சம்பியன்ஸ் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் லீக் T20 போட்டிகளில் ராஞ்சியில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.
இதில் டோனி 19 பந்துகளில் 63 ஓட்டங்கள் குவித்து சென்னை அணியின் வெற்றிக்கை உறுதுணையாக இருந்தார். குறிப்பாக 8 சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
இருப்பினும் மெதுவாக பந்துவீசியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, டோனிக்கு 92 758ம் ரூபாவும் பிற வீரர்களுக்கு 46 383 ரூபாவும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மட்டுமல்லாமல் சன்ரைசர்ஸ் அணிக்கும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, அந்த அணியில் ஷிகார் தவானுக்கு 92 758 ரூபாவும், மற்ற வீரர்களுக்கு 46 383 ரூபாவும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் நிதியுதவியுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஓமந்தை முதல் கிளிநொச்சி வரையான ரயில் பாதையில் முதல் பயணத்தின் போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரயில் பெட்டி பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் இந்திய அரசின் பிரதிநிதிகள் அதிருப்தி வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய ரயில் பாதையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டி பயன்படுத்தப்பட்டுள்ளதா என இந்திய அதிகாரிகள் ரயில் திணைக்களத்தின் அதிகாரிகளிடம் விசாரித்துள்ளனர்.
திணைக்களத்திற்கு சொந்தமான ரயிலில் தமது பெட்டி ஒன்று பயன்படுத்தப்படாமையானது தமக்கு ஏற்பட்ட அவமானம் என இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எனினும் முதல் பயணத்தில் முக்கியஸ்தர்கள் பயணித்ததால் குளிரூட்டப்பட்ட பெட்டியொன்றை பயன்படுத்தும் தேவை ஏற்பட்டதாகவும் திணைக்களத்திடம் சீனாவில் தயாரிக்கப்பட்ட பெட்டிகளே இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை ஏற்காத இந்திய அதிகாரிகள் இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டியை பயன்படுத்துவதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
கிளிநொச்சி செல்லவிருந்த பல இந்திய அதிகாரிகள் இந்த பிரச்சினை காரணமாக ரயில் பயணத்தை மேற்கொள்ள முடியாது என அறிவித்ததாக கூறப்படுகிறது.
எண்ணற்ற இணைய சேவைகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனமானது தனது Google Play Books சேவையை மேலும் 9 நாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது.
இதன்படி இந்தோனேசியா , ஹொங் கொங், மலேசியா,பிலிப்பைன்ஸ் , சிங்கப்பூர், தைவான், தாய்லாந்து, வியட்நாம் , நியூசிலாந்து ஆகிய நாடுகளில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 4 மில்லியனுக்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்டு இந்த ஒன்லைன் சேவை நடத்தப்பட்டு வருகின்றது.
இச்சேவையினூடாக புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு Google Play தளத்தினை பயன்படுத்த முடிவதுடன் இணைய இணைப்பு அற்ற வேளைகளில் புத்தகங்களை பார்வையிடும் வசதி காணப்படுகின்றது.
மேலும் இச்சேவையினை பெறுவதற்கா Android மற்றும் iOS இயங்குதளங்களில் செயற்படக்கூடிய அப்பிளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பகலில் ஒரு மணி நேரம் வரை தூங்கினால் மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும் என்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவில் 40 ஆரம்பப் பாடசாலை மாணவர்களிடம் நடத்திய சோதனையில் பகலில் ஒரு மணி நேரம் தூங்கும் மாணவர்களின் நினைவாற்றல் மற்றும் கற்கும் திறன் அதிகரித்ததை மாசாசூசெட்ஸ் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பாடசாலைக் குழந்தைகளின் வாழ்வில் தொடக்கத்திலேயே நினைவாற்றலை அதிகரிப்பது அவசியம் என்றும் அதற்கு குழந்தைகளை மதிய நேரத்தில் சிறிது நேரம் தூங்கவிட்டால் படிப்பில் சுட்டியாக விளங்குவர் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளை ஏற்றிச் சென்றதாகக் கருதப்படும் படகு ஒன்று ஜாவா தீவுகளுக்கு தெற்கே கடலில் மூழ்கியதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் குறைந்தது 20 பேர் வரை பலியாகியுள்ளனர். 25 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் பலரைக் காணவில்லை. இவர்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை.
அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் டொனி அப்பொட் அவர்கள், அகதிகள் அவுஸ்திரேலியாவுக்கு வருவது குறித்துப் பேசுவதற்காக ஜாவாவுக்கு செல்வதற்கு சில தினங்களுக்கு முன்னதாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
அண்மைய வருடங்களில் நூற்றுக்கணக்கானவர்கள், அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோருவதற்காக இந்தோனேசியாவின் ஊடாக மரப் படகுகளில் பயணம் செய்துள்ளனர்.
இந்தப் படகில் 120 பேர் வரையில் பயணித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
படகு மூலமாக இலங்கையர்கள் பலரும் அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்கும் நிலையில், இப்படகில் சென்று விபத்துக்குள்ளானவர்கள் பற்றிய விபரம் வெளியாகவில்லை.
இந்திய அணியின் முன்னாள் அணித் தலைவர் டிராவிட் தான் என் ஹீரோ என இளம் அவுஸ்திரேலிய வீரர் ஆஷ்டன் ஏகார் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகள் மோதிய ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அறிமுகமான முதல் போட்டியில் உலக சாதனை படைத்து அசத்தினார் ஆஷ்டன் ஏகார்(19).
தற்போது இந்தியாவில் நடக்கும் சம்பியன்ஸ் லீக் தொடரில் அவுஸ்திரேலியாவின் பேத் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்காக பங்கேற்கும் இவர் இந்திய அணியின் முன்னாள் அணித் தலைவர் டிராவிட் தான் தனது ஹீரோ என தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஏகார் தெரிவித்தாவது..
சிறுவயது முதல் டிராவிட்டை பிடிக்கும். உலகின் சிறந்த துடுப்பாட்டக்காரர்களில் டிராவிட்டும் ஒருவர். அவரின் துடுப்பாட்டத்தைப் பார்த்து பல நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன். என் கிரிக்கெட் வாழ்க்கையில் அவரது பாங்கு முக்கியமானது.
அவர் தான் என்னுடைய ரோல் மொடல். சுருக்கமாக சொன்னால் கிரிக்கெட்டில் அவர் தான் என்னுடைய ஹீரோ.
சம்பியன்ஸ் லீக் 20-20 தொடரில் முன்னணி வீரர்களுக்கு எதிராக போட்டியில் பங்கேற்பதன் மூலம் சிறந்த அனுபவம் கிடைக்கும்.
முதல் போட்டியில் கிடைத்த அறிமுகத்தை மறக்க முடியாது. அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்றாலும் சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக உருவாதே என் லட்சியம். அதை நோக்கி செல்ல கடினமாக பயிற்சி மேற்கொண்டுள்ளேன் என ஏகார் கூறினார்.
உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்கிவிக்கும் பொருட்டு வவுனியா மாவட்டத்தில் இணையத்தள அங்குராப்பண நிகழ்வு வவுனியா நெல்லி ஸ்டார் விடுதியில் இடம்பெற்றுள்ளது.
USAID, FOSDO ஆகிய நிறுவனங்களின் அனுசரனையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் உள்ளுர் உற்பத்திகள் தொடர்பான விபரங்களினை வெளிப்படுத்தும் முகமாக இணையத்தளம் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டதுடன் இணையத்தளத்தில் சென்று பார்ப்பது தொடர்பான கையேடும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
இவ் இணையத்தில் உள்ளுர் உற்பத்திகளான விளக்குமாறு தயாரித்தல், பனை பொருள் உற்பத்தி, மட்பாண்ட உற்பத்தி, நெசவு உற்பத்தி, பன்னைவேலை, இளைநார் வேலைகள், பளிங்குரு உற்பத்தி, ஊதுபத்தி உற்பத்தி, நூல் ஆடைகள் உற்பத்தி, என பலதரப்பட்ட உற்பத்திகள் தொடர்பாக கூறப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில், USAID நிறுவனத்தின் சிரேஸ்ட அதிகாரி கிறிஸ்ரிமர்டின்ஸ், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி எஸ்.மேகநாதன், பொஸ்டோ நிறுவன நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் செந்தில்குமரன், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, வெண்கல செட்டிகுள பிரதேச செயலாளர் என்.கமலதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இலங்கையின் மனித உரிமை செயற்பாடுகளை விரிவுப்படுத்த செயற்பாட்டு ரீதியான திட்டத்தை வகுப்பதற்கு ஆலோசனை வழங்குவதற்காக லண்டனில் உள்ள பொதுநலவாய மனித உரிமை பிரிவின் பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர்.
இவர்கள் வவுனியாவில் விசேட கருத்தரங்கை நடத்தி வருவதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த பிரதிநிதிகள் குழுவில் அயர்லாந்து, மலேசியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
வவுனியாவில் உள்ள விடுதியொன்றில் நேற்றும் இன்றும் நடைபெறும் இந்த கருத்தரங்கில் வவுனியாவை சேர்ந்த 17 சிவில் அமைப்புகள் கலந்து கொண்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணையாளர் பிரதிபா மாநாமஹேவா தெரிவித்தார்.
மனித உரிமை செயற்பாடுகளை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ள செயற்பாடுகளுக்கு எவ்வாறு உதவிகளை வழங்க வேண்டும் என்பது தொடர்பில் பொதுநலவாய மனித உரிமை பிரிவின் பிரதிநிதிகள் ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.
வடக்கின் ஜனநாயக வெற்றியை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என கமத்தொழில் அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்..
வடக்கு மக்களுக்கு சமாதானத்தை பெற்றுக்கு கொடுத்ததால் தெளிவாக அவர்களால் வாக்களிக்க முடிந்தது. வடக்கில் தீவிரவாத மற்றும் பிரிவினைவாதத்தை தோற்கடித்து பெறப்பட்ட இந்த ஜனநாயக வெற்றியை பாதுகாக்க வேண்டியது எமது கடமை.
வடக்கு மாகாண சபையினால் இலங்கையின் எதிர்காலத்தில் தெளிவான மாற்றங்களை ஏற்படுத்த முடியும். நாட்டின் இறையாண்மை, ஐக்கியம் என்பவற்றை பாதுகாத்து கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் கடமை வடக்கு மாகாண சபைக்கு உள்ளது.
இது தொடர்பில் கவனத்துடன் செயற்பட வேண்டிய அத்தியவசியம் ஏற்பட்டுள்ளது என்றார்.
இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்ட காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மீனவர்களுக்கு சொந்தமான 5 விசைப்படகுகளை அரசுடமையாக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காரைக்கால் மற்றும் நாகபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 34 பேரையும் அவர்கள் சென்ற 5 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.
கடந்த ஜூலை 31ம் திகதி சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். நீதிமன்றத்தால் சிறைவைக்கப்பட்ட மீனவர்கள் செப்டம்பர் 6ம் திகதி விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் இவர்களது படகுகள் விடுவிக்கப்படவில்லை.
இதையடுத்து படகுகளை விடுவிக்க கோரி நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று 26 ம் திகதி நடக்கும் என நீதிபதி அறிவித்தார்.
யாழ்ப்பாணம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 34 மீனவர்களில் படகின் உரிமையாளர்களான 5 மீனவர்களை தவிர எஞ்சிய 29 பேரையும் விமானம் மூலம் இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப இந்திய தூதரக அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆனால் படகுகளை விடுவிக்கப்படாத நிலையில் தாங்கள் நாடு திரும்ப மாட்டோம் என மீனவர்கள் இந்தியாவிற்கு வர மறுத்து விட்டனர். இதன்பின் கொழும்பு சிறப்பு முகாமில் தங்கியிருந்த மீனவர்களிடம் இந்திய தூதரக அதிகாரிகள் படகுகள் மீட்டுத் தரப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து கடந்த 22 ம் திகதி மீனவர்கள் 34 பேரும் மண்டபத்திற்கு வந்தனர்.
இந்நிலையில் நாகை மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பான விசாரணை நேற்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது தமிழக மீனவர்களின் சார்பில் யாழ்ப்பாணம் நீதிமன்ற முன்னாள் நீதிபதி திருநாவுக்கரசு படகுகளை விடுவிக்க வலியுறுத்தி வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இலங்கை அரசு வழக்கறிஞர் மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்கள். எனவே குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர்களது படகுகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றார்.
இதையடுத்து பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த தமிழக மீனவர்கள் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். எனவே குற்றவாளிகளுக்கு சொந்தமான 5 படகுகளையும் பறிமுதல் செய்து அவற்றை அரசுடமையாக்கப்படுகிறது என அறிவித்தார்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்த குற்றத்தை ஒப்புக்கொண்டால்தான் சிறைபிடிக்கப்பட்ட படகுகளுடன் விடுவிக்கப்படுவார்கள் என இந்திய தூதரக அதிகாரிகள் சிறையில் இருந்த மீனவர்களிடம் கூறியுள்ளனர்.
இதனை நம்பிய தமிழக மீனவர்கள் தாங்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தது உண்மைதான் என நீதிமன்றத்தில் கூறியுள்ளனர். இதனால் மீனவர்களை மட்டும் விடுவித்த பருத்தித்துறை நீதிமன்றம் அவர்களது படகுகளை விடுவிக்காமல் இலங்கை அரசின் உடமை என அறிவித்துவிட்டது.
இதன் மூலம் தமிழக மீனவர்களுக்கு சொந்தமான சுமார் 2 கோடி மதிப்புடைய 5 விசைப் படகுகளை இழக்க இந்திய அதிகாரிகளே காரணமாக இருந்துள்ளனர்.
இலங்கையின் பிடியில் இருக்கும் மேலும் 25க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளுக்கும் இதேநிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் மீனவர்களிடையே எழுந்துள்ளது.
அமெரிக்காவில் விளையாட்டாக தூக்கு மாட்டிய சிறுவன் பரிதாபமாக பலியாகியுள்ளான்.
அமெரிக்காவின், லூயிஸ்வெலி நகரை சேர்ந்தவன் ஜோர்டன் மோர்லன்(16). அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் பேய் திருவிழா கொண்டாடப்படுகிறது.
இதற்காக,தன்னை விகாரமாக ஒப்பனை செய்துகொண்ட, ஜோர்டன் விளையாட்டிற்காக வீட்டு தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கி தன் தங்கையை அச்சுறுத்த நினைத்தான்.
சற்று நேரத்தில் மயக்கம் அடைந்த அவன் அசைவின்றி தொங்கியதைக் கண்டு ஜோர்டனின் தங்கை அதிர்ச்சி அடைந்தாள்.
உடனடியாக தாயிடம் ஓடிச்சென்று நடந்ததை கூறினாள். பதறி ஓடி வந்த ஜோர்டனின் தாய் அக்கம் பக்கத்தினர் துணையுடன் அவனை மருத்துவமனையில் அனுமதித்தார்.
கழுத்தில் ஏற்பட்ட இறுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த ஜோர்டனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி ஜோர்டன் உயிரிழந்துள்ளான்.
7 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு புரிந்த 45 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் வென்னப்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வென்னப்புவ பொலிஸ் பிரிவில் வய்கால – தம்பரவில பகுதியைச் சேர்ந்த சிறுமியே வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சந்தேகநபர் சிறுமியின் சிறிய தந்தை என தெரிவிக்கப்படுகிறது.
சிறுமியின் பெற்றோர் நித்திரையில் இருந்தபோது சந்தேகநபர் சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன்பின்னர் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாரவில மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
பொதுநலவாய தலைவர்களின் மகாநாட்டைப் பற்றி நாம் அக்கறை காட்டுகிறோம் என நியூசிலாந்து பிரதம அமைச்சர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் 68வது அமர்வில் கலந்துகொள்ளும் பொருட்டு நியூயோர்க் நகரத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் நியூசிலாந்து பிரதம அமைச்சர் ஜோன் கேவும் நேற்று சந்தித்து சினேகபூர்வமான உரையாடலில் ஈடுபட்டார்.
இரு நாட்டுத் தலைவர்களும் இன்னும் ஒரு மாதத்தில் இலங்கையில் நடைபெறவிருக்கின்ற 2013 பொதுநலவாய அரச தலைவர்களின் மகாநாடு உள்ளிட்ட பல விடயங்களைப்பற்றி கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
தலைவர்களின் மகாநாட்டுக்கு வருகை தருவதற்கு நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என ராஜபக்ஷவிடம் தெரிவித்த பிரதம அமைச்சர் கே, 2011ம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் பேர்த் நகரில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்களின் மகாநாட்டில் தமக்கு கலந்துகொள்ள முடியாமல் போனதால் இலங்கையில் நடைபெறுகின்ற மகாநாட்டைப்பற்றி தாம் பெரிதும் அக்கறை காட்டுவதாகக் குறிப்பிட்டார்.
பொதுநலவாய நாடுகளின் வியாபார மன்றத்திற்கு நியூசிலாந்து பிரதிநிதிகள் குழுவொன்றை அனுப்பும்படி ஜனாதிபதி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்ட ஜோன் கே வியாபார மன்றத்திற்கு தூதுக்குழுவொன்றை அனுப்ப முடியும் என்றும் தெரிவித்தார்.
இலங்கை நியூசிலாந்தின் பால் உற்பத்தித் துறைக்கு மிக முக்கியமான சந்தையாக இருக்கின்றது எனக் குறிப்பிட்ட பிரதம அமைச்சர் கே மிகச் சிறந்த தொழில்நுட்ப நிபுணத்துவ அறிவு தமது நாட்டுக்கு இருக்கின்றது எனவும் இலங்கையின் பால் உற்பத்தித் துறையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு இவ் அறிவை பகிர்ந்துகொள்வதற்கு விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இலங்கை அடைந்துள்ள அபிவிருத்தியைப்பற்றி நியூசிலாந்து தலைவருக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி ராஜபக்ஷ வறுமையும் வேலையில்லாத்தன்மையும் குறைந்துகொண்டிருக்கிற பெருளாதார சூழல் ஒன்று நாட்டில் உருவாகியுள்ளதென சுட்டிக்காட்டினார்.
2015 – 2016 காலவரையறையில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் ஆசனம் ஒன்றை உரித்தாக்கிக்கொள்வதற்கு நியூசிலாந்து மேற்கொள்கின்ற முயற்சிக்கு ஒத்துழைப்பை நல்குவதைப்பற்றி கவனத்தில் எடுத்துக்கொள்ளும்படி பிரதம அமைச்சர் கே, ஜனாதிபதியை கேட்டுக்கொண்டார்.
இலங்கை யாருக்கு ஒத்துழைப்பு நல்குவது என இன்னும் தீர்மானிக்கவில்லை எனக் குறிப்பிட்ட ராஜபக்ஷ ஆயினும் இக்கோரிக்கைப்பற்றி கவனத்தில் எடுத்துக்கொள்வதாவும் நியூசிலாந்து பிரதம அமைச்சருக்கு தெரிவித்தார்.
ஜப்பானில் திருமணமாகாத பெண்கள் பலர் முழு நேர இல்லத்தரசிகளாக இருக்க விரும்புகின்றனர். ஜப்பான் நிறுவனம், இணையதளம் மூலமாக 15 வயது முதல் 39 வயதுடைய பலரிடம் ஒரு ஆய்வு நடத்தியது.
அவர்களில் 34.2 சதவீதம் பேர் திருமணத்திற்குப் பின்னர் முழு நேர இல்லத்தரசிகளாக இருக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். இதில் 38.5 சதவீதம் பேர் திருமணத்திற்குப் பின் முழு நேர இல்லத்தரசிகளாக இருப்பதை விரும்பவில்லை.
இந்த ஆய்வில் 19.3 சதவீத திருமணமாகாத ஆண்கள் தங்களுக்கு வரும் மனைவி முழு நேர இல்லத்தரசியாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். இதை எதிர்ப்பவர்கள் 30.2 சதவீத ஆண்கள்.
இந்த ஆய்வின் மூலம் மூன்றில் ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு வேலைக்குச் செல்ல விரும்பவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
வளர்ந்த தொழில் துறை நாடான ஜப்பானில் ஆணாதிக்கம் அதிகமாக இருப்பதாலும் பனிச்சுமை அதிகமாக இருப்பதாலும் பெண்கள் இந்த முடிவிற்கு வந்துள்ளனர்.
மேலும, வரும், 2050ம் ஆண்டிற்குள் ஜப்பானில் பணிபுரியும் பெண்கள் எண்ணிக்கை 40 சதவீதம் குறையும் என்று சர்வதேச நிதியம் மதிப்பிட்டுள்ளது.
இதயத்தில் இருந்து ரத்தம், ரத்தக் குழாய்களின் மூலமாக நமது உடலில் உள்ள உறுப்புகளுக்குப் போய்ச் சேர்கிறது. எதிர்பாராத காரணங்களால் அதாவது ரத்தக் குழாய்களில் தடை இருந்தாலோ அல்லது அவை பாதிக்கப்பட்டிருந்தாலோ ரத்தம் சரிவர உறுப்புகளுக்குப் போய்ச் சேராது.
இந்த இக்கட்டான நிலையை ஈடுகட்டும் வகையில் முக்கிய உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் தடைபடாமல் இருக்க மாற்று ரத்தக் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரத்தக் குழாய்களை இணை ரத்தக்குழாய்கள் என்று சொல்வார்கள்.உடற்பயிற்சிக்கும் இந்த இணை ரத்தக் குழாய்களுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? இருக்கிறது.
இந்த இணை ரத்தக் குழாய்கள் இதயம் உருவாகும்போதே உருவாகிவிடுகின்றன. ஆனால் முக்கியமான வேலைகளை முதன்மை ரத்தக் குழாய்களே முழுநேரமும் செய்துவிடுவதால் இணை ரத்தக் குழாய்கள் செயலற்றுத்தான் காணப்படும்.
அவசர காலத்தில் தானே நமது சேவை தேவை என்ற அலட்சியத்தில் இவை அளவில் சுருங்கியும், வளைந்தும், நெளிந்தும் காணப்படும். அந்த நிலையில் திடீரென முதன்மை ரத்தக் குழாய்கள் செயலற்றுப் போகும்போது இவை விழிப்படைந்து வேலை செய்ய சற்று நேரம் பிடிக்கும்.
ஆனால் இளமைப் பருவத்தில் இருந்து நாம் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதன் மூலம் இந்தத இணை ரத்தக் குழாய்களை நன்கு இயக்கி அவற்றை எப்போதுமே தயார் நிலையில் வைத்திருக்கலாம். அதன் மூலமாக திடீரென இதயத்தின் முதன்மை ரத்தக் குழாய்கள் அடைபடும்போது இந்த இணை ரத்தக்குழாய்கள் விரைவாகச் செயல்பட்டு மாரடைப்பு போன்ற சிக்கலான பிரச்சனைகளால் மரண ஆபத்து ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
நீங்கள் தொடர்ச்சியாகத் தினமும் உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் மாரடைப்புக்கான வாய்ப்பையும் பெருமளவு குறைத்துவிடலாம். மாரடைப்புக்கு அடிப்படை காரணம் இதயத் தமனிகள் முழுமையாக அடைபட்டு இதயத்தசைகள் சுருங்கி, இதயம் இயங்கத் தேவையான உயிர்வளி சத்துகள் போன்றவை கிடைக்காததுதான்.
அன்றாட உடற்பயிற்சிகள் இதயத் தசைகளின் சுருங்கும் ஆற்றலை அதிகமாக்குகின்றன. அதோடு உடற்பயிற்சி செய்யும் போது அதிக அழுத்தத்துடன் ரத்தம் ரத்தக் குழாய்கள் வழியே செல்கிறது. இதயத் தமனிகளில் ஏற்படும் அடைப்புகளை அதிக அழுத்தத்துடன் வரும் ரத்தமானது ஓரளவுக்கு அகற்றுகிறது.
இதன் மூலமாக மாரடைப்புக்கான வாய்ப்பு குறைக்கப்படுகிறது. அன்றாட உடற்பயிற்சியின் மூலமாக இதயத் தமனி நோய்களையும், மாரடைப்பையும் கணிசமான அளவு தடுக்க முடியும். உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் சரிவர இயங்க வேண்டும் என்றால் தேவையான உயிர்வளி, சத்துகள் போன்றவை தொடர்ந்து கிடைக்க வேண்டும்.
ரத்தத்தின் மூலமாகவே இவை செல்களைப் போய்ச் சேருகின்றன. அன்றாடம் குறிப்பிட்ட கால அளவில் மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் இதயத்தின் செயல்திறனை அதிகமாக்குவதோடு, உடலில் உள்ள பல்வேறு ரத்தக் குழார்களை விரிவடையச் செய்கின்றன. மேலும் ரத்தக் குழாய்களில் ரத்தம் தங்கு தடையில்லாமல் ஓடவும் துணைபுரிகின்றன.
நடனம் பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். அதிலும் குழந்தைகளின் நடனம் என்றால் சொல்லவே வேண்டாம். இங்கு ஒரு குட்டி நடனமாடுகின்றது அதனையும் கொஞ்சம் பாருங்கள்..