வவுனியாவில் சட்டவிரோத செயற்பாடுகள் காரணமாக 545 வழக்குகள் தாக்கல்!!

545 வழக்குகள் தாக்கல்

வவுனியா மாவட்டத்தில் சட்டவிரோதமான கள்ளு மற்றும் சாராய விற்பனை, கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனைகளில் ஈடுபட்டவர்கள், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனைகளில் ஈடுபட்டவர்கள் மீது கடந்த வருடத்தில் மாத்திரம் 545 வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட மதுவரித் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி அசோகதிலகரட்ண தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தின் மதுவரித்திணைக்களத்தால் கடந்தவருடம் மேற்கொள்ளபட்ட நடவடிக்கைகள் தொடர்பாக கேட்டபோதே மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

அந்தவகையில் வரிசெலுத்தாமல் பீடிகள் விற்பனை செய்யபட்டமைக்காக 3 வழக்குகளும், சட்டவிரோதமாக கள்ளுவிற்பனை செய்தமைக்காக 270 வழக்குகளும், அனுமதிப்பத்திரம் இன்றி கள்ளை வைத்திருந்தமைக்காக 15 வழக்குகளும், அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்தமைக்காக 35 வழக்குகளும். கஞ்சா வைத்திருந்தமைக்காக 5 வழக்குகளும்,

சட்டவிரோத வடிசாரயத்தை உடமையில் வைத்திருந்தமைக்காக 3 வழக்குகளும், அனுமதியின்றி வெளிநாட்டு மதுபானங்கள் வைத்திருந்தமைக்காக மூன்று வழக்குகளும், அனுமதியின்றி பீடியினை உற்பத்தி செய்தமைக்காக 6 வழக்குகளும், 21 வயதிற்கு கீழ்பட்டவர்களிற்கு புகைத்தல் பொருட்களை விற்பனை செய்தமைக்காக154 வழக்குகளும், பொது இடத்தில் புகைத்தமைக்காக 54 வழக்குகளும் தாக்கல்செய்யப்ட்டது.

குறித்த குற்றச்சாட்டுளுடன் தொடர்புடையவர்களிற்கு எதிராக வவுனியா நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யபட்டதுடன் அவர்களிற்கான தண்டபணமாக அண்ணளவாக 56 இலட்சம் ரூபாய் அறவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் புலமைப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற இரண்டு மாணவிகளுக்கு இராணுவத்தினரால் வீடுகள் நிர்மாணிப்பு!!

 

வவுனியாவில் புலைமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளை பெற்ற இரண்டு மாணவிகளுக்கு இராணுவத்தால் வீடுகள் நிர்மாணித்து வழங்கப்படவுள்ளது.

வவுனியா சிவபுரம் வித்தியாலயத்தை சேர்ந்த மாணவி ஹரிதிக் ஹன்சுஜா மற்றும் நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தை சேர்ந்த ஆர்.நிவர்சனா ஆகியோர் வன்னி மாவட்டத்தில் அதிக புள்ளிகளை புலமைப்பரிசில் பரீட்சையில் பெற்றமையால் அவர்களுக்காக 17 ஜனவரி 2019 அன்று இராணுவத்தினரால் அடிக்கல் நாட்டப்பட்டு வீட்டிற்கான கட்டிட வேலைகள் நடைபெற்று வருகிறன்து.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் குமுது பெரேராவின் வழிகாட்டலுக்கு அமைவாக ஐக்கிய நாடுகள் அமையத்தில் பணியாற்றும் சந்தனா அலஹாகூனின் நிதி உதவியுடன் இரண்டு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் 21வது படைப் பிரிவின் பிரிகேடியர் குமார் ஜெயபத்ரன கலந்துகொண்டதுடன் இரண்டு மாணவிகளும் கல்வியை தொடர்வதற்காக நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

நெருப்பில்லாமல் 3 அரை நிமிடத்தில் 300 வகையான உணவுகள் சமைத்து உலக சாதனை!!

உணவுகள் சமைத்து உலக சாதனை

ஜியோ இந்தியா பவுண்டேஷன் சார்பில் சென்னையில் இயற்கை உணவு தயாரிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஷெஃப் படையல் சிவக்குமார் முயற்சியில் சென்னையில் 300 வகையான இயற்கை உணவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

கத்திரிக்காய் மில்க் ஷேக், தூயமல்லி வெண்பொங்கல், பலாப்பழ பொங்கல், பீட்ரூட் ஊறுகாய், எலுமிச்சை தோல் அல்வா, செவ்வாழை பாயாசம், வெற்றிலை ரசம், சிறுதானிய அவல் கட்லட், இளநீர் ஜாம், வாழைப்பூ பசும்பொறியல் என 300 வகையான இயற்கை உணவுகள் தயாரிக்கப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டது.

மூன்றரை நிமிடத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனையை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இதில், கல்லூரி மாணவ, மாணவிகள், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்குபெற்றனர்.

50 கிலோ அளவுக்கு வீங்கிய கால்கள் : தடைப்பட்ட மகளின் திருமணம் : போராடும் குடும்பம்!!

50 கிலோ அளவுக்கு வீங்கிய கால்கள்

பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தை சேர்ந்த நபர் ஒருவரின் கால்கள் 50 கிலோ அளவுக்கு வீங்கியுள்ளதால் அவரால் நடக்க முடியாமல் போயுள்ளது. சிந்த் மாகாணத்தின் நவ்ஷஹிரோ ஃபெரோஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷாகித் ஹுசைன். 38 வயதான இவரது கால்கள் தற்போது 50 கிலோ அளவுக்கு வீங்கியுள்ளது.

5 பிள்ளைகளின் தந்தையான ஹுசைன் தற்போது கிராம மக்களின் நிதி உதவியுடன் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். சுயமாகவே நடக்க முடியாது என்பதால் நாளின் பெரும்பாலான நேரம் படுக்கையிலேயே உள்ளார். இதனால் ஒருகட்டத்தில் படுத்த படுக்கையாகிவிடுமோ என அஞ்சுவதாகவும் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

5 ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென்று வீக்கம் கண்டதாக கூறும் ஹுசைன், அது நாளடைவில் குணமாகும் என கருதியுள்ளார். ஆனால் அது நாளடைவில் வீக்கம் அதிகமாகவே, தற்போது எழுந்து நடக்கவே முடியாத சூழல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதற்கான சிகிச்சைக்காக இதுவரை சேமித்த பணம் மொத்தமும் செலவிட்டதாக கூறும் ஹுசைன், தற்போது குடும்பத்தாரின் உதவியுடனே வாழ்க்கையை நடத்துவதாக தெரிவித்துள்ளார். தமக்கு ஏற்பட்ட இந்த நோய் காரணமாக மகள்களின் திருமணம் தடைபட்டுள்ளதாகவும், சேமித்த பணம் மொத்தமும் சிகிச்சைக்காக செலவானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கராச்சியில் உள்ள பல மருத்துவர்களை இதுவரை சந்தித்துள்ள ஹுசைன், அவர்கள் அனைவரும் ஒரே குரலாக குணப்படுத்தும் கட்டத்தை தாண்டியதாகவே கூறியுள்ளதாக வருத்தமுடன் தெரிவித்துள்ளார் ஹுசைனின் மனைவி ஃபாத்திமா.

அப்பா திரும்ப உயிரோடு வாங்க : கதறும் மகள் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

நெஞ்சை உருக்கும் சம்பவம்

தமிழகத்தில் பெண்ணை வழிமறித்து தொல்லை கொடுத்த வாலிபரை தட்டிக்கேட்ட அந்தப் பெண்ணின் தந்தையை வாலிபர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ரத்தினக்கோட்டையைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (52). இவரது மகள் சரண்யா (19) ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். வேலைக்குச் சென்று விட்டு வீட்டுக்கு வந்த சரண்யாவை, அதே ஊரைச் சேர்ந்த செல்வம் (25) என்பவர் வழிமறித்துப் பேசியுள்ளார். திருமணம் செய்துகொள்ளும் படி டார்ச்சர் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த மகாலிங்கம், என் மகளை வழிமறித்து ஏன் டார்ச்சர் கொடுக்கிறாய் என்று கண்டிப்புடன் தட்டிக்கேட்டுள்ளார். இதுகுறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த செல்வம் மகாலிங்கத்தின் நெஞ்சுப்பகுதியில் ஓங்கிக் குத்தினார். இதனால், நிலைகுலைந்த மகாலிங்கம் கீழே விழுந்தார். பேச்சு மூச்சின்றிக் கிடந்ததால், பயந்துபோன செல்வம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அந்தப் பகுதி வழியாக வந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால், கடுமையாக வேதனை அடைந்த சரண்யா தந்தையின் அருகில் அமர்ந்து, தந்தை மீண்டும் உயிர்பிழைக்க வேண்டும் என்று கதறியதைப் பார்த்த அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவைத்தது. சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை தேடி வருகின்றனர்.

பருவ வயதை அடையாத சிறுமியுடன் காதல் : 21 நாட்கள் காட்டுக்குள் பழங்களை சாப்பிட்டு வாழ்ந்த ஜோடி!!

பருவ வயதை அடையாத சிறுமியுடன் காதல்

 

கேரளாவில் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி 21 நாட்கள் காட்டுக்குள் தங்கியிருந்து பழங்களை மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழ்ந்துள்ளனர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஜார்ஜ் என்பவர் 18 வயது நிராம்பாத சிறுமியை காதலித்துள்ளார். தனது காதலை சிறுமியிடம் தெரிவித்ததையடுத்து அவரும் ஒப்புக்கொள்ளவே இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், பொலிசார் தீவிரமாக விசாரணை நடத்தி, பெண்ணின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, அவர் தொடுபுழா அருகே உள்ள மலைப்பகுதியில் இருப்பது தெரிந்தது.

இருவரும் 3 வாரமாக காட்டில் தனியாக தங்கி, பழங்களை மட்டும் சாப்பிட்டு வாழ்ந்துள்ளனர். இதனால், அவர்கள் மிகவும் சோர்வாக இருந்தனர். பொலிசார் அவர்களை அழைத்து வந்தனர்.

ஆனால், பெண்ணின் பெற்றோர் அவரை ஏற்க மறுத்துவிட்டனர். தொடர்ந்து, பொலிசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஜார்ஜை 14 நாள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இளம்பெண் கோட்டயத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

திருமணத்தின் போது முக்கிய சடங்கு செய்ய மறுத்த மணப்பெண் : குவியும் பாராட்டுக்கள்!!

சடங்கு செய்ய மறுத்த மணப்பெண்

மேற்கு வங்க மாநிலத்தில் முக்கிமான திருமண சடங்கிற்கு மறுப்பு தெரிவித்த மணப்பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தில் திருமணத்தின் போது “Kanakanjali” என்கிற சடங்கானது பின்பற்றபடுகிறது. இந்த சடங்கு நிறைவேறாமல் எந்த திருமணமும் நடந்து முடியாது. அங்கு இந்த சடங்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

திருமணம் முடிந்த கையோடு, மணப்பெண்ணின் கைகளில் அரிசியை கொடுத்து பின்புறமாக தூவ சொல்வார்கள். அப்படி தூவிவிட்டால், அவளுக்கும், பெற்றோர் வீட்டிற்கும் இருந்த தொடர்பு முறிந்துவிட்டது. அதன்பிறகு அவளுடைய வாழ்க்கை கணவனுடன் துவங்க உள்ளது என்பதே அதன் அர்த்தமாகும்.

இந்த சடங்கிற்கு தான் மணப்பெண் ஒருவர் மறுப்பு தெரிவித்துள்ளார். கோடி புண்ணியம் செய்தலும் பெற்றார் வளர்த்த கடனை ஈடு செய்ய முடியாது என கூறியுள்ளார்.

மேலும், அந்த சடங்கிற்கு பதிலாக, நான் அடிக்கடி என்னுடைய பெற்றோரின் வீட்டிற்கு வந்து சந்திப்பேன் என சபதம் எடுத்துள்ளார். அந்த பெண்ணிற்கு தற்போது சமுகவலைத்தளங்களில் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

காதல் திருமணம் செய்து தலைமறைவான தம்பி : அடுத்து நடந்த அதிர்ச்சி!!

காதல் திருமணம்

தம்பி காதல் திருமணம் செய்ததால் பெற்றோரை பொலிசார் கடத்தி சென்றுவிட்டதாக பேராசிரியை ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்தவர் ஆல்பர்ட்தாஸ். இவர் மனைவி அன்புலதா.

இவர்களின் மகன் அப்சல் ஜெனிஷ் (22). சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்த நிலையில் உடன் படித்த சுரேகா என்பவரை காதலித்துள்ளார். இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் வீட்டை விட்டு ஓடிய ஜோடி கடந்த 25ஆம் திகதி பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் சுரேகாவைக் காணவில்லை என அவரின் அப்பா மனோகரன் பொலிசில் புகாரளித்த நிலையில் ஜெனிஷ் பெற்றோர் ஆல்பர்ட்தாஸ் மற்றும் அன்புலதாவை பொலிசார் விசாரணைக்காக நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

இதனிடையில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற அப்பா, அம்மா எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை எனவும் அவர்களை சட்ட விரோதமாக பொலிசார் கடத்தி சென்று காவலில் வைத்திருப்பதாகவும் மாநில மனித உரிமை ஆணையம், சென்னை போலீஸ் கமிஷனரிடம் அவர்களின் மகளும், பேரசிரியையுமான ஜெனிபா கண்ணீர் புகார் மனு அளித்துள்ளார்.

ஜெனிபா கூறுகையில், அம்மாவும் அப்பாவும் இப்போது எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. என்னுடைய அம்மாவின் செல்போனில் பேசிய எஸ்.ஐ. விசாரித்துக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார். எதற்காக அவர்களிடம் விசாரிக்க வேண்டும்? பொலிசுக்கு பயந்து என்னுடைய தம்பியும், அவரின் மனைவியும் தலைமறைவாக உள்ளனர் என கூறினார்.

இதற்கிடையில் அன்புலதா, உறவினர் ஒருவரிடம் போனில் பேசியுள்ளார். சென்னையில் உள்ள ஹோட்டலில் ஏசி அறையில் தங்கியிருக்கிறேன். புடவை, சாப்பாடு தந்தார்கள். ஆனால், வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை என்று கூறியுள்ளார். அதற்குள் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது என்று அந்த உறவினர் பதற்றத்துடன் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊமையின் பையில் ஒலித்த கையடக்க தொலைபேசி : கோபமடைந்த பயணிகள் செய்த வேலை!!

ஊமையின் பையில் ஒலித்த கையடக்க தொலைபேசி

கொழும்பு – சிலாபம் பேருந்தில் பயணி இளைஞன் ஒருவரினால் ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.யாசகம் கேட்ட இளைஞனின் தொலைபேசி ஒலித்தமையினால் அங்கிருந்த பயணிகளுக்கு கோபம் அடைந்து தாக்கியுள்ளனர்.

குறித்த இளைஞன் தனது கழுத்தில் விளம்பரம் ஒன்றை தொங்கவிட்ட நிலையில் பஸ்ஸில் ஏறியுள்ளார். அந்த விளம்பரத்தில் “நான் ஒரு ஊமை. அப்பா உயிரோடு இல்லை. அம்மா சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். தங்கை பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கின்றார். தங்கைக்கும் அம்மாவுக்கும் செலவு செய்வதற்கு எனக்கு உதவுங்கள்” என குறிப்பிடப்பட்டிருந்தது. பஸ்ஸில் பயணித்தவர்கள் 20, 50, 100 ரூபாய் என அவருக்கு பணம் கொடுத்து உதவியுள்ளனர்.

இந்நிலையில் திடீரென குறித்த இளைஞனின் கையடக்க தொலைபேசி ஒலித்தமையினால் பயணிகள் கோபமடைந்து அவரது கழுத்தை பிடித்துள்ளனர். அதன்போது அவரது கழுத்தில் இருந்து ஹேன்ட்ஸ் பீரி ஒன்றும் காணப்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த பயணிகள், குறித்த இளைஞனை தாக்கி அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். பேருந்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இளைஞன் தொலைபேசியில் பேசியவாறு சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் நையப்புடைக்கப்பட்ட நபர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் வைத்து வசமாக சிக்கினார்!!

யாழில் நையப்புடைக்கப்பட்ட நபர்

யாழ். நாவாந்துறையில் இளம் பெண்ணை கடத்த முயற்சித்த போது பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட நபர் பின்னர் வைத்தியசாலையிலிருந்து தப்பி சென்றதாக கூறப்பட்ட நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் வைத்து பிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடா்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த சில தினங்களுக்கு முன் நாவாந்துறை பகுதியில் இளம் பெண் ஒருவரை கடத்த முயற்சித்த போது பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட நபர் ஒருவரை பொலிஸார் காப்பாற்றியிருந்தனர்.

பின்னர் அந்த நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலையிலிருந்து தப்பி சென்றுவிட்டதாக பொலிஸார் கூறியிருந்தனர். இந்த நிலையில் இன்று காலை பொலிஸ் வட்டாரங்கள் வழங்கிய தகவலின் படி, யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்ற நபர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட நிலையில் பிடிக்கப்பட்டுள்ளார்.

அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட சந்தேகநபர் தற்போது 24ஆம் விடுதியில் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகிறது

வவுனியாவில் மருந்தாளர்கள் பணிப்புறகணிப்பு!!

 

நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள மருந்தாளர்கள் இன்றைய தினம் அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

அந்த வகையில் வவுனியா மாவட்ட பொது வைத்திய சாலையின் மருந்தாளர்களும் பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டனர்.

தற்போது அரசால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மருந்தக உதவியாளர் நியமனங்களை உடனடியாக நிறுத்த கோரி, மருந்தாளர்கள் பணி புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

பணிப்புறக்கணிப்பினால் வைத்திய பரிசோதனைக்காக வருகை தந்த நோயாளர்கள் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இலங்கையின் பேஸ்புக் பயனாளிகளுக்கு அவசர எச்சரிக்கை!!

அவசர எச்சரிக்கை

பேஸ்புக் ஊடாக இணைய பண பரிமாற்ற மோசடி இடம்பெற்று வருவதால், அது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதன் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்குள் குறித்த மோசடி தொடர்பில் 15 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இது போன்ற சம்பவங்கள் கடந்த காலங்களிலும் இடம்பெற்று வந்த நிலையில், தற்போது அதிகமாக இடம்பெற்று வருகின்றன.

மக்கள் மத்தியில் சரியான புரிந்துணர்வு இல்லாமையே இவ்வாறான மோசடி இடம்பெற காரணம் என தெரியவருகிறது. இது தொடர்பில் பொலிஸாரும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

யாழில் பலரின் உயிரை காப்பாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் காலமானார்!!

பொலிஸ் உத்தியோகத்தர் காலமானார்

யாழில் பலரின் உயிரை காப்பாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரான பருத்தித்துறையை சேர்ந்த பாலசிங்கம் கிருஷ்ணபிள்ளை, தனது 82ஆவது வயதில் காலமாகியுள்ளார். இறுதிக் கிரியைகள் எதிர்வரும் மூன்றாம் திகதி இடம்பெறவுள்ளது. கடந்த 1984ஆம் ஆண்டு சாவகச்சேரி பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸ் நிலையத்தில் இருந்த 20 சிங்கள பொலிஸாரை பத்திரமாக அங்கிருந்து வெளியேற்றி ஆனையிறவு இராணுவ முகாமில் பாதுகாப்பாக ஒப்படைத்திருந்தார்.

1937ஆம் ஆண்டு பிறந்த அவர் 1962ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்து, தனது 52ஆவது வயதில் சேவையில் இருந்து ஓய்வு பெற்று கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை வரலாற்றில் தமிழ் மாணவனின் சாதனை!!

தமிழ் மாணவனின் சாதனை

தாய்லாந்தில் நாளை முதல் நடைபெறவிருக்கும் சர்வதேச அறிவியல் புலமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொழிநுட்ப கண்காட்சியில் பங்கேற்க இலங்கையின் இளம் தமிழ் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார் இன்று பயணமாகின்றார்.

இலங்கை வரலாற்றில் தனியொருவரின் 3 கண்டுபிடிப்புகள் சர்வதேச கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவிருப்பது இதுவே முதல் தடவையாகும். இலங்கையின் இளம் தமிழ் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார் அம்பாறை – சம்மாந்துறை, கோரக்கர் கிராமத்தை சேர்ந்தவராவார்.

வரலாற்றில் முதல் தடவையாக தனி ஒருவரின் மூன்று கண்டுபிடிப்புக்கள் சர்வதேச அறிவியல் புலமை, கண்டுபிடிப்பு மற்றும் தொழிநுட்ப கண்காட்சிப் போட்டியில் பங்குபற்ற தகுதி பெற்றுள்ளது.இது இவரது இரண்டாவது பயணமாகும். கடந்த வருடமும் வினோஜ்குமார் தாய்லாந்து சென்று பதக்கம் வென்று வந்திருந்தார்.

நாளைய தினம் தொடக்கம் பெப்ரவரி ஆறாம் திகதி வரை தாய்லாந்தில் உள்ள பேங்கொக் சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மாநாட்டு மண்டபத்தில் பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்பாளர்கள் கலந்து கொள்ளும் சர்வதேச அறிவியல் புலமை, கண்டுபிடிப்பு மற்றும் தொழிநுட்ப கண்காட்சிப் போட்டி இடம்பெறவுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடத்தில் பொறியியல் தொழில்நுட்பத்தை பயின்று வரும் சோமசுந்தரம் வினோஜ்குமார் சென்ற வருடம் விஞ்ஞான, ஆராய்ச்சி மற்றும் தொழிநுட்ப அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழு நடத்திய தேசியமட்ட புத்தாக்கப் போட்டியில் ஏழு தேசிய பதக்கங்களைப் பெற்றிருந்தார்.

இவர்களுக்கான அனைத்து வசதிகளையும் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழு இலவசமாக தயார் செய்துள்ளது. அதுமட்டுமன்றி இவர்கள் அனைவரும் தாய்லாந்தின் தேசிய கண்டுபிடிப்பாளர் தினக் கொண்டாட்டங்களிகளிலும் பங்குபற்றவுள்ளனர்.

வினோஜ்குமாரின் இதுவரையான 86 கண்டுபிடிப்புக்களுக்காக 38 தேசிய விருதுகளையும், மூன்று சர்வதேச விருதுகளையும் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் சற்று முன்னர் நடந்த பயங்கர விபத்து!!

 

பயங்கர விபத்து

யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதுண்ட இளைஞன் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாவற்குழியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே படுகாயம் அடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ரயிலில் மோதுண்ட இளைஞனே விபத்தில் சிக்கியுள்ளார். ரயிலில் மோதுண்டவர் சற்றுத் தூரம் வரை வீசி ஏறியப்பட்டார் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் விபத்து நடந்துள்ளது. விபத்தில் சிக்கிய இளைஞன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் தூக்கி் வீசப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

வவுனியா தமிழ் மகாவித்தியாலய வரலாற்றில் முதல்முறையாக இடம்பெறவிருக்கும் நிகழ்வு!!

மகாவித்தியன்கள் தினம்

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கமானது இப் பாடசாலையில் கல்விகற்று வெளியேறிய அனைத்து பழைய மாணவர்களையும் மீண்டும் பாடசாலையில் அணிதிரட்டும் நோக்குடனான ஒன்றுகூடல் நிகழ்வொன்றினை ‘மகாவித்தியன்கள் தினம்’ எனும் பெயரில் 03.02.2019 அன்று பாடசாலையில் ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பில் குறித்த பாடசாலையின் பழையமாணவர் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்..

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கமானது இப் பாடசாலையில் கல்விகற்று வெளியேறிய அனைத்து பழைய மாணவர்களையும் மீண்டும் பாடசாலையில் அணிதிரட்டும் நோக்குடனான ஒன்றுகூடல் நிகழ்வொன்றினை ‘மகாவித்தியன்கள் தினம்’ எனும் பெயரில் 2019.02.03 ஆந் திகதி பாடசாலையில் ஏற்பாடு செய்துள்ளது.

இந் நிகழ்வானது 2019.02.03 ம் திகதி காலை 8 மணிக்கு பாடசாலையிலிருந்து ஆரம்பிக்கும் நடைபவனியுடன் ஆரம்பித்து நடைபவனியானது மீண்டும் பாடசாலையை வந்தடைந்தவுடன் பழைய மாணவர் அணிகளுக்கிடையேயான மென்பந்து கிரிக்கெட் போட்டிகள் உட்பட்ட சிநேகிதபூர்வ விளையாட்டு போட்டி நிகழ்வுகளும், பிள்ளைகளுக்கான விநோத விளையாட்டு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந் நிகழ்வுகள் அன்றையதினம் மாலை வரை பாடசாலையில் இடம்பெறும்.

இப் பாடசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக அனைத்து பழையமாணவர்களையும் ஒன்றுசேர்ந்து பாடசாலையின் வளர்ச்சிக்கு உரமூட்டும் இந்த இனிய ஆரம்ப நிகழ்வில் அனைத்து பழையமாணவர்களையும் தங்கள் குடும்பத்துடன் கலந்து சிறப்பிக்குமாறு தோழமையுடன் கேட்டுநிற்கின்றோம்.’

நிர்வாக சபை
பழைய மாணவர் சங்கம்
வ/வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்