கழற்றிவிட்ட அமலா பால், காத்திருந்த விஜய்!!

director-vijay-with-amala-paulஇருவரும் காதலிக்கவில்லை என்று வெளியில் சொல்லிக்கொண்டாலும் வழக்கம்போலவே சினிமா நூற்றாண்டு தொடக்க விழாவுக்கும் இயக்குநர் ஏ.எல்.விஜய்யும், அமலா பாலும் ஒன்றாகவே வந்தனர்.

சேலை, கொண்டை, கொண்டையைச் சுற்றிலும் மல்லிகைப்பூ என அச்சு அசல் தமிழ்ப் பெண்ணாக வந்திருந்தார் அமலா பால். இருவரும் சிரித்துப் பேசியபடியே அமர்ந்திருந்தனர்.

அவர்களுக்கு முன்வரிசையில் இருந்த சில இருக்கைகள் காலியானதும் அங்கு வந்து அமர்ந்தார் அனுஷ்கா. அவரைப் பார்த்ததும் விஜய்யைக் கழற்றிவிட்டு அனுஷ்காவுடன் போய் அமர்ந்து கொண்டார் அமலா பால்.

அவர்களுக்குப் பின்னால் பேசக்கூட ஆள் இல்லாமல் நீண்ட நேரம் தேமே என அமர்ந்திருந்தார் விஜய். அமலா பால் எங்கோ கிளம்பிச் செல்ல, அந்த இடத்தில் அமர்ந்து அனுஷ்காவுடன் பேசினார் விஜய்.

சிறிது நேரத்தில் அமலா பால் திரும்பி வர அந்த இடத்திலிருந்து கிளம்பி மறுபடியும் அவர்களுக்குப் பின்னிருக்கையில் வந்து அமர்ந்து கொண்டார்.

அஜித்தைக் காப்பாற்றிய ஷாலினி!!

ajith

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. விழாவின் தொடக்க நிகழ்ச்சிக்கு தன் மனைவி ஷாலினியுடன் வந்தார் அஜித்.

அவர் காரில் வருவதை வெளியிலேயே பார்த்துவிட்ட ரசிகர்கள், ஸ்டேடியத்துக்குள் காரைத் துரத்தி வந்தனர். இதனால் காரிலிருந்து இறங்க முடியாமல் தவித்தார் அஜித்.

போலீஸ் வந்தும் ரசிகர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வேறுவழியில்லாமல் காரைத் திருப்பி மற்றொரு வழியாக ஸ்டேடியத்துக்குள் சென்றார்.

அதேபோல் விழா அரங்கத்தில் இருந்து கிளம்பும்போதும் ஏராளமானவர்கள் அஜித்தைச் சூழ்ந்து கொண்டனர். அவரால் இருக்கைகளைத் தாண்டி கூட வெளியில் வர முடியவில்லை.

உடனே அவருக்கு முன்னால் வந்த ஷாலினி சிரித்தபடியே வணக்கம் சொல்லி முன்னேற கொஞ்சம் வழிவிட்டது ரசிகர்கள் கூட்டம். அதைப் பயன்படுத்தி போலீஸ் உதவியுடன் வெளியே சென்றார் அஜித்.

சிவகார்த்திகேயனுடன் மல்லுக்கட்டும் சந்தானம்!!

Santhanam and Sivakarthikeyanசந்தானம், சிவகார்த்திகேயன் இருவருமே விஜய் டி.வி.யில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள். ஆனால், ஏனோ சிவாவுக்கும், சந்தானத்துக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான்.

யா யா படத்தில் மிர்ச்சி சிவா வேடத்தில் முதலில் சிவகார்த்திகேயன் தான் நடிப்பதாக இருந்தது. அவரிடம் பேசி அட்வான்ஸும் கொடுத்து விட்டார்களாம். அவன் நடிச்சா நான் நடிக்க மாட்டேன்’ என்று சந்தானம் கண்டிஷன் போட்டதால், சிவகார்த்திகேயனைத் தூக்கிவிட்டு மிர்ச்சி சிவாவை நடிக்க வைத்தனர்.

அடுத்து ராஜா ராணி படத்திலும் ஜெய் நடிக்கும் கேரக்டரில் முதலில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தது. அவரிடம் பேச்சு வார்த்தையும் நடபெற்று வந்தது. அங்கேயும் சந்தானம் புகுந்து சலம்பல் செய்ததால் சிவாகார்த்திகேயனை நீக்கிவிட்டு ஜெய்யை நடிக்க வைத்தனர்.

ரெண்டு பேரும் காமெடியன்கள் தான். ஆனால் அவனுக்கு மட்டும் ஹீரோ சான்ஸா குவியுதே. என்ற விரக்தியில் தான் சந்தானம் இப்படிப் பண்ணுகிறார் என்கிறார்கள்.

இதனால் சந்தானம் மீது செம கடுப்பில் இருக்கிறாராம் சிவகார்த்திகேயன். பிரச்னை எப்போது வெடிக்கப்போகிறது என ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் இருவராலும் வாய்ப்பின்றித் தவிக்கும் சில காமெடியன்கள்.

இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடத்தப்படக்கூடாது : சர்வதேச மன்னிப்பு சபை!!

amnestyintl.logo

இலங்கை மனித உரிமைகளை மீறுமானால் அந்த நாட்டில் பொதுநலவாய நாடுகளின் அமர்வை நடத்தக்கூடாது என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது. பொதுநலவாய வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் நிகழவுள்ள நிலையில் இந்தக் கோரிக்கையை சர்வதேச மன்னிப்பு சபை விடுத்துள்ளது.

பொதுநலவாய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை உள்ளடக்கிய பொதுநலவாய அமைச்சர் மட்ட நடவடிக்கைக் குழுவினர் மற்றும் பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஸ் சர்மா ஆகியோருக்கு இடையில் இன்று நியூயோர்க்கில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில் பொதுநலவாய அமைப்பு தமது மனித உரிமைகள் தொடர்பான கொள்கையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது என்று சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய பசுபிக் பிரதி பணிப்பாளர் பொலி ட்ரஸ்கொட் தெரிவித்துள்ளார்.

2009 ஆம் இறுதிப்போரின் போது இலங்கைப்படையினரும் விடுதலைப்புலிகளும் போர்க்குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டனர்.
எனினும் இது தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றுக்கு இலங்கை அரசாங்கம் இடம்தர மறுக்கிறது.

இந்தநிலையில் இலங்கைக்கு விஜயம் செய்து திரும்பிய ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கை சர்வதிகாரத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தியுள்ளமையையும் சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய பசுபிக் உதவி பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றச்செயல்களுக்கு தீர்வு காணாவிடில் சர்வதேச விசாரணை : அமெரிக்கா!!

usa

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கருத்துக்கு அமெரிக்கா ஆதரவினை வெளியிட்டுள்ளது.

குற்றச் செயல் விசாரணை, குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளுக்கு காத்திரமான வகையில் தீர்வு காணாவிட்டால் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென நவநீதம்பிள்ளை தெரிவித்திருந்தார்.

நவநீதம்பிள்ளையின் மதிப்பீடுகள் கவனத்திற் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அரசாங்கம் பயன்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச தரத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் தொடர்பான கட்டுப்பாடுகள், மனிதஉரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், நீதித்துறைத் தலையீடுகள், குறித்து மனிதஉரிமை ஆணையரின் கவலைகளை நாமும் பிரதிபலிக்கிறோம்.

மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாகுபாடுகள் அதிகரித்து வருவது குறித்தும், மனிதஉரிமை மற்றும் மனிதாபிமான சட்டமீறல்களை புரிவோர் தண்டிக்கப்படுவதில் இருந்து தப்பித்தல், அமைதியாக ஒன்று கூடுவதற்கான கட்டுப்பாடுகள், வெலிவேரியவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான மனிதஉரிமை ஆணையரின் கவலைகளுடன் நாமும் பங்கு கொள்கிறோம்.

பொறுப்புக்கூறுவதில் முன்னேற்றமின்மை அனைத்துலக விசாரணையை வலியுறுத்தும் என்ற மனித உரிமை ஆணையரின் கருத்தை நாடும் சுட்டிக்காட்டுகிறோம்.

அன்னா ஹசாரேவுக்கு ஒரு இலட்சம் டொலர் பரிசு!!

Anna Hazare

ஊழலை எதிர்த்து போராடியதற்காக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு ஒரு இலட்சம் டொலர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
கனடா நாட்டின் வான்கூவர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரிட்டிஷ் கொலம்பியா சட்ட பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச நேர்மைக்கான இந்த அல்லார்டு பரிசு வழங்கப்பட்டது.

ஊழலை எதிர்த்து போராடுபவர்கள் மற்றும் மனித உரிமைக்காக போராடுபவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
நிகழ்ச்சியில் பேசிய அன்னா ஹசாரே, எனக்கு பணம், சொத்து மீது ஆசை இல்லை.

இருப்பினும் இந்த பரிசை பெற்றதன் மூலம் ஊழலுக்கு எதிரான எனது வாழ்நாள் போராட்டம் மேலும் வலிமை அடையும். இந்த சர்வதேச அங்கீகாரம் மூலம் மாற்றத்துக்கான இயக்கம் வலுப்பெறும் என்று கூறினார்.

பண்டாரநாயக்க குடும்பம் இனவாதத்தை தூண்டவில்லை : சந்திரிக்கா!!

Chandrika

பண்டாரநாயக்க குடும்பம் இனவாதத்தை தூண்டவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் பண்டாரநாயக்க குடும்பம் 80 ஆண்டுகள் அரசியல் நடத்தியது. தேர்தல் தொகுதியில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இன வன்முறைகள் வெடிக்கவில்லை.

மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கினார். எனினும் தற்போது அந்தக் கட்சிக்கு வேறு சிலர் உரிமை கோருகின்றனர்.

இன முரண்பாடுகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்ற ஓர் நிலைமை உருவாகியுள்ள இந்த நிலையில் சிலர் மத முரண்பாடுகளை தூண்டுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நாட்டில் சில இனவாதத்தை தூண்டும் சந்தர்ப்பத்திலும் அரசாங்கமும் பொலிஸாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

சிறுபான்மையினருக்கு எதிராக செயற்பட வேண்டும் என்ற காரணத்திற்காக எனது தந்தை தனிச் சிங்கள சட்டத்தை அறிமுகம் செய்யவில்லை. சிலர் இதனை பிழையாக அர்த்தப்படுத்துகின்றனர்.

காலணித்துவ ஆட்சியாளர்களின் பிடியில் இருந்த மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதே அவரின் நோக்கமாக அமைந்தது. அப்போதைய தமிழ்த் தலைமைகளும் தனி நாட்டைக் கோரவில்லை.

குறிப்பாக செல்வநாயகம் தனிநாட்டைக் கோரவில்லை தமிழ் மொழிக்கு நியாயம் கிட்ட வேண்டுமெனவே கோரியிருந்தார். இதன் அடிப்படையிலேயே தமிழ் மொழி விசேட சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

13ம் திருத்தச் சட்டத்தை திருத்த முடியாது இனவாதத்தை தூண்டி வருகின்றனர் என சந்திரிக்கா தெரிவித்துள்ளார். திஹரியவில் நடைபெற்ற பண்டாரநாயக்க நினைவு நிகழ்வுகளில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 7 பேரில் நால்வரிடமிருந்து 26 தங்கக் கட்டிகள் மீட்பு!!

Gold Bars

தங்கக் கட்டிகள் விழுங்கிய நிலையில் பயணிக்க முயற்சித்து கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைதாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 7 பேரில் நான்கு பேரிடமிருந்து 26 தங்க கட்டிகள் மீட்டெடுக்கப்பட்டன.

இவர்களில் நான்கு பேரிடமே தங்கக்கட்டிகள் இருந்துள்ளன. இன்னும் 3 தங்க கட்டிகள் இருவரது வயிற்றில் உள்ளதாகவும் தொடர்ந்தும் இவர்கள் வைத்தியசாலையில் இன்று மூன்றாவது நாளாகவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுங்க திணைக்கள பேச்சாளர் தெரிவித்தார்.

முதலாவது நபரின் வயிற்றில் 13 தங்கக் கட்டிகள் இருப்பதாக ஸ்கான் மூலம் தெரிந்த போதும் 15 தங்கக் கட்டிகள் வெளியே எடுக்கப்பட்டன. இரண்டாவது நபரின் வயிற்றிலிருந்து 6 தங்க கட்டிகள் எடுக்கப்பட்டன.

மூன்றாவது நபரின் வயிற்றில் 5 தங்கக் கட்டிகள் இருப்பதாக தெரிந்த போதும் 6 தங்கக் கட்டிகள் வெளியே எடுக்கப்பட்டன.
நான்காவது நபரின் வயிற்றிலிருந்து ஒரு தங்க கட்டி மட்டுமே எடுக்கப்பட்டது.

ஏனைய மூவரிடம் வயிற்றினுள் தங்கக் கட்டிகள் இல்லை என்பதும் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சுங்க பேச்சாளர் தெரிவித்தார்.

பிரபாகரனை விடவும் விக்னேஸ்வரன் ஆபத்தானவர்: சம்பிக்க ரணவக்க!!

sambikka

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விடவும், வட மாகாண முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள விக்னேஸ்வரன் ஆபத்தானவர் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் யுத்த களத்தில் எல்லோருக்கும் தெரியும் வகையில் போராடினார். எனினும் விக்னேஸ்வரன் அதே நோக்கங்களுக்காக மறைமுக அடிப்படையில் இராஜதந்திர ரீதியில் போராடுவார்.

தெரியும் எதிரியுடன் போராடுவது இலகுவானது. எனினும் தெரியாத மறைமுக எதிரியுடன் போராடுவது மிகவும் ஆபத்தானது. எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தேவையான வகையில் நாட்டை ஆட்டுவிக்க அனுமதியளிக்க முடியாது.

வடக்கில் நாசிவாத கடும்போக்குடைய கட்சியொன்று தேர்தல் வெற்றியீட்டியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அஞ்சப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சினிமாவில் என்னுடைய ரோல்மாடல் ஜோதிகா : லட்சுமிமேனன்!!

laxmi menon

தமிழ் சினிமாவில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் பெரும்பாலான நடிகைகளுக்கு ஜோதிகா, சிம்ரன் ஆகியோர்தான் ரோல் மாடலாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது கும்கி நாயகி லட்சுமிமேனன் தன்னுடைய ரோல்மாடலாக ஜோதிகாவைத்தான் நினைக்கிறேன் என்று கூறுகிறார்.

காக்க காக்க, சந்திரமுகி உள்ளிட்ட பல படங்களில் ஜோதிகாவின் நடிப்பு இவருக்கு ரொம்ப பிடிக்குமாம். அப்படங்களை பல தடவை திரும்ப திரும்ப பார்த்திருக்கிறாராம். விஷாலுடன் பாண்டியநாடு படத்தில் ஆசிரியர் வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும் லட்சுமி மேனன் கூறும்போது..

தற்போது 11ம் வகுப்பு படித்துவரும் நான் பாண்டிய நாடு படத்தில் டீச்சராக நடிக்கிறேன். எனது உடல் அமைப்பு அதற்கு பொருந்தியதால் இந்த வேடத்தில் நடிக்கிறேன். இந்த கதாபாத்திரத்திற்காக எனக்கு பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுத்த சில ஆசிரியர்களை ரோல்மாடலாக எடுத்துக் கொண்டாலும் காக்க காக்க படத்தில் ஜோதிகா நடித்த பாணியில்தான் நடித்தேன்.

இப்படத்தில் என்னுடைய நடிப்பை பார்த்துவிட்டு காக்க காக்க ஜோதிகா போல இருப்பதாக சொல்கிறார்கள். இது எனக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது. ஜோதிகா போன்று ஒரு நடிகையாக சினிமாவில் வலம் வரவேண்டும் என்ற ஆசையுடன் தற்போது நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறேன் என்று அவர் கூறினார்.

ரகசியங்களை அம்பலப்படுத்துவேன் : பிசிசிஐ இற்கு லலித் மோடி எச்சரிக்கை!!

lalith modi

வாழ்நாள் தடை குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள லலித் மோடி விரைவில் பல்வேறு ரகசியங்களை வெளியிடப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் பல்வேறு முறைகேடுகள் செய்ததாக லலித் மோடி கடந்த 2010ம் ஆண்டு நீக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக முடிவு எடுக்க நேற்று பிசிசிஐயின் சிறப்பு பொதுக் குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் லலித் மோடிக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள லலித் மோடி தாம் சில தவறுகள் செய்திருந்தாலும் பிசிசிஐக்கு ஐபிஎல் மூலமாக சுமார் 800 பில்லியன் டொலர் வரை பெரும் வர்த்தகத்தை உருவாக்கியுள்ளேன்.

விரைவில் பிசிசிஐயில் உள்ளவர்கள் குறித்து பல்வேறு ரகசியங்களை அம்பலப்படுத்துவேன் என்று எச்சரித்துள்ளவர் இனிமேல் தன்னுடைய கவனம் முழுவதும் பிசிசிஐயை கண்காணிப்பதிலேயே இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் விளையாட்டு !!

game

பெரும்பாலான நபர்களுக்கு கணணி விளையாட்டு விளையாடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக Grand Theft Auto(GTA 5) என்ற விளையாட்டு என்றால் அனைவருக்கும் பிடிக்கும் என்று சொல்லலாம்.

தற்போது புதிதாக வெளிவந்திருக்கும் இந்த விளையாட்டு பதிப்பின் சிறப்பம்சம் டிஜிட்டல் முறையில் வந்துள்ளது. மேலும் பின்னணி இசையுடன் கூடிய தொழில்நுட்படத்தில் வந்துள்ளதால் சந்தையை கலக்கி கொண்டுள்ளதாம்.

ரொக் ஸ்டார் வெளியிட்டுள்ள இந்த விளையாட்டை Xbox 360 மற்றும் PlayStation 3 ஆகியவற்றில் விளையாடலாம்.

இசையமைப்பாளராகும் பிளாக் பாண்டி!!

pandi

சின்னத்திரையில் அறிமுகமாகி பெரிய திரையில் காமெடி நடிகராக வலம் வருபவர் பாண்டி. இவரை பிளாக் பாண்டி என்றே சினிமா உலகில் அழைக்கின்றனர். கில்லி, அங்காடித் தெரு, தெய்வத்திருமகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் பாண்டி தற்போது வணக்கம் சென்னை, வேல்முருகன் போர்வெல்ஸ் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

நடிப்பில் முழுக்கவனம் செலுத்தி வரும் பாண்டி, இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுக்க உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, நான் இசை கற்றிருக்கிறேன். சில குறும்படங்களுக்கும் இசை அமைத்திருக்கிறேன். டி.வி.யில் நடித்துக் கொண்டிருந்த நான் இப்போது சினிமாவில் காமெடி வேடங்களில் நடிக்கிறேன். இதற்கிடையில் ஒலிப்பதிவு ஸ்டுடியோ ஒன்றை தொடங்கி இருக்கிறேன்.

இசையில் அதிக ஆர்வம் உள்ளதால் விரைவில் புதிய படமொன்றுக்கு இசை அமைக்க உள்ளேன். நடிப்பு, இசை இரண்டிலும் கவனம் செலுத்துவேன். வருகிற டிசம்பர் 1ம் திகதி நான் காதலிக்கும் உமேஸ்வரி பத்மினியை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். என்று அவர் கூறினார்.

 

9 வயது மகளை நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த கொடூர தந்தை!!

abuse

தனது சொந்த மகளை நண்பர்களுடன் சேர்ந்து 2 வருடங்களாக வீட்டில் சிறைவைத்து தந்தையே பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் அருகேயுள்ள குண்டரா படப்பக்கரையை சேர்ந்தவர் விஜயன்(44). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 15 ஆண்டுக்கு முன் திருமணம் செய்தார்.

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. விஜயன் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவி, குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்தார். இதனால் அவரது மனைவி, குழந்தைகள் விஜயனிடமிருந்து பிரிந்து சென்றனர்.

அதன்பின் விஜயன் வர்க்கலாவை சேர்ந்த சரிதா என்ற பெண்ணை 2வது திருமணம் செய்தார். 2வது மனைவி மூலம் 9 வயதில் மகள் உள்ளார். கடந்த 2 ஆண்டுக்கு முன் சரிதா இறந்தார். இதையடுத்து விஜயன் அவரது தாய் ரோஸ்மேரி மற்றும் 9 வயது மகள் ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

கடந்த 2 வருடங்களாக விஜயனும் அவரது நண்பர்களான ராஜன்(42), பிஜு (36), சைஷு(21) மற்றும் வீரப்பன்(40) ஆகியோர் 9 வயது சிறுமியை தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன் சிறுமி பலாத்காரம் செய்யப்படுவதை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தற்செயலாக கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கொட்டாரக்கரை மகளிர் பொலிஸ் இன்ஸ்பெக்டர் அனிதா குமாரிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அவர் உடனடியாக விஜயன் வீட்டிற்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் அச்சிறுமியின் தந்தையும், அவரது நண்பர்கள் 4 பேரும் கடந்த 2 ஆண்டாக தன்னை வீட்டில் அடைத்து பலாத்காரம் செய்து வந்ததாக சிறுமி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து விஜயன், அவரது நண்பர்கள் ராஜன், பிஜு, சைஷு ஆகிய 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான வீரப்பனை தேடி வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு விருந்தளித்து குஷிப்படுத்திய டோனி – சாக்ஷி டோனி (வீடியோ)

dhoni

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு அணித்தலைவர் டோனியும், அவரது மனைவி சாக்ஷியும் விருந்து வைத்து அசத்தி உள்ளனர்.
ராஞ்சி தான் இந்திய அணித்தலைவர் டோனியின் சொந்த ஊர்.
இங்கு வந்துள்ள சென்னை அணிக்கு தான் இந்த சூப்பரான விருந்து காத்திருந்தது.

வகை வகையான சாப்பாடு போட்டு சாக்ஷியும், டோனியும் சென்னை வீரர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்து விட்டனராம்.
இரவு 8 மணிக்கு ஆரம்பித்த விருந்து பல மணி நேரம் தொடர்ந்ததாம்.

இந்த தகவல் தெரியவர ரசிகர்கள் ஏராளமானவர்கள் டோனியின் வீட்டுக்கு வெளியே குவிந்து விட்டார்களாம். இவர்களை குஷிப்படுத்தவும் டோனி தவறவில்லை வெளியே வந்து ரசிகர்களைப் பார்த்து கை அசைத்து ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றி உள்ளார்.

கென்யாவில் திக் திக் நிமிடங்கள் : விவரிக்கும் இந்திய பெண்!!

kenya

கென்யாவில் நடந்த துப்பாக்கி சூட்டின் போது தாங்கள் அனுபவித்த கொடுமைகளை தம்பதியினர் விவரித்துள்ளனர்.
இந்தியாவின் மும்பையைச் சேர்ந்தவர் ஜாஸ்மின் போஸ்ட்வாலா.

கென்யா தலைநகர் நைரோபியில் வசிக்கும் இவர் கடந்த சனிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு வெஸ்ட்கேட் மாலில் இருந்துள்ளார். இவர் குழந்தைகளுக்கான சமையல் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார். அந்த போட்டி நடந்து கொண்டிருந்தபோது பயங்கர வெடிசத்தம் கேட்டுள்ளது.

அப்போது இரண்டு ஆபிரிக்க வம்சாவளியினர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே ஜாஸ்மினை நோக்கி வந்துள்ளனர். அவர்கள் சுட்டதில் பலர் குண்டடிபட்டு கீழே விழுந்தனர். அப்போது தான் தீவிரவாதிகளின் தாக்குதல் என்பதே ஜாஸ்மினுக்கு புரிந்தது.

அப்போது ஜாஸ்மினின் கவலை எல்லாம் மாலின் மறு பக்கத்தில் தனது அத்தையுடன் இருக்கும் தனது 3 வயது மகன் கயான் பற்றி தான். ஜாஸ்மினின் மகள் அவரது கணவர் ஜெர்ஜெக்ஸுடன் இருந்தாள். ஒரு தீவிரவாதி அங்கிருந்த முஸ்லிம்களை அடையாளம் கண்டு வெளியே போகுமாறு கூறினான்.

அப்போது ஜாஸ்மின் அவர்களை அணுகி தன்னையும் தன் குழந்தைகளையும் விட்டுவிடுமாறு கெஞ்சியுள்ளார்.
அப்போது அவரை பேசாமல் இருக்குமாறு கணவர் தெரிவித்தார் தான் நிச்சயம் சாகத் தான் போகிறோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் ஜாஸ்மின்.

உடனே தனது கணவரைப் பார்த்து நான் இறந்தால் குழந்தைகளை பார்த்துக் கொள்ளுங்கள் என்றார் அதற்கு ஜெர்ஜெக்ஸோ நான் இறந்தால் நீ பார்த்துக் கொள் என்றார். ஆனால் ஜாஸ்மின் மற்றும் அவரது குடும்பத்தார் நல்லவேளையாக உயிர் பிழைத்துள்ளனர்.