முதன் முறையாக இலங்கை தமிழ் பள்ளி மாணவி ஒருவர் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார் என்ற செய்தி உலகத் தமிழர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இலங்கை சேர்ந்த லண்டனில் வாழ் தமிழ் பெண்ணான சியோபன் ஞானகுலேந்திரன் என்ற பெண் நுண்ணியல் உயிர்களைப் பற்றி கற்று வந்துள்ளார்.
குறித்த பெண் செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து நில அளவை செய்வது என பல்வேறு துறைகளில் சுமார் 30,000 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இவர்களில் அதீத திறமை மிக்க 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரிட்டன் விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவெடுத்தது. அதில் இவர் மிகத் திறமையாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளார்.
அத்தோடு விண்வெளி ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். மேலும் சர்வதேச விண்வெளி ஓடத்தில் சென்று இவரும் இங்கிலாந்து மாணவி டியானாவும் சேர்ந்து நுண்ணுயிர் ஆய்வில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா – மன்னார் வீதியில் உள்ள வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து திருடிய இருவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இன்று மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா – மன்னார் வீதியில் உள்ள தாதியர் பயிற்சிக் கல்லூரிக்கு முன்பாகவுள்ள பழ மற்றும் மரக்கறி விற்பனை நிலைய உரிமையாளர் தனது கடையை திறந்து விட்டு அருகில் இருக்கும் கடைக்கு சென்றிருந்த வேளை, குறித்த பழ மற்றும் மரக்கறி விற்பனை நிலையத்திற்குள் புகுந்த இருவர் அங்கிருந்த காசுப் பெட்டியை திறந்து பணத்தை திருடியுள்ளனர்.
இதனை அப்பகுதியில் நின்றவர்கள் அவதானித்ததும் குறித்த திருட்டில் ஈடுபட்ட இருவரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். அங்கு ஒன்று கூடிய குறித்த இருவரையும் மடக்கிப் பிடித்தனர்.
வவுனியா பொலிசாரின் தமிழ் மொழி மூல முறைப்பாட்டு பிரிவுக்கு தொலைபேசி மூலம் வழங்கங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிசார் குறித்த இருவரையும் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர்கள் இருவரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அவர்கள் நீர்கொழும்பு மற்றும் வவுனியா கொக்குவெளி பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். அவர்களிடம் இருந்து கூரிய கத்தி மற்றும் கடவுச் சீட்டு உள்ளிட்டவையும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
கடை உரிமையாளரால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து வவுனியா பெலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பு காலிமுகத்திடலில் மணமகன் மற்றும் மணமகள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு கொழும்பு காலிமுகத்திடல் சுற்றுவட்ட வீதி மூடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சுற்றுவட்டத்த அண்மித்த பல வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவசர நிமித்தம் பயணம் மேற்கொள்ளும் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு முகங்கொடுப்பதாக பலரும் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
காலிமுகத்திடலை அணித்த பகுதிகளில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் அமைந்துள்ளன. இன்றைய தினம் திருமணம் செய்து கொள்ள விருந்த திருமண ஜோடிகள் கடும் வாகன நெரிசல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட நேரத்திற்கு ஹோட்டலை சென்றடைய முடியாத நிலையில், தங்கள் மோட்டார் வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்துச் சென்றுள்ளனர். இந்த வாகன நெரிசல் காரணமாக நோயாளர் காவு வண்டிகள் பலவும் சிக்கித் தவிப்பதாக தெரிய வருகிறது.
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் ஏறாவூரில் இடம்பெற்ற வீதி விபத்தில் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் இரசாயனவியல் விரிவுரையாளர் பலியாகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தை வீதி, செங்கலடியை சேர்ந்த கந்தக்குட்டி கோமளேஸ்வரன் என்ற 48 வயதுடைய நபரே சம்பவத்தில் பலியாகியுள்ளார். இவர் இன்று காலை கடமைக்காக மட்டக்களப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது வீதியால் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தை ஏற்படுத்திய பேருந்தை கைப்பற்றியதோடு, சாரதியையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருமணம் முடிந்த கையோடு புதுமாப்பிள்ளை கால்பந்து விளையாட சென்றுள்ள வினோத சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த ரித்வான் என்பவர் உள்ளூரில் நடைபெறும் ஃபிபா மஞ்சேரி கால்பந்து அணியில் தடுப்பாட்டக்காரராக விளையாடி வருகிறார்.
11 பேருக்குப் பதிலாக 7 பேர் மட்டுமே ஆடும் 7எஸ் போட்டி கேரளாவில் மிகப் பிரபலம். ரித்வானுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த அதேநாளில், மலப்புரம் 7எஸ் போட்டிக்கு இவருடைய அணி தேர்வாகியிருந்தது. திருமண வேலைப்பாடுகள் அனைத்தும் மிக தீவிரமாக நடந்து வந்ததால், ரித்வானுக்கு என்ன செய்வதென தெரியவில்லை.
திருமண நாளில் மனைவியிடம் 5 நிமிடம் அனுமதி கேட்டுவிட்டு கால்பந்து போட்டிக்கு சென்றுள்ளார். போட்டியில் வெற்றி பெற்றதோடு, மீண்டும் திருமண நிகழ்ச்சியில் வந்து கலந்துகொண்டார். அப்போது மனைவியான புதுமணப்பெண், ‘ஒருவேளை கால்பந்துப் போட்டிகள் மதியத்தில் நடைபெற்றிருந்தால், திருமணத்தை நிறுத்தி இருப்பீர்களா?’ என கேள்வியெழுப்பியுள்ளார். இதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் ரித்வான் முழித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருமணத்துக்கு இடையில் சென்று கால்பந்து விளையாடிய ரித்வானுக்கு, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் பாராட்டு தெரிவித்ததோடு, சந்திக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் திருமணம் முடிந்த ஒரு வருடத்திலே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்துக்கொலை செய்த கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்த தர்மன் (47), லொறி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக விஜயசாந்தி (24) என்பவரை திருமணம் செய்துகொண்டார். தம்பதியினருக்கு ஒரு கைக்குழந்தை உள்ளது.
கடந்த சில நாட்களாகவே விஜயசாந்தி அடிக்கடி செல்போனில் பேசி கொண்டிருந்ததால், சந்தேகமடைந்த தர்மன் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளான். நேற்று இரவு வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, மீண்டும் மனைவி செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார்.
இதனை பார்த்து ஆத்திரமடைந்த தர்மன், மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே, தோட்டத்தில் இருந்த மண்வெட்டியை எடுத்து மனைவியின் மனைவியின் தலை மற்றும் கழுத்தில் ஓங்கி வெட்டியுள்ளார்.
ரத்தம் பீறிட்டு வெளியேற சம்பவ இடத்தியிலேயே மனைவி துடிதுடித்து இறந்துள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வழக்கு பதிவு செய்து தர்மனை கைது செய்திருக்கும் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகர் யோகி பாபுவுக்கு இந்த வருடம் அதிர்ஷ்டமான வருடமாக கூறப்படுகின்றது. அமைதியாக விளம்பரம் இன்றி தன் அம்மா பெயரில் பங்களா கட்டி குடியேறியுள்ளார்.
இன்று கோலிவுட்டின் பிசியான நகைச்சுவை நடிகர் என்றால் அது யோகி பாபு தான். அவர் கையில் 15க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. அவர் தனது சம்பளத்தையும் உயர்த்தியுள்ளார். கோடிகளில் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் யோகிபாபு சென்னையில் பெரிய பங்களா கட்டியுள்ளார்.
அந்த பங்களாவுக்கு தனது அம்மா விசாலாட்சியின் பெயரை வைத்துள்ளார். புதுமனை புகுவிழாவை சத்தமில்லாமல் ரகசியமாக நடத்தியுள்ளார். அந்த விழாவுக்கு சென்ற நடிகை ஆர்த்தி அங்கு எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.
யோகிபாபுவின் வீட்டை பார்த்தாலே பிரமாண்டமாக உள்ளது. அதிர்ஷ்டகாரர் என்றும் பலர் யோகிபாபுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ரென்ட்டல் ஆடைகள் பிசினஸில் அசத்தி வரும் ஸ்வேதா போதர் என்ற பெண், ஆண்டுக்கு சுமார் 80 லட்சத்தை வருமானமாக ஈட்டி வருகிறார். தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்வேதா போதர். இவரது தந்தை ஆடைகள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். கணினி பொறியியல் பட்டப்படிப்பை முடித்த ஸ்வேதா, தந்தையைப் போலவே தொழிலதிபர் ஆக வேண்டும் என்ற தனது கனவை நனவாக்க தொடங்கினார்.
சிறுவயதில் இருந்தே துணியின் ரகம், விலை, டிசைன்கள், டிரெண்ட போன்றவற்றில் அப்டேட்டாக இருந்த ஸ்வேதா, தனது படிப்பு முடிந்ததும் தன் துறை சார்ந்த சில தனியார் நிறுவனங்களில் சில ஆண்டுகள் வேலை பார்த்துள்ளார்.
பின்னர் ஒவ்வொரு மாத சம்பளத்தையும் சேமித்து வைத்து தனது பிசினஸிற்கான முதலீட்டை தயார் செய்துள்ளார். மேலும் தன்னுடைய பிசினஸ் மற்றவர்களிடம் இருந்து தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதிலும் அவர் உறுதியாக இருந்துள்ளார்.
அதன் பின்னர், ரென்ட்டல் ஆடைகள் எனும் வாடகைக்கு உடைகளை வழங்குவதில் இருந்த நுணுக்கங்களை ஆராய்ந்து, ஆடைகளுக்கான மெட்டீரியல், ஷோரூம் தொடங்குவதற்கான இடம் என அனைத்தையும் திட்டமிட்ட பின் தந்தையிடம் தனது ஆவலை கூறியுள்ளார்.
அவர் சற்று தயங்கியபோதும் தனது முடிவில் உறுதியாக இருந்த ஸ்வேதாவிற்கு தனது ஆதரவை அவரது தந்தை தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, பெங்களூரில் ‘கேண்டிட் நாட்ஸ்’ எனும் ரென்ட்டல் ஆடை நிறுவனத்தை தொடங்கினார்.
ஆண்-பெண் இருபாலருக்கும் ட்ரெண்டுக்கு தகுந்த ஆடைகளை வடிவமைத்த ஸ்வேதா, Western, Tradition, Trendy என எல்லா வகையான Outlook-க்கும் தேவையான ஆடைகள் மற்றும் அதற்கு பொருத்தமான Accessoris-களுடன் தயார் செய்தார். பிசினஸ் தொடங்கிய சில மாதங்களிலேயே பெண்களின் ஆடைகளை விட, ஆண்களின் ஆடைகளுக்கு நல்ல வரவு இருந்துள்ளது.
அதனால் ஆண்களை Grand Look-யில் காட்டும் Blazers, டக்சிடோ, ஜோத்பூரி சூட்ஸ், ஷெர்வானி போன்ற ஆடைகளை டிசைனர்கள் மூலம் வடிவமைத்துக் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
இவ்வாறாக இந்த தொழிலில் ஆண்டுக்கு சுமார் 80 லட்சம் வருவாயாக ஸ்வேதா போதர் ஈட்டி வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘டிரெண்டிற்கு ஏற்ப நம்மை அப்டேட் செய்துகொண்டு, கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் நிச்சயம் வெற்றி தான்.
பள்ளியில் நல்ல மதிப்பெண் எடுத்தால், எங்களை ஊக்குவிக்க அப்பா பரிசு கொடுப்பார். அப்போது எனக்கு பரிசு வேண்டாம், அதற்கு பதிலாக என்னையும் பிசினஸ் பார்ட்னராக சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சின்ன வயதில் நிறைய முறை சொல்லியிருக்கிறேன். சிறுவயதிலிருந்தே பிசினஸ் வுமன் ஆக வேண்டும் என்பது என் கனவு’ என தெரிவித்துள்ளார்.
மேலும் தனது ரென்ட்டல் பிசினஸ் அவர் கூறுகையில், ‘எங்களுடைய ஆடையில் ஃப்னிஷிங் நன்றாக இருந்ததால் வாடிக்கையாளர்கள் எங்களை தேடி வர ஆரம்பித்தார்கள். எங்களுடைய ஷோரூமிலே டிசைனர்கள் குழு இருப்பார்கள்.
வாடிக்கையாளர்கள் எந்த நிகழ்ச்சிக்காக ஆடைகளை தெரிவு செய்கிறார்கள், என்ன மாதிரியான ஆடைகள் அவர்களின் உடல்வாகுக்கு பொருத்தமாக இருக்கும், எப்படி Accessoris-களை Mix match செய்வது என்று அவர்களுக்கு யோசனை வழங்குவார்கள்.
நேரில் வர முடியாதவர்களுக்காக ஒன்லைன் பக்கத்தை ஆரம்பித்தோம். ஒன்லைனில் எங்களிடம் இருக்கும் ஆடைகளையெல்லாம் Size பிரித்து Upload செய்தோம். வாடிக்கையாளர் எந்த ஆடையை வேண்டுமானாலும் தெரிவு செய்து கொள்ளலாம். அவர்களின் உடல் வாகு மற்றும் உயரத்திற்கு ஏற்ப மாற்றியமைத்து Home delivery செய்கிறோம்.
ரென்ட்டல் ஆடைகளைப் பொறுத்தவரை அதிகவிலை கொடுத்து வாங்க முடியாத டிரெண்டியான ஆடைகளுக்குத் தான் மக்களிடம் எப்போதும் Demand இருக்கும் என்பதால், டிரெண்டில் என்ன இருக்கிறது என்பதை Update செய்துகொண்டே இருப்பது அவசியம்.
அதேபோல் சிலருக்கு வாடகை ஆடை அணிந்தால் அலர்ஜி வருமோ? என்ற பயமும், சந்தேகமும் இருக்கும். நாங்கள் ஒவ்வொரு ஆடையையும் வெந்நீர், ஆன்டி-செப்டிக் லோசன் பயன்படுத்தித் துவைத்தே ஒவ்வொரு முறையும் கொடுக்கிறோம்.
ரென்ட்டல் ஆடைகள் பணத்தை மிச்சப்படுத்துகிறது என்பதால் மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. மாறுபட்ட யோசனைக்கு எப்போதும் மதிப்பு அதிகம்’ என தெரிவித்துள்ளார்.
திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.
இந்த விபத்தில் இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மேலும் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாகவே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாய் வீட்டிற்கு சென்ற மனைவி 10 நிமிடங்கள் தாமதமாக வந்தால் அவரின் கணவர் முத்தாலக் கூறிய விவகாரம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபாவில் முத்தாலக்கிற்கு எதிரான சட்டம் சமீபத்தில்தான் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் ஒருவர் தன் மனைவிகு தலாக் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலம் எட்டா என்கிற பகுதியில் ஒரு பெண் தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். நோய்வாய்பட்ட தனது பாட்டியை பார்க்க அவர் சென்றதாக தெரிகிறது. வீட்டிற்கு வந்த கணவர் இதுபற்றி கேள்விப்பட்டு தனது மனைவிக்கு போன் செய்துள்ளார். இன்னும் 30 நிமிடங்களில் நீ இங்கு வரவேண்டும் என கட்டளையிட்டுள்ளார். எனவே, அவர் மனைவி வேகவேகமாக தாயின் விட்டிலிருந்து கிளம்பி வந்துள்ளார்.
ஆனால், 10 நிமிடம் தாமதமாகி விட்டது. எனவே, கோபமடைந்த கணவன், மனைவியின் சகோதரனின் செல்போனில் தொடர்பு கொண்டு ‘தலாக்’ செய்து விட்டார். இதைக்கண்டு அப்பெண் அதிர்ச்சி அடைந்தார். ஏற்கனவே வரதட்சனை கேட்டு தன் கணவன் தன்னை சித்ரவதை செய்து வருவதாக புகார் கூறியுள்ள அப்பெண், இந்த விவகாரத்தில் தனக்கு சட்ட பாதுகாப்பு வேண்டும் எனவும், அரசு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகத்தில் எஜமானியை கடிக்க வந்து குரங்குடன் சண்டை போட்டு காப்பாற்றிய நாய் பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் தாழக்குடி பகுதியில் ஆண் குரங்கு ஒன்று சுற்றுத் திரிந்து வருகிறது. இந்த குரங்கு அவ்வழியே யார் சென்றாலும், அவர்களை கடிக்க வருவது, வீட்டில் உள்ள உணவுகளை பறித்து உண்பதை வழக்கமாக வைத்து வருகிறது. இதனால் அந்த குரங்கின் தொல்லையால் அப்பகுதி மக்கள் மிகுந்த எரிச்சலில் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் இருக்கும் மணி என்பவரின் மனைவி பத்மா அவரது வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் வீட்டின் காம்பவுண்ட் சுவரில் இருந்த அந்த குரங்கு, திடீரென்று பத்மாவை கடிக்க முயன்றது.
உடனே இதைக் கண்ட அவர்கள் வளர்க்கும் நாய், குரங்கிடமிருந்து எஜமானியை காப்பாற்றுவதற்காக சண்டை போட்டுள்ளது. அப்போது குரங்கு ஆத்திரத்தில், நாயின் மார்புப் பகுதியை பயங்கரமாக கடித்து குதறி, அதன் பின் வீட்டின் உள்ளே சென்று பாத்திரங்களை தூக்கி வீசியுள்ளது.
இருப்பினும் அந்த காயத்துடன் நாய் மீண்டும் சென்று குரங்கிடம் சண்டை போட, சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சண்டையால் அதிர்ச்சியடைந்த பத்மா, அதன் பின் அலறியுள்ளார்.
இந்த சத்தத்தைக் கேட்ட் அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக விரைந்து வர, குரங்கு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது. ஆனால் படுகாயமடைந்த நாய் அந்த இடத்திலே பரிதாபமாக இறந்தது.
இந்த சம்பவத்தையடுத்து அங்கிருக்கும் மக்கள் அந்த குரங்கை பிடித்து காட்டிற்குள் விட வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மாலி நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை மீது நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டு இலங்கை இராணுவ வீரர்களினதும் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கு சொந்தமான விமானம் மூலம் எதிர்வரும் 2ம் திகதி இவர்களின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பிற்பகல் 03.00 மணியளவில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை கட்டளைத் தளபதியால் உடல்கள் இராணுவத் தளபதியிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலி நாட்டின் டொவ்ன்ஸா பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவ வாகனம் மீது கடந்த 25ம் திகதி காலை 06.30 மணியளவில் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதலில் இலங்கை இராணுவத்தின் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் துருப்புக்காவி கவசவாகனத்தில் பயணம் செய்த இலங்கை இராணுவத்தின் 11வது இலகு காலாட்படையைச் சேர்ந்த கப்டன், ஜெயவிக்ரம, முதலாவது இயந்திர காலாட்படையைச் சேர்ந்த கோப்ரல் விஜேகுமார ஆகியோர் உயிரிழந்தனர்.
குறித்த இருவரினதும் பணிக்காலம் கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்திருந்த போதிலும், பாதுகாப்பு பிரச்சினை காரணமாக வேறு குழுவொன்றை அங்கு பணிக்கமர்த்த முடியாது போயுள்ளது. இதேவேளை, தற்போது சமார் 200 இலங்கை இராணுவ வீரர்கள் மாலி நாட்டில் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். நாவாந்துறைப் பகுதியில் வைத்து மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட போதும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்ட போதும் அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படாமல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 24ஆம் விடுதியில் சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும் சில மணி நேரங்களில் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இதேவேளை, யாழ். நாவாந்துறை சந்தைப் பகுதியில் நேற்று முற்பகல் ஒருவர் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடினார். அவர் கடந்த 23ஆம் திகதியும் அந்தப் பகுதிக்கு வந்து 12 வயதுச் சிறுமியைக் கடத்திச் செல்ல முற்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, நாவாந்துறை சந்தைப் பகுதியில் கூடியிருந்தவர்கள் அந்த நபரைப் பிடித்து கட்டிவைத்து நையப்புடைத்ததுடன், யாழ்ப்பாணம் பொலிஸாருக்கும் அறிவித்தனர். எனினும் சுமார் 2 மணிநேரத்துக்கு பின்னரே பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர்.
தான் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்றும் சமையல் வேலைக்காக யாழ்ப்பாணத்துக்கு வந்ததாகவும் பிடிக்கப்பட்ட நபர் தெரிவித்தார்.
இதனையடுத்து, சந்தேகநபரைக் கைது செய்த பொலிஸார், அவரை அழைத்துச் சென்றனர். இந்த நிலையிலேயே அந்த நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பித்துள்ளார்.
அமெரிக்காவில் வரலாறு காணாத கடும் குளிர் நிலவி வருவதான் காரணமாக அங்கு பல்வேறு பகுதிகளிலும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், கடும் குளிர் காரணமாக அமெரிக்காவின் மேற்கு பகுதி நகரங்கள் முடங்க தொடங்கியுள்ளதாகவும், தற்போது வரையில் குளிர் காரணமாக ஆறு பேர் வரையில் உயிரிழந்துள்ளதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் தற்போது வரையிலும் சுமார் 2000 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாடசாலைகள், அரச நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் மேற்கு திசையில் தட்பவெப்பநிலை -40 டிகிரி செல்சியஸ் வரை செல்லலாம் என்று அமெரிக்க தேசிய வானிலை நிலையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், பொது மக்களை வெளியே செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடும் குளிரை 250 மில்லியன் அமெரிக்கர்கள் சந்திக்கவுள்ள நிலையில், 90 மில்லியன் பேர் -17 டிகிரி செல்சியஸ் டிகிரி வானிலையை எதிர்கொள்ள உள்ளனர்.
இதேவேளை, அமெரிக்காவின் மேற்கு மாநிலங்களான விஸ்கான்சின், மிச்சிகன், இல்லினாய்ஸிலும், தொலைதூர மாநிலங்களான அலபாமா மற்றும் மிஸிசிப்பி உள்ளிட்ட பகுதிகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
வவுனியா நகர்ப்பகுதியில் மாலை வேளையில் அதிகளவு டெங்கு நுளம்பு பெருக்கெடுத்து வருகின்றன. அதனை அழித்தொழிப்பதற்கு வவுனியா நகர்ப்பகுதிகளில் டெங்கு ஒழிப்புச் செயற்றிட்டத்தினை சுகாதாரத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று மாலை வவுனியா பஜார் வீதியிலுள்ள வியாபார நிலையங்களுக்கு முன்பாகவும், கால்வாய்களுக்குள்ளும், நகரையண்டிய பகுதிகளிலும் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை புகை மூலம் விரட்டியடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டெங்கு நுளம்பைக்கட்டுப்படுத்த பொதுமக்கள், வியாபார நிலைய உரிமையாளர்கள், ஊழியர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் சுகாதாரத்துறையினர் கோரியுள்ளனர்.
விபுல சாரணன் செல்வன் தர்மசீலன் லிசாந்தனின் ஜனாதிபதி விருது செயற்றிட்டமாக வவுனியா விபுலாநந்தா கல்லூரி மாணவர்களுக்கான பயணிகள் நிழல்குடை மாணவர்களின் நலன் கருதி அமைக்கப்பட்டு திறப்பு விழா விபுல சாரணர்களின் பொறுப்பாசிரியர் பி.தற்பரன் தலைமையில் நேற்று முன்தினம் (28.01.2019) மாலை நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக சாரண மாவட்ட ஆணையாளர் ச.பத்மநாதன் கலந்து பயணிகளுக்கான நிழல் குடையினை திறந்து வைத்து சிறப்பித்தார்.
சிறப்பு அதிதியாக கல்லூரி அதிபர் பொ.சிவநாதன், பிரதி அதிபர்கள் ஆகியோர் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் ஸ்ரீதரன், சாரண உதவி மாவட்ட ஆணையாளரும், வவுனியா நகர சபையின் உறுப்பினரும், கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளருமான சுந்தரலிங்கம் காண்டீபன்,
மைதான நிதியத்தின் செயலாளர் ஸ்ரீதரன் கல்லூரியின் ஜனாதிபதி சாரணர்களான வி.சஜீவ்நாத், ஜெ.பிரதீபன், வ.பிரதீபன், யோ.சதுர்சிகன் ஆகியோருடன் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் சாரணர்களும் கலந்து கொண்டனர்.