வவுனியாவில் திருட்டுச் சம்பவம் பொதுமக்களால் முறியடிப்பு : தப்பியோடிய திருடர்கள்!!

திருட்டுச் சம்பவம்

வவுனியா கோவில்புதுக்குளம் மகாவிஸ்னு ஆலயத்தில் திருட்டு சம்பவம் ஓன்று இன்று பொதுமக்களால் முறியடிக்கபட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்.. குறித்த ஆலயத்தில் நேற்று அதிகாலை 1 மணியளவில் நான்குபேரை கொண்டகுழுவினர் ஆலயத்தின் வாசல் பகுதியூடாக உள்நுளைந்துள்ளனர்.

அதனை அவதானித்த ஆலயத்தின் காவலாளி ஓடிசென்று ஆலயத்தின் மணியை அடித்துள்ளார். இதனால் அருகில் இருந்த பொதுமக்கள் ஆலயத்திற்குள் ஒன்றுகூடியுள்ளனர். இதனால் செய்வதறியாத திருடர்கள் தப்பியோடியுள்ளனர். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலைய குற்றதடுப்பு பிரிவில் ஆலயத்தின் நிர்வாகத்தினரால் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள சிவன் ஆலயத்திலும் அண்மையில் உண்டியல்கள் திருடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கல்லடி பாலத்தில் பாய்ந்து இளைஞன் தற்கொலை!!

இளைஞன் தற்கொலை

இன்று பிற்பகல் (27.01.2019) கல்லடி பாலத்தில் பாய்ந்து ஒருவர் காணாமல் போயுள்ளார். கல்முனை பாண்டிருப்பை சேர்ந்த தனுஷ் என்பவரே கல்லடி பாலத்தில் பாய்ந்து காணாமல் போயுள்ளார்.

குறித்த இளைஞன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கல்முனை பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியை சேர்ந்த இளைஞர் தனுஷ் வயது(26) தனியார் நிறுவனத்தின் கல்முனை கிளையில் கடமை புரிபவரே இத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அவருடன் இன்னும் ஒருவர் கல்லடி பாலத்தில் பாய்ந்ததாக கூறப்படுகிறது ஆனாலும் அவர் தொடர்பில் தகவல் எதுவும் வெளிவரவில்லை.

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இடத்தில் இருவரது மோட்டார் சைக்கிள்கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஒருவர் தனது நண்பனிடம் தொலைபேசியில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

3 மணி நேரம் மட்டும் தூக்கம் : ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகளை பெற்றெடுத்த 51 வயது பிரித்தானிய பெண்!!

ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகளை பெற்றெடுத்த 51 வயது பெண்

தனது 51 ஆம் வயதில் ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகளை பெற்றெடுத்த பிரித்தானிய தாயார் தமது அன்றாட வாழ்க்கை குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.

வடக்கு லண்டனில் குடும்பத்துடன் குடியிருக்கும் 51 வயது ட்ரேசி பிரிட்டென் என்பவரே தற்போது ஒரே பிரசவத்தில் நான்கு பிள்ளைகளை பெற்றெடுத்து சாதனை படைத்துள்ளார். ஏற்கெனவே 3 பிள்ளைகளுக்கு தாயாரான ட்ரேசிக்கு 8 பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.

தமது 39-வது வயதில் 19 வார கர்ப்பம் தவறிய பின்னர் தற்போது செயற்கை கருத்தரிப்பின் மூலம் பிள்ளை பெற்றுள்ளார். இதற்கென 7000 பவுண்டுகள் செலவிட்டதாக கூறும் ட்ரேசி, தமது பிள்ளைகளுக்காக வாரம் 224 போத்தல் ஃபார்முலா பால் வாங்குவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் வாரம் 28 முறை குளிப்பாட்டுவதாகவும் 56 தடவை உடை உடுத்தி விடுவதாகவும் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தற்போதெல்லாம் தாம் வெறும் 3 மணி நேரம் மட்டுமே தூங்குவதாகவும், ஆனால் இது சில காலம் மட்டுமே என்பதால் அதுபற்றி கவலைப்படுவதில்லை எனவும் ட்ரேசி தெரிவித்துள்ளார். தாய்மையை தற்போது தாம் ரசிப்பதாகவும் முழு நேர தாயாராகவே மாறியுள்ளதாகவும் ட்ரேசி குறிப்பிட்டுள்ளார்.

ஒரே இடத்தில் நரபலி கொடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகள் : அதிர்ச்சி சம்பவம்!!

நரபலி

பெரு நாட்டின் வடக்கு கரையோர பகுதியில் உள்ள ஹூனாஹிகிடோவில் நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் எலும்புகளாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹூனாஹிகிடோ பகுதியில் உள்ளுறை சேர்ந்த நாய் ஒன்று, எலும்பு ஒன்றினை கண்டெடுத்துள்ளது. இதனை பார்த்த மக்கள் முன்னொரு காலத்தில் அங்கு கல்லறைகள் இருந்திருக்கலாம் என நம்பியிருக்கின்றனர்.

இதற்கிடையில் தகவலறிந்து வந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் அப்பகுதியில் தோண்டி எடுத்தபோது, டஜன் கணக்கில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து ஆராய்ச்சியை தீவிரப்படுத்த ஆரம்பித்தினர். கடலிலிருந்து ஆயிரம் அடி குறைவான பகுதியில் நூற்றுக்கணக்கான குழந்தைகளின் எலும்புகளை கண்டறிந்தனர். அந்த குழந்தைகள் அனைவருமே 5 முதல் 14 வயதிற்குட்பட்டவர்கள் என்பது கதிரியக்க சோதனையின் மூலம் கண்டறியப்பட்டது.

மேலும், 550 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் புதைப்பட்டிருக்கலாம் என்பதை கண்டறிந்தனர். அவர்களுடைய உடலில் இருந்த சடங்கு அடையாளங்களை வைத்து அவர்கள் அனைவரும் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

அதேபோல மற்றொரு தளத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 269 குழந்தைகளின் எலும்புகளை ஆராய்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். புராதன சிம்ம நாகரீகத்தின் தலைநகரான சான் சான் தான், உலகிலேயே குழந்தைகள் அதிகமாக நரபலி கொடுக்கப்பட்ட இடம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

அவர்களின் சடலங்களுடன் சேர்த்து 466 ஆடுகளும் புதைக்கப்பட்டுள்ளன. உணவு மற்றும் போக்குவரத்து ஆதாரங்களாக மிகவும் விலையுயர்ந்ததாக கருதப்பட்ட விலங்குகளையும் பலி கொடுத்திருப்பது, கடவுள்களுக்கு ஒரு பாரிய தியாகத்தை செய்வதற்காக இருக்கலாம் என சான்றுகள் தெரிவிக்கின்றன.

இவர்களில் மூன்று எலும்புக்கூடுகள் மட்டும் வயதில் பெரியவர்களின் எலும்புக்கூடுகளாக உள்ளன. அதில் இருந்த இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சிறுவர்களை புதைக்கும் வேலையை செய்திருக்கலாம் எனவும், புதைக்கப்பட்டிருந்த ஆண், நரபலி கொடுத்தவராக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இத்தனை குழந்தைகள் அந்த காலத்தில் நரபலி கொடுக்கப்பட்டதற்கான தெளிவான காரணங்கள் கண்டறியப்படவில்லை. கடுமையான மழையை பொருட்படுத்த முடியாமல் அதனை தடுத்து நிறுத்துவதற்காக நரபலி கொடுத்திருக்கலாம் என என்பதற்கான சான்றுகள் முதல் தளத்தில் இருந்து கிடைத்துள்ளன.

இதுகுறித்து ட்ருஜிலோ தேசிய பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் தொல்லியல் துறை பேராசிரியர் காபிரியேல் ப்ரிட்டோ கூறுகையில், குழந்தைகள் மற்றும் விலங்குகள் அனைத்தின் இதயமும் வெளியில் எடுக்கப்பட்டு நரபலி கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கான தடயங்கள் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இரு வேறு தந்தைகளுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள் : அதிசய சம்பவம்!!

இரு வேறு தந்தைகளுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்

செயற்கை கருத்தரித்தல் முறை மூலம் இரு வேறு தந்தைகளுக்கு, இரட்டை குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் பிரித்தானியாவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டனை சேர்ந்த சைமன் மற்றும் கிரேம் பெர்னே-எட்வர்ட்ஸ் என்கிற ஓரினசேர்க்கையாளர்கள், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.

அதன்படி இணையதளத்தில் தேடும் பொழுது கணவரை பிரிந்து மகன்களுடன் வசித்து வரும், 32 வயதான கனடா நாட்டு மெக் ஸ்டோனை சந்தித்தனர். அவருக்கு £25,000 பவுண்டுகள் செலுத்திய பின்னர், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு செயற்கை கருத்தரிப்பு மையத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு சிகிச்சை நடைபெறுவதற்கு முன்பு வரை, யாருடைய விந்தணுவை கொடுக்கலாம் என இருவரும் குழம்பி போய் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த மருத்துவர், இருவருடைய விந்தணுக்களிலும் பாதியை வாங்கிக்கொண்டு மெக் ஸ்டோன் கருப்பையில் செலுத்தினர்.

33 வார கர்ப்பிணியாக இருந்த போது, மெக் ஸ்டோனிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, ஒரு ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது. இதில் கிரெம், கால்டெரின் தந்தையாகவும், சைமன் அலெக்ஸாண்ட்ராவுக்கு தந்தையாகவும் இருக்கிறார்.

இதுகுறித்து பேசிய சைமன், மெக் அருமையான ஒரு வேலையினை செய்துள்ளார். நாங்கள் இருவரும் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாக மாறியதன் மூலம் எங்களுடைய கனவு நிறைவடைந்துள்ளது.

முதலில் நாங்கள் மெக் ஸ்டோனை சந்திக்க சென்றபோது, சிறிது தயங்கினோம். ஆனால் அவள் எங்களை பார்த்ததும் கட்டியணைத்து, அவருடைய குழந்தைகளை எங்களிடம் அறிமுகம் செய்து வைத்தாள். பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ஒரு சகோதரி போலவே மெக் எங்களுக்கு தெரிந்தாள் என கூறியுள்ளார்.

கழிவறையில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு : உள்ளே சென்ற பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி!!

கழிவறையில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு

அவுஸ்திரேலியாவில் கழிவறையில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு, பெண்ணின் பின் பகுதியை கடித்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஹெலன் ரிச்சர்ட்ஸ் என்கிற 59 வயது பெண், கழிவறைக்கு சென்று அதன் மீது அமர்ந்துள்ளார்.

அப்போது திடீரென ஏதோ ஒன்று பின் பக்கத்தை கடிப்பதை உணர்ந்த அவர், அதிலிருந்து குதித்து வேகமாக எழுந்து நின்று உள்ளே எட்டி பார்த்துள்ளார். அதனுள் 5 அடியில் மலைப்பாம்பு ஒன்று இருப்பதை பார்த்து பயத்தில் உறைந்துள்ளார். உடனே பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவம் இடத்திற்கு வந்த பாம்பு பிடிக்கும் நபர், லாவகமாக அதனை பிடித்து சென்றார்.

அங்கு தப்பிக்க இடம் எதுவும் இல்லாத காரணத்தால், அவர் வரும் வரை பாம்பு அந்த இடத்திலே இருந்தது. பாம்பு விஷம் இல்லாத வகையை சேர்ந்ததால், எந்தவித அசம்பாவிதத்திலும் சிக்காமல் ஹெலன் தப்பித்துக்கொண்டார். ஆனால் முன்னெச்செரிக்கைக்காக மட்டும் விஷ முறிவு ஊசி போட்டுள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகை திரும்பிப் பார்க்கவைத்த திருநங்கை : படித்துப்பாருங்கள் அசந்து போவீர்கள்!!

 

நர்த்தகி நடராஜு

10 வயதில் உடலில் ஏற்பட்ட மாற்றத்தையடுத்து பின்னாளில் திருநங்கையாக மாறிய தமிழச்சி நர்த்தகி நடராஜுக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்து கெளரவித்துள்ளது. இன்று உலகளவில் புகழ்பெற்றுள்ள நர்த்தகி நடராஜ் வாழ்க்கையில் பெரும் துன்பத்தை அனுபவித்தவர் ஆவார். அவர் ஒருமுறை அளித்த பேட்டியில், சிறுவயதிலேயே எனக்குள் ஒரு பெண்மை இருந்தது.

ஆனால் என்னை எல்லாருமே கிண்டல் பண்ணாங்க. அப்போ எனக்கு பத்மினி, வைஜெயந்திமாலா நடனம்னா ரொம்ப பிடிக்கும். 11-ம் வகுப்பு வரைதான் வீட்டில படிக்க வெச்சாங்க. அதுக்கு மேல ஸ்கூலுக்கு அனுப்ப அசிங்கமா நினைச்சாங்க. அதனால தான் வீட்டை விட்டே ஓடிப்போற நிலைமை எனக்கு வந்துடுச்சு என்று மனம் திறந்து சொல்லும்போது தான் நடராஜ் பட்ட அவமானங்களின் வலிகளை உணர முடிகிறது.

எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த நடராஜூக்கு மனசு அலை பாய்ந்தது பரதத்தின் மீதுதான். அதனால்தான் இந்த மதுரைவாசி தஞ்சாவூருக்கு சென்று முறைப்படி பரதம் கற்று பின் கச்சேரிகளை செய்ய ஆரம்பித்து, உலகம் முழுக்க பயணிக்க ஆரம்பித்தார்.

வெளிநாடுகளில் நடராஜ் நடனத்திற்கு மவுசு அதிகம். அதனால்தான் ஆயிரக்கணக்கான மேடைகளில் நடன நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார். வெளிநாடுகளில் தமிழ் அமைப்புகள் மட்டுமல்லாமல், முழுக்க முழுக்க வெளிநாட்டவர்களால் நிர்வாகிக்கப்படும் கலை கலாச்சார அமைப்புகளின் பேரில் பரதநாட்டிய நிகழ்ச்சிகளை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

இவ்வளவு சாதனைகளை செய்துள்ள நார்த்தகி நடராஜனுக்கு ஏற்கனவே தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் தந்து கவுரவித்தது. இன்றைக்கு பத்மஸ்ரீ விருது பெறும் அளவுக்கு தன்னை அவர் நிரூபித்துள்ளார். தமிழக அரசின் 11-ம் வகுப்பிற்கான தமிழ்ப் பாட புத்தகத்தில் நர்த்தகி நடராஜின் வாழ்க்கை பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணம் முடிந்த 3 மாதங்களில் தற்கொலை செய்துகொண்ட புதுமணத்தம்பதி : கதறும் உறவினர்கள்!!

கதறும் உறவினர்கள்

வேலூர் மாவட்டத்தில் திருமணம் முடிந்த 3 மாதங்களில் புதுமணத்தம்பதியினர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குமாரமங்கலம் அருகே வீராங்குப்பத்தை சேர்ந்த பாபு-கவிதா தம்பதியினரின் மகன் விஜயகுமார் (27). இவருக்கும் பொத்தரை கிராமத்தை சேர்ந்த பிரியா (21) என்பவருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்தத சில நாட்களிலே தம்பதியினர் இருவரும் வீராங்குப்பத்தில் தனியே வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். கணவன், மனைவி இருவருமே சண்டை போடாமல் கிராமமே வியந்து பார்க்கும் அளவிற்கு வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று முழுவதும் வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் திறக்க முற்படும் போது கதவின் உள்பக்கம் தாழ்பாள் போடப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு விஜயகுமார் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவருடைய மனைவி பிரியா மயங்கிய நிலையிலும் தரையில் கிடந்தார். அவருக்கு அருகே ஒரு விஷ பாட்டில் கிடந்துள்ளது. இதனையடுத்து இருவருடைய உடல்களையும் மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒருநாள் கூட சண்டை போடாமல் மகிழ்ச்சியாக இருந்த தம்பதி திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் வீட்டில் வைத்து சபை வழிபாடுகள் : மக்கள் கடும் எதிர்ப்பு!!

 

மக்கள் கடும் எதிர்ப்பு

வவுனியா மகாறம்பைக்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை வீதியிலுள்ள வீடு ஒன்றில் வைத்து மக்களை அழைத்து சபை ஒன்றின் சமய வழிபாடுகள் மேற்கொள்வதற்கு இன்று காலை அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சபை சமய வழிபாட்டிற்கு இடையூறு ஏற்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா மகாறம்பைக்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை வீதியில் ஏழுற்கு மேற்பட்ட சபை வழிபாட்டுத்தளங்கள் அமைந்துள்ளன. இதனால் அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் விஷேட தினங்களில் சபை வழிபாடுகளை மேற்கொள்வதாக தெரிவித்து அருகிலுள்ள மக்களுக்கு சபை சமயவாழிபாடுகளினால் ஏற்படும் சத்தங்களினால் அசௌகரியங்கள் ஏற்பட்டு வருகின்றன.

அத்துடன் அப்பகுதியிலுள்ள வீடு ஒன்றில் சபை வழிபாடுகள் கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை நிறுத்தி சபைக்குரிய சமய வழிபாட்டுத்தளத்திற்கான பிரதேச சபையின் அனுமதியைப் பெற்று சபைக்குரிய கட்டிடங்களை அமைத்து சபைக்குரிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டு மக்களுக்கு இடையூறுகள் இன்றி சமய வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்து அப்பகுதியில் இன்று காலை 9 மணியளயவில் மக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

இன்றைய எதிர்ப்பு நடவடிக்கை குறித்து பகுதியிலுள்ள வீட்டில் சபை வழிபாடுகளை மேற்கொண்ட போதகரிடம் வினவியபோது, எனது வீட்டில் வைத்து கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து சபை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றேன். கடந்த 15வருடங்களுக்கு மேலாக குறித்த பகுதியிலிருந்து சபை வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றேன்.மக்களுக்கு பணம் வழங்கி சமய மதமாற்றம் மேற்கொள்ளும் எவ்வித நடவடிக்கையிலும் நாங்கள் ஈடுபடவில்லை.

எனது வீட்டுக்காணியில் சபையை நடாத்தி வருகின்றேன். பிரதேச சபை இதற்குரிய அனுமதியை தரவில்லை. கட்டிட அனுமதியைப் பெற்று சபையை நடாத்துமாறும் அமைதியான முறையில் மேற்கொள்ளுமாறு பிரதேச சபையினால் எனக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் வீட்டிற்கான கட்டிட அனுமதியைப் பெற்றுக்கொள்ளப்பட்ட போதிலும் ஆலயத்திற்கான வழிபாடுகளை மேற்கொள்வதற்கு பிரதேச சபையிடம் அனுமதி பெறப்படவில்லை. இதேவேளை அப்பகுதியில் சபையை நடாத்த வேண்டாம் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று இடம்பெற்று வருகின்றது.

சமாதானத்தை சீர்குலைக்கின்ற செயற்பாடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் வீடு வீடாகச் சென்று எவரையும் சபையில் இணைக்கவில்லை. சிலர் புற்றுநோயினால் வருகின்றார்கள் சுகமடைந்து செல்கின்றார்கள். அவர்கள் திரும்பவும் எமது வழிபாடுகளில் இணைந்து வருகின்றார்கள்.

பிசாசு பிடித்து சுகமானவர்கள் வருகின்றார்கள். நம்பிக்கையில் வருகின்றவர்களை நாங்கள் எவ்வாறு தடுத்து நிறுத்த முடியும்? எவரையும் நாங்கள் வற்புறுத்துவது கிடையாது கணவனை இழந்த ஐவர் வருகின்றார்கள் அவர்களுக்கு மட்டும் மாதாந்த உதவிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

மகாறம்பைக்குளத்தைச்சேர்ந்த 24 குடும்பங்கள் எமது சமய வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றார்கள். சபைக்கு வருகின்ற அனைவரும் ஒரு கிலோ மீற்றருக்குள்ளிருந்து வருகின்றார்கள். வவுனியாவில் ஏழு இடத்தில் எமது சபை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றது.

இலங்கை முழுவதும் 119 கிளைகள் இயங்கிவருகின்றன. எமது தலைமை அலுவலகம் வெள்ளவத்தையிலுள்ளது. இன்றைய எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் இங்குள்ள சிலரும் வெளியிலிருந்து வந்தவர்களுமே.

ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு மணித்தியாலங்கள் மட்டுமே எமது சபை வழிபாட்டு நடவடிக்கைகள் இடம்பெடுகின்றன. எனினும் இன்றைய தினம் இப்பகுதியின் எதிர்ப்பின் காரணமாக எமது சபை சமய வழிபாட்டு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் போதகர் மேலும் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடதிற்குச் சென்ற பொலிசார் இருபகுதியினருடையேயும் இணக்கத்தினை ஏற்படுத்த முற்பட்டுள்ளனர். சிறிது நேரத்தில் எதிர்பினை மேற்கொண்டவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

வவுனியா குருமன்காட்டில் திடீரென தீப்பற்றிய இறைச்சி விற்பனை நிலையம்!!

 

திடீரென தீ

வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள இறைச்சி விற்பனை நிலையம் இன்று (27.01.2019) மதியம் தீடிரென தீப்பற்றியெரிந்தது.

வவுனியா குருமன்காட்டு பகுதியில் அமைந்துள்ள இறைச்சி விற்பனை நிலையத்தின் மின்மானியில் ஏற்பட்ட மின்னேழுக்கினால் தீடிரென தீப்பற்றியெரிந்தது.

அவ்விடத்தில் நின்ற பொதுமக்கள் உடனடியாக செயற்பட்டு மண்ணைக் கொண்டு வீசி தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தினால் எவ்வித உயிராபத்துக்களோ, சேதங்களோ ஏற்படவில்லை.

நடிகருக்கு நான்காவது மனைவியான நடிகை : கேக் வெட்டி கொண்டாடிய முதல் கணவர்!!

 

நடிகருக்கு நான்காவது மனைவியான நடிகை

மலையாள நடிகை அம்பிளி தேவி, நடிகர்ஆதித்யன் ஜெயின் ஆகியோரின் திருமணம் கொல்லம் கொற்றங்குளங்கர தேவி கோயிலில் நடைபெற்றது.

இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர். நடிகர் ஆதித்யன் ஜெயினுக்கு இது நான்காவது திருமணம் ஆகும்.

நடிகை அம்பிளி தேவிக்கும் ஏற்கெனவே ஒளிப்பதிவாளர் லோவலுடன் திருமணம் ஆகியிருந்தது. நடிகர் ஆதித்யன் ஜெயினின் நான்காவது திருமணம் சர்ச்சையாகியிருக்கும் அதேசமயம் அவரை திருமணம் செய்துகொண்ட நடிகை அம்பிளி தேவியின் முதல் கணவன் லோவல் கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார்.

முன்னாள் மனைவிக்குத் திருமணம் நடந்ததை கேக் வெட்டி கொண்டாடும் கணவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மணமக்களின் புகைப்படங்களுடன் வைரலாகும் திருமண அழைப்பிதழ் : அப்படி என்ன விசேஷம் தெரியுமா?

 

வைரலாகும் திருமண அழைப்பிதழ்

தமிழகத்தின் கோவை தம்பதியின் வித்தியாசமான திருமண வரவேற்பு விழா அழைப்பிதழ் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. திருமணம் நடக்க போவது என்றால் அதற்கு முக்கிய தேவையாக திருமண அழைப்பிதழ்கள் உள்ளன. அதாவது அழைப்பிதழை கொடுத்து தான் நண்பர்கள், உறவினர்களை திருமணத்துக்கு அழைப்போம்.

இந்நிலையில் தமிழகத்தின் கோவையை சேர்ந்த ஒரு தம்பதியின் திருமண பத்திரிக்கை சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதற்கு காரணம், திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருபவர்களுக்கு சைடிஸ் உடன் மது இலவசமாக வழங்குவதாக குறிபிடப்பட்டுள்ளதே ஆகும்.

வரும் பிப்ரவரி 5ம் திகதி கோவையில் நடக்கவுள்ள இந்நிகழ்ச்சிக்கு வருகை தரும் திருமணம் ஆனவர்களுக்கு சைட்டிஸ் உடன் ஒரு குவாட்டரும், திருமணம் ஆகாதவர்களுக்கு சைட்டிஸ் உடன் இரண்டு குவாட்டர்களும் வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழ் உண்மையில் உருவாக்கப்பட்டதா அல்லது சமூக வலைத்தில் வைரலாக போலியாக உருவாக்கப்பட்டதா? என்ற விவரம் தெரியவில்லை.

வட்ஸ் அப் மற்றும் வைபர் உரையாடல்களை ஒட்டுக் கேட்பதற்கு அரசாங்கம் முயற்சி?

 

வட்ஸ் அப் மற்றும் வைபர்

பிரபல சமூக ஊடக தொலைதொடர்பு செயலிகளான வட்ஸ் அப் மற்றும் வைபர் ஆகியவற்றின் ஊடாக மேற்கொள்ளப்படும் உரையாடல்களை ஒட்டுக் கேட்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வட்ஸ்அப் மற்றும் வைபர் ஆகிய செயலிகளைக் கொண்டு மேற்கொள்ளப்படும் தொடர்பாடல்களை ஒட்டுக் கேட்க கூடிய கருவிகளை தருவிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வட்ஸ்அப் மற்றும் வைபர் ஆகியனவற்றின் ஊடான தொடர்பாடல்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய ஜாமர்களை கொள்வனவு செய்யவும் சட்டம் ஒழுங்கு அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நல்லாட்சி அரசாங்கத்தினால் இந்த கருவிகள் கொள்வனவு செய்யப்படவிருந்ததாகவும் அரசியல் குழப்ப நிலைமைகளின் பின்னர் மீளவும் இந்தக் கருவிகள் கொள்வனவு செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக களமிறக்குவதற்கான வியூகம் வகுக்கப்பட்ட போது முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் நல்லாட்சி ஆதரவ செயற்பாட்டாளர்கள் வைபர் தொழில்நுட்பத்தின் ஊடாகவே தொடர்பாடல் மேற்கொண்டிருந்தனர் என்பதனை தேர்தல் வெற்றியின் பின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

வயோதிப தாயை கல்லால் தாக்கிக் கொன்ற மகன்!!

 

தாயை கொன்ற மகன்

கம்பஹா – தெல்கொட கோழி பண்ணை ஒன்றுக்கு அருகில் வயோதிப தாயாரை கல்லால் தாக்கி கொலை செய்த மகனை தாம் இன்று கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 48 வயதான சந்தேக நபர், 71 வயதான தாயை இவ்வாறு கொலை செய்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், மகன், அருகில் கிடந்த சீமெந்து கற்களால் தாயை தாக்கியுள்ளதுடன் தாய் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் கம்பஹா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதுடன் தெல்கொட பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அக்காவின் கணவரால் சிறுமிக்கு நேர்ந்து வந்த கொடூரம்!!

 

சிறுமிக்கு நேர்ந்த  கொடூரம்

திருகோணமலை – கிண்ணியாவில் மனைவியின் தங்கையை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபரை பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை இன்று திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் அவரது வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நடுவூற்று, கிண்ணியா பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

10 வயதுடைய மனைவியின் சொந்த தங்கையான சிறுமியை, மனைவி வெளியில் சென்றவுடன் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். இந்த செயற்பாட்டில் சந்தேகநபர் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கணவன் மேல் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் மனைவி பொலிஸாருக்கு வழங்கிய தகவலால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது வைத்திய பரிசோதனைக்காக கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழில் தாயிடம் இருந்த குழந்தை மரணம் : தந்தை நீதிமன்றில்!!

குழந்தை மரணம்

நான்கு மாத குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சடலத்தை பிரேதத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு பருத்தித்துறை மரணவிசாரணையினை அதிகாரி சதாசிவம் சிவராஜா. உத்தரவிட்டார்

வல்வெட்டித்துறை இமையாளன் பகுதியைச் சேர்ந்த அ.அஸ்மிதா என்ற நான்கு மாத குழந்தை சனிக்கிழமை (26) இரவு உயிரிழந்தது.

குழந்தையின் தாயும் தந்தையும் சில தினங்களுக்கு முன்னர் பிரிந்து வாழும் நிலையில் குழந்தை இறந்ததால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை வல்வெட்டித்துறை பொலிசில் முறையிட்டுள்ளதையடுத்தெ குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.