ஒரு வயதான குழந்தைக்கு பியர் கொடுத்த தந்தைக்கு ஏற்பட்டுள்ள நிலை!!

தனது ஒரு வயதான சிறு குழந்தைக்கு பியர் கொடுத்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தந்தை உள்ளிட்ட நால்வரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆண் குழந்தை ஒன்றுக்கு மதுபானம் பருகக் கொடுக்கும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியிருந்தது. இந்நிலையில், சம்பவம் குறித்து தீவிர விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.

விசாரணைகளின் பின்னர் குறித்த சம்பவம், கணன்கமுவ, மீகாலேவ பகுதியில் இடம்பெற்றிருந்ததாகவும், இதனையடுத்து குழந்தையின் தந்தை உள்ளிட்ட நால்வரை கைது செய்திருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

40, 38, 50, 23 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். 1995ம் ஆண்டின் 22ம் இலக்க குற்றவியல் திருத்த சட்டத்தின் கீழ் சிறுவர் துஷ்பிரயோகம் (பிரிவு 308A) என்ற குற்றத்திற்காக குழந்தையின் தந்தை உட்பட சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில், நாளைய தினம் சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் : இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

அதிக விலைக்கு சமையல் எரிவாயு சிலிண்டரை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை ஈடுபட்டுள்ளது.

12.5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 138 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தது.

இதற்கு அமைவாக 5 கிலோகிராம் எடை கொண்ட எரிவாயுவின் விலை 55 ரூபாவினாலும், 2.3 கிலோகிராம் எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் 25 ரூபாவினாலும் குறைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படுவதுடன் குற்றமிழைத்தவர் என காணப்பட்டால் 5,000 – 10,000 வரையில் தண்டப்பணம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் சிறைத்தண்டனை அல்லது இரு தண்டனைகளும் விதிக்கப்படுவதற்கான சாத்தியமும் காணப்படுகிறதாக கூறப்படுகிறது.

ஏதாவது ஒரு நிறுவனம் தவறிழைக்குமாயின் பத்தாயிரம் ரூபாவிற்கும், ஒரு இலட்சம் ரூபாவிற்கும் இடையில் தண்டப் பணம் விதிக்கப்படுவதுடன் 2 வருடகால சிறைத்தண்டனை அல்லது இந்த இரு தண்டனைகளும் விதிக்கப்படும்.

இதேவேளை கூடுதலான விலைக்கு எரிவாயுவை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பிலான தகவல்களை 1977, 0117 75 51 81 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பேஸ்புக், மின்னஞ்சல் பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை!!

மின்னஞ்சல் மற்றும் பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு கணினி அவசர சேவை சபை முக்கிய தகவல் ஒன்றை வழங்கியுள்ளது.

மின்னஞ்சல் மற்றும் பேஸ்புக் ஊடாக வருகின்ற தகவல் ஒன்றின் மூலம் கடவுச் சொற்கள் திருடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு கணினி அவசர சேவை சபை கோரிக்கை விடுத்துள்ளது.

மின்னஞ்சல் மற்றும் பேஸ்புக் மூலம் வரும் செய்தியை திறப்பதன் மூலம் மீண்டும் கடவுச் சொற்களை பதிவிடுமாறு கேட்கப்படும்.

அவ்வாறு நாம் எமது கடவுச்சொற்களை பதிவிடும் போது வேறொரு தரப்பினரால் அந்த கடவுச் சொற்கள் திருடப்படுவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எனவே முடிந்தளவிற்கு தேவையற்று வரும் அத்தகைய தகவல்களை திறப்பதை தவிர்க்குமாறு கணினி அவசர சேவை சபை கோரிக்கை விடுத்துள்ளது.

காணாமல்போயுள்ள பல்கலைக்கழக மாணவன் : தேடுதல் நடவடிக்கைகள் தீவிரம்!!

 

அரநாயக்க – அசுபினி நீர்வீழ்ச்சியில் விழுந்து காணாமல்போயுள்ள களனி பல்கலைக்கழக மாணவனை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த இளைஞர் கடந்த 14ஆம் திகதி நீர்வீழ்ச்சியில் விழுந்து காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்த பல்கலைக்கழக மாணவர், நீர்வீழ்ச்சியின் தாழ் நில பகுதியில் காணப்படுகின்ற கற்குகைக்குள் நீரினால் இழுத்து செல்லப்பட்டிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கற்குகை பகுதிக்குள் சிக்குண்டவர்கள் இதுவரை உயிருடன் மீட்கப்படவில்லை என இந்த பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் அரநாயக்க தாழ்வான பிரதேசத்தில் வசிக்கும் தம்பிக்க சம்பத் குறுவிட்ட என்ற இளைஞரே காணாமல்போயுள்ளார் என தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் குடும்பப் பெண்ணொருவருக்கு ஆடையால் ஏற்பட்ட விபரீதம்!!

வவுனியாவில் வைத்தியசாலைக்கு சென்ற பெண்ணொருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் பௌத்த விகாரை போன்ற உருவம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்திருந்ததாலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வவுனியா – தேக்கவத்தை பகுதியை சேர்ந்த 35 வயது குடும்பப் பெண்ணே வவுனியா வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் நடைபாதை வியாபாரியின் பொருட்கள் திருட்டு!!

வவுனியாவில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொண்டு வரும் வியாபாரி ஒருவரின் பொருட்கள் களஞ்சியசாலையிலிருந்து திருட்டுப்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபாதை வியாபாரி ஒருவர் இலுப்பையடிப்பகுதியிலுள்ள வை.எம்.ஏ கட்டடப்பகுதியில் நீண்டகாலமாக பொருட்களை இரவு வேளையின்போது களஞ்சியப்படுத்தி வருவது வழமை. சம்பவ தினத்தன்று மாலை வேளையில் தனது வியாபார நடவடிக்கையினை முடித்துக்கொண்டு மூன்று உரைப்பைகளில் வியாபாரப் பொருட்களாக உடுபுடைவைகளையும் துணிவகைகளை களஞ்சியபடுத்திவிட்டு சென்றுள்ளார்.

மறுதினம் காலை குறித்த களஞ்சியசாலையினை திறப்பதற்குச் சென்றபோது நடைபாதை வியாபாரி களஞ்சியப்படுத்தி வைத்த மூன்று பொதிகளும் திருடப்பட்டுள்ளது.

இதையடுத்து கட்டட நிலையத்தினருக்கும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பொலிஸ் நிலையத்திலும் தனது வியாபாரப் பொருட்கள் திருட்டு போயுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

நடைபாதையில் காலை முதல் மாலை வரை சிறிய முதலீடுகளில் வியாபாரம் மேற்கொண்டு வரும் குறித்த வியாபாரியின் பொருட்கள் திருடப்பட்டுள்ளதால் வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதுடன் சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைக்கு மதுபானம் பருக்கிய தந்தை : ஆரம்பமாகியது விசாரணைகள்!!

ஆண் குழந்தை ஒன்றுக்கு மதுபானம் பருக்கிய காணொளி காட்சிகள் வெளியான சம்பவம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆரம்ப கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தந்தை ஒருவர் தனது ஆண் குழந்தைக்கு மதுபானத்தை பருக்குவதாக நம்பப்படும் காட்சிகள் அடங்கிய காணொளியை மூன்றாம் தரப்பு ஒன்று சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்தது.

இதன் காரணமாக அந்த காணொளி பெருமளவில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்ததுடன், பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தெரியவந்ததை அடுத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பரபரப்பான உலக கிண்ண போட்டியில் காதலியுடன் மஹிந்தவின் புதல்வர்!!

உலக கிண்ண காற்பந்த போட்டித்தொடரின் இறுதிப் போட்டி நேற்று மொஸ்கோவில் நடைபெற்றது. உலகம் முழுவதும் உள்ள காற்பந்து ரசிகர்கள், போட்டியை ஆவலாக பார்த்து ரசித்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு முன்னாள் ஜனாதிபதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஷெங்கிரிலா ஹோட்டலில் இருந்து கால்பந்து போட்டியை பார்த்து ரசித்துள்ளார்.

இவேளை, முன்னாள் ஜனாதிபதியின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ச தனது காதலி டட்டியானவுடன் ரஷ்யா, மொக்கோவில் Luzhniki மைதானத்தில் இருந்து இறுதி போட்டியை பார்த்துள்ளனர். அவர் இந்த புகைப்படத்தை இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

ஆபத்தான பாம்புகளுடன் அட்டகாசம் செய்யும் இலங்கை யுவதி : வியப்பில் மக்கள்!!

இலங்கையில் விஷப் பாம்புகளுடன் இளம் யுவதி ஒருவர் செய்யும் செயற்பாடுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

கம்பஹாவை சேர்ந்த பாக்யா மிஹிரனி, பல வகையான பாம்புகளுடன் நட்பாக பழகி வருகிறார். அவர் பாம்புகளுடன் செல்ல பிராணி போன்று விளையாடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆபத்தான அனைத்து பாம்புகளையும் கையில் எடுத்து, உடம்பில் போட்டு இந்த விளையாடுவதற்கு அவர் பழக்கம் கொண்டுள்ளார்.

அவருக்கு பாம்புடன் பழக எந்த விதமான பயமும் இல்லை என குறிப்பிட்டுள்ளதுடன், அதனை உறுதி செய்யும் வகையிலான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

எனினும் யுவதியின் துணிச்சலான செயற்பாடுகளை பார்த்த மக்கள் பெரும் வியப்பு அடைத்துள்ளனர். பாம்பு என்றால் பயப்படும் மக்களுக்கு மத்தியில் யுவதியின் துணிச்சலான செயற்பாடு குறித்து பலரும் பாராட்டியுள்ளனர்.

பிரான்ஸ் அணியின் வெற்றியை ஐஸ்வர்யா ராய் எப்படி கொண்டாடினார் தெரியுமா?

பாரீஸில் முகாமிட்டுள்ள நடிகை ஐஸ்வர்யா ராய் கால்பந்து உலகக்கிண்ணத்தை பிரான்ஸ் வென்றதை கொண்டாடியுள்ளார்.

கால்பந்து உலகக்கிண்ண தொடரின் இறுதி போட்டியில் பிரான்ஸ் – குரேஷியா அணிகள் மோதிய நிலையில் பிரான்ஸ் 4-2 என்ற கோல் கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்நிலையில் பிரான்ஸின் வெற்றியை நடிகை ஐஸ்வர்யாராய் தனது மகள் ஆராத்யாவுடன் கொண்டாடியுள்ளார்.

ஆடம்பர பொருள் ஒன்றின் விளம்பரத்தில் நடிப்பதற்காக தற்போது ஐஸ்வர்யா ராய் பாரீஸில் மகள் ஆராத்யாவுடன் முகாமிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரான்ஸ் வெற்றியை அந்நாட்டு மக்கள் சாலையில் ஒன்றாக கூடி உற்சாகமாக கொண்டாடினார்கள்.அந்த வெற்றியில் தானும் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்

மைதானத்தில் விளையாடும் போது சுருண்டு விழுந்து இறந்த வீரர் : கதறித் துடித்த சக வீரர்கள்!!

பிரித்தானியாவை சேர்ந்த ரக்பி விளையாட்டு வீரர் மைதானத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யார்க்‌ஷயர் ஆண்கள் லீக் ரக்பி போட்டி Heworth-ல் நேற்று முன்தினம் நடைபெற்றது.இதில் Birkenshaw Bluedogs என்ற அணிக்காக மேக்ஸ் பிளாகிலி (32) விளையாடினார்.

மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த போது மேக்ஸுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அங்கேயே சுருண்டு விழுந்தார்.

உடனடியாக அங்கு வந்த மருத்துவர்கள் மேக்ஸுக்கு சிகிச்சையளிக்க முயன்ற நிலையில் அதற்கு முன்னர் அவர் உயிரிழந்துவிட்டார்.

இதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த சக வீரர்களும், ரசிகர்களும் கண்ணீர் விட்டு அழுதார்கள்.

மேக்ஸின் நண்பர் லீ கூறுகையில், அவருக்கு பிடித்தததை தான் மேக்ஸ் எப்போதும் செய்வார். உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன் என உருக்கமாக கூறியுள்ளார். இதே போல பலரும் மேக்ஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

எழுந்து வா காதலியே : இறுதிச்சடங்கில் சடலத்தை மணந்த காதலன்!!

உயிரிழந்த காதலியின் சடலத்தை கனத்த இதயத்தோடு திருமணம் செய்து கொண்ட காதலனின் செயல் நெஞ்சை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

நைஜீரியாவை சேர்ந்த ஒரு இளம் ஜோடி உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஆனது.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் காதலி திடீரென உயிரிழந்தார். இதையடுத்து சடலமாக கிடந்த தனது காதலியை திருமணம் செய்ய காதலன் கனத்த இதயத்துடன் முடிவெடுத்தார்.

அதன்படி சவப்பெட்டியில் சிவப்பு நிற புத்தாடை உடுத்தப்பட்டு காதலி படுக்க வைக்கப்பட்டிருந்தார்.

மணமகன் வெள்ளை நிற ஆடையில் இருந்தார். இதையடுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் சடலமாக கிடந்த காதலியை காதலன் திருமணம் செய்து கொண்டார்.

அப்போது காதலன் நெகிழ்ச்சியுடன் எழுந்து வா காதலியே என கூறியது அங்கிருந்தவர்களின் கண்களை குளமாக்கியது.

மீண்டும் பரபரப்பு : ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தற்கொலை : உருக்கமான கடிதம் சிக்கியது!!

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்தது போல, ஜார்கண்டில் 6 பேர் கொண்ட குடும்பத்தார் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாவீர் மஹேஷ்வரி (70), என்பவரின் மனைவி கிரண் (65). தம்பதிக்கு நரேஷ் அகர்வால் (40) என்ற மகனும் ப்ரீத்தி (38) என்ற மருமகளும் இருந்தனர்.

நரேஷ் – ப்ரீத்திக்கு ஆமன் (8) மற்றும் அஞ்சலி (6) என்ற இரு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் நேற்று ஆறு பேரும் தங்கள் வீட்டில் சடலமாக கிடந்துள்ளனர்.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ஆறு பேரின் சடலங்களை கைப்பற்றியதோடு அங்கிருந்த கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.

அதில், மொத்த குடும்பமும் பெரும் கடனில் இருப்பதாக எழுதப்பட்டிருந்தது. மேலும், ஒருவரை தூக்கில் இட முடியவில்லை, அதனால் கொன்றுவிட்டோம் என எழுதப்பட்டிருந்தது.

மஹாவீர் குடும்பம் சொந்தமாக உலர்ந்த பழக்கடை வைத்திருந்ததாக கூறியுள்ள பொலிசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

வீடியோ எடுத்து மிரட்டியதால் கொன்றேன் : மருத்துவரை கொன்ற மாணவி பரபரப்பு வாக்குமூலம்!!

சென்னை மருத்துவர் தன்னை வீடியோ எடுத்து தொடர்ந்து மிரட்டியதால் கொலை செய்தேன் என மாணவி ஈஸ்வரி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருச்சி கல்லணை காவிரிக் கரை ஓரம் கடந்த 12-ஆம் திகதி சென்னையில் பிஸியோதெரப்பிஸ்டாக பணியாற்றும் மருத்துவர் விஜயகுமார் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்த நிலையில் இதில் ஈடுபட்ட மாணவி ஈஸ்வரி, தாராநல்லூர் மாரிமுத்து மற்றும் அவருடைய நண்பர்கள் மாநகராட்சி ஊழியர் கணேஷ், கும்பா (எ) குமார் உள்ளிட்டோரைக் கைது செய்துள்ளனர்.

பொலிசாரிடம் ஈஸ்வரி அளித்துள்ள வாக்குமூலத்தில், சிறுவயதிலேயே எங்கள் அம்மா இறந்ததால் அப்பா கஷ்டப்பட்டு வளர்த்தார்.

2013-ம் ஆண்டு நடந்த 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 498 மதிப்பெண் எடுத்து மாநிலத்திலேயே 2-வது இடம் பிடித்தேன்.

பிளஸ் 2-வில் 1183 மதிப்பெண் எடுத்து மாவட்ட அளவில் 2-ம் இடம் பெற்றேன். இந்நிலையில் சென்னையில் சி.ஏ. சேர்ந்து படித்து வருகிறேன். சி.ஏ. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றதும், நுங்கம்பாக்கத்தில் தங்கியிருந்த நான், சென்னை பாரிமுனையில் ஒரு ஆடிட்டர் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்.

திருச்சிக்கு, சென்னையில் இருந்து ரயிலில் வருவது வழக்கம், அப்படி வரும்போது தான் மருத்துவர் விஜயகுமார் அறிமுகமானார். ரயில் பயணத்தில் என் செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டவர், அடுத்தடுத்து போனில் பேச ஆரம்பித்தார்.

ஒருநாள் எனக்கு உடல்நிலை சரியில்லை. எனக்குப் போன் செய்த அவர், அவரது கிளினிக்கிற்கு கிளம்பி வருமாறு கூறினார்.

நான் அங்கு சென்ற நிலையில் என்னை சீரழித்துவிட்டார். இது குறித்து நான் அவரிடம் கேட்டபோது என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார்.

என்னை திருமணம் செய்ய விஜயகுமாரை நான் வற்புறுத்தி வந்த நிலையில் அவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி, 2 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் என்னோடு இருந்ததை வீடியோவாக எடுத்து வைத்திருப்பதாகவும் அவரின் ஆசைக்கு மீண்டும் பணியவில்லை எனில் வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்றும் என்னை மிரட்டினார். இதனால் விஜயகுமாரை கொல்ல திட்டமிட்டேன்.

அதன்படி திருச்சி மாநகராட்சி துப்புரவுப் பணியாளர் மாரிமுத்துவிடம் நடந்த சம்பவத்தை கூறி உதவி கோரினேன்.

அடுத்து, மாரிமுத்து மற்றும் அவரின் நண்பர்கள் துணையுடன் திருச்சியில் விஜயகுமாரை கொல்ல முடிவெடுத்தோம்.

இதையடுத்து அவருக்கு போன் செய்து திருமணம் குறித்துப் பேச வேண்டும் என அழைத்தேன். அவரும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்துக்கு வந்தார்.

அங்கு அவரை மாரிமுத்துவும் அவரின் கூட்டாளிகளும் கத்தியால் குத்தி கொன்றனர் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமான ஆணுடன் காதல் : கொன்று எரிக்கப்பட்ட இளம்பெண்!!

தமிழகத்தின் ராமநாதபுரத்தில் காதலியை எரித்துக் கொன்ற வழக்கில் குற்றவாளியை பொலிசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரத்தின் ஆலங்குளத்தை சேர்ந்தவர் வீரபாண்டி, இவரது மகள் மாலதி(வயது 20). சென்னையில் தனது தந்தையுடன் தங்கி வேலை பார்த்து வந்தார், இந்நிலையில் கடந்த மாதம் சொந்த ஊருக்கு சென்றவர் சென்னை திரும்பவில்லை.

போனும் சுவிட்ச் ஆப்பில் இருந்ததால் வீரபாண்டி பொலிசில் புகார் அளித்தனர். இதற்கிடையே கடந்த 13ம் திகதி கண்மாய் பகுதியில் பாதி எரிந்த நிலையில் சடலம் கிடப்பதாக பொலிசுக்கு தகவல் கிடைத்தது.

விசாரணையில் சடலம் மாலதி என்பதும், அடிக்கடி சிவக்குமார் என்பவருடன் போனில் பேசி வந்ததும் கண்டயறியப்பட்டது.
திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தும் சிவக்குமார் அதை மறைத்து மாலதியுடன் பழகி வந்துள்ளார்.

இதை தெரிந்து கொண்ட மாலதி, ஊருக்கு வந்ததும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்தவர் கண்மாய் பகுதிக்கு அழைத்து சென்று எரித்துக் கொன்றது தெரியவந்தது.

இந்நிலையில் தற்போது தலைமறைவாகியுள்ள சிவக்குமாரை பொலிசார் தேடி வருகின்றனர்.

வெளிநாட்டுக்கு சென்ற இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம் : காப்பாற்றுமாறு கதறும் கணவன்!!

இந்தியாவை சேர்ந்த பெண் கடந்த மார்ச் மாதம் மஸ்கட்டுக்கு பணிக்கு சென்று பல துன்பங்களை அனுபவிக்கும் நிலையில் அவரை மீட்க கணவர் உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார்.

பஞ்சாப்பை சேர்ந்தவர் ஹர்தேவ் சிங். இவர் மனைவி சரப்ஜீத். ஹர்தேவ் சாதாரண வேலை செய்து வந்த நிலையில் அவரின் வருமானம் குடும்பத்துக்கு போதவில்லை.

இதையடுத்து ஏஜண்ட் ஒருவர் மூலம் கடந்த மார்ச் மாதம் மலேசியாவுக்கு உதவியாளர் பணி செய்ய சரப்ஜீத் அனுப்பட்டார்.

பின்னரே தான் ஏமாற்றப்பட்டோம் என சரப்ஜீத்துக்கு தெரிந்தது. ஏனெனில் மலேசியாவுக்கு பதிலாக அவர் மஸ்கட்டுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பட்டார்.

அங்கு சரப்ஜீத்துக்கு அவர் முதலாளி கடுமையான வேலைகள் தந்ததோடு, சம்பளம் மற்றும் உணவுகள் கொடுக்காமல் கொடுமைப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து சரப்ஜீத் போலவே மஸ்கட்டில் வேறு இடத்தில் அடிமையாக சிக்கி கொண்ட பரீதா கான் என்ற பெண் பல அதிகாரிகளை பிடித்து எப்படியோ இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளார்.

பரிதாவை மஸ்கட்டியில் பார்த்த சரப்ஜீத் தனது நிலையை எடுத்து சொல்லி தனது கணவர் ஹர்தேவ் போன் நம்பரை அவருக்கு கொடுத்துள்ளார்.

இதையடுத்து இந்தியா வந்த பரீதா, ஹர்தேவை நேரில் சந்தித்து சரப்ஜீத் குறித்து கூறியதோடு இது குறித்து பெண்கள் ஆணையத்தில் புகார் அளிக்க கூறினார்.

தற்போது ஹர்தேவ் பெண்கள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் கூறுகையில், எங்களின் மகளை நன்றாக படிக்க வைக்கவேண்டும் என விரும்பினோம்.

அதற்கு சம்பாதிக்க தான் சரப்ஜீத் வெளிநாடு சென்றார். ஆனால் அவர் ஏமாற்றப்பட்டுள்ளார். அதிகாரிகள் தான் எப்படியாவது என் மனைவியை மீட்டுதர வேண்டும் என கோரியுள்ளார்.