நீராட சென்ற சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஹொரணை – எல்லகந்தை பகுதியில் சிறிய நீரோடை ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் நீராட சென்ற சிறுமியொருவர் சடலத்தை கண்டுள்ள நிலையில், பின்னர் அது தொடர்பில் உறவினர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

பின்னர் சடலம் தொடர்பில் காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அது மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்துள்ளவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

40 முதல் 45 வயதிற்கு இடைப்பட்டவரே சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், இது கொலையா? அல்லது இயற்கை மரணமா? என காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

என்னை காதலிக்க மாட்டாயா? 17 வயது சிறுமியிடம் நடுரோட்டில் வெறிச்செயலில் ஈடுபட்ட இளைஞன்!!

வெறிச்செயலில் ஈடுபட்ட இளைஞன்

இந்தியாவில் 17 வயது பெண் தன்னை காதலிக்க மறுத்ததால் ஆத்திரத்தில் அவரை கத்தியால் பலமுறை குத்திய இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவின் ஹைதராபத்தை சேர்ந்த 17 வயது பெண் அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் பரத் (19) என்ற இளைஞர் அப்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்த நிலையில் காதலை அவரிடம் வெளிப்படுத்தினார்.

ஆனால் அப்பெண் பரத்தின் காதலை ஏற்கவில்லை. இதையடுத்து அப்பெண்ணை பின் தொடர்ந்து சில மாதங்களாக பரத் தொல்லை கொடுத்து வந்தார். இது குறித்து அப்பெண் பெற்றோரிடம் கூறிய நிலையில், பெற்றோர் பரத்தை அழைத்து அறிவுரை கூறி கவுன்சிலிங் கொடுத்தனர்.

ஆனாலும் அப்பெண்ணுக்கு தொல்லை கொடுப்பதை பரத் நிறுத்தவில்லை. பின்னர் பொலிசில் புகார் அளித்தும் பரத் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை கல்லூரிக்கு கிளம்பிய பெண்ணை வழிமறித்து மீண்டும் காதலை சொன்னார் பரத்.

அவர் ஏற்காததால் ஆத்திரமடைந்த பரத் கத்தியால் அவரை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடினார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் சரிந்த அப்பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையில் பொலிசார் பரத்தை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கண்ணீர் சிந்திய உலகம் : சாலாவின் வருகைக்காக காத்திருக்கும் அவரது செல்ல நாய் : நெஞ்சை உலுக்கும் புகைப்படம்!!

நெஞ்சை உலுக்கும் புகைப்படம்

அர்ஜென்டினா நாட்டின் நட்சத்திர கால்பல்ந்து வீரர் எமிலியானோ சாலாவின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் அவரது செல்ல நாயின் புகைப்படம் வெளியாகி கலங்க வைத்துள்ளது.

கார்டிஃப் சிட்டி கால்பந்து அணியின் புதிய வரவான அர்ஜென்டினா நாட்டின் எமிலியானோ சாலா பயணம் மேற்கொண்ட குட்டி விமானம் விபத்துக்குள்ளான நிலையில், சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட விமான பாகங்களுக்கிடையே சிக்கியிருக்கும் சடலம் சாலாவின் உடலாக இருந்துவிடக் கூடாது என அவரது ரசிகர்கள் உருக்கமாக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

விபத்துக்குள்ளான விமானத்தில் சடலம் ஒன்று சிக்கியிருப்பதாக பிரித்தானியாவை சேர்ந்த விமான விபத்துகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் குழுவே உறுதி செய்துள்ளது.

கடலுக்கடியில் சிக்கியுள்ள விமானத்தில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சாலாவின் குடும்பத்தினரிடமும், விமானி டேவிட்டின் குடும்பத்தாரிடமும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் குறித்த சடலம் தொடர்பில் இதுவரை உறுதியான தகவலை அதிகாரிகள் வெளியிடவில்லை.

ஜனவரி 21 ஆம் திகதி பிரான்ஸ் நாட்டில் இருந்து கார்டிஃப் நகருக்கு குட்டி விமானம் ஒன்றில் பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தினிடையே மாயமான விமானம் தொடர்பில் உத்தியோகப்பூர்வ தேடுதல் முடித்துக் கொண்ட நிலையில் கால்பந்து ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க சாலாவின் குடும்பமே சொந்த செலவில் தேடுதலை முன்னெடுத்துள்ளது.

தொடர்ந்து நடைபெற்ற தீவிர தேடுதலில் விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்களையும், அதனுள்ளே சடலத்தையும் கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலையிலேயே சாலாவின் சகோதரி ரோமினா, பகிர்ந்துகொண்ட புகைப்படம் உலக கால்பந்து ரசிகர்களை மீண்டும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

தமது சகோதரர் ஒரு போராளி எனவும், அவர் திரும்பி வருவார் என நம்புவதாகவும் குறிப்பிட்ட ரோமினா, சாலாவின் செல்ல நாய் நாலாவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளதே தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

ஒரே நேரத்தில் ஹெட் போன்..சார்ஜ் போட்டு பேசிய இளைஞனுக்கு நேர்ந்த பரிதாப நிலை!!

இளைஞனுக்கு நேர்ந்த பரிதாப நிலை

தாய்லாந்தில் காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு, அதன் பின் சார்ஜ் போட் போனில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்த இளைஞன் பரிதாபமாக இறந்துள்ளார்.

தாய்லாந்தின் Chonburi பகுதியைச் சேர்ந்தவர் Chonburi. 24 வயதான இவர் அங்கிருக்கும் தொழிற்சாலை ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த சனிக்கிழமை காதில் ஹெட் போன் மாட்டிக் கொண்டு பாட்டு கேட்டுள்ளார். அதுமட்டுமின்றி ஹெட் போனின் மைக் பகுதியை வாயில் வைத்துக் கொண்டு பேசியுள்ளார்.

அதன் பின் போனில் சார்ஜ் குறைந்ததால், சாதரண ஜார்ஜ் போட்டுவிட்டு மீண்டும் பாட்டு கேட்டு தூங்கியுள்ளார். மறுநாள் காலை வீட்டின் உரிமையாளர் அவரின் வீட்டிற்கு வந்த போது, அவரின் இரண்டு காதுகளும் தீயில் கருகியது போன்று இருந்து, அசைவற்ற நிலையில் கிடந்துள்ளார்.

இதனால் உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்த பொலிசார், அவரின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். அவரின் இறப்புக்கு முக்கிய காரணம் சார்ஜ் போட்டு, ஹெட் போன் மாட்டிக் கொண்டே தூங்கியது தான் என்று கூறியுள்ளனர்.

அதுமட்டுமின்றி அவர் கம்பெனி சார்ஜர் பயன்படுத்தாமல், விலை மலிவாக கிடைக்கும் சார்ஜரை பயன்படுத்தியுள்ளார், அதில் இருக்கும் சர்க்குயூட்கள் வேறு மாதிரி இருக்கும் அதுவும் ஒரு வகை காரணம் என்று கூறப்படுகிறது. அவர் வீட்டில் பயன்படுத்திய சார்ஜர் போன்றவை தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

காதலி இறப்பதை பொறுமையாக அமர்ந்து வீடியோ எடுத்த காதலன்!!

வீடியோ எடுத்த காதலன்

லண்டனில் பிரபல நடிகரின் மகள் அதிக போதைப்பொருள் எடுத்துக்கொண்டதால் கொஞ்சம் கொஞ்சமாக இறப்பதை அவருடைய காதலன் வீடியோ எடுத்துள்ளதாக நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.

லண்டன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஜான் மிக்கி. இவருடைய மகள் லூயில்லா பிளெட்சர்-மிச்சி (24), தன்னுடைய காதலன் சியோன் ப்ரோடன் (29) உடன் 2017ம் ஆண்டு டோர்செட் பகுதியில் நடைபெற்ற இசைநிகழ்ச்சிக்கு சென்றிருந்தார்.அங்கு அதிக போதைப்பொருள் உட்கொண்டதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த வழக்கானது இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சம்பவம் நடந்த அன்று லூயில்லாவிற்கு அதிக போதைப்பொருளை சியோன் கொடுத்ததாக குற்றசாட்டு எழுந்தது.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சியோன், நான் போதைப்பொருளை வாங்கவோ அல்லது கொடுக்கவோ இல்லை. நான் அந்த இடத்திற்கு செல்வதற்கு முன்பே அவர் வாங்கி வைத்திருந்தார் என கூறினார். பின்னர், லூயில்லா அதிக போதைப்பொருளால் பாதிக்கப்பட்டு சிறிது சிறிதாக இறந்து கொண்டிருந்த பொழுது, உதவி செய்யாமல் சியோன் செல்போனில் படம் பிடித்ததாக கூறப்பட்டது.

மேலும் அந்த வீடியோ காட்சிகள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டன. அந்த வீடியோவில், என்னுடைய அம்மாவிற்கு போன் செய் என லூயில்லா கூறுகிறாள். ஆனால் அதற்கு பதிலளித்த சியோன், முதலில் உன்னுடைய செல்போனை கீழே வை என கூறியிருப்பது பதிவாகியிருந்தது. பின்னர் வழக்கு விசாரணையை கேட்டறிந்த நீதிபதி, வழக்கினை மற்றொரு நாளைக்கு மாற்றி வைத்து உத்தரவிட்டார்.

நடிகையை கை, கால் என துண்டுதுண்டாக வெட்டிக் கொன்ற கணவர் : அதிர்ச்சி சம்பவம்!!

அதிர்ச்சி சம்பவம்

கடந்த 21ம் தேதி சென்னையில் உள்ள பெருங்குடி குப்பை மேட்டில் ஒரு சாக்குப்பை கண்டெடுக்கப்பட்டது. அதில் பெண்ணின் இரண்டு கால்கள், ஒரு கை மட்டும் இருந்ததால் இங்கு பணியாற்றும் ஊழியர்கள் போலீஸில் தகவல் அளித்துள்ளனர்.

போலீசார் நீண்டநாள் இதுகுறித்து விசாரித்து வந்ததில் இன்று ஆதாரம் கிடைத்துள்ளது. தூத்துக்குடியை சேர்ந்தவர் என்றும் சந்தியா என்ற பெயர் கொண்ட இவர் அவரது கணவர் எஸ்.ஆர். பாலகிருஷ்ணனுடன் வசித்து வந்ததும் தெரியவந்தது.

துணை நடிகையான இவர் காதல் இலவசம் என்ற படத்தையும் இயக்கியுள்ளாராம். சந்தியாவிற்கு வேறொரு ஆணுடன் கள்ளக்காதல் இருந்ததால் அவரது கணவரே கொலை செய்துள்ளார்.

விசா அதிகாரியை அறைந்த லண்டன் பெண்ணிற்கு நேர்ந்த கதி!!

லண்டன் பெண்ணிற்கு நேர்ந்த கதி

இந்தோனேசியாவிற்கு வந்த லண்டனை சேர்ந்த பெண் ஒருவர் விசா அதிகாரியை தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வலம் வந்த நிலையில் தற்போது அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லண்டனை சேர்ந்த அவுஜ்-இ-தகஸ்தஸ் என்ற பெண் இந்தோனேசியாவின் பாலி விமான நிலையத்திலிருந்து லண்டன் செல்ல திட்டமிட்டு விமான டிக்கெட் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் விமான நிலையம் வந்த அவரை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர் விசா காலம் முடிந்து பல நாட்கள் ஆனதால் அவரிடம் விசாரணை மேற்கொண்டு அபராதம் கட்டும்படி கூறியுள்ளனர். தொடர்ந்து ஒரு அதிகாரி அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதால் அந்த பெண் விமானத்தை தவறவிட்டதாக கூறப்படுகிறது. இதில் கோவம் கொண்ட அந்த பெண் அதிகாரியை தாக்கினார்.

இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியதை அடுத்து அதிகாரி அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்றது. மேலும் அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பரப்பப்பட்டது. இது குறித்த வழக்கு விசாரணை இந்தோனேசிய நீதிமன்றத்தில் நடைபெற்றது. 7 மாதங்கள் நடந்த விசாரணையில், அந்த பெண்ணுக்கு தற்போது 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பேப்பர் கட்டிங் மெஷினை வைத்து துண்டு துண்டாக வெட்டினேன் : நடிகையின் கணவர் பரபரப்பு வாக்குமூலம்!!

நடிகையின் கணவர் பரபரப்பு வாக்குமூலம்

சந்தியா கொலை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரை கொன்றது எப்படி என கணவர் பாலகிருஷ்ணன் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை ஜாபர்கான்பேட்டையில் மனைவி சந்தியா மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தவர் எஸ் ஆர் பாலகிருஷ்ணன்.

மனைவி மீது இருந்த சந்தேகத்தால், கடந்த 19ம் திகதி அவளை துண்டு துண்டாக வெட்டிக் கொன்றதுடன் பாகங்களை வீசியெறிந்தார். இரு நாட்கள் கழித்து குப்பை கிடங்கிலிருந்து கை, கால்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பள்ளிக்கரணை பொலிசார் விசாரணை நடத்தியதில் பாலகிருஷ்ணன் குற்றவாளி என்பது அம்பலமானது.

இதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில், பேப்பர் கட்டிங் மெஷினை வைத்து சந்தியாவை துண்டு துண்டாக வெட்டிக் கொன்றதாகவும், மற்றவர்களின் உதவி இல்லாமல் தாம் இதனை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் 7 துண்டுகளாக வெட்டியதுடன், அந்த பாகங்களை 4 கவர்களில் போட்டு தான் மட்டுமே பல்வேறு இடங்களில் வீசினேன் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உடல் பாகம் எங்கே என கேட்டதற்கு கூவம் ஆற்றுக்கே வந்து அடையாளம் காட்டிய பாலகிருஷ்ணனோ தலை பாகம் எங்கே என்பதை மட்டும் கூற மறுக்கிறாராம்.

ஏழு கிளைகளை கொண்ட அபூர்வமான தென்னை!!

அபூர்வமான தென்னை

சிலாபம் மாரவில பிரதேசத்தில் தென்னந் தோட்டம் ஒன்றில் ஏழு கிளைகள் கொண்ட அபூர்வமான தென்னை மரம் இருப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

மாரவில சிலுவை தேவாலயம் அமைந்துள்ள வீதியில் உள்ள ஒருவரது காணியில் இந்த தென்னை மரம் காணப்படுகிறது.

தென்னை மரத்தில் உள்ள ஏழு கிளைகளிலும் தேங்காய் காய்த்துள்ளது. இந்த அபூர்வமான இயற்கையின் படைப்பை பாதுகாக்க காணியின் உரிமையாளர் தென்னை மரத்தை பெரிய கம்பிகளை கொண்டு கட்டியுள்ளார்.

மனைவியுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த கணவன் : துணிகரமாக செயற்பட்ட பிரதேச மக்கள்!!

ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த கணவன்

குருணாகலில் மனைவியுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட கணவன் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. வெல்லவ பிரதேசத்தில் மதுபோதையில் இவ்வாறான செயற்பாட்டில் அவர் ஈடுபட்டதாக தெரிய வருகிறது.

காலையில் இருந்து கடுமையாக உழைத்த 7000 ரூபாவில் 6000 ரூபாவுக்கு மது அருந்தியுள்ளார். இதன் காரணமாக குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மனைவியுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.

ரயிலில் பாய்ந்த போது கணவன் உயிரிழந்த நிலையில் மனைவியை பிரதேச மக்கள் காப்பாற்றியுள்ளனர். 32 வயதான சுனில் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தீவிரமான மதுபோதைக்கு அடிமையானவர் எனத் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பில் வெல்லவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முச்சக்கரவண்டியின் மேல் ஏறிய சொகுசுப் பேருந்து : சாரதி சம்பவ இடத்திலேயே பலி!!

அதிகாலை நேர்ந்துள்ள சோகம்

கொழும்பிலிருந்து சென்ற சொகுசு பேருந்தொன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதில், முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று அதிகாலை ஒலுவில் வயலினை அண்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற குறித்த பேருந்தின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவருகிறது. அதிக வேகமும், சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையுமே விபத்து ஏற்பட காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், இந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வவுனியா A9 வீதியில் விபத்து : இருவர் படுகாயம்!!

A9 வீதியில் விபத்து

வவுனியா A9 வீதி கனகராயன்குளம் பகுதியில் கனரக வாகனம் ஒன்று நெல் வெட்டும் இயந்திரத்துடன் மோதி குடை சாய்ந்ததில் இருவர் படுகாயமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ் விபத்து சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

இன்று (07.02) காலை யாழ் நோக்கி A9 வீதியூடாக தேங்காய்கள் ஏற்றிக்கொண்டு பயணித்த கனரக வாகனம் முன்னால் பயணித்த அறுவடை இயந்திரம் (சுனாமி மெசின்) ஒன்றினை திடீரென அவதானித்த கனரக வாகன சாரதி பதற்றத்தில் வாகனத்தை திடீரென நிறுத்த முற்பட்ட போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து அறுவடை இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி குடை சாய்ந்துள்ளது.

குறித்த விபத்தில் அறுவடை இயந்திரத்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அறுவடை இயந்திரம் முற்றாக சேதமடைந்துள்ளது. இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு மாதங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் : மைத்திரி அதிரடி அறிவிப்பு!!

மரண தண்டனை

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், எவ்வித எதிர்ப்புகள் வந்தாலும் மரண தண்டனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி இதன் போது கூறியுள்ளார்.

சிறந்த நல்லொழுக்கம் கொண்ட நாடொன்றை உருவாக்கும் செயற்பாட்டிற்கு அனைவரும் தமது ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். எவ்வாறாயினும், மரண தண்டனை நிறைவேற்றும் நடவடிக்கைகளின் போது, அதனை தடுக்கும் வகையில் மனித உரிமை செயற்பாட்டளார்கள் முன்வர வேண்டாம் எனவும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, கடந்த காலங்களில் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு போதைப்பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்த மரண தண்டனையை அமுல்படுத்த போவதான ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

இதனையடுத்து மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியல் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், தன்னால் கையளிக்கப்பட்ட மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் அடங்கிய ஆவணங்கள் குறித்து, ஜனாதிபதி இதுவரை பதிலளிக்கவில்லை என நீதி அமைச்சர் நேற்ற நாடாளுமன்றில் அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான பின்னணியிலேயே ஜனாதிபதி நாடாளுமன்றில் இன்று இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

இதனிடையே, இலங்கையில் மீண்டும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் அது நாட்டிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பேராசிரியர் பிரதீபா மஹனாமாஹேவா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு பதிலாக மாற்று வழியினை தேடவேண்டும் என அவர் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் 1976ஆம் ஆண்டு ஜுன் மாதம் 23ஆம் திகதிக்கு பின்னர் மரண தண்டனை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

நீதிமன்றங்களினால் குற்றம் இழைத்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டாலும், அதனை நிறைவேற்றும் ஆவணங்களில் எந்தவொரு ஜனாதிபதியும் 1976ஆம் ஆண்டு ஜுன் மாதம் 23ஆம் திகதிக்கு பின்னர் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் சாதனை படைத்த இலங்கைத் தமிழ் விஞ்ஞானி : குவியும் பாராட்டுக்கள்!!

தமிழ் விஞ்ஞானி

பாங்கொக்கில் நடைபெற்று முடிந்த சர்வதேச அறிவியல் புலமை கண்டுபிடிப்பு மற்றும் தொழிநுட்பக் கண்காட்சியில் ஈழத்து விஞ்ஞானிக்கு 3 சர்வதேச பதக்கங்களும், 5 நாடுகளுடைய விசேட சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த விருது வழங்கும் நிகழ்வு பாங்கொக்கில் நடைபெற்றுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்ககழகத்தில் பயிலும் வினோஜ்குமார் என்ற இளைஞருக்கே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

வினோஜ்குமார் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறையிலுள்ள கோரக்கர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. விசேட சிறப்பு விருதுகள் குறித்த விபரம்..

SHOES’ HELPER எனும் கண்டுபிடிப்புக்கு பொதுப் பயன்பாடுகள் தொழினுட்ப பிரிவில் “சர்வதேச வெள்ளி விருதும்” , Association of British Investors & innovators of United Kingdom இருந்து SPECIAL PRIZE AWARD , *Manila Young Inventors Association of Philippines இருந்து PHILIPPINES GOLD விருது வழங்கப்பட்டுள்ளது.

TWO WHEELS’ HELPER எனும் கண்டுபிடிப்புக்கு பொறியியல் தொழினுட்ப பிரிவில் “சர்வதேச வெண்கல விருதும்” Macao Invention and Innovation Association of Macao இருந்து LEADING INNOVATION AWARD , Indian Innovator Association of India இருந்து SPECIAL INNOVATION விருது வழங்கப்பட்டுள்ளது.

WIRE BUILDING TOOL எனும் கண்டுபிடிப்புக்கு கட்டட நிர்மாண தொழினுட்ப பிரிவில் ” சர்வதேச வெண்கல விருதும்”, Citizen Inventor & Innovator Association of Singapore இருந்து OUTSTANDING INNOVATION விருதும் வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய மைத்திரி!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நாடாளுமன்றில் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு அதிகமாக நாடாளுமன்றத்துக்கு வருகைத் தராமைக் காரணமாகவே இவ்வாறு அவர் மன்னிப்புக் கோரியுள்ளார்.

அரசமைப்புக்கு அமைய, 3 மாதங்களுக்கு ஒரு தடவை ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வருகைத் தருவது கட்டாய​மானதென்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், கடந்த மூன்று மாத காலமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றுக்கு வருகைத்தரவில்லை. இது குறித்து அண்மையில் நாடாளுமன்றில் கேள்வியெழுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பெருமளவிலான பழைய மாணவர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற மகாவித்தியன்கள் தினம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கமானது அப்பாடசாலையில் கல்விகற்று வெளியேறிய அனைத்து பழைய மாணவர்களையும் மீண்டும் பாடசாலையில் அணிதிரட்டும் நோக்குடனான ஒன்றுகூடல் நிகழ்வொன்றினை ‘#மகாவித்தியன்கள்தினம்’ எனும் பெயரில் கடந்த 03.02.2019 பாடசாலையில் ஏற்பாடுசெய்திருந்தது.

இந் நிகழ்வானது காலை 8:00 மணிக்கு பாடசலையிலிருந்து நடைபவனியாக ஆரம்பித்து கண்டி வீதிவழியாக கடைவீதியை அடைந்து வைத்தியசாலை சுற்றுவட்டத்தின் ஊடாக மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.

அதன்பின்னர் பாடசாலை வளாகத்தில் பழைய மாணவர் அணிகளுக்கிடையேயான மென்பந்து கிரிக்கெட் போட்டிகள் உட்பட்ட சிநேகித பூர்வ விளையாட்டு போட்டி நிகழ்வுகளும், பிள்ளைகளுக்கான விநோத விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றது.

பாடசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக அனைத்து பழையமாணவர்களையும் ஒன்றுசேர்ந்து பாடசாலையின் வளர்ச்சிக்கு உரமூட்டும் இந்த ஆரம்ப நிகழ்வில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பழையமாணவர்கள் கலந்துகொண்டனர்.

குறிப்பாக நடைபவனியுடன் இணைந்து வாகனபவனியாக சென்றமாணவர்கள் தமிழர் பண்பாட்டை நினைவுகோரும் விதமாக #மாட்டுவண்டில், #உழவியந்திரங்களை தோரணங்களால் அலங்கரித்து ஊர்வலமாக சென்றிருந்தனர்.

நடை பவனி படங்களை காண