வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 8085 ஏக்கர் தனியார் மற்றும் அரச காணிகளை உரியவர்களிடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வன்னி பாதுகாப்பு படைத்தலைமையகம் அறிவித்துள்ளது.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக வன்னி பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா தலைமையில் அரச மற்றும் தனியார் காணிகள் 54.38 ஏக்கர் வடக்கு மாகாண ஆளுனர் சுரேன் ராகவனிடம் 22.01.2019 அன்று கையளிக்கப்பட்டது.
அத்துடன் மன்னார் மாவட்டத்தில் படையினரின் பயன்பாட்டில் இருந்த 4.5 ஏக்கர் அரச காணி 54 படைப்பிரிவின் படைத்தளபதி பிரிகேடியர் செனரத் பண்டார தலைமையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்தாசிடம் 29.01.2019 அன்று கையளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் லசித் மலிங்கவின் மனைவி தொடர்பில், அணியின் சிரேஸ்ட வீரர் திசர பெரேரா முறைப்பாடு செய்துள்ளார். ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வாவிடம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் தம்மையும் தமது மனைவியையும் இழிவுபடுத்தும் வகையில் தொடர்ச்சியாக பதிவுகளை இட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். உலகக் கிண்ணப் போட்டித் தொடர் நடைபெறவுள்ள நிலையில், அணிக்குள் பிளவுகள் இருக்கக் கூடாது எனவும் ஒரே அணியாக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
ஒரு போட்டியில் திறமைகளை வெளிப்படுத்த தவறினாலும் நிச்சயமாக தம்மை அணியிலிருந்து நீக்குவதற்கு திட்டமிடப்படுவதாகவும், கடுமையான மன உளைச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திசர தெரிவித்துள்ளார்.
ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட குரோத உணர்வுகளினால் தற்பொழுது ஒட்டுமொத்த நாடே கிரிக்கட் வீரர்களை பார்த்து எள்ளி நகையாடக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அணியின் தலைமைப் பொறுப்பில் மாற்றத்தை செய்வதன் மூலம் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்த தகவல் சமூகவலைத்தளத்தில் வைரலாக ரசிகர்கள் பேரதிர்ச்சியில் உள்ளனர்.
கிளிநொச்சி – பளை – கட்டைக்காடு பகுதியில் ஏழைக் குடும்பம் ஒன்றின் வீடொன்று விஷமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. கட்டைக்காட்டு பகுதியில் மூன்று பிள்ளைகளை கொண்ட குடும்பமொன்றின் வீடே இன்று அதிகாலை தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த வீடானது குடிசையாக உள்ளதனால், குடும்பத்தவர்கள் அருகில் உள்ள அயலவரது வீட்டில் உறங்குவது வழமையாகும். அந்தவகையில் நேற்று இரவும் குறித்த குடும்பம் அயல் வீட்டில் உறங்க சென்றிருந்த நிலையில், இன்று அதிகாலை அவர்களது வீடு எரிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அவர்களது உடமைகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பளை காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அவுஸ்திரேலியாவில் விசா பெற்றுக்கொள்வதற்காக அண்ணனும் தங்கையும் தங்களுக்குள் திருமணம் செய்துகொண்டு தங்களது விவரங்களை குடிவரவு துறையிடம் சமர்ப்பித்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நபர் தனது தங்கையை திருமணம் செய்துகொண்டு போலியான ஆவணங்களை பெற்றுக்கொண்டு அவுஸ்திரேலியா விசாவுக்கு சமர்ப்பித்துள்ளார்.
இந்த மோசடி இடம்பெற்றதாக கூறப்படும் பஞ்சாப் மாநிலத்தின் சிற்றூரில் பொலிசார் மேற்கொண்டவிசாரணைகளில் சுமார் ஆறுபேர் இதுபோன்ற சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றும் அவர்களது ஒரே நோக்கம் விசா பெற்றுக்கொள்வதுதான் என தெரியவந்துள்ளது. இதனால்,இதுகுறித்து அவுஸ்திரேலிய குடிவரவுதுறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 2015-2016 ஆம் ஆண்டு காலகட்டத்தில் Spouse விசாவின் கீழ் போலி ஆவணங்களை சமர்ப்பித்து நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 278 என்றும் கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 668 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த நான்கு வருடங்களில் சுமார் 1500 விண்ணப்பங்கள் அவுஸ்திரேலிய குடிவரவு துறையால் நிராகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அலுவலகத்தின் முன் வைத்தே கத்தியால் குத்தி கொலை செய்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் பயந்தர் பகுதியை சேர்ந்தவர் குமார் போயிர் (32). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக வீனா (35) என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
கடந்த சில நாட்களாகவே தம்பதியினர் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் வீனா கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்த நிலையில் மனைவி அலுவலகத்திற்கு வந்திருப்பதை அறிந்து கொண்ட குமார், அங்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து 19 முறை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் வீனா மயங்கி விழுவதை பார்த்த சகஊழியர்கள் வேகமாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், கொலை வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தாலே கொலை செய்திருப்பது தெரியவந்தது.
திருகோணமலை – கிண்ணியாவில் மணல் ஏற்றும் போது கடற்படையினரின் துப்பாக்கி சூட்டிற்கு தப்பி ஒடிய மற்றுமொரு நபரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. கிண்ணியாவைச் சேர்ந்த 18 வயதுடைய முகம்மது பசீர் றமீஸ் என்பவரது சடலமே மீட்கப்பட்டுள்ளது.
இவர் மணல் ஏற்றும் போது கடற்படையினரின் துப்பாக்கி சூட்டிற்கு தப்பிப்பதற்காக கங்கை ஆற்றில் குதித்து காணாமல் போன நிலையில் குறித்த பகுதியிலேயே இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலத்தை பிரதே பரிசோதனைக்காக கிண்ணியா தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹட்டனில் தற்கொலை செய்து கொண்ட 22 வயது யுவதியான முருகையா சாந்தினியின் குரல் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. குறித்த யுவதி, தான் தற்கொலை செய்து கொள்வதற்காக மாத்திரைகளை உட்கொண்ட பின்னர் தன்னுடைய தற்கொலை முயற்சிக்கு காரணம் என்ன என்பதை தெரிவித்து தனது குரலினை பதிவு செய்துள்ளார்.
ஹட்டன் – டன்பார் வீதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் சில வருடங்கள், உயிரிழந்த யுவதியான முருகையா சாந்தினி பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் 90 மாத்திரைகளை உட்கொண்டு கடந்த 27ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உயிரிழந்த யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நேற்று இறுதி கிரியைகள் செய்யப்பட்டிருந்தன. இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த யுவதியின் குரல் பதிவு பகிரப்பட்டு வருகிறது. அந்த குரல் பதிவில், தன்னுடைய தற்கொலை முயற்சிக்கு வைத்தியரும் அவரது மனைவியும் தான் காரணம் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில் அவரது தோழியும் மரணமடைந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.ஆந்திரப்பிரதேசத்தின் கர்னூல் நகரில் உள்ள கல்லூரி விடுதியில் குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
இங்குள்ள புனித ஜோசஃப் கல்லூரி விடுதியில் கடந்த ஞாயிறு அன்று திரக்ஷாயனி என்ற 17 வயது மாணவி கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இத்தகவல் அறிந்த சில நிமிடங்களில் அவரது நெருங்கிய தோழியும் அந்த விடுதியின் காவலருமான 24 வயது புஷ்பவதியும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் கல்லூரி நிர்வாகம் கர்னூல் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், திரக்ஷாயனியின் அறையில் இருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். திரக்ஷாயனியின் தற்கொலை தொடர்பில் தகவல் அறிந்த அவரது பெற்றோர்,
தங்கள் மகள் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், கடந்த நான்கு நாட்களாக தங்களிடம் இது தொடர்பில் பேசி வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். திரக்ஷாயனியின் திடீர் பிரிவை தாங்க முடியாமல் புஷ்பவதியும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருவரும் நெருங்கிய நண்பர்கள் எனவும், ஆனால் புஷ்வதியின் தற்கொலைக்கு வேறு காரணம் ஏதும் உள்ளனவா என்பது தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறன்றனர். இந்த இரு தற்கொலை விவகாரம் தொடர்பில் கல்லூரி நிர்வாகம் கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
புதுச்சேரி அருகே இரண்டு ரூபாய் கடனுக்காக நடந்த வாய்த் தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை ஒட்டிய தமிழகப் பகுதியான நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தாள்ராயன்(46). மீனவரான இவர் தனது நண்பர் தரணி என்பவருடன் சேர்ந்து தவளக்குப்பம்-அபிஷேகப்பாக்கம் சாலையில் இருக்கும் மதுக்கடையில் மது அருந்தியுள்ளார்.
பின்னர் அருகில் இருந்த பெட்டிக்கடைக்கு சென்றபோது, அங்கிருந்த வாகன ஓட்டுநர் மணி என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பினரும் கடுமையாக தாக்கிக் கொண்டனர். அப்போது ஆத்திரமடைந்த மணி, முத்தாள்ராயனை சரமாரியாக தாக்கிவிட்டு ஓடி விட்டார்.
இதனால் பலத்த காயமடைந்த முத்தாள்ராயன் அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், முத்தாள்ராயனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே முத்தாள்ராயன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் இதனை கொலை வழக்காக பதிவு செய்த பொலிசார், வாகன ஓட்டுநர் மணியை தேடிப்பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் மணி கூறுகையில், ‘மதுக்கடைக்கு அருகே பெட்டிக்கடை நடத்தி வரும் எனது உறவினர், தன் கடையில் 2 ரூபாய் பாக்கி வைத்ததை குறித்து முத்தாள்ராயனிடம் கேட்டார். அப்போது நண்பர் தரணியுடன் சேர்ந்து முத்தாள்ராயன் எனது உறவினரிடம் தகராறு செய்தார்.
அதனைத் தட்டிக்கேட்ட என்னை அவர்கள் இருவரும் தாக்கினர். மேலும் அவர்கள் என்னை கல்லால் தாக்கியதால், ஆத்திரமடைந்த நான் முத்தாள்ராயனை செங்கல்லால் தாக்கினேன். அதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்ததும், நான் அந்த இடத்திலிருந்து தப்பித்து ஓடிவிட்டேன். கோபத்தில் தாக்கினேனே தவிர, கொலை செய்யும் எண்ணத்தில் இல்லை’ என தெரிவித்தார்.
கேரளாவில் 4 வயதில் மனைவியாக நாடகத்தில் நடித்த சிறுமியை இளைஞர் ஒருவர் 22 ஆண்டுகளுக்கு பின்னர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூக வலைதளத்தில் கொண்டாடப்படுகிறது. கேரள மாநிலம் கொச்சி நகரில் இந்த அபூர்வ திருமணம் அரங்கேறியுள்ளது.
கொச்சி நகரத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர்களாக பணியாற்றிய இருவர் ஒரே மாதத்தில் பிள்ளை பெற்றுள்ளனர். நண்பர்களான இருவரும் தங்களுக்கு பிறந்த பிள்ளைகளுக்கு ஸ்ரீராம் எனவும் ஆர்யஸ்ரீ எனவும் பெயரும் சூட்டியுள்ளனர்.
இந்த நிலையில் 4 வயதில் இருவரையும் ஒரு ராணுவ வீரரின் திருமணம் என்ற நாடகம் ஒன்றில் கணவன் மனைவியாக நடிக்க வைத்துள்ளார் ஆசிரியர் ஒருவர். இதனிடையே பல ஆண்டுகள் கடந்த நிலையில் ஸ்ரீராம் உரிய தேர்வு எழுதி ராணுவ அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். ஆர்யஸ்ரீ மருத்துவ கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் பேஸ்புக் பக்கத்தில் தங்களின் பழைய புகைப்படத்தை தேடியெடுத்த ஸ்ரீராம், ஆர்யஸ்ரீயை தொடர்பு கொண்டு ஏன் நாம் மீண்டும் திருமணம் செய்துகொள்ள கூடாது என வினவியுள்ளார். இந்த விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவரவே இரு குடும்பத்தாரும் ஒன்று கூடி ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
இளைஞர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள உறுதியுடன் இருப்பதை அறிந்த பின்னர் அவர்கள் திருமணத்திற்கு குடும்பத்தாரும் ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த திருமண விவகாரம் சமூக வலைதளத்தில் வெளியாகவே பலபேர் தங்கள் வாழ்த்துகளை அவர்களுக்கு பதிவு செய்துள்ளனர்.
வவுனியாவில் படைப்புழுக்களின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் ஏ.ஷகீலா பாணுவின் தலைமையில் இடம்பெற்ற இவ் விழிப்புணர்வு ஊர்வலத்தில் வவுனியா அரசாங்க அதிபர் எச்.ஐ.ஹனீபா, கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் விஜயகுமார்,
வவுனியாவில் மாவட்டத்தில் உள்ள கமநல சேவைகள் நிலையத்தின் உத்தியோகத்தர்கள் விவசாய திணைக்கள உத்தியோத்தர்கள் விவசாயிகள் கலந்துகொண்டு ஊர்வலமாக சென்றிருந்தனர்.
3 கமநல சேவைகள் நிலையங்களில் இருந்து ஆரம்பமான இவ் ஊர்வலம் வவுனியா மாவட்ட செயலகத்தினை வந்தடைந்து அங்கிருந்து பண்டாரவன்னியன் சதுக்கம் வரை சென்றிருந்டன் விழிப்புணர்வு உரையை அடுத்து ஊர்வலம் முடிவடைந்தருந்தது.
ஐ.ஆர்.சி (Island Re-convicted criminals) என்ற இலங்கையின் குற்றவாளி பட்டியலில் 608 சிறுவர்கள் உள்ளடங்கியுள்ளதாக குற்றப்புலனாய்வு பொலிஸாரின் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
இதில் 13 சிறுமிகளும் அடங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது. ஒவ்வொரு வருடத்திலும் இந்த பட்டியலில் 100 சிறுவர்கள் உள்ளடக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
11 முதல் 20 வயதுக்கு உட்பட்ட இந்த பிரிவினர் சைக்கிள், மடிக்கணினி, கணினி திருட்டு போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இதேவேளை ஐ.ஆர்.சி பட்டியலில் 1200 பெண்கள் உட்பட்ட 43,000 பேர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் பயன்பாட்டிலுள்ள கணனிகளை புதிய வகை வைரஸ் தாக்கி வருவதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு எச்சரித்துள்ளது. விண்டோஸ் இயங்கு தளம் ஊடாக இந்த வைரஸ் பரவி வருவதாக தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.
விண்டோஸ் 7/ 8.1 மற்றும் 10 ஆகிய இயங்கு தள அமைப்புகளுக்கு இதன் ஊடாக பாதிப்பு ஏற்படக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரம்பா என பெயரிடப்பட்டு இந்த வைரஸ், இலவசமாக பதிவிறக்கம் செய்யக்கூடிய மென்பொருள் ஊடாக பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஊடாக கணனியில் சேமித்து வைக்கப்படும் அத்தியவசியமான தரவுகளுக்கு பாதிப்பு ஏற்படும் அவதானம் காணப்படுகின்றது. விண்டோஸ் இயங்கு தள அமைப்புக்களை புதுப்பித்திருந்தால் இந்த வைரஸ்ஸால் பாதிப்பு ஏற்படாது என இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் – நாவந்துறை பகுதியில் சிறுமி ஒருவரை கடத்தும் நோக்குடன் நடமாடிய சந்தேகநபர் ஒருவரை அப்பகுதி மக்கள் பிடித்து கட்டிவைத்த நிலையில் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சந்தேகநபர் கடந்த வாரம் நாவந்துறை பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமியை கடத்திச் செல்ல முற்பட்டார் என்றும், அதேபோன்று நேற்றைய தினமும் சிறுமியை கடத்தும் நோக்கோடு குறித்த பகுதிக்கு வருகை தந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் காத்தான்குடி பகுதியை சேர்ந்தவரெனவும், சமையல் வேலைக்காகவே யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது. சம்பவம் குறித்து பொலிஸாருக்கும் தகவல் வழங்கிய போதிலும் சுமார் 2 மணிநேரத்துக்கு பின்னரே சம்பவ இடத்திற்கு வருகை தந்து சந்தேகநபரை கைது செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்திலும் விவசாய நடவடிக்கைகளில் படைப்புழுக்களின் தாக்கம் ஏற்பட்டுள்ளதால், அதனைக் கட்டுப்படுத்த விசேட விழிப்புணர்வு ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த விழிபுணர்வு ஊர்வலம் வவுனியா விவசாய கல்லூரி மாணவர்களால் அதிபர் திருமதி கே.சந்திரகாசன் தலைமையில், இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா, தாண்டிகுக்குளம் பகுதியில் உள்ள விவசாய கல்லூரியில் இருந்து ஊர்வலமாக வந்த விவசாய கல்லூரி மாணவர்கள் வவுனியா நகரம், திருநாவற்குளம், மடுகந்தை, கோவில்குளம் ஆகிய பகுதிகளுக்கு ஊர்வலமாக சென்று துண்டு பிரசுரங்களை விநியோகித்ததுடன் படைப்புழுக்களின் தாக்கம் தொடர்பிலும்,
அதனை கட்டுப்படுத்தும் வழிமுறை தொடர்பிலும் மக்களுக்கு தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களில் படைப்புழுக்களின் தாக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்கை கண்டக் காட்டு பாலத்துக்கு அருகில் நேற்று மண் அகழ்வில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்ய முற்பட்ட வேளையில், அவர்கள் தப்பிச் செல்ல முற்பட்ட போது கடற்படையினரினால் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த மூன்று பேரும் தப்பிச் செல்வதற்காக கங்கையில் குதித்த வேளை இருவர் காணாமல் போயிருந்தனர். ஒருவர் உயிர் தப்பியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறான நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் காணாமல்போன இருவரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதுடன், ஒருவரை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது நாளாகவும் இன்று சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் காணாமல் போனதாக கூறப்படும் மற்றொரு இளைஞரை தேடும் பணியில் பொதுமக்களும், கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.