என் மரணத்திற்கு காரணம் வைத்தியரும், அவரது மனைவியும் தான் என கூறிவிட்டு தற்கொலை செய்த யுவதி!!

தற்கொலை செய்த யுவதி

ஹட்டன்- டன்பார் வீதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் சில வருட காலம் தாதியாக தொழில் செய்து வந்த 22 வயதுடைய யுவதி ஒருவர் அதிகளவிலான மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று 27.01.2019 அன்று இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த யுவதியான முருகையா சாந்தினி 22 வயதுடைய தலவாக்கலை வட்டகொடை யொக்ஸ்போர்ட் தோட்டத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. குறித்த யுவதி 27.01.2019 அன்று இரவு வேளையில் குறித்த மருத்துவமனையிலேயே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக உறவினர்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதுடன், பொலிஸார் சம்மந்தபட்ட வைத்தியசாலையின் வைத்தியரை விசாரணைக்குட்படுத்திய போதிலும், முறையான விசாரணைகள் மற்றும் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வைத்திய அதிகாரி தவறான முறையில் நடந்த கொள்ள முயற்சித்ததாகவும், வைத்திய அதிகாரியின் மனைவியும் கொடுமைப்படுத்தியதாகவும், இதனாலையே தான் அதிகளவிலான மாத்திரைகளை உட்கொண்டு இறக்க போவதாகவும் என்னை யாராலும் காப்பாற்ற முடியாது எனவும் எனது இறப்புக்கு வேறு யாரும் காரணம் அல்ல. வைத்தியரும் அவரது மனைவியும் தான் என்று குரல் பதிவு செய்த ஒலி கோவை ஒன்று உறவினர்களிடம் உள்ளது.

அந்த குரல் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. உயிரிழந்த யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டு, 29.01.2019 அன்று அவரின் இறுதி கிரியைகள் மேற்படி தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

அத்தோடு, உயிரிழந்த யுவதியின் பெற்றோர்கள் சம்மந்தப்பட்ட வைத்திய அதிகாரி கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கின்றனர்.

யாழில் பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

 

மாணவி தூக்கிட்டு தற்கொலை

யாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவர் அவரது வீட்டு முற்றத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவியின் சடலம் இன்று காலை நுணாவில் மேற்கு சாவகச்சேரியில் மீட்க்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் கலைப்பீட 2 ஆம் வருடத்தில் கல்வி கற்ற சிறீதரன் கோகிலமதி என்ற 22 வயதுடைய மாணவியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவியின் காதலன் ஒரு மாதத்திற்கு முன்னர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மனவிரக்திக்கு உள்ளாகியிருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இரு போராட்டங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன!!

போராட்டங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன

வவுனியா பிரதேசத்தின் கழிவுகள் பம்பைமடுவில் கொட்டப்படுகின்றமையால் தமது கிராமம் பல்வேறு பாதிப்புகளை சந்திப்பதாக தெரிவித்து சாளம்பைகுளத்தில் வசிக்கும் மக்கள் இன்று (29.01.2019) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்ததுடன்,

குறித்த போராட்டம் காரணமாக மாவட்டத்தின் கழிவகற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்து வவுனியா நகர சபை ஊழியர்களும் வவுனியா தெற்கு பிரதேச சபை ஊழியர்களும் கழிவகற்றல் வாகனங்களை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஏ9 வீதியை மறித்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக சுமார் ஆறு மணித்தியாலங்களாக ஏ9 வீதியுடான போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. இதனையத்து வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் , வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் , நகரசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்தமையினையடுத்து நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து வவுனியா நகரசபை ஊழியர்கள், வவுனியா தெற்கு பிரதேச சபை ஊழியர்கள் மேற்கொண்ட போராட்டம் கைவிடப்பட்டதுடன் ஏ9 வீதியுடான தடை நீங்கியது.

அதன் பின்னர் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் H.M.ஹனிபா இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதன் பின்னர் ஒருமாத காலத்தினுள் சிறந்ததொரு தீர்வையினை பெற்றுத்தருவதாக வாக்குறுதி வழங்கியதினைத்தடுத்து சாளம்பைக்குளத்தில் பொதுமக்களினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டமும் கைவிடப்பட்டது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், வவுனியா சாளம்பைக்குளம் மக்களின் குப்பை கொட்டுதல் தொடர்பான நீண்டகால பிரச்சனை தொடர்பான பொதுமக்கள் எனக்கு முறையிட்டனர்.

நாங்கள் மாவட்ட செயலக ஊழியர்களுடன் பல தடவைகள் அழைத்து கலந்துரையாடியுள்ளோம். அவ்விடத்திலிருந்து குப்பை கொட்டும் இடத்தினை அகற்றி வனஇலாக திணைக்களத்துடன் கலந்துரையாடி புதிய இடத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம்.

தற்காலிகமாக ஒரு மாத காலத்தினுள் அவ்விடத்தில் குப்பை கொட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ளோம். அவ்விடத்தில் பல கோடி ரூபாய் செலவில் அமைந்துள்ள சுத்தரிகரிப்பு இயந்திரத்தினை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கையினையும் மேற்கொள்ளவுள்ளோம் எனவும் இதன் காரணமாக கிட்டத்தட்ட ஆயிரம் குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது வவுனியா நகரசபையினர் மற்றும் பிரதேச சபையினர் கழிவற்றல் வாகனங்களை குறித்த பகுதிக்கு எடுத்துச்செல்கின்றனர்.

வவுனியா சாளம்பைக்குளம் குப்பைமேட்டினால் வெடித்தது போராட்டம் : மூடப்பட்ட A9 வீதி!!

 

குப்பைமேட்டினால் வெடித்தது போராட்டம்

வவுனியா பிரதேசத்தின் கழிவுகள் பம்பைமடுவில் கொட்டப்படுகின்றமையால் தமது கிராமம் பல்வேறு பாதிப்புகளை சந்திப்பதாக தெரிவித்து சாளம்பைகுளத்தில் வசிக்கும் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இன்று (29.01.2019) காலை 7 மணியளவில் குப்பைமேட்டிற்கு செல்லும் பிரதான வாயிலை மறித்த பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

நீண்டகாலமாக இப்பகுதியில் கழிவுகள் கொட்டப்படுகின்றது. இதனால் எமது கிராமத்தில் வசிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. துர்நாற்றம் வீசிவருவதுடன் நுளம்புகளின் தொல்லைகள் அதிகமாக காணப்படுகின்றன. எனவே குறித்த குப்பைமேடு அகற்றப்படாவிடில் போராட்டத்தை நிறுத்தமாட்டோம் என தெரிவித்ததுடன் குப்பைகளை ஏற்றிவந்த வாகனங்களையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

சம்பவ இடத்திற்கு மாவட்ட மேலதிக அரசஅதிபர் தி.திரேஸ்குமார் விஜயம் செய்திருந்ததுடன் விடயம் தொடர்பாக ஆர்பாட்டக்காரர்களுடன் பேசியிருந்தார். குறித்த குப்பைமேட்டை அகற்றுவது தொடர்பாக இன்று மாலை அனைத்து தரப்புகளையும் உள்ளடக்கிய வகையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. அதில் சரியான தீர்வு ஒன்று வழங்கப்படும் எனவே போராட்டத்தை கைவிடுமாறு கேரியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள் கலந்துரையாடலை முடித்துவிட்டு தாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பகுதிக்கு வருகை தந்து முடிவை கூறுமாறும் தாங்கள் எதிர்பார்த்த தீர்வு கிடைத்தால் போராட்டத்தை கைவிடுவதாகவும் தெரிவித்தனர்.

குறித்த போராட்டம் காரணமாக மாவட்டத்தின் கழிவகற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தின் கழிவுகளை அகற்றும் வாகனங்கள் அதனை கொட்டமுடியாமல் திரும்பிச் சென்றதுடன், வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அனைத்து வாகனங்களையும் நிறுத்திவைத்துள்ளதுடன், நகரசபை தவிசாளர், பிரதேசசபை தலைவர், உறுப்பினர்கள் மற்றும் அரச அதிபருடன் கலந்துரையாடலை முன்னெடுத்து வருகின்றனர்.

நகரசபையின் வாகனங்கள் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஏ9 வீதியை மறித்து நிறுத்தப்பட்டுள்ளதால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன் மாற்றுப்பாதையினூடாக வாகனங்களை செல்லுமாறு போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறித்த பகுதியில் கழிவகற்றல் செயற்பாட்டினை பல வருட காலமாக மேற்கொண்டு வருகின்றோம். அப் பகுதியில் தற்போது குடியேறியவர்கள் குப்பை கொட்டும் பகுதியினை மாற்றுமாறு தெரிவிப்பது நியாயமான கோரிக்கையல்ல. குப்பை அகற்றல் தொடர்பான இந்த பிரச்சனைக்கு சரியான தீர்வு கிடைக்கப்பெறும் பட்சத்திலியே நாங்களும் வவுனியா நகரசபையினரும் குப்பைகளை அகற்ற வேண்டிய துப்பாக்கிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே பொதுமக்களிடம் மன்னிப்பு கோருகின்றோம். இந்த பிரச்சனை முடியும் வரை நாங்கள் குப்பைகளை அகற்ற முடியாதுள்ளது. அத்துடன் குறித்த பகுதியில் உள்ள இராணுவ முகாமினை அவ்விடத்திலிருந்து அகற்றித்தரும் பட்சத்தில் அங்கு கழிவகற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியுமென வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

பூநகரியில் கொள்கலன் பாரவூர்தி குடைசாய்ந்து விபத்து!!

 

பாரவூர்தி குடைசாய்ந்து விபத்து

இன்று காலை 8 மணியளவில் யாழ் நோக்கிச் சென்ற பாரவூர்த்தி பூநகரி தனங்கிளப்பு பகுதியில் வீதியை விட்டு விலகிச் சென்று குடைசாய்ந்துள்ளது. எனினும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று சாவகச்சேரி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை பூநகரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கொள்கலன் பாரவூர்தி ஒன்று பூநகரி தனங்கிளப்பு பகுதியில் சென்றபோது பாரவூர்தியின் டயர் காற்றுப்போனதால் வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

எனினும் இவ்விபத்தில் பாரவூர்தியில் சென்ற சாரதி உட்பட எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சாவச்சேரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் சிறுமி துஷ்பிரயோகம் : இந்தியாவில் இருந்து திரும்பிய நபரை தந்திரமாக பிடித்த பொலிஸார்!!

 

சிறுமி துஷ்பிரயோகம்

கொக்குவில் பகுதியில் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

“கொக்குவில் பகுதியில் பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரது தாயாரும் வசித்து வந்துள்ளனர். சிறுமியின் தந்தை, விவாகரத்து பெற்ற நிலையில் சிறுமி தாயாருடன் வசித்து வந்துள்ளார். குறித்த சந்தேகநபர் சிறுமியின் வீட்டுக்கு வந்து சென்ற நிலையில், சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். இது குறித்து தனது தந்தைக்கு சிறுமி தெரியப்படுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தந்தையார் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தந்தையின் முறைப்பாட்டின் பிரகாரம் தாயின் பாதுகாப்பில் இருந்த சிறுமியை மீட்ட பொலிஸார் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அத்துடன் சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்த போது சந்தேக நபர் இந்தியாவுக்கு தப்பி சென்றுள்ளார்.

இந்நிலையில் சந்தேகநபர் நேற்றைய தினம் யாழில். அவரது உறவினர் ஒருவரின் இறுதி சடங்குக்கு வந்துள்ளமையை பொலிஸார் அறிந்து கொண்டதனை அடுத்து சந்தேகநபரை இன்றைய தினம் கைது செய்துள்ளனர்.

குறித்த நபரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சந்தேக நபரை நாளைய தினம் யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

61 வருட பாசப்போராட்டம் : 103 வயது தாயை கண்டுபிடித்த 81 வயது மகளின் நெகிழ்ச்சிக் கதை!!

 

81 வயது மகளின் நெகிழ்ச்சிக் கதை

அயர்லாந்து நாட்டை சேர்ந்த 81 வயதான எய்லீன் மெக்கென் தனது 81 வயதில் தன்னை பெற்றெடுத்த தாயை கண்டுபிடித்துள்ளார். மெக்கெனக்கு சிறுவயது இருக்கும்போதே தனது தாயை பிரிந்துள்ளார். 19 வயதில்தான் தான் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட குழந்தை என தெரியவந்துள்ளது. தான் இறப்பதற்கு தன்னை பெற்றெடுத்த தாயை ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்ற ஆசை மெக்கனுக்கு இருந்துள்ளது.

61 ஆண்டுகளாக தனது தாயை தேடிவந்துள்ளார், தனக்கு தற்போது 81 வயதாகிவிட்ட நிலையில் தனிமையில் வசித்து வரும் மெக்கென், கடந்த ஆண்டு அயர்லாந்து நாட்டின் பிரபல வானொலியில், தனது தாய் மற்றும் தனது தாயை பிரிந்த மருத்துவமனை குறித்த விவரங்களை தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சில நாட்கள் முன்னர் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மருத்துவர், உங்கள் குடும்பத்தை எனக்கு தெரியும் என கூறியுள்ளார். இதைக்கேட்டதும் மகிழ்ச்சியில் உரைந்த மெக்கென் அவரது உதவியுடன் தனது குடும்பத்தை தேட ஆரம்பித்துள்ளார். பல்வேறு தேடல்களுக்குப் பின்னர் தனது குடும்பத்தை கண்டுபிடித்துள்ளார்.

அயர்லாந்தின் பெதானி குடியிருப்பில் 103 வயதான மெக்கெனின் தாய் வசித்துள்ளார். தனது தாயுடன் பேசிய மெக்கேன், நான் உயிருடன் இருந்தது உங்களுக்கு ஏன் தெரியவில்லை. ஏன் தெரியவில்லை” என ஆழ்மனதில் இருந்து அழுகையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்”.

ஆனால் அவர் பேசியது எதையும் அவரது தாயால் கேட்க முடியவில்லை. வயது முதிர்வால் அவருக்கு கேட்கும் திறன் இழந்துவிட்டது. இதனால், மெக்கென் கூறியதற்கெல்லாம் அவரது தாய், “எனக்கு கேட்கவில்லை என பதிலளித்துள்ளார். போனில் பேசிய மெக்கேன் தனது தாயை நேரில் சந்திக்கும் ஆவலில் இருக்கிறார்.

ஒரு குழந்தைக்கு கொடுக்கப்பட்ட 6 மாநில பெண்களின் தாய்ப்பால் : ஆச்சரிய சம்பவம்!!

இந்தியாவில் மகேந்திரா என்ற குழந்தைக்கு ஆறு மாநிலத்தை சேர்ந்த பெண்களிடம் தாய்ப்பால் தானம் கேட்கப்பட்டு கிடைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையைச் சேர்ந்த ராதிகா பிரசவத்துக்காக, விசாகப்பட்டினத்தில் இருக்கும் தன் தாய் வீட்டுக்குச் சென்ற நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மகேந்திரா என்று பெயர் சூட்டப்பட்ட நிலையில், அவனால் தொடர்ந்து தாய்ப்பால் குடிக்க முடியவில்லை. பல்வேறு மருத்துவர்களிடம் குழந்தையை காட்டியும் பிரச்சனை தீரவில்லை.

ஒரு வழியாகக் கோவையில் உள்ள ஓர் மருத்துவரிடம் சிகிச்சை பெற முடிவு செய்து, கோவை கிளம்பினர். விசாகப்பட்டினம் டு கோவை ரயில் பயணம் சுமார் 20 மணி நேரத்துக்கு நீடிக்கும்.

மகேந்திராவுக்காக விசாகப்பட்டினத்தில் உள்ள தாய்மார்களிடம், பால் தானம் கேட்கப்படுகிறது. தாய்ப்பால் தானம், ஃபார்முலா மில்க் என்று பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டன. ஆனால், ரயில் கிளம்பும் வரை அதில் எந்த முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை.

இந்நிலையில், தங்களது விடாமுயற்சி மூலம் குழந்தையின் பசியாற்றி, அவனைக் கோவைக்குப் பத்திரமாக அழைத்துவந்துள்ளார் குழந்தையின் தாய் ராதிகா.

இது குறித்து ராதிகாவின் பாலூட்டல் ஆலோசகர் ஸ்வாதி கூறுகையில், ராதிகாவுக்கு பால் சுரப்பு அதிகம் இருந்தும், குழந்தையால் தொடர்ந்து பால் குடிக்க முடியவில்லை. நான் சோதித்துப் பார்க்கையில் அந்தத் தாயிடம் எந்தக் குறையும் இல்லை. குழந்தைக்குதான் பிரச்னை இருப்பதாகத் தெரிந்தது. சரி, கோவை வாங்க பார்த்துக்கலாம் என்று சொல்லிவிட்டேன்.

20 மணி நேரப் பயணத்தில் குழந்தையை எப்படிச் சமாளிப்பது என்ற கேள்வி எழுந்தது விசாகப்பட்டினம் பகுதியில் தாய்ப்பால் தானம் பெற முயற்சி செய்தோம். அது கிடைக்காததால், மாற்று ஏற்பாடுகளை முயன்று பார்க்கலாம் என்று முடிவுக்கு வந்தோம்.

மகேந்திராவுக்கு தாய்ப்பால் கொடுக்க முடிந்தளவு ராதிகா முயன்றும் முடியவில்லை.

கோவையில் இருக்கும் என்னுடைய மற்றொரு நண்பர் மூலம் மீண்டும் முயற்சி செய்தோம். ஒரு வழியாக, ஃபார்முலா மில்க் விநியோகித்தர் மூலம் விஜயவாடா ரயில் நிலையத்தில் அவர்களிடம் ஃபார்முலா மில்கை சேர்த்துவிட்டோம்.

அது கொடுத்தவுடனேயே, குழந்தை சற்று பசியாறித் தூங்கிவிட்டான். ஆனால், ஃபார்முலா மற்றும் மாட்டுப் பால் கொடுப்பதில் ராதிகாவுக்கும் பெரிதாக உடன்பாடில்லை.

இதனால், அந்தப் பெண்ணும் விடா முயற்சி செய்துகொண்டிருந்தார். அதில், அவர் வெற்றியும் பெற்றார். இதன் மூலம், குழந்தையும் அழுகவில்லை. அவர்கள் நிம்மதியாகக் கோவை வந்துவிட்டனர். குழந்தைக்குத் சிகிச்சையும் அளித்துவிட்டோம் என கூறினார்.

ராதிகா கூறுகையில், எனக்கு நார்மல் டெலிவரிதான் ஆனது. இவன் சரியாகப் பால் குடிக்கவில்லை. சரி, போகப்போக பழகிவிடுவான் என்று நினைத்தோம். ஆனால், நாளாக நாளாக, அவனது உடல் எடை குறைந்துகொண்டே இருந்தது.

நாங்கள் மிகவும் பயந்துவிட்டோம். இதையடுத்து கோவைக்கு கிளம்பினோம் ஆனால், தாய்ப்பாலோ, நாங்கள் கேட்ட ஃபார்முலாவோ எங்குமே கிடைக்கவில்லை. ஸ்வாதி மேடத்தின் முயற்சியால், விஜயவாடாவில் ஃபார்முலா கிடைத்தது. ஆனால், அதைத் தொடர்ந்து கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

எனவே, ரயிலில் உள்ள வேறு மாநிலத்தவர்களிடம் தாய்ப்பால் தானம் கேட்டேன். அவர்களும், என் நிலைமையைப் புரிந்துகொண்டு கொடுத்தனர். பெங்காளி, ஆந்திரா, கேரளானு ஆறு மாநிலங்களைச் சேர்ந்த தாய்மார்கள் பால் கொடுத்தனர். அவர்களுக்கு எல்லாம் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.

என் மகன் அதிர்ஷ்டசாலி. ஒருவழியாக கோவை வந்துவிட்டோம். சிகிச்சையும் தொடங்கிவிட்டோம். மகேந்திரா பால் குடிக்க முயற்சி செய்து வருகிறான் என கூறியுள்ளார்.

பிரியாணி வாங்கச் சென்ற மாணவன் பரிதாப மரணம் : கண்ணீர் விட்டு கதறும் தந்தை!!

மாணவன் பரிதாப மரணம்

தமிழகத்தில் விடுதி வார்டனுக்கு பிரியாணி வாங்கச் சென்ற பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்த நிலையில், வார்டன் பிரியாணி சாப்பிடுவதற்கு என் மகன் உயிர் போவதா என்று தந்தை கண்ணீர்விட்டு கதறி அழுதுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள அத்திப்பட்டு கிராமத்தில் சென் ஜோசப் என்ற மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இங்கு மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கு ஹாஸ்டலும் உள்ளது என்பதால், கிராமங்களில் இருந்து வரும் மாணவர்கள் அங்கே தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஹாஸ்டலில் மெடிக்கல் கேம்ப் நடத்தப்பட்டது. கேம்ப் முடிந்தவுடன் கேம்பிற்கு வந்த மருத்துவர்கள் மற்றும் சேவிலியர்களுக்கு பிரியாணி விருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் ஹாஸ்டன் வார்டன்கள் லூர்து மற்றும் எலியாஸ் , ஹாஸ்டலில் தங்கிப் படித்த ஆதமங்கலம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுநாத் (11 வகுப்பு) என்ற மாணவனிடம் இரு சக்கர வாகனம் ஒன்றைக் கொடுத்து சுமார் 5 கி.மீற்றர் தொலைவில் இருக்கும் கடைக்கு அனுப்பி பிரியாணி வாங்கி வரும் படி கூறியுள்ளனர்.

அதன் படி மஞ்சுநாத் பிரியாணி வாங்க சென்ற போது, எதிர்பாரதவிதமாக மாணவன் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது பின்னே வந்த டிராக்டர் மோதியதால் மஞ்சுநாத்திற்கு பயங்கரமாக அடிபட்டது.

இதனால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மஞ்சுநாத்தின் தந்தை ரங்கநாதன். என் மகன் மைனர் என்று தெரிந்தும், அவனிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை என்று தெரிந்தும் அவனிடம் இரு சக்கர வாகனத்தை கொடுத்து பிரியாணி வாங்க அனுப்பியுள்ளனர்.

ஹாஸ்டலுக்கு படிக்க அனுப்பிய என் மகனை அனுமதியின்றி வெளியே அனுப்பியுள்ளனர். இது போன்ற மலைப்பகுதியில் அவனால் எப்படி வண்டி ஓட்ட முடியும் இதைக் கூட யோசிக்காமல், அவர்கள் செய்த காரியத்தால் என் மகன் இறந்துவிட்டான்.

இது குறித்து அங்கிருப்பவர்களிடம் கேட்டால், அவர்கள் எதுவுமே நடக்காதது போல் செல்கின்றனர். பொலிசில் இது குறித்து புகார் அளித்து எந்த ஒரு பயனும் இல்லை, என் மகன் இறப்பிற்கு நியாயம் வேண்டும். வார்டன்கள் பிரியாணி சாப்பிடுவதற்கு என் மகன் உயிர் போவது எந்த வகையில் நியாயம். இதில், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கண்ணீர்விட்டு கூறியுள்ளார்.

அடுத்த மாதம் முதல் தனது அப்பிளிக்கேஷனை நிறுத்துகின்றது பேஸ்புக்!!

 

அப்பிளிக்கேஷனை நிறுத்துகின்றது பேஸ்புக்

பேஸ்புக் நிறுவனமானது Moments எனும் ஒரு தனியான அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்திருந்தது. இதன் ஊடாக புகைப்படங்களை சேமித்து வைத்திருக்க முடிவதுடன், அவற்றினை பகிர்ந்துகொள்ளவும் முடியும்.

எனினும் இந்த அப்பிளிக்கேஷனை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி முதல் நிறுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அப்பிளிக்கேஷன் ஊடாக பயனர்களின் தொலைபேசி இலக்கங்கள் பகிரப்படுகின்றமையே இவ்வாறான முடிவுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த அப்பிளிக்கேஷனை 87 மில்லியன் iOS மற்றும் Android பயனர்கள் தரவிறக்கம் செய்து நிறுவியுள்ளதுடன், 2016 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் மாத்திரம் அதிக பட்சமாக 10.7 மில்லியன் தரவிறக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோன்று கடந்த மாதத்தில் 150,000 தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் பாடல்களை பதிவேற்றம் செய்த இருவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!!

விளக்கமறியலில்..

கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் விடுதலைப் புலிகளின் பாடல்களை பதிவேற்றம் செய்தமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களை நேற்று நீதிமன்றில் முன்னிலை படுத்திய போதே எதிர்வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த 14ஆம் திகதி கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடல்களை ஒளிப்பதிவு செய்த மற்றும் பாடலை ஒலிக்க விட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களில் இரண்டு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் மேற்படி இரண்டு பேரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று குறித்த இரண்டு பேரையும் மீளவும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மீளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்லடி பாலத்தில் குதித்த இளைஞர் சடலமாக மீட்பு!!

 

இளைஞர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகில் இருந்து நேற்று மாலை இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கல்முனை பிரதேச பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்புப் பகுதியைச் சேர்ந்த தனூஸ் எனும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் வந்த வேளையில், கல்லடிப் பாலத்தின் வாவியில் பாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவந்தது.

இந்த நிலையில் சடலம் நேற்று மாலை கல்லடி பாலத்திற்கு அருகில் கரையொதுங்கியுள்ளது. நேற்று முன்தினம் மாலை அவரால் செலுத்திவரப்பட்ட மோட்டார் சைக்கிள், மட்டக்களப்பு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளும் மேற்கொள்ளப்படுவந்தன.

 

மரண விசாரணைகளை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு சேனைப்புலவு உமையாள் வித்தியாலயத்தின் திறனாய்வுப் போட்டி!!

 

வவுனியா வடக்கு சேனைப்புலவு உமையாள் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி நேற்று (27.01) பாடசாலையின் அதிபர் திரு.விமலராசன் தலமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன், சிறப்பு விருந்தினராக நெடுங்கேணி கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.கிருபாகரன், நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்தபண்டார, உதவிக்கல்விப் பணிப்பாளர் (உடற்கல்வி) செந்தில் குமரன், நெடுங்கேணியில் அமைந்துள்ள வங்கிகளின் முகாமையாளர்கள்,

கௌரவ விருந்தினர்களாக நெடுங்கேணி வர்த்தக நிலைய உரிமையாளர்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்களான சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் , பெற்றோர்கள், பழைய மாணவர்கள், எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மாணவர்களின் அணிநடை நிகழ்வு, ஒட்டப்போட்டி, வினோத உடை போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றதுடன் இறுதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

யாழில் அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்தப்பட்ட ஆவா குழு உறுப்பினர்கள்!!

 

ஆவா குழு

ஆவாக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் இன்று அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர்.

அண்மையில் யாழ்ப்பாணம் நாச்சிமார் அம்மன் கோயிலுக்கு அருகில் வைத்து ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த மூன்று பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர். குறித்த மூன்று பேரும் கைது செய்யப்பட்ட போது அவர்களிடமிருந்து சில ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தநிலையில் கைதானவர்கள் மூன்று பேரும் இன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்காக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேருக்கு நேர் மோதுண்டு கோர விபத்து : CCTV இணைப்பு!!

கோர விபத்து

பண்டாரவளை – ஹூல்ஒய வீதி அம்பிடிய பிரதேசத்தில் உந்துருளி மற்றும் முச்சக்கர வண்டி ஒன்று நேருக்கு நேர் மோதுண்டு இடம்பெற்ற விபத்தில் 04 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் பண்டாரவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் தியதலாவ மருத்துவமனையிற்கு மாற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த விபத்து வர்த்தக நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த C.C.T.V கெமராவில் பதிவாகியுள்ள காணொளி இதோ..

தேன் எடுக்க சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

 

காத்திருந்த அதிர்ச்சி

ஹபரணை – ரீரிகேஓய பிரதேசத்தில் கிணறொன்றில் இருந்து நபரொருவரிடன் சடலமொன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேன்கூடு உடைத்து தேன் எடுக்க சென்ற சிலர் இந்த சடலத்தை கண்டு காவற்துறைக்கு அறிவித்துள்ளனர்.

சடலத்தின் அருகில் இருந்து ஆடைகள் சிலவும் மற்றும் மதுபான போத்தலொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

கிணறொன்றில் இருந்து நபரொருவரிடன் சடலமொன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேன்கூடு உடைத்து தேன் எடுக்க சென்ற சிலர் இந்த சடலத்தை கண்டு காவற்துறைக்கு அறிவித்துள்ளனர்.