இலங்கையிலுள்ள தாயை பார்க்க சுவிஸில் இருந்து வந்த யுவதிக்கு ஏற்பட்ட விபரீதம்!!

 

யுவதிக்கு ஏற்பட்ட விபரீதம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை சுவிஸ் நாட்டவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். 24 வயதான ஜேர்மன் பெண்ணை 50 வயதான சுவிஸ் நாட்டவர் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

குறித்த நபர் கைது செய்யயப்பட்ட நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 50 வயதான சுவிஸ் நாட்டவருக்கு எதிராக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலையத்தில், 24 வயதான ஜேர்மன் பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த பெண் விமான நிலையத்தில் பை எடுக்கும் பகுதிக்கு சென்றுள்ளார். இதன் போது குறித்த சந்தேக நபர் நீங்கள் மிகவும் அழகாக இருக்கின்றீர்கள். நான் உங்களை காதலிக்கின்றேன் என கூறியவாறு பலவந்தமாக பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இந் நிலையில் அவர் பிணை வழங்குமாறு கோரியுள்ளார். எனினும் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் பெண்ணின் தாயார் இலங்கையை சேர்ந்த பெண் எனவும், அவர் தனது தாயை பார்ப்பதற்காக நாட்டிற்கு வந்த சந்தர்ப்பத்திலேயே இந்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளார்.

வெறும் 20 ஆயிரம் ரூபா செலவு : இலங்கை இளைஞன் கண்டுபிடித்த புதிய வாகனம்!!

 

இளைஞன் கண்டுபிடித்த புதிய வாகனம்

குருணாகலில் பாடசாலை மாணவன் தயாரித்த புதிய வாகனம் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பொல்கஹவெல பராக்கிரமபாகு பாடசாலையை சேர்ந்த எஸ்.ஏ.இஷார கசுன் என்ற உயர்தர பரீட்சை எழுதும் மாணவனே இந்த மோட்டார் வாகனத்தை தயாரித்துள்ளார்.

மோட்டார் சைக்கிளின் என்ஜின் ஒன்றை பயன்படுத்தி அவர் இந்த வாகனத்தை தயாரித்துள்ளார். இரும்பினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தை காலில் மிதித்து செலுத்த முடியும். இந்த வாகனத்தில் க்லெட்ச், பிரேக் மற்றும் என்ஸ்லேட்டர் கொண்டு இயக்க கூடிய வகையில் கியர் ஒன்றும் இந்த இளைஞனினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தில் 3 பேர் பயணிக்க முடியும். இந்த வாகனத்தை தயாரிப்பதற்கு குறித்த இளைஞன் 20000 ரூபா பணத்தை செலவிட்டுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் இந்த வாகனத்தை மேலும் விரிவுபடுத்தி ஊனமுற்றோர் பயணிக்க கூடிய வகையில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக குறித்த மாணவன் குறிப்பிட்டுள்ளார். எவ்வித செலவுகளுமின்றி இந்த வாகனத்தை ஓட்டமுடியும் என்பதே இதன் சிறப்பம்சமாக கருதப்படுகின்றது.

வவுனியாவில் நிர்க்கதியான இரு சிறுவர்கள் பொலிசாரால் மீட்பு!!

 

நிர்க்கதியான இரு சிறுவர்கள்

வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை 7 வயது மற்றும் 9வயதுடைய இரு சிறுவர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் தந்தை என்று சொல்லப்படும் ஒருவருடன் நீண்ட நேரமாக பேருந்து நிலையத்தில் நின்றிருந்ததை அவதானித்துள்ள வியாபார நிலைய உரிமையாளர்கள் பொலிசாருக்கு இத்தகவல்களை வழங்கியுள்ளனர்.

நேற்று மாலை பொலிசார் இரு சிறுவர்களையும் சிறுவர்களின் தந்தை என்று நம்பப்படும் மதுபோதையிலிருந்த நபர் ஒருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று காலை முதல் மாலை வரை வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் 7வயது மற்றும் 9வயது மதிக்கத்தக்க பெண், ஆண் என இரு சிறுவர்கள் தமது தந்தை என்று சொல்லிக்கொண்ட நபர் ஒருவருடன் நீண்ட நேரமாக பேருந்து நிலையத்தில் நின்றிருந்ததை அவதானித்துள்ள வர்த்தகர்கள் சிலர் அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதையடுத்து நேற்று மாலை 5 மணியளவில் வவுனியா பொலிசாருக்கு இத்தகவலை வழங்கியுள்ளனர்.

சிறுவர்பிரிவு பொலிசார் பேருந்து நிலையத்தில் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்ததுடன் தந்தை என்று அழைக்கப்பட்டவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டபோது அவர் மதுபோதையிலிருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இரு சிறுவர்களையும் மதுபோதையில் காணப்பட்ட தந்தை என்று சிறுவர்களினால் அழைக்கப்பட்ட நபரையும் அழைத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.

வவுனியாவில் கடும் பனிமூட்டம் : இயல்புநிலை பாதிப்பு!!

 

கடும் பனிமூட்டம்

வவுனியாவில் கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடும் பனிமூட்டம் காணப்படுவதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

காலை எட்டு மணியை கடந்தும் வவுனியாவில் உள்ள பிரதேசங்களில் பனி மூட்டம் நிறைந்து காணப்படுகின்றது.

அத்துடன் கடுமையான பனிப் பொழிவு காரணமாக வீதிகளில் வாகனத்தை செலுத்தும் வாகன சாரதிகள்பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கியுள்ளனர். மக்களது நடமாட்டமும் வீதிகளில் காலைவேளையில் குறைவாகவே காணப்படுகின்றது.

மட்டக்களப்பில் தொடரும் இளம் பெண்களின் தற்கொலைகள்!!

 

பெண் தற்கொலை

மட்டக்களப்பு – கல்லடி, நாவற்குடா இசை நடனக்கல்லூரி வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 18 வயதுடைய சுப்ரமணியம் கிருத்திகா எனும் யுவதியே இவ்வாறு வீட்டில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தி வருகின்றனர். இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக தற்கொலைகள் அதிகரித்து வருவது கவலையினை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இளம்பெண்கள் மத்தியிலான தற்கொலைகள் அதிகரித்து வருவதை காணமுடிவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 23 நாட்களில் எட்டுக்கும் மேற்பட்ட தற்கொலை மரணங்கள் இடம்பெற்றுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக அதிகரித்துவரும் இவ்வாறான சம்பவங்களை தடுப்பது குறித்து முறையான திட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

வவுனியாவில் கிறிஸ்தவ தேவாலயத்தை உடைக்க நகரசபை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்!!

நகரசபை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

வவுனியா சின்னக்குளத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றை இடித்து அகற்றுவதற்கு வவுனியா நகரசபை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. குறித்த கிறிஸ்தவ தேவாலயமானது வவுனியா நகரிலிருந்து ஐந்து கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள நிலையில் தேவாலயம் கட்டுமானப்பணிகளின் போது நகரசபையின் அனுமதியினை பெறவில்லை என தெரிவித்தே நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ தேவாலயத்திற்கு எதிராக விதிமுறைகளை மீறியதாக தொடுக்கப்பட்ட வழக்கு குறித்து கருத்து தெரிவித்த குறித்த தேவாலயத்தின் தலைமை போதகர் தேவாலயத்தின் கட்டுமானப்பணிகள் ஆரம்பிப்பதற்கு முன்பாக வவுனியா நகரசபையின் அனுமதி கோரலுக்காக கடந்த 2010 ஆம் ஆண்டு சகல ஆவணங்களும் நகரசபைக்கு சமர்ப்பித்திருந்தோம்.

கடந்த எட்டு ஆண்டுகளாக அனுமதி வழங்காமல் இழுத்தடித்த நகரசபை திடீரென தேவாலயத்தை இடிப்பதற்கு நீதிமன்ற நோட்டிஸ் அனுப்பியுள்ளது. இவ் வழக்கு சம்பந்தமாக எமது சட்டத்தரணி ஊடாக அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளோம்.

வவுனியா நகரில் 400 அதிகமான கட்டிடங்கள் நகரசபையின் அனுமதி இன்றியே கட்டப்பட்டுள்ளது. வவுனியா நகரிலிருந்து நகரசபை எல்லையில் எவருக்கும் தொந்தரவு இல்லாத இடத்தில் அமைந்துள்ள எமது தேவாலயத்தை இடிக்க நகரசபை முயற்சி செய்வது எமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது சம்பந்தமாக நகரசபைக்கு எதிராக எமது சட்டத்தரணி எல்.ஜெஸ்ரீன் ஊடாக உயர்நீதிமன்றில் வழங்கு தாக்கல் செய்துள்ளோம். அதன் அடிப்படையில் நகரசபை நிர்வாகத்தின் மீது ஒரு முழுமையான விசாரணைய உள்ளுராட்சி அமைச்சு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.

எமது தேவாலயம் குறிவைக்கப்பட்டதானது அரசியல் ரீதியான நோக்கம் கொண்டதாக இருக்கலாம் என்ற சந்தேகமும் இருப்பதாக தெரிவித்தார்.

வவுனியா கோவில்குளம் அருளகம் சிறுவர் இல்லத்தில் புதிய கட்டிடம் திறந்துவைப்பு!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அனுசரணையின் கீழ் இயங்கும் அருளகம் சிறுவர் இல்லத்தில் அவுஸ்திரேலிய தமிழர் ஒன்றியத்தின் உதவியில் அமையப்பெற்ற கட்டிடத்தின் திறப்பு விழா 22 .01.2019 செவ்வாய்க்கிழமை காலை 9.00மணியளவில் இடம்பெற்றது.

மேற்படி கட்டிடம் அவுஸ்திரேலிய தமிழ் ஒன்றிய உறுப்பினர் கலாநிதி கதிர்.ப. சிவகுமாரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அருளக சிறுவர் சிறுமியர் மற்றும் ஆலய அறங்காவலர் சபையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிரலாகல தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!!

வரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்த தென்கிழக்கு பல்கலைகழகத்தின் மாணவர்கள் ஏழு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபி மீது ஏறி பிடிக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரிமாறப்படுவதாக அந்த வலயத்திற்கு பொறுப்பான தொல்பொருள் அதிகாரி ஹொரவபொத்தான காவற்துறையில் நேற்று பிற்பகல் முறைப்பாடு செய்திருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாள் ஒன்றில் கிரலாகல தொல்பொருள் வனப்பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்த சிலர் இந்த புகைப்படங்களில் தோன்றியுள்ளதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கமைய மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்கள் ஏழு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைக்கவசம் அணியாத முதியவரை தாக்கும் போக்குவரத்துப் பொலிசார்!!

 

போக்குவரத்துப் பொலிசார்

பாதுகாப்பு தலைகவசம்யின்றி உந்துருளியில் காவற்துறையின் கட்டளைகளை புறக்கணித்து பயணித்த நபர் ஒருவரை கைது செய்ய முற்பட்ட போது ஏற்பட்ட பதற்ற நிலைமை தொடர்பிலான காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவிவருகின்றது.

குறித்த உந்துருளியாளரை நிறுத்துமாறு கோரியும் அதனை பொருட்படுத்தாமல் சென்றுள்ள நிலையில் மீக நீண்ட தூரம் சென்று பிடித்ததாக காவற்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த சம்பவம் எந்த பிரதேசத்தில் இடம்பெற்றது என குறிப்பிடப்படவில்லை. சம்பவம் குறித்த காணொளி இணைப்பு.

கோர விபத்தில் சிக்கி தாய் மற்றும் மகள் பலி : இருவர் காயம்!!

 

தாய் மற்றும் மகள் பலி

அனுராதபுரம் – புத்தளம் பிரதான வீதி பொதானேகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாய் மற்றும் மகள் உயிரிழந்து மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

அதிவேகமாக பயணித்த கெப் ரக வாகனம், முச்சக்கர வண்டியுடன் மோதுண்டு இன்று குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 73 வயது தாய் மற்றும் 54 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் மகளின் கணவர் காயமடைந்து, அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இலங்கை வாகன சாரதிகளுக்கான எச்சரிக்கை!!

 

வாகன சாரதிகளுக்கான எச்சரிக்கை

பாரிய தவறுகளை மேற்கொள்ளும் சாரதிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையை அதிகரிப்பதற்கு எதிர்வரும் சில வாரங்களில் செயற்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அபராதத்திற்கு மேலாக அவர்களின் சாரதி அனுமதி பத்திரத்தையும் இரத்து செய்வதற்கு தேவைய சட்டத்தை எதிர்வரும் காலத்தில் அமுல்படுத்தவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கல்லடி பாலத்தில் சடலமாக தனது மகளின் மரணத்தில் மர்மம் : ஊடகங்களின் முன் கதறும் தாய்!!

 

மகளின் மரணத்தில் மர்மம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இன்று அவர்களது வீட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த மரணமடைந்த மாணவியான வசந்தராஜா தேவயானியின் தாயாரான வசந்தராஜா மல்லிகாதேவியே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மரப்பாளம் கிராமத்தை சேர்ந்த வசந்தராஜா தேவயாணி (18 வயது) என்ற மாணவி கடந்த 30.10.2018 அன்று மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.

சடலம் மீட்க்கப்பட்டு 85 நாட்கள் கடந்துள்ள நிலையில் தங்களது மகளின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும், மகள் கல்லடி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்டதை வைத்து அவள் தற்கொலை செய்து கொண்டாள் என்று சொல்லமுடியாது எனவும், தனது மகளின் மரணம் கொலையாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறுவதற்கான காரணங்கள் இருப்பதாக தாயார் மேலும் தெரிவித்துள்ளார்.

வீடு புகுந்து தாக்குதல் நடத்திய பெண்கள் : மட்டக்களப்பில் நடந்த துணிகர செயல்!!

 

தாக்குதல் நடத்திய பெண்கள்

மட்டக்களப்பு, ஏறாவூரில் வீடொன்றுக்குள் பெண்கள் உட்புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டிற்குள் உட்புகுந்த இரு பெண்கள் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதோடு வீட்டின் ஜன்னல் மற்றும் பொருட்களையும் சேதமாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இத்தாக்குதலினால் படுகாயமடைந்த குழந்தையும், தாயும் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனிப்பட்ட தகராறே இத்தாக்குதலிற்கு காரணமாக அமைந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடும் குளிரில் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை : பதைபதைக்க வைக்கும் சம்பவம்!!

 

பதைபதைக்க வைக்கும் சம்பவம்

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் கடும் குளிரில் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையானது உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தின் கிராமம் ஒன்றில் கடந்த வெள்ளியன்று நெஞ்சை உலுக்கும் இச்சம்பவம் நடந்துள்ளது.

சம்பவத்தன்று வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் என பதிவாகியுள்ளது. அப்போது பச்சிளம் குழந்தையின் முனகும் சத்தம் அப்பகுதி மக்களுக்கு கேட்டுள்ளது. உடனடியாக சத்தம் வந்த திசையில் விரைந்த அப்பகுதி மக்கள் புதைக்கப்பட்டிருந்த குழந்தையை தோண்டி எடுத்து அடுத்துள்ள அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

முதற்கட்ட சிகிச்சைக்கு பின்னர் பிறந்து 3 வாரமேயான அந்த குழந்தை ஆபத்து கட்டத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தர்மேந்திர பிரதான் என்பவர் சுமார் 7 மணி மாலையில் அப்பகுதி வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போதே குழந்தை ஒன்று முனகும் சத்தம் கேட்டுள்ளது. துரிதமாக செயல்பட்ட அவர் குழந்தையை தோண்டி எடுத்ததுடன் அப்பகுதி மக்களையும் உஷார் படுத்தியுள்ளனர்.

இந்த கடும் குளிரில் பிறந்து 3 வாரமேயான பச்சிளம் குழந்தையை கைவிடும் கோர முடிவை எப்படி எடுத்தார்கள் என்பது வியப்பாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். குறித்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்த பொலிசார், உடனடியாக அந்த குழந்தையின் பெற்றோரை கைது செய்து விசாரித்துள்ளனர்.

அதில் மந்திரவாதியின் பேச்சை நம்பியே குழந்தையை புதைத்ததாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குழந்தையின் தந்தை மற்றும் உறவினர் பெண் ஒருவரையும் அவரது கணவரான மந்திரவாதியையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

தாயின் ஆண் நண்பரால் சிதைக்கப்பட்ட 7 வயது சிறுமி : பின்னர் எடுத்த முடிவு!!

 

சிதைக்கப்பட்ட 7 வயது சிறுமி

மகாராஷ்டிரா மாநிலத்தில் 7 வயது சிறுமி ஒருவர் தாயின் ஆண் நண்பரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த சிறுமியின் தந்தை 6 மாதங்களுக்கு முன்பு உடல்நலம் குன்றி உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்து அவரது தாய்க்கும், இளைஞர் ஒருவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் வயது வித்தியாசம் அதிகம் இருந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். பொலிசார் கைது செய்வார்கள் என பயந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வவுனியாவில் விபத்தில் வீழ்ந்தவரை தூக்கச் சென்றவரை தாக்கியதால் பதற்றம்!!

 

வவுனியாவில் விபத்தில்..

வவுனியா பழைய பேருந்து நிலையம் பிரதான கண்டி வீதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் வீழ்ந்தவரை தூக்கச் சென்ற இளைஞன் மீது தாக்கியதில் சற்று பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியாவில் இன்று மாலை பழைய பேருந்து நிலைய பிரதான கண்டி வீதியில் பயணித்த இளைஞன் ஒருவர் பேருந்து நிலையப் பகுதிக்குத் திரும்புவதற்கு முற்பட்டபோது பிரதான கண்டி வீதியிலிருந்து மணிக்கூட்டுக் கோபுரத்தினை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் சாரதி மீது மோதியுள்ளார்.

இதையடுத்து விபத்தில் வீழ்ந்த நபரைத் தூக்கச் சென்ற இளைஞன் மீது விபத்தில் வீழ்ந்த நபர் தாக்கியதில் பேருந்து நிலையப் பகுதியிலிருந்து சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போக்குவரத்துப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் விபத்தில் இரு மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் இரண்டையும் பொலிஸ் நிலையத்திற்கு ஏற்றிச் சென்றுள்ளதுடன் விபத்தை ஏற்படுத்திய இருவரையும் இளைஞனை தாக்கியதாக தெரிவிக்கப்படும் கருத்திற்கு பேருந்து நிலையப் பகுதியிலிருந்த இளைஞர்கள் சிலரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் மோட்டார் சைக்கிளினை செலுத்திய நபர் ஒருவர் மதுபோதையிலிருந்துள்ளதாக அப்பகுதியில் நின்றிருந்த விபத்தை நேரில் பார்வையிட்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.