தனது வீட்டு மலசல கூடத்தில் குழந்தையைப் பெற்றெடுத்த பாடசாலை மாணவி!!

 

குழந்தையைப் பெற்றெடுத்த பாடசாலை மாணவி

மொனராகலை, மெதகம பொலிஸ் பிரிவில் வசிக்கும் தரம் 11 இல் கல்வி பயிலும் சிறுமியொருவர் தனது வீட்டு மலசல கூடத்தில் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குழந்தை பிறந்தவுடன், குறித்த சிறுமியின் தாயார் குழந்தையையும் தனது மகளையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

தற்போது, குழந்தை மற்றும் தாய் பிபில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிகக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

குழந்தை பிறக்கப்போவதாக தான் அறிந்திருக்கவில்லை எனவும் வயிற்று வலி காரணமாக தான் மலசல கூடத்திற்கு சென்றதாகவும் அதன்போது குழந்தை பிறந்ததாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமி தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் இளைஞனைக் காதலித்து வந்துள்ளதாகவும் குறித்த இளைஞனுடன் பல முறை சிறுமி ஒன்றாக இருந்துள்ளதாகவும் கடைசியாக கடந்த வருடம் மார்ச் மாதம் குறித்த இளைஞனுடன் ஒன்றாக இருந்ததாக பொலிஸாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, சந்தேகநபரை மெதகம பொலிஸார் கைது செய்தனர். அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பிபில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக மெதகம பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் புதிய மதுபான சாலைக்கு எதிராக சுவரொட்டிகள்!!

 

மதுபானசாலைக்கு எதிராக சுவரொட்டிகள்

புதிய ஜனநாயக இளைஞர் முன்னணியினால் வவுனியா நகரின் பல பாகங்களில் வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன் இயங்கும் மதுபானசாலைக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

நேற்று இரவு புதிய ஜனநாயக இளைஞர் முன்னணியின் இளைஞர்களினால் வவுனியா புதிய பஸ்நிலையத்தில் மதுபானசாலையை உடன் அகற்று, வவுனியா புதிய பஸ் நிலையத்தில் மதுபானசாலை வேண்டாம், வவுனியா புதிய பஸ் நிலையம் மதுபானபிரியர்களின் உல்லாச இடமாகுமா?,

வவுனியா அம்மாச்சி உணவகத்திற்கு முன்பாக மதுபானசாலை அவசியமா? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுவரொட்டிகள் புதிய பேருந்து நிலையம், குருமன்காடு, வைரவபுளியங்குளம், பழைய பேருந்து நிலையம், தினசரி சந்தை பகுதி, தாண்டிக்குளம் உட்பட வவுனியா நகரின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

 

யாழ்ப்பாணத்திற்கு ஏற்பட்டுள்ள புதிய ஆபத்து : ஆதாரங்களை அம்பலப்படுத்தும் பெண்!!

யாழ்ப்பாணத்தில் திட்டமிட்டு பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்று வருவதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கமைவாக நெடுங்குளம் பகுதியில் 300 பரப்புக் காணியை அரசாங்கம் சுவீகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த பகுதியில் நேற்று காணி அளவீடுகளை மேற்கொள்ள அதிகாரிகள் சென்ற போது, அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து காணி அளக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

நெடுங்குளம் பகுதியில் 300 பரப்புக் காணியை சுவீகரிக்கப் போவதாக யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தினால் காணி சுவீகரிப்பு அறிவிப்பு ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.

உரிமை கோரப்படாத காணியை சுவீரிக்கவுள்ளதால், காணி உரிமையாளர்கள் இருந்தால், உடனடியாக பிரதேச செயலகத்தை தொடர்பு கொள்ளுமாறும் சுவீகரிப்பு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனயைடுத்து காணி உரிமையாளர்கள், காணி உரிமத்திற்குரிய ஆவணங்களைக் கொண்டு சென்றுள்ளனர்.

இதன்போது காணி சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது, யாரும் உரிமை கோர முடியாது. காணிக்கு சொந்தக்காரர்களுக்கு பிரதேச செயலளர் கடும் அச்சுறுத்தல் விடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

காணிக்குரிய அனைத்து ஆவணங்களும் கையளிக்கப்பட்ட போதும், இவ்வாறான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் மேலும் தெரிவித்துள்ளார்.

அங்கு இடம்பெற்ற அடாவடித்தனங்கள் குறித்து ஊடகங்களுக்கு குறித்த பெண்மணி தகவல் வெளியிட்டார்.

வீதியில் குடைசாய்ந்து லொறி விபத்து!!

 

லொறி விபத்து

திஸ்ஸமஹாராம பகுதியிலிருந்து அக்கரபத்தனைக்கு கால்நடைக்கான தீணிகளை ஏற்றி சென்ற லொறி இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில், ரதல்ல குறுக்கு பாதையில் வைத்து குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

லொறியில் ஏற்பட்ட இயந்திர கோளாரே விபத்துக்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது. லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், சாரதி சிறு காயங்களுக்கு இலக்காகியுள்ளதுடன், உதவியாளர் படுகாயங்களுக்கு உள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த லொறியில் இருந்த கால்நடை தீணிகளை பிரதேச மக்களின் உதவியுடன் மற்றுமொரு லொறிக்கு ஏற்றி, அதனை உரிய இடத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னாரில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்பு!!

வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்பு

மன்னார் – சௌத்பார் பிரதான வீதி, சாந்திபுரம் உப்பளம் பகுதியில் வயோதிபர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலத்தை மன்னார் பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் மன்னார் பனங்கட்டிக்கோட்டு கிராமத்தை வதிவிடமாக கொண்ட கதிர்காமநாதன் அருளானந்தன் (82 வயது) என தெரியவருகிறது. குறித்த வயோதிபர் நேற்று இரவு வீட்டில் இருந்து சென்ற நிலையிலே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அப்பகுதியால் சென்றவர்கள் சடலத்தை கண்டு மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையிலே மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டுள்ளனர். குறித்த வயோதிபரின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவிலுள்ள மதுபானசாலையை அகற்றக்கோரிய சுவரொட்டிகளை கிழித்தெறிந்த அதிபர்!!

 

சுவரொட்டிகளை கிழித்தெறிந்த அதிபர்


வவுனியா பேரூந்து நிலையத்திற்கு முன்பாக குடிமனைகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையை அகற்றக்கோரி புதிய ஜனநாயக இளைஞர் முன்னணியினால் வவுனியா நகர்ப்பகுதியில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அரசாங்க பாடசாலை பிரதி அதிபரொருவர் இரவோடிரவாக கிழித்தெறிந்த சம்பவம் நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக அண்மையில் அரச அதிகாரிகளின் சிபாரிசுடன் மதுபானசாலையொன்று திறக்கப்பட்டிருந்தது. குறித்த மதுபானசாலை மக்கள் குடிமனைக்கு மத்தியிலும் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி உணவகத்திற்கும் முன்பாக திறக்கப்பட்டிருந்ததை கண்டித்து வவுனியா பொது அமைப்புக்கள் அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.

வவுனியா அரசாங்க அதிபர் குறித்த மதுபானசாலையை அவ்விடத்தில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார். எனினும் மதுபானசாலை அகற்றப்படாமையால் புதிய ஜனநாயக இளைஞர் முன்னணியினர் ஜனநாயக வழியில் சுவரொட்டி போராட்டமென்றை நேற்று இரவு முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது வவுனியாவில் பல இடங்களிலும் சுவரொட்டிகளை இரவிரவாக இளைஞர்கள் ஒட்டிய நிலையில் முற்சக்கரவண்டியொன்றில் வருகைதந்த வவுனியா மன்னார் வீதியில் நகருக்கு அண்மையில் இயங்கும் விசேட கல்வித்திட்டத்தினை உள்ளடக்கிய அரச பாடசாலையின் பிரதி அதிபர் மற்றுமொருவருடன் இணைந்து குறித்த சுவரொட்டிகளை கிழித்தெறிந்துள்ளார்.

இந் நிலையில் சுவரொட்டிகள் கிழிக்கப்படுவதாக இளைஞர் முன்னணியினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து முற்சக்கர வண்டியை வழிமறித்து ஏன் சுவரொட்டிகளை அகற்றுகின்றீர்கள் என கேட்டதுடன் ஊடகவியலாளர்களுக்கும் தகவலை வழங்கியிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர்கள் சுவரொட்டிகளை கிழித்த நபர் பிரதி அதிபரொருவராகவும், மொழிபெயர்பாளராகவும் உள்ள ஒருவரென அடையாளம் கண்டுகொண்டனர். இதனையடுத்து குறித்த பிரதி அதிபர் அவ்விடத்தில் இருந்து தன்னுடன் வந்தவருடன் தப்பிச் சென்றிருந்தார்.

பின்னர் முற்சக்கரவண்டியை பார்வையிட்ட இளைஞர்கள் அதனுள் கத்தி, மா, சில சுவரொட்டிகள் இருப்பதை கண்டனர்.  இதன்போது அங்கு குழுமியவர்கள் நேற்று ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட போதை மற்றும் மது ஒழிப்பு வாரத்தின் இறுதி நாளிலேயே பிரதி அதிபரொருவர் இவ்வாறு நடந்து கொண்டதையிட்டு விசனமடைந்துள்ளனர்.

யாழில் மதிய உணவு வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

 

உணவுப் பொதியில் மட்டத்தேள்

மதிய உணவுக்காக யாழில் உள்ள உணவகத்தில் வாங்கிய உணவு பொதியில் மட்டத்தேள் காணப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அருகில் உள்ள உணவகத்தில் வழமை போன்று வாடிக்கையாளர் ஒருவர் நேற்று மதிய உணவுப் பொதி ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.

இந்நிலையில், உணவினை பிரித்து பார்த்த போது கறிகளுக்கு இடையே மட்டத்தேள் காணப்பட்டது. இதனால் மீளவும் உணவகத்திற்கு சென்று உரிமையாளரிடம் முறையிட்டுள்ளார்.

எனினும் குறித்த உணவக உரிமையாளர் வாடிக்கையாளரை உதாசீனம் செய்ததுள்ளார். உணவக உரிமையாளர் மீது வாடிக்கையாளர் பொதுச்சுகாதார உத்தியோகத்தரிடம் உரிய ஆதாரத்துடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முறைப்பாட்டு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா நொச்சிக்குளம் கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி!!

 

வவுனியா நொச்சிக்குளம் இல : 01 கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி நேற்றுமுன்தினம் பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கே.கே.மஸ்தான்(வன்னி பாராளுமன்ற உறுப்பினர்) , ஜனாதிபதியின் செயலாளர் சேனக்க கௌரவ விருந்தினராக எஸ்.சசிகுமார் (கோட்டக் கல்வி அதிகாரி ஓமந்தைக் கோட்டம்) , ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் அணிநடை நிகழ்வு, ஒட்டப்போட்டி, வினோத உடை போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றதுடன் இறுதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு தேசிய வேலைத்திட்டம்!!

போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் பாடசாலை போதைப்பொருள் தடுப்பு தேசிய வேலைத்திட்டத்திற்கு ஏற்ப இறுதி நாளான இன்று நிகழ்வுகள் வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் அதிபர் த.பூலோகசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

போதைவஸ்துக்கு எதிரான பதாதைகள் தாங்கியவாறு வீதிக்கு வந்த மாணவர்கள் போதைக்கு எதிரான கோசங்களை எழுப்பினர்.

‘போதைக்கு எதிராக பாடசாலையின் சக்தி’ என்ற தொனிப்பொருளில் பாடசாலை போதைப்பொருள் தடுப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கடந்த நான்கு நாட்களாக பாடசாலைகளில் நடைபெற்று வந்த நிலையில் ஐந்தாவது நாளான இன்று போதைவஸ்தை தடுப்பது தெர்டர்பாக ஊடகங்கள் ஆற்றிய சேவைகள் குறித்தும் மாணவர்களின் கேள்விகளுக்கு ஊடகவியலாளர் பதிலளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்களின் மாபெரும் பேரணி!!

 

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இன்று(25.01) போதை ஒழிப்பு வாரத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் பாடசாலை அதிபர் ரி.அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

பாடசாலை வாயிலிருந்து ஆரம்பமாகிய மாணவர் பேரணி கண்டி வீதியூடாக பழைய பேருந்து நிலையம், வைத்தியசாலை சுற்றுவட்டம் சென்று ஹொறவப்பொத்தான வீதியூடாக பஜார் வீதி மணிக்கூட்டு கோபுரம் சென்று கண்டி வீதி வழியாக மீண்டும் பாடசாலையை சென்றடைந்துள்ளது.

கடந்த 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி இன்று வரையான காலப்பகுதி வரை ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட போதை ஒழிப்பு வாரத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் பாடசாலை மட்டத்தில் இன்றுடன் நிறைவுறுகின்றது.

இதையடுத்து வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பாடசாலைமட்ட போதை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணியில் போதைக்கு எதிரான பதாதைகளை தாங்கியவாறு பெருமளவான மாணவர்கள், ஆசிரியர்கள், கலந்துகொண்டனர்.

நடிகை பானுப்பிரியா வீட்டில் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி!!

 

நடிகை பானுப்பிரியா

நடிகை பானுப்ரியா வீட்டில் வேலை செய்யும் சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக புகார் கூறப்பட்ட நிலையில் காவல் நிலையத்தில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திராவை சேர்ந்த பிரபாவதி என்ற பெண், சந்தியா ( 14) என்கிற தனது மகள் நடிகை பானுப்ரியா வீட்டில் வேலை செய்வதாகவும், அவரும் அவரது சகோதரரும் மகளை அடிமைபோல் நடத்துவதாகவும் பொலிசில் புகார் செய்திருந்தார். மேலும் சந்தியாவுக்கு சம்பளம் தராமல் இழுத்தடிப்பதாகவும், பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாகவும் புகாரில் குறிப்பிட்டார்.

இச்செய்தி ஊடகங்களில் வந்து பரபரப்பான நிலையில், பாதிக்கப்பட்ட சந்தியாவை நடிகை பானுப்ரியா புகார் செய்யப்பட்ட காவல் அதிகாரிகள் முன்னிலையில் ஒப்படைத்ததாகவும் அவர்களிடம் சந்தியா, பானுப்ரியாவோ அவரது சகோதரரோ தன்னைத் துன்புறுத்தவோ, வீட்டுக்காவலில் வைக்கவோ இல்லை என்று வாக்குமூலம் அளித்ததாகவும் தெரிகிறது.

இதையடுத்து தனது தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்வதற்காக சிறுமியுடன் நடிகை பானுப்ரியா செய்தியாளர்களை சந்திப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

கிட்னியோடு வந்தால் திருமணம் : வயது குறைந்த இளைஞனை காதலித்த பெண்ணின் பரிதாப நிலை!!

 

பெண்ணின் பரிதாப நிலை

தமிழகத்தில் காதலித்து திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், காதலன் கிட்னியை காரணம் காட்டி திருமணம் நிறுத்தியுள்ளதாக, இளம் பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த நித்தியா(32) என்ற பெண் நேற்று சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், நான் ஆலந்தூரில் என் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். இரண்டு வருடத்திற்கு முன்பு விக்னேஷ்(29) என்பவர் நண்பர் மூலம் அறிமுகம் ஆனார்.

இருவரும் வாட்ஸ் அப் மூலம் நண்பராக பழகினோம். அதன் பின் நாளைடைவில் விக்னேஷ் என்னை காதலிப்பதாக கூறினார். நான் அவரை விட மூன்று வயது அதிகமான பெண் என்பதால், வேண்டாம் என்று மறுத்தேன், தொடர்ந்து அவர் வற்புறுத்தியதால், காதலை ஏற்றுக் கொண்டேன்.

காதலிக்கும் போது விக்னேஷிடம் எனக்கு பிறவியிலேயே வலது பக்கம் கிட்னி மட்டும் இருப்பதாகவும், இது எனக்கே 4 வருடத்திற்கு முன்பு தான் தெரியும் என்று கூறினேன். அதற்கு விக்னேசும், நானும் கால்கள் தாங்கி தான் நடப்பேன் என்று என்னிடம் கூறினார். இதைத் தொடர்ந்து கடந்த 2017-ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணத்திற்கான தாம்பூலம் மாற்றி கொண்டனர்.

இதனால் இருவரும் நெருக்கமாக பழகினோம். விக்னேஷ் இப்போது ஹைதராபாத்தில் வேலை செய்து வருகிறார். திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு எனது தந்தை காலமானார். அதன் பிறகு எங்கள் வழக்கப்படி பெண் வீட்டார் தான் திருமண செலவுகளை ஏற்ற வேண்டும். மேலும் 20 சவரன் நகை வரதட்சணையாக கொடுக்க வேண்டும் விக்னேஷ் தரப்பினர் கேட்டனர்.

இதனால் விக்னேஷ் தரப்புக்கும் எங்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. தற்போது, என்னை இரண்டு கிட்னியோடு வந்தால் திருமணம் செய்து கொள்வதாக விக்னேஷ் மற்றும் அவரது வீட்டார் கூறிவிட்டனர்.

நான் நிச்சயிக்கப்பட்ட பிறகு காதலித்த விக்னேஷ் தான் கணவன் என்று உறவினர்களுக்கு எல்லோருக்கும் தெரியும். தற்போது கிட்னியை காரணம் காட்டி திருமணத்தை நிறுத்திய விக்னேஷ் மற்றும் அவரது குடும்பத்தார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். பொலிசார் இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

தூக்கில் தொங்கிய இளம் ஆசிரியை : சகோதரனுக்கும், வருங்கால கணவருக்கும் எழுதிய உருக்கமான கடிதம்!!

 

தூக்கில் தொங்கிய இளம் ஆசிரியை

ராஜஸ்தான் மாநிலத்தில் 2 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு பள்ளி ஆசிரியை தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கணேஷ் விஹார் பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் 26 வயதான நிஷா சௌத்ரி.

இவருக்கும் பாபு என்பவருக்கும் மார்ச் 10ம் தேதி திருமணம் செய்வதாக பேசி முடிக்கப்பட்டிருந்தது. அதற்கான வேளைகளில் இருவீட்டாரும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நிஷா தான் வசித்து வந்த வாடகை வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார்.

இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் வீட்டில் சோதனை மேற்கொள்ளும் போது, டிசம்பர் 18 மற்றும் 19ம் தேதி என குறிப்பிடப்பட்டிருந்த இரண்டு கடிதங்கள் சிக்கியது. அதில் முதல் கடிதத்தை தன்னுடைய தம்பிக்கும், இரண்டாவது கடிதத்தை வருங்கால கணவர் பாபுவிற்கும் எழுதி வைத்திருந்துள்ளார்.

என்னுடைய தம்பி தான் எனக்கு வாழ்க்கை பற்றிய அனைத்தையும் கற்று கொடுத்தான். அவன் என்னை மிகவும் நேசிக்கிறான். என்னை நன்கு வாழ வைக்க போராடினான். ஆனால் நான் உனக்கு ஒரு நல்ல சகோதரியாக இருக்க முடியவில்லை என எழுதியிருந்தார்.

அதேபோல தன்னுடைய வருங்கால கணவருக்கு எழுதிய கடிதத்தில், நான் உங்களுக்கு நல்ல மனைவியாக இருக்க முடியாது என்னை மன்னித்து விடுங்கள் பாபு என குறிப்பிட்டிருந்தார். தற்போது இரண்டு கடிதங்களையும் கைப்பற்றியிருக்கும் பொலிஸார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் வீதியில் குறுக்கிட்ட நாயால் நடந்த விபரீதம்!!

 

நாயால் நடந்த விபரீதம்

யாழ்ப்பாணம் – காங்சேன்துறை பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் உள்ள வீதியில் பயணித்த வேன் ரக வாகனம் ஒன்று வீதியை விலகி மின்சார தூணில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

காரைநகர் பிரதேச செயலக பிரிவிற்கு சொந்தமான வாகனமே நேற்றைய தினம் இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

வீதியில் குறுக்கிட்ட நாய் ஒன்றை காப்பாற்றுவதற்காக சாரதி வேனை திருப்பியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தின் போது வேனில் காரைநகர் பிரதேச செயலாளரும், சாரதியும் பயணித்துள்ள நிலையில், அவர்கள் இருவரையும் பிரதேசவாசிகள் காப்பாற்றியதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கோபம் தீரும் வரை மனைவியை கத்தியால் வெட்டிய கொலைசெய்த கணவன்!!

 

கொலைசெய்த கணவன்

ராகமை – கனேமுல்லை பகுதியில் மனைவியை கத்தியால் வெட்டி கணவன் கொலை செய்தமைக்கான காரணம் வௌியாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. கனேமுல்லை பகுதியில் வசிக்கும் 35 வயதுடைய தனியார் வைத்தியசாலையில் தாதியாக கடமை புரியும் பெண் ஒருவரே இவ்வாறு கணவரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

 

குறித்த பெண் தாதியாக கடமையாற்றும் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்கொண்டுள்ளமையை அறிந்து கொண்டுள்ள கணவர் பல முறை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் குறித்த பெண், வைத்தியருடன் ஏற்படுத்திக்கொண்ட தகாத உறவினை நிறுத்திக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் வழமையை போன்று ஒரு தினம் குறித்த பெண் கடமைக்கு சென்ற பின்னர் கணவருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. வைத்தியருடன் மனைவி தனியார் விடுதியில் இருப்பதாக அந்த அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனையடுத்து கோபமடைந்த கணவர், மனைவி வீடு திரும்பியவுடன் அவரை கோபம் தீரும் வரை கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சரணடைந்த குறித்த நபரை கைது செய்த காவல் துறையினர் மனைவியை பார்வையிட அவரின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

தரையில் வீழ்ந்து கிடந்த மனைவியை நோயாளர் காவு வண்டியில் ஏற்றி றாகமை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இரத்தம் அதிகம் சிந்திய நிலையில் குறித்த பெண்ணை சிகிச்சைக்குட்படுத்திய வேளையில் அவர் வைத்தியசாலைக்கு அழைத்து வருவதற்கு முன்னரே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த பெண்ணுடன் தகாத உறவினை வைத்திருந்த வைத்தியரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பில் அணிலால் நடந்த விபத்து : மூவர் படுகாயம்!!

 

அணிலால் நடந்த விபத்து

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடியில் நபர் ஒருவர் மேற்கொண்ட மனிதாபிமான செயற்பாட்டினால் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் மோட்டார்சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த வேளை அணிலொன்று குறுக்கிட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த நபர் அணிலை காப்பாற்றுவதற்காக திடீரென பிறேக் பிடித்த போது பின்னால் வந்த முச்சக்கரவண்டி, மோட்டார்சைக்கிளை மோதியுள்ளது.

இவ்விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதுடன் இரு வாகனங்களும் சேத்திற்குள்ளாகியுள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.