சென்னையில் கல்லூரி மாணவியை கத்தியால் முயன்ற உடற்பயிற்சி ஆசிரியரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,
சென்னை கல்லூரியில் பயிலும் மாணவி சுமதியிடம், `நீ ஏன் வெறுக்கிறாய்’ என்று கேட்டு தகராறு செய்துள்ளார் மதன். உடற்பயிற்சி மையம் வைத்திருக்கும் மதனுக்கும், கல்லூரி மாணவி சுமதியும் காதலித்து வந்துள்ளனர். இடையில் இவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டதால் சுமதி, மதனை சந்திக்காமல் தவிர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், சுமதி படிக்கும் கல்லூரிக்கு கத்தியுடன் நுழைந்த மதன், நீ ஏன் என்னை வெறுக்கிறாய்?’ மதன் கேட்டுள்ளார். அதற்கு ‘உன்னை எனக்குப் பிடிக்கவில்லை’ என்று சுமதி கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மதன், சுமதியை கத்தியால் குத்த முயன்றுள்ளார்.
அப்போது சக மாணவர்கள் சுமதியை மதனிடமிருந்து காப்பாற்றினர். பிறகு, மதனை அண்ணா சதுக்கம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பிரபல நடிகர் கவிகுமார் மாரடைப்பால் தனது 46வது வயதில் காலமானார். இந்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் கவிகுமார்.
இவருக்கு சில தினங்களுக்கு முன்னர் உடல்நலக்கோளாறு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் திடீரென நேற்று கவிகுமாருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இயக்குனர் அஷித்குமார், திங்களன்று ஏற்பட்ட கடும் மாரடைப்பால் கவிகுமார் இறந்துவிட்டார்.
அவர் ஒரு அற்புதமான நடிகர் மற்றும் நேர்மறையான நபராவார். கவிகுமாரின் இழப்பை ஈடு செய்யவே முடியாது என தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் 10ம் வகுப்பு மாணவியை பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் உட்பட 18 பேர் சீரழித்த விவகாரத்தில் மாணவியின் வாக்குமூலம் பொலிசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
10 வகுப்ப மாணவியின் வாக்குமூலம் இதோ, என்னை பள்ளி கழிவறையில் வைத்து சில மாணவர்கள் ஒவ்வொருவராக பாலியல் வன்கொடுமை செய்தனர்.
அதில் பள்ளி தலைமையாசியரின் மகனும் இருந்தான். பிறகு ரத்தம் படிந்த உடையோடு வெளியே வந்தேன். அதை பார்த்த தலைமையாசியர் அவரது அறைக்கு அழைத்தார்.
நடந்ததை அவரி டம் கூறி அழுதேன். என்னை சிரழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று எச்சரிக்கை செய்தார்.
பின்னர் அவரது அறையில் என்னை சுத்தம்செய்துகொள்ள சொன்னார். அதன்பின்னர் நான் அங்கிருந்து வந்துவிட்டேன். பத்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளிக்குச் சென்றேன்.
அப்போது, தலைமையாசிரியர் அவரது அறைக்கு அழைத்தார். அங்கு சென்றபோது, என்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.
நான் தப்பிக்க நினைத்தேன். மறுத்தால் என் வாழ்க்கையை நாசமாக்கிவிடுவதாக மிரட்டி, ஆசையை தீர்த்துக்கொண்டார் என கூறியுள்ளார்.
பேஸ்புக் மூலமாக நண்பரான ஒருவர் தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக திருநங்கை எஸ்.ஐ. பிரித்திகா யாஷினி பொலிசில் புகார் அளித்துள்ளார்.
இந்தியாவின் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டராக தேர்வான பிரித்திகா யாஷினி சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் பணிபுரிகிறார்.
இந்நிலையில் நேற்று அவர் அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், தனக்கு கடந்த சில நாட்களுக்கு முன் பேஸ்புக் மூலமாக ஜனார்த்தனன் என்பவர் அறிமுகமானதாகவும், சில காலம் அவருடன் நட்பாக பழகி வந்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததால் பிரிந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் ஜனார்த்தனன் தொடர்ந்து தனக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பிரித்திகா கேட்டுக்கொண்டார்.
இதுதொடர்பான நடவடிக்கையில் இறங்கிய பொலிசார் ஜனார்த்தனனை நேரில் அழைத்து விசாரித்தனர்.
இதனைத்தொடர்ந்து பிரித்திகாவுக்கு தொல்லை கொடுக்க கூடாது என்று எழுதி வாங்கிக் கொண்டனர்.
எஸ்.ஐ. ஒருவரே பாதுகாப்பு கேட்டு பொலிசிடம் புகார் அளித்தது பொலிஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டையே அதிரவைத்த சிறுமி ஹாசினியின் கொலை வழக்கில் குற்றவாளிக்கு தரப்பட்ட தூக்கு தண்டனை தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
2017ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் திகதி வீட்டில் விளையாடி கொண்டிருந்த 7 வயது சிறுமி ஹாசினி காணாமல் போனார்.
விசாரணையில் சிறுமியை, பக்கத்துக்கு வீட்டுக்காரரான தஷ்வந்த் பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன் கொலை செய்து சடலத்தை எரித்த சம்பவத்தால் தமிழ்நாடே பதறியது.
இதனை தொடர்ந்து கொலைகாரன் தஷ்வந்தை குண்டர் சட்டத்தில் அடைத்தனர், ஆனாலும் சில மாதங்களில் ஜாமீன் தரப்பட்டது.
ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் தனது தாய் சரளாவை கொன்றுவிட்டு நகைகளுடன் மும்பைக்கு தப்பிச்சென்றான்.
தொடர்ந்து மும்பையில் தஷ்வந்தை கைது செய்த பொலிசார் புழல் சிறையில் அடைத்தனர். கடந்த பிப்ரவரி 19ஆம் திகதி இந்த வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது.
தனது தூக்கு தண்டனையை ரத்து செய்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று தஷ்வந்த் தரப்பில் கேட்கப்பட்டிருந்தது.
இன்று விசாரணைக்கு வந்த வழக்கில், காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் விதித்த தண்டனை சரியானதுதான் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர், தஷ்வந்தின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழகத்தில் ஆசிரியர் ஒருவருக்கு பள்ளி மாணவன் தலையில் மசாஜ் செய்வது போன்ற வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் அருகே உள்ள இடையகோட்டையில், நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை இயங்கி வரும் இந்த பள்ளியில், சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியின் ஆண்டு விழாவை முன்னிட்டு, ஆசிரியர் இளங்கோவன் என்பவர் மாணவர்களுக்கு ஒத்திகை நடத்தியுள்ளார். அதன்படி, 8ஆம் வகுப்பு மாணவர் விஷால் கார்த்தி என்ற மாணவருக்கு ஒத்திகை நடத்த ஆசிரியர் இளங்கோவன் அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது ஆசிரியருக்கு மாணவர் விஷால்கார்த்தி தலையில் மசாஜ் செய்துள்ளார். இதனை ரங்கராஜ் எனும் மற்றொரு ஆசிரியர் தனது சட்டைப் பையில் வைத்திருந்த கைப்பேசியில் வீடியோவாக எடுத்துள்ளார்.
அதன் பின்னர், அந்த வீடியோவை அவர் இணையதளங்களில் வெளியிட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், ஆசிரியர்கள் இளங்கோவன் மற்றும் ரங்கராஜ் ஆகியோர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பிரமணி கூறுகையில்,
‘மசாஜ் சம்பவம் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பு நடந்ததாக தெரிய வருகிறது. இது குறித்து விசாரணை நடத்த உள்ளோம். மேலும் சில ஆசிரியர்கள் சரியாக பணி செய்யவில்லை, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது சம்மந்தமாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்கள் உட்பட 80 பேரை ஏற்றிச் சென்ற பேருந்தின் சக்கரம் ஒன்று தனியாக பயணித்தமையால் பதற்ற நிலை ஏற்பட்டது.
பதுளை – மஹியங்கனை வீதியில் பயணித்த பேருந்தின் முன் பக்க சக்கரம் திடீரென கழன்று சென்று சென்றமையால், பயணிகள் மத்தியல் பதற்ற நிலை ஏற்பட்டது.. எனினும் இதனால் ஏற்படவிருந்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
பயணித்து கொண்டிருந்த பேருந்தின் வலது பக்க சக்கரம் உட்பட பல இயந்திரங்கள் ஒன்றாக உடைந்து விழுந்துள்ளன. பேருந்தில் ஏற்பட்ட கோளாறே இந்த சம்பவத்திற்கு காரணமாகியுள்ளது.
இந்த விபத்து ஏரிக்கு அருகில் அல்லது நீர் வீழ்ச்சிக்கு அருகில் நிகழ்ந்திருந்தால் பாரிய உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் பள்ளி மாணவி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்த நிலையில் அது குறித்து தோழியிடம் முன்னரே அவர் பேசியுள்ளது தெரியவந்துள்ளது.
மும்பையை சேர்ந்த ஹர்சிகா மாயவன்சி (14) என்ற மாணவி கடந்த வாரம் எட்டாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஹர்சிகாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வரும் பொலிசாருக்கு பல விடயங்கள் தெரியவந்துள்ளது.
அதன்படி அவர் பையில் இருந்த கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். அதில், எல்லாம் முடிந்துவிட்டது, தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என எழுதப்பட்டிருந்தது.
பொலிஸ் விசாரணையில், எப்படி தற்கொலை செய்வது என ஹர்சிகா தனது தோழியிடம் யோசனை கேட்டுள்ளதும், அது குறித்து இணையத்தில் தேடியதும் தெரியவந்துள்ளது.
பயம் காரணமாக இதை ஹர்சிகாவின் தோழி யாரிடமும் சொல்லாமல் இருந்த நிலையில் தற்போது வெளியில் சொல்லியுள்ளார்.
அவர் குறித்த அடையாளங்களை வெளியிடாத பொலிசார் தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் பெருமாள் கோவிலுக்குள் புகுந்த நாக பாம்பு பெருமாள் சிலை மீது ஏறி காட்சியளித்தது பக்தர்களை சிலிர்க்க வைத்தது.
மதுரை திருமோகூரில் அமைந்துள்ளது காளமேகப் பெருமாள் கோவில். இந்த கோவிலின் பிராகரத்திற்குள் இன்று நாக பாம்பு ஒன்று புகுந்த நிலையில் பெருமாள் சிலை மீது ஏறி அனைவருக்கும் காட்சியளித்தது.
இதையடுத்து கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் பாம்பை ஆச்சரியத்துடன் பார்த்தது மட்டுமின்றி அதை தங்கள் செல்போனில் படமும் பிடித்தார்கள். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது.
இறுதி யுத்தத்தில் சேதமாக்கப்பட்ட தனது சொந்த வீட்டை அரசாங்கம் இன்னமும் புனரமைத்து தரவில்லை என முள்ளிவாய்க்கால் பகுதியில் தாய் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமசேவையாளர் பிரிவின் கீழ் வசித்து வரும் புனிதவதி மகேந்திரன் என்பவரே இந்த அவல நிலைக்கு உள்ளாகியுள்ளார்.
சுனாமி பேரனர்த்தத்தின் போது தனது கணவனை இழந்த குறித்த தாய் அவரது சொந்த முயற்சியில் முள்ளிவாய்க்காலில் வீடு ஒன்றை கட்டியுள்ளார்.
எனினும், குறித்த வீடு 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது பாரிய குண்டுத் தாக்குதல்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு மீள்குடியேறிய குறித்த தாய் இன்றுவரை ஆபத்தான கட்டட உடைவுகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்
தமிழ் அரசியல் கட்சி தலைவர்களும், அரச அதிகாரிகளும் தனது இந்த நிலமையை அறிந்தும் தனக்கு உதவுவதற்கு எவரும் முன்வரவில்லை என அந்த தாய் குற்றம் சுமத்துகின்றார்.
அத்துடன், தான் தனித்து வாழ்வதை காரணம் காட்டிய அரச அதிகாரிகள் தன்னை தட்டிக்கழிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
மாலபேயில் இருந்து கொழும்பு கோட்டை வரை இலகு ரயில் சேவை ஒன்று மாநகர சபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பான புகைப்படங்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியாகி உள்ளன. ஜெய்க்கா நிறுவனத்தின் நிதியுதவியின் இந்த இலகு ரயில் வீதி பத்தரமுல்லை, ராஜகிரிய, பொரளை, கண் வைத்தியசாலை மற்றும் காமினி ஹோல் ஊடாக பயணிக்கவுள்ளது.
கொழும்பு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன் ஊடாக பொது போக்குவரத்து சேவை பயன்படுத்துபவர்கள் நூற்றுக்கு 60 வீதம் வரை அதிகரிப்பதற்கு மாநகரம் மற்றும் மேல்மாகாண சபை அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இந்த வீதி நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் மாலபேயில் இருந்து கொழும்பு கோட்டை வரை அல்லது மாலபேயில் இருந்து கொள்ளுப்பிட்டி வரை செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு குறைவான நேரமே செல்லும் என தெரிவிக்கப்படுகின்றது.
வேலைத்திட்டம் இந்த வருட இறுதியில் ஆரம்பிக்கப்பட்டு 2023ஆம் ஆண்டளவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் தங்கியுள்ள 4000 இலங்கை தமிழ் அகதிகளை மீளவும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினரான சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சு இலங்கை அரசாங்கத்திற்கு தகவல் அனுப்பியுள்ளதாகவும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை அகதிகளை மீளவும் திருப்பி அனுப்புமாறு கோரி அனுப்பிய கடிதத்திற்கு இந்திய வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இதன்படி, முதற்கட்டமாக 4000 தமிழ் அகதிகள் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இது குறித்து இலங்கை அரசாங்கத்துக்கு, இந்திய அரசாங்கம் தகவலை அறிவித்துள்ளது.
இந்நிலையில், நாடு திரும்பும் அகதிகளை மீள்குடியேற்ற இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாக“ அவர், தனது டுவிட்டர் பதிவில் மேலும் கூறியுள்ளார்.
தமிழகம் – திருமங்கலம் அருகே உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 6 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள குவாரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சந்திரதாசன் என்பவரின் மகன் 6 வயதான கௌதம், இந்நிலையில், கௌதமை அனுசன் என்பவர் வெளியில் அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் வீடு திரும்பிய அனுசன், கௌதமை காணவில்லை என சந்திரதாசனிடம் தெரிவித்துள்ளார். பின்னர் சந்தேகத்தின் பேரில் அனுசன் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது முகாம் அருகில் உள்ள குவாரியில் இருந்து கௌதமின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அனுசனை கைது செய்த பொலிஸார் கௌதம் அடித்து கொலை செய்யப்பட்டாரா ? அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கம்பஹா – யக்கல, சியனே விலேஜ் பிரதேசத்தில் அமைந்துள்ள கடையொன்றில் 120 ரூபா பெறுமதியான பிஸ்கட் பக்கெற் ஒன்றை கடையிலிருந்து திருடிய பெண்ணுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி இடம்பெற்றுள்ள நிலையில் இது தொடர்பான வழக்கு நேற்று கம்பஹா நீதவான் டி.ஏ.ருவான் பத்திரண முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபரான பெண் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் குறித்த பெண்ணுக்கு ஓராண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அந்த தண்டனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த பெண் 1500 ரூபா அபராதமும், 2500 ரூபா நட்டஈடும் செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வத்தேக சிரியாவதி என்ற பெண்ணுக்கே சம்பவம் தொடர்பில் தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.