உள்நாட்டு மதுபான போத்தல் ஒன்றின் விலை இன்று முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் சகல மதுபான போத்தல்களினதும் விலைகள் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஸ்டிலரிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உற்பத்தி செலவீனங்கள் அதிகரித்துள்ளமையே உள்நாட்டு மதுபான போத்தல்களின் விலை அதிகரிப்புக்கு காரணம் என அந்த நிறுவனம் குறிப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த விலை அதிகரிப்பு தொடர்பில் தற்போது முகாமைத்துவ மட்ட கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபான போத்தல் ஒன்றின் விலை இன்று முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் சகல மதுபான போத்தல்களினதும் விலைகள் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஸ்டிலரிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது இருக்கும் காமெடியன்கள் மிகவும் உச்சத்தில் இருப்பவர் யோகி பாபு. அவர் இல்லாத படங்களை இல்லை எனலாம்.விஜய்யுடன் சர்கார், அஜித் நடிப்பில் வந்த விஸ்வாசம் என படங்களில் நடித்தவர். நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா படத்தின் கல்யாண வயசு பாடல் இவரை ஓஹோவென ஆக்கிவிட்டது.
ஒரு முறை நாடகத்தில் நடித்து முடித்து விட்டு நள்ளிரவு வேளையில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது போலிஸார் இருவரை அவரை மடக்கி பிடித்து விசாரணனை செய்தார்களாம். அந்த நேரம் சென்னையில் சாலையில் நின்று கொண்டிருக்கும் பைக்குகள், கார்களை மர்ம ஆசாமி ஒருவர் எரித்த சம்பவம் பெரும் பரப்பானது. இதனால் யோகி பாபு தான் அந்த ஆசாமி என சந்தேகித்தார்களாம்.
யோகி பாபு சொன்னதை நம்பாத போலிஸார் அவரை கன்னத்தில் அறைந்தார். காது நரம்புகள் வலிக்கும் அளவிற்கு இந்த அடியின் வலி இருந்ததாம். நீண்ட நேரமாக ஸ்டேஷனில் வைத்து நம்பிக்கை வந்த பிறகு தான் விடுவித்தார்களாம்.
யாழ்ப்பாணத்தில் சிகிச்சை பலனின்றி ஆறு மாத கர்ப்பிணி தாதி ஒருவர் உயிரிழந்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தாதிக்க தவறான சிகிச்சை வழங்கப்பட்டதால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
யாழ். பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் தாதி உத்தியோகஸ்தராக பணி புரியும் குலதீபன் பிருந்தா (வயது – 32) எனும் 4 வயது பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த தாதி உத்தியோகஸ்தர் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் வாந்தி குணத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இதற்காக கையில் ஊசி மருந்தொன்றை ஏற்றி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் நேற்று காலை கடமைக்கு வந்த தாதி பிற்பகல் 1 மணியளவில் கடமை முடிந்து வீடு சென்றுள்ளார். அங்கு தனது 4 வயது பிள்ளையுடனும் கணவருடனும் சாதாரணமாகவே கதைத்து விட்டு குளியல் அறை சென்றுள்ளார். பின்னர் உணவருந்தியதன் பின்னர் உறங்கியதாக தெரியவருகின்றது.
இந்தநிலையில் அவர் உறக்கத்திலிருந்து எழுந்திருக்காத நிலையில் பிற்பகல் 2.15 மணியளவில் அவர் கணவரால் மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இறந்தவரின் சடலம் தற்போது மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மரண விசாரணை அதிகாரி பார்வையிட்டதன் பின்னர் சடலமானது யாழ். போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாக மந்திகை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த தாதியை கையில் ஊசியுடன் வீடு செல்ல எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது எனவும், தாதி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வீட்டில் வைத்து மருந்தை பயன்படுத்தியதால் மருந்தின் தாக்கத்தால் மரணத்தை தழுவிக் கொண்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தியாவில் போர் விமானம் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கிய விபத்தில், விமானி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் இந்திய விமானப்படை தளம் உள்ளது. இங்குள்ள விமான நிலையத்தில் இருந்து ஜாக்குவார் விமானம் பயிற்சிக்காக இன்று காலை புறப்பட்டது.
அப்போது குஷி நகரில் திடீரென அந்த விமானம் விபத்துக்குள்ளானது. தரையில் விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் தீப்பிடித்தது. அதில் இருந்த விமானி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
இந்த விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில், சம்பவம் நடந்த இடத்திற்கு விமானப்படை அதிகாரிகள் மற்றும் பொலிசார் விரைந்துள்ளனர்.
இந்நிலையில், ராணுவ நீதிமன்றம் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள ஒரு காலி இடத்தில் ஏராளமான மதுபாட்டில்கள் வீசப்படும் நிலையில்,அப்பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகள் குடித்துவிட்டு தள்ளாட்டம் போடுகின்றன.
வேலூர் அண்ணாசாலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தலைமை தபால் நிலையம், பாஸ்போர்ட் அலுவலகம், வருமான வரித்துறை அலுவலகம், பிஎஸ்என்எல் அலுவலகம் ஆகியன அருகருகே அமைந்துள்ளன.
அரசு அலுவலகங்களுக்கு மத்தியில் உள்ள காலி இடத்தை இரவு நேரத்தில் குடிமகன்கள் பாராக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் காலி மதுபாட்டில்களை அங்கேயே வீசி விடுகின்றனர். இதனால், அங்கு ஏராளமான மதுபாட்டில்கள் குவிந்து கிடக்கின்றன.
இந்த மதுபாட்டில்களில் இருக்கும் சிறிதளவு மதுவை அப்பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகள் குடித்துவிட்டு தள்ளாட்டம் போடுகின்றன. இதுபோன்று போதையில் சுற்றித்திரியும் குரங்குகள் அரசு அலுவலகங்களுக்கு நடந்து செல்லும் பொதுமக்களை விரட்டி கடித்த சம்பவங்களும் நடந்துள்ளன.
இதனால், பொதுமக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக முழுமையான முழங்கால் மீள் மாற்றீட்டு அறுவை சிகிச்சை (Total Knee replacement surgery) வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த அறுவை சிகிச்சை இன்றைய தினம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சினால் அண்மையில் கிளிநொச்சிக்கு நியமிக்கப்பட்ட முடநீங்க சத்திரசிகிச்சையியல் நிபுணர் (Consultant Orthopedic Surgeon) மருத்துவர் எஸ்.சசிகரன் தலைமையிலான சத்திரசிகிச்சை குழுவினர் மூத்த மயக்க மருந்தியல் மருத்துவர் பா.நாகேஸ்வரன் உட்பட மருத்துவர்கள், தாதியர்கள், தொழிநுட்ப உதவியாளர்கள் உள்ளிட்ட பத்து பேர் கொண்ட அணியினர் இணைந்து இந்த சாதனை சரித்திரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
மூட்டுவாதம் காரணமாக நடக்க முடியாது சிரமப்பட்டு வந்த மன்னார் – பள்ளிமுனையை சேர்ந்த 63 வயதான ஒருவருக்கே இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கிளிநொச்சி வைத்தியசாலையின் சேவைகளை விரிவாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வரும் பணிப்பாளர் காண்டீபன், மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சுகள், பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் ஆகியோரது ஒத்துழைப்பினை பெற்று இச்சாதனைக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.
இதன்போது வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.காண்டீபன், இவர்கள் அனைவருக்கும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை சார்பாக தனது நன்றிகளை தெரிவித்து கொண்டுள்ளார்.
கிளிநொச்சியில் இலவசமாக மேற்கொள்ளப்பட்ட இந்தச் சத்திரசிகிச்சையானது தனியார் வைத்தியசாலைகளில் 5 இலட்சம் ரூபா வரை செலுத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு பாரிய சத்திர சிகிச்சையாகும்.
எனவே பல வளப்பற்றாக்குறைகளுடன் தனியான எலும்பு முறிவு சிகிசைக்கான தனியான சத்திர சிகிச்சை கூடம் இல்லாது பொதுவான சத்திரசிகிச்சை கூடத்தில் வைத்தே இச் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் முழங்கால் மீள் மாற்றீட்டு அறுவை சிகிச்சைக்காக யாழ். போதான வைத்தியசாலைக்கே செல்ல வேண்டிய நிலை இருந்து வந்துள்ளது. மேலும் சத்திர சிகிசைக்கான வைத்திய உபகரணங்கள் கூட மன்னார் மாவட்ட வைத்தியசாலையிலிருந்து பெறப்பட்டுள்ளது. எனவே பல வளப் பற்றாக்குறைகளுடனும் மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையினால் முதற் தடவையாக வரலாற்றுச் சாதனையாக குறித்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய ரீதியில் சிறப்பான சுற்றுலா நகரமாக கொழும்பு பெயரிடப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டுக்கான தரப்படுத்தலில் சிறந்த சுற்றுலா நகரமாக அண்மையில் கொழும்பு தெரிவு செய்யப்பட்டது.
கொழும்பில் நிர்மாணிக்கப்படும் பாரிய வீட்டுத் தொகுதிகள், கடைகள், பாரிய கட்டடங்கள் காரணமாக கொழும்பின் அழகு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நிர்மாணிக்கப்பட்டு வரும் துறைமுக நகரம், கங்காராமைக்கு அருகில் உள்ள பேரே ஏரியிலுள்ள தீவு, எல்டயார் வீட்டுத்தொகுதி ஹில்டன் ரெசிடன்ஸ் வீட்டுத் தொகுதிக்கு பின்னால் கட்டப்பட்டுள்ள தாமரை கோபுரம் ஆகியவைகள் முக்கிய இடங்களாக தெரிவிக்கப்படுகின்றது.
அழகான இலங்கைத் தீவை காண நாளாந்தம் இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வந்து செல்கின்றனர். கொழும்பை அழகுபடுத்தும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
பெற்றோர் இருவரும் வெளிநாட்டில் இருந்ததால், தனிமை பொறுக்காமல் இளம் பத்திரிக்கையாள மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவ பெங்களூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்த சோபியா டமானி என்கிற 19 வயது இளம்பெண், விடுதியில் தங்கி தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார்.
இவருடைய பெற்றோர் இருவரும் துபாயில் வேலை செய்து வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன் விடுதியில் சேர்ந்த சோபியா, நண்பர்கள் யாருடனும் சேராமல் தனிமையிலே இருந்துள்ளார். இந்த நிலையில், கல்லூரிக்கு செல்லாத சோபியா தனக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறிவிட்டு அறையிலே தங்கியுள்ளார்.
கல்லூரி முடிந்து திரும்பிய மாணவிகள் அறையை திறந்து உள்ளே சென்ற போது, சோபியா எந்த அசைவுமில்லாமல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் சென்றடைந்தது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் வீட்டில் நடத்திய தேடுதல் வேட்டையில் கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில், “உன்னுடன் இரவு உணவில் கலந்து கொள்ளாததற்கு என்னை மன்னித்துவிடு” என தோழி ஒருவருக்கு எழுதப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மாணவியின் தற்கொலைக்கு காரணம் பெற்றோர் வெளிநாட்டில் இருந்ததால் தனிமையில் மனஅழுத்தம் அதிகரித்து முடிவை எடுத்திருக்கலாம் என கூறியுள்ளனர். மேலும், மாணவியின் அறையில் இருந்து இரண்டு மருந்து பாட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக சில பெண்களுக்கு பின் பக்கம் சதை அதிகரித்து காணப்படும். இதற்கு முக்கிய காரணம் ஓரே இடத்தில் மணிக்கணக்கில் அமருவதே ஆகும். இதனால் பின்பக்கம் சதை அதரித்து உடற்தோற்றத்தையே மாற்றிவிடுகின்றது. இந்த பகுதியை குறைப்பதற்காவே பல வழிகள் உள்ளன. அதை தினந்தோறும் செய்யும் போது நிச்சயம் குறையும். இதற்கு ஜிம்மிற்கு சென்று தான் குறைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கீழ் இடுப்பை குறைக்கும் உடற்பயிற்சிகளை நாம் தினமும் செய்ய வேண்டியது அவசியம்.
இதை செய்வதால் தசைகள் வலுவடைந்து நம்மை நல்ல வடிவத்திற்கும் கொண்டு வருகின்றன. அதிகமாக உள்ள சதைகளையும் கொழுப்புகளை குறைக்கவும், கரைக்கவும் இந்த செயல் வல்லதாய் உள்ளது. தற்போது பின்பக்க சதைகளை குறைக்கும் சில எளிய பயிற்சிகளை பார்ப்போம்.
ஸ்டெப்-அப்ஸ் (Step-ups) : படியில் ஏறி இறங்குவது தான் இந்த வகை பயிற்சியாகும். படியை நாம் முதலில் தேர்ந்தெடுத்து மற்றும் ஏறி ஏறி இறங்கும் போது அங்குள்ள தசைகள் குறைய துவங்குகின்றது.
ஸ்குவார்ட்ஸ் (Squats) : பின்பகுதியை குறைப்பதில் ஸ்டெப்-அப்பிற்கு அடுத்து வரும் மிகச்சிறந்த பயிற்சி செயல்பாடு ஸ்குவாட் செய்யும் வேலையாகும். இதனால் உடம்பில் உள்ள ஒவ்வொரு தசையின் பகுதியையும் வேலை செய்ய வைக்கிறோம். இது ஒரு சிறந்த அழகை உங்களுக்கு கொண்டு வரும். இப்படிப்பட்ட அழகை தினசரி இரண்டு அல்லது மூன்று முறையாவது பயிற்சி செய்து தான் பெற முடியும்.
ஓடுதல் (Running) : ஓடுவது கீழ் இடுப்பிற்கு ஒரு நல்ல பயிற்சியாகும் அது மட்டுமில்லாமல் மிக சிறந்த வகையில் உடலை டோனிங் செய்யவும் முடிகின்றது. மற்ற பயிற்சிகளை காட்டிலும் ஓடும் போது நிறைய கலோரிகள் குறைக்கப்படுகின்றன. இது கீழ் இடுப்பு மட்டுமில்லாமல் தொடைகளையும் குறைக்க உதவுகிறது. ஸ்டேடியம் அல்லது பார்க் ஆகிய இடங்களுக்கு சென்று ஓடும் பயிற்சியை செய்து வரலாம். அல்லது வீட்டில் டிரெட் மில் வாங்கி பயன்படுத்தலாம். அரை மணி நேர பயிற்சி ‘பின்னால்’ பெரும் மாற்றங்களை கொண்டு வரும்.
லாஞ்சஸ் (Lunges) : இந்த பயிற்சியும் மிக சிறந்த பயிற்சி முறையாகும். இதை கால்களை விரித்து நடப்பதை போல் வைத்து எவ்வளவு விரித்து வைக்க முடியுமோ அவ்வளவு தூரம் விரித்து பின்னர் உட்காருவதை போல் ஒரு நிலைக்கு வர வேண்டும். இதை திரும்பத் திரும்ப ஒவ்வொரு காலுக்கும் செய்ய வேண்டும். இந்த பயிற்சியை செய்யும் போது பின் பகுதி குறைய நீங்கள் எடுக்கும் முயற்சி பலன் தருவதை நீங்களே உணருவீர்கள்.
இதை திரும்பத் திரும்ப பல செட்டுகளாக செய்தால் உங்களுக்கு வித்தியாசம் தெரிய வரும். எந்த ஒரு பயிற்சியாக இருந்தாலும் உடனடியாக பெரும் மாற்றங்களை பார்க்க முடியாது. சிறிது காலமாவது பொறுமையுடன் இதை செய்து இடைவிடாத முயற்சி செய்து தான் நாம் நினைக்கும் அழகை நமக்கு கொண்டு வர முடியும்.
பட் ஸ்குவீசஸ் (Butt squeezes) : இதுவும் ஒரு சிறந்த பயிற்சி தான். பட் ஸ்குவீசர் பந்தை எடுத்து தினமும் அதில் பயிற்சி செய்வது அங்குள்ள கலோரிகளை குறைக்க உதவும். இது உடம்பின் கீழ் பகுதியை பயிற்சி செய்ய வைத்து குறைக்கும். தினமும் சிறிது நேரம் இப்பயிற்சியை மேற்கொண்டு வந்தால் மிகுந்த பலனை தரும். அது மட்டுமில்லாமல் சில நாட்களில் நீங்கள் நினைத்த அழகையும் பெற முடியும்.
வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட சின்னஅடம்பன் பாரதி வித்தியாலயத்திற்கு அதிபர் இன்மையால் கல்விசார் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவித்து பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஆர்பாட்டம் ஒன்றை இன்றையதினம் (28.01) முன்னெடுத்திருந்தனர்.
காலை 7 மணிக்கு பாடசாலைக்கு முன்பாக ஒன்றுகூடிய பெற்றோர்கள் மாணவர்களை பாடசாலைக்குள் அதிபர் ஆசிரியர் மாணவர்களை அனுமதிக்காது வாயிலை மறைத்தபடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ் ஆர்ப்பாட்டம் சுமார் இரண்டு மணித்தியாலங்களாக இடம்பெற்றது.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வடக்கு கல்வி வலயத்தில் இருந்து வந்த அதிகாரிகள் பேச்சுவார்தையை மேற்கொண்டிருந்தனர். இதன்போது எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் புதிய அதிபர் ஒருவரை நியமித்து தருவதாக உறுதிமொழிவழங்கபட்ட பின்னர் ஆர்பாட்டம் கைவிடப்பட்டது.
ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டவர்கள் பாடசாலையில் கட்சிகள் வேண்டாம், கட்டடங்கள் கட்டப்பட்டது அழகிற்காக இல்லை, இது பாராளுமன்றம் இல்லை, கற்களாக உள்ள பிள்ளைகளை செதுக்குவதற்கு சிற்பிகளை தாருங்கள் போன்ற கோசங்களை எழுப்பியிருந்ததுடன் பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
சிறுமி பலாத்காராத்தில் சிக்கிய கொடூரர்களின் பின்னணி
வீடு புகுந்து பணம் மற்றும் நகை களைக் கொள்ளையடித்து பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை 6 நாட்களின் பின்னர் காங்கேசன்துறை குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
தெல்லிப்பழையைச் சேர்ந்த மகாதேவன் ரூபன் (வயது-28), ஏழாலையைச் சேர்ந்த இராஐகோபால் கிருஷ்ணகுமார் (வயது-30) ஆகியோர் உள்ளிட்ட 4 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.மகாதேவன் ரூபன் மற்றும் இராஜகோபால் கிருஷ்ணகுமார் இருவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சந்தேகநபர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை தமது விசாரணைகளை முன்வைத்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர். வலி. வடக்கு பிரதேச செயலர் பிரிவில் கடந்த 19ஆம் திகதி சனிக்கிழமை இரண்டு இடங்களில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது.
பணம் மற்றும் நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதன்போது வீட்டிலிருந்த பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியிருந்தனர். மருத்துவ பரிசோதனைகளில் இது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
காங்கேசன்துறைப் பிராந்திய பொறுப்பதிகாரி உடுகமசூரியவின் பணிப்புரையின் கீழ் காங்கேசன்துறை உதவி பொலிஸ் அத்தியட்சர் சுசிலகுமார தலமையிலான பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர், காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பிரிவினரும் இணைந்து சந்தேகநபர்களைத் தேடி வந்தனர்.
இளவாலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர். கொள்ளைச் சம்பவத்துக்கு அவர் உடந்தை என்ற சந்தேகத்தில் கைது செய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். வீடுகளை நோட்டம்விட்டு தகவல்களை அவரே வழங்குபவர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைவாக கட்டுவனைச் சேர்ந்த மகாதேவன் ரூபன் என்ற இளைஞனை நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவரைக் கைது செய்வதற்குப் பொலிஸார் வீட்டுக்குச் சென்ற போது, வீட்டு லெவல் சீற்றுக்குள் மறைந்து இருந்துள்ளார்.
அதன் பின்னர் ஏழாலையைச் சேர்ந்த இராஜகோபால் கிருஷ்ணகுமாரை வீட்டில் வைத்துக் கைது செய்தனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்து நவாலியில் பெண் ஒருவரிடம் வழங்கியதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்தியமை தொடர்பில் இவர்கள் இருவரிடமும் தமிழ்ப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதன்போது இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மல்லாகம் பதில் நீதிவான் முன்னிலையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை சந்தேகநபர்கள் முற்படுத்தப்பட்டனர். அவர்களை இரண்டு நாட் கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிவான் அனுமதி வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாணம் கரணவாய் பகுதியில் இளம் பெண் ஒருவரின் திடீர் மரணம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கடமைபுரியும் 32 வயதான குலதீபன் பிரிந்தா என்ற கர்பிணிப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் வேலை முடிந்து வீடு திரும்பிய நிலையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், குறித்த பெண் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா தெற்கு வலயத்தின் தமிழ் கோட்டக்கல்வி அதிகாரி எம்.பி.நடராஜாவிற்கு மணிவிழா நிகழ்வு இன்று (27.01) வவுனியா தெற்கு வலயத்தின் அதிபர்கள் சங்கத்தின் தலைவர் தே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் பணிப்பாளர் முத்து ராதாகிருஸ்ணனால் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்ட எம்.பி.நடராஜா பாண்ட் வாத்தியங்கள் முழங்க நடைபவனியாக அதிபர்கள் மற்றும் ஆசிரியர் சமூகத்தினால், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு அழைத்து வரப்பட்டு ஐயாத்துரை மண்டபத்தில் கௌரவிப்பு நிகழ்வுகள் நடைபெற்றது.
கல்வி சமூகத்திற்கு பணியாற்றி தனது அறுபதாவது வயதில் ஓய்வு பெறும் எம்.பி.நடராஜாவை கௌரவிக்கம் முகமாக ‘நடராஜ மகுடம்’ என்ற மணிவிழா நூல் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
நிகழ்வில் வவுனியா கல்வியல் கல்லூரியின் பீடாதிபதி க.சுவர்ணராஜா, முன்னாள் தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.அன்ரன் சோமராஜா, வடக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.அன்னமலர், ஆசிரியர் தமிழருவி சிவகுமாரன், அதிபர் த.அமிர்தலிங்கம் மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
வவுனியா மாமடுவ பகுதியில் நேற்று (26.01) இரவு 10 மணியளவில் சட்டவிரோதமாக முதிரை மரகுற்றிகளை கடத்த முற்பட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா மாமடு பகுதியில் நேற்று (26.01) இரவு 10 மணியளவில் பட்டா ரக வாகனத்தில் முதிரை மரகுற்றிகளை கடத்துவதாக மாமடுவ பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாமடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கெ.செனரத் தலமையிலான பொலிஸாரினால் சேமமடு பகுதியில் வைத்து முதிரை மரக்குற்றிகளை கடத்த பயன்படுத்தப்பட்ட பட்டாரக வாகனத்தினையும், பட்டா ரக வாகனத்தின் சாரதி உட்பட நால்வரை கைது செய்துள்ளனர்.
13 முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் நாளை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதாக மாமடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இந்திய – இலங்கை நல்லிணக்க உறவின் கீழ் வழங்கிவைக்கப்பட்ட புதிய புகையிரதமானது ‘உத்தரதேவி புகையிரதமாக’ வடக்கிற்கான பயணத்தை இன்று ஆரம்பித்தது.
குறித்த புகையிரதத்திற்கு வவுனியாவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. காலை 6 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து புறப்பட்ட உத்தரதேவி புகையிரதம் மதியம் 12.15 மணியளவில் வவுனியா புகையிரத நிலையத்தை அடைந்தது.
இதனை புகையிரத நிலைய உத்தியோகத்தர்கள், மக்கள் வரவேற்றனர். இருப்பினும் புகையிரதம் நிறுத்தப்படாது யாழ் நோக்கி சென்றது. இதில் யாழ் மாணவர்களுக்கான புத்தகப் பைகள், அப்பியாசக் கொப்பிகள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து அமைச்சின் உயர்மட்ட குழுவினரும் செல்கின்றனர்.
இதேவேளை, வாயு சீராக்கி வசதி கொண்ட முதலாம் வகுப்பு பெட்டியும், இரண்டாம் வகுப்பு பெட்டியும் இப் புகையிரதத்தில் அடங்குவதுடன், 724 பயணிகள் ஒரே நேரத்தில் பயணிக்கக் கூடியதாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா பூவரசங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினை அடுத்து வவுனியா செக்கட்டிப்புலவு, குஞ்சுக்குளம் வயல் வெளியில் புதையல் தோண்டிய 38 வயதான குளியாப்பிட்டியை சேர்ந்த ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய கில்ட்டி, மின்பிறப்பாக்கி, கிடங்கு கிண்ட பயன்படும் பொருட்கள், மண் அகழ்வதற்கான உபகரணங்கள் என்பன பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை இப்புதையல் தோண்டிய ஏனைய ஏழு பேர் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் தப்பித்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை வவுனியா பூவரசங்குளம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.