ரஜினியின் பிறந்தநாளில் வெளியாகின்றது கோச்சடையான்!!

kochadaiyaan-official-trailer

இந்தியாவில் மோசன் கப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் திரைப்படம் கோச்சடையான். ரஜினி, தீபிகா படுகோன், ஆதி, ஷோபனா, சரத்குமார், நாசர் மற்றும் பலர் இப்படத்தில் நடித்து இருக்கிறார்கள்.

செளந்தர்யா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். பாடல்களின் உரிமையை சொனி நிறுவனம் வாங்கியிருக்கிறது.

படம் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் காத்திருக்க இந்தா அந்தா என்று வெளியீட்டு திகதி இழுத்துக்கொண்டே போகிறது. சில நாட்களுக்கு முன்புதான் படத்தின் டிரெய்லரையே வெளியிட்டார்கள்.

அடுத்ததாக பாடல்கள் எப்போது வெளியாகும் என அனைவரும் காத்திருக்கும் நிலையில் ஒக்டோபர் 7ம் திகதி ஒரு பாடலை மட்டும் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

எங்கே போகுதோ வானம் என்று தொடங்கும் பாடலை கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார். படத்தின் ஆரம்பமாக இருக்கும் இந்தப் பாடலை எஸ்.பி.பி. பாடியுள்ளார்.

படத்தின் மொத்தப் பாடல்களையும் சில நாட்கள் கழித்து வெளியிட இருக்கிறார்கள். மேலும் ரஜினியின் பிறந்தநாளுக்கு படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.

நயன்தாராவை காதலிக்கவில்லை : ஆர்யா!!

aarya

நயன்தாராவும், ஆர்யாவும் காதலிப்பதாக தொடர்ந்து கிசுகிசுக்கள் வருகின்றன. இருவரும் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஜோடியாக நடித்தனர். பின்னர் ராஜாராணி படத்திலும் இணைந்துள்ளனர்.

நயன்தாராவுடன் தொடர்புப்படுத்தும் கிசுகிசுக்களுக்கு பதில் அளித்து ஆர்யா அளித்த பேட்டி வருமாறு..

நயன்தாராவுக்கும் எனக்கும் திருமணம் என அழைப்பிதல் வெளியிட்டதில் இருந்து எங்களை இணைத்து வதந்திகள் பரவி வருகின்றன. ராஜா ராணி படத்தில் நாங்கள் கணவன்-மனைவியாக நடிக்கிறோம். எனவே படத்தை விளம்பரப்படுத்த அழைப்பிதழ் அச்சிட்டு வெளியிடுவது என முடிவு எடுக்கப்பட்டது.

இது குறித்து நயன்தாராவிடம் பேசி அவரது அனுமதியும் பெறப்பட்டது. இந்த திருமண அழைப்பிதழை நயன்தாராவுக்கு தெரியாமல் வெளியிட்டதாகவும் இதனால் அவர் கோபமாக இருக்கிறார் என்று வெளியான செய்திகளில் உண்மை இல்லை.

நயன்தாரா என்னுடன் நடித்த சக நடிகை. அந்த வகையில் நான் அவருடன் தொடர்பு வைத்துள்ளேன். எங்களுக்குள் நட்புதான் உள்ளது. அதை தாண்டி எந்த உறவும் இல்லை. எனக்கு திருமணத்துக்கு வீட்டில் பெண் பார்க்கிறார்கள். அவர்கள் பார்க்கும் பெண் எனக்கு பிடித்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வேன்.

பள்ளியில் படித்த போது ஒரு பெண்ணை காதலித்தேன். ஆறு வருடம் இந்த காதல் இருந்தது. படிப்பு முடிந்து வெளியே போனதும் அது மறந்து போய்விட்டது. ராஜா ராணி படம் தமிழ் கலாசாரத்துக்கு எதிரானது என்பதில் உண்மை இல்லை. தமிழ் பண்பாட்டை அவமதிக்கும் காட்சிகள் எதுவும் கிடையாது. ஜாலியான காமெடி படமாக இருக்கும்.

இரு கதாநாயகர்களை உள்ளடக்கிய கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. உள்ளம் கேட்குமே படத்தில் இருந்து இரண்டு ஹீரோ படங்களில் நடித்து வருகிறேன். திறமையான இயக்குனர் எடுப்பதாக இருந்தால் அது போன்ற படங்களில் தாராளமாக நடிக்கலாம். சரியான இயக்குனர் அமையாயாவிட்டால் படம் தோற்றுவிடும்.

அஜீத்துடன் ஆரம்பம் படத்தில் நடிக்கிறேன். அவருடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

பாலா எடுக்கும் புதிய படத்தில் இருந்து என்னை நீக்கி விட்டதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை. அவர் என்னை அணுகவே இல்லை. ஏற்கனவே இரண்டு படங்களில் என்னை நடிக்க வைத்ததே பெரிய விஷயம் என்று ஆர்யா கூறினார்.

சீமானை பற்றி மனம் திறந்து பேசிய கயல்விழி!!(வீடியோ)

seeman

என்னிடம் கதைக்கும் போது புலிகளின் தலைமையின் மனைவி மதிவதனி அக்காவை பற்றி அடிக்கடி பாசமாக கதைப்பார் என மனம் திறக்கிறார் சீமானின் மனைவி கயல்விழி. மேலும் அவர் கூறியவற்றை இந்த வீடியோவில் காணுங்கள்..

குழந்தை வளர்ந்ததால் மீண்டும் நடிக்க வருகின்றார் ஐஸ்வர்யாராய்!!

ice

ஐஸ்வர்யாராய்க்கும் அபிஷேக் பச்சனுக்கும் 2007ல் திருமணம் நடந்தது. அதன் பிறகும் ஐஸ்வர்யாராய் தொடர்ந்து படங்களில் நடித்தார். இவர்களுக்கு 2011ல் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஆரத்யா என பெயரிட்டனர்.

பிரசவத்துக்கு பிறகு ஐஸ்வர்யாராய் சினிமாவில் நடிக்கவில்லை. நிறைய படவாய்ப்புகள் வந்தும் ஏற்கவில்லை. குழந்தையுடன் முழு நேரமும் செலவிட்டார். உடல் எடையும் கூடியது. தற்போது குழந்தை வளர்ந்து விட்டதால் மீண்டும் சினிமாவுக்கு வருகிறார்.

பிரகலாத்தாக்கர் இயக்கும் இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் ஐஸ்வர்யாராய் ஜோடியாக அவரது கணவர் அபிஷேக்பச்சன் நடிக்கிறார். படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரியில் தென் ஆபிரிக்காவில் துவங்குகிறது.

இதுகுறித்து இயக்குனர் பிரகலாத்தாக்கர் கூறும்போது, ஐஸ்வர்யாராயும் அபிஷேக்பச்சனும் எனது படத்தில் நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். இந்த படத்தை கவுரங்தோஷி தயாரிக்கிறார். ஐஸ்வர்யாராயும் அபிஷேக்பச்சனும் அழகானவர்கள் மட்டுமின்றி திறமையாவர்களும் கூட என்றார் அவர்.

விஜய்-முருகதாஸ் கூட்டணியில் இணைந்த சமந்தா!!

samantha

விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் இணைந்த முதல் படமான துப்பாக்கி சில சர்ச்சைகளை சந்தித்தாலும் மாபெரும் வெற்றி வெற்றது. விஜய் சமீபத்தில் நடித்த படங்களில் இப்படம் பிரம்மாண்டமான படைப்பாக இருந்ததால் முருகதாஸ் மீது விஜய்க்கு தனி மரியாதையும் ஏற்பட்டது. ஆகையால், முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்கலாம் என முடிவெடுத்தார் விஜய்.

துப்பாக்கி’யைத் தொடர்ந்து தலைவா, ஜில்லா ஆகிய படங்களுக்கு நடிக்க ஒப்புக்கொண்டிருந்த விஜய் தலைவா வெளியானதைத் தொடர்ந்து தற்போது ஜில்லா படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இப்படத்தை முடித்ததும் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வந்தன.

மிகப்பெரிய கதைக்களத்துடன் உருவாகும் அப்படத்திற்கு அதிரடி என பெயர் வைத்துவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், முருகதாஸ் படத்திற்கான தலைப்பை மறுத்துவிட்டார். ஆனால், இவருடைய இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகிறார் என்பதற்கு எந்தவித பதிலும் கூறவில்லை.

இந்நிலையில் விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில்தான் நடிக்கப் போகிறார் என்பது உறுதியாகியுள்ளது. இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. ஆனால் கதாநாயகி தேர்வு நடந்துவிட்டது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கவிருக்கிறாராம்.

மேலும் கொலவெறி புகழ் அனிருத் இசையமைக்கிறார். ஜோர்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவை கவனிக்கிறார். இவர் ஆர்யா, நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் ராஜாராணி படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் இந்த புதிய படம் டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும் என தெரிகிறது.

ஹொலிவுட் படத்தில் பிரகாஷ் ராஜ்!!

pirakash raj

அலகாபாத்தில் பிறந்து தற்போது இந்திய வெளியுறவுத்துறையில் பணிபுரியும் விகாஸ் ஸ்வரூப் தனது நாவல்கள் மூலம் பிரபலமானவர். இவருடைய நாவல்களில் குறிப்பிடத்தக்கவை க்யூ&க்யூ மற்றும் சிக்ஸ் சஸ்பெக்ட்ஸ் என்ற நாவல்கள் ஆகும்.

இவரது க்யூ&க்யூ நாவலைத் தழுவிதான் ஒஸ்கார் விருது பெற்ற டேனி பாயலின் ஸ்லம் டாக் மில்லியனர்’ திரைப்படம் எடுக்கப்பட்டது. தற்போது இவரது சிக்ஸ் சஸ்பெக்ட்ஸ் நாவலைத் தழுவி ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட உள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை அர்ஜெண்டினாவின் திரைப்படத் தயாரிப்பாளரான பாப்லோ டிரப்பிரோ தயாரிக்க உள்ளார்.

இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடிக்க இருப்பதாகத் தெரிகின்றது. வரும் 2014ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தப் படத்தின் தயாரிப்பு தொடங்க உள்ளது. இந்த விபரங்களை கன்னடத் தயாரிப்பாளரும் பிரகாஷ் ராஜின் நெருங்கிய நண்பருமான பீசு சுரேஷா தனது இணையதளத் தகவலில் வெளியிட்டு நண்பர் பிரகாஷ்ராஜை வாழ்த்தியுள்ளார்.

இந்த நாவலில் உள்துறை மந்திரியின் மகன் விருந்து ஒன்றில் கொலை செய்யப்படுவதும் அதில் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்கள் குறித்தும் கதை செல்லுவதாக அமைந்துள்ளது. இதற்கிடையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தான் இயக்கி நடிக்கும் மூன்று மொழித் திரைப்படத்தில் பிசியாக இருக்கின்றார். கன்னடத்தில் ஒகரானே, தமிழில் உன் சமையல் அறையில் மற்றும் தெலுங்கில் உள்வசாறு பிரியாணி என்ற தலைப்புகளில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இரட்டைக் கர்ப்பப்பையுடன் இளம் தாய்!!

Twin-Pregnancy

இரண்டு கர்ப்பப்பைகளுள்ள இளம் தாய் தனது இரட்டைக் கர்ப்பப்பைகளிலும் இரண்டு பெண் குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை தம்புள்ள டென்சில் கொப்பேகடுவ வைத்தியசாலையில் அறுவை சிகிச்சையின் மூலம் இந்த பிரசவம் நிகழ்ந்துள்ளது.

இரண்டு கர்ப்பப்பைகள் ஒரு பெண்ணுக்கு அமைவது உலகில் மிகவும் அபூர்வம். இத்தகைய இரட்டைக்கர்ப்பப்பைகள் அமைந்துள்ள பெண்கள் கருத்தரிப்பது குழந்தைகள் பிரசவிப்பதென்பது மிகவும் அபூர்வம்.

இலங்கையில் இத்தகைய இரட்டைக் கருப்பைகளைக் கொண்ட தாய்மார் தொடர்பாக இதுவரை அறிந்ததில்லை என வைத்தியர்கள் கூறினர்.

நடுவானில் பலமணிநேரம் அசந்து தூங்கிய விமானிகள்!!

sleeping-pilots

325 பயணிகளுடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் விமானிகள் இருவரும் பல மணி நேரம் தூங்கியுள்ளனர்.

பிரித்தானியாவைச் சேர்ந்த விமானம் கடந்த மாதம் 13ம் திகதி 325 பயணிகளுடன் புறப்பட்டது. சிறிது நேரத்தில் விமான பைலட் விமானத்தை தானியங்கி நிலைக்கு மாற்றிவிட்டு தூங்கினார்.

இரவு வெகு நேரம் நன்கு தூங்கிய பைலட் விழித்து பார்த்தபோது துணை பைலட்டும் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்ததைக் கண்டார். இரவு முழுவதும் விமானிகளின் கண்காணிப்பின்றி தானியங்கி முறையில் விமானம் இயங்கியது தெரியவந்தது.

இதுகுறித்து, சிவில் விமான போக்குவரத்துக் கழகத்திடம் இரு விமானிகளும் தங்கள் செயலுக்கான அறிக்கையை அளித்தனர்.
அதில் எவ்வளவு நேரம் கண்காணிப்பின்றி விமானம் பறந்தது தெரியவில்லை என்றும் தொடர்ந்து பணியில் ஈடுபட்டதால் சோர்வு ஏற்பட்டு தூங்கிவிட்டதாகவும் தெரிவித்து இருந்தனர்.

விமான போக்குவரத்து அதிகாரிகள் கூறும்போது விமான போக்குவரத்து ஒழுங்கு விதிகளின்படி விமானம் பறக்கும் போது ஏற்படும் அசம்பாவிதங்கள் குறித்து விமானிகள் அறிக்கை தர வேண்டியது அவசியம்.

இரு விமானிகளில் ஒருவர் ஏழு மணி நேர இடைவெளியில் விமானத்தை ஓட்டியுள்ளார். அவர் அதிக நேரம் தூங்கியிருக்கக் கூடாது. அவர் விழித்து எழுந்த போது துணை விமானியும் தூங்கிக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

காதலுகாக அண்ணன் மனைவியை கொன்ற இளைஞன் தற்கொலை முயற்சி!!

sucide

பலாங்கொடை, வலேபொட பிரதேசத்தில் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையை செய்தவர் 23 வயதான குறித்த பெண்ணின் கணவனது தம்பி என பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலின்போது படுகாயமடைந்த பெண் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அப் பெண் உயிரிழந்துள்ளார். காதல் பிரச்சினை காரணமாகவே இக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவரது சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொலை செய்த இளைஞன் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ள நிலையில் பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி சென்ற இலங்கை பிரதிநிதிக்கு தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு!!

protest

வர்த்தக சபை கூட்டத்தில் பங்கேற்க புதுச்சேரி சென்ற இலங்கை பிரதிநிதிக்கு தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கையில் நடைபெறவுள்ள உலக அளவிலான வர்த்தக கண்காட்சிக்கான அழைப்பை விடுப்பதற்காக இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் நேற்று காலை புதுச்சேரி சென்றுள்ளார்.

புதுச்சேரி வர்த்தக சபை பிரதிநிதிகளை ஹோட்டல் ஒன்றில் காலையில் சந்திக்கவும் மாலை தொழில் கூட்டமைப்பினர் நடத்தும் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவும் ஏற்பாடு நடந்தது.

ஆனால் வர்த்தக சபை நிர்வாகிகள் பலர் பின்வாங்கியதால் கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில், இலங்கை வர்த்தகர் வந்திருக்கும் தகவல் கசிய துவங்கியதால் தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஹோட்டல் முன்பு திரண்டனர்.

நிலைமை சிக்கல் ஆனதை தொடர்ந்து சென்னையிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு, இலங்கை வர்த்தகர் தகவல் தெரிவித்தார். இதன் பின்னர் எந்த நிகழ்ச்சிலும் கலந்து கொள்ள வேண்டாம். உடனடியாக நாடு திரும்புமாறு இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு பகல் 2.10 மணிக்கு இலங்கை வர்த்தக பிரதிநிதி சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில் இந்திய தொழில் கூட்டமைப்பு கூட்டத்தில் இலங்கை பிரதிநிதி கலந்து கொண்டுள்ளதாக தமிழர் அமைப்புகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதை தொடர்ந்து நேற்று மாலை 4:00 மணியளவில் ஹோட்டல் நுழைவாயில் முன்பு பெரியார் திராவிடர் கழகம் நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, திராவிடர் விடுதலை இயக்கம், இந்திய பூரான்கள் இயக்கம், தமிழர் களம், மனித உரிமைகள் அமைப்பு நிர்வாகிகள் திரண்டு வந்து கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள இலங்கை பிரதிநிதியை வெளியேற்றக் கோரினர்.

அப்போது ஹோட்டல் பெயர் பலகையை கல்வீசி தாக்கினர். அதையடுத்து பொலிசார் அவர்களிடளம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையில் ஹோட்டலில் நடந்த கூட்டத்தில் இலங்கை பிரதிநிதி கலந்து கொள்ளவில்லையென தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

என்னை ஜனாதிபதியாக பார்க்க மக்கள் விரும்புகின்றனர் : சஜித் பிரேமதாச!!

sajith

என்னை ஜனாதிபதியாக பார்க்கவே மக்கள் விரும்புவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தென் மாகாண முதலமைச்சராக தம்மை பார்க்க மக்கள் விரும்பவில்லை. நாட்டின் ஜனாதிபதியாக என்னை பார்க்கவே மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. கட்சியின் மெய்யான பிரச்சினைகளை மூடிமறைத்து என்னை மாகாணசபை ஒன்றிற்கு வரையறுக்க கட்சியைச் சேர்ந்த சிலர் முயற்சிக்கின்றனர்.

கட்சி உறுப்பினர்கள் விரும்பினால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தென் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் சிங்கள ஊடகமொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

காணி, பொலிஸ் அதிகாரங்கள் பெற்றுக்கொள்ளப்படும் : சீ.வி.விக்னேஸ்வரன்!!

c.v

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பெற்றுக்கொள்ளப்படும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது..

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை இலங்கை மத்திய அரசாங்கம் வழங்கத் தவறினால் சர்வதேச சமூகத்தின் ஆதரவினை பெற்றுக்கொள்ள நேரிடும். சர்வதேச சமூகத்தின் மத்தியஸ்தத்துடன் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

மாகாணசபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பெற்றுக்கொள்வது குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அரசாங்கம் தொடர்ந்தும் உதாசீனப் போக்கைப் பின்பற்றினால் மக்களுக்காக கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும்.

13ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஏற்கனவே காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

டோனி, சச்சினை மிஞ்சிய விராத் கோலி!!

virat kohli

இந்திய கிரிக்கெட் அணியில் தனது திறமையால் வளர்ந்து வரும் விராத் கோலி, தற்போது சச்சின் மற்றும் டோனியை மிஞ்சும் அளவுக்கு உயர்ந்து விட்டார்.

அணித்தலைவருக்கு உரிய தகுதிகளை வளர்த்து வரும் விராத்  கோலி, தனது தோற்றத்தாலும் அணுகுமுறையாலும் ஆண்டுக்கு 10 கோடி வருமானம் தரக்கூடிய ஜேர்மனியின் மாபெரும் விளையாட்டு நிறுவனமான அடிடாசின் விளம்பர ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளார்.

இதன்மூலம் இந்த நிறுவனத்தின் ஆடைகள் மற்றும் காலணிகள் விளம்பரங்களில் இன்னும் மூன்று வருடங்களுக்கு விராத்  கோலி தோன்றுவார்.

அடிடாசின் விளம்பரங்களில் வரும் சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க போவதாக தகவல் வெளியானதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் குறித்த நிறுவனம் எவ்வித தகவலையும் வெளியிடவில்லை.

அத்துடன் சச்சின் டெண்டுல்கர், ஸ்டீவ் வோக் ஆகியோரை தங்களது நிறுவனத் தயாரிப்புகளின் விளம்பரத் தூதுவர்களாக கொண்டுள்ள பிரபல டயர் நிறுவனம் ஒன்று 6.5 கோடிக்கு தற்போது விராத் கோலியை ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்தாண்டே விளம்பர வருமானத்தின் மூலம் 40 கோடி சம்பாதித்தவர் விராத் கோலி, தற்போது புதிய ஒப்பந்தங்களின் மூலம் டோனி, சச்சினை மிஞ்சியுள்ளார்.

ஏற்கனவே பெப்சி, டொயோட்டா, சிந்தால் டியோடிரன்ட்ஸ் உள்ளிட்ட 13 நிறுவன விளம்பரங்களில் கோலி தோன்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வடமாகாண சபைக்கான கட்டிட நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகும் நிலையில்..!

northern_mapவடமாகாண சபைக்கான கட்டிடம் யாழ். கைதடியில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மாகாண சபையின் பிரதம செயலாளர் விஜயலஷ்மி தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபைக்கான கட்டிட நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகும் நிலையில் உள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் 10 ம் திகதி கட்டிடத்தை கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது என அவர் மேலும் கூறியுள்ளார்.

இரண்டு தலையுடன் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை வெற்றி!!

baby

ஆப்கானிஸ்தானில் இரண்டு தலையுடன் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானை சேர்ந்த தம்பதி ஒருவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.

இதில் ஒரு குழந்தை ஆரோக்கியமாகவும் மற்றொரு குழந்தை உடல்நலக் குறைவுடன் இரண்டு தலைகளுடன் பிறந்துள்ளது.
இதனையடுத்து குறித்த குழந்தையை ஜலாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இங்கு எவ்வித மருத்துவ செலவுமின்றி குழந்தையின் தலையொன்று அகற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை அறுவை சிகிச்சை மருத்துவர் அஹ்மத் குழந்தைக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளதாகவும் மிகவும் ஆபத்தான சிகிச்சையாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

குழந்தையின் தந்தை தனது குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது மூன்றாவது குழந்தையின் தலையாக இருக்கலாம் என்றும் கரு உருவாகாமல் போனதே இதற்கு காரணம் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

குரங்கை பாடாய் படுத்திய இளைஞர்கள் : உயிர் பயத்தில் கதறி துடிக்கும் குரங்கு!!(வீடியோ)

kuranku

விலங்குகளை விடவும் மிக மோசமான குணம் எங்களுக்குள் உண்டு என்பதை மனிதர்கள் சிலர் நிரூபிக்கும் வண்ணம் செயல்கள் அரங்கேறி வருகின்றன.

குவைத்தில் கார் ஒன்றின் மீது ஏறிய குரங்கை பாடாய் படுத்தி உள்ளனர். இந்த கொடூர காட்சியை வீடியோவாக படமெடுத்து இணையத்திலும் பதிவேற்றம் செய்துள்ளனர்.

கார் மீது குரங்கு ஏறியதும் படு வேகமாக 100 கிலோமீற்றர் வேகத்தில் காரை ஓட்டியுள்ளனர். இதைப் பார்த்து பயந்து போன குரங்கு கார் கண்னாடியில் தனது கால், கைகளால் இறுகப் பிடித்தபடி உயிர் பயத்தில் கதறித் துடித்தது.

பிடியை விட்டால் மரணம் என்பதால் அந்தக் குரங்கு உயிரைக் காப்பாற்ற துடித்ததை அந்த இளைஞர்கள் விழுந்து விழுந்து சிரித்தபடி ரசித்துள்ளனர்.

இந்த செய்தியை வெளியிட்டுள்ள அரபு நாளிதழான அல் அன்பா சில இளைஞர்களின் பொறுப்பற்ற செயல் இது. மிகவும் மோசமான, இரக்கமற்ற செயல் என்றும் வர்ணித்துள்ளது. எனினும் இந்த சம்பவம் எந்த இடத்தில் நடந்தது என்பது தெரிவிக்கப்படவில்லை.