வவுனியாவில் இடம்பெற்ற தியாகராஜ சங்கீர்த்தன விழா-2018!(படங்கள்)

வவுனியா ராகவ சங்கீர்த்தன சபாவினால்( 2018)க்கான  தியாகராஜ சங்கீர்த்தன விழா வவுனியா சிந்தாமணி கலாச்சார மண்டபத்தில் கடந்த  03.02.2019 ஞாயிற்றுக்கிழமை  சிறப்பாக தலைவர் கந்தையா இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக வவுனியா கல்வியற்கல்லூரி விரிவுரையாளர் இணைப்பாளர் திருமதி க.யோகராஜா அவர்களும் மற்றும் பிரதேச மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர்கள்,கல்வித்திணைக்கள இசையியல் ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

அதிகரிக்கும் டாட்டூ மீதான மோகம் : ஆபத்தான பின்விளைவுகள்!!

டாட்டூ மீதான மோகம்

இன்றைய இளைஞர்கள் மத்தியில் டிரெண்டிங்கான ஒன்று டாட்டூ, மற்றவர்களிடம் இருந்து தன்னை தனித்துவமாக காட்டவும், மற்றவர்கள் மீதான அன்பை வெளிப்படுத்தவும் குத்தப்படுவது தான் டாட்டூ. இதில் இருவகை உண்டு, ஒன்று குத்திய சில மணிநேரங்களில் அழிந்துவிடும், மற்றது நிரந்தரமானது. பச்சை நிற டாட்டூக்களில் குரோமிக் ஆக்சைடும், சிவப்பு நிற டாட்டூக்களில் பாதரசத்தின் அளவும் அதிகமாக இருக்கும்.

கார்பன், சைனா, மை, இந்தியன் இங்க் போன்ற மைகளை பயன்படுத்தி கருமை நிறத்தில் குத்துவார்கள், ரசாயன பொருட்கள் கலக்கப்படுகிறது. ஆழமான அதிக வண்ணங்களுடைய டாட்டூக்கள் ஆபத்தானவை, அரிப்பு, அலர்ஜி உட்பட சருமப் புற்றுநோய் வரை கடுமையான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

முன்பெல்லாம் கால், கைகள், தோள்பட்டைகள் என டாட்டூ போட்டுக் கொண்ட நிலையில் தற்போது தான் விரும்பும் பகுதியில் போடுகின்றனர். டாட்டூ போடும்போது ஒருவருக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய டிஸ்போசிபிள் ஊசியை பயன்படுத்தி டாட்டூஸ் வரைய வேண்டும்.

ஊசியை சுத்தம் செய்யாமல் மற்றவருக்கு அதையே பயன்படுத்தும் போது தடிப்பு, புண், கட்டி, பச்சை குத்தும் பகுதி அழுகுதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி, காசநோய், பால்வினை நோய்கள், ஹெச்ஐவி போன்ற பாதிப்புகள் கூட ஏற்படலாம். வைரஸ், பக்டீரியா தொற்றுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

உடல் முழுவதும் டாட்டூ குத்திக் கொள்ளும் போது நரம்புகள் மீது ஊசி படுவதால், மெல்லிய ரத்தக் குழாய்கள் சேதம் அடையலாம்.எனவே அனுபவம் நிறைந்த டாட்டூ கலைஞர்களிடம் குத்திக் கொள்வதே சிறந்தது, நிச்சயம் அவர்கள் கையுறை அணிந்திருக்க வேண்டும்.

தினமும் இத்தனை மணிநேரம் தூங்குகிறீர்களா? மாரடைப்பு ஏற்படும் அபாயம்!!

மாரடைப்பு ஏற்படும் அபாயம்

குறைந்த நேரம் தூங்குவது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது போல், அதிகமான நேரம் தூங்குவதும் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். தூக்கம் என்பது நமது உடலுக்கு தேவையான, அவசியமான ஒன்றாகும். ஏனெனில் நமது உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுப்பதில் தூக்கத்தின் பங்கு மிகவும் முக்கியமானது.

குறிப்பாக நாள் முழுவதும் வேலை செய்வதால் உண்டாகும் சோர்வில் இருந்து தப்பிக்கவும், மறுநாள் வேலை செய்வதற்கும் தேவையான ஆற்றலை வழங்கும். குறிப்பிட்ட நேரத்தை விட அதிகம் தூங்கினால் என்ன ஆகும் என்பதை பற்றிய புரிதல் நமக்கு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்நிலையில் அதிக நேரம் தூங்குவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இங்கு காண்போம்.

எடை அதிகரிப்பு : உங்கள் எடை அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் 8 மணி நேரத்திற்கு அதிகமாக தூங்குவது தான். அதாவது எவ்வளவு அதிகம் தூங்குகிறீர்களோ அந்தளவுக்கு உடலில் கொழுப்பு அதிகரிக்கும். 21 சதவித உடல் எடை அதிகரிப்புக்கு காரணம் அதிக நேரம் தூங்குவது தான் என ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தலைவலி : அதிக நேரம் தூங்குவது தலைவலியை ஏற்படுத்தும். இதற்கு காரணம் நரம்பிய கடத்திகளில் ஏற்படும் செரோடினின் அளவின் மாறுபாடு அதிகரிப்பது தான். மேலும், அதிக தூக்கம் மைக்ராய்ன்களை தூண்டுவதுடன், காலை நேர பணிகள் அனைத்தையும் முடக்கும்.

முதுகு வலி : முதுகு வலி ஏற்படுவதற்கு முக்கிய காரணம் அதிக நேரம் தூங்குவது தான். அதாவது நீண்ட நேரம் ஒரே நிலையில் படுத்திருப்பது உங்கள் தசைகளில் விறைப்பு மற்றும் வலியை அதிகரிக்கிறது. எனவே முதுகு வலி உள்ளவர்கள் 7 மணிநேரத்திற்கு மேல் தூங்க வேண்டாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வயதாகுதல் : அதிக நேரம் தூங்குவது நினைவாற்றல் பாதிப்பு, கவனமின்மை போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். மேலும் நீண்ட காலமாக அதிக நேரம் தூங்குவது உங்கள் மூளையை அதிக வயதாவது போன்ற உணர்வை ஏற்படுத்தும். குறிப்பாக வயதானவர்கள் நீண்ட நேரம் தூங்கும்போது அது அவர்களின் வயதை விட 2 வயது அதிகமாக உணரச்செய்யும்.

இதய மற்றும் சர்க்கரை நோய் : தினமும் 9 முதல் 11 மணி நேரம் வரை தூங்குபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு 28 சதவிதம் அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் இதயத்தில் 38 சதவித அளவில் சிக்கல்களை ஏற்படுத்தும். அதிக நேரம் தூங்குவதால் உடல் எடை அதிகரிப்பும், சர்க்கரை நோய் பாதிப்பும் ஏற்படும். குறிப்பாக டைப் 2 சர்க்கரை நோய் அதிக நேரம் தூங்குவதால் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

சர்க்காடியன் ரிதம் கோளாறு : சர்க்காடியன் ரிதம் கோளாறு உடலுக்குள் நடக்கும் செயல்பாடுகளுக்கும், நமது தினசரி அட்டவணைகளுக்கும் இடையே வேறுபாடு ஏற்படும் போது உண்டாகும் நோயாகும். இதன் காரணமாக தூங்குவதில் சிக்கல், பகல் தூக்கம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.

கருவுறுதலை குறைக்கும் : செயற்கை கருத்தரித்தல் சிகிச்சையில் இருக்கும் பெண்கள் எப்பொழுதும் அதிக நேரம் தூங்கக்கூடாது. அவ்வாறு தூங்கினால் கருவுறும் வாய்ப்பு 43 சதவிதம் குறையுமென மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேபோல் 6 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவர்களுக்கு 46 சதவிதம் இது அதிகரிக்கும்.

பெப்ரவரி மாத பலன்கள் : யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா?

பெப்ரவரி மாத பலன்கள்..

இம் மாதம் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் பிப்ரவரி மாதம் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம் : சுபப் பலன்களை எதிர்நோக்கி காத்திருக்கும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு மன திருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள் நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை.

தொழில் வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பானவழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பணத்தேவை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு செயல்பட வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் மூலம் கிடைக்கும் உதவி தாமதப்படும்.

பெண்களுக்கு நீங்கள் எடுக்கும் முயற்சி களில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரத்து திருப்தி தரும். கலைத்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லா காரியங்களும் நல்ல படியாக நடக்கும். எடுத்து கொண்ட வேலைகளில் இருந்த பிரச்சனைகள் தீரும். ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும்.

அரசியல்துறையினருக்கு வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலை தவிர்த்து எடுத்து கொண்ட காரியங்களில் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களுக்கு எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்ல பலன் தரும்.

ரிஷபம் : உறவினர் மூலம் உதவிகளை எதிர்கொள்ளும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள்.

தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும் பொருளாதாரம் மேலோங்கும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள்.

தொழில் வியாபாரம் வழக்கம்போல் நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

குடும்பத்தில் ஏதாவது வீண் விவகாரங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். பிள்ளைகளுக்காக கூடுதலாக பாடுபட வேண்டி இருக்கும். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.

பெண்களுக்கு மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தை குறைப்பது நன்மையை தரும். கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் நல்லது. காரிய அனுகூலம் ஏற்படும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவருவீர்கள். எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணம் வரத்து கூடும்.

அரசியல்துறையினருக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலிடத்திடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. வீண் அலைச்சல், தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற அதிக ஈடுபாட்டுடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.

மிதுனம் : புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறும் மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். பணவரத்தை அதிகப்படுத்தும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம். வீண் அலைச்சல் உண்டாகலாம்.

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களின் ஆலோசனை கேட்டு எதையும் செய்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது.

பெண்களுக்கு எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங் களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பட்ட சிரமங்கள் குறையும். வேலைப் பளு குறைந்து காணப்படுவார்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும்.

அரசியல்துறையினருக்கு அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எடுத்துக் கொண்ட வேலைகளில் ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மனதில் இருந்த கவலை நீங்கும்.

கடகம் : லாபத்தை அதிகரிக்க பாடுபடும் கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் மனதில் புதிய உற்சாகம் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நட்பாக இருந்தவர்கள் பிரிந்து செல்லலாம்.

தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும். பணவரத்து சீராக இருக்கும். ஆர்டர்கள் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். சக ஊழியர்களிடம் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற வர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும்.

பெண்களுக்கு கூடுதலாக செய்யும் முயற்சிகள் மூலம் விரும்பியபடி காரியத்தை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு இருந்த பிரச்சனை குறையும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது.

அரசியல் துறையினருக்கு வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் மேலிடத்திற்கு திருப்தியை தரும். உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும். மாணவர்களுக்கு: மற்றவர்களை திருப்தியடையச் செய்யும் வகையில் உங்களது செயல்கள் இருக்கும். கல்வியில் ஆர்வம் உண்டாகும்.

சிம்மம் : வெளியூர் பயணத்தில் ஆர்வமுடன் இருக்கும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் பல நல்ல பலன்களை பெற முடியும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம். நல்ல பலன்களையே தரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பானவழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பணத்தேவை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளுக்காக சில பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். அவர்களை அன்புடன் நடத்துவது நல்லது.

பெண்களுக்கு திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும். கலைத்துறையினருக்கு கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள். கடன் பிரச்சனை தீரும். செல்வதில்லை உயரும்.

அரசியல்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றிக்கு கூடுதல் முயற்சி பலன் அளிக்கும்.

கன்னி : கணிவுடைய பேச்சால் அனைவரையும் கவரும் கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் தைரியம் அதிகரிக்கும். பணவரவு இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும் முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண் தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது.

தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். கடன்களை அடைப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மேல் அதிகாரிகள் திருப்தியடைவார்கள்.

குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். குதூகலம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். தொல்லைகள் நீங்கும்.

பெண்களுக்கு எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக் கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். கலைத்துறையினருக்கு புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். கவனம் தேவை.

அரசியல்துறையினருக்கு இருந்த இறுக்கமான நிலை மாறும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பண விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. மாணவர்களுக்கு எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கல்வியில் வெற்றிபெற கூடுதல் கவனம் தேவை.

துலாம் : பிள்ளைகள் மேல் அதிக நேசம் வைத்திருக்கும் துலா ராசி அன்பர்களே, இந்த மாதம் முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.

தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும்.

பெண்களுக்கு எதையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். பயணங்கள் வெற்றியை தரும். கலைத்துறையினருக்கு நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை.

அரசியல்துறையினருக்கு பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் பெற்றோருக்கு திருப்தியை தரும்.

விருச்சிகம் : எச்சரிக்கையாக எந்த காரியத்தையும் செய்யும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். சில தடைகள் ஏற்பட்டாலும் சாதகமான பலன் வரும். விரும்பியது கிடைக்கும். அதே நேரத்தில் அதற்கான கூடுதலாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவு ஏற்படும்.

தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற சூழ்நிலைகள் ஏதுவாக இருக்கும். செலவை குறைப்பதன் மூலம் பணத் தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி புரியும் இடங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குறிப்பாக எந்திரங்களை இயக்கும் போது கவனம் தேவை. மேலிடத்தின் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம்.

குடும்பத்தில் இருந்த டென்ஷன் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும்.

பெண்களுக்கு எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். கலைத்துறையினருக்கு யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. மனக்கவலை உண்டாகும்.

அரசியல்துறையினருக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும். மன துயரம் நீங்கும். சிற்றின்ப செலவு அதிகரிக்கும். மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு மற்றவர்களுடன் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. கல்வி பற்றிய மனக்கவலை ஏற்பட்டு விலகும்.

தனுசு : தன்னிச்சையாக செயல்படும் தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிலும் கவனமாக இருப்பது நன்மை தரும். பணவரத்தை அதிகப்படுத்தும். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம்.

குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள்.

பெண்களுக்கு சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம். கலைத்துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது

அரசியல்துறையினருக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாக கடினமாக முயற்சி செய்ய வேண்டும்.

மகரம் : வழக்கத்தைவிட அதிக மாக உழைக்க தயாராகும்மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் நல்ல பலன்களைத் தரும். எதிர்ப்புகள் விலகும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.

தொழில் வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதியபதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

குடும்பத்தில் குதூகலமான சுப பலன்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே பந்தபாசம் அதிகரிக்கும். குழந்தைகளின் மூலம் மனமகிழும் படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது.

பெண்களுக்கு விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும். கலைத்துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை.. தொழில் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும்.

அரசியல்துறையினருக்கு வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம். வெற்றிபெற தடைகளை தாண்டி உழைக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனை படி செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

கும்பம் : குறும்புத்தனம் அதிகம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே,இந்த மாதம் அனைத்து கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிக்கும் சூழ்நிலை உண்டாகும். பணவரத்தைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும். நீண்ட தூர பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாக நிதிநிலை உயரும். கடன் பிரச்சனைகள் குறையும். தொழில் போட்டிகள் விலகும். வேலை தேடுபவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகமான எதிர்ப்புகள் விலகும்.

குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள்.

பெண்களுக்கு எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்சி உண்டாகும். கலைத்துறையினருக்கு வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு மனதிருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும்.

அரசியல்துறையினருக்கு எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மன கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள்.

மீனம் : உழைப்புக்கு அஞ்சாத மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் நல்ல பலன்களைத் தரும். எதிர்ப்புகள் விலகும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.

தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்றாலும் ஒற்றுமை குறையாது. பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பதும் உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் மிகவும் நல்லது.

பெண்களுக்கு பணவரத்து கூடும். ஏற்கனவே செய்த ஒரு காரியத்தின் பலன் இப்போது கிடைக்கும். திடீர் மனவருத்தம் ஏற்படலாம். கலைத்துறையினருக்கு வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழிலில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது.

மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்துறையினருக்கு ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். வீண் செலவு ஏற்படும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

கனடாவில் கொடூரமான கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் : வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!!

அதிர்ச்சித் தகவல்கள்

கனடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தொடர் கொலையாளி புறூஸ் மக்காத்தர் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. ரொறன்றோவில் இரண்டு இலங்கைத் தமிழர்கள் உட்பட எட்டுப் பேரைக் கொலை செய்ததாக புறூஸ் மக்காதர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இவருக்கான தண்டனையை முடிவு செய்யும் நீதிமன்ற அமர்வின் இரண்டாம் நாள் அமர்வு நேற்று நடைபெற்றது. இதன்போது மக்காத்தருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனையுடன் 50 ஆண்டுகள் பிணை கோரி விண்ணப்பிக்க முடியாத தீர்ப்பு வழக்குவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பினை அறிவிக்கும் வழக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மிகவும் கொடூரமான முறையில் மக்காத்தர் இந்த படுகொலைகளைச் செய்துள்ளதாக பாதிக்கப்பட்டோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொடூரமான முறையில் நபர்களை படுகொலை செய்துள்ளார். பின்னர் அவர்களை பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்ததாகவும் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்த ஸ்கந்தராஜ் நவரட்னம், கிருஸ்ணா கனகரட்ணம் ஆகியோரும் இந்த கொலையாளி மூலம் கொடூரமான கொலை செய்யப்பட்டிருந்தனர். புறூஸ் மக்காத்தரின் படுகொலைகள், இலங்கையில் நடந்த இனப்படுகொலையை நினைவுபடுத்துவதாக கொலை செய்யப்பட்ட தமிழர் ஒருவரின் நண்பர் தெரிவித்துள்ளார்.

ஓடும் காரில் குழந்தை பெற்ற இளம் மனைவி : அதை உணராமல் கார் ஓட்டிய கணவன் : ஆச்சர்ய சம்பவம்!!

ஆச்சர்ய சம்பவம்

பிரித்தானியாவில் கர்ப்பிணி மனைவி கார் பின் சீட்டில் திடீரென குழந்தை பெற்றெடுத்த நிலையில், அதை உணராமலேயே கணவர் காரை ஓட்டி சென்றுள்ளார்.

Greater Manchester-ன் Bolton நகரை சேர்ந்தவர் விக் விஸ்தா. இவர் மனைவி சோனல் விஸ்தா. கர்ப்பமாக இருந்த சோனல், தனது காரில் சென்று கொண்டிருந்தார். கார் பின் சீட்டில் அவர் உட்கார்ந்திருந்தார். அப்போது பிரசவ வலி ஏற்பட்டு அங்கேயே குழந்தை பெற்றார் சோனல்.

இதை உணராமலேயே காரை ஓட்டி சென்ற விஸ்தா பின்னரே மனைவி குழந்தை பெற்றதை உணர்ந்தார். இதன்பின்னர் தம்பதி மருத்துவமனைக்கு சென்ற நிலையில் தாய்க்கும் சேய்க்கு சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் நலமாக உள்ளனர். குழந்தை மூன்றரை கிலோ எடை உள்ளது.

இது குறித்து விஸ்தா கூறுகையில், குழந்தை பிறக்கும் போது எப்படி தைரியமாக வலி ஏற்படுவதை கையாள வேண்டும் என்பதை என் மனைவி வகுப்பு மூலம் கற்று கொண்டாள்.

இதோடு யோகா வகுப்புக்கும் சென்றோம், இது தான் சோனல் பிரசவத்தை தைரியமாக கையாள காரணம் என நினைக்கிறேன் என நினைக்கிறேன். எங்கள் காரை இனி விற்கக்கூடாது என இருக்கிறோம், ஏனென்றால் அதில் பிரசவ ஞாபங்கள் நிறைந்துள்ளன என கூறியுள்ளார்.

தூக்கில் சடலமாக தொங்கிய பிரபல இளம் நடிகை : உருக்கமான கடிதம் சிக்கியது!!

தூக்கில் தொங்கிய இளம் நடிகை

இளம் நடிகை நாக ஜான்சி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. தெலுங்கு தொலைக்காட்சி தொடர்கள் பலவற்றில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை நாக ஜான்சி (21). இவர் ஹைதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்நிலையில் ஜான்சியின் சகோதரர் இன்று காலை அவர் வீட்டு கதவை வெகுநேரமாக தட்டியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்து போது ஜான்சி தூக்கில் சடலமாக தொங்கியபடி கிடந்தார்.

இது தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஜான்சியின் சடலத்தை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜான்சி எழுதி வைத்திருந்த கடிதத்தை பொலிசார் கைப்பற்றினார்கள். அதில், மன அழுத்தம் காரணமாக நான் தற்கொலை செய்து கொள்கிறேன், வேறு யாரும் இதற்கு காரணம் கிடையாது. என் மூளை தான் என் எதிரி என எழுதியுள்ளார்.

பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் ஜான்சி தனது தூரத்து உறவுக்கார இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததும், காதலை அவர் குடும்பத்தார் ஏற்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக ஜான்சி மன அழுத்தத்தில் இருந்த நிலையிலேயே இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. ஜான்சியின் செல்போனை கைப்பற்றியுள்ள பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உதட்டில் அந்த எழுத்தை பச்சை குத்திய பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உதட்டில் KFC என்று பச்சை குத்தியதால், அவருக்கு வாழ்நாள் முழுவதும் சிக்கன் இலவசமாக கிடைக்கவுள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்போர்னைச் சேர்ந்தவர் Tabatha Andrade. 20 வயதான இவருக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்குமாம்.

அதிலும் KFC சிக்கன் என்றால் அதிகம் விரும்பி சாப்பிடுவாராம். இதன் காரணமாகவே அவர் தன்னுடைய உதட்டி KFC என்று பச்சை குத்தியுள்ளார். இதை அறிந்த KFC அந்த பெண்ணிற்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் KFC சிக்கன் என்றால் உயிர். தினமும் KFC சிக்கன் உண்பேன். என் வீட்டு நாய்க்குக் கூட நக்கட்ஸ் என்றுதான் பெயர் வைத்திருக்கிறேன்.

அந்த அளவிற்கு சிக்கன் மீது விருப்பம். என் வீட்டில் முதல் முறையாக காட்டிய போது அது போலியான ஸ்டிக்கர் என்றே நினைத்தார்கள். பின் அவர்களுக்கு உண்மை தெரிந்ததும் எதுவும் சொல்லவில்லை. எனக்கு வலியும் அதிகம் ஏற்படவில்லை.

சாதரணமாகவே உணர்ந்தேன். எனக்கு இதில் கிடைத்த பேரானந்தம் என்னவென்றால் KFC சிக்கன் இனி வாழ்நாள் முழுவதும் இலவசமாக கிடைக்கப்போகிறது என்பது தான் என்று மிகுந்த மகிழ்ச்சியில் கூறியுள்ளார்.

வவுனியாவில் மாணவர்களுக்கு பொலிசாரால் போக்குவரத்து தொடர்பான பயிற்சி!!

போக்குவரத்து தொடர்பான பயிற்சி

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான பயிற்சிகள் இன்றயதினம் வழங்கப்பட்டது.

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிசாரின் ஏற்பாட்டில், குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தது.

குறிப்பாக பாடசாலை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் முடிவடையும் நேரத்தில் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலை கையாளும் விதம் தொடர்பாக போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரால் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தது.

இரு பேருந்துகளில் சிக்கி உடல் சிதறி பலியான இளைஞர் – காணொளி!!

உடல் சிதறி பலியான இளைஞர்

கண்டி பழைய போகம்பரை சிறைச்சாலைக்கு முன்னால் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றிலும், தனியார் பேருந்து ஒன்றிலும் சிக்கி குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

விபத்தின் பின்னர் படுகாயமடைந்திருந்த அவர் கண்டி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 29 வயதான குறித்த இளைஞர், வீதியின் மறுபுறத்திற்கு செல்ல முற்பட்ட வேளையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மெனிக்கின்ன பகுதியை சேர்ந்த இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ள நிலையில், பேருந்துகளின் சாரதிகளை காவல்துறை கைது செய்துள்ளது.

நான்கு வயது மகளை ஆற்றில் வீசிய தாய் நீதிமன்றில் கூறிய விடயம்!!

மகளை ஆற்றில் வீசிய தாய்

நான்கு வயதான மகளை கலா ஓயா ஆற்றில் வீசியதாக வாக்குமூலம் வழங்கியுள்ள புத்தளம் – கருவலகஸ்வெ வ – நீலாபெம்ப பிரதேசத்தைச் சேர்ந்த தாயை எதிர்வரும் 8ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

புத்தளம் மேலதிக நீதவான் லஹிரு என் டி சில்வா முன்னிலையில் அவர் பிரசன்னப்படுத்தப்பட்டார். இதன்போது, குறித்த பெண், காவற்துறைக்கு வழங்கிய வாக்குமூலத்தை ஒப்புக் கொண்டுள்ளதாக நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

குறித்த மகளுக்கு, தம்மை விட பாட்டியின் மீது அன்பு அதிகம் என்று கூறியதால் ஏற்பட்ட கோபத்தை அடுத்து, அவரை அடித்ததாகவும், அதில் சிறுமி மயங்கி விழுந்ததாகவும் தாயாரின் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயக்கமடைந்த சிறுமியை அச்சம் காரணமாக கலாஓய ஆற்றில் வீசியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு வீசப்பட்ட சிறுமியின் சடலத்தை தேடும் பணிகள் கடந்த 7 தினங்களாக மேற்கொள்ளப்படுகின்றன.

வவுனியாவில் ஞாயிற்றுக் கிழமைகளில் தனியார் வகுப்புக்கள் நடாத்த தடை!!

தனியார் வகுப்புக்கள் நடாத்த தடை

வவுனியாவில் ஞாயிற்றுக் கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்கள் நடத்தக்கூடாது என வவுனியா நகரசபையின் தலைவர் இ.கௌதமன் அதிரடித் தீர்மானமொன்றினை எடுத்துள்ளார். வவுனியா, நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இத்தீர்மானத்தினை தெரிவித்திருந்தார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

தனியார் வகுப்புகளுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை வழங்குவது, சுகாதார வசதிகள், காற்றோட்ட வசதிகள், நகரசபையில் பதிவு செய்தல், இரவு நேர வகுப்புகள் நடாத்துதல் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டிருந்தது.

இதன்போது பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் இறுதித் தீர்மானமாக ஞாயிற்றுக் கிழமைகளில் உயர்தர வகுப்புகள், சாதாரண தர வகுப்புகள், புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய வகுப்புகள் தவிர்ந்த அனைத்து வகுப்புகளும் நடத்தப்படக்கூடாது என தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபைக்குட்பட்ட அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் நகரசபையில் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் மாலை 7.30 மணிக்கு பின்னர் தனியார் கல்வி நிலையங்களில் எவ்வகையான வகுப்புகளும் நடத்தப்படக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், காற்றோட்ட வசதிகள், மலசலகூடங்கள் உட்பட சுகாதார வசதிகள் போதுமான வகையில் ஏற்படுத்தப்பட வேண்டும் என இதன்போது தீர்மானிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து இந் நடைமுறை பின்பற்றப்படவேண்டும் என முடிவெடுக்கப்பட்டு நகரசபை தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜே.வி.பி நியூஸ் இணையத்தளத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு ஏறாவூர்பற்று – செங்கலடி பிரதேச செயலகத்தின் முன் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் கவணஈர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

செங்கலடி பிரதேசசெயலாளர் நா.வில்வரெத்தினம் அவர்களைப் பற்றி சில இணையத்தளங்களில் பொய்யான செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தே உத்தியோகத்தர்கள் இவ்வாறு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊடக சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்யாதே! அரச அதிகாரிகள் மீது வேண்டுமென்று அவதூறு வெளிப்படுத்துவதை நிறுத்து. என சில வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை உத்தியோகத்தர்கள் ஏந்தியிருந்தனர்.

சில ஊடகவியலாளர்கள் கவனஈர்ப்பு போராட்டம் சம்மந்தமான கருத்து குரல்பதிவை பதிவு செய்ய முற்பட்டவேளையில் உத்தியோகஸ்த்தர் ஒருவரால் யாரும் குரல் பதிவு கொடுக்க வேண்டாம் எனக் கூறி அனைவரையும் பிரதேச செயலகத்தினுள் அழைத்துச் சென்றார். அத்துடன் கவனஈர்ப்பு போராட்டம் முடிவடைந்தது.

ATM இயந்திரத்தில் பணம் பெறும் இலங்கையர்களுக்கு ஓர் எச்சரிக்கை!!

இலங்கையர்களுக்கு ஓர் எச்சரிக்கை

வங்கிகளில் பணம் மீளப்​பெறும் இயந்திரங்கள் பொறுத்தப்பட்டுள்ள இடத்தில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமராவிற்கு முகத்தை மறைத்து சந்தேகத்துக்கிடமான முறையில் எவரும் நடமாடினால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

போலியான ATM அட்டைகளைத் தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் மூன்று பேரை கடந்த மாதம் கைது செய்ததாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவ் விடயம் தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடனட்டை பொருத்தியிருக்கும் இடங்களில் சில உபகரணங்களைப் பொறுத்தி அதன் மூலம் கடனட்டைகளின் தகவல்களைச் சேகரித்து அதனை தமது அலைபேசிகளில் தரவேற்றிக்கொண்டு, அதனைப் பயன்படுத்தி போலி கடனட்டைகள் தயாரித்து பணக் ​கொள்ளையில் ஈடுபட்டமைத் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய ஜனவரி மாதம் 20ஆம் திகதி கோட்டை செத்தம் வீதியில் வைத்து சீன நாட்டுப் பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டார். 21ஆம் திகதி வௌ்ளவத்தைப் பகுதியில் வைத்து மற்றுமொரு சீனப் பிரஜையும், பெப்ரவரி 3ஆம் திகதி பாணந்துறை பிரதேசத்தில் வைத்து ருமேனியா நாட்டுப் பிரஜை ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் சீன நாட்டைச் சேர்ந்த இரு சந்தேகநபர்களும் இன்றைய தினம் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ருமேனியப் பிரஜையை பாணந்துறை நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சந்தேநபர்களிடமிருந்து போலி கடனட்டைகள் 200, 12 இலட்சத்துக்கும் அதிகமான பணம், தகவல்களைச் சேமிக்கும் உபகரணங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கட்டிலுக்கு அடியில் படுத்திருந்த சிறுத்தை : வீட்டுக்குள் நுழைந்த குடும்பத்தாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!!

கட்டிலுக்கு அடியில் படுத்திருந்த சிறுத்தை

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் பின் வாசல் வழியாக வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூடலூரை அடுத்துள்ள பாட்டவயல் பகுதியில் வசிப்பவர் ராயன். இவர் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்குச் சென்று திரும்பியபோது, வீட்டுக்குள்ளிருந்து உறுமல் சத்தம் கேட்டுள்ளது.

சந்தேகத்தில் கட்டிலுக்கு அடியில் பார்த்தபோது, சிறுத்தை படுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்வாசல் வழியாக சிறுத்தை வீட்டுக்குள் புகுந்துள்ளது. உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு வெளியேறி கதவைப் பூட்டிவிட்டு வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். வனத்துறையில் கால்நடை மருத்துவர் இல்லாத காரணத்தால் சிறுத்தையைப் பிடிப்பதில் தாமதம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் உள்பட பல இடங்களை சேர்ந்த இலங்கையர்கள் வெளிநாட்டில் மாயம் : வலைபோட்டு தேடும் இலங்கை!!

 

தொழிலுக்காக வெளிநாடு சென்ற நீண்ட காலமாக தொடர்பற்றிருக்கும் நபர்கள் தொடர்பான தகவல்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணம், பேருவளை, அம்பாறை, நுவரெலியா, கடவத்தை, பூண்டுலோய, யக்கல, மாத்தளை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 10 பணியாளர்கள் தொடர்பான தகவல் இதுவரை கிடைக்கவில்லை என பணியகம் தெரிவித்துள்ளது.

இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் இருப்பின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 0112-864136 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களின் விபரம் பின்வருமாறு,

யாழ்ப்பாணத்தை சேர்ந்த கே.திசோத்மன் என்ற நபர் 2014.03.12 திகதி மலேசியா சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

பேருவளையை சேர்ந்த முஸ்ர்பா என்ற பெண் 2004.09.10 திகதி லெபனான் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

அம்பாறையை சேர்ந்த பிரேமவத்தி என்ற பெண் 2003.12.15 திகதி லெபனான் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

பொத்துஹெர பிரதேசத்தை சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண் 2002.02.10 திகதி லெபனான் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

நுவரெலியா பிரதேசத்தை சேர்ந்த மொனேஷ்வரி என்ற பெண் 2010.11.02 திகதி லெபனான் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த காலி அம்மா என்ற பெண் 1998.02.06 திகதி லெபனான் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

பூண்டுலோய பிரதேசத்தை சேர்ந்த வசந்தி என்ற பெண் 2004.08.25 திகதி லெபனான் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த மாலினி என்ற பெண் 2002.10.16 திகதி லெபனான் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

யக்ககல பிரதேசத்தை சேர்ந்த மனோஜா தினேஷனி என்ற பெண் 2011.08.24 திகதி குவைத் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த உமாராணி என்ற பெண் 2005.01.31 திகதி லெபனான் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.