா என்பதால், அவர்கள் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது. இப்படி பெற்றோர் மீது இது போன்ற வழக்கு தொடர்ந்துள்ளதால், அவரின் தாயாரிடம் இது குறித்து கேட்ட போது, நான் என் மகனை பாராட்டுகிறேன்.

சாமுவேல் அவரின் அனுமதி பெற்று எப்படி குழந்தை பெற்று கொள்ள முடியும் என்பதை நிரூபித்தால், நாங்கள் எங்கள் குற்றத்தை ஒப்புகொள்கிறோம், நானும், என் கணவரும் வழக்கறிஞர்கள் என்று கூறியுள்ளார்.

மன்னியுங்கள் கோபத்தில் கொலை செய்துவிட்டேன் : நடிகை சந்தியாவை துண்டு துண்டாக வெட்டிய சினிமா இயக்குனர்!!

நடிகை சந்தியா கொலை

சந்தியாவை கொலை செய்து சடலத்தை துண்டு துண்டாக வெட்டிய வழக்கில் அவரது பாலகிருஷ்ணன் சிக்கியது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 21ம் திகதி இளம்பெண்ணின் கை, கால்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் பொலிசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர்.

காலில் மெட்டி அணிந்திருந்ததால் திருமணமான பெண் என்றும், டாட்டூவை வைத்து வசதியான பெண் என்ற கோணத்திலும் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. அடுத்தபடியாக அவரின் புகைப்படங்களை வெளியிட்ட பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இதை பார்த்த நபர் ஒருவர், ட்வின்புரத்தில் இதுபோன்ற டாட்டூ போட்ட பெண்ணை பார்த்துள்ளேன் என தூத்துக்குடி ஆய்வாளருக்கு தகவல் கொடுத்துள்ளார். அடுத்தபடியாக தூத்துக்குடிக்கு விரைந்த பொலிசார் குறித்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் சந்தியாவின் வீட்டுக்கு சென்று விசாரித்த போது, அவர் சென்னை சென்றுவிட்டதாக கூறியுள்ளனர்.

மேலும் எங்கே தங்கியுள்ளார் என்பது தங்களுக்கு தெரியாது என்றும், அவரது கணவர் ஜாபர்கான்பேட்டையில் வசிப்பதாகவும் விலாசத்தை கொடுத்துள்ளனர். சென்னை வந்து பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்த, கூலாக பதிலளித்தவர், தனக்கும் மனைவிக்கும் பேச்சுவார்த்தை எதுவும் இல்லை என்றும், விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் சந்தியா பச்சைக் குத்திக் கொண்டதில்லை எனவும் கூறியுள்ளார், இதனைதொடர்ந்து சந்தியாவின் போனுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து சந்தியாவின் பெற்றோர் விலாசத்தை பாலகிருஷ்ணனிடம் வாங்கி கொண்ட பொலிசார் நாகர்கோவில் விரைந்துள்ளனர்.

புகைப்படத்தை பார்த்த சந்தியாவின் பெற்றோர்கள், தன் மகளும் இதுபோன்ற டாட்டூ வரைந்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் கடந்த நவம்பர் மாதம் தன் மகளை கடைசியாக பார்த்தோம் என்றும், கடந்த 20ம் திகதி தங்களுக்கு போன் செய்த பாலகிருஷ்ணன் சந்தியா வெளிநாடு செல்லவுள்ளதாக கூறியதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதில் சந்தேகமடைந்த பொலிசார் சந்தியாவின் Call Details-யை எடுத்து பார்த்த போது, 14ம் திகதி பாலகிருஷ்ணன் எண்ணுக்கு தொடர்பு கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து Google cloud-ல் இருந்து அவரது புகைப்படங்களை எடுத்து பார்த்த போது கையில் டாட்டூ இருந்ததும் தெரியவந்தது.

இந்த தகவல்களுடன் பாலகிருஷ்ணனை மீண்டும் பொலிசார் சந்திக்க, அதிர்ச்சியில் உறைந்து போனவர், உண்மையை ஒப்புக் கொண்டாராம். ஆனால் முகத்தில் வருத்தமோ, பயமோ இல்லாமல் புன்முறுவலுடன் இருந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர். சாரி சார், கோபத்துல கொன்னுட்டேன், சடலத்தை மறைக்க துண்டு துண்டாக வெட்டி வீசிவிட்டேன் எனவும் தெரிவித்தாராம். இதனையடுத்து சந்தியாவின் தலை மற்றும் மற்றொரு கையை தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

பாடசாலைக் குழந்தைகளின் உயிரில் விளையாடிய சாரதி : கியருக்கு பதில் மூங்கில் : அதிர்ச்சி வீடியோ!!

கியருக்கு பதில் மூங்கில்

இந்தியாவில் பள்ளிக் குழந்தைகளை அழைத்து செல்லும் பேருந்தில், டிரைவர் கியரின் லிவர் பகுதி உடைந்துவிட்டதால், அவர் அதற்கு பதிலாக மூங்கில் கட்டையை வைத்து பேருந்தை இயக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் பிரபல தனியார் பள்ளிக்கு சொந்தமான பேருந்து ஒன்று பள்ளிக் குழந்தைகளுடன் கடந்த புதன் கிழமை பள்ளிக்கு சென்றுள்ளது. அப்போது பேருந்தின் டிரைவர் ராஜ்குமார் என்பவர் முன்னே சென்ற விலையுயர்ந்த BMW காரின் மீது மோதியுள்ளார்.

இதனால் அந்த காரிலிருந்த தொழிலதிபர் உடனடியாக காரை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பேருந்து நிற்காமல் சென்றதால், பேருந்தை விரட்டிச் சென்று பிடித்து, அதன் பின் இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

விரைந்து வந்த பொலிசார், பேருந்தின் உள்ளே சென்று பார்த்த போது, பேருந்தின் கியரில் இருக்கும் லிவர் பகுதியில் மூங்கில் கட்டை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு கியரின் லிவர் உடைந்துள்ளதால், இதனால் அவர் மூங்கில் கட்டையை வைத்தே பேருந்தை இயக்கி வந்துள்ளார்.

பேருந்தின் உள்ளே பள்ளிக் குழந்தைகள் இருந்தும், அவர்களின் உயிரைப் பற்றி சற்றும் நினைக்காமல், அவர்கள் உயிரில் விளையாடியுள்ளார்.

இதையடுத்து அவரை கைது செய்த பொலிசார், காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதன் பின் டிரைவர் தற்போது பெயிலில் வந்துள்ளதாகவும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் கூறியுள்ளனர்.

10 வருடங்களின் பின் கைது செய்யப்பட்ட கொலைச் சந்தேக நபர்!!

10 வருடங்களின் பின் கைது

இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் 10 வருடங்களின் பின்னர் 38 வயதான பிரதான சந்தேக நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர் கடந்த 2008 ஆம் ஆண்டு புத்தளம் வான் வீதியில் தனது நண்பர்களுடன் இணைந்து 21 வயதுடைய செய்னுலாப்தீன் ரமீஸ் என்ற இளைஞனை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்ததாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் நடைபெற்றபோது சந்தேக நபருக்கு 28 வயது எனவும் சம்பவத்தை அடுத்து, சந்தேக நபர் நாட்டைவிட்டு வெளியேறி சிங்கப்பூர், சவுதி அரேபியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு சென்று தலைமறைவாக இருந்துள்ளதாக புத்தளம் பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுர குணவர்தன தெரிவித்தார்.

இதனையடுத்து, சந்தேக நபர் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்து, அளுத்கம, தர்ஹா டவுன் ஆகிய பகுதியில் தங்கியிருந்துள்ளார்.

இந்த நிலையில், சந்தேக நபர், நேற்று முன்தினம் புத்தளம் நகரில் தனியார் வைத்தியசாலைக்கு வருகை தந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

இளைஞனை படுகொலை செய்வதற்கு பயன்படுத்திய துப்பாக்கியை புத்தளம் வான் குளத்தில் வீசிவிட்டு சென்றதாக சந்தேக நபர் விசாரணைகளின் போது பொலிஸாரிடம் ௯றியுள்ளார்.

இதனையடுத்து, துப்பாக்கியை தேடும் நோக்கில் சந்தேக நபரை இன்று காலை புத்தளம் வான் குளத்திற்கு அழைத்துச் சென்ற பொலிஸார், கடற்படையினரின் சுழியோடி குழுவினரினரால் சந்தேக நபரால் வீசப்படதாக ௯றப்படும் துப்பாக்கியை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மனித கடத்தல் கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட 128 பேர்!!

மணிப்பூர் வழியாக மியான்மருக்கு கடத்தப்படவிருந்த 108 பேர் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் அம்மாநில பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்திய – மியான்மர் எல்லையில் உள்ள மோரே பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு தேடுதல் வேட்டையில் 5 பெண்கள், 15 ஆண்கள் உள்பட 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

ரகசிய தகவலின் அடிப்படையில் சமூக நலத்துறை அதிகாரிகளுடன் 103 பெண்கள், 05 ஆண்கள் உள்பட 108 பேரை பல விடுதிகளிலிருந்து மீட்டதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.

இதில் மீட்கப்பட்ட பெண்களை முதலில் மியான்மருக்கு கொண்டு சென்று அங்கிருந்து துபாய் மற்றும் ஈராக்குக்கு கொண்டு செல்ல கடத்தல்காரர்கள் திட்டமிட்டது தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோரேவில் மீட்கப்பட்ட 15 ஆண்கள் கடத்தல் கும்பலிடம் சிக்கியவர்களை அல்லது அவர்களே கடத்தல்காரர்களா என்பது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறான கடத்தல்களை தடுக்கும் விதமாக இந்திய – மியான்மர் எல்லையோர பகுதியான மோரேவில் தேடுதல் பணியை தொடர்வோம் என மணிப்பூர் பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பலரின் முகத்திரையை கிழிக்க தயாராகும் மைத்திரி : சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்!!

சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்

போதைப்பொருள் விடயத்தில் அதிரடி நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராகி வருவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. கடந்த கால அரசியல் நடவடிக்கைகள் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செல்வாக்கு வெகுவாக குறைந்திருந்தது.

எனினும், அண்மையில் துபாயில் பாதாள உலக குழுவினர் கூண்டோடு கைது செய்யப்பட்டமை மற்றும் தொடர்ச்சியாக போதைப்பொருள் மீட்கப்படுகின்றமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் ஜனாதிபதியின் செல்வாக்கு மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேசிய புலனாய்வுச் சேவை விசேட அறிக்கையொன்றை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் உத்வேகம் அடைந்துள்ள ஜனாதிபதி போதைப்பொருள் விடயத்தில் அதிரடி நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக போதைப்பொருள் வியாபாரத்துடன், தொடர்புடைய அரசியல் மற்றும் சமூகத்தின் முக்கிய புள்ளிகளை அம்பலப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராகி வருவதாகவும் அந்த தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இதன் காரணமாக கொழும்பு அரசியல் களம் மீடும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்திருந்தார்.

அத்துடன், துபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள பாதாள கோஷ்டி தலைவர் மாகந்துரே மதுஷ் உள்ளிட்டவர்களை இலங்கைக்கு அழைத்து வருவது குறித்தும் ஜனாதிபதி காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது.

வெளிநாட்டில் சிக்கிய முக்கிய புள்ளிகள் : இலங்கையிலும் அதிரடி ஆரம்பம்!!

இலங்கையிலும் அதிரடி ஆரம்பம்

கொழுப்பின் புறநகர் பகுதியான தெஹிவளை மற்றும் மஹரகமயில் அதிரடி படையினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் நடிகர் ரையன் வேன் ரூயன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் டுபாயில் வைத்து பிரபல போதைப்பொருள் வர்த்தகருடன் இலங்கையின் பிரபல பாடகர் அமல் பெரேரா அவரது சகோதரரான நடிகர் ரையன் வேன் ரூயன் கைது செய்யப்பட்டனர் இதனையடுத்து நேற்றிரவு 7 மணியளவில் பாடகர் அமல் பெரேரா மற்றும் அவரது சகோதரரான நடிகர் ரையன் வேன் ரூயனின் வீடுகளை சுற்றி வளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.

பாடகர் அமல் பெரேராவின் வீட்டில் இருந்து கொக்கேயின் பாவிப்பதற்காக பயன்படுத்தும் உபகரணங்கள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நடிகர் ரயன் வேன் ரோயனின் வீட்டில் இருந்து இலத்திரனியல் தராசு ஒன்றும் வீட்டில் மறைவான பகுதி ஒன்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இதேவேளை, ரயன் வேன் ரோயனின் சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நோயாளியை துண்டுதுண்டாக நறுக்கி அமிலத்தில் கரைத்த மருத்துவர் : பின்னணியில் இருந்த இளம்பெண்!!

நோயாளியை அமிலத்தில் கரைத்த மருத்துவர்

மத்திய பிரதேசத்தில் பல் பிடுங்க வந்த நோயாளியை கழுத்தை அறுத்து கொலை செய்த மருத்துவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் ஹோசங்காபாத் பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தோ மருத்துவர் சுனில் மாந்த்ரி (56).

இவருடைய மனைவி சுஷ்மா 2010-ம் ஆண்டு முதல் வீட்டிலேயே சிறிய துணிக்கடை ஒன்று நடத்தி வந்துள்ளார். அதிக மருந்துகளை உட்கொண்டதன் காரணமாக சுஸ்மா கடந்த ஆண்டு உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து துணிக்கடையை நிர்வகிக்க பச்சோரி என்பவரின் மனைவியை வேலைக்கு சேர்த்துள்ளார். அடிக்கடி மருத்துவரின் வீட்டிற்கு சென்ற பச்சோரியின் மனைவி, அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு மருத்துவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.

இதனை ஒரு முறை கையும்களவுமாக பிடித்த பச்சோரி, மருத்துவரை மிரட்ட ஆரம்பித்துள்ளான். இதில் பயந்து போன மருத்துவர் வெளியில் தெரிந்துவிட கூடாது என்பதற்காக ரூ.16000 சம்பளம் கொடுத்து பச்சோரியை டிரைவராக வைத்துக்கொண்டார். ஆனால் இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பச்சோரி, அடிக்கடி மருத்துவரை மிரட்டி அதிக பணம் பறித்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் இதை நினைத்து வேதனையடைந்த மருத்துவர், பச்சோரியை தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி பல் வலிக்காக மருத்துவமனைக்கு வந்த பச்சோரிக்கு சிகிச்சை அளிப்பது போல நடித்து திடீரென கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அந்த உடலை என்ன செய்வதென தெரியாமல் ஒருநாள் முழுவதும் வீட்டிலேயே வைத்திருந்த மருத்துவர், செவ்வாய்க்கிழமை, துண்டதுண்டுகளாக நறுக்கி ஆசிட்டில் எரித்துள்ளார்.

இதற்கிடையில் மருத்துவர் நடவடிக்கையில் சந்தேகித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சோதனை மேற்கொண்ட போது, வீடு முழுவதும் இரத்தக்கறை படிந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனே பாத்ரூம் சென்று பார்த்த போது, உள்ளே ஆசிட்டால் எரித்த நிலையில் கிடந்த பச்சோரியின் உடலை கண்டெடுத்துள்ளனர். பின்னர் மருத்துவரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதி முழுவதும் தீயாய் பரவியதை அடுத்து பொதுமக்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

குடும்ப வறுமையால் 15 வயது அதிகமான இயக்குநரை மணந்த நடிகை : கடைசியில் நடந்த விபரீதம்!!

நடிகை சந்தியா

கணவனால் கொலை செய்யப்பட்ட துணை நடிகை சந்தியா குறித்து குமரி மாவட்டத்தை சேர்ந்த அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் உறவினர்கள் உருக்கமான தகவலை வெளியிட்டுள்ளனர்.

சந்தியாவின் பெற்றோர் ஏழ்மையானவர்கள். அவரது பெற்றோர் டீக்கடை நடத்தி வருகிறார்கள். சந்தியாவுக்கு ஒரு அக்காவும், அண்ணனும் இருக்கிறார்கள். அண்ணன் கேரளாவில் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார். அக்கா திருமணமாகி தென்தாமரை குளத்தில் வசித்து வருகிறார்.

சந்தியா சிறு வயதிலேயே அழகாக இருப்பார். அவருடைய பெற்றோர் ஊரில் சிறிய டீக்கடை நடத்தி வருகின்றனர். எனவே குடும்ப வறுமை காரணமாக 7ம் வகுப்புடன் சந்தியா படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார்.

அப்போதுதான், தரகர் மூலம் சென்னையில் இயக்குநராக இருக்கும் பாலகிருஷ்ணன் என்பவர் மாப்பிள்ளையாக வந்தார். நல்ல வசதியான குடும்பம் என்று கூறி சந்தியாவை பெண் கேட்டு அவருடைய பெற்றோரை அணுகினார். முதலில் மறுப்பு தெரிவித்த சந்தியாவின் பெற்றோர், நாம்தான் கஷ்டப்படுகிறோம், நம்முடைய மகளாவது நன்றாக வாழட்டும் என நினைத்து திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். சந்தியாவை விட பாலகிருஷ்ணனுக்கு சுமார் 15 வயது கூடுதல் இருக்கும்.

குடும்ப வறுமை காரணமாக சந்தியா திருமணத்திற்கு ஒத்துக்கொண்டார். திருமணமாகி சந்தியாவுக்கு 2 பிள்ளைகள் பிறந்தனர். ஆரம்பத்தில் தூத்துக்குடியில் சந்தியா வசித்து வந்தார். விடுமுறை கிடைக்கும்போது பாலகிருஷ்ணன் வீட்டுக்கு வந்து மனைவி மற்றும் பிள்ளைகளை பார்த்து செல்வார்.

சந்தியா அனைவரிடமும் சகஜமாக பேசும் பழக்கம் கொண்டவர் என்பதால் பாலகிருஷ்ணனுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை வந்தது, இதனால் தனது கணவரை பிரிந்து வாழலாம் என சந்தியா முடிவு செய்தபோதுதான் இப்படி கொலை செய்யப்பட்டுள்ளார் என கூறியுள்ளனர்.

மரணத்தில் முடிந்த வேடிக்கை செயல் : அனைவருக்கும் பாடமாக அமைந்துள்ள சம்பவம்!!

 

மரணத்தில் முடிந்த வேடிக்கை

வேடிக்கைக்காக செய்யும் செயல்கள் இறுதியில் சோகத்தில் முடிந்துள்ள பல சம்பவங்கள் நமது சமூகத்தில் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணமே உள்ளன. இவ்வாறானதொரு சம்பவம் வலஸ்முல்ல – கோன்கஹாவத்தை பகுதியில் பதிவாகியுள்ளது.

அனில் குமார என்பவர் தொழில் ரீதியாக மேசன் என்பதுடன், 39 வயதான ஒரு பிள்ளையின் தந்தையாவார். அவர் கடந்த வருடம் நாவம்பர் மாதம் 29 ஆம் திகதி தமது நண்பர் ஒருவரது விருந்துபசாரத்தில் கலந்து கொண்டிருந்தார். அன்றைய தினமே அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த விருந்துபசாரத்தின் போது நபரொருவர் வேடிக்கைக்காக அவர் அமர்ந்திருந்த கதிரையை பின்னால் இழுந்துள்ளார்.

பின்னர் கீழே விழுந்த அவர் வலியில் துடித்துள்ள நிலையில், கட்டுவன மருத்துவமனையில் அவரது உறவினர்கள் அனுமதித்துள்ளனர். அங்கிருந்து அவர் மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிபிட்டிய மாவட்ட மருத்துவனைக்கு அனுப்பிய நிலையில் அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் அவரை கராபிட்டிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்குமாறு பரிந்துரைந்துள்ளனர்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் அவர் கீழே விழுந்து முள்ளத்தண்டின் மேற்புறத்தில் முறிவு ஏற்பட்டுள்ளதால் உடல் உறுப்புக்கள் செயலிழந்து வருவதாக மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதற்கமைய கராபிட்டி போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் இரண்டு மாதங்களாக தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வந்த அவர் கடந்த நான்காம் திகதி இவ்வுலகை விட்டு பிரிந்துள்ளார். வேடிக்கைக்காக செய்த ஒரு செயலால் இன்று ஒரு உயிரே பிரிந்துள்ளது.

பாடசாலைகளிலும் இது போன்ற வேடிக்கை செயல்கள் சாதாரணமாக இடம்பெற்று வருகின்றன. எனினும் இது போன்ற வேடிக்கை செயல்கள், இறுதியில் சோகத்தில் முடியும் என்பதை அனில் குமாரவின் மரணம் உணர்த்தியுள்ளது.

8 வயது தொடக்கம் 8 வருடங்கள் மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை!!

மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை

8 வயது தொடக்கம் 8 வருடங்கள் தனது மகளை பாலியல் துஷப்பிரயோகம் செய்துள்ள தந்தை ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை நொச்சியாகம காவற்துறை ஆரம்பித்துள்ளது.
சந்தேக நபர் தற்போது பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நொச்சியாகமையில் வசிக்கும் சந்தேக நபரின் மனைவி, குருநாகல் காவற்துறைக்கு வழங்கிய முறைப்பாடு ஒன்றுக்கமைய காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. 16 வயதுடைய குறித்த யுவதிக்கு 8 வயது தொடக்கம் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. யுவதி சிறு வயது தொடக்கம் தனது தந்தையுடன் நித்திரை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் குறித்த யுவதியை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதுடன் சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மகள் மீது கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இதனால் அச்சமுற்ற யுவதி பல வருடங்கள் தாயிடம் உண்மையை மறைத்து வந்த போதிலும், தந்தையின் சித்திரவதையினை பொருத்துகொள்ள முடியாதபட்சத்தில் தனது தாயிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தாய் தனது கணவரிடம் மகளின் முறைப்பாடு தொடர்பில் விளக்கம் கோரியுள்ளார். மகளின் குற்றச்சாட்டை நிராகரித்த தந்தை தனது மனைவியிடம் வாய்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் உச்சகடத்தினை அடைந்ததை தொடர்ந்து, குறித்த யுவதியின் தாயார் அவ்வீட்டிலிருந்து வெளியேறி தனது பெற்றோர் வசிக்கும் வீட்டிற்கு சென்று குருநாகல் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் குறித்து காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன், யுவதி மருத்துவ பரிசோதனைக்காக குருநாகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.