நாங்கள் இறப்பில் ஒன்று சேர்வோம் : ரயில்முன் காதலன் பாய்வதை பார்த்து வேகமாக குதித்த காதலி!!

ரயில்முன் பாய்ந்து தற்கொலை

ஜார்கண்ட் மாநிலத்தில் இளம்காதல் ஜோடி ஓடும் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் சுப்பெல்லா ரயில்வே நிலையம் அருகே, இளம்காதல் ஜோடி அதிவேகமாக வந்த ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொள்ளும் போது, விக்ரம் யாதவ் (22) என்கிற இளைஞர் 17 வயது மட்டுமே ஆகியிருந்த சிறுமியை காதலித்து வந்துள்ளார்.

திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்ட காதல் ஜோடி, தங்களுடைய வீட்டில் கூறி அனுமதி கேட்டுள்ளனர். இதில் சிறுமி இன்னும் திருமண வயதை அடையாததால், சில நாட்கள் கழித்து திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என வீட்டில் கூறியுள்ளனர்.

ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத விக்ரம், பொய் கூறி பிரிக்க பார்ப்பதாக நினைத்து காதலியுடன் தற்கொலை செய்துள்ளார். இறப்பதற்கு முன்பாக உறவினர் ஒருவருக்கு வீடியோ கால் செய்த காதல் ஜோடி, நாங்கள் இருவரும் தற்போது ரயில்நிலையம் முன்பு நிற்கிறோம். எங்களால் சேர்ந்து வாழ முடியவில்லை என்றால் ஒன்றாக இறக்க முடியும் என கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த உறவினர், 18 வயது பூர்த்தியடைந்ததும் நிச்சயம் திருமணம் செய்து வைப்பார்கள் என விவரித்துள்ளார்.

இதனை அந்த சிறுமி ஏற்றுக்கொண்டார். ஆனால் விக்ரம் உடனடியாக ரயில்முன் பாய்ந்தான். அதனை பார்த்த அந்த சிறுமியும் சற்றும் யோசிக்காமல் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார் என அந்த உறவினர் கூறியுள்ளார். தற்போது இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் பொலிசாரால் மூவர் அதிரடியாக கைது!!

மூவர் அதிரடியாக கைது

வவுனியாவில் நேற்று முன்தினம் இரவு பல்வேறுசம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று
பேர் கைதுசெய்யபட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய போதை தடுப்புபிரிவினர் தெரிவித்தனர்.

அதனடிப்படையில் வெளிநாட்டு சிகெரட்களைஉடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றசாட்டில் ஒருவரும், கஞ்சா, போதைப் பொருட்களை மில்லிகிராம் அளவில் வைத்திருந்தனர் என்ற குற்றசாட்டில் இருவருமாக மூன்று பேர் கைதுசெய்யபட்டுள்ளனர்.

கைதுசெய்யபட்டவர்கள் நீதி மன்றில் ஆஜர்படுத்தபட்டுள்ளதுடன் விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியா பம்பைமடு குப்பை பிரச்சினையை தீர்க்க அமைச்சரவைக்கு கூட்டு அமைச்சரவை பத்திரம் : அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு!!

வவுனியா பம்பைமடு குப்பை மேட்டு பிரச்சினைக்கு மாற்று தீர்வை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைச்சர் வஜிர அபேவர்தனவுடன் இணைந்து கூட்டு அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்யவுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (31.01) அரச அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

வவுனியா குப்பை மேடு பிரச்சினை நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இழுபறி நிலையில் இருந்து வருகின்றது.

கடந்த வாரம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்திய போது, அரச உயர் அதிகாரிகளால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய தற்காலிகமாக அவை நிறுத்தப்பட்டன.

அரச அதிபர் ,மேலதிக அரச அதிபர் , நகர சபை, பிரதேச சபை தலைவர்கள், அதிகாரிகள் இணைந்து வேறு மாற்றிடங்களை குப்பை கொட்டுவதற்காக அடையாளப்படுத்தி இருக்கின்றனர்.

நாளை அதிகாரிகளால் அடையாளப்படுத்தப்பட்ட மூன்று இடங்களில் சாத்தியமான, மிகவும் பொருத்தமான ஓரிடத்தை அவர்கள் தெரிவு செய்வர்.

அதன் பின்னர் ஒரு வார காலத்துக்குள் அதற்கான திட்ட வரைபு, நிதிசெலவீனங்களின் அறிக்கை ஆகியவற்றை எனது அமைச்சுக்கு அனுப்பி வைப்பர்.

உரிய ஆவணங்கள் கிடைத்த பின்னர் நானும் அமைச்சர் வஜிர அபேவர்தனவும் இணைந்து அமைச்சரவைக்கு கூட்டு அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்வோம்.

மேற்கொண்டு இதற்கான நிதிகளை பெற்ற பின்னர் விஞ்ஞான தொழில் நுட்ப முறைகளை பயன்படுத்தி இந்த பிரச்சினைக்கு சுமூகமான தீர்வை காண முடியும்.

இதேவேளை, எமது இந்த முயற்சிக்கு வன இலாக்கா மற்றும் ஏனைய அதிகாரிகளின் ஒத்துழைப்பை கோருகின்றோம் என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை ஆரம்பம்!!

இலங்கையிலுள்ள தேசிய கல்வியற் கல்லூரியில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் விண்ணப்பங்கள் கடந்த 25.01.2019 அன்று அரச வர்த்தக மானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இம் முறை 2016 மற்றும் 2017ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரம் தோற்றிய மாணவர்களும் விண்ணப்பிக்க முடியும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை அனுப்புவதுடன் இம் முறை இணைய வழிமுறை மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள விரும்புவோர்கள் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரிக்கு 03.02.2019 காலை 9 மணிமுதல் முற்பகல் 11 மணிவரை நேரில் சமூகமளித்து மேலதிக ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்று வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி க.சுவர்ணராஜா தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவை வாட்டியெடுக்கும் கடும் குளிர் : உயிராபத்துக்கள் ஏற்படும் என எச்சரிக்கை!!

வாட்டியெடுக்கும் கடும் குளிர்

பிரித்தானியாவின் பல பகுதிகள் கடுமையான குளிரான காலநிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை சேவை எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானியாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து 10 மணித்தியாலங்களுக்கு கடும் பனி பொழிவு ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் மூன்று நாட்களாக நிலவும் பனியினால் பிரித்தானியாவுக்கு ஆபத்துக்கள் உள்ள நிலையில் மொத்தமாக 7 மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இன்றையதினம் 0 செல்சியஸ் வெப்பநிலை நிலவி வருவதாக வளிமண்டலவியல் சேவை நிலையம் குறிப்பிட்டுள்ளது.

கடுமையான பனிப்பொழிவின் காரணமாக உயிராபத்துகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேல்ஸின் சில பகுதிகளில் 6 அங்குலம் வரையான பனியும் தெற்கு பிரித்தானியாவில் 3 முதல் 7 அங்குலம் வரை உயரமான பனியும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக போக்குவரத்துத்தடை, மின்சாரத்தடை மற்றும் ஏற்படக்கூடும் எனவும் தொலைத்தொடர்பு சேவைகளில் இடையூறுகள் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் முகநூல் பயன்படுத்துவதனை தடை செய்ய வேண்டும் : வெடிக்கும் புதிய சர்ச்சை!!

இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் முகநூல் பயன்படுத்துவதனை தடை செய்ய வேண்டுமென இலங்கை அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கட் வர்ணணையாளருமான ரசல் ஆர்னல்ட் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் ஆர்னல்ட் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் திசர பெரேரா, இந்நாள் தலைவர் லசித் மாலிங்க மற்றும் அவரது மனைவிக்கு எதிராக அண்மையில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த முறைப்பாடு சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இலங்கை அணியின் வீரர்கள் சமூக ஊடக வலையமைப்புக்களை பயன்படுத்துவதனை தடை செய்ய வேண்டுமென ஆர்னல்ட் கோரியுள்ளார்.

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி!!

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி இன்று (31.01) கல்லூரியின் அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் நடைபெற்றது.

வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கலந்துகொண்டிருந்தார்.

விருந்தினர்கள் மாலை அணிவித்து பாண்ட் வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து தேசியக்கொடியை முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி எம்.பி.நடராஜா ஏற்றிவைக்க அதனைத் தொடர்ந்து பாடசாலை மற்றும் இல்லக் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டது.

ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டதை தொடர்ந்து வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் பணிப்பாளர் முத்து ராதாகிருஸ்ணன் சம்பிரதாயபூர்வமாக விளையாட்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை அதிதிகள் பார்வையிட்டனர். விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் விருந்தினர்களாக வவுனியா நகரபிதா இ.கௌதமன், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் கே.யூட் பரதமாறன், குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ கந்தசாமி குருக்கள், குடியிருப்பு தூய ஆவியானவர் ஆலயத்தின் பிரதம போதகர் பி.தயாளன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா முஸ்லீம் மகாவித்தியாலயத்தில் மூன்று மாடி கட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!!

 

கைத்தொழில், வாணிப மற்றும் இடம்பெயர்ந்தோர்க்கான மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதீயூதினால் வவுனியா முஸ்லீம் மகாவித்தியாலய மூன்று மாடி கட்டத்திற்கான அடிக்கல் இன்று (31.01) நாட்டப்பட்டது.

வவுனியா முஸ்லீம் மகாவித்தியாலய அதிபர் ரம்சீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் மு.இராதாகிருஸ்னன், நகரசபை உறுப்பினர்களான லரிப், பாரி மற்றும் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அருகில் உள்ள பாடசாலை நல்ல பாடசாலை என்ற திட்டத்தின் கீழ் மூன்று கோடி ரூபா செலவில் இம் மூன்று மாடிக்கட்டம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

24 வயது இளம் பாடகி மரணம் : சோகத்தில் ரசிகர்கள்!!

 

இளம் பாடகி மரணம்

ஷிவானி பாட்டியா என்ற இளம் பாடகி கார் விபத்தில் உயிரிழந்துள்ளது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் தனது கணவருடன் டெல்லியிலிருந்து ஆக்ராவுக்கு கச்சேரி ஒன்றிற்காக காரில் பயணித்துள்ளார்.

யமுனா எக்ஸ்பிரஸ் சாலை வழியாக ஆக்ராவுக்கு தனது கணவருடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற காரை முந்திச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது கார் சாலையின் தடுப்புச் சுவர்மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் ஷிவானி மற்றும் அவரது கணவர் நிகில் இருவரும் பலத்த காயமடைந்துள்ளனர்.

அருகிலிருந்த மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது சிகிச்சை பலனின்றி ஷிவானி உயிரிழந்தார். 24 வயதான பாடகி, இளம் வயதிலேயே உயிரிழந்துள்ளது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பத்தாயிரம் இலங்கையர்களுக்கு ஐரோப்பாவில் வேலைவாய்ப்பு : அரசாங்கம் அதிரடி அறிவிப்பு!!

 

ஐரோப்பாவில் வேலைவாய்ப்பு

இலங்கையிலுள்ள இளைஞர், யுவதிகளை வேலைவாய்ப்புக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளை வெளிநாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அண்மையக் காலத்தில் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு செல்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் இளைஞர், யுவதிகளுக்கு பயிற்சி வழங்கி ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்வோருக்கான குறைந்தபட்ச வேதன அளவு ஒன்றை நிர்ணயிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை தொழிலுக்காக வெளிநாடு செல்ல தயாராகவுள்ளவர்களில் குறிப்பிடத்தக்க பணியாளர்களை மத்தல விமான நிலையம் ஊடாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற பிரதேசங்களை சேர்ந்த ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் வெளிநாடு செல்ல தயாராக உள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட பணியாளர்களை மத்தல விமான நிலையம் ஊடாக வெளிநாடு அனுப்பும் வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொண்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஐரோப்பா மோகம் காட்டி பல ஆண்களை ஏமாற்றிய பெண் : 8 திருமணம் செய்தமை அம்பலம்!!

8 திருமணம் செய்த பெண்

ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு அழைத்து செல்வதாக பல ஆண்களை ஏமாற்றிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலியான ஆவணங்களை பயன்படுத்தி பல இளைஞர்களை திருமணம் செய்து நிதி மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை கடுனேரிய பிரதேசத்தில் அமைந்துள்ள விடுதியொன்றில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கொடுவ மாவதகம பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான பெண்ணின் கணவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளார். குறித்த பெண்ணால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் இளைஞர்கள் சிலர் மேற்கொண்டிருந்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

சந்தேகநபரான பெண் இளைஞர்களிடம் இருந்து 17 இலட்சம் ரூபா வரையில் மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விசாரணையில் சந்தேகநபரான பெண்ணுடன் இணைந்து மோசடியில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவர் உள்ளிட்ட நான்கு பேர் கடந்த 19ம் திகதி கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர் வௌிநாடு செல்ல தயாராவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் படி இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலியான பெயரில் தன்னை அடையாளப்படுத்தியிருந்த குறித்த பெண் அந்த பெயரில் போலியான அடையாள அட்டை , பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை தயாரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் , இத்தாலி செல்வதற்காக போலியான விசாவையும் சந்தேகநபரான பெண் தயாரித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை : பின்னணி காரணம் என்ன?

 

நடிகர் தூக்கிட்டு தற்கொலை

மும்பையில் இளம் நடிகர் மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஓஷிவாராவை சேர்ந்தவர் ராகுல் திக்சித். தொலைக்காட்சி நடிகரான இவருக்கு அண்மைகாலமாக சரியான வாய்ப்புகள் வரவில்லை.

இந்நிலையில், நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், நடிக்க வாய்ப்பு இல்லாமல் மனஉளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

வெளிநாட்டில் கணவன் :  விஷ ஊசி போட்டு குழந்தையை கொன்ற தாய்!!

குழந்தையை கொன்ற தாய்

கணவர் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் வேறு நபருடன் ஏற்பட்ட தகாத உறவு காரணமாக பெற்ற குழந்தையை கொலை செய்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த வெள்ளநாயக்கனேரியைச் சேர்ந்த சரவணன் – சந்தியா தம்பதியின் மூன்று வயது மகன் விரோசன் வீட்டில் உயிரிழந்து கிடந்தான்.

செவிலியராகப் பணிபுரியும் சந்தியா ஊசி போட்ட பின்னரே விரோசன் உயிரிழந்ததாக பொதுமக்கள் கூறவே, சந்தியாவையும் அவரது தாயையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று திம்மாம்பேட்டை பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையில் காதல் திருமணம் செய்து கொண்ட சந்தியாவின் கணவர் சரவணன் தற்போது வெளிநாட்டில் இருக்கும் நிலையில், சக்கரகுப்பத்தைச் சேர்ந்த பிதாமகன் என்பவருடன் சந்தியாவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குழந்தைக்கு சந்தியா விஷ ஊசி போட்டதாக கூறப்படுகிறது.

கொழும்பில் இருந்து சென்ற வான் விபத்து!!

வான் விபத்து

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற வான் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிரேயிருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை சந்திவெளி ஏற்றத்தில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வானில் பயணம் செய்தவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகிய போதும், உயிராபத்து எதுவும் இடம்பெறவில்லை என தெரியவருகிறது. விபத்திற்கு இலக்கான வான் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விபத்தினால் மின்சார கம்பிகள் அறுந்து சேதமடைந்துள்ளதால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பேருந்தில் இளம்பெண்ணிடம் கீழ்த்தரமான நடந்து கொண்ட நபர்!!

பேருந்தில் கீழ்த்தரமான நடந்து கொண்ட நபர்

பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் பெரும்பாலான பெண்கள் ஆண்களின் தொல்லைக்கு முகங்கொடுத்தே வீடு திரும்புகின்றனர். அந்த வகையில் தனியார் பேருந்தில் பயணித்த ஒரு ஆணின் கேவலமான நடத்தைக் குறித்து யுவதி ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். குறித்த யுவதி தெரிவித்ததாவது,

பேருந்தில் பயணிக்கும் போது ஆண்கள் பெண்களை உரசிக்கொண்டு செல்வதுண்டு. இடப்பற்றாக்குறை என நினைத்து பெண்ணும் அமைதியாய் நின்றுக்கொண்டிருப்பாள். ஆனால், அந்த ஆணுக்கு இடப்பற்றாக்குறை பிரச்சினையல்ல. பெண்கள் மீது ஏற்படும் காம இச்சையே அவரை அப்படி செய்யதூண்டுகிறது. அது மாத்திரமின்றி பேருந்தில் அமர்ந்துக்கொண்டிருக்கும் போது நித்திரை கொள்வதைப் போன்று பெண்கள் மீது சாய முற்படுவார்கள். அதுவும் ஆண்களின் போலி நடவடிக்கைகளில் ஒன்றே ஆகும்.

அவர்கள் உண்மையில் நித்திரை கொள்வதில்லை. நித்திரை கொள்வது போன்று பெண்களின் அந்தரங்க உறுப்புக்களை தொடுவதே அவர்களின் நோக்கமாகும். சில ஆண்கள் இரக்கப்பட்டு தங்கள் அருகில் அமருமாறு கூறுவார்கள். அவர்களுக்கும் அதே காம இச்சையை நிறைவேற்றும் நோக்கம் என்பதனை பெண்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

இது போன்ற சம்பவம் எனது (மல்கி ஓபாத்த) வாழ்க்கையிலும் இடம்பெற்றது. நான் வெள்ளவத்தையிலிருந்து கொழும்பிற்கு தொழிலுக்கு செல்லும் யுவதியாவேன். இதற்கு முன்னர் நான் வத்தளையிலிருந்து கொழும்பிற்கு தொழிலுக்கு சென்றேன்.

அவ்வாறு ஒரு நாள் நான் பேருந்தில் ஏறிய பின்னர் யன்னல் ஓரமாக அமர்ந்திருந்தேன். அந்த தருணம் எனக்கு அருகில் ஒருவர் அமர்ந்திருந்தார். சிறிது நேரம் சென்றதும் அவர் தன்னுடைய உடையை அகற்றி விட்டு அரைநிர்வாணமாக காணப்பட்டார். நான் அதிகம் கோபப்பட்டேன். என்னால் சத்தமிடவும் முடியவில்லை காரணம் தன்னால் தொடர்ந்து பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது.

நான் அமைதியாக வீடு திரும்பினேன். எனது அம்மாவிடம் தெரிவித்தேன். எனது நண்பிகளிடமும் தெரிவித்தேன்.. அவர்களும் அதிகமாக கோபப்பட்டனர். அவர்கள் இந்த சம்பவத்தினை ஊடகங்களுக்கு வெளிக்கொணருமான கேட்டுக்கொண்டனர். இதற்கமையவே நான் இதனை முதலில் என்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி பின்னர் ஊடகங்களுக்கு அறிவித்தேன்.

எனினும், தற்பொழுது நான் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எந்த ஒரு ஆணுக்கும் அச்சம் கொள்வதில்லை. பெண்களிடம் முறையற்ற விதத்தில் பழக முயற்சிப்பவர்களை அந்த இடத்திலேயே தண்டித்து தண்டனையும் வழங்கி காணொளியாகவும் அவர்களை அடையாளம் காண்பித்து வருகின்றேன்.

இதேவேளை , இதுபோன்று பேருந்துகள் அல்லது வேறு இடங்களில் பெண்களிடம் முறையற்ற விதத்தில் நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் 119 அல்லது 1938 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்துக்கு அழைத்து அறிவிக்குமாறு அவர் பொதுமக்களிடம் குறித்த யுவதி கோரியுள்ளார்.

பாசிக்குடாவில் மயிரிழையில் உயிர் தப்பிய பல வெளிநாட்டவர்கள்!!

வாழைச்சேனை – பாசிக்குடாவில் உள்ள பிரபல விருந்தினர் விடுதி மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சிசிரிவியில் பதிவாகிய காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்ட குறித்த சந்தேகநபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 11.45 மணியளவில் இனந்தெரியாத நபரினால் குறித்த பிரபல விருந்தினர் விடுதி மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் தெய்வாதீனமாக 08 வெளிநாட்டவர்கள் உட்பட 12 பேர் மயிரிழையில் தப்பியிருந்தனர்.

இந்த விடயம் சம்பந்தமாக கல்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் துரித விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் குறித்த விடுதி மற்றும் அயலிலுள்ள விடுதிகளின் சிசிரிவி காணொளிகள் பரிசீலிக்கப்பட்டதில் தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அவர் 14 நாட்கள் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இப்பகுதியில் அதிகளவான தமிழர்கள் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.