முல்லைத்தீவில் புதிய வகை வைரஸ் கண்டுபிடிப்பு!!

முல்லைத்தீவு – கோயிற்குடியிருப்பு, செல்வபுரம் பகுதிகளில் புதியவகை மலேரியா நோய்காவி (டிபன்சி) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுகாதார திணைக்களத்தினால், இந்த புதிய மலேரியா நோய்க்காவி பொது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றை அழிக்கும் நடவடிக்கையில் மலேரிய தடுப்பு இயக்கம் செயற்படவுள்ளது என மலேரியா தடுப்பு பூச்சியியல் ஆய்வு பிரிவு அதிகரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மலேரியா தடுப்பு இயக்கம் தெரிவிக்கையில்,

கோயிற்குடியிருப்பு, செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட கிணறுகளில் கப்பீஸ் இன மீன்களை விட்டு டிபன்சி வைரசை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கப்பீஸ் இன மீன்களை கிணறுகளில் விடுவதன் மூலம் அவை நோய் காவிகளை இரையாக்கி நோய்க் காவிகளை அழிக்கும்.

இதன்படி இன்று கோயிற்குடியிருப்பு, செல்வபுரம் பகுதிகளில் பொதுமக்களின் கிணறுகளில் மலேரிய தடுப்பு இயக்கப் பணியாளர்கள் மீன்களை விடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

1976ம் ஆண்டிற்கு பின்னர் இலங்கையில் தூக்கு தண்டனைக்கு அனுமதி!!

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக பௌத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 1976ம் ஆண்டு ஜூலை 23ம் திகதி கடைசியாக ஒருவருக்கு மரண தண்டனையாக தூக்கில் போட்டது. அன்று முதல் கடந்த 42 வருடங்களாக தூக்குத் தண்டனை நாட்டில் அமுலில் இருக்க வில்லை.

இந்நிலையில், 42 ஆண்டுகளுக்கு பின்னர் மரண தண்டனையை நிறைவேற்ற அமைச்சரவை இன்று அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மை காலமாக இடம்பெற்றுள்ள கொலைகள் மற்றும் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் சிறையிலிருந்தபடியே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவது என்பது அதிகரித்துள்ளது.

இதனை கருத்திற்கொண்டு அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளதாகவும், அமைச்சர்கள் இதனை வரவேற்றுள்ளதாகவும் காமினி ஜயவிக்ரம பெரேரா கூறியுள்ளார்.

இந்நிலையில், மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி நீதியமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளதாக அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா சென்ற இரு இலங்கைத் தமிழர்களுக்கு சிறைத்தண்டனை!!

போலி கடவுச்சீட்டு மூலம் சிங்கப்பூருக்குள் நுழைந்த இலங்கையர்கள் இருவருக்கு 8 மாத சிறைத்தண்டனை வழங்க அந்த நாட்டு நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

45 வயதான என்.கனகரத்னம் மற்றும் 27 வயதான கந்தசாமி நித்தியானந்தம் ஆகியோருக்கே சிங்கப்பூரில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் அவர்கள் இருவரும் சிங்கப்பூர் சன்கி விமான நிலையத்தில் அந்த நாட்டு குடிவரவு, குடியகல்வு அதிகாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு வேலைக்காக இன்னுமொரு இலங்கையரின் உதவியுடன் குறித்த இருவரும் போலி கடவுச்சீட்டில் சிங்கப்பூர் சென்றுள்ளனர்.

பிரித்தானியாவின் லண்டன் நகரத்திற்கு செல்வதற்காக அவர்கள் சிங்கப்பூர் ஊடாக பயணித்துள்ளனர். சிங்கப்பூர் செல்வதற்காக 33000 மற்றும் ஒரு லட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டில் உள்ள புகைப்படம் உண்மையான நபர்கள் புகைப்படம் இல்லாமையினால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூர் குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறுவோருக்கு 10 வருட சிறைத்தண்டனை அல்லது 10000 சிங்கப்பூர் டொலர் அபராதம் விதிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 50க்கும் மேற்பட்டவர்கள் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைப்பு : காரணம் என்ன?

வவுனியா பொலிஸ் நிலையத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கி இ.போ.ச பேரூந்தில் பயணித்த பாடசாலை மாணவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட பொதுமக்களை சுமார் ஒரு மணித்தியாலயத்திற்கு மேலாக தடுத்து வைத்த சம்பவம் நேற்று (10.07.2018) இரவு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கி பயணித்த இ.போ.ச பேரூந்தினை வவுனியா நொச்சிமோட்டை பாலத்தடியில் பொலிஸார் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். இதன் போது பேரூந்திலிருந்து 1கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதனையடுத்து நொச்சிமோட்டையிலிருந்து பேரூந்தில் எவ்வித பயணிகளையும் ஏற்றாமலும் இறக்காமலும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு பேரூந்தினை எடுத்து சென்று பொலிஸ் நிலையத்தின் வாயிலை மூடி பேரூந்தில் பயணித்த பாடசாலை மாணவர்கள் உட்பட அனைவரையும் சோதனைக்குபடுத்தியுள்ளனர்.

இரவு 9 மணியளவில் பேரூந்தினை பொலிஸ் நிலையத்தினுள் எடுத்து சென்றதுடன் இரவு 10 வரை சுமார் ஒரு மணித்தியாலயத்திற்கு மேலாக பயணிகள் எவரையும் வெளிச்செல்லவும் அனுமதிக்கவில்லை. இதனால் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பயணிகள் உறவினர்கள் ஒன்றுகூடியதினால் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக சற்று பதற்றநிலை காணப்பட்டது.

இரவு உணவின்றி மாணவர்கள் தவித்துடன் அவர்களை சந்திப்பதற்கு உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இவ்வாறான பொலிஸாரின் செயற்பாட்டினால் நொச்சிமோட்டையிலிருந்து வவுனியா வரை உள்ள பகுதிகளில் இறக்க வேண்டிய பயணிகள் வீடு செல்ல பேரூந்து இல்லாமல் சிரமப்பட்டனர்.

இதனை செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு வாயில் காவலில் நின்ற பொலிஸாரினால் பொலிஸ் நிலையத்தினுள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதுடன் வெளியில் நின்று புகைப்படம் எடுத்த சமயத்தில் பொலிஸாரினால் அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது.

வவுனியாவில் பிரபல ஹெரோயின் வியாபாரி 970 கிராம் ஹெரோயினுடன் கைது!!

வவுனியாவில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் புலனாய்வுத்துறையினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று மாலை சென்ற புலனாய்வுத்துறையினர் வவுனியாவில் பிரபல கஞ்சா மற்றும் ஹெரோயின் வியாபாரியை ஹெரோயினுடன் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா நெளுக்குளம் பகுதியில் ஹெரோயின் கஞ்சா வியாபாரி நடவடிக்கைகள் அதிகளவில் காணப்படுவதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் கீழ் செயற்படும் புலனாய்வுத்துறையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவல் அடிப்படையில் அப்பகுதியைச் சுற்றி வளைத்து விசாரணைகளை மேற்கொண்டபோது பிரபல கஞ்சா மற்றும் ஹெரோயின் வியாபாரி ஒருவர் இந் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக புலனாய்வுத்துறையினருக்குத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து திடீரென்று மேற்கொண்ட நடவடிக்கையின்போது பிற்பகல் 4 மணியளவில் 34 வயதுடையபிரபல கஞ்சா மற்றும் ஹெரோயின் வியாபாரியை 970கிராம் ஹெரோயினுடன் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் அரச பணியாளர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

இலங்கையில் அரச பணியில் இணைக்கப்பட்டுள்ளவர்களில் 17 வீதமானவர்கள் சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாதவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதன்படி, அரச பணியாளர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள ஆண்களில் 27.2 வீதமானவர்களும், பெண்களில் 4.8 வீதமானவர்களும் க.பொ.த.சாதாரண பரீட்சையில் சித்தியடையவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு நவம்பர் 17ஆம் திகதி நிலவரப்படி, மேற்படி அரச துறைகளில் 1,109,475 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 55.1 வீதமானவர்கள் ஆண்கள். 44.9 வீதமானவர்கள் பெண்கள்.

இந்த ஆய்வுகளின்படி, 35 வீதமானவர்கள் உயர்தரத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 26.1 வீதமானவர்கள் பட்டம் பெற்றவர்களாக அல்லது உயர் கல்வி பெற்றவர்களாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அரச பணியில் இணைக்கப்பட்டுள்ளவர்களில் 17 வீதமானவர்கள் சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாதவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் 6 முச்சக்கரவண்டிகளில் திருட முயன்ற நபர் கைது!!

வவுனியா பொது வைத்திசாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 முச்சக்கரவண்டிகளில் திருடுவதற்கு முயன்ற நபர் ஒருவரை பொலிசார் சம்பவ இடத்தில் வைத்து கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி முன்பக்கத்திலுள்ள ஆவணங்கள் வைக்கும் பகுதியைத் திறந்து அதற்குள் இருந்த பொருட்களைத் திருடுவதற்கு முயன்ற 29 வயதுடைய சிலாவத்துறையைச் சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வேறு பகுதிகளில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் சந்தேகநபர் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

விசாரணைகளின் பின்னர் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் மாணவர்களுக்கிடையே மோதல் : பொலிஸார் அசமந்தப்போக்கு?

வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக இன்று (10.07.2018) மாலை 5.30 மணியளவில் இரு மாணவ குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

மாலை நேர வகுப்புக்கள் நிறைவடைந்த பின்னர் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு அருகே ஒன்று கூடிய இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு மோதலாக மாறியது.

இதனையடுத்து அவசர இலக்கமான119 என்ற இலக்கத்திற்கு பொதுமக்கள் தகவல் வழங்கிய போதிலும் பொலிஸார் நீண்ட நேரத்திற்கு பின்னரே பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதற்கு முன்னரே மாணவர்கள் அவ்விடத்திலிருந்து கலைந்து சென்றனர்.

வைரப்புளியங்குளம் வீதியில் தினசரி மாலை வேலையில் தனியார் வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்கள், இளைஞர்கள் வீதியின் அருகே நின்று சண்டையிடுவதும் பெண்களை கிண்டல் செய்வது , புகைத்தல் போன்ற பல்வேறு செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

இவ் வீதியில் பொலிஸ் காவல் ஆரண் ஒன்றினை அமைக்குமாறு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் என்பவற்றில் பல தீர்மாணங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் இதுவரையில் இவ் விடயத்தினை பொலிஸார் அசமந்த போக்கவே செயற்பட்டு வருகின்றனர்.

எனவே அரசியல்வாதிகள், நகரசபை உறுப்பினர்கள் ,சழூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் இவ்விடயத்தில் தலையிட்டு தனியார் வகுப்பிற்கு செல்லும் மாணவிகள் சுதந்திரமாக செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.

வவுனியாவில் பேரூந்தில் பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இராணுவ வீரர் மடக்கிப் பிடிப்பு!!

வவுனியாவிலிருந்து பூவரசங்குளம் ஊடக செட்டிக்குளம் நோக்கி பயணித்த இ.போ.ச பேரூந்தில் இன்று (10.07.2018) மதியம் 3.30 மணியளவில் பாடசாலை மாணவிக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்த இராணுவ வீரரை பேரூந்தின் சாரதி மற்றும் பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து செட்டிக்குளம் நோக்கி பயணத்தினை ஆரம்பித்த இ.போ.ச பேரூந்தில் பாடசாலை மாணவி ஓருவர் (பாடசாலை சீருடையுடன்) பயணித்துள்ளார். இதன் போது பேரூந்தில் இருந்த இரானுவ வீரர் ஒருவர் குறித்த பாடசாலை மாணவி மீது பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததுடன் தொலைபேசி இலக்கத்தினையும் தருமாறு கோரியுள்ளார்.

இதனையடுத்து பாடசாலை மாணவி அழுதவாறு பேரூந்தின் நடத்துனரிடம் மேற்குறிப்பிட்ட சம்பவத்தினை தெரிவித்துள்ளார். அதனையடுத்து குறித்த இராணுவவீரரை தேடிய போது அவர் பேரூந்திலிருந்து தப்பியோட முயன்றுள்ளார்.

அதனையடுத்து சாரதி மற்றும் பொதுமக்கள் இராணுவ வீரரை மடக்கிப்பிடித்து குருமன்காடு சந்தியடியில் அமைந்துள்ள பொலிஸ் காவலரணில் ஒப்படைத்தனர்.

பின்னர் அவ்விடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் இராணுவ வீரரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இதன் போது அவ்விடத்தில் ஒன்று கூடிய பொதுமக்களும் , பேரூந்தில் பயணத்தினை மேற்கொண்ட பயணிகளும் பொலிஸார் பக்கச்சார்பாக செயற்படுவதாக தெரிவித்து குருமன்காடு பொலிஸ் காவல் அரணை முற்றுகையிட்டனர். இதனால் வவுனியா – மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் போக்குவரத்தினை சீர் செய்ததுடன் சம்பவம் இடம்பெற்ற இ.போ.ச பேரூந்தினையும் (பயணிகளுடன்) வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடிய பொதுமக்கள், இளைஞர்கள் குறித்த சிப்பாயை கைது செய்ய வேண்டுமென தெரிவித்து பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடினார்கள். இதனால் அவ்விடத்தில் சற்று பரபரப்பான நிலை காணப்பட்டது.

இதனையடுத்து இவ்விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் வினவிய போது,

இராணுவ வீரரை கைது செய்துள்ளோம். தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. விசாரணைகளின் பின்னர் இராணுவ வீரரை கைது செய்து வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவித்தார்.

இரவு படுக்கும் முன் வெங்காயத்தை பாதத்துக்கு அடியில் வையுங்கள் : நடப்பதை பாருங்கள்!!

நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் ஒரு உணவுப்பொருள் தான் வெங்காயம். இதில் புரதச்சத்துக்கள், வைட்டமின்கள் தாது உப்புக்கள், உள்ளன, உடலுக்கு பல நன்மைகளை அளிப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

வெங்காயத்தை நறுக்கி இரவு நம் கால்களின் பாதத்தில் வைப்பதால் பல பயன்கள் கிடைக்கிறது. இதற்கு வெங்காயத்தை இரண்டாக நறுக்கி கட் செய்து பாதத்தின் அடியில் வைத்து சாக்ஸ் அணிந்து கொள்ளுங்கள், ஒருநாள் இரவு முழுதும் அப்படியே விட்டுவிட வேண்டும்.

கால்களில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகளை தூண்டுகிறது.
உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், வலிகளை போக்குகிறது.
கால் பாதங்களில் உள்ள பக்டீரியா மற்றும் தொற்று கிருமிகளை அழிக்கிறது.
இதுதவிர உடலிலிருந்து துர்நாற்றத்தை போக்குகிறது.
பக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றால் ஏற்படும் காய்ச்சலை சரிசெய்யும்.
இதய ஆரோக்கியம் மேம்படும், முக்கியமாக இந்த பழக்கத்தை அன்றாடம் மேற்கொண்டு வந்தால், இதய நோயில் இருந்து விடுபடலாமாம்.
மிகுந்த தொந்தரவைக் கொடுத்துக் கொண்டிருந்த கழுத்து வலி, காது வலி நீங்கும்.

குறிப்பு : கால்களில் புண்கள் அல்லது வெங்காயம் அலர்ஜி உள்ளவர்கள் இதை செய்யக்கூடாது.

பலரும் அறியாத கமல்ஹாசன் மனைவி நடிகை சரிகாவின் சோகக்கதை!!

நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது மனைவியும், நடிகையுமான சரிகாவின் வாழ்க்கை பாதை சோகமான பின்னணியை கொண்டது.

டெல்லியில் பிறந்த இவர் மராத்திய குடும்பத்தை சேர்ந்தவர். சரிகாவின் இளம்வயதிலேயே அவரது தந்தை குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

இதனால் குடும்பம் வறுமைக்கு ஆட்பட்டது இதனால் இவர் வேலைக்கு செல்லவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். இவர் பள்ளிக்கு செல்லும் வாய்ப்பையும் பெறவில்லை.

தனது குடும்ப வறுமையை போக்க 4 வயதில் திரைத்துறையில் காலடி எடுத்துவைத்தார். சிறுவயதில் இவரது வருமானத்தை நம்பியே இவரது குடும்பம் இருந்தது. அந்த அளவுக்கு குடும்பத்தின் சுமை இவரது தோள்மீது விழுந்தது.

அதுமட்டுமின்றி இவர் தனது தாயால் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். சிறுவயதில் தனது தாயால் அனுபவித்த கொடுமைகள் அவர் இறந்துபின்னரும் தொடர்ந்தது என்பதற்கு சமீபத்தில் வசிப்பதற்கு வீடு இல்லாமல் சரிகா இருந்தது விடயத்தில நிரூபணமானது.

இவரின் தாயார் இவரிடம் கடுமையாக வேலைவாங்கினார். இவர் தன் வாழ்வில் உச்சநிலையில் இருந்தபோது, இவரது தாயாரால் பொது இடத்தில் தாக்கப்பட்டார்.

சரிகாவின் படிப்பிற்கு அவரது தாயே இடையூறாக இருந்துள்ளார், தனது தாயிடம் அவர் அதிக கொடுமைகளை அனுபவித்த காரணத்தால் அவரை விட்டு பிரிந்து தனியாக வசிக்க ஆரம்பித்தார்.

இந்த சமயத்தில் தான் தென் இந்திய சினிமாவில் கலக்கிவந்த கமலுடன் பழக்கம் ஏற்பட்டது, இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்தனர். ஏனெனில் கமல் மேற்கத்திய கலாசாரத்தை விரும்புபவர்.

கமல்ஹாசனை காதலிப்பதற்கு முன்பாக, இந்திய கிரிக்கெட் ஜாம்பவன் கபில் தேவை சரிகா காதலித்துள்ளார். ஆனால், கபில் தேவ் வேறு ஒரு பெண்ணை காதலித்த காரணத்தால் சரிகா, அதிலிருந்து ஒதுங்கிகொண்டார்.

இதன்பின்னர் கமலுடன் காதல் வயப்பட்ட இவர், 1988 ஆம் ஆண்டில் கமலை திருமணம் செய்துகொண்ட இவர் 2004 ஆம் ஆண்டு இவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

விவாகரத்து பெறவிருக்கும் போது சரிகா தற்கொலைக்கு முயற்சித்தார் என கூறப்படுகிறது. தற்கொலை முயற்சியின் போது பலத்த காயங்கள் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் மூன்று மாதங்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார் சரிகா.

கமலின் பிரிவுக்கு பிறகு, மும்பையில் தனது தாயுடன் வசித்து வந்தார் சரிகா. இதற்கிடையில் சரிகாவின் தாய் இறந்துபோனபோது, அவர் வாங்கிய மும்பையின் ஜூஹூ பகுதில் உள்ள குடியிருப்பை அவரது உறவினர்களுக்கு எழுதி வைத்து இறந்துவிட்டார்.

அந்த குடியிருப்பு சரிகாவின் சம்பளத்தில் வாங்கியது. இதனை மீட்க கடந்த 2017 ஆம் ஆண்டு நீதிமன்ற வாசலில் ஏறி இறங்கி வருகிறார். இன்னும் வழக்கு முடியவில்லை.

இந்த நிலையில் தங்குவதற்கு கூட வீடு இல்லாமல் இருந்து வரும் அவருக்கு பாலிவுட் நடிகர் ஆமிர் கான் உதவியுள்ளார்.

சரிகாவும் நடிகர் இம்ரானின் அம்மாவும் நல்ல நண்பர்கள், அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் சரிகாவிற்கு அமீர்கான் உதவியுள்ளார்.

சரிகாவை அவரது இரண்டு மகள்களான ஸ்ருதியும், அக்ஷராவும் அவ்வப்போது சந்தித்து வருகின்றனர்.

வட்ஸ்அப் பயன்படுத்துபவரா நீங்கள் : அப்படியென்றால் நிச்சயமாக இதை படியுங்கள்!!

சமீப நாட்களாகவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகளை கடத்துபவர் என நினைத்து அப்பாவி நபர்கள் பலரும் அடித்து கொலை செய்யப்படுகின்றனர். இதற்கு எல்லாம் என்ன காரணம் என ஆராயும் பொழுது வட்ஸ்அப் மூலம் பகிரப்படும் வதந்திகளே என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதனையடுத்து, வட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களின் மூலம் அதிகமான வதந்திகள் பகிரப்படுவதை தடுக்கும் விதமாக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு சில தினங்களுக்கு முன்னதாக வட்ஸ்அப் நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்திருந்தது.

அதில், “கொலைகள் நடைபெறக் காரணமாகும் வதந்திகள் பரவுவதைத் தடுப்பதில் தங்களுக்கான பொறுப்பு மற்றும் கடமையை வட்ஸ்அப் நிர்வாகம் தட்டிக்கழிக்க முடியாது” என்று தொலைத் தொடர்பு மற்றும் மின்னணுவியல் துறை அமைச்சகம் அனுப்பியிருந்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இதுதொடர்பாக வட்ஸ்அப் நிறுவனம் 10 சதவித அறிவுறுத்தல்களுடன் ஒருபக்க அளவில் விளம்பரம் ஒன்றினை வெளியிட்டுள்ளது. ஒரு தகவலை இன்னும் ஒருவருக்கு பகிரும் முன்பு அதன் உறுதித்தன்மையை உணர்தல் வேண்டும்.

பரிமாறப்படும் தகவலின் உண்மைத்தன்மையை அறிதல் வேண்டும், தகவல் மீது சந்தேகம் இருப்பின் அதனை பகிர்வதற்கு முன்பாக யோசித்தல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பிரபல வார்த்தைகளால் பகிரப்படும் லிங்க்-ல் உள்ள எழுத்துகளை சரிபார்த்தல் வேண்டும் என்றும் வட்ஸ்அப் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

கிரிக்கெட் வீராங்கனைகள் இடையே முளைத்த காதல் : திருமணம் குறித்து அதிரடி அறிவிப்பு!!

தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவி டேன் வான் நீகெர்க் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மரிசான் காப் ஆகியோர் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

இருவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்தவிட்ட நிலையில் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக சமூகவலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

டேன் மற்றும் மரிசான் ஆகிய இருவரும் 2009ல் ஒரே நேரத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்காக அறிமுகமாயினர்.

இருவரும் தென் ஆப்பிரிக்க அணிக்காக முக்கிய வீராங்கனைகளாக திகழும் நிலையில் இருவருக்குள்ளும் சில ஆண்டுகளாக இருந்த நட்பு, காதலாகி தற்போது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்

இதற்கான நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. அதற்கான படங்களை அவர்கள் சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

கனடாவில் சாதனை படைத்த இலங்கையருக்கு கிடைத்த உயரிய கெளரவம் : குவியும் பாராட்டு!!

இலங்கையில் பிறந்து கனடாவில் வசிக்கும் பிரபல கவிஞரும், எழுத்தாளருமான மைக்கேல் ஒண்டாட்ஜே எழுதிய நாவலுக்காக அவருக்கு Booker பரிசு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 1943-ல் இலங்கையில் பிறந்த மைக்கேல் பின்னர் கனடாவில் குடியேறினார். கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர் என பன்முகத்தன்மையோடு வலம் வரும் மைக்கேல் இரண்டாம் உலக போரின் போது வாழ்ந்த நான்கு கதாபாத்திரங்களை அடிப்படையாக வைத்து The English Patient என்ற நாவலை எழுதியுள்ளார்.

இந்த நாவல் லண்டனில் நடைபெற்ற Golden Man Booker விருது விழாவில் சிறந்த நாவலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பரிசை மைக்கேல் ஞாயிறு அன்று நடைபெற்ற விழாவில் பெற்று கொண்டார்.

இது Booker பரிசு போட்டியின் 50-வது ஆண்டு விழா என்பது கூடுதல் சிறப்பாகும். The English Patient நாவலானது ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

இது குறித்து Booker பரிசு அறக்கட்டளையின் தலைவர் பரோனஸ் ஹலினா வெளியிட்டுள்ள அறிக்கையில், The English Patient நாவல் கவிதையாகவும், நல்ல தத்துவமாகவும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதே போல எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் The English Patient நாவலை பெரிதும் பாராட்டியுள்ளார்கள்.

பச்சிளங்குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரன் : 9 மணி நேரம் கழித்து நிகழ்ந்த அதிசயம்!!

அமெரிக்காவில் உள்ள காட்டில் குப்பைகள் மற்றும் குச்சிகள் மத்தியில் 5 மாத குழந்தை புதைக்கப்பட்ட நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது.

மிசவுலா நகரில் உள்ள காட்டுப்பகுதியில் பிறந்து 5 மாதங்களே ஆன குழந்தை அழும் சத்தம் கேட்ட நிலையில் அந்த பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் வந்தபோது அங்கிருந்த பிரான்சிஸ் கிரவ்லே (32) என்ற நபர், நான் தான் குழந்தையை 9 மணி நேரத்துக்கு முன்னர் புதைத்தேன் என கூறினார்.

இதையடுத்து குழந்தை புதைக்கப்பட்ட இடத்துக்கு சென்ற அதிகாரிகள் குழந்தையை மீட்டனர்.

குப்பைகள், இலைகள் மற்றும் குச்சிகள் குவியலுக்கு கீழ் குழந்தை புதைக்கப்பட்டிருந்த போதும் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளது. இதையடுத்து பொலிசார் கிரவ்லேவை கைது செய்தனர்.

கிராவ்லேவுக்கு குழந்தை என்ன உறவு என தெரியாத நிலையில் அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த நிலையில் மரணித்த அழகிய இளம்பெண் : கதறும் குடும்பத்தார்!!

இளம் பெண் பெட்ரோல் ஊற்றி எரித்ததால் மரணம் அடைந்த நிலையில் அது கொலையா அல்லது தற்கொலையா என பொலிசார் இன்னும் கண்டுப்பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.

ஆப்கானிஸ்தானை சேர்ந்த சதிப் கரீமி என்ற பெண் திருமணமாகி அவுஸ்திரேலியாவுக்கு சென்ற நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் பெட்ரோல் ஊற்றி எரித்ததால் மரணம் அடைந்தார்.

தற்கொலை செய்யும் எண்ணத்தில் கரீமி தன் மீது பெட்ரோல் ஊற்றி தன்னை எரித்து கொண்டதாக கரீமியின் கணவர் குடும்பத்தார் கூறினார்கள்.

ஆனாலும் இதை வைத்து பொலிசாரால் இது தற்கொலை தான் உறுதியான முடிவுக்கு வரமுடியாத நிலையில் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

அதாவது தனது வீட்டில் பார்த்து திருமணம் செய்துவைத்த நபரை பிடிக்காமலேயே அவருடன் கரீமி வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

விக்டோரியாவில் உள்ள உதவி மையத்தை டிசம்பர், ஜனவரியில் தொடர்பு கொண்ட கரீமி கணவர் வீட்டார் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், நடுஇரவில் மழை பெய்தபோது வீட்டை விட்டு துரத்தியதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து பொலிசார் கரீமி கணவரை கைது செய்து விசாரித்த நிலையில் அவர் மீது தவறில்லை என விடுதலை செய்தனர்.

இது குறித்து பேசிய கரீமியின் தந்தை ஹஜி ஜடா, என் மகளின் மரணத்தை இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.

என் உடலில் ஒரு பகுதியை இழந்தது போல உணர்கிறேன், நாங்கள் ஆப்கானிஸ்தானின் சிறுகிராமத்தில் இருந்ததால் கரீமியின் இறுதிசடங்கில் கூட கலந்து கொள்ள முடியவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.